மின்னல் வீரபாண்டியன் போக்குவரத்து துறை அமைச்சர்.புதிதாக அரசாங்கம் மேலும் ஆயிரம் அரசு பேருந்துகள் வாங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான முன்னெடுப்பாக அமைச்சர் மின்னல் வீரபாண்டியனின் முன்னிலையில் கையெழுத்துக்காக காத்திருக்கிறது சட்டசபை. அமைச்சர் மின்னல் வீரபாண்டியனின் ஒரே சிந்தனை யாரிடம் இந்த டென்டரை ஒப்படைக்கலாம் என்பதே. ஏற்படும் அதில் தனக்கு எவ்வளவு லாபம் ஏற்படும், எத்தனை கோடிகளை தான் அடிக்கலாம் என்பதை அவனது தலையாய சிந்தனையாக இருந்தது.
" மதிப்புக்குரிய சபாநாயகர் அவர்களே இப்படித்தான் போன தடவையும், 2000 பஸ்ஸு வாங்க போறதா தீர்மானம் நிறைவேத்துனீங்க. ஆனா எத்தனை பஸ் உண்மையா நீங்க வாங்கினீங்க? எத்தனை பேருக்கு அது மூலியமா வேலை போட்டு கொடுத்தீங்க? இல்லை எத்தனை பேருக்கு வேலை போட்டு கொடுக்கிறதா சொல்லி காச வாங்கி ஏமாத்துனீங்க? எந்த அறிக்கையும் வெளிய வரல. 2000 பஸ்ல 500 பஸ் தான் கணக்கு காட்டுனீங்க. அந்த 500 பஸ்சும் புது பஸ் இல்ல. பழைய பஸ் வாங்கி அதை பெயிண்ட் அடிச்சு மேக்கப் போட்டு புதுசா நிப்பாட்டிட்டீங்க.. பேலன்ஸ் ஆயிரத்து 500 பேருக்கும் இல்லாத பஸ்ஸுக்கு வேலை வாங்கி கொடுக்கிறதா சொல்லி ஆளுக்கு அஞ்சு லட்சம் லஞ்சம் வாங்குனதும் இல்லாம, அவனுங்க அத்தனை பேருக்கும் விபூதி அடிச்சிட்டீங்க. அதோட கம்ப்ளைன்ட் பேப்பரு இங்க இருக்கு.. " கம்ப்ளைன்ட் பேப்பரின் நகலை தூக்கி மேஜையில் எரிந்தார் எதிர்க்கட்சிக்காரர்..
மின்னல் இப்பொழுது என்ன பதில் கூற போகிறான் என ஆர்வமாக எதிர்பார்த்தது. எந்தவித திடுக்கிடலோ, பதற்றமோ இன்றி சர்வ சாதாரணமாக தனது வார்த்தை ஜாலத்தை காட்ட முற்பட்டான் மின்னல் வீரபாண்டியன்.
" சபா நாயக்கர் அவர்களே, மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு விளங்கவில்லை போலும். பேருந்து வாங்குவது காய்கறி வாங்குவது போல அல்ல.. பேருந்து வாங்குறதுக்கு நாங்க கொடுத்த திட்ட அறிக்கையும், கம்பெனிக்காரரோட திட்ட அறிக்கையும் ஒத்துப் போனாதான் வாங்குறது சாத்தியம். அதுக்கே மூணு வருஷம் ஆயிடுச்சு. அதற்காக எத்தனை கம்பெனிக்காரர்கள் இடம் திட்ட அறிக்கையை வாங்கி இருக்கிறோம் என்பதற்கான ஆதாரங்கள் உங்க பார்வைக்கு முன் அளிக்கிறேன்..
எங்களுக்கு மக்களின் பணத்தை விரயமாக்குவதற்கு சற்றும் விருப்பமில்லை. அது எங்களது உரிமையும் கிடையாது.. ஆகவே மக்களின் வரிப்பணத்தை விரயமாக்காம ஆக குறைவாக இருந்த திட்ட அறிக்கை கொடுத்த கம்பெனிக்காரர்களிடம் பணத்தைக் கொடுத்து பேருந்தை தயார் செய்து வாங்கியதற்கான ஆதாரமும் உங்க முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.. பேருந்து இப்பதான் தயாராயிட்டு இருக்கு.. நாங்க குடுத்த மலிவு விலை பட்ஜெட்டுக்கு இவ்வளவு வேகத்தில் தான் வேலை நடக்கும். இது கூட புரியாம எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்.."
" இப்படி ஆயிரத்து எட்டு பொய் ஆதாரங்களை காட்டி தான் மக்கள் தலையில நல்லா மொளகா அரைச்சுட்டு இருக்கானுங்க.. மக்கள் சேவை மகேசன் சேவை வெளிய வாய் கிழிய பேச தெரியுது. ஆனா உள்ள மக்களை நல்லா சொரண்டி அவனவன் புள்ள குட்டிங்களுக்காக சேர்த்து வச்சுக்கிட்டு இருக்கான்."
"இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிக்காரர் வாதத்தை கேட்டா சிரிப்பு தான் வருது.. நீங்க மக்கள பாருங்க.. கையில ஒரு செல்போனும் ஒரு நாளைக்கு அன்லிமிடெட் ஜிபியும் இருந்தா போதும். மக்கள் சோறு தண்ணி இருக்கோ இல்லையோ ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க. எதிர்க்கட்சிக்காரர் தேவையில்லாததெல்லாம் பேசி வீணா நம்ம அனைவருடைய நேரத்தையும் வீணடிச்சிட்டு இருக்காரு.." மின்னல் அசால்டாக இப்படி கூறவும் சட்டசபை சற்று நேரத்திற்கெல்லாம் சந்தை கடை போலானது.
" என்ணணே செழியன் உங்களை என்ன போடு போட்டான்.. நீங்க என்னன்னா அது எல்லாத்தையும் கேட்டுட்டு கம்முனு வரிங்க.. " சுரேஷ் புரியாமல் கேட்டான்.
மின்னலிடமிருந்து அவனுக்கு எந்த வித பதிலும் கிடைக்கவில்லை மாறாக புன்னகை ஒன்றே பதிலாக கிடைத்தது.அந்த மர்ம புன்னகை அடுத்து வந்த சில நாட்களில் சுரேஷிற்கு ஏன் என்று புரிந்தது.
ஊழல் செய்ததாக சொல்லி செழியன் தங்கமானை கைது செய்ததாக ஊடகங்களில் செய்தி காட்டுத்தை போல் பரவியது. கையும் களவுமாக அவர் செய்த ஊழலை லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி விட்டதே மின்னல் தான்..
எலக்சன் நேரம் என்பதால் மக்கள் அனைவரும் கொதித்து போயிருக்க கட்சியின் மேலிடம் செழியன் தங்கமானை கட்சியின் நலன் கருதி நீக்கி விட்டது.
மின்னலுக்கும் பூங்காவனத்திற்கும் திருமணமாகி ஒரு மாதம் ஆகிவிட்டது.. திருமண விருந்து கூட தடபுடலாக செய்யாமல் நாடு முழுவதும் இருக்கும் அனாதை இல்ல குழந்தைகளுக்கு இருவேளையும் உணவளித்தான் மின்னல் வீரபாண்டியன்.. இதனால் அவனது பெயர் இன்னும் மக்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்தது.
ஆனால் அவனது கெஸ்ட் ஹவுஸில் மிகவும் நெருக்கமானவர்களை அழைத்து மது மாது என தடபுடலாக விருந்து வைத்து அசத்தியிருந்தான்..
தன்னுடைய அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்றவன் நேராக சமையலறைக்கு சென்றான். அங்கே அவனது வரவிற்காக பூங்காவனம் வியர்க்க விறுவிறுக்க சமைத்துக் கொண்டிருந்தாள்.
வியர்வை பூத்த கழுத்தில் இச்சென்று முத்தம் வைத்தான் இடையை இறுக்கமாக கட்டிக்கொண்டு..
"ஆஆ.. ப்ச் என்னங்க.. எத்தனை தடவை சொல்றது இந்த மாதிரி செய்யாதீங்கனு" அவன் கரத்தை விலக்க முயன்றாள் பூங்காவனம்.. அது அவ்வளவு சுலபமில்லை என்பது அவளுக்கு வந்த புதிதிலேயே தெரிந்து விட்டது.
சளித்தபடியே சமையல் வேலையை தொடர்ந்தாள். அவனும் அவள் இடையை வருடுவது கழுத்தில் மீசையை கொண்டு குறுகுறுப்பு ஏற்படுத்துவது அப்படி எதையாவது செய்து அவள் சமையல் வேலையை கெடுக்க மும்பரமாக செயல்பட்டான்.
அப்படி இப்படி என்று அவனது இம்சைகளின் நடுவே சமையலை செய்து முடித்தாள் பூங்காவனம்..
" வேர்த்து ஒழுகி இந்த சமையல செய்யறது ஒரு கடுப்புனா, அதையும் செய்ய விடாம நீங்க கேக்குறீங்க பாத்திங்களா உங்க மேல இன்னும் கடுப்பு கடுப்பா வருது.." கழுத்தை நெரிப்பது போல கைகளை அவன் கழுத்தின் அருகே கொண்டு சென்றாள்.
அவளையும் அவள் கரத்தையும் ஒரு வினாடி கூர்ந்து பார்த்தவன் சிரித்த இதழ்களோடு பெண்ணவளின் இதழ்களை தனதாக்கி கொண்டான்.
" வீட்டில எத்தனை வேலைக்காரங்க இருக்காங்க.. கமலிக்கா இருக்கு.. நீ ஏன் இந்த வேலையை இழுத்து போட்டு செய்யுற.. அதுலயும் நான்தான் சமைப்பேன்னு ஒரே ஆட்டம். அப்புறம் அது நொட்டை இது நொட்டைன்னு ஆயிரம் குறை சொல்ற.."
" மத்த வேலை எல்லாம் அவங்க செய்யட்டும். என் புருஷனுக்கு என் கையால ஆக்கி போட்டா தான் என்னோட மனசுக்கு திருப்தியா இருக்கும்."
" வயிறு நிறைஞ்சா போதுமா" தாபம் அவனது குரலில் மேலோங்கி நின்றது.
" வேற என்ன நிறையனும்" தெரிந்து கொண்டே கேட்டாள் பூங்காவனம்.
"இங்க நிறையனும்".. சேலை விலகிய இடைவெளியில் தனது கரத்தை நுழைத்தவன் அவளது வயிற்றில் தனது உள்ளங்கை அழுத்தமாக பதியும் வண்ணம் கூறினான்.
அவனது அடாவடி செயலால் பூங்காவனத்திற்கு பேச்சே வரவில்லை." என்ன பண்ணிட்டு இருக்கீங்க யாராவது பார்க்க போறாங்க.. எப்ப பாரு உங்களோட இது அக்கப்போரா போச்சு போங்க நான் போறேன்".. அவனைத் தாண்டி அவளால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.
" என்ன தாண்டி போறது அவ்ளோ சுலபம் இல்ல பொண்ணே.." பூங்காவனத்தை மின்னல் குறுகுறுவென அவ்ளோ தலை குனிந்து கொண்டாள்.
" கமலி அக்கா வந்துருவாங்க"
" வரட்டும்"
" பாத்துருவாங்க"
" பாக்கட்டும்"
"ப்ச் அவங்க பார்த்தா உங்களுக்கு என்ன.. எனக்கு தான்"
" உனக்கு என்ன"
" யோவ் எனக்கு தான் வெக்கமா இருக்கும்.. உனக்கு என்ன.. தலையை இப்படி இப்படின்னு சீப்பே இல்லாம சீவிட்டு போயிருவ.." அவனின் பிடியிலிருந்து தப்பித்து ஓட முயன்றாள் பூங்காவனம்..
" என்னடி வர வர மரியாதை தேயுது"..
"ம்ம்ம்"
"ம்ம்ம்ம்ம்"
"ம்ம்ம்ம்ம்"
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"
"ம்ஹும்.. விடுங்க ப்ளீஸ்.. உங்களுக்கு அப்புறமா வேற வேலை இல்லையா.."
"இருக்கே"அவளின் மேனியை கண்களால் தீண்டியபடி கூறினான்.. பூங்காவனத்தின் முகம் சிவந்தது.
"தள்ளுங்க ப்ளீஸ்"
"சரி ஒன்னு கொடு".. ஒற்றை விரலால் தனது இதழ்களை தொட்டு காட்டினான்.
"ஆஹ் ம்ஹும் முடியாது.." வீம்பு செய்தாள் பூங்காவனம்.
" கொடுத்தா போகலாம்"
" அப்படின்னா போகவே வேணாம் ரெண்டு பேரும் இப்படியே நிக்கலாம்.. "
"ஓ.. எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது"அவளின் மேனியில் சட்டமாக சாய்ந்து கொண்டவன்,ஒற்றை விரல் கொண்டே அவளை ஓவியமாய் வரைந்து கொண்டிருந்தான்.
"கடவுளே.. எப்பவும் சரியா சாப்பிடற டைம்க்கு தான வருவீங்க இன்னைக்கு என்ன கொஞ்சம் சீக்கிரமா வந்து என் உசுர போட்டு வாங்குறீங்க.." அவனின் அழுச்சாட்டியம் தாங்க முடியாமல் குரலை உயர்த்தினாள் பூங்காவனம்.
" நான் கேட்டது கொடுக்குற வரைக்கும் இப்படிதான்".. பூங்காவனத்திற்கு பயம். கமலி பார்த்தால் கூட சமாளித்து விடுவாள். ஆனால் வீட்டில் வேலை செய்பவர்கள் யாராவது பார்த்து விட்டால்? மானமே போய்விடும்..
ஹாலில் ஆள் அரவம் கேட்டது."அய்யயோ யாரோ வராங்க போல ப்ளீஸ் தள்ளி போங்க"
மலை முழுங்கி மகாதேவன் அவன் சற்று மசியவில்லை.. காரியமாக ஒற்றை விரலை எடுத்துச் சென்று இதழின் மேல் வைத்து காட்டினான். பூங்காவனத்திற்கு வேறு வழியே கிடையாது. இறுதியில் அவன் கேட்டதை கொடுக்க சம்மதித்து யாராவது வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தாள். ஒருவரும் வரவில்லை என உறுதி செய்து கொண்டவள் அவனின் இரு பக்க தோள்களை பற்றிய படி மெல்ல எக்கினாள்.
அவனின் கண்கள் அசையாமல் அவளை பார்த்தது. அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.கண்களை மூடிக்கொள்ள சொன்னாலும் அந்த பிடிவாதக்காரன் கேட்க மாட்டான்..
" ஒன்னு தான்"செல்லமாக மிரட்டினாள் பூங்காவனம். சன்னமாக சிரித்து வைத்தான் மின்னல் வீரபாண்டியன்.. அவளின் இதழ்களும் அவனின் இதழ்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க மெல்ல இதழ்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும் நேரம் மின்னலின் கைபேசி அலறியது.
வேகமாக அவளை தள்ளியும் மின்னல் கைபேசியை எடுத்து பார்க்க அழைத்தது சோலை பாண்டியன்..
"ஐயா சொல்லுங்கய்யா..ஆங் சரி.. ஆங்.. சரிய்யா சரிய்யா.. இருங்கய்யா.. ஒரு பத்து நிமிஷம்..".. வேகமாக வெளியே கிளம்ப முற்பட்டவனின் கரத்தை பிடிக்க...
"வந்தர்றேன்".. ஒற்றை வார்த்தையோடு கிளம்பி விட்டான் மின்னல்..
திருமணமாகிய இந்த ஒரு மாதத்தில் மின்னல் பூங்காவின் வாழ்வு அவர்கள் நினைத்ததை விட சீராக சென்றது..அன்று இரண்டு அறை விட்டு தாலியின் அர்த்தத்தை உரைத்தவனை நம்பாமல் இந்த வீட்டிற்குள் அடுத்த இரண்டே நாளில் அவனை மெல்ல நம்ப ஆரம்பித்தாள் அதாவது அப்படி பேர் பண்ண தொடங்கினாள் பூங்கா..
தொடரும்
No comments:
Post a Comment