பிறைத் தோல்ள் தாங்கிடவா 11

கதவிற்கு அப்பால் அவளும் கதவிற்கு இந்தப் புறம் இவனும் நிற்க நேரம் தான் ஓடியதே தவிர இவர்களின் ஊடல் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.. அழைத்து பார்த்தான் அவள் அழைப்பை ஏற்கவில்லை.. வாட்ஸாப்பில் குறுந்தகவல் அனுப்பினான்.. இரண்டு நீலக் குறியீடுகள் காட்டியும் அவள் எந்த பதிலையும் அனுப்பவில்லை..

“ஹேய் என்னடி கொழுப்பா.. ஏதோ கோபத்துல திட்டிட்டேன்.. அதுக்குன்னு ரூமுக்குள்ள போயி ஒக்காந்துகுவியா? ஒரு மனுஷன் எத்தன தடவடி ஸாரி கேக்குறது.. என்ன என்னானு நெனச்சிருக்க உன் மனுசுல.. இவன் நம்ம கால சுத்துற நாயி.. அப்டியே காலம் முழுக்க சுத்த வெச்சே பொழப்ப ஓட்டிறலாம்னு பாத்தியா.. ச்சை வீடா இது”கதவை ஓங்கி உதைத்த ராஜ் அங்கிருந்து சென்று விட்டான்.. அவன் கதவை அடைக்கும் சத்தமும் வண்டியை எடுத்து செல்லும் ஓசையும் கேட்க நிலாவிற்கு அழுகை முட்டி கொண்டு வந்தது..

திருமணமாகி வரும் முதல் சண்டை. அவனின் சமாதான சீண்டல்களை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு இந்த கோபம் வேதனையை கொடுத்தது..  என்ன காரணம் என்று அவள் தெளிவாக கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் வாய்க்கு வந்த மாதிரி அவளை திட்டியதுமில்லாமல் இப்பொழுது எப்படி பேசி செல்வது அவன் தானே..அவனே வந்து மீண்டும் பேசும் வரை அவனிடம் பேசப் போவது இல்லை என்று ஒரு தீர்மானத்துடன் உட்கார்ந்திருந்தால் நிலா.

அவளின் கைபேசி அடுத்த இரண்டு நிமிடத்தில் வைப்ரேட் பண்ணியது.ராஜ் தான் வாட்ஸாப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்..

உன் உதடுகள் கோபமாக இருக்கின்றன..
அதை சமாதானப்படுத்த என் உதடுகள் தேவை💋

கவிதையை அவள் படித்த விட்டதற்கு அறிகுறியாக இரண்டு நீல நிற குறியீடுகள் அவனுக்கு காட்டப்பட்டன.மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

உன் கண்கள் கோபமாக இருக்கின்றன..
அவைகளை சாந்தப்படுத்த
என் கண்கள்
தேவை..

இப்பொழுதும் நீல நிற குறியீடுகள் தென்பட மனம் தளராத விக்ரமாதித்தனை போல் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி நிலாவின் கைபேசிக்கு வந்தது.

” உன் கன்னங்கள் கோபமாக இருக்கின்றன..
அதை சமாதானப்படுத்த
என் பற்கள் தேவை..”

இப்பொழுது நிலாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.வெளியே அழைப்புமணி அழைக்கும் ஓசை கேட்டது.. ராஜ் இப்பொழுது தானே சென்றான். இப்போது வந்திருப்பது யார்?  ஒருவேளை குமுதாவா?  இல்லை ராஜின் குடும்பமா? ஒரு நிமிடம் சிரிக்கக் கூடாதா கடவுளே அது பொறுக்காதே.. குழப்பத்துடன் எழுந்து சென்று கதவைத் திறந்தால் நிலா. ராஜ் கதவு நிலையில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. கண்களில் போலியான முறைப்பு வேறு.

அவனைப் பார்த்ததும் ஆசுவாசமாக உணர்ந்தாள் நிலா.. “ராஜ் நீயா.. நா பயந்தே போயிட்டேன்..”அவள் சொல்லும்போதே அவளைத் தாண்டி உள்ளே வந்தான் ராஜ்.

“ராஜ்”

” நான் கோபமா இருக்கேன்”

“என்ன நீ கோபமா இருக்கியா.. நியாயமா பாத்தா நான் தான் கோபப்படனும்..”

“என் கோபமும் நியாயம்தான்..  அடுத்தவங்கள பத்தி எனக்கு கவல இருக்கு.. ஆனா உன் மேல எனக்கு அக்கறையோடு சேந்த கவலயும் இருக்கு..அதை நீ புரிஞ்சுக்கோ..”

“நீதான ரொம்ப பேசிட்டு வண்டிய எடுத்துட்டு போன..இப்ப எதுக்கு போன வேகத்துலயே வந்திருக்க..”

” நீ போன் எடுக்கலன்னதும் வண்டிய ரோட்லயே நிப்பாட்டிட்டு சாவிய எடுக்கமா வந்துட்டேன். அதான் வண்டியை எடுத்து உள்ள போட்டுட்டு அப்படியே உனக்கு நாலு மெசேஜ காதல் சொட்டச் சொட்ட தட்டி விட்டுட்டு வரேன்.. ஆனாலும் என்ன தவிக்க வச்சதுக்கு நான் ரொம்ப கோபமா இருக்கேன்..”ராஜ் அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான்.

“சரி சரி உன் உதடு கோபமா இருந்தாலும் என் உதடு தானே ஆறுதல் சொல்லணும்..திரும்பி நின்னா எப்படி சொல்ல முடியும்..”

“ஒரு ஆறுதலும் சொல்ல வேணாம் போய் உங்க வேலைய பாருங்க.”

” அது எப்படி நீ சொல்லலாம்” நிலா ராஜ் முன் வந்து நின்று அவன் கண்களை நேராகப் பார்த்து கண்களின் இடையே இருந்த ஊடலை தகர்த்தெறிந்தாள்.ராஜின் கன்னத்தில் பல் படும்படி கடித்து கன்னத்தின் சினத்தையும் சிதறடித்தாள்.. பின் அவன் இரண்டு தோள்களையும் பிடித்து எம்பி அவன் உதட்டை தன் உதடுகளால் உறவாட விட்டு இரண்டு உதடுகளுக்கும் இடையே இருந்த வீண் பிடிவாதத்தை பிடுங்கி போட்டாள்.

அவள் ஆரம்பித்ததை அவன் தனதாக்கிக் கொண்டான். அவளை அப்படியே தூக்கிகொண்டு அறைக்குள் சென்றான்.  அறைக்கு வந்து அவளை மெத்தையில் கிடத்தியவனை பார்த்து” என்ன சார் கோபம் போச்சா”

“இல்ல இப்போ என் ஒடம்புக்கும் கோபம் வந்திருச்சு “

” அத எப்படி ஆறுதல் பண்றது”

“உன் ஒடம்போட என் ஒடம்ப பேச விட்டா அவங்களே சமாதான கொடிய பறக்க விட்றுவாங்க..”என்றவன் அவள் மேல் படர்ந்து தனது சமாதான கொடியை பறக்க விட்டுக் கொண்டிருந்தான்.. ஊடலும் கூடலுமாக அவர்களின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக ஒரு வாரத்தை தொட்டது.

என்னதான் அவனிடம் தைரியமாய் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் எப்பொழுது கமலாவும் கங்காவும் இங்கே வந்து பிரச்சனை செய்வார்களோ என்று பயந்து கொண்டே இருந்தாள் நிலா.. பிறப்பிலேயே நிலா மிகவும் மென்மையானவள். அதிர்ந்து கூட பேச மாட்டாள்.  ஆனால் அவளின் நிறக் குறைபாடு மற்றவர்களின் கேலிப் பொருளாக மாற அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள நிலா தன்னைத்தானே கடினமாக உருமாற்றிக் கொண்டாள்.

கங்கா கமலாவை பார்த்து அவள் பயப்படுகிறாள் என்று கூறுவதும் ஒரு விதத்தில் சரி இல்லாதது.என்ன இருந்தாலும் அவர்கள் ராஜூடைய குடும்பம். இவள் வந்த உடனே கணவனைப் பிறந்த வீட்டாருடன் வெட்டிக் கொள்ள செய்துவிட்டாள் என்று கெட்ட பெயர் தனக்கு வந்துவிடக்கூடாது என்று பயந்தாள் நிலா.ஒவ்வொரு நாள் காலையிலும் கடைக்குச் செல்லும்போது அவளை பத்திரமாக இருக்க சொல்லி அவள் எந்நேரமும் கைபேசியை உடன் வைத்திருக்கவும் மறக்காமல் கூறினான்.. இது விற்பனை நேரம் இல்லை என்றால் இரண்டு வாரம் கடை பக்கம் கூட எட்டிப் பார்த்திருக்க மாட்டான் ராஜ்.

“ஹேய் கும்மு.. நா கறிக்கு அவிச்சு வெச்சிருக்கேன்.. நீ என்னன்னா நல்ல பாம்பு மாதிரி லபக் லபக்குனு முட்டைய முழுங்கிட்டு இருக்க..”நிலா குழம்புக்கு அவித்து வைத்திருந்த காடை முட்டைகளை லபக் லபக்கென்று உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் குமுதா..இந்த ஒருவார கால இடைவெளியில் நிலா குமுதாவின் நட்பு பலமாக்கி விட்டது..பேசுவதற்கு ஆளில்லாமல் இந்த டெவலப் ஆகி வரும் ஏரியாவில் வீடு வாங்கி வந்த கணவனை எந்நேரமும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் குமுதா..

நிலா எப்பொழுது அவள் குழந்தையை காப்பாற்றி கொடுத்தாளோ அந்த நிமிடமே குமுதாவின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டாள். அன்று சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்திற்குள் குமுதாவின் கணவன் பிரகாஷ் வீட்டிற்கு வந்துவிட்டான். அவனிடம் நடந்ததை கூறி ஒரு பேயாட்டம் ஆடிவிட்டாள் குமுதா.  நிலா கூறியதை அவனிடம் கூறி”வாங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வரலாம்..  அந்த மூதேவி திரும்பவும் வந்துரப் போறா” என்றதற்கு

“போலீஸ்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிவராது டி..  நான் அவளோட அப்பா அம்மாவ பாத்து பேசுறேன்.. அவ வீடு ஏறி வந்து புள்ளய தூக்கிட்டு போற வரைக்கும் நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த..உன்ன பத்தி எனக்கு தெரியாதா.. அந்த டீவி உள்ளுக்கே பூந்து கிட்டு ஒக்கார்ந்திருப்ப..அதான் அவ நைசா உள்ள வந்து புள்ளய தூக்கிட்டா..” பிரகாஷ் இம்மாதிரி கூறியதும்

“யோவ் நீ பாத்தியா நான் டீவி பாத்துட்டு ஒக்கார்ந்து இருந்தத..அப்படியே நா ஒக்காந்து இருந்தாலும் என் காது என்ன செவுடா..டிங்கு தான் அந்த கத்து கத்துதே எனக்கு காது அவிஞ்சு போயிருச்சா அது கேக்காம போவ..வீடு பூந்து ஒருத்தி உன் பொண்டாட்டி மேல கைய வெச்சிட்டு புள்ளய தூக்கிட்டு ஓடிருக்கா..கேட்டோன உன் ரத்தம் கொதிச்சி அந்த கேடுகெட்டவள தேடி போயி நாலு மிதி மிதிப்பேனு பாத்தா நீ வெட்டி நியாயம் பேசிட்டு இருக்க..

இப்போதான் எனக்கே சந்தேகமா இருக்கு..ஒருவேளை அவள முன்னாடி அனுப்பி பின்னாடி வண்டியோட வந்தவன் நீதானோ.. ஒரே போடா என்ன போட்டு தள்ளிட்டு புள்ளய கொண்டு போயி எங்கேயாச்சும் பிச்சை எடுக்கிறவன் கிட்ட விட்டுட்டு ரெண்டு பேரும் கம்பிய நீட்டிரலாம்னு பிளான் போட்டு காரியத்துல எறங்குனீங்களோ.. ஆத்தாடி இது கொலைகார குடும்பமா இருக்கே.. ஏன்யா இப்டி நெனைக்குற நீ எதுக்குய்யா உங்கத்தா அப்பன் சொன்னதுக்கு மாடு மாறி மண்டைய ஆட்டிகிட்டு என்ன கட்டிக்கிட்ட..

கட்டுன வேகத்துல எதுக்கு ஒரு புள்ளைய கொடுத்த..நல்ல புருஷன் மாறி ஊரு சனம் முன்னாடி படம் காட்டிட்டு இப்படி ஆளே இல்லாத ஏரியாவுல வீடு வாங்கி கூட்டிட்டு வந்து குடி வெச்சிட்டு உன் முன்னாள் காதலி கூட சேந்து திட்டம் போட்டு என்ன கொல்ல பாக்குற.. யாரு பெத்த புள்ளையோ அந்த பொண்ணு வந்து நல்ல நேரத்துல என்ன காப்பாத்துனுச்சு..இல்லன்னா என் கதையும் முடிச்சிருக்கும் என் புள்ள ஒரு கதையும் முடிச்சிருக்கும்.”அமுதா பெருங்குரல் எடுத்து ஒப்பாரி வைக்க பிரகாஷ் அவள் பேசும் போது இடையில் பேச எவ்வளவோ முயற்சி செய்தான். இறுதியில் அவள் பேசி முடிக்கவும் பொறுக்க முடியாத ஓங்கி இரண்டு அப்பு அப்பினான் கன்னத்தில்..

“ஏன் டி கட்டுன பொண்டாட்டியயும் பெத்த புள்ளயயும் ஆளு வச்சு தூக்குற அளவுக்கு கேவலமானவனா நானு.. ஏ ஆத்தா அப்பன் ஒன்னும் என்ன அப்படி வளக்கலடி..”

“ஆமா தூக்குறத பத்தி நீ பேசுறியா.. எங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்தப்போ தட்டுல பழம் வெச்சிருந்தோம். உங்க ஆத்தாகரிக்கு அந்த மல்கோவா மேல ஒரே கண்ணு.. கக்கூஸ்சுக்கு போறேன்னு சொல்லிட்டு அத தூக்கி பையில போடல.. ஏதோ உன்ன பாத்ததும் புடிச்சு போனதால நம்ம மாமியாருக்கு பழத்த தூக்குற வியாதின்னு கம்முனு இருந்துட்டேன்.. இப்ப அதுவேல எனக்கு ஆப்பா ஆயிருச்சு..மகனுக்கும் ஆத்தா புத்தி எட்டி பாக்குது”

குமுதா எப்போதும் இப்படி பேச பிரகாஷ் சிரித்து விடுவான். இன்றும் அவள் கடுப்பில் பேசிக்கொண்டிருக்க அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.பேசிக் கொண்டிருந்தவளை இழுத்து அணைத்தான் பிரகாஷ்..

“இவ்வளவு நேரம் வாய் கிழிய பேசுன. இப்ப எதுக்கு பொசுக்குன்னு கட்டிப்பிடிக்கிற”

” என் பொண்டாட்டி நான் கட்டிப்பிடிப்பேன் உனக்கு என்ன.. ஆனா ஒன்னுடீ.. மண்டையில அடிபட்டோன நீ பாக்க வேற லெவல்ல இருக்க தெரியுமா..”

” மண்டையில தானே கொஞ்சம் நவுறேன்.. “என்றவன் அவளை விலக்கி தள்ளி சமையலறைக்குள் சென்றாள். அவள் பூரி கட்டையை தேட இவன் அவளுக்குப் பின்னே சென்றதும் முதலில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க அதற்குப் பின்னே சுக முனகல்கள் சத்தம் கேட்டது. ஆனால் இறுதிவரை இருவரும் வெளியே வரவே இல்லை. மாலை போல இருவரும் அபியை தூக்கிக்கொண்டு நிலா வீட்டிற்குச் சென்றார்கள். நிலா இருவரையும் ராஜிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

ஆண்கள் பொது விஷயத்தை பற்றி பேச பெண்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர்.நிலா அபியை கீழே இறங்கவே இல்லை தன் இடுப்பிலேயே தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அபியை அவள் கொஞ்சுவதை கண்ட ராஜ் அவளுக்கு குழந்தை மேலே எவ்வளவு பிரியம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான். நல்லவேளை ஒரு வருடம் கழித்து குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவளிடம் கூற இருந்தான் ராஜ்.

அவனுக்காக அவள் ஒத்துக் கொண்டாலும் மனதளவில் ஒரு குழந்தைக்கு மிகவும் ஏங்கிப் போய் இருப்பாள் என்பதை இந்த ஒரு நிகழ்வு அவனுக்கு உணர வைத்தது.

அபியும் டிங்குவும் ஹாலில் இருக்க காடை முட்டைகளின் தோல்களை நீக்கி தருகிறேன் என்று களத்தில் இறங்கியிருக்கும் குமுதா முட்டைகளில் குழம்பில் போடுவதற்கு பதிலாக அவள் வாயில் போட்டுக்கொண்டாள். அவளைக் கடுப்புடன் பார்த்த நிலா மீதமிருக்கும் முட்டைகளையாவது காப்பாற்றும் முயற்சியில் இறங்கினாள்.

“ஹேய் கும்மு என்னடி செஞ்சாரு பிரகாஷ் அண்ணே.. அந்த பொண்ணு எந்த பிரச்சனயும் பண்ணாம ஸைலண்ட் ஆயிருச்சு”

“இந்தாளு என்னத்த செஞ்சானோ அதெல்லாம் என்கிட்ட எங்க சொல்லுவான்..எப்டியோ டி அந்த பண்ணாட என் புருஷன விட்டு ஒளிஞ்சா போதும்..”

“ஏன்டி இவளுங்க எல்லாம் இப்படி இருக்காளுங்க..”

“வேற எதுக்கு அடுத்தவ குடிய கெடுக்க தான்.. சிவனேனு சிங்கலா சுத்துறானுங்க அவனுங்கள மதிக்கவே மாட்றாளுங்க.. அடுத்த புருஷன்னா ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் குடிக்குற மாறி சல்லுன்னு இருக்குது போல”.. கொலைவெறியில் கூறினாள் குமுதா..அவளுடன் மேலும் பேசிக்கொண்டே சமையலை முடிக்க இருவரும் நிலா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு ஷாப்பிங் சென்டர் ஒன்றுக்கு சென்றார்கள்.

அபிக்கு இன்னும் ஒரு வாரத்தில் ஒரு வயது பிறந்த நாள் வர இருக்கிறது. அபிக்கு புது ஆடையும் குமுதாவுக்கு அழகான சேலையும் தேர்ந்தெடுத்து கொடுக்க நிலாவை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தாள் குமுதா.. முதலில் குழந்தைக்கு அழகான கவுன்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்.அபி நல்ல நிறம். அவளுக்கு கவுன் முழுவதும் சூரியகாந்திப் பூக்கள் பூத்து இருப்பதை போல அழகான ஆடையை தேர்ந்தெடுத்து கொடுத்தாள் நிலா.

குமுதாவுக்கும் ஆடையை பார்த்ததும் பிடித்துவிட்டது. இப்பொழுது சேலையை தேர்ந்தெடுக்க இருவரும் வேறு தளத்தில் இருக்கும் கடைக்கு சென்றனர்.செல்லும் வழியில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் ராஜ் அமர்ந்திருந்தான்.”ஹேய் அங்க பாருடி உன் புருஷன்”குமுதா சுட்டிக்காட்டிய கடையை பார்த்தாள் நிலா..

அங்கே ராஜ் முன்பு மார்டன் என்ற பெயரில் அபாயகரமான அங்கங்களை எடுத்துக்காட்டும் விதமாக ஆடையில் நெளிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் சிந்து..

தொடரும்..

Comments

  1. பிரச்னை தேடி வந்து ஒட்காந்து இருக்கு ராஜ்க்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்