நாட்கள் அதன் போக்கில் செல்ல தொடங்கியது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் வீட்டில் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்தாள் பூங்காவனம்.. இன்று அவளை மறுத்துவரிடம் அழைத்துச் செல்ல வருவதாக கூறியிருந்தான் மின்னல். மதியம் தான் மருத்துவரை காண செல்ல வேண்டும். கரம் இட்லி பிசைந்து வாயிக்குள் செலுத்திக் கொண்டிருந்ததே தவிர சிந்தனை அங்கே இல்லை பூங்காவனத்திற்கு.
குழந்தை உண்டானதிலிருந்து ஒவ்வொரு நாளுமே அவள் பயத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள். சோலை பாண்டியனை விட்டு மின்னல் வந்துவிடக் கூடாதா என்பதுதான் அவளின் ஒரே ஏக்கம். இப்போதெல்லாம் சாமி கும்பிட கூட ஆரம்பித்து விட்டாள் பூங்காவனம் முன்பு போல..
அவளின் ஒரே வேண்டுதல் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கக் கூடாது. ஆணாக இருந்தாலுமே இந்த சமூகத்தில் அடித்து பிடித்து வாழ்வது கடினம். இந்த லட்சணத்தில் மின்னல் செய்கின்ற பாவங்கள் அனைத்தும் அவளின் பெண் குழந்தைக்கு தானே வந்து சேரும். தான் பெண்ணாகப் பிறந்து படும் கஷ்டங்கள் போதாதா. தன்னுடைய மகளுக்கும் அதே நிலைமை வர வேண்டுமா? மின்னலை பற்றி அவளுக்கு இப்பொழுது நன்றாகவே புரிந்தது. அவளையும் அவன் விடமாட்டான் குழந்தையையும் விட மாட்டான்.
தானம் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன் என்பவனை வேறு என்ன செய்வது? அவனிடம் கத்தி பேசி ஓய்ந்து எதுவுமே இயலாத நிலையில் இந்த இரண்டு வாரங்கள் மின்னலென கடந்து விட்டது.. இரண்டு இட்லிகளை கஷ்டப்பட்டு சாப்பிட்டவள் அதற்கு மேல் முடியாமல் எழுந்து விட்டாள்..
அவளைத் தொடர்ந்து வேலையாட்கள் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். மின்னலிடம் உள்ள நல்ல குணங்களில் பாராட்டத்தக்க ஒன்று என்றால் வீட்டில் வேலை செய்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களும் நம் போல டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடலாம் என்று அந்த வீட்டில் எழுதப்படாத சட்டம். அதுவும் முதலாளி சாப்பிடும் அதே உணவை தான் வேலையாட்களும் சாப்பிட வேண்டும்.
வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்ட பிறகு வேலையாட்கள் அமர்ந்து உணவு உண்பார்கள். பத்தும் பத்தாமல் மிச்சம் மீதியை அவர்கள் சாப்பிடுவதை பார்த்தால் அன்று முடிந்தார்கள். சமைக்கும்போது அனைவருக்கும் உண்டான சாப்பாட்டை சமைக்க வேண்டும்.
அந்த வகையில் கர்ணன் தான் மின்னல்..தன்னுடைய படுக்கை அறையில் அமர்ந்திருந்தவளை கமலா வந்து அழைத்தார்.. "கண்ணு"
"என்னக்கா"..
" உன்ன பாக்க ஒருத்தவங்க வந்திருக்காங்க போய் பாரு" தன்னைப் பார்க்க யார் வந்திருப்பது என்று புரியாமல் எழுந்து ஹாலுக்கு சென்றாள் பூங்காவனம். இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்த்த மகாலட்சுமி பூங்காவனத்தை காண மின்னலின் வீட்டிற்கு வந்திருந்தாள்.
யோசனையோடு அவளின் அருகே சென்று கரம் கூப்பினாள் பூங்காவனம்.
"வாங்க.. நீங்க வரிங்கன்னு அவரு சொல்லவே இல்லையே.. சரி கொஞ்ச நேரம் இருங்க நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்" என்றவளை சின்ன சிரிப்போடு அடக்கினாள் மகாலட்சுமி.
" அதெல்லாம் ஒன்னும் வேணாம் பூங்காவனம்.. நீங்க உட்காருங்க நான் உங்கள பாக்க தான் வந்தேன்" தான் வாங்கி வந்திருந்த பழங்களை பூங்காவனத்திடம் கொடுத்தாள் மகாலட்சுமி.
" எதுக்கு இதெல்லாம் இங்கேயே நிறைய இருக்கு சாப்பிட தான் ஆள் இல்லை"
" இருக்கட்டும் நீங்க கன்சீவா இருக்கீங்க வெறும் கையோட உங்கள பாக்க வர்றது நல்லா இருக்காது.. " மகாலட்சுமியின் முகத்தில் தன் கணக்கில் சோகம் வழிந்தது. அவளின் நிலை பரிதாபத்தை உண்டு பண்ணாலும் பூங்காவனத்தால் ஆறுதலை மீறி வேறு எதை கூற முடியும்?
அமைதியாக பூங்காவனம் அமர்ந்திருக்க கமலா தான் இருவருக்கும் சேர்த்து பழச்சாறு எடுத்து வந்தார். ஒரு பழச்சாறு அடங்கிய குவலையை எடுத்து மகாலட்சுமியின் கரத்தில் கொடுத்து உபசரித்தாள் பூங்காவனம்.
" எப்படி இருக்கீங்க" பூங்காவனம் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
"நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க"
"ம்ம்ம்"
" நான் நேரா விஷயத்துக்கு வரேன்.. என்னடா உங்க தனிப்பட்ட வாழ்க்கையில மூக்கை நுழைக்கிறேனு நீங்க நினைச்சுக்க கூடாது.. " பீடிகையோடு ஆரம்பித்தாள் மகாலட்சுமி. அவளை குழப்பத்தோடு பார்த்தாள் பூங்காவனம்.
" மின்னல் அண்ணாவ எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அப்பா அவர வாரிசா தேர்ந்தெடுக்குறேன்னு சொல்லும்போது கூட நானும் சரி என்னோட அக்காங்க ரெண்டு பேரும் சரி, ஒரு வார்த்தை ஏன் எதுக்குன்னு கேட்கல. எங்க மூணு பேருக்குமே அண்ணன் தம்பி யாரும் கிடையாது. சித்தப்பா பெரியப்பா பசங்களும் இல்லை.. அப்பா கிட்ட சொல்ல முடியாம கல்யாணத்துக்கு முன்னுக்கு எங்களுக்கும் தனிப்பட்ட பிரச்சனை நிறைய இருந்துச்சு. அப்பலாம் நாங்க நம்பி சொன்ன ஒரே ஆள் மின்னல் தான்.
இன்ன வரைக்கும் அந்த நம்பிக்கையை அவர் காப்பாத்திட்டு இருக்காரு. நீங்க நினைக்கலாம் எம்பி போஸ்ட்டுக்கு சாதாரணமா வந்து அவர் உக்காந்துட்டாரு. அப்படி இல்ல. அவர் பட்ட கஷ்டம் அவருக்கு மட்டும் தான் தெரியும். கூட இருந்த எங்களுக்கு ஓரளவுக்கு தெரியும்.
எங்க அப்பாவ பத்தி அரசல் புரசலா நாங்க வெளியே கேள்விப்பட்டு இருக்கோம்." அவளைக் கேள்விக்குறியோடு நோக்கினாள் பூங்காவனம்.
" கட்டப்பஞ்சாயத்து பண்றவரு.. வட்டிக்கு பணம் கொடுக்கிறவரு.. ஆனா உங்களுக்கு ஒன்னு தெரியுமா? எங்க அம்மா இறந்து இத்தனை வருஷம் ஆச்சு. இன்ன வரைக்கும் எங்க அப்பா இன்னொரு பொம்பளைய பார்த்தது கூட இல்லனா நீங்க நம்புவீங்களா.. " பூங்காவனத்திற்கு பூமியை இரண்டாகப் பிளந்து தன் உள்ளே செல்வதைப் போல இருந்தது.
மயக்கம் வராமல் இருப்பதற்காக உதட்டை உள்பக்கமாக கடித்துக் கொண்டாள். அவளால் மகாலட்சுமியின் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை. இருந்தும் பல்லை கடித்துக் கொண்டு கண்களை அகல திறந்து அவள் சொல்லும் வார்த்தைகளை கவனிக்கவே முயற்சிக்கிறாள்.
" என்ன அப்படி ஆச்சரியமா பாக்குறீங்க? பொண்டாட்டி இருந்தாலே பக்கத்துல இருக்குறவளே பாக்குற இந்த காலத்துல,இவ்ளோ சொத்து பத்து இருந்தோம் எங்க அம்மா போனதுக்கப்புறம் எங்க மூணு பேத்துக்காகவே வாழ்க்கையை தியாகம் பண்ணவரு எங்க அப்பா.. அவ்ளோ சீக்கிரம் அவரு யாரையும் நம்ப மாட்டாரு. அவர் வாழ்க்கையில் நம்பின ஒரே ஆளு மின்னல் மட்டும் தான்.
உங்களுக்கும் மின்னலுக்கும் ஏதோ பிரச்சனைன்னு எனக்கு தெரியும். என்ன ஷோக்கா இருக்கா எனக்கு எப்படி தெரியும்னு? உங்க மூஞ்ச பார்த்தாலே தெரியுது.. அன்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்து இருந்தப்ப கூட நான் உங்களை நோட் பண்ணேன்..
உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த கல்யாணம் எங்க அப்பா தலைமையில நடந்துச்சுனு மட்டும் எனக்கு தெரியும். எங்க அப்பா தப்பு பண்ண மாட்டாரு பூங்காவனம். அவருக்கு தப்பு பண்ணவும் தெரியாது. சூதுவாது தெரியாத மனுஷன் எங்கப்பா.. உங்க மேல நம்பிக்கை வச்சு தான் மின்னலுக்கு நீங்க சரியா இருப்பீங்கன்னு உங்கள கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு.
அந்த நம்பிக்கையை காப்பாத்துங்கன்னு நான் உங்ககிட்ட கேட்க வரல.. எந்த முடிவா இருந்தாலும் யோசிச்சு செய்ங்கன்னு சொல்ல வந்தேன். என்ன பொறுத்த வரைக்கும் நீங்க மின்னல் கூட சந்தோஷமா வாழனும். ஒரு தங்கையா அவருக்கு மட்டும் இல்ல உங்களுக்கும் சேர்த்து சொல்றேன். நல்ல புருஷன் கிடைக்கிறது ஒவ்வொரு பொண்ணுக்கும் கனவு. சந்தர்ப்ப சூழ்நிலை நான் இழந்துட்டு உட்கார்ந்து இருக்கேன்.
கைல கிடைச்ச வைரத்தை நீங்க இழந்துறாதீங்க பூங்காவனம். மின்னல் கொஞ்சம் கரடு முரடான ஆளுதான். ஆனா மின்னல் உங்கள பாக்குற பார்வையில வித்தியாசம் தெரியுது. இத்தனை வருஷம் நான் காதால கூட மின்னல பத்தி தப்பா கேள்விப்பட்டது கிடையாது. அதனாலதான் நம்ம தொகுதி பெண்கள் மத்தியில மின்னலுக்கு நல்ல பேர் இருக்கு.
சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன். இதுக்கு மேல உங்க விருப்பம். உங்க தனிப்பட்ட வாழ்க்கையில தலையிட்டதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இன்னும் ஒரு மாசத்துல நான் ஸ்பெயின் போக போறேன்.. நான் போறதுக்குள்ள நீங்களும் மின்னனும் சந்தோஷமா இருக்கறதை பார்த்துட்டா எனக்கு வேற எதுவும் தேவையில்லை.. போயிட்டு வரேன் பூங்காவனம்" மகாலட்சுமி சென்றுவிட நீண்ட நேரம் ஆகியும் அமர்ந்த இடத்திலேயே ஆணி வைத்து அடித்தார் போல் அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.
சோலை பாண்டியனை பற்றி மகாலட்சுமி கூறிய வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியாமல் அமர்ந்திருந்தாள்.. அவளுக்கு மகாலட்சுமி வேதனையாக இருந்தது. இந்த அளவிற்கு பெற்ற தகப்பனை நம்புகிறாள் என்றால் எந்த அளவிற்கு சோலை பாண்டியன் சாமர்த்தியமாக பெற்ற பிள்ளைகளிடம் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது பூங்காவனத்திற்கு புரிந்தது.
ஒவ்வொரு முறையும் என் அப்பா என் அப்பா என்று மார்தட்டிக் கொள்வதைப் போல மகாலட்சுமி பேச அவன் கருப்பன் இல்லையா எங்க அப்பன் காவாலி பையனு சொல்ல நான் துடித்தது பூங்காவனத்திற்கு.
எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாளோ அதன் பிறகு மெல்ல எழுந்து தன் அறைக்கு சென்றாள்.. சோலை பாண்டியனை பற்றிய பேச்சை ஒதுக்கி மின்னலை பற்றிய பேச்சை மட்டும் தன் சிந்தனையில் வலுக்கட்டாயமாக கொண்டு வந்து பிடிவாதமாக அதை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
மின்னல் அவனிடம் கூறுவதைப் போல அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் அவள் நுழையாமல் இருந்தால் அவளது வாழ்க்கை சொர்க்கமே. ஆனால் அப்படி அவளால் இருக்க முடியுமா? குழந்தையைப் பற்றி பேசும்போதும் பிரிவை பற்றி பேசும் போதும் அவன் முகத்தில் வந்து போகும் தவிப்பை அவள் நொடி பொழுதில் தனக்குள் குறித்து வைத்துக் கொள்கிறாள். அப்படி என்றால் அவனுக்கு தன்னை பிடித்திருக்கிறது.
ஒத்துக்கொள்ளவும் மனம் இருக்கிறது. ஆனால் அந்த மனதில் அவள் மட்டும் இல்லையே. சோலை பாண்டியன் என்கிற குள்ளநரி சிம்மாசனம் போட்டு மின்னல் வீரபாண்டியனின் இதயத்தில் அமர்ந்திருக்கிறதே.அந்த குள்ளநரியின் சிம்மாசனத்தை பிடுங்கி அதை எப்படி அடித்து துரத்துவது?
ஏன் தன்னுடைய வாழ்க்கையை தானே கெடுத்துக் கொள்வானேன்? மின்னலை பிரித்து தனியாக குழந்தையை பெற்று வளர்த்தால் அவளுக்கு என்ன சிலையா வைக்கப் போகிறார்கள்? அவளைப் போலவே அவளது குழந்தையும் கஷ்டப்பட்டு இந்த சமுதாயத்தில் கேவலப்படும்.. நானும் என் குழந்தையும் செய்த தவறு என்ன? கூடாது எம்பி மின்னல் வீரபாண்டியனின் குழந்தை அதன் தந்தையின் சகல செல்வாக்கையும் கொண்டு வளர வேண்டும். நல்ல கல்வியும் ஆரோக்கியமும் அந்த குழந்தைக்கு வேண்டும். கூடவே ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க பூங்காவனம் இருக்கிறாள்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் மின்னலை தன் கைகொள் கொண்டு வர வேண்டும். தன்மேல் அவனுக்கு இருக்கும் அந்த பாசத்தை, பெயர் அறியாத உணர்வை அவன் ஒத்துக் கொள்ள செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்வது? தீவிரமான யோசனையில் அமர்ந்திருந்தவளுக்கு கடவுளை அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் சோலை பாண்டியன் மூலமாக..
தொடரும்..
No comments:
Post a Comment