தாகம் எபிலாக்
எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்.. தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது இரு மகள்களும் அப்பாவுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.. ஆம் பூங்காவனத்திற்கு பிரசவ வலி கண்டு அவளின் குழந்தை இந்த உலகத்தை பார்க்க தயாராகி விட்டது.. உள்ளே துடித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மனைவியை பார்த்து கூட மின்னலுக்கு பயமில்லை. ஆனால் அங்கே ஒரு நிமிடம் கூட அமராமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தன்னுடைய தம்பியை பார்க்கும் போது தான் எரிச்சலாக வந்தது. "டேய் பைத்தியகாரா! எதுக்குடா இப்படி ஒரு நிமிஷம் கூட உட்காராம உலாத்திட்டு இருக்க.. கொஞ்ச நேரம் அமைதியா உட்காருகிறாயா.. அங்க பாரு அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கும் ஒன்னோட எத்தனை வயசு குறைவு? அதுங்கல்லாம் அமைதியா உட்காரல.. உன்ன ஒரு ஆளு புடிச்சி நீவிகிட்டே இருக்கணுமா.." செல்வியும் காயத்ரியும் வாய் பொத்தி சிரித்தார்கள். " உள்ள போய் இவ்ளோ நேரம் ஆகுது இன்னுமா பாப்பா பொறக்குது? அவளுக்கு வலிக்கும்.. உன்ன உள்ள போடான்னா போக மாட...