தாகம் 10
பூங்கா திரும்பவும் சோலை பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டாள்.. இங்கிருந்து செல்லும்போதும் அவளின் அனுமதி கேட்கவில்லை. மீண்டும் சோலை பாண்டியன் வீட்டிற்கு அவளைக் கொண்டு வந்து விடும்போதும் அவளின் கதறலை கேட்க அங்கே நாதியில்லை.. தன்னை காணாமல் தாயும் தங்கைகளும் தவிர்த்துக் கொண்டிருப்பார்களே என்கின்ற எண்ணத்தை தவிர சோலை பாண்டியனை பற்றி சுத்தமாக மறந்து போயிருந்தாள் பூங்காவனம்..
மின்னல் அவளை காரில் ஏற்றி அழைத்து செல்லும்போது கூட தன்னுடைய வீட்டில் இறக்கி விடப் போகிறான் என்பது மட்டும்தான் அவள் சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது. அம்மா கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது? தங்கைகள் முகத்தை எப்படி ஏறிட்டு பார்ப்பது என்பது மட்டும்தான் அவளின் யோசனையாக இருந்தது.
வண்டி அவள் வீட்டு பக்கம் செல்லாமல் வேறு வழியில் செல்லவும் சந்தேகத்தோடு மின்னலை ஏறிட்டாள்..
"நா.. நாம இப்ப எங்க போறோம்" வார்த்தைகள் அந்த கரடு முரடான முகத்தை பார்த்ததும் வெளிவராமல் சண்டித்தனம் செய்தன.
"ம்ம்ம்.. பார்ட்டி ஆளுங்க நாலு பேர் வந்திருக்கானுங்க.. கைப்படாத ரோசா ஒன்னு வேணும்னு கேட்டானுங்க. சட்டுன்னு நியாபகத்துக்கு நீ தான் வந்த. அதான் உன்ன அங்க இறக்கி விட போயிட்டு இருக்கேன்" சத்தியமாக இம்மாதிரியான பதிலை பூங்காவனம் எதிர்பார்க்கவில்லை. சப்த நாடியும் அவளுக்கு சடுதியில் ஒடுங்கி விட்டது.. நாக்கு மேல் எண்ணத்தில் ஒட்டிக்கொள்ள கஷ்டப்பட்டு எச்சிலில் நாவை நனைத்து
"என்ன.. எங்க.. நீ.. சொல்றது உண்மையா.. இல்ல தானே".. தடுமாற்றத்தோடு அவன் முன் ஆள்காட்டி விரலை நீட்டி கேள்வி கேட்டாள் பூங்காவனம். அவளையும் நடுங்கும் அவளது விரலையும் கண்டவன் கண்டன பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசினான்.
அவன் பார்வையிலேயே வயிற்றுக்குள் குளிர் பரவ நான் கேட்ட கேள்வியை நன்றாக யோசித்துப் பார்த்தாள்.. பயத்தில் அவனை ஒருமையில் அழைத்தது புத்தியில் உரைத்தது..
"ஸாரி நான் ஏதோ பதட்டத்துல தெரியாம.. சார் உண்மைய சொல்லுங்க நீங்க சும்மா தானே சொல்றீங்க.. நீங்க விளையாடுறீங்க தானே" அவளுக்கு கண்களே கலங்கிவிட்டது.
" நீ இப்ப உம் சொல்லு விளையாடலாம்.."அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பயம் ஒரு பக்கம் உயிர் போய் உயிர் வந்தது.
"சார்".. அவ்வளவுதான் உடைந்து அழுதே விட்டாள் பூங்காவனம்.. திடீரென்று அவள் அழுகவும் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான் மின்னல்.. முதுகு குலுங்க ஆளும் அவளை அமைதியாக பார்த்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.
"ப்ளீஸ் சார் என்ன விட்ருங்க.. என்னோட அம்மாவும் தங்கச்சிங்களும் என்ன காணாம ரொம்ப பயந்து போய்ருப்பாங்க. இது குடும்ப கஷ்டம் வேற வழியே இல்லாம தான் சோலை பாண்டியன சகிச்சுக்கலாம்னு இந்த சாக்கடைக்குள்ள விழுந்துட்டேன். கடவுள் சித்தமா இல்லன்னா என்னோட நல்ல நேரமா தெரியல அந்த ஒரு நாள் அவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன். எனக்கு தெரியும் அவன் கண்டிப்பா என்ன விட மாட்டான். ஆனா இந்த ரெண்டு மூணு நாள் தள்ளி போட்டதே எனக்கு பெரிய சந்தோஷம்.
இப்ப நீங்க இன்னும் நாலு பேருக்கு என்ன கூட்டி கொடுக்க போறதா சொல்றீங்க. மக்களை காப்பாற்ற பதவியில இருக்குற நீங்களே இப்படி எங்க அடிமடில கை வச்சா நாங்க எங்க போறது? இதுக்காக தான் உங்களை நம்பி நாங்க ஓட்டு போட்டோம்மா? ஓட்டு வாங்க வரும் போது மட்டும் வாய் கிழிய பெண்கள் நம் நாட்டின் கண்கள்னு பேசுறீங்க. ஆனா உங்கள மாதிரி ஆளுங்களை சோலை பாண்டியன் மாதிரி கிழட்டு கழுகுகளுக்கு இப்படி வேலை செய்றது தப்பா தெரியலையா உங்களுக்கு.. நீங்களும் ஒரு அம்மாவுக்கு பொறந்தவர்தானே.. ஒரு பொண்ணோட கஷ்டம் உங்களுக்கு தெரியலையே..
தயவு செஞ்சு என்னை இப்படியே விட்டுருங்க. நான் செத்துப் போயிட்டேன்னு சோலை பாண்டியன் கிட்ட சொன்னா கூட பரவாயில்ல. ராத்திரியோடு ராத்திரியா குடும்பத்தை கூட்டிட்டு இந்த ஊரை விட்டு ஓடிடுறேன். ப்ளீஸ் சார் என்ன விட்டுருங்க " அவள் அழுகையை பார்த்தால் பேய்க்கு கூட மனமிரங்கும். ஆனால் அங்கே அமர்ந்திருப்பவன் பேயை விட மோசமானவன் என்பதை யார் அந்த பேதைக்கு புரிய வைப்பது?
அமைதியாக காரை கிளப்பினான் மின்னல். லாக் செய்யப்பட்ட காரை திறக்க கூட வழி இல்லாமல் பயத்தின் உச்சியில் விரைந்து போய் அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.. ஆனால் சாலையில் அவளது ஒரு கண்ணை பதித்திருந்தாள். வண்டி செல்ல செல்ல சோலை பாண்டியன் வீட்டிற்கு என புரிய தொடங்கியது.
நெஞ்சே கனத்துப் போனது.. மீண்டும் அந்த கயவனிடமா? அதை கயவனின் கை கூலியிடம் சொன்னால் வண்டியை திருப்பி விடவா போகிறான்? சோலை பாண்டியன் முகத்தில் காரி உமிழ்ந்ததை நினைத்து பயந்து கொண்டே சிலையாக காரில் அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.
அவள் நினைத்ததை போலவே வண்டி சோலைப் பாண்டியன் வீட்டின் முன் நின்றது.. டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி வந்து அவள் பக்க கதவின் வெளியே நின்றான் மின்னல்.. கதவைத் தட்டவோ அவளை அழைக்கவோ இல்லை அவன். யாரும் அந்த நேரம் பார்த்து சரியாக அவனுக்கு அழைக்க, போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் தான் காரில் அமர்ந்து நேரத்தை கடத்த முடியும்?
மனதை தயார் நிலைக்கு கொண்டு வந்த பூங்காவனம் கதவை திறந்து கீழே இறங்கினாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன் பேசிக் கொண்டே வீட்டிற்குள் சென்றான். வேறு வழி இல்லாமல் அவனை பின் தொடர்ந்தாள் பூங்காவனம்..
சோலை பாண்டியன் நடு நாயகமாக சோபாவில் அமர்ந்து பழைய பாடல்களில் தன்னை தொலைத்து கொண்டிருந்தார்.
"பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா"
அவள் வருகை உணர்ந்துதான் இந்த பாடலை போட்டு இருக்கிறாரோ என்கின்ற சந்தேகம் பூங்காவனத்திற்கு தோன்றாமல் இல்லை.. சோலை பாண்டியனின் முன் சென்றதும் மின்னல் அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
"வா மின்னலு" அவனை வரவேற்றாலும் சோலை பாண்டியனின் கண்கள் பூங்காவனத்தில் மேனியை சுற்றி வட்டமிட்டது.. அந்த கிழட்டு கழுகின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தரையைப் பார்த்த வண்ணம் சங்கோஜமாக நின்று கொண்டிருந்தாள் பூங்காவனம்..
" பெத்த தாயை பார்த்து காரி துப்ப வக்கு இல்லாதவளாம் என்ன பாத்து துப்பிட்டு போனா.. பெத்தவன் யாருன்னே தெரியாது. அவன் இடத்தில் இருந்து சோறு போட்டு வளர்த்து விட்டதுக்கு வளத்த கெடா மார்ல பாயுது.."குத்தல் வார்த்தைகள் என்ன அவளுக்கு புதிதா? உதட்டை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.
"சொல்லிட்டியா" மின்னலை பார்த்து வினவினார் சோலை பாண்டியன்.
" இல்லைய்யா நீங்களே சொல்லுங்க.." மின்னலை ஒரு மிதப்பான பார்வை பார்த்தவர் தொண்டையை செறுமி கொண்டு
"நாதியத்தவளுக்கு அதிர்ஷ்டம் அடிச்ச கதையா உனக்கும் அதிஷ்டம் தேடி வந்துருக்கு..உங்காத்தா மாறி ஒருத்தன் மாத்தி ஒருத்தனு பொழைப்பு நடத்தாம ஒருத்தன் கூடவே உருப்படியா இருந்து பொழைக்க பாரு." சோலை பாண்டியன் வாய்க்கு வந்தபடி சொல்லிக் கொண்டே போக அவர் கூறுவதின் உட்பொருள் தெரியாமல் சிலையாக நின்றாள் பூங்காவனம்.
"நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு இன்னும் புரிஞ்சிருக்காது..உனக்கு கல்யாணம்.." அந்த வார்த்தையை கேட்டதும் அதிர்ந்து அவரை ஏறிட்டு பார்த்தாள் பூங்காவனம்.
ஒரு சில நொடி அமைதியாக கழிய வேண்டுமென்றே அவளை தவிப்பில் ஆழ்த்திய சோலை பாண்டியன் " உனக்கும் மின்னலுக்கும்.. "என்றார்.. மீண்டும் உடல் குலுங்க அதிர்ந்தவள் மின்னலை திரும்பிப் பார்க்க அவன் யாருக்கு வந்த விருந்தோ என வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்.
" மின்னல் ஒன்னும் சாதாரண ஆள் இல்லை. உன் தகுதிக்கும் அவன் தகுதிக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. ஏதோ தெரிஞ்ச பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கட்டும்னு இந்த முடிவை எடுத்து இருக்கேன். " அவர் முடிவைப் பற்றி கூறினாரே அவளின் முடிவைப் பற்றி கேட்கவில்லை..
ஆக அவளுக்கு இருந்த ஒரே நிம்மதி சோலை பாண்டியனுக்கு ஆசை நாயகியாக இருக்க தேவையில்லை. ஆனால் இதற்கு மேல் தான் அவளின் வாழ்வே மாறப் போவதை அறியவில்லை அவள்..
தொடரும்
Comments
Post a Comment