மின்னல் பாண்டியன் வீட்டிளில்லை. இந்த இரண்டு நாட்களும் பூங்காவனத்தின் இதயத்தை அசைத்து பார்த்தது என்றால் மிகையாகாது.
அங்கே அவனுமே ஒரு அவசரத்தில் அவளிடம் கடுமை காட்டி விட்டவனுக்கு மனமே ஒரு நிலையில் இல்லை. கட்டப் பஞ்சாயத்து பண்ண தான் சோலை பாண்டியனோடு அவன் வந்திருந்தான்.. சோலை பாண்டியனின் பங்காளி மகள் தாழ்ந்த ஜாதி பையனோட வீட்டை விட்டு ஓட பஞ்சாயத்து சோலை பாண்டியனிடம் வந்து நின்றது..
ஓடியவர்களை பிடித்து விட்டார்கள். அந்தப் பையனை சத்தமில்லாமல் முடித்துக் கட்டிவிட்டு, அவசர அவசரமாக அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. எல்லாம் சரியாக செல்ல கடைசி நேரத்தில் அந்தப் பையனின் ஜாதிக்காரர்கள் பிரச்சினையை கிளப்பினார்கள். தங்கள் மகனின் மரணத்திற்கு நியாயம் வேண்டுமென அவனது பெற்றோர் கூறினார்கள்.. அவன் சமூகத்தினர் பங்காலியின் வீட்டை தாக்கினார்கள்..
விஷயம் காவல் துறைக்கு செல்வதற்கு பதிலாக சோலை பாண்டியனிடம் வர கிளம்பி விட்டார். என்னமோ இம்முறை மின்னலையும் உடன் வைத்துக் கொள்வது நல்லதென்று பட அவனையும் அழைத்து வந்தார்.கார் ஓட்டிக் கொண்டிருந்த மின்னலின் முகமும் உடலும் வழகத்திற்கு மாறாக இறுகிருந்தது.. சோலை பாண்டியன் கேட்ட கேள்விக்கு பதிலளித்தாலும் ஓரிரு வார்த்தைகளே பேசினான்.
அவனுக்கு பிரச்சனை என்பது புரிந்தது. நைசாக நூல் விட்டு பார்த்தார் சோலை பாண்டியன். மின்னல் அந்த பேச்சை கத்தறித்தான். அதற்கு மேல் தோண்டி துருவ அவருக்குமே தைரியம் இல்லை. அமைதியாக உறங்கி விட்டார்.
ஊரில் அந்த பையனின் உறவுகளை வைத்து பேச்சு நடத்த அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை. பிரச்சனை பெரிதானது. விடிந்தால் பெண்ணின் திருமணம். மாப்பிள்ளை வீட்டார் முன் மானம் போய் விடும். வேறு வழியில்லை.. பையனின் தம்பி தங்கையை தூக்கி விட்டார்கள்..
அந்த பெண்ணோ பள்ளி செல்லும் பதின் வயது சிறுமி. பையன் கல்லூரி முதலாண்டு..சிறுமியை கண்டதும் சோலை பாண்டியனின் கைகள் துருத்துருதன.
"மூதி இந்த நேரம்னே தான் வந்து சேரும்ங்க.. விடிஞ்சா கல்யாணம். அங்க போறதா இல்லை இத பாக்குறதா ச்சை ஒரு மனுஷனுக்கு இப்படியா சோதன வரணும்?ஏன்டா மின்னலு இப்ப என்னத்த செய்றது?"..
" என்னய்யா என்ன கேக்குறீங்க உங்களுக்கு தெரியாதா?.."பவ்யமாக பதில் கூறினான் மின்னல்..
" அந்த ஜாதிக்காரனுங்களுக்கு நாம யாருன்னு காட்டணும்.. இன்னொரு தடவை நம்ம ஜாதிக்கார பொண்ணுங்க மேல கை வைக்க யோசிக்கணும்.. இந்த பொடியன அடி அடின்னு அடிச்சு கை கால முறிங்கடா" சோலை பாண்டியன் சொன்ன அடுத்த நொடி அதற்காகவே காத்திருந்தார் போல இரண்டு பேர் சென்று அந்த கல்லூரி செல்லும் அப்பாவி கை காலை முறித்தார்கள். பக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியின் கதற அங்கிருந்து அரக்கர்களின் மனதை உலுக்கவில்லை..
இளைஞன் படு காயத்தில் கிடக்க " அந்த குட்டியை தூக்கிட்டு போய் அந்த ரூம்ல போடுங்கடா.." மேலும் கட்டளைகள் பறந்தது சோலை பாண்டியனிடமிருந்து.
தங்கையை தூக்கி செல்வதை கண்டதும் கை கால்கள் முறிந்த நிலையிலும் அந்தப் பையன் துடியாய் துடித்தான்.
"அண்ணா.. அண்ணா.." கத்தி கதறினாள் அந்த சிறுமி.
"பாப்பா.. பாப்பா.. சார் சார் ப்ளீஸ் சார் விட்ருங்க சார்.. என் கை கால தான் முறிச்சிட்டிங்களே.. என் தங்கச்சி குழந்தை சார்.. விட்ருங்க சார்.. அண்ணா அண்ணா ப்ளீஸ்ண்ணா.. விட்ருங்கண்ணா.. சார் சார் விட்ர சொல்லுங்க சார்"..கை கால்கள் முறிந்த நிலையிலும் நெஞ்சால் நகர்ந்து சோலை பாண்டியனின் காலில் விழுந்து கதறினான் அந்த இளைஞன்..
" இதெல்லாம் உங்க அண்ணன் இந்த சாதிக்கார பொண்ண கூட்டிட்டு ஓடும் போது தெரிஞ்சிருக்கணும்.. என்ன ஏத்தம் டா உங்களுக்கு? அப்படியே விட்டா நீயும் அதைத்தானே செய்வ.. ஒரு தடவை உங்க கூட்டத்துக்கே நாங்க யாருன்னு நிரூபிச்சிட்டா அடுத்த தடவ எங்க வீட்டு பொண்ணுங்க மேல கை வைக்க தைரியம் வருமா" காலில் தலை வைத்து கெஞ்சிக் கொண்டிருந்த இளைஞனை எட்டி மிதித்தார் சோலை பாண்டியன்.
வாயில் ரத்தம் வலிய உருண்டு விழுந்தவன் அங்கே சிலை போல் நின்று கொண்டிருந்த மின்னல் வீரபாண்டியனின் கால் அருகே நகர்ந்து வேகமாக சென்றான்.
"அண்ணா அண்ணா ப்ளீஸ்ண்ணா.. விட்ற சொல்லுங்கண்ணா ப்ளீஸ்ண்ணா.. என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்க சொல்லுங்கண்ணா.. என் தங்கச்சி சின்ன குழந்தைண்ணா.. அவள விட்ற சொல்லுங்கண்ணா.. ப்ளீஸ்ண்ணா ப்ளீஸ்ண்ணா".. மின்னல் அசையாமல் நிற்க சோலை பாண்டியன் ஒரு நமட்டு சிரிப்போடு சிறுமியை தூக்கிச் சென்ற அறைக்குள் நுழைந்தார்.
"ஹேய்.. வேணாடா வேணா பாப்பா.. விட்ருடா என் தங்கச்சிய தொடாத.. விட்ருடா டேய்.. அண்ணா அண்ணா ப்ளீஸ்ண்ணா ப்ளீஸ்.. என்ன கொன்னு கூட போடுங்க என் தங்கச்சிய விட்ற சொல்லுங்கண்ணா".. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஏளனமாக சிரிக்க மின்னல் மட்டும் வந்த சிறுவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சோலை பாண்டியனை கண்டதும் சிறுமி பேய் நேரில் கண்டது போல கூக்குரலிட்டாள்..
"அண்ணா.. அண்ணா..".. தன் தமையனைத் தவிர அங்கிருந்த யாரையுமே அவள் உதவி கேட்க கூப்பிடவில்லை..
" வேணா அங்கிள் என்ன விட்டுருங்க ப்ளீஸ்.. என் பக்கத்துல வராதீங்க.. பயமா இருக்கு.. அண்ணா சீக்கிரம் வா.. பயமா இருக்கு.. அண்ணா" சிறுமியின் கதறல் மின்னலின் காலடியில் கெஞ்சிக் கொண்டிருந்த அவளின் அண்ணனை துடியாய் துடிக்க வைத்தது.
"டேய் விட்ருடா என் தங்கச்சிய.. விட்ருடா"
"ஆஆ"
"வைதேகி".. அந்தக் கட்டடமே இடிந்து விழும் அளவுக்கு கத்தி கதறினான் அந்த இளைஞன்.. சரியாக அந்த நேரம் மின்னலின் கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. எடுத்துப் படித்தவன் வேகமாக சோலை பாண்டியன் சென்று அறைக்குச் சென்றான்.
"ஐயா.. கொஞ்சம் கதவை தொறங்க.."
சிறுமி சோலை பாண்டியன் கைகளில் அகப்படாமல் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள். அவளை ஓட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன். சிறுமியின் மேலாடை சோலை பாண்டியனின் கை காரியத்தால் கிழிந்து தொங்கியது.
மின்னல் கதவை தட்டவும் "என்னடா மின்னலு".. எரிச்சலாக வெளிப்பட்டது அவரின் குரல்..
" ஒரு முக்கியமான விஷயம் நீங்க வெளிய வாங்க ஐயா.." மின்னலின் குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்த சோலை பாண்டியன் வேகமாக அறை கதவை திறந்தார்.
"ஐயா உங்க மூணாவது பொண்ணுக் கிட்டருந்து வாய்ஸ் மெசேஜ் வந்துருக்கு.."
"என்னவாம் டா.."
" உங்களுக்கு போன் பண்ணி இருப்பாங்க போல நீங்க எடுக்கல அதான் எனக்கு வாய்ஸ் மெசேஜ் போட்டு இருக்காங்க.. " மின்னல் அமைதியாக இருந்தான்.
"என்னடா என்னன்னு சொல்லிருக்கா.." தந்தை எடுக்கவில்லை என்றால் பின்னர் முயற்சிப்பார்கள் அவரின் புதல்விகள். மின்னல் வரை அழைப்பு செல்கிறது என்றால் அது முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே.
" ஐயா உங்க மருமகன் கார் ஆக்ஸிடென்ட்ல"..
"டேய்" மின்னலின் சட்டையை பிடித்து விட்டார் சோலை பாண்டியன். மருமகனுக்கு ஏதும் ஆயிருக்கக் கூடாது என்ற பதபதைப்பு அவரின் பார்வையில் வெளிப்பட்டது.
அவரது கண்களை நேராக சந்தித்த மின்னல்" மனச தேத்திக்கோங்கய்யா.." சோலை பாண்டியனின் பிடி தளர்ந்தது. இரண்டடி பின்னே நகர்ந்தவர் சுவர் மோதி அப்படியே கீழே சரிந்தார்..
"மின்னலு என் பொண்ணு".. உடைந்த குரலில் பயந்து கொண்டே சோலை பாண்டியன் கேட்க
"அவங்க ஹாஸ்பிடல்ல இருகாங்க.. ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிக்க".. சோலை பாண்டியன் இடி விழுந்தார் போல் அமர்ந்திருக்க மின்னல் அடுத்த செய்ய வேண்டிய காரியத்தை தன் கையில் எடுத்தான். முதல் வேலையாக உள்ளே பயந்து கொண்டிருந்த சிறுமியையும் அதன் சகோதரனையும் சுரேஷிடம் சொல்லி பத்திரமாக அவர்களின் உறவுகளிடம் ஒப்படைத்தான்.. பிரச்சனையை இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை வேறு.
சிங்கப்பூருக்கு செல்ல விமான டிக்கெட் ஆன்லைனில் எடுத்தான். சோலை பாண்டியனுக்கு துணையாக மின்னலால் இப்பொழுது செல்ல முடியாது. சுரேஷை உடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான். அனைத்தும் துரித கதியில் நடந்தது. சிங்கப்பூரில் இருக்கும் தனது ஆட்களுக்கு அழைத்து சோலை பாண்டியனின் மகளுக்கு உதவியாக இருக்கும் படி பணித்தான்..
சோலை பாண்டியன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். வேகமாக சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். அவரை விமான நிலையம் வரைக்கும் சென்று கப்பலேற்றி விட்டான்.. இரண்டு நாட்களில் அலைச்சலின் காரணமாக மிகவும் அசந்து விட்டான் மின்னல்.
நள்ளிரவில் வீட்டிற்கு வந்தான். கதவை திறந்து நேராக தன் அறைக்கு வந்தவன் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கண்டான்.. இரண்டு நாட்களில் அவளை காணாமல், சோறு தண்ணீர் இறங்கவில்லை என்றால் அது பொய். ஆனால் ஏதோ ஒன்று சாப்பிட பிடிக்காமல், உறங்கவும் தோணாமல் எதையோ ஒன்றை இழந்தது போலவே சுற்றிக் கொண்டிருந்தான்.
பூங்காவனத்தை கண்டதும் ஓடிச்சென்று அவளை கட்டிக்கொண்டது அவனின் நிழல். அதனை கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல் வீரபாண்டியன். அவள் மேல் அவனுக்கு பாசம் இருக்கிறதா காதல் இருக்கிறதா என்று கேட்டால் சத்தியமாக அவனுக்கு பதில் தெரியாது.
திருமணத்தை தன்னுடைய வாழ்வில் நினைத்திறாதவன்.. சந்தர்ப்ப வாசத்தால் பூங்காவனம் அவன் வாழ்வில் நுழைய, இறைவன் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை என்று அதனை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.. இன்னொரு முக்கியமான விஷயம் பூங்காவனத்தின் குடும்ப சூழ்நிலை.முன்னால் செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கு அவனுக்கு எதிரிகள் அதிகம். எவன் எப்பொழுது பாய்வான் என்றே தெரியாததால் அனைத்து விஷயத்திலும் சற்று முன் ஜாக்கிரதையாக இருப்பான் மின்னல்.
பெண்ணை கட்டிக் கொடுத்த பின்னால் முதுகில் குத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியே ஏதாவது ஒன்று தன்தலையில் விடிவதற்கு, எந்தப் பின்புலமும் இல்லாத பூங்காவனம் எவ்வளவோ மேல். தன்னை மீறி இவளால் என்ன செய்து விட முடியும் என்கின்ற இறுமாப்பு
ஒரு சில வினாடிகள் அவளைப் பார்த்தவன் அலமாரியை திறந்து மாற்று உடை எடுத்தான். அரவம் கேட்டு கண்விழித்தாள் பூங்காவனம்.
"யாரு" பெட் லைட்டை போட அங்கே கணவனை கண்டவள் வேகமாக எழுந்து நின்றாள்.
"நீங்களா.. இந்த நேரத்துக்கு வந்திருக்கீங்க" தூக்க கலக்கத்தோடு வினவினாள்.
" போன வேலை முடிஞ்சிருச்சு"
"ஓ.." என்றவள் பார்வை அவனது ரத்தக்கரை படிந்த ஆடையின் மேல் விழுந்தது. அந்த இளைஞன் மின்னலின் பாதத்தில் முகத்தை வைத்து கெஞ்சி கதறியதால் அவனின் ரத்த துளிகள் மின்னலின் வேஷ்டியின் கீழ்பாக்கம் முழுவதும் ஆங்காங்கே பட்டிருந்தது.
"ஐயோ ரத்தம்".. வேகமாக அவனருகே ஓடி வந்தாள்.
தன்னை குனிந்து பார்த்தவன் " அதெல்லாம் ஒன்னும் இல்ல.. "
" என்னங்க ஒரே ரத்தமா இருக்கு ஏதாவது அடிபட்டுருச்சா.. " அவன் முகத்தை தொட்டுப் பார்த்தாள் உடலெங்கும் கை வைத்து பார்த்தாள்.
அவள் கண்களில் மிரட்சியை கண்டதும் " பஞ்சாயத்துக்கு போன இடத்துல சின்ன சம்பவமாகிப் போச்சு." சுருக்கமாக அங்கே நடந்ததை கூறி முடித்தான் மின்னல்.
அவன் சொல்லியதை கேட்டு பேய் அறைந்ததைப் போல நின்று கொண்டிருந்தாள் பூங்காவனம்.. அவள் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது.
" ஐயாவோட மருமகன் செத்ததுக்கு நீ எதுக்கு டி ஃபீல் பண்ற.." துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டே கேட்டான் மின்னல் வீரபாண்டியன்.
" உங்க ஐயாவும் நீயும் சாக மாட்றீங்களே அதுக்கு தான்.." வேகமாக திரும்பியவன் அவளை முறைத்து பார்த்தான்.
" அந்த மாரியப்பனோட குடும்பமே செத்துப் போச்சு. இங்க என்னன்னா சின்ன புள்ள ன்னு கூட பாக்காம ச்சை.. ஏன்டா நீங்க எல்லாம் ஒரு அம்மாவுக்கு தான் பொறந்தீங்களா.. பணம்னா உங்க அம்மாவை கூட்டி கொடுத்துருவியோ.. எப்ப என்ன அந்த கிழவனுக்கு கூட்டி கொடுக்க போற.. சொல்லிட்டனா இந்த வயித்துல வளர்ர உன் பிள்ளையை கலைச்சிட்டு அவனோட பிள்ளையை சுமக்க தயாராயிடுவேன்.." அவள் பேசியதை கேட்டு அவளை அறைய கை ஓங்கியவன் இறுதியாக சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.
No comments:
Post a Comment