பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 3


அவளது அழகெல்லாம்
எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அறிந்தபின்
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே

“ஹே வெந்த நிலா, நல்லா ஹெண்ட்சமான ஆள புடிச்சுட்ட போல..உன் மூஞ்சிக்கும் இப்படி ஒருத்தன் வந்து மாட்றான் பாரேன்”நொடித்து கொண்டாள் வெண்ணிலாவின் பெரியம்மா மகள் பிரியா.. அவள் எப்போதும் இப்படிதான் அவளைவிட வெண்ணிலா படிப்பில் நல்ல கெட்டி. அவளைவிட என்று கூறுவதைக் காட்டிலும் அந்தக் குடும்பத்திலேயே வெண்ணிலா தான் படிப்பில் படு சுட்டி.. எப்பொழுதும் முதல் ரேங்க் வாங்கும் மாணவி அவள்.

சொந்த பந்தங்கள் ஒன்று சேரும் போது அனைத்து பெற்றோர்களும் செய்யும் ஒரே தவறை தான் வெண்ணிலாவின் குடும்பத்திலும் செய்வார்கள்.வெண்ணிலாவின் பெரியம்மா குடும்பமும் சித்தி குடும்பமும் ஒன்று சேர்ந்தால் அங்கே பிள்ளைகளின் படிப்பைப் பற்றி சலசலப்பு ஏற்படும்.வெண்ணிலாவை தவிர மற்றவர்கள் சுமாராக படிக்கும் மாணவர்கள்தான் ஏன் விக்ரமிற்கு கூட வெண்ணிலா அளவிற்கு புத்திசாலித்தனம் கிடையாது.

பொதுவாக பெற்றோர் செய்யும் தவறே தன் பிள்ளைகளின் குறைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு அதை அனைவரும் இருக்கும் போது சபையில் வெளிப்படுத்துவது தான்.அப்பொழுதுதான் அந்தப் பிள்ளைகளுக்கு சூடு சுரணை வரும் என்ற நினைப்பு பெற்றோருக்கு.ஆனால் அது குழந்தைகளின் மனதில் வன்மத்தை ஏற்படுத்தும்.எந்த குழந்தையை உயர்த்தி பேசுகிறார்களோ அந்த குழந்தை மேல் பொறாமை ஏற்படும். வெண்ணிலாவை உயர்த்தி பெரியவர்கள் பேச பெரியம்மா மகள் பிரியா சித்தி மகள்கள் சுஜி சுகி அனைவருக்கும் வெண்ணிலா விரோதியானாள்.

தங்களை விட அவள் படிப்பில் ஒரு நல்ல இடத்தில் இருக்கலாம் ஆனால் அழகில் தங்களின் கால் தூசி அவள் பெற மாட்டாள் என்ற மிதப்பு அவர்களுக்கு.அதனாலேயே எப்பொழுதும் வெண்ணிலாவை வெந்த நிலா என்று கேலி செய்வார்கள்.அவர்கள் தனது பெயரை மாற்றிக் கேலி செய்வது முதலில் வெண்ணிலாவுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது இரவு முழுவதும் தூங்காமல் அழுதாள்.அவள் அழுவதை கண்டு விக்ரம் தன் தாயிடம் அதைப் பற்றிக் கூறி விட்டான்.மூன்று சகோதரிகளின் வீடும் அருகருக்கே தான்..மறுநாளே தன் அக்கா வீட்டிற்கு சென்று” என்ன புள்ள பெத்து வளத்து வச்சிருக்க.. இப்படித்தான் என் புள்ளய அழ வைக்க சொல்லி கொடுத்து வளத்தியா, அந்தாளுக்கு தெரிஞ்சா ஒட்டும் வேணா ஒரவும் வேணாம்னு அறுத்து கிட்டு போய்டுவாரு”

“என்னடி தாமரை வந்ததும் வராதுமா இப்டி கத்துற.. என்ன ஆச்சு சொல்லு”தாமரை நடந்ததை சொல்ல பிரியாவை உரித்து எடுத்துவிட்டார் செங்கமலம்.. அடுத்து தாமரை செங்கமலத்துடன் அவரது தங்கை செல்வி வீட்டிற்கு செல்ல நடந்ததைக் கேள்விப்பட்டு செல்வி தன் பிள்ளைகள் அப்படி ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று சாதித்தார். செல்விக்கு தனது அக்காக்கள் இருவரும் தன்னை விட வசதியாக இருப்பது சற்று பொறாமையே. இதிலும் வெண்ணிலா எப்பொழுதும் அனைவர் முன்பும் பாராட்டுப் பெறுவது அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

“அக்கா சின்னக்கா பேச்ச கேட்டு பிரியாவ அடிச்சிடியே.. அதுங்க சின்ன புள்ளைங்க. ஏதோ வெளாட்டுக்கு பேசிருக்கும்னுங்க. இத போயி பெருசு படுத்தலாமா.. வயசுக்கு வந்த புள்ளைய போயி வெளக்கமாத்துல சாத்திருக்க. மாமாவுக்கு தெரிஞ்சா நீ அவ்ளோ தான் போ..”என்றவர் நைசாக உள்ளே சென்று செங்கமலத்தின் கணவனுக்கு அழைத்து விஷயத்தை கொளுத்தி போட்டு விட்டு நல்ல பிள்ளையாக அக்காள்கள் இருவரோடும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஒரே மகளை தங்கையின் பேச்சை கேட்டு தீர விசாரிக்காமல் செங்கமலம் அடித்து விட்டார் எனவும் சுந்தர் செல்வியின் வீட்டிற்கு வந்த வேகமே மனைவியை நையபுடைத்து விட்டார். தாமரை தடுத்தும் முடியவில்லை.. ஒரு சாதாரண விஷயம் பெரிய சண்டையில் முடிந்தது.இதனால் மூன்று குடும்பங்களும் சிறிது நாட்கள் பேச்சுவார்த்தை அற்று இருந்தனர்.

சுகி பூப்பெய்திய நிகழ்ச்சியின் போது தான் மூன்று குடும்பமும் திரும்பவும் இயல்பாக பேச ஆரம்பித்தது..தன்னால் தன்னுடைய அம்மாவின் பிறந்த வீட்டு உறவுகளுக்குள் எந்தவித பிரச்சினையும் வரக்கூடாது என்று வெண்ணிலா தன்னுடைய அக்கா தங்கைகள் பேசுவதை தன்னுள் மறைத்து கொள்ள ஆரம்பித்தாள்.. அவர்களும் இது ஒரு பேக்கு என்று வெண்ணிலாவை கேலி செய்து வேதனை படுத்துவர்.

இப்பொழுது ப்ரியா திருமணம் செய்து பெங்களூரில் இருக்கிறாள். சுகி மதுரையிலும் சுஜி ஊட்டியிலும் இருக்க வெண்ணிலாவை தவிர மற்ற எல்லோருக்கும் திருமணம் முடிந்து விட்டது..இவளுக்கு எல்லாம் எங்கே திருமணம் நடக்க போகிறது என்ற நினைப்பில் இருந்த மூவரும் ராஜ் புகைப்படத்தை வாட்ஸ்சப் குரூப்பில் கண்டு வயிறு எறிந்தனர்.

“ஆளு கருப்புனு சொல்ல முடியாது. மாநிறமா இருக்கான்.. நல்லா ஹைட்டு.. சரியான வெயிட்டு.. படிப்பு தான் கம்மி போல. ஆமா இவ படிச்சு அப்டியே கிழிச்சிட்டாளா? ஐயோ சொந்தமா டெக்ஸ்டையில் வியாபாரம்.. ஏழு எட்டு பிரென்ச் இருக்கு. இந்த வெந்த மூஞ்சிக்கு போயி இப்படி ஒருத்தனா”.. மூனு பேருக்கும் வயிறு பற்றி எரிந்தது.குரூப் கோல் பேசலாம் என்று சொன்னதும் வெண்ணிலா சுதாகரித்து விட்டாள். வழக்கம்போல ப்ரியா சுகி சுஜி மூவரும் தங்கள் வாய்க்கு என்ன வருதோ அவை அனைத்தையும் சொல்லி வெண்ணிலாவின் இதயத்தை சுக்குநூறாக உடைத்து விட்டனர்.

“பாவம்டி அவன்.. ஆளு பாக்க நல்லா இருக்கான் ஆனா என்னமோ குறை போல.. இல்லனா அவனுக்கு என்ன பொண்ணா கெடைக்கல? உன்ன போயி கட்டுறதுக்கு? அதும் உன்ன லவ் பண்றேன்னு சொன்னானாம்.. உங்க அம்மா நம்ம பேமிலி குரூப்ல பேப்பர் போட்டுட்டு இருந்தாங்க..”

“பிரியாக்கா என்ன லூசு மாறி பேசுற..வெண்ணிலா அக்காவ எல்லாம் எவனாச்சும் லவ் பண்ணுவானா?”

“அதான் பிரியாக்கா சுஜி சொல்ற மாறி வெண்ணிலா அக்கா கிட்ட என்ன இருக்கு ஒருத்தன் பாத்ததும் லவ் பண்ண.. வெந்து போனா மூஞ்சி சரி அத வுடு பாடிய பாத்தியா.. நடந்து வர சொன்னா வெண்ணிலா அக்கா உருண்டு வரும்.. மூஞ்சி பூரா ஈராக்காரன் குண்டு போட்ட மாறி குண்டும் குழியுமா இருக்கு.. சோடா புட்டி கண்ணாடி வேற..சத்தியமா இது லவ் இல்ல. ஐ திங்க் அவனுக்கு அப்பா ஆவுறதுல ப்ரோப்லேம் போல. அதான் பெரிய தியாகி மாறி இவள கட்டி மேனேஜ் பண்ணிக்க பாக்குறான்..”

“அதான் டி ஹேய் வெண்ணிலா சித்தப்பா கிட்ட சொல்லி அவன வேணான்னு சொல்லிரு..உனக்குன்னு ஒருத்தன் வராமலா போயிருவான். அன்னைக்கு கூட என் ஹஸ்பண்ட் சொந்தத்துல ஒருத்தர் இருக்காருனு சித்தப்பா கிட்ட சொன்னேன். மனுஷன் வாயே தொறக்கல.நாப்பது வயசுன்னா என்ன ஆம்பள இல்லயா அவரு..”ப்ரியா சுஜி சுகி மூவரும் இப்படியே வெண்ணிலாவின் மனதை புண்படுத்த அந்த நேரம் பார்த்து வெண்ணிலாவுக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அதுவரை அழுகையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு இருந்தவள்”நீங்க மூணு பேரும் பேசுங்க..ஸ்வீட்டி ஃபோன் பண்றா நா அவகிட்ட பேசணும்”என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டாள்..அவளுக்கு இருந்த மனநிலையில் அந்த எண் யாராக இருக்கும் என்று யோசியாமல் அழைப்பை ஏற்றாள்.

“ஹெலோ”

“ஹெ.. அச்சும்..எக்ஸ்கியூஸ் மீ ஹெலோ”

“எஸ் ப்ளீஸ் கிஸ் மீ”

“வாட்.. ஹேய் யாரது”

“நிலா பாப்பா நான்தான் ராஜ்..”அவன் பெயரைக் கேட்டதும் கைப்பேசியை காதில் இருந்து எடுத்து கையில் வைத்துக் கொண்டாள். ஒரே படபடப்பு அவளுக்கு. இதுவரை இருந்த மனநிலை மாறி புதிதாக ஒரு நடுக்கம் உடலில் ஓடியது. ஆழ்ந்த பெருமூச்சுகளை எடுத்துவிட்டு கைப்பேசியை மீண்டும் செவிக்கு கொடுத்தாள். அவளின் பாடுகளை ஒருவாராக புரிந்து கொண்டவன்”நிலா.. என்ன நியாபகம் இருக்கா.. இன்னைக்கு உஙகள பொண்ணு பாத்துட்டு அப்டியே ப்ரொபோஸ் பண்ணிட்டு போனேனே”

“ம்ம்ம்”

“இதான் என் நம்பர் சேவ் பண்ணிக்கோங்க”

“ம்ம்ம்”

“ஆ சாப்டாச்சா”

“ம்ம்ம்”

“ஏங்க ஒரு மரியாதைக்காச்சும் நா சாப்டேனான்னு கேக்க மாட்டிங்களா”

“ம்ம்ம் சாப்டிங்களா”

“சாப்டேன் பாப்பா”

“நா பாப்பா இல்ல”

அங்கே மெல்லிய சிரிப்பு”நா உங்கள.. ஸாரி என்னால இப்டி போர்மல்லா உன்கிட்ட பேச முடியலடா.. என்னமோ யாரோ ஒருத்தங்க கிட்ட பேசுற மாறி பீல் ஆகுது. வா போனே கூப்டுறேன்.. “

அவனின் குரலை ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தவளால் அவனது கோரிக்கையை மறுக்க முடியவில்லை..”ம்ம்ம்”

“தேங்க்ஸ்டா..உன்ன இன்னைக்கு நேர்ல பாக்குற வரைக்கும் ஒன்னும் தெரியல. ஆனா நா உன்ன புடிச்சிருக்குன்னு சொன்னதும் ஒரு லுக்கு வுட்ட பாரு. அப்பாவி குழந்த மாறி அழகா இருந்தடா.. அந்த குண்டு கன்னத்த புடிச்சு கிள்ளனும் போல இருந்துச்சு”

“என்னது”

“இருந்துச்சு.. ஆனா கிள்ள முடியுமா சொல்லு.. நீதான் உன் மனசுல என்ன இருக்குனு சொல்லவே இல்லையே”

“நீங்க வெய்ட் பண்றதா சொன்னிங்க”..

“ஆமா..எனக்கு நம்பிக்க இருக்கு. உனக்கு என்ன புடிக்கும்டா.. அத விடு நா ஒன்னு கேட்டா உண்மைய சொல்லுவியா”

அவன் முதல் தடவை கேட்கிறான் பொய் சொல்ல அவளுக்கு எப்படி மனம் வருமா?”ம்ம்ம்”

“ஏன் அழுந்த”

“என்ன”

“நா ஃபோன் பண்றப்போ ஏன்டா அழுந்த.. என்னாச்சு உனக்கு.. யாரு என்ன சொன்னா”

“இல்லயே…இல்ல ராஜ் நா அழல” அனைவரும் அவனை மித்ரன் என்று அழைக்க அவளின் ராஜ் என்ற தனிப்பட்ட அழைப்பு அவனுக்கு இறக்கை இல்லாமல் வானத்தில் பறப்பதைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்தது..

“பாப்பா என்கிட்ட பொய் சொல்லுவியா.. பொய் சொன்னா சீஸ் சிக்கன் பீஸ்சா சாப்டும் போது விக்கல் வரும்னு சொல்லுவாங்க”..

அவளுக்கு சிரிப்பு வந்தது..”நீங்க என்ன பூதக்கண்ணாடி வெச்சு பாக்குறீங்களா”

“ம்ஹும்..நா உன் வாய்ஸ்ல தெரிஞ்ச மாற்றத்த வெச்சு கேக்குறேன்.. சொல்லுடா என்னாச்சு..”அவள் பதில் பேசவில்லை.

“என்ன நடந்தாலும் யாரு என்ன சொன்னாலும் எத பத்தியும் கவலபடாத.. கடவுள் நம்பிக்க இருக்கா”

“ஜீசஸ் ன்னா ரொம்ப புடிக்கும்”

“நீங்க ஹிந்து தானே..”

“ஆமா எனக்கு ஜீசஸ் ரொம்ப புடிக்கும்”

“ஜீசஸ் என்ன சொல்லிருக்காரு?
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை.. அப்டினு சொல்லிருக்காரு தானே.. நானும் அப்டித்தான். உன்ன விட்டு என்னால போக முடியாது பாப்பா.. நீ என்ன எந்த சூழ்நிலையிலும் கைவிடாம என் கைய இறுக்கமா புடிச்சிக்கோ.. யாரு என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்றாத. உள்ளயே வெச்சிக்கோ.அந்த வார்த்த எல்லாமே தான் உனக்குள்ள ஒரு வெறிய கொடுக்கும். உன்ன அழவெச்சவங்க முன்னாடி வாழ்ந்து காட்ட சொல்லும்..

எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு இருக்கு.. நா ஒன்னு சொன்னா செய்வியா”

“ம்ம்ம்”

“குட்.. ஃபோன வெச்சிட்டு மனச ஒருநிலை படுத்தி கண்ண மூடிட்டு உன் பிரார்த்தனய உன்னோட ஜீசஸ் கிட்ட சொல்லிட்டு நிம்மதியா படுத்து தூங்கு..அவ்ளோ தான் உன்னோட வேல..அதுக்கு மேல உன் ஜீசஸ் பாத்துப்பாரு..சரியா”

“ரொம்ப தேங்க்ஸ் ராஜ்”

“உனக்காக நா வெயிட் பண்ணுவேன் நிலா பாப்பா..இப்ப நா சொன்னத செஞ்சிட்டு சிரிச்சிட்டே படு.. குட் நைட் பாப்பா”

“குட் நைட் ராஜ்”அழைப்பை துண்டித்தவள் அவன் சொன்னது போல செய்து விட்டு மனம் லேசாக சிரித்துக் கொண்டே படுத்து விட்டாள். அவளுடைய புகைப்படத்தை வாட்ஸாப் டிபியில் பார்த்து தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டிருந்தான் ராஜ்.

அன்று அவன் சொன்னது போல இப்பொழுதும் தனது பிரார்த்தனையை ஜீசஸிடம் கூறிவிட்டு கண்மூடி சுவரில் சாய்ந்து இருந்தாள் நிலா.. மின்சாரமும் வந்து விட்டிருந்தது.ராஜ் சென்ற வேலை முடிந்ததும் பின்னிரவு மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்தான்.வந்தவன் நேராக நிலா இருந்த அறைக்கு சென்று அவளது கை கட்டுகளை அவிழ்த்து விட்டான். அவனுடைய ஸ்பரிசம் உணர்ந்து கண் விழித்தவள்”எங்க போயி தொலைஞ்ச ராஜ்.. இந்த கொசு கடியில எவ்ளோ நேரம் சொரியாம இருக்குறது”

“ஏய் ஸாரிடா பாப்பா.. போனோன வரலாம்னு நெனச்சேன் ரொம்ப லேட்டாச்சு..” கை கட்டுகளை அவிழ்க்க பட்டதும் எங்கங்கே கொசு கடித்திருந்ததோ அங்கல்லாம் தனது நகங்களை வைத்துப் பரபரவென்று சொரிந்து தள்ளினாள் நிலா..

“ப்ச் நானே எவ்ளோ சொரியறது.. நீ வெட்டியா தானே இருக்க.. ஒழுங்கா சொரிஞ்சு விடு”.. சிரித்து கொண்டே சொரிந்து விட்டான் ராஜ்..

“ராஜ் இதுக்கு மேல நா எங்கேன்னு தனியா வீட்டுக்கு போறது.. இந்த ரூம் உள்ள இருக்க முடியல.. வெளிய ஹால்ல ஒக்காரலாமா”

அவள் சொல்வதும் சரிதான்”சரி வா”சோபாவில் அவளது கைப்பை மற்றும் கைபேசி கிடந்தது. எடுத்து பார்த்தாள் என்ன ஆச்சர்யம் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு கூட வந்திருக்கவில்லை. சந்தேகமாக அவனை பார்த்தாள்..அவள் அசந்த நேரம் கைபேசியை பிடிங்கி தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டான்.

“ராஜ் ஃபோன கொடேன்.. நா என்ன போலீஸ்சுக்கா ஃபோன் பண்ண போறேன்”

“யாரு கண்டா.. நீ பண்ணாலும் பண்ணுவடி”அவனை கடுமையாய் முறைத்து விட்டு

“நீ ஏன் இப்டி பண்ற.. லவ் பண்ணா கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சட்டம் இருக்கா.. இது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா.. ஆள் கடத்தல்.. என்ன கடத்திட்டு வந்துருக்க.. கடத்தி கல்யாணம் பண்ண போற..”

“நா கடத்தல நீயா தான் உன் ரெண்டு காலுல நடந்து வந்த”

“நீதானே பேச வானு கூப்ட அதான் வந்தேன்”

“நா என்னா உன்ன பொட்டு வெச்சா கூப்டேன்.. உனக்கு மூள இல்ல”அவளின் முகம் விழுந்து விட்டது.. அவனுக்கு தாங்கவில்லை.

“பாப்பா என்னடி ஏன் இப்டி மூஞ்ச தொங்க போட்ருக்க…”

“நான் உன் கூட வந்தேன் எதுக்கு.. உன்கிட்ட பேச.. ஆனா நீ இப்டி பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல ராஜ்.. இது தப்பு.. இப்டி என்ன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற”ஆயாசமாக கேட்டாள் நிலா.

“பாப்பா நீ ஏன் என்ன வேணாம்னு சொல்றன்னு எனக்கு தெரியும்.. என் அக்காவும் அம்மாவும் தானே.. அவங்கள பொறுத்த வர ஐஸ்வர்யா ராயே வந்தாலும் என்ன பொண்ணுக்கு வாயி கொஞ்சம் நீளமா இருக்குனு சொல்லுவாங்க.. அவங்களுக்கு யாரையாவது குறை சொல்லியே ஆகணும். அக்காவும் குணாவும் வீட்ல இல்லனா அம்மா என்கிட்டயே சொல்லுவாங்க.. இவன் ஆளும் மூஞ்சியும் சரியான சொரணகெட்டவனு ஆனா அவங்க முன்னாடி வாங்க மாப்ள காபி போடவானு நடிப்பாங்க..”

“ஏன் இப்டி ராஜ்”

“அவங்க அப்டித்தான். அழகுன்னா என்ன பாப்பா. இந்த தோல் கலரா, போட்ருக்கற உடுப்பா, படிச்ச படிப்பா, இருக்குற வீடா,யூஸ் பண்ற காரா, பாக்குற வேலையா இல்ல பேங்க் பேலன்ஸா சொல்லு இதான் அழகா..இல்ல டா.. உன் முகம் எவ்ளோ லட்ச்சனமா இருக்கு தெரியுமா.. சில பேரு தொட்டா ரத்தம் வர கலருல இருப்பாங்க ஆனா முகம் லட்ச்சனமா இருக்காது. சில பேரு கருப்பா இருப்பாங்க தொட்டு பொட்டு வெச்சுக்கலாம்.. ஆனா அவ்ளோ அழகா இருப்பாங்க.. உன் முகத்துல அழகே என்ன தெரியுமா இந்த வெண் புள்ளிங்க தான்.அந்தி சாயும் மாலை மாறி மஞ்ச கலரு முகம் அதுல அங்கொன்னும் இங்கொன்னுமா வெள்ள மேகம் மாறி இந்த வெண் புள்ளிங்க.. அழகுனா அழகு அப்டி ஒரு அழகிடி நீ..

எவ்ளோ லட்ச்சனமான முகம் உனக்கு. செதுக்கி வெச்ச செல மாறி இருக்க. இந்த கன்னத்த பாத்தாலே கடிச்சு வைக்க தோணுது.. இந்த குண்டு உடம்ப பாத்தா எப்படா உரிமையோட உன் மெத்து மெத்துன்னு இருக்குற நெஞ்சுல சாயிவோம்னு இருக்கு. இன்னும் நெறைய இருக்கு. அதெல்லாம் நாளைக்கு சொல்றேன்.. ஓகேவா”

“ராஜ் இப்டி என் மண்டைய கழுவுறத நிறுத்து.உன் வீட்ல எப்டி இத ஏத்துப்பாங்க..என்ன பத்தி கேவலமா பேச மாட்டாங்க”

“என் பொண்டாட்டிய அடுத்தவங்கள பேச விட்டு வேடிக்க பாக்க நா என்ன பொட்ட பயலா.. எவன் என்னா சொன்னா என்னடி.. மாமா இருக்கேன். நாளைக்கு நமக்கு கல்யாணம்.. மத்தத நாளைக்கு சொல்றேன். இப்ப தூங்கு”அவளை மேலே பேச விடாமல் இழுத்து மார் மேல் சாய்த்து கொண்டவன் அவளை தட்டி கொடுத்து கொண்டே தானும் தூங்கி போனான்.

தொடரும்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்