பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா முன்னோட்டம்



இரவுகளின் சக்கரவர்த்தினி தன்னுடைய மன்னவனை காணப் போகும் ஆவலிலும் அதனால் அவளுக்கு ஏற்பட்ட வெட்கத்திலும் அந்த நடுநிசி வேளையை ஏகாந்த வேளையாக மாற்றிக் கொண்டிருந்தாள்.. தன் நெருங்கிய நண்பர்களான நட்சத்திர கூட்டங்களை வான் முழுவதிலும் வாரி இறைத்து விட்டு அவைகள் மின்னி மின்னி மிலிர்ந்து அவளை கன்சிமிட்டி பரிகசிக்க நாணத்தில் நனைந்தவள் தன்னை வெண்பஞ்சு மேகத்தின் ஊடே மறைத்துக் கொண்டாள்.குளிர்ந்த தென்றல் இரவை மேலும் இனிமையாக்க தானும் தன்னவனை எண்ணி சிந்தை குளிர்ந்து இரவு நேரத்தை ரம்யமாக்கினாள் வான் நிலா.

ஆனால் இதை எதையும் உணராமல் தனது தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி.. தலையணை முற்றாக நனைந்து ஈரமாகிய போதும் அதன் மேல் இரக்கம் கொள்ளாமல் அதை தனது கண்ணீரால் குளிப்பாட்டுவதில் குறியாக இருந்தாள்.சாளரங்களை தாண்டி மூடாத ஜன்னலின் வழியே ஊடுருவிய மஞ்சள் நிற தெருவிளக்கின் ஒளியில் அவளது வடிவரிவம் தெரிந்தது.இருளிலும் அவள் யாருக்கும் கேட்க்காமல் அழுவது அவளின் குலுங்கும் வடிவரிவத்தில் தெரிந்தது..

சுவரில் மாட்டிருந்த அவளது புகைப்படங்களை தாங்கிருந்த புகைப்பட சட்டங்கள் யாவும் அடித்து நொறுக்கப்பட்டு கண்ணாடி உடைந்து பரிதாபாகரமான நிலையில் ஒரு மூலையில் கிடந்தன.அதனுள்ளே இருந்த புகைப்படங்கள் யாவும் ஆங்காரமாக கிழித்து எறியப்பட்டு அறை முழுவதும் விரவி கிடந்தன.ஒவ்வொரு புகைப்பட துண்டுகளையும் உற்று பார்த்தால் அவள் எதையோ மறைக்க தன் புகைப்படத்தின் மீதே வண்ணம் பூச முயன்றிருபது தெளிவாக தெரிகிறது..

வான் நிலா ஒய்யாரதில் ஒளி வீசி கொண்டிருக்க இங்கே பாவமாக அழுது கொண்டிருந்தாள் வெண்ணிலா.நெடுநேரம் கவிழ்ந்து படுத்திருந்தவள் இப்பொழுது விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தாள்.மஞ்சளும் இருளும் கலந்த ஒளியில் அவள் முகம் தெரிகிறதோ இல்லையோ அவளின் முகத்தில் ஆங்காங்கே காணப்படும் வெண் சரும நோய் தெள்ள தெளிவாக தெரிந்தது..

வெண்ணிலா அவளது நெருங்கிய உறவுகளாலே பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெந்த நிலாவாகி போயிருந்தாள்.

இது கூட அவள் அழுகைக்கு காரணமாக இருக்குமோ? தெரிந்து கொள்ள காத்திருங்கள் பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா…

Comments

  1. ஆரம்பத்திலே அழ வைக்கிறீங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்