இஞ்சி இடையழகி 30(இறுதி பாகம்)
மறுநாள் காலை இங்கு பெண்டரில் இருந்த தங்கள் உயிர்களை காண மனைவியை அழைத்து சென்றான் பாரி..தேவதைகளை நேரில் கண்டிறாத முல்லை இதோ காண்கிறாள் தன் மகள்களின் ரூபத்தில்..அவள் முகமலர்ந்து சிரிப்பை இன்னும் பெரியதாக்க வளரி கண் விழித்து விட்டதை கூறினான் பாரி..முல்லை கொடியின் இதழ்களும் விழிகளும் ஒருங்கே மலர்ந்தன..அன்பு கண்ணா ரியோ மூவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.. முல்லையையும் அவளின் இரு தேவதைகளையும் பார்த்து பூரித்து போயினர்..அவர்களை அழகாக படமெடுத்து தன் மனைவிக்கு அனுப்பி வைத்தான் அன்பு.. கிரேசிற்கு மகிழ்ச்சி தாளவில்லை..எப்படியோ தன் தோழி உயிர் போரட்டத்தில் வென்று மீண்டும் வந்ததை எண்ணி நிம்மதி அடைந்தான் ரியோ..முல்லையை தவிர ரியோ கண்ணா அன்பு பாரி நால்வரும் வளரியை காண சென்றனர்..அவனிடம் இருகரம் கூப்பி நன்றி கூறுவதை தவிர்த்து அன்பாலும் ரியோவாழும் என்ன செய்திட முடியும். சின்ன சிரிப்பில் அவர்களின் நன்றியை ஏற்று கொண்டான் வளரி..கமலி மருமகளையும் மகனையும் மாறி மாறி கவனித்து கொண்டார்.. முல்லை மருத்துவமனையில் வளரியை காண விரும்பவில்லை.மீண்டும் அவனை அதே படுக்கையின் மேல் பார்க்க அவளுக்கு சக்த...