பூங்காவை தரத்தரவென்று தேவகியின் வீட்டிற்கு இழுத்து வந்தான் மின்னல்.. அவனது நல்ல நேரம் வீட்டில் யாரும் இல்லை.
"என்னடி நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? நானும் பாக்குறேன் ஐயாவையே மிரட்டுற அளவுக்கு உனக்கு குளிர் விட்டு போச்சா? எங்கிருந்து வந்துச்சு இந்த தைரியம்?ஹான் சொல்லு.. சொல்லுடி" ஓங்கி குத்தினான் சுவரில். அந்த அடி அவளுக்கு விழ வேண்டியது. டொம்மென கேட்ட சத்தமே அவனது குத்து எவ்வளவு உறுதியானது என்பதை அவளுக்கு பறைசாற்றியது.
" நீ சரியில்லடி.. நானும் உன்ன பாத்துட்டு தான் இருக்கேன். ரொம்ப என் மேல உரிமை எடுத்துக்குற. ஓவரா என் விஷயத்துல மூக்கை நுழைக்கிற.. இதெல்லாம் எதனால வந்துச்சு? யார் கொடுத்த உரிமை இது? இந்த தாலியா?ஹாங்" அகங்காரமாய் கூச்சலிட்டான் மின்னல்..
" இப்ப நீங்க எந்த உரிமையில இந்த வீட்டுக்கு வந்து கத்துறீங்களோ அந்த உரிமையில தான் உங்க விஷயத்துல நான் மூக்க நுழைக்கிறேன்" நேர்ப்பார்வை பார்த்து அமைதியாக பதில் கூறினாள் பூங்காவனம்.
அவனை எதிர்த்துப் பேசியது பிடிக்காமலோ அல்லது உண்மை சுட்டதினாலோ மீண்டும் சுவருக்கு கொடுத்து விழுந்தது.. மூன்றாவது முறையாக அவன் ஓங்கி குத்தும் போது சுவரின் மூலையில் மாட்ட பட்டிருந்த புகைப்பட சட்டம் கீழே விழுந்து நொறுங்கியது.
" யார் மேல இருக்கிற கோபத்தை செவுரு மேல கட்டிக்கிட்டு இருக்கீங்க.. என் மேலயா"
" பேசாத" மீண்டும் சுவருக்கு ஒரு குத்து.
" என் மேல தானே"
" பேசாத"மீண்டும் ஒரு குத்து.
" நீங்க நடந்துக்கறத பார்த்தாலே தெரியுதே என் மேல உங்களுக்கு கோபம் அதை என்கிட்ட காட்ட முடியல"
" பேசாதன்னு சொல்றேன்ல".. பக்கத்தில் மாட்டுப்பட்டிருந்த நிலை கண்ணாடியை ஓங்கி குத்தினான் மின்னல். கண்ணாடி உடைந்து சில்லு சில்லாய் நொறுங்க அவனது கைகளிலும் கண்ணாடி கிழித்து உதிரம் வழிந்தது. விக்கித்து நின்றாள் பூங்காவனம்.
"பேசாத".. உதிரம் பொழிந்த கையோடு அவள் முன்பு கரத்தை நீட்டி எச்சரித்தான் மின்னல்.. அடிப்பட்ட பார்வையோடு பூங்காவனம் அவனை எதிர் நோக்க மறுப்பார்வை பார்க்க இயலாதவன் திரும்பி நின்று கொண்டான் இடுப்பில் கை வைத்த படி.
வலது கரத்தில் உதிரம் வலிய இடத்துக்கரத்தால் தலை முடியை கோதி ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தான்.. சொட்டு சொட்டாய் அவனது உதிரம் பூங்காவனத்தின் வீட்டிற்குள் சொட்டியது.
ஒவ்வொரு சொட்டு உதிரும் கீழே சிந்தும் போதும் அவளது இதயத்திலும் அதே வலியை உணர்ந்தாள் பூங்காவனம்.. வேகமாக ஓடி சென்று துணியை தண்ணீரில் நனைத்து எடுத்து வந்தாள். அவன் இன்னுமும் தன் அகங்காரத்தை கட்டுக்குள் கொண்டு வர படாத பாடுபட்டுக் கொண்டிருக்க, மெல்ல வலது கையை ஈரத் துணியில் துடைத்தாள்.
"ஸ்ஸ்ஸ்" கையை உதறினான் மின்னல். இரண்டு சொட்டு உதிரம் பூங்காவின் மேல் தெளித்தது.
" சொன்னா கேளுங்க கையில ரத்தம் ஊத்துது.. இப்படியே நின்னா என்ன ஆகுறது" கலங்கிய குரலில் கூறினாள்.
" செத்து கூட போறேன் அத பத்தி உனக்கு என்னடி" தன் கரத்தை அவள் தீண்ட அனுமதிக்கவில்லை மின்னல். பூங்காவனத்திற்கு அவனின் கடும் வார்த்தைகள் மரண வலியை கொடுத்தது. அப்படி அவள் என்ன செய்து விட்டாள்?
எதிர்பாராமல் நடந்த திருமணம் தான். இதுதான் சாக்கென்று மந்திரியின் மனைவியாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு தினம் ஒரு காரில் பவனி வந்து கொண்டிருக்கிறாளா? அல்லது அரைகுறை ஆடை போட்டுக்கொண்டு பப் கிளப்பிங் போய்க் கொண்டிருக்கிறாளா?
அவள் அணிந்திருக்கும் சேலை கூட மின்னல் வீட்டிற்கு ஜவுளி கடைக்காரரை அனுப்பி அவளை எடுத்துக் கொள்ளச் சொன்னது. அவளாக திருமணமானதிலிருந்து இன்று வரை வாய் திறந்து ஒரு பொருள் வேண்டுமென்று அவனிடம் கேட்டது கிடையாது. சொல்லப்போனால் உனக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு நீ தாராளமாக விலகிப் போகலாம். எந்த விதத்திலும் உனக்கு நான் இடைஞ்சலாக இருக்க மாட்டேன் என்று கூறியவளே அவள்தான்.
இப்படி அனைத்து விதத்திலும் அவனுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு மின்னலின் இந்த பழி சொல்லை தாங்க முடியவில்லை. அளவுக்கு மீறி விட்டுக் கொடுத்து இப்பொழுது அவளிடம் விட்டுக் கொடுக்க எதுவுமே இல்லாததை போல உணர்ந்தாள்.எதனால் இந்த கோபம் சோலை பாண்டியன் வீட்டிற்குள் அத்துமீறி அவள் நுழைந்ததற்காகவா? அல்லது மகாலட்சுமிக்கு ஆறுதல் கூறும் விதமாக சோலை பாண்டியனுக்கு குட்டு வைத்ததற்காகவா?
அவளிடத்தில் மின்னல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்? சரி தேவகி இடத்தில் மின்னலின் தாய் இருந்திருந்தால் அவனுக்கு பூங்காவனத்தின் வலி தெரிந்திருக்குமா? நெஞ்சறிய பொய் உரைக்காத பூங்காவனம் உண்மையை ஒத்துக் கொண்டாள் வெட்கமின்றி. ஆம் அவள் மனம் எந்த விதத்திலேயே மின்னலின் மீது படர ஆரம்பித்து விட்டது.
சோலை பாண்டியனின் விஷயத்தை தவிர ஒரு நல்ல கணவனாகவே அவளிடம் நடந்து கொண்டிருக்கிறான் மின்னல். அவன் கூறுவது போல தனிப்பட்ட விஷயங்களில் அவள் மூக்கை நுழைக்காமல் இருந்தால் அவர்களது இல்லறம் நல்லறமாக சிறக்கும்.
அதற்காக கண்முன்னே நடக்கும் அநீதியை தட்டி கேட்க வக்கில்லாமல் கண் காது வாயை மூடிக்கொண்டு மூன்று குரங்குகளை போல தன்னால் வாழ முடியுமா என்று கேட்டால் சந்தேகம் தான்? வார்த்தைக்கு வார்த்தை தன் பேச்சுக்கு மறு பெயர்ச்சி பேசும் மனைவி வாயடைத்து தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான் மின்னல்.
பூங்காவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்து கொண்டிருந்தது. நல்ல அழகி தான் அவள். இன்னும் சாப்பிட்டு நன்றாக சதை போட்டால் உலக அழகி போட்டிக்கே செல்லலாம்.. பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் கண்களை கொண்டவள், கட்டியவனை கட்டி இழுக்கும் வழியற்று விழித்துக் கொண்டு நின்றாள்.
"நான் ஒன்னு சொல்லட்டா.. நீ கேட்கிற எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் கிடையாது. யாருக்கும் எவளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் எனக்கு இல்லை.." அப்பொழுதும் அவளின் பார்வையில் எந்தவித மாற்றமும் கிடையாது.
" நான் சாதாரணமானவன் கிடையாது. பொண்டாட்டிய கொஞ்சிக்கிட்டு உனக்கு டைம் ஒதுக்கி கிட்டு, கண்ணே மணியே உன் முந்தானிய புடிச்சுட்டு சுத்த எனக்கு நேரம் இல்லடி. வீடுன்னா ஒரு மனுஷனுக்கு நிம்மதி இருக்கணும். வீடாடியது? எப்ப வீட்டுக்குள்ள பூந்தாலும் அடுத்தவன பத்தி பேசியே சாவடிக்கிற..
ஒன்னு அடுத்தவன பத்தி என்கிட்ட பேசற.. இல்லன்னா ஐயாவ பத்தி பேசுற.. முன்ன உன் வாழ்க்கையில என்ன வேணாலும் நடந்திருக்கலாம்.அது முடிஞ்சு போயிருச்சு. இன்னமும் அவரை நீ சந்தேகப்படறியா? வாரிசுன்னு என்னை தேர்ந்தெடுத்த அப்புறம் என் பொண்டாட்டி அவருக்கு என்ன வேணும்?
எப்ப பாரு என் விஷயத்துல தலையை விட்டு என் நிம்மதியும் சாவடிச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கோ. என்னால முடியலடி. என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியாதபோ உன்னுடைய இம்சைய என்னால தாங்க முடியல..
நீ ஆரம்பத்துல சொன்னது தான் சரி. நான் தான் தேவை இல்லாம.. " வார்த்தையை பாதியில் நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.
" பேசாம நீ உங்க அம்மா வீட்ல இரு. வயித்துல பிள்ளைய வச்சிருக்க. ஒரு நேரம் போல ஒரு நேரம் இல்லாம கையை நீட்டிட்டு ஏதாவது ஒன்னு கிடைக்க ஒன்னு ஆயிட்டா ரொம்ப கஷ்டமா போயிரும். என்ன இருந்தாலும் உள்ள இருக்கிறது என்னோட குழந்தை.. நீ என்கிட்ட இனிமே நடிக்க வேணாம்.. இத்தனை நாள் என்கிட்ட நடிச்சிட்டு தான இருந்த?
எப்படா எதுல டா இவன சிக்க வைக்கலாம்னு பார்த்துக்கிட்டே இருந்த. அந்த கஷ்டம் உனக்கு எதுக்கு? நீ இத்தனை நாள் எதிர்பார்த்த விடுதலையை இப்போ உனக்கு நான் கொடுக்கிறேன்.. இன்னும் கொஞ்சம் மாசம்தான். என் பிள்ளைய பெத்து கையில கொடுத்துட்டு நீ உன் வழியை பார்த்து போய்கிட்டே இரு. உன்னோட லைஃப் டைம் செட்டில்மென்ட் உன் வீட்டு வாசல்ல இருக்கும்.
உனக்கும் உன் குடும்பத்துக்கும் என்னால என்னை சார்ந்தவங்கனால எந்த ஆபத்தும் வராது. என்னை விட்டுப் போய் தொல.. போயிருடி.. " உதிரம் பொழிந்த கையினால் முகத்தை அழுத்தமாய் துடைத்தான் மின்னல். இவ்வளவு நேரம் அவன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவளுக்கு மயக்கமே வந்துவிட்டது.
கண்கள் இருள கால்கள் துவள அப்படியே சரிந்து விழுந்தாள் பூங்காவனம்.. "ஹேய்" வேகமாய் அவளை தாங்கி பிடித்தான் மின்னல்.
"அம்மாடி.. ஹேய் அம்மாடி. கண்ண தொறடி" பதற்றத்தோடு அவளது கன்னத்தை தட்டினான் மின்னல் வீரபாண்டியன். பூங்காவனம் கண்ணை திறக்காமல் இருக்க வேகமாக அவளை தரையில் கிடத்திவிட்டு உள்ளே ஓடிச் சென்று ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக தன் கண்களை திறந்தாள் பூங்காவனம்.. பரிதவிப்போடு தன்னை பார்த்துக் கொண்டிருந்த கணவன் தான் அவள் கண்களில் விழுந்தான்.. மெல்ல எழுந்து அமர்ந்தாள். அவள் முகத்திலும் அவன் தொட்ட இடத்தில் எல்லாம் உதிர கரை.
மின்னல் பூங்காவனம் கண் விழித்ததும் எழுந்து நின்று கொண்டான். அவன் முதுகை வெறித்தவள்
" நான் நடிச்சேன் சரி.. அப்போ நீங்க நடிக்கலையா" படக்கென்று திரும்பி அவளை கடினமாக முறைத்தான் மின்னல்..
" இப்ப நீங்க சொன்னத தான நான் அன்னைக்கே சொன்னேன். இப்போ வயித்துல பிள்ளை வேற. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. ஏற்கனவே எங்க தலையெழுத்து பேரு கட்டு நாறி போய் கிடக்கோம். இப்பதான் என் குடும்பம் கொஞ்சம் மானம் மரியாதையோட கஞ்சி குடிக்குது. திரும்ப என்னால அந்த கௌரவத்துக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது.
உங்களுக்கு என் கூட வாழ பிடிக்கல.. சரி நீங்க சொல்ற மாதிரியே செய்றேன். ஆனா அதுவரைக்கும் இப்ப இருக்கிற மாதிரி உங்க வீட்டிலேயே நான் இருக்கேன்.. ப்ளீஸ்" மென்மையான குரலில் கூறினாலும் வார்த்தையில் தடுமாற்றம் இன்றி பேசினாள் பூங்காவனம்..
சிறிது நேரம் அமைதியாக இருந்த மின்னல்" இன்னிக்கு இங்கே இருக்கியா என் கூட வரியா" என்றதும் எழுந்து நின்றாள் பூங்காவனம்.. மின்னல் வாசலை நெருங்கும் போது
" ஒரு நிமிஷம்"பூங்காவனத்தின் குரல் தடுத்து நிறுத்தியது. நின்றானே தவிர திரும்பி பார்க்கவில்லை.
" நான் மயங்கி விழுந்தப்ப நீங்க தவிச்ச தவிப்பு உண்மையா பொய்யா?" காயப்பட்ட கரத்தை அழுத்தமாய் மூடியவன் மேலும் உதிரம் கசிய அங்கிருந்து வேகமாக வெளியே வந்தான். எதிர்பட்ட தேவகி மருமகனின் கோபத்தையும் பின்னால் கசங்கிய கொடி போல் வரும் மகளையும் கண்டதும்
"மாப்ள.. பூங்கா என்னடி ஆச்சு ஏன் மாப்பிள்ளை ஒரு மாதிரி போறாரு, உன் மேல எல்லாம் என்ன ரத்தம்.." மகளின் மேல் மின்னலின் உதிரத்தை கண்டு பதறினார் தேவகி.
" அது ஒன்னும் இல்லம்மா கட்சியில ஏதோ பிரச்சனை போல. அந்தக் கோவத்துல கண்ணாடிய உடச்சிட்டாரு.அதான் கையை கிழிச்சு ஒரே ரத்தம். தடுக்க போன என் மேலயும் ரத்தம். நீ இதெல்லாம் பார்த்து பயப்படாத வீட்ல கண்ணாடி உடைஞ்சு கிடக்கு.. பார்த்து எடு.. நான் நாளைக்கு வரேன்" மின்னல் கோபமாக காரில் அமர்ந்திருக்க ஓட்டமும் நடையுமாக வந்து பக்கத்தில் ஏறிக் கொண்டாள் பூங்காவனம்..
கார் சீறிப்பாய மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.." உங்க கண்ணுல நான் பார்த்த பரிதவிப்பு நடிப்பா? " அங்கே அமைதி மட்டுமே ஆட்சி செய்தது சற்று நேரம்.
தொடரும்
No comments:
Post a Comment