சோலை பாண்டியன் சொன்னது போலவே மின்னலின் பெயரில் புதிதாக சொத்து வாங்கி விட்டார்..
"ஐயா மனசு யாருக்கு வரும்? இந்த காலத்துல பெத்த பிள்ளைங்களுக்கே கா காசு கிள்ளி கொடுக்காத அப்பா அம்மா எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா.. அப்படி இருக்க நான் எல்லாம் யாரு? என்ன தத்து எடுத்து வாரிசு அறிவிச்சு, அவரோட மக பேர்ல வாங்க இருந்த சொத்தை என் பேரெல்லாம் வாங்கி இருக்காரு.. இப்படிப்பட்ட மனுசனுக்கு கடவுள் இந்த மாதிரி சோதனையை கொடுத்திருக்கக் கூடாது?" யாரிடமோ ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் மின்னல் வீரபாண்டியன்..
" அத சொல்லு மின்னலு.. சோலை பாண்டியன் யாருக்கு எப்படியோ.. ஆனா உனக்கு அவரு தங்கமானவரு. எப்ப உன்ன பத்தி பேச்சு எடுத்தாலும் மின்னலு மாதிரி ஒருத்தன் இனிமே பொறந்து தான் வரணும்னு உன்ன விட்டுக் கொடுக்காம பேசுவாரு.. என்னன்னு தெரியலப்பா உன் மேல அவருக்கு ஒரு தனிப்பட்ட இது இருக்கு.. " மூத்த தொண்டர் கந்தசாமி மின்னலின் பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்..
இன்னொருவர் மாரியப்பன்.. அவர் அமைதியாக அமர்ந்து இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். சோலை பாண்டியன் பெயர் அடிப்படை வந்தவர்களுக்கு பழச்சாறு கொடுக்க தயார் செய்து கொண்டே ஒரு காதை ஹாலில் வைத்திருந்தாள் பூங்காவனம்.
" இந்த பொறுக்கி பயலுக்கு இந்த பொறுக்கி பைய மேல என்ன ஒரு இது வேண்டி கிடக்கு.. எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க. என்னைக்கு எவன் கையில வெட்டுப்பட்டு சாவ போதுங்களோ தெரியல.. அய்யய்யோ அவசரத்துல வாய விட்டுட்டேன். அந்த சோலை பாண்டியன் வேணும்னா செத்து தொலையட்டும்.
இந்த மின்னலு அவன் அளவுக்கு மோசமானவன் இல்லைன்னு இந்த ஒரு மாசம் பழக்கனதுல தெரியுது. ஆனா யாரையும் ஆழமா நம்பிட கூடாது. இன்னும் அந்த சோல பாண்டியன் கூட தானே இவனும் ஜோடி போட்டு சுத்திட்டு இருக்கான்." மூன்று பழச்சாறுகள் அடங்கிய குவளைகளை ட்ரேயின் மீது அடுக்கி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு விரைந்தாள் பூங்காவனம்.
" அடடா நீங்க ஏன்மா இதெல்லாம் எடுத்துட்டு வரீங்க வீட்ல வேலை செய்ய ஆளா இல்ல.. எப்படிமா இருக்கீங்க.." கந்தசாமி மாரியப்பன் இருவரும் பூங்காவனத்தை கண்டதும் எழுந்து நின்றார்கள்.
" நான் நல்லா இருக்கேன் அண்ணே ஏன் ரெண்டு பேரும் எந்திரிச்சு நிக்கிறீங்க உட்காருங்க.. " புன்னகை முகத்தோடு அவர்களுக்கு பழச்சாற்றை நீட்டினாள்.
" இருக்கட்டும்மா இதெல்லாம் எதுக்கு"..
" எடுத்துக்கோங்கண்ணே.. " மின்னல் சொன்னவுடன் இருவரும் எடுத்துக் கொண்டு அமர்ந்தார்கள். பழச்சாறு அடங்கிய ஒரு குவலையை கொடுத்து விட்டு மீண்டும் என்ன பேசுகிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்க சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் பூங்காவனம்.
சற்று நேரம் கட்சியை பற்றி பேச்சு ஓடியது. பிறகு கந்தசாமி அவசர வேலை இருப்பதாக சொல்லிவிட்டு செல்ல மாரியப்பன் மட்டும் இன்னும் அமர்ந்து மின்னலிடம் பேசிக் கொண்டிருந்தார்.
" ஏன்ணே ஒரு மாதிரியா இருக்கீங்க. நானும் முதல்ல இருந்து உங்கள கவனிச்சிட்டு இருக்கேன் என்ன பிரச்சனை" மூத்த உறுப்பினர்களான இவர்களின் மீது எப்போதுமே மின்னலுக்கு மரியாதை அதிகம்.
அதிலும் மாரியப்பன் மீது கூடுதல் மரியாதை. தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசாத மனிதர் அவர். " அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. "
" நீங்க இல்லன்னு சொல்லும்போதே ஏதோ இருக்குன்னு தெரியுது" மாரியப்பனுக்கு உண்மையிலேயே ஒரு பெரிய பிரச்சனை. அதை எப்படி மின்னலிடம் கூறுவது என்று தான் அவருக்கு புரியவில்லை.
" இல்ல தம்பி நான் நல்லா தான் இருக்கேன். நேரமாச்சு தம்பி நான் கிளம்புறேன்" இங்கிருந்து அகல முயன்றவரை மின்னலின் குரல் தடுத்து நிறுத்தியது.
" உட்காருங்கண்ணே பேசிட்டு இருக்கும்போதே பாதியில போற பழக்கம் எப்பருந்து வந்துச்சு உங்களுக்கு.." பேசிக் கொண்டிருக்கும்போது பாதியில் இடைவெட்டி சென்றால் மின்னலுக்கு பிடிக்காது. அவனை நன்கறிந்த அனைவருக்கும் அவனுடைய இந்த பழக்கமும் தெரியும்.
மாரியப்பனுக்கு தீ மேல் அமர்ந்திருப்பதைப் போல இருந்தது..
"ப்ச் என்ன இவனுங்க உப்புக்கு பெறாத விஷயத்தைப் பத்தி இவ்ளோ நேரம் மூச்சு புடிச்சு பேசிட்டு இருக்காங்க.. இதை ஒட்டு கேட்க நான் நின்னேன் பாரு என்ன செருப்பால அடிக்கணும்.." பூங்காவனம் அறைக்குச் செல்ல முற்பட
" அது ஒன்னும் இல்ல தம்பி சோல பாண்டியன் ஐயா இருக்காருல" பிரேக் அடித்தார் போல நின்று விட்டாள் பூங்காவனம்.. காதை நன்றாக தீட்டி வைத்துக் கொண்டாள்..
" அவருக்கென்ன" மின்னலின் பார்வை இடுங்கியது. மாரியப்பன் எச்சிலைக்கூட்டி விழுங்கி கொண்டே
" என்னோட பேத்தி சுபலா காலேஜ்ல செகண்ட் இயர் படிச்சிட்டு இருக்கா. நீங்க தான தம்பி அவளுக்கு சீட்டு வாங்கி கொடுத்தீங்க... "
" அவளுக்கென்ன..நல்லா படிக்கிற பொண்ணு.. போன வாரம் கூட பார்த்தேன்"
மாரியப்பன் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டார். கண்களில் ஓரம் வழிந்த கண்ணீரை தோளில் கிடந்த தொண்டை கொண்டு துடைத்தார்..
"தம்பி.."
"என்னண்ணே என்னாச்சு ஏன் கண்ணு கலங்குறீங்க"எதற்கும் கலங்காத மாறியப்பன் முதல் தடவையாக கண்கலங்கி இருப்பதை கண்டதும் மின்னலுக்கு விஷயம் பெரிது என்று விளங்கியது.
"தம்பி.. என் மருமக சோலை பாண்டியன் கிட்ட தான் கடன் வாங்கிருக்காரு.. வட்டி மட்டுமே கட்டிட்டு வந்தவர் கிட்ட திடீர்னு அசலையும் சேர்த்து கட்டுன்னு சொன்னா பாவம் மனுஷன் அவசரத்துக்கு எங்க போவாரு.. அவரும் அங்கே இல்லைன்னு தேடி அலைஞ்சு ஓரளவு பணத்தை சேர்த்து கொண்டு போய் கொடுத்தாரு. மீதிய அடுத்த மாசம் தரேன். அதுக்கு அந்த சோலை பாண்டிய என்ன சொன்னான் தெரியுமா.. ஒரே நாளுல வாங்கின பணத்தை வட்டி அவசரமா எடுத்து வை.இல்லன்னா.. இல்லனா உன் மகள என் கிட்ட அனுப்பி வைனு சொல்றான் தம்பி" கதறி அழுதே விட்டார் மாரியப்பன்..
" அந்தாளு வயசு என்ன என் பேத்தி வயசு என்ன..கொஞ்சம் கூட மனசாட்சி வேணாமா.. கையில பணம் காசு இருந்தா இப்படித்தான் அடுத்தவங்களை பேச சொல்லுதா? அந்தாளுக்கும் மூணு பொட்ட புள்ளைங்க இருக்குங்க தானே.. நீங்களே சொல்லுங்க தம்பி நான் யாருகிட்ட போய் அவ்வளவு பெரிய தொகையை கேட்பேன்..
என் மருமகன் தொகையை புரட்ட முடியலன்னா குடும்பத்தோட சேர்ந்து விஷத்தை குடிச்சிடுவேன்னு சொல்லிட்டு திரியுறாரு.. குடும்ப மானமே சந்தி சிரிக்க போது.. இதெல்லாம் பாக்குறதுக்கு தான் நான் இன்னும் உசுர கையில பிடிச்சிட்டு இருக்கிறேனா? " மாரியப்பன் தேம்பியல சமையலறையில் நின்று வெளியே நடப்பதை: கேட்பது ஒட்டு கேட்டுக்: கொண்டிருந்த பூங்காவனம்.
"நாசமா போறவன்.. கண்டிப்பா இவனுக்கெல்லாம் நல்ல சாவே சாவ மாட்டான்.. படுபாவி ஊர்ல ஒருத்திய விட மாட்டான் போல.. எவன் எவனுக்கோ கேடு வருது.. இவனுக்கு ஒன்னு வர மாட்டுதே.."மனதிற்குள் கருவினாள் பூங்கா.
"தம்பி உங்கள தானே அவரு வாரிசுனு அறிவிச்சிருக்காரு..அவருகிட்ட நீங்க எடுத்து சொல்லக் கூடாதா?"எதிர்பார்போடு மாறியப்பன் கேட்க பூங்காவும் மின்னல் சொல்ல போகும் வார்த்தைக்காக காத்திருந்தாள்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவன்" அவரை எதிர்த்து என்னால எதுவும் செய்ய முடியாது. அவரு ஒரு விஷயம் சொன்னா செஞ்சா அது சரியா தான் இருக்கும். நீங்க முடிஞ்ச அளவு பணத்தை கொடுக்க போறாங்க. கிளம்புங்கண்ணே".. தளர்ந்த வயதில் மாரியப்பன் வேறு எதை செய்வார்? பெருத்த ஏமாற்றத்தோடு கனத்த நெஞ்சத்துடன் அங்கிருந்து கிளம்பினார்..
உள்ளே இவர்கள் சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்த பூங்காவனத்திற்கு ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை.. மின்னல் அவனது அலுவலக அறையில் அமர்ந்திருக்க மெதுவாக அறையை எட்டிப் பார்த்தாள் பூங்கா..
அவன் சிஸ்டத்தில் பிஸியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்..அவனது செதுக்கி வைத்த கட்டுடல் தோற்றம் இளம் பெண்ணாகிய அவள் மனதை லேசாக மயக்க பார்த்தது..
"ச்சே.. அந்த சோலை பாண்டியனுக்கு கூஜா தூக்குறான். இவன போய் வாய் பொளந்து பாத்துட்டு இருக்கேனே"மயங்கி மனதிற்கு ஒரு குட்டு வைத்தாள் உடனே.
அவள் ஓரமாய் நிற்பது அவனது பார்வை வட்டத்தில் விழ
"என்ன"என்றான் திரும்பி பாராமலே.
" வரலாமா" மென் குரலில் வினவினாள் பெண்.
"அதான் வந்துடிட்யே".. அதற்கு மேல் அங்கே தாமதியாமல் அறைக்குள் நுழைந்தாள் பூங்கா.
"சொல்லு"
"அது வந்து"
"எது சொல்றதா இருந்தாலும் பக்கத்துல வந்து சொல்லு" இன்னமும் அவளின் முகத்தை பார்க்கவில்லை.
அவன் பக்கத்தில் சென்றவளை இழுத்துத் தன் மடியில் அமர வைத்துக் கொண்டான் மின்னல்.. " இதுக்கு தான் இவன் பக்கத்துல வரவே கூடாது பொசுக்கு பொசுக்குன்னு ஏதாவது ஒன்னு பண்ணுறான்.." மனதிற்குள் நினைத்துக் கொண்டதில் வெளியே வெட்கப்பட்டுக் கொண்டாள்.
"சொல்லு".. இந்த ஒரு மாதத்தில் பூங்கா புரிந்து கொண்ட ஒரே விஷயம், கலவி நேரத்தில் அவனிடம் ஏதாவது ஒன்று கேட்டால் பதில் மென்மையாக வரும். அதனால் தானாகவே முன்வந்து அவனுக்கு முத்தம் கொடுத்தாள் கன்னத்தில்.
" நீ என்ன குழந்தையா கன்னத்துல முத்தம் கொடுக்குற".. கேட்டவன் அவள் இதழில் தன் இதழை பதித்தான். நல்ல தடிமனான இதழ் பூங்காவனத்திற்கு. கீழுதட்டை மெல்ல இழுத்து முத்தமிட்டவன் அவசரமே இல்லாமல் மேல் உதட்டையும் முத்தமிட்டான்.
அவன் கொடுத்த ஒற்றை முத்தம் அவளின் மேனி முழுவதும் சிலிர்க்க வைத்தது. புல்லரித்து போயிருந்த கைகளை தேய்த்துக்கொண்டு
"ஏங்க நான் ஒன்னு சொல்லவா"
"ம்ம்ம்" அவளின் முந்தானையை அவிழ்ப்பதில் அவனின் கரம் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது..
"அது வந்து.. மொத ஒருத்தர் வந்திருந்தாரே.. அவரு பேத்திய பத்தி கூட சொன்னாரே.."..
"ம்ம்ம்"இப்பொழுது பெண்மையின் மென்மையில் முகம் பதித்து முத்தமிட்டான்.
"ஆ.. அவர பாக்க பாவமா இல்லையா? உங்களால அவருக்கு உதவி செய்ய முடியாதா".. முத்தமிடுவதை நிறுத்தியவன் அவளை நிமிர்ந்து பார்த்து
" ஒட்டு கேட்டியா"
" ஐயோ இல்லைங்க நான் கிச்சன்ல வேலையா இருந்தேன் நீங்க பேசிக்கிட்டது காதுல விழுந்துச்சு."
" இந்த காதுல விழுந்த விஷயத்தை அந்த காது வழியா வெளியாக்கிடனும்.. " அவள் காது மடலில் முத்தமிட்டான்.
"என்னங்க.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. அந்த சோலை பாண்டியன் ஒரு பொம்பள பொறுக்கி. இதே மாதிரி தான் நாங்களும் எங்க அப்பா வாங்கின கடனுக்காக அவன் கிட்ட மாட்டி சிக்கி சீரழிஞ்சிட்டோம்.. அந்தப் பொண்ணு பாவங்க.. அதோட வாழ்க்கையே வீணா போய்டும். ஏதாவது உதவி செய்யுங்க" அடுத்த நொடி தரையில் கிடந்தாள் பூங்காவனம். இவ்வளவு நேரம் மோகத்தில் அவளை சல்லாபித்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது இந்த சொர்க்கத்திலிருந்து அவளை கீழே தள்ளினான் என்பதே புரியவில்லை.
" என்ன தைரியம் இருந்தா ஐயாவ பத்தி என்கிட்டே தப்பா பேசுவ? என்னடி தெரியும் உனக்கு அவர பத்தி.. இன்னிக்கு நீ இந்த வாழ்க்கை வாழ்றனா அது அவர் போட்ட பிச்சை.. கை நீட்டி காசு வாங்க தெரியுதுல கட்ட முடியலன்னா இப்படித்தான் ஆகும்னு அறிவில்ல.. உன் வேலை என்ன? எனக்கு சமைச்சு வைக்கிறது.. நான் கூப்பிடறப்பல்லாம் என் கூட வந்து படுக்கிறது.. இதைத் தாண்டி ஒரு வார்த்தை நீ பேசின " இந்த அளவு அவன் கோபப்படுவான் என்று பூங்காவனம் எதிர்பார்க்கவில்லை.
வேகமாக அறையிலிருந்து வெளியேறினான் மின்னல். முதுகையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னை அறியாமல் கண்ணீர் கன்னத்தை தொட்டது. ஒரு சதவீதமாவது இவன் நல்லவனாக இருக்கக் கூடாதா என்று ஏங்கியது பெண்ணின் உள்ளம்..
தொடரும்..
No comments:
Post a Comment