பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 8


வாழ்வு தொடங்கும் இடம் நீதானே

வானம் முடியுமிடம் நீதானே

காற்றைப் போல நீ வந்தாயே

சுவாசமாக நீ நின்றாயே

ராஜ் உள்ளே வந்தான் நிலாவை அழைத்து கொண்டே.. அங்கே மூக்கு வாயில் உதிரம் வழிந்து கிடந்தாள் நிலா.. ராஜின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.. அவளை அள்ளி மடியில் கிடத்தி கதறி அழைத்தான். அவள் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்..நொடியும் தாமத்தியாமல் தூக்கிக் காரில் கிடத்தி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்..இரண்டு நாட்கள் முன்னாடி அவளை பேசிய படியே கடத்தி வந்ததில் இருந்து இன்று அவளுடன் கடை கடையாக சுற்றியது வரை நினைவு வந்து வேதனை அவன் கண்களை கண்ணிரால் மறைத்தது.. வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான். மருத்துவமனை வந்து இறங்கி அவளை கையில் ஏந்திக் கொண்டு உள்ளே ஓடியது வரைக்கும் அவன் நினைவில் இப்பொழுது வந்து போனது.வெண்ணிலா அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு இத்தோடு இரண்டு மணி நேரம் கடந்து விட்டது. ராஜ்

அங்கிருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தான்.தாமரை அழுது கொண்டிருக்க மாறன் அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். விக்ரம் அழும் தாயின் கழுத்தை பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ஸ்வீட்டியிடம் யாரும் விஷயத்தை கூறவில்லை.கூறினால் கைக் குழந்தையை தூக்கிக்கொண்டு இப்பொழுதே மருத்துவமனைக்கு வந்து விடுவாள்.தன்னைப் போலவே தன் மகளும் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் திருமணம் செய்து கொண்டாலும் அவள் நலமோடு வாழ வேண்டும் என்று தான் தாமரை பிரார்த்தித்து கொண்டிருந்தார்..

நேற்று திருமணம் முடிந்து இன்று மகளை மருத்துவமனையில் காண்போம் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் ராஜ் என்று தவறாக எண்ணிக் கொண்டார் தாமரை.ரிஷி ராஜின் அருகே சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டு அவன் தோளில் கை வைத்து தன்னால் முடிந்த ஆறுதலை மௌனமாக கூறிக் கொண்டிருந்தான்.. நேரங்கள் கடக்க அவசர பிரிவின் உள்ளிருந்து மருத்துவர் வெளியே வந்தார். அனைவருக்கும் முதலில் எழுந்த ராஜ் அவர் அருகில் செல்ல அவனின் பதட்டமான முகத்தை பார்த்த மருத்துவர் அவன் வாய் திறந்து கேட்பதற்கு முன்னே

“நத்திங் ஒர்ரி ராஜ்..யுவர் வைஃப் இஸ் பிரெபெக்ட்லி ஆரைட் நவ்.. கொஞ்ச நேரம் கழிச்சு நர்ஸ் வந்து சொல்லுவாங்க ஒவ்வொரு ஆளா உள்ள போய் பார்த்துட்டு வாங்க..ராஜ் நீங்க வந்து என்ன தனியா பாருங்க..”மருத்துவர் எதுவும் சொல்லாமல் சென்று விட சற்று நேரம் கழித்து முதலில் தாமரை சென்று நிலாவை பார்த்தார்.. அவளது வெண் சரும நோயால் இயற்கை நிறம் அழிந்து முழுவதும் வெண்மையாக மாறி இருந்த நாசியின் மேல் மூச்சு விட மாஸ்க் பொருத்தி இருந்தார்கள்.அன்பு மகளை அப்படிப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே வெளியே வந்து விட்டார் தாமரை. அவரைத் தொடர்ந்து மாறனும் விக்ரமும் ஒருவர் பின் ஒருவராக சென்று நிலாவைப் பார்த்து வர ராஜ் மருத்துவர் அறைக்கு சென்றான்.

“ராஜ் நீங்க பயப்படுற மாதிரி வெண்ணிலாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இத நான் ஏன் முன்னாடியே சொல்றேன்னா நீங்க வாய் தொறந்து என்கிட்ட எதுவும் கேட்கல ஆனா உங்களோட முகமே என்கிட்ட காட்டிக் கொடுக்குது..”

“அப்ரம் ஏன் டாக்டர் அவளுக்கு சடன்னா இப்டி ஆச்சு”

“லுக் ராஜ்..நிலாக்கு ஓவர் டிப்ரேஷென்..அவங்க எல்லாத்தையும் தானக்குள்ளயே அடக்கி வெச்சு அத வெளிப்படுத்தாம இருந்துருக்காங்க..அவங்களே எதிர் பாக்காத நேரத்துல உங்களோட மேரேஜ்.. உங்க பேமிலி டாக்டர் அப்படின்ற விதத்துல நான் இத உங்களுக்கு கண்டிப்பா சொல்லியே ஆகணும்.. எடுத்த வேகத்துல ஃபேமிலி லைஃப் குள்ள உங்க மனைவிய தள்ளாதீர்கள்.. அவங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது அவங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கா அப்படின்னு அவங்க கூட பேசுங்க. அவங்கள நிறைய லவ் பண்ணுங்க..” மருத்துவர் சொல்ல சொல்ல அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்ட அன்றே அவளுடன் உறவு வைத்துக் கொண்டதை எண்ணி வெட்கி தலை குனிந்தான்.

” என்னாச்சு ராஜ்” அவனின் திடீர் அமைதியில் மருத்துவர் வினவினார்.” இல்ல டாக்டர்.. இத பத்தி எல்லாம் நான் யோசிக்கவே இல்ல. அவகிட்ட எதுவும் பேசாம நேத்து நாங்க ஃபிஜிகல் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம்..”

“ஓ நீங்க அவங்கள ஃபோர்ஸ் பண்ணிங்களா..”

“நோ டாக்டர்.. அவளுக்கும் இதுல”

“தென் ஓகே ராஜ்.. அவங்களுக்கும் இன்ட்ரஸ்ட் இருந்தா நல்லதுதான். நீங்க அவங்க கிட்ட பேசுங்க. இந்த மாதிரி ஸ்கின் ப்ராப்ளம் இருக்கிறவங்க ரொம்ப பேர் வெளியவே வர மாட்டாங்க.. வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடப்பாங்க.. ஆனா வெண்ணிலா அப்படி இல்ல. அவங்க ரொம்ப போல்ட்.. என்னதான் வெளியே பாக்க அவங்க ஸ்ட்ரோங்கா இருந்தாலும் உள்ள ரொம்பவே நொறுங்கி போயிருக்காங்க..அவங்க கூட இருங்க. அவங்களுக்கு பிடிச்சத செய்ய விடுங்க.. எப்பவும் சப்போட்டா அவங்க கூட இருங்க..”

” கண்டிப்பா இருப்பேன் டாக்டர்.. தேங்க்யூ.. டாக்டர் அப்புறம் இதை பத்தி எங்க ஃபேமிலி மெம்பர்ஸ் யார்கிட்டயும் சொல்லாதீங்க ப்ளீஸ் “

“நோ ராஜ் கண்டிப்பா சொல்லல..” மருத்துவர் அறையில் இருந்து வெளியே வந்த ராஜ் வெண்ணிலாவை காணச் சென்றான். அவசர பிரிவில் கதவை திறக்க போகையில் அவன் கையை பிடித்து தடுத்தார் தாமரை.. அவரை ஏறிட்டுப் பார்த்தவனை உக்கிரமாக பார்த்தார்.

“ஏங்க இவன் எதுக்கு என் பொண்ண பாக்க போறான்.. நேத்துதான் கல்யாணம்.. இன்னைக்கு என் பொண்ண ஆஸ்பத்திரியில படுக்க வெச்சிட்டான்.. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்ற மாதிரி ஒரு நாள்லயே இவன் கூட வாழ்ந்த வாழ்க்கை என் பொண்ண இங்கு கொண்டு வந்து படுக்க வெச்சிருச்சு.. இதோட எல்லாத்தயும் முடிச்சிக்கலாம்..அவன அப்படியே அவன் வாழ்க்கய பாத்துட்டு போக சொல்லுங்க.. என் பொண்ண பாத்துக்க எனக்கு தெரியும் “

“தாமர என்னடி பேசிட்டு இருக்கு.. மாப்ளய போயி அவன் இவனு” மனைவியை கண்டித்தார் மாறன்.. கணவனின் கண்டிப்பை புறக்கணித்து விட்டு சண்டை கோழியாய் சிலுப்பிக் கொண்டு நின்றார் தாமரை.. ராஜ் நிதானமாக மாறனை பார்த்து

“மாமா அத்த ரொம்ப சூடா இருக்காங்க.. அப்படி கேன்டீன் பக்குட்டு கூட்டிட்டு போயி கூலா ஏதாச்சும் வாங்கி கொடுங்க..”

“என்னடா திமிரா.. என் பொண்ண உன்கூட திரும்ப அனுப்ப மாட்டேன் “மரியாதை பறந்து விட்டது தாமரையிடம்.

.”மாமா உள்ள இருக்குறது என் பொண்டாட்டி.. நேத்து ராதிரியே ரத்தத்தோட ரத்தம் கலந்த என் பொண்டாட்டி. அவள பத்தின எந்த முடிவ எடுக்கவும் எனக்கு தான் உரிம இருக்கு. என்னிக்காவது என் நிலா சொல்லட்டும் அவளுக்கு என் கூட வாழ இஷ்டம் இல்லனு.. நானே அவள உங்க வீட்டுல விட்டுட்டு போயிருவேன்..ஆனா அப்டி ஒரு நாளு இந்த ஒலகமே அழிஞ்சாலும் நடக்காது.என் பொண்டாட்டிய என்கிட்ட இருந்து பிரிக்குற வேலைய உங்க பொண்டாட்டி செய்ய நெனச்சா வேற மாறியான ராஜ் மித்ரன பாப்பிங்க..ஜாக்கிரதை” பல்லைக் கடித்து தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.. வெண்ணிலா விழித்திருந்தாள்.

ராஜை கண்டதும் அவள் கண்களில் தானாக கண்ணீர் கோர்த்துக் கொண்டது. அவளருகில் நெருங்கியவன்

“ஸ்ஸ்ஸ் அழாத பாப்பா.. ஏன் இப்டி என்ன பயமுறுத்துற..ஏதோ இன்னைக்கு மணக்க மணக்க கோழிக்கறி செஞ்சு தந்த.. அத சாப்டு தெம்பா இருந்தேன் கொஞ்சம்.. இல்லனா உன்ன தூக்கிட்டு வந்ததுக்கு எனக்கு இன்னோரு பெட்டு போட்ருக்கணும்.”

“ராஜ் நா ஏன் திடிர்னு மயக்கம் போட்டு விழுந்தேனு கேக்க மாட்டியா”

“ம்ஹும்.. நீயாவே என்கிட்ட சொல்லுவ.. அப்டி சொல்லவே இல்லன்னா உனக்கு சொல்ல புடிக்கலன்னு அர்த்தம். சொல்ல கூடிய விஷயமா இருந்தா என் பாப்பா என்கிட்ட சொல்லுவா..”.

.”பிரியா போன் பண்ணா..”அதற்குமேல் நிலா சொல்லாமலே அவனுக்கு அனைத்தும் புரிந்து விட்டது. பிரியா அழைத்து சகட்டுமேனிக்கு நிலாவை காயப்படுத்தி இருப்பாள்.. அதிலும் தன்னை திருமணம் செய்து கொண்டதை பற்றி ஏதாவது ஒன்றை கூறி நிலாவின் அழகிய மனதை குத்திக் கிழித்திருப்பாள். ஏற்கனவே இன்று ஓட்டலில் நிலா தன்னை ஆராய்ச்சி பார்வை பார்ப்பதை ராஜ் புரிந்து வைத்திருந்தான். பிரியாவின் வார்த்தைகளும் சேர்ந்துகொள்ள அது நிலாவை மிகவும் பாதித்திருக்கும்.. அந்த பாதிப்பு தான் இப்படி அவளை படுக்க வைத்து விட்டது என்று அவனுக்கு புரிந்தது. ஆறுதலாக அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்.. சற்று முன் குனிந்து அவளது நெற்றியில் கன்னம் வைத்த கண் மூடிக் கொண்டான்..

“ராஜ் அம்மா என்ன அவங்க கூட வர சொல்றாங்க..”

” நீ என்ன சொன்ன “

” நான் வரமாட்டேன்மா..என் புருஷன் கூட தான் இருப்பேன்னு சொல்லிட்டேன்”

“என்ன அவ்ளோ புடிக்குமா..கல்யாணம் பண்ண மறுநாளே இப்டி ஆச்சே”

“ஆமா உன்ன கல்யாணம் பண்ணித்தான் இப்டி ஆச்சு. அது உன்ன பாத்து பொறாம பிரியாவுக்கு.. எல்லோரும் பொறாம படுற அளவுக்கு எனக்கு புருஷன் கெடச்சதுக்கு நா கடவுளுக்கு நன்றில சொல்லனும்.. அத விட்டுட்டு வெட்டியா பீலிங்கு.. ராஜ் எப்ப வீட்டுக்கு போவோம்..”

“அப்றம் டா”

“எப்றம்..வா இப்பவே போலாம்.. நேத்துலாம் எவ்ளோ ஜாலியா இருந்தோம்.. இன்னைக்கு பாரேன்.. சிங்கத்தை செதச்சு புட்டாங்க”

“நீ சிங்கமாடி”

“ஆஹான் ஜீ”..”வாய் வாய்.. இரு டாக்டர பாத்து பேசிட்டு வரேன்”ராஜ் மருத்துவரை பார்த்து பேசிவிட்டு வந்து சிறிது நேரத்தில் நிலாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல காரில் ஏறும் முன் தாமரை”நான் எவ்வளவு சொன்னாலும் அவன் கூட திரும்பவும் போறல்ல..போடி போ.. அம்மா சொன்னது எவ்ளோ நெஜம்னு அப்ப தெரியும்.. ஒரு நாள் வருவ அம்மாவ தேடி”

தாமரை முகத்தில் அடித்தாற்போல் சொல்ல மாறன்”அவ கெடக்காம்மா.. நீ போய்ட்டு வா.. பாத்துக்கோங்க மித்ரன்”நிலா தாமரை பேசியதை காதில் போட்டுக் கொள்ளாமல் அவர் அருகில் சென்று அவரை இறுக்கி அணைத்து அவர் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு

“அம்மா நீ பேசுனது தப்புனு உனக்கே கூடிய சீக்கிரம் தெரியவரும்.. உன்ன விட உங்க எல்லாரையும் விட என்னோட ராஜ் என்ன ரொம்ப நாளா பார்த்துபாரு..அவரப் பத்தி நீ புரிஞ்சிக்காம பேசுற.. இதையெல்லாம் அவரு பெரிசு பண்ண மாட்டார்… நான் போயிட்டு வரேன்ம்மா”

என்றவள் தம்பி தந்தையிடம் சொல்லி விட்டு ராஜுடன் கிளம்பினாள்.தாமரையிடம் அவள் அப்படிப் பேசினாலும் அவள் மனம் படும் பாடு அவனுக்கு தெரியாதா.. சீட்டில் சாய்ந்து வெளியே பார்த்துக்கொண்டு வந்தவளின் கரத்தை எடுத்து தன்னுடைய இடது கரத்தின் உள்ளே வைத்துக் கொண்டான் ராஜ்.

தொடரும்

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்