பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 25


தேன் நிலா எனும்
நிலா என் தேவியின்
நிலா நீ இல்லாத நாள்
எல்லாம் நான் தேய்ந்த
வெண்ணிலா
வான் நிலா
நிலா அல்ல உன்
வாலிபம் நிலா..

எம் பி ட்ரீயில் பாடல் ஒலிக்க அது தன்னவளை நினைவு படுத்த ராஜ் மித்ரனின் யோசனை சில மாதங்களுக்கு முன் சென்றது.திருமணம் ஆனதிலிருந்து எத்தனை பிரச்சனைகள். ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வருவதற்குள் எத்தனை மன வேதனைகள்..எண்ணிப்பார்க்கவே ஆயாசமாக இருந்தது.வெண்ணிலா அவள் தான் எவ்வளவு மென்மையானவள்.  இதுவே வேறு ஒரு பெண்ணாக இருந்தால் அவன் தாயும் சகோதரியும் பேசிய பேச்சிற்கு எப்பொழுதோ மூட்டை கட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருப்பாள்.

சாதாரண நிறக் குறைபாட்டை பெரிய தொத்து வியாதியாக நினைத்து கங்காவும் கமலாவும் பேசிய பேச்சுகள் அவனாலேயே மறக்க முடியவில்லையே. அவளுக்கும் அப்படித்தானே இருக்கும். ஆனாலும் இவன் தன் மேல் காட்டும் அன்பிற்காக எதையும் வாய்விட்டு கூறாமல் தனக்குள்ளேயே வைத்திருக்கிறாள்.

அவளது அம்மா அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்த பின்பும் அவளால் அவர்களுடன் இழைய முடியவில்லையே.காரணம் தன் கணவன் அவன் தாயாரோடு பேசாமல் இருக்கும் இந்த நேரத்தில் தான் மட்டும் தன்னுடைய குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதை குற்றமாக எண்ணுகிறாள். தாமரை மகள் குழந்தை உண்டானது கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்து வாரத்திற்கு ஒரு முறை மகள் வீட்டிற்கு வந்து அவளை பார்த்து விட்டு செல்வார்.

அப்படி ஒருநாள் அவர் வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அழுத்தி நெடுநேரம் வெளியே காத்திருந்திருக்கிறார்.மகள் கதவைத் திறக்கவே இல்லை அவளுக்கு அழைத்தால் உள்ளே இருந்த கைபேசியின் ஓசை அவருக்குக் கேட்டது. என்னமோ ஏதோ என்று குமுதாவை அழைத்து எப்படியோ இருவரும் சேர்ந்து அந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் பாத்ரூம் அருகே மயங்கி கிடந்தால் வெண்ணிலா.

கர்ப்ப காலத்தில் சிலருக்கு வாந்தி கூட வராது.ஆனால் சிலருக்கு வாந்தி தான் வாழ்க்கையே. நிலாவுக்கு இடை வீங்கி பயங்கரமாக காய்ச்சல் அடித்தது.காலையில் ராஜ் கடைக்கு செல்லும் போது காய்ச்சல் இல்லை..  இருந்தாலும் அவளை விட்டுச் செல்ல மனமில்லாமல் தாமரை வர ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் கடைக்கு கிளம்பி சென்றான்.  அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் காய்ச்சல் கண்டால் நிலா.சிறுநீர் கழிக்க பாத்ரூம் சென்றவள் வெளியே வந்ததும் தலை கிறுகிறுக்க அப்படியே விழுந்து விட்டாள்.

உள்ளே வந்த தாமரை மகளைக் கண்டு பதறி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்.. மெல்ல அவளை எழுப்பி நடத்தி சென்று சோபாவில் அமர வைத்து  அவளுக்கு பழச்சாறை எடுத்து வந்து புகட்டினார்."ஏன்டி உனக்கு என்ன தலையெழுத்தா.. இங்க கெடந்து கஷ்டப்பட.. அன்னிக்கே கூப்டேன். அங்க வானு.. அவரு தனியா இருப்பாருன்னு சொல்லிட்ட.. இப்ப பாரு யாரு அவதிப்படுறது.. நல்ல வேல நான் வந்தேன். இல்லனா கக்கூஸ் கிட்ட மயங்கி கெடந்துருப்ப..

ஒழுங்கா அங்க வந்து இரு. இன்னும் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு இங்க வா.. இல்லனா அங்கேயே இரு புள்ள பொறக்குற வரைக்கும். எப்படியும் வளைகாப்பு பண்ணி அங்கதானடி வரப்போற.. இப்பவே வாயேன்".. ஒரு தாயின் பரிதவிப்பு.

ஜூஸ் குடித்துக் கொண்டே "இல்லம்மா அவரு எப்படி தனியா இருப்பாரு.. ஏற்கனவே அவங்க அம்மா கொஞ்சமா பேசுவாங்க. இப்ப அவர விட்டுட்டு வந்தா என்ன சொல்லுவாங்க"

"அந்த கெழவி என்னிக்குத்தான் சொல்லாம இருக்கு.. அதுக்கு உன்ன பத்தி விட்டுட்டு அந்த மினிக்கியா கட்டி வைக்கணும்.. அதுக்கு தான் பேயாட்டம் ஆடிட்டு இருக்கு.. அண்ணனே அத போயி எட்டி பாக்குறது இல்ல.. அதுக்கு தான் மகன் மருமக யாருமே வேணாமே.. அண்ணன், அண்ணன் பொண்டாட்டி,அண்ணன் மகனு புடிங்கி திங்குற கூட்டத்த சேத்துகிட்டு ஏன் இப்டி பண்ணுதோ"அங்கலாய்தாள் குமுதா அபியை இடுப்பில் வைத்துக் கொண்டு.

நிலா வேகமாக வாசலை திரும்பி பார்த்தாள். ஒருவேளை ராஜ் வந்திருந்தால் குமுதா பேசிய பேச்சு அவன் காதில் விழுந்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்.தான் வீட்டில் இல்லாத நேரத்தில் குடும்பமாக சேர்ந்து தன்னுடைய அம்மாவை பற்றி அவதூறு பேசுவதாக நினைத்து விட மாட்டானா.."கும்மு அத்தை பேச்ச விடுடி. அவரு வந்துட்டா ஏதாச்சும் நெனச்சிக்க போறாரு"

"கண்ணு நான் சொல்றத கேளு.. மாப்ள வரும்போது நான் சொல்லிக்குறேன்.ஒரு வாரமாச்சும் அங்க வந்து இரு..டாக்டர் உன் உடம்பு ரொம்ப வீக்கா இருக்குனு சொன்னாரு தான.."தாமரை வெண்ணிலாவிடம் மெதுவாக பேசி தன்னோடு அழைத்துச் செல்ல முயன்று கொண்டிருக்க ராஜ் வீட்டிற்கு வந்தான்.

 வேகமாக உள்ளே வந்தவன் தன்னுடைய மாமியாரை கண்டதும் வாங்க அத்தை என்று மரியாதை நிமித்தமாக அழைத்துவிட்டு நிலாவிடம்"நிலா நான் உடனே பெங்களூரு கெளம்புறேன்.குணாவுக்கு வண்டியில வரும் போது சின்னதா அக்சிடன்னா கங்கா ஃபோன் பண்ணி அழரா. நான் போய்ட்டு என்னானு பார்த்துட்டு வரேன்.. அதுவரைக்கும் நீ உங்க அம்மா வீட்ல இரு.. அத்தை நான் வர வரைக்கும் அவ அங்க இருக்கட்டும்.."

"அதனால என்ன மாப்ள..இதையே தான் நான் சொல்லிட்டு இருக்கேன்..நீங்க தனியா இருப்பிங்கனு அவ யோசிக்குறா"தாமரைக்கு ஒரே சந்தோசம். அபியை தாமரை கொஞ்சிக் கொண்டிருக்க அறைக்கு சென்றாள் நிலா. பயணத்திற்கு தேவையான துணி மணிகளை எடுத்து வைத்தாள்.. எப்படியும் தான் வர இரண்டு நாட்களாவது ஆகும் என்று  ராஜ் கூறினான். நிலாவுக்கு அவனை தனியாக அனுப்ப மனம் வரவில்லை.

 ஆனால் அவளது உடல் நிலையை முன்னிட்டு அவளை உடன் அழைத்துச் செல்ல அவன் விரும்பவில்லை.  அவளை அமர வைத்துவிட்டு அவள் காலடியில் அமர்ந்தவன் "பாப்பா நீயே என்ன நிலைமயில இருக்க. இதுல அங்க வந்து என்ன பண்ணப் போற.. பேசாம அம்மா வீட்ல ரெஸ்ட் எடு.. நான் அங்க போய்ட்டு பாத்துட்டு ஃபோன் பண்றேன் சரியா. அப்றம் அங்க ஒருவேளை பிரியா ஃபோன் அவ கிட்ட ஜாக்கிரதையா இரு"என அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளையும் கிளம்பச் சொல்லி தாமரையையும் நிலாவையும் அவர்கள் வீட்டில் விட்டு கிளம்பினான்.

குணாவிற்கு காலில் சின்னதாக எலும்பு முறிவு. மற்றபடி அவன் ஆரோக்கியமாக இருந்தான். அவனது நண்பர்களிடம் அவனைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு இரண்டு மூன்று நாட்கள் கூடவே இருந்து அவனது தேவைகளை கவனித்து பின் கங்காவின் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினான் ராஜ்.

இதற்கிடையே வெண்ணிலா அவளின் தாய் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். எதை சாப்பிட்டாலும் வாந்தி. தாமரை மகளுக்கு  சத்துள்ள பழ வகைகளை பழச்சாறாக எடுத்து நேரத்திற்கு ஒருமுறை குடிக்கக் கொடுத்து கொண்டிருந்தார்.. சாப்பாடும் இல்லை பழச்சாறும் இல்லாமல் போனால் கண்டிப்பாக அவள் உடலில் தெம்பு இருக்காது.

ஐந்து மாத வயிறு நன்றாக  வெளியே தெரிந்தது.. நிலா தந்தையோடு மாலையில் வாக்கிங் சென்றாள்.  தம்பியோடு கேரம் ஆடினாள். தாயோடு நடந்து கோவிலுக்கு சென்று வந்தாள்.தன் குடும்பத்தோடு பழையபடி அவள் சந்தோஷமாக இருந்தாலும் அவளின் எண்ணங்கள் எல்லாம் ராஜிடம் இருந்தது.. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அழைத்து அவள் என்ன செய்கிறாள் என்பதை அறிந்து கொள்பவன் ஒவ்வொரு முறையும் முத்தமிட்டு அவளை வெட்கப்பட வைத்தான்.

அங்கே சென்ற இரண்டு நாட்கள் முழுவதும் சந்தோஷமாக சென்றது.மூன்றாவது நாள் சந்தோஷத்தில் இடி விழுந்தது.காரணம் இடியாக வந்து விழுந்தது பிரியாவின் விஷயம்.முதல் நாளே செங்கமலமும் செல்வியும் வந்து நிலாவைப் பார்த்து விட்டுச் சென்றனர்.என்றுமே செல்விக்கு தன் அக்கா மீது பொறாமை உண்டு.அதிலும் தாமரை தன் மருமகனின் புராணம் பாட செல்விக்கு பற்றிக்கொண்டு எரிந்தது.அழகே உருவான தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் வாழ்க்கைத்துணை அவ்வளவு சரியில்லை.அப்படி சொல்வதை விட வாழ்க்கை துணைக்கு இவர் மகள்கள் தான் சரியில்லை.

சுகியின் கணவனும் சரி சுஜியின் கணவனும் சரி இருவருமே நல்லவர்கள். ஆனால் மிகவும் கண்டிப்பானவர்கள்.சுகியும் சுஜியும் மாமியார் மாமனாரோடு தான் ஒற்றுமையாக உள்ளனர். அதாவது ஒற்றுமையாக இருந்தே ஆக வேண்டும்.இல்லையென்றால் இருவரின் கணவர்களும் தங்கள் மனைவியை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள்.

 திருமணமான புதிதில் சுகி அவள் புகுந்த வீட்டிலும் சுஜி அவள் புகுந்த வீட்டிலும் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை. முதலில் வீட்டிற்கு வந்த மருமகளின் செய்கையை மகனிடம் காட்டிக்கொடுக்காத மாமியார் பின்னாளில் மருமகள் ஆடிய ஆட்டம் தாங்க முடியாமல் மகனிடம் கூறிவிட்டார். அதுவும் அவராக கூறவில்லை. தன்னுடைய உள்ளாடை முதல்கொண்டு எடுத்து வந்து மாமியாரைத் துவைத்து கொடுக்கச் சொன்னாள் சுகி.  வாஷிங் மெஷின் இருந்தும் கையால் துவைத்தால் தான் சுத்தமாக இருக்கும் என தெனாவட்டாக மாமியாரிடம் இப்படி செய்ய சொன்னாள்.

 மகனின் வாழ்க்கை கருதி அந்த நல்ல மாமியாரும் தன்னுடைய கையால் அனைத்து உடைகளையும் துவைத்து கொடுப்பார். அன்றும் அப்படிதான் சுகியின் உள்ளாடைகளை அனைத்தையும் சுத்தமாக துவைத்து அதை அவர் ஐயர்ன் செய்து கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் சுகியின் கணவன்.தாய் ஐயர்ன் செய்வது தன் மனைவியின் உள்ளாடை எனக் கண்டு கொண்டவன் தன் தாயை பிடித்து உலுக்கி இதுவரை சுகி ஆடிய ஆட்டம் முழுவதையும் தெரிந்து கொண்டான்.

 அன்று அவன் அடித்த அடியில் அம்மா வீட்டிற்கு ஓடி வந்து விட்டாள் சுகி. பின்னோடே வந்தவன் அவள் அப்பாவிடம் அனைத்தையும் கூறிவிட அவரும் மகளை தன்னால் முடிந்த அளவு வசைபாடினார்.  மனைவியை மாமியார் வீட்டில் விட்டவன் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டான்.  இங்கே சுகி அம்மா இருக்கும் தைரியத்தில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சுகமாக இருக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் அவளின் தந்தை விடவில்லை. என்னேரமும் தேள் கொட்டுவது போல அவளை பாடாய் படுத்தி அவள் செலவுக்கு ஒரு காசு கூட கையில் கொடுக்காமல் வீட்டு வேலை வாங்கினார்.

கணவனைத் தட்டிக் கேட்ட செல்விக்கு கன்னம் பழுக்க இரண்டு வைத்தார். சொத்து முழுவதையும் ஆதரவற்றோருக்கு எழுதி வைத்துவிட்டு நடுத்தெருவில் இவர்களை நிற்பாட்ட போவதாக கூறினார்.  பிறவியிலிருந்தே உடல் வளையாது சுகிக்கு. படிப்பும் ஏதோ தந்தையின் அடிக்கு பயந்து அப்படி இப்படி என ஒரு டிகிரி வாங்கி விட்டாள். வெளியே சென்று வேலை செய்வது எல்லாம் அவளுக்கு முடியாத காரியம். அங்கு கணவன் வீட்டில் மகாராணியாக இருந்தவள். தன் தாய் வீட்டில் வேலைக்காரியாக நடத்தப்பட கணவன் மிதித்தாலும் பரவாயில்லை என்று அங்கே கிளம்பி சென்றுவிட்டாள். அவளின் கணவனும் அவனின் தாய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தான் உள்ளே விடுவேன் என்று கூறிவிட்டான்.

வேறு வழியில்லாமல் அதையும் செய்து தன் மாமியாரிடம் மன்னிப்பு கேட்டு அன்றிலிருந்து அந்த வீட்டின் பாதி வேலை இவள் தலையில் தான். மனைவியை நம்பாமல் வீட்டை சுற்றி கேமராக்களை மறைத்து வைத்தான் சுகியின் கணவன்.  கணவன் முன்பு பசு மாதிரி இருப்பவள் அவன் வேலைக்கு சென்றதும் மாமியாரை படுத்தின பாடுகள் எல்லாம் கேமராவில் ரெகார்ட் ஆக அதற்கும் சேர்த்து இரண்டு மிதி மிதித்தான்.

அப்போதெல்லாம் அவளைக் காப்பாற்றியது அவளுடைய நல்ல மாமியார் தான்.சுகி ஓரளவு தன் தவறை உணர ஆரம்பித்தாள். தன்னால் வெளியே சென்று வாழ முடியாது.சொந்தக்காலில் நிற்கவே முடியாது.எனவே மாமியாரை அனுசரித்து வாழ பழகிக் கொண்டாள்.கணவனுக்கு பயந்து மாமியாருக்கு நல்ல மருமகளாக வாழப் பழகியும் அவளுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.

சுஜி அவளுக்கு மாமியார் ஒரு பிசாசு. கமலாவை போல் நான்கு பேர் ஒன்று சேர்ந்தவர். அப்படி இப்படியென தனிக்குடித்தனம் சென்றாலும் கணவன் அம்மாவிற்கு செய்ய வேண்டிய கடமைகளை தான் செய்தே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு மினுக்கென்றால் அவன் தாய் வீட்டிற்கு சென்று விடுவான். அவனின் மூன்று சகோதரிகளும் எப்பொழுதும் தம்பியிடம் நை நையென சுஜிக்கு வாழ்வே வெறுத்து விட்டது.இது போதாதென்று அவளுக்கும் குழந்தை பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. ஆயிரம் இருந்தாலும் இருவரின் கணவன்களும் நல்லவர்கள் தான்..மனைவிக்கு ஒரு குறை வைத்ததில்லை.. உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள்.

தன்னுடைய மகள்களின் வாழ்க்கை இவ்வாறு இருக்கும்போது அவர்களுக்கு பின்னால் திருமணமானவள் நிலா. அதுவும் ஊரைக்கூட்டி திருமணமா? பெற்றோர் சம்மதமில்லாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவள்.. என்னதான் நிலா அப்படி ஓடிப்போய் திருமணம் செய்யவில்லை என்றாலும் ஊரும் உறவும் அப்படித்தான் பேசிக் கொண்டது.  பெற்றோரான தாமரை மாறானே அனைத்தையும் மறந்து வெண்ணிலாவை ஏற்றுக்கொண்டாலும் செல்வியால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை வெண்ணிலா கட்டின துணிக்கு கூட வழியில்லாமல் தெருவில் நின்று இருந்தால் அவர் மனம் அவளை ஏற்றுக் கொண்டு இருக்குமோ என்னவோ?

செங்கமலம் சென்று வாயும் வயிறுமாக இருக்கும் நிலாவை வந்து பார்க்க பக்கத்தில் இருந்து கொண்டே தான் செல்லவில்லை என்றால் அத்தனை நன்றாக இருக்காது என கிளம்பி வந்தார். வெண்ணிலாவின் பேச்சும் சிரிப்பும் பார்க்க பார்க்க செல்விக்கு வயிரெல்லாம் எறிந்தது.  போதாததற்கு அவரின் கணவர் கண்ணன் வேறு

"பாத்தியா உன் அக்காவோட வளப்ப..வெண்ணிலா படிக்கும்போதே கெட்டிக்காரி.எந்த விஷயமா இருந்தாலும் டான் டானு புடிச்சுக்குவா..என்ன தான் அவ கல்யாண விஷயத்துல பிரச்சன வந்தாலும் கடவுள் எவ்ளோ நல்லா வாழ்க்கய கொடுத்துருக்காரு பாரு.. மித்ரன் மாதிரி ஒருத்தன பாக்க முடியுமா..மாறன் செஞ்ச புண்ணியம். நா என்ன பாவம் பண்னேனோ தெரியல.உன்ன கட்டி உன்ன மாறியே ரெண்ட பெத்து என்ன பாடா படுத்துறீங்க.. பொண்ணுங்கள அடக்கி வள. அதுங்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுன்னு அடிச்சிக்கிட்டேன்.கேட்டியா.. உனக்கு உன் அக்காங்களா பாத்து பொறாம. அவங்க அளவுக்கு வசதி இல்லனாலும் எதுல உனக்கு குறை வெச்சேன்..

உன்ன மாதிரியே குடும்பத்த கெடுக்க சொல்லி கொடுத்து இப்ப உன் பொண்ணுங்கள பாத்தியா ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா சுத்துறாங்க.. வெண்ணிலாவ பாரு நல்ல புருஷன்.. அப்டி தாங்குறான். அவளும் கட்டுன கொஞ்ச நாளுலயே உண்டாகி இருக்கா. இதெல்லாம் எதனால. அந்த பொண்ணோட நல்ல மனுசுக்காக. இனிமேயாச்சும் ஆத்தாலும் மகளுகளும் ஒழுங்கா இருங்க"என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி சென்றார்.

கணவரிடம் எதிர்த்துப் பேச முடியாத காரணத்தால் மனசுக்குள் நிலாவை கரித்து கொட்டினார் செல்வி.அன்று இரவு ராஜ் வந்துவிடுவான்.நிலாவின் வீடு பெரியம்மா சித்தி இருவரின் வருகையால் சந்தக் கடையாக மாறிருந்தது.இதுவரை வெண்ணிலா பிரியாவை பற்றி பெரியம்மாவிடம் விசாரிக்கவில்லை.தான் ஏதோ ஒரு விதத்தில் கேட்கப்போய் கண்டிப்பாக பெரியம்மா பிரியா அழைக்கும்போது சொல்லுவார்.. அவர் யதார்த்தமாக வெண்ணிலா உன்ன ரொம்ப கேட்டா.எனச் சொல்ல போய் அதனை வேறு விதமாக அவள் எடுத்துக் கொண்டு எதற்கு இந்த வம்பு...

 செல்வி இரு மகள்களின் வாழ்க்கை பற்றி ஒன்றுக்கு நாலாக திரித்துக் கூறி கொண்டு இருக்கும் போது  செங்கமலமும் பிரியாவின் வாழ்க்கையைப் பற்றிக் கூறினார். பெங்களூரில் கணவருடன் வசிக்கும் பிரியாவிற்கு மார்பாக புற்று நோய் என மின்னாமல் முழங்காமல் ஒரு இடியை இறக்கினார் செங்கமலம்.

Comments

  1. Interesting ud sis nice nallavangaluku andavan niraya sodhanai kudupan ana kaivida mattan evlo unmai ah na words pppa. Selvi un ponnunga adjust panni vazhalana adhuku yaru enna panna mudiyum priya nila va vazhavidama pannanum nu ninacha ipa pathiya kettavangaluku niraya kudupan ana kaivittuduvan nuce ud sis

    ReplyDelete
  2. Karma is boomerang akka..ellarukum kedaichitu..nice epi akka 😍😍🧡🧡

    ReplyDelete
  3. Semaaaaa super ❤❤❤❤👌👌👌👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்