பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 20

பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா குளிர்
புன்னகையில் என்னை
தொட்ட நிலா என் மனதில்
அம்பு விட்ட நிலா இது எட்ட
நின்று என்னை சுட்ட நிலா

குழந்தை வெண்ணிலாவின் வீட்டிற்கு வந்து ஒரு மாதமாகிவிட்டது. இந்த ஒரு மாதத்தில் கமலா வாரத்திற்கு ஒருமுறை தன்னுடைய அண்ணனுடன் இங்கே வந்து கங்காவின் வாழ்க்கை இந்த குழந்தையால் கெட்டுவிட்டது என்று சாபமிட்டு செல்வார். ராஜ் இருந்தால் பேசுவதற்கு முன்பே வாயை அடைத்து விடுவான் என்பதால் அவன் கடையில் இருப்பதை உறுதி செய்து கொண்டே இருவரும் வீட்டிற்கு வந்து நிலாவை கரித்துக் கொட்டி விட்டு செல்வார்கள்.

 சில நேரங்களில் சிந்து மட்டும் தனியே வந்து தன் அண்ணன் குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சுவதைப் போல நாடகமாடி செல்வாள்.குணா அவளை நம்ப வேண்டாம் என்று நிலாவிடம் பலமுறை கூறி விட்டான். ஆனால் நிலாவோ" எனக்கு எப்படி அவ மருமகளோ அதே மாதிரி தானே சிந்துவுக்கும் அவ மருமக..அவள எப்படி நான் குழந்தைய பாக்க வேணானு சொல்லுவேன்.. நான்தான் குழந்தை கூடவே இருக்கேனே.. என்ன மீறி என்ன நடக்கப் போகுது..  நான் பாத்துக்குறேண்ணே"

 இப்படி நிலா குணாவின் வாயை அடைத்து விட சிந்து தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்வதை அறவே வெறுத்தான் ராஜ். அதை மனைவியிடம் கூறவும் செய்தான். குணாவிற்கு என்ன பதில் கொடுத்தாளோ அதே பதிலை ராஜிற்கும் கொடுத்தாள் நிலா.

"ஹேய் உனக்கு என்ன கேடு வந்துச்சு.. யான கொழுத்து போனா அதோடு மண்டையிலயே மண்ணள்ளி கொட்டிக்குமாம்.. நீயும் அத தான் செய்யுற. அந்த சிந்து ஆட்டக்காரிய எதுக்கு வீட்டுக்குள்ள விடுற.. அவள அப்டியே பத்தி விடுடி..அவ உன் குடிய கெடுக்க ஒத்த காலுல நிக்குறா. நீ அவள நடு வீடு வர வரவெச்சு அழகு பாக்குற.. வேணா வெண்ணிலா அவள தொரத்தி விடு"குமுதா அபிக்கு தலை வாரி கொண்டிருந்த நிலாவிடம் காட்டுக் கத்தலாய் கத்திக் கொண்டிருந்தாள்.

நிலா கேட்டால் தானே"கும்மு ஏற்கனவே எல்லா ஒறவும் வெட்டிகிட்டு நிக்குது. அவ குணா அண்ணே தங்கச்சி.இன்னைக்கு அடிச்சிக்குவாங்க நாளைக்கு சேந்துக்குவாங்க.இன்னைக்கு அவள நா தொரத்தி விட்டா நாளபின்ன அது எனக்கே ஆப்பா ஆயிரும்..குழந்தைய பாத்துட்டு பத்து நிமிசத்துல போய்டுவா.. இதுல என்ன வந்துர போது.. விடு பாத்துக்கலாம்"..

"ஆமா உனக்கு தேர இழுத்து தெருவுல விடுறதே பொழப்பா போச்சு.. எப்டியோ போ. ஆனா ஒன்னுடி எல்லோருக்கும் நல்லவளா இருக்கணும்னு நெனைக்காத.. அது முடியாது பாத்துக்கோ.."குமுதா வேறு கதைகள் பேசி விட்டு தன் வீட்டிற்கு சென்றாள்.முப்பது நாட்கள் முடிந்த நிலையில் ஒரு நாள் குழந்தைக்கு பெயர் சூட்ட குணா வந்தான்.

குணா நிலாவை பெயர் வைக்க சொல்ல முதலில் வேண்டாமென மறுத்தவள் பிறகு அவன் வற்புறுத்தவே ரொம்பவும் யோசித்து குழந்தைக்கு "இருதயா"எனப் பெயரிட்டாள்.

"என்னமா குழந்தைக்கு நெஞ்சுன்னு பேரு வைக்குற.."

"நெஞ்சு இல்லண்ணே பாப்பா எப்பவும் ஸ்வீட் ஹார்ட் பெர்சனா இருக்கனும். அதான் இந்த பேரு".. வெண்ணிலா சொன்ன பதிலில் குணாவின் நெஞ்சம் நிறைந்து போயிற்று. பெற்ற தாய்க்கு இல்லாத பாசம் குழந்தையின் அத்தைக்கு அதிகமாக இருந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை கங்கா எவ்வாறெல்லாம் திட்டமிட்டாள் என்பதை நினைக்கும்போது குணாவின் நெஞ்சம் வலித்தது. குழந்தை ஊனமில்லாமல் பிறந்ததை எண்ணி மகிழாமல் சருமத்தில் இருக்கும் பிரச்சினையை எண்ணி குழந்தையை கொல்லும் அளவிற்கு துணிந்து விட்டாளே பாதகத்தி என்று எண்ணும் போது தான் அவளைக் காதலித்ததை எண்ணி வெட்கமடைந்தான் குணா.

 இரண்டு நாட்கள் ராஜ் வீட்டில் தங்கிவிட்டு குழந்தையை பிரிய மனமே இல்லாமல் மீண்டும் பெங்களூர் சென்று விட்டான் குணா. அவன் இருந்த வரையில் குழந்தையை விட்டு அசையவே இல்லை. அவன் கண்களில் தேங்கியிருந்த ஏக்கத்தை கண்டுகொண்ட நிலாவிற்கு இப்பொழுதே மாறனை கண்டு அவர் மடியில் தலை சாய்த்து படுக்க வேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது.

 அதை ராஜிடம் சொல்ல தயங்கினாள். அவன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் இந்த வேளையில் தான் மட்டும் உறவை தன் குடும்பத்தோடு புதுப்பித்துக் கொண்டால் அவன் என்ன நினைப்பானோ என்ற நினைப்பே அவள் மனதை வாட்டி வதைத்தது.

"என்னடா செல்லம் நானும் பாக்குறேன் மந்திரிச்சு விட்ட மாறியே சுத்துற?பட்டு வந்ததுல இருந்து மாமாவ கவனிக்குறதே இல்ல" மனைவியின் மடியில் படுத்துக்கொண்டு பொய்யாக புகார் சொன்னான் ராஜ்.

அவன் தலைமுடியை அலைந்து கொண்டிருந்தவள் அவனின் மூக்கை பிடித்து வலிக்காமல் ஆட்டி"ஒரு நாளைக்கு ரெண்டு தடவ இப்டி சீன் போட்டே காரியம் சாதிக்குற.. இதுல பொய் வேற.. அதும் பட்டு மேல பழிய போட்டு"..

"ஆஆ கடிக்காதடி.. வேணும்னா என் உதட்ட கடி.. அது தான் ஸ்வீட்டா இருக்கும்"..

"இன்னைக்கு கோட்டா முடிஞ்சது. நீ மூணாவதுக்கு அடி போடுற மாறி இருக்கே.. உடம்பு தாங்காது மைனர் குஞ்சு"..

"மாமா பாடிய என்னானு நெனச்ச.. வைரம் பாஞ்ச கட்டடி.."

"ஆமா ஆமா.. என்ன கருப்பு வைரம் அவ்ளோ தான்"

"என்ன விட கலர் கூடயா இருக்குற நெனப்பு.. இப்படி பேச வைக்குது.. இருடி என் கருப்ப உன் மேல எல்லாம் பூசுறேன்"என்றவன் தன்னுடைய நிலவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். அவனின் ஆதிக்கம் அவளிடம் எடுபடாமல் தோற்று அவளுள் மீண்டும் மூழ்கி போனான்.கூடல் முடிந்து அவள் நெஞ்சில் படுத்து அவளின் மென்மையில் சுகமாக கண்மூடிக் கொண்டே

"பாப்பா.. உனக்கு என்ன வேணும்? என்கிட்ட என்னமோ சொல்லணும்னு வர.. ஆனா சொல்ல மாட்ற..உன் மனசுல என்ன இருக்கு.. ஏதாச்சும் பிரச்சனயா.. குமுதா சொன்னாங்க நான் இல்லாதப்போ அம்மாவும் மாமாவும் வந்து சத்தம் போட்டுட்டு போறாங்கன்னு.சிந்து வேற அடிக்கடி வரான்னு.. ஏன்டி அவள உள்ள விடுற.. அவ பாம்புடி."

"ராஜ்.. அவ பாம்புனு எனக்கும் தெரியும்.குழந்தைக்கு நாம மட்டும் போதுமா..பட்டு அவளோட அப்பா அம்மா கூட சந்தோசமா வாழனும். அதுக்கு மொத குணா அண்ணாவும் அண்ணியும் சேரனும்.. அதுக்கு தான் நான் ஒரு பிளான் வெச்சிருக்கேன்"..

"என்னடி பிளான்.."

"சொல்ல மாட்டேன்.. செஞ்சு காட்டுறேன்.."

"ம்க்கும்.எது செஞ்சாலும் பாத்து செய் பாப்பா.. என்கிட்ட எதுவெணும்னாலும் கேளு. மனசுக்குள்ள போட்டுகிட்டு தனியா பீல் பண்ணாத.. நான் இருக்கேன் புரியுதா"என்றவனை ஆசையை அணைத்து கொண்டாள் நிலா.

நிலா அவனிடம் எதையும் சொல்லாமல் விட்டாலும் அவனுக்கு தெரியாதா அவளின் முக வாட்டம்..தினமும் மாறனுக்கு அழைத்து நிலாவின் அன்றாட நடப்புகளை பற்றி கூறி விடுவான் ராஜ்.. மகளை பற்றிய விவரம் எல்லாமே மருமகனின் மூலம் மாறனுக்கு அத்துப்படி. மாறன் விக்ரமிடம் கூறுவதை போல மனைவிக்கும் தகவல் பரிமாற்றம் செய்ய முகத்தை கடுகடுப்பாக வைத்திருந்தாலும்,உள்ளே மகள் நலமாக வாழ வேண்டுமென தாமரை வேண்டாத நாளில்லை.

நாட்கள் நகர தன் வாழ்வில் ஒரு மாற்றம் வருவதற்குள் குணா கங்கா பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தால் வெண்ணிலா.  அதன் பலனாக சிந்துவிடம் நெருங்கி பழகினாள். வெண்ணிலாவின் வாழ்வை நாசமாக்க வேண்டுமென குழந்தையை சாக்கிட்டு வந்தவளிடம் தானாக பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள் நிலா.. சிந்துவை பொறுத்த வரை இந்த இளிச்சவாய் தானாக தன்னிடம் வந்து பேசுகிறதே இதன் மண்டையில் மிளகாய் அரைத்து விட வேண்டியது தான் என எண்ணிக் கொண்டாள்.

ஒரு நாள் சிந்து நிலா வீட்டிற்கு வந்தாள். பெரும்பாலும் ராஜ் இருக்கும் நேரமாக பார்த்து வருவாள். அவளைக் கண்டதும் ராஜ் வெளியேறி விடுவான் அல்லது மொட்டை மாடிக்கு சென்று விடுவான். சிந்துவை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து விடுவான். இதான் சாக்கென்று சிந்து பேச்சு வாக்கில் மித்ரனுக்கு அது பிடிக்கும் இது பிடிக்குமென வேண்டுமென்றே நிலா மனதில் நஞ்சை விதைப்பாள்.அவள் எதிர்பார்த்ததை போலவே முகம் வாடும் நிலா அவள் சென்றதும் கணவனிடம் சொல்லி சிரிப்பாள்.

காரணம் அவள் தான் ராஜ் மித்ரனை நன்றாக புரிந்து கொண்டாளே..சிந்து வந்தவுடன்"வெண்ணிலா பாப்பாவ நா எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போறேன்.. நேத்தே உன்கிட்ட சொன்னேன் தான..அம்மா பாப்பாவ பாக்கணும்னு ஒரே ஆச.. என்னதான் இருந்தாலும் என் அப்பாவ மீறி அவங்கனால வர முடியாது.நா யாருக்குமே தெரியாம குழந்தைய என் வீட்டுக்கு தூக்ககிட்டு போறேன்"

"உங்க அப்பா வீட்ல இருக்க மாட்டாரா"

"இல்ல.. அப்பா ஏதோ வேலையா வெளியூருக்கு போயிருக்காரு"..சிந்து அப்பாவியாய் நடிக்க

"அப்டியா.. சரி சிந்து பட்டுவ தூக்கிட்டு போ.. ஒரு மணி நேரத்துல கொண்டு வந்து விட்ரு.. ராஜ் வந்துருவாரு.."என பட்டுவிற்கு தேவையான பொருட்களை ஒரு கூடையில் அடுக்கி சிந்துவின் காரின் உள்ளே வைத்தவள் அக்கம் பக்கம் கேட்க்கும் அளவு சத்தமாக"பட்டு பத்திரம் சிந்து.. சீக்கிரம் வந்துரு.. அவரு வீட்டுக்கு வந்ததும் பட்டுவ பாக்கணும். இல்லனா அவ்ளோ தான்"..சிந்து குழந்தையுடன் நிற்க அக்கம் பக்கம் உள்ளவர்கள்

"என்ன வெண்ணிலா குழந்தைய அவ அத்த கூட அனுப்பி வைக்குற.. நீ போலயா..புள்ள முழிச்சிகிட்டு தேட போறா"

"இல்லக்கா எனக்கு வீட்ல வேல கெடக்கு. பட்டுவ அவ பாட்டி பாக்கணும்னு ஆசப்படுறாங்க..அதான் சிந்து தூக்கிட்டு போக வந்துருக்காங்க"..வெண்ணிலா எதிர் வீட்டு அக்காவிடம் பேச இங்கே சிந்துவிற்கு பற்றி எறிந்தது. அவள் குழந்தையை தூக்கி சென்று ஏற்கனவே தான் பேசி வைத்திருந்த குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவனிடம் கொடுக்க நினைத்திருந்தாள்.. யாருக்கும் தெரியாமல் தூக்கி சென்று பழியை இறுதியில் நிலா மேல் திருப்பி விடலாமென அவள் எண்ணினாள்.

ஒருவிதத்தில் அவள் மேல் நம்பிக்கை இல்லாத நிலா வேண்டுமெனே அக்கம் பக்கம் தெரியு இப்படி செய்தாள். இப்பொழுது சிந்து என்ன செய்தாலும் அவள் தான் காவல் துறையினரிடம் மாட்ட வேண்டும். சொல்லியாயிற்று வேறு வழியில்லை. எனவே சிரித்தவாறு குழந்தையை தூக்கிக் கொண்டு நேராக கமலா வீட்டிற்கு சென்றாள்.

வேண்டா வெறுப்பாக தூக்கி வந்தவள் குழந்தையை சோபாவில் கிடத்த அதைப் பார்த்த கமலா"இந்த சனியன ஏன்டி இங்க தூக்கிட்டு வந்த..அந்த பிள்ள புடிக்கிறவன் கிட்ட கொடுக்க வேண்டியதுதானே..அவன் காத்துக்கிட்டு இருப்பான்டி.." சாட்சாத் கமலாவே தான். இந்த திட்டத்தின் சூத்திரதாரி.

"அட போங்க அத்த.. அந்த வெந்த வாயி நம்மள விட கேடியா இருக்கா. நா புள்ளய தூக்குனதும் மைக்க முழுங்குன மாறி கத்தி பேசி அக்கம் பக்கம் எல்லோரையும் வெளிய வர வெச்சு ஊரே பாக்க வெச்சிட்டா.. நா இந்த குட்டி பிசாச தூக்கிட்டு வந்தத. இனிமே இதுக்கு ஏதாச்சும் வந்தா அவ்ளோ தான். அந்த ஏரியாவே தெறண்டு வந்து கம்பளைண்ட் கொடுக்கும்"...

"சனியன் சனியன்.. என் பொண்ணு வாழ்க்கய கெடுக்க வந்த பிசாசு.. என் மவ ரத்தத்த அட்ட மாறி உறிஞ்சு பொறந்துட்டு அவ வாழ்க்கைக்கே வேட்டு வைக்குது.. இன்னைக்கு தப்பிச்சிட்ட.. ஒரு நாள் பாரு உன் கதைய முடிக்குறேன்.."கமலா வஞ்சதோடு சொல்லிச் செல்ல அங்கே அந்த குழந்தையை சீண்டுவோர் யாருமே இல்லை. உறங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென வீரிட்டு அழத் தொடங்கியது.

எறும்பு கடித்திருக்கும் போல.. குழந்தை வீரிட்டு அழ வேலைக்காரிக்கே மனம் பொறுக்கவில்லை. ஆனால் கமலாவை மீறி என்ன செய்வது.. குழந்தை சிறிது நேரம் அழ அழுகை சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தாள் கங்கா.உறங்கி கொண்டிருந்தவள் இப்பொழுது தான் தன் குழந்தையை காண்கிறாள்..வேலைக்காரி மறைந்து நின்று பார்க்க வேகமாக கீழிறங்கி வந்த கங்கா குழந்தை அழுவதை பார்த்து விட்டு ஒன்றுமே செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

இப்படி ஒரு கேடுகெட்ட தாயிக்கா இந்த குழந்தை பிறக்க வேண்டும்? உடனே வேலைக்காரி நிலாவிற்கு அழைத்து இங்கே நடப்பதை கூற பதறிய நிலா சிந்துவிற்கு அழைத்து ராஜ் வீட்டிற்க்கு வந்து விட்டதாகவும் இன்னும் பத்து நிமிடத்தில் குழந்தை இங்கில்லை என்றால் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அவன் அங்கே இருப்பானென்று கூற பதறியடித்து ஓடி வந்த சிந்து வேலைக்காரியை அழைத்து குழந்தைக்கு பால் கலந்து கொடுக்க சொல்லி ஒரு வழியாக குழந்தையை சமாதனப்படுத்தி வேகமாக வண்டி ஓட்டி குழந்தையை நிலாவிடம் ஒப்படைத்தாள்.

"என்ன சிந்து பட்டு முகமே சிவந்து கெடக்கு".. நிலா வேண்டுமென்றே கேட்க

"அது.. அதான் குழந்தை முழிச்சு உன்ன தேடுனா.. நாங்க பால் கலக்கி கொடுத்தா குடிக்கல.. ஒரே அழுகை. ஒரு வழியா சமாளிச்சு தூக்கிட்டு வரேன்"அடுக்காய் பொய் சொன்னவளை வேதனையோடு பார்த்தாள் நிலா.குழந்தையை நேரில் பார்த்தால் கங்காவின் தாய்மை வெளிவரும் என அவள் எண்ணிய எண்ணமெல்லாம் கெக்கலி கொட்டி சிரித்தது வெண்ணிலாவை கண்டு..

குழந்தையின் சரும நோயை கண்டு அதை வெறுத்து ஒதுக்கிய கங்காவிற்கு சருமத்திலேயே நோயை கொடுக்க காத்திருக்கும் இறைவனின் கணக்கை தடுக்க இங்கே யார் உள்ளார்கள்?

தொடரும்.. 

Comments

  1. Nalla padhivu....irudhaya nice name....

    ReplyDelete
  2. Pappa va nila jeeva vey valakatum ana guna um pavam than..... Ana avan vanthu pathukattum... ganga ku atuthu ava amma va oru vali panunga atuthu Sindu ku oru vali panunga sis.....

    ReplyDelete
  3. Interesting ud sis cha iva ellam Enn amma ganga amma adhuku mela first indha sindhu va velukkanum pichai edukuraan kita kudukka plan panranga cha enna jenmangalo idhungaluku sariyana punishment kidaikkanum nila idhuga thirundhdha jenmanga ne un life ah paru nila

    ReplyDelete
  4. Yen than ganga ipadi irukalo😐😐 pavam pattu😪 nice epi akka😊😊

    ReplyDelete
  5. Enna jenmangalo 😡😡😤😤😤👌👌👌👌

    ReplyDelete
  6. கோவமா வருது ராஜ் பேமிலியா நினைச்ச

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்