இஞ்சி இடையழகி 29


பாரி வேந்தனின் வேகம் காற்றை கிழித்து கொண்டு சென்றது..அந்த பொட்டல் காட்டிலிருந்து அசுர வேகத்தில் மருத்துவமனை நோக்கி சென்றான்.. அவன் கண்கள் கலங்கவில்லை..மனமோ தடுமாறவில்லை..ஒரு கணவனாக பதறாமல் ஒரு மருத்துவனாக மூன்று உயிர்களின் பொறுப்பை கையிலெடுத்தான்..சிங்னல் கிடைக்கிறதா என்று பார்த்து கொண்டே இருந்தான்.. சிங்னல் கிடைத்தவுடன் கமலியின் அண்ணனுக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூறி வளரியை காப்பாற்றும் படியும் கமலியிடம் நிலைமையை எடுத்து கூறி மருத்துவமனை வர பணித்தான்..திரும்பி தன்னுயிரை பார்த்தான்.."முல்ல என்ன விட்டு நீ எங்கயும் போக முடியாதுடி நா விட மாட்டேன் நேத்து நீ சொன்ன மாறி நாம வயசான காலத்துல இங்க வரணும்..

நமக்குன்னு சின்னதா வீடு வீட்ட சுத்தி பூச்செடி..உன் ஆசைப்படியே வீடு.. மொட்ட மாடி நிலா..காலம்பூரா நம்ம லவ் அப்ரோ தான் நீ செத்து போவேன்னு சொன்ன.. இதுலாம் நடக்காம இப்பயே போயிறலாம்னு நெனச்சே கொன்றுவேண்டி.. ஒழுங்கா உசுரோட வந்து சேருற".. அவள் கேட்க்கிறாளா இல்லையா என பாராமல் குருட்டாம்போக்கில் சொல்லி கொண்டிருந்தான் பாரி.. முல்லையோ அசைவின்றி கிடந்தாள்..இரு கால்களுக்கு இடையே குருதி அருவியாக ஊற்றியது..நிற்காமல் வழிந்த உதிரம் தான் பாரி வேந்தனின் மன உறுதியை கூறு போட்டு கொன்றன..பக்கத்தில் தனது உயிரில் விதைந்த விதைகள் இரண்டுமே பெண் குழந்தைகள்..அப்பா எப்படியும் தங்களை காப்பாற்றி விடுவானென்ற நம்பிக்கையில் பொட்டு கண்களை லேசாக திறந்து அவனை பார்த்து அழுது கொண்டிருந்தனர்.. 

பின்னால் அவனின் உயிரானவள் உதிர படுக்கையில் கிடந்தாள்..எவ்வளவு முயன்றும் அந்த மருத்துவனுள் இருந்த கணவன் வெளியே வர தான் செய்தான்.. அப்போது பாரியின் கரங்கள் நடுக்கம் கொண்டன..நெஞ்சமே அடைத்து கொண்டது.. கஷ்டபட்டு மருத்துவனை வந்து சேர்ந்தான்..வெளியே அவன் கத்திய கத்தலில் வார்டு பாய் ஓடி வந்தான் ஸ்ட்ரச்சருடன்..முல்லையை அலேக்காக தூக்கி அதில் படுக்க வைத்தான்.. தன் இரு உயிர்களையும் கையில் தூக்கி கொண்டான்.. அங்கிருந்தவர்கள் இவர்களை கண்டதும் யாரென்றே தெரியாத அந்த பெண் நல்லபடியாக பிழைத்து வரவேண்டுமென வேண்டி கொண்டனர் ஏனெனில் அவள் கணவனின் கரங்களில் தவழ்ந்த இரு பிஞ்சிகளும் அதை பெற்றவனின் முகத்தில் இருந்த வேதனையும் அதற்கு காரணம்..

அவசர பிரிவில் முல்லை கொடி சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டாள்..இரு குழந்தைகளும் இங்குபென்டரில் கிடத்தப்பட்டு சிகிச்சையில் இருந்தனர்..பாரியின் மீதுமே அவனுடைய உதிரத்தோடு சேர்ந்து அவன் மனையாளின் உதிரமும் குழந்தைகளின் உதிரமும் கலந்து இருந்தது.. அவனை நோக்கி அவசரமாக ஒரு தாதி ஓடி வந்தார்.. "சார் உங்க வைஃப் ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க..சீக்கிரமா இதுல சைன் பண்ணுங்க இது என்னனா"... 

"வேணா நர்ஸ்.. எனக்கு தெரியும் நானே ஒரு டாக்டர் தான் கொடுங்க"..ஒருவேளை சிகிச்சை பலனளிக்காமல் அவள் இறந்து விட்டாள் அதற்கு மருத்துவ நிர்வாகம் பொறுப்பாகாது என்பதே அந்த பாரத்தின் அடக்கம்..எத்தனையோ பேரிடம் அவனே கையெழுத்து வாங்கிருக்கிறான்..இன்று அவனே அந்த பாரத்தில் கையெழுத்து போடும் நிலைக்கு தள்ளப்பட்டான்..நெடிய பெருமூச்சை இழுத்து விட்டு கையெழுத்தை போட்டு கொடுத்தான்..

அந்த தாதி என்ன நினைத்தாரோ"சார் அவங்க பொழச்சிருவாங்க சார் டோன்ட் லாஸ்ட் யூவர் ஹோப்"என்று கூறி விட்டு சென்றார்..அதையெல்லாம் கேட்க்கும் நிலையில் அவன் இல்லையே..அப்படியே அங்கிருந்து நாற்காலியில் அமர்ந்து தலையை சுவரில் சாய்த்து கொண்டான்..

அங்கே வளரி ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான்..கமலியின் அண்ணன் சில உறவு ஆட்களுடன் பாரி சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தார்..அவர் வருவதற்குள் வளரி அவர்களை தாறுமாறாக வெட்டிருந்தான்..ஆனால் அவர்கள் உயிர் பிரிய கூடாதென கவனத்துடன் செய்திருந்தான்..அவனுக்கும் பலமான வெட்டு காயங்கள்..சில அடி தூரம் நடந்தவன் அப்படியே சுருண்டு விழுந்தான்..அவன் வலது பக்க கன்னம் அந்த உஷ்ண சாலையில் பதிந்து போனது.. உதிர துளி சாலையின் ஊறி அவன் கன்னத்தை மேலும் சூடாகியது..கண்களை மட்டும் அசைத்து அவனது வலது கையை பார்த்தான்.. அங்கே அவனும் முல்லையும் போட்டு கொண்ட டாட்டூ..

எழ முயன்றான் முடியவில்லை..உடலில் இருந்த சத்து எல்லாம் உதிரமாக மாறி வெளியேறி கொண்டிருந்தது..ஆனால் அவன் மனம் முல்லையை காணாமல் மடிய விரும்பவில்லை..அவனது மூச்சு மூக்கு துவாரத்தில் ஊசலாடி கொண்டிருந்தது..அதை இழுத்து பிடித்து வைத்திருந்தான் முல்லை கொடியின் பொன் வதனத்தை காணவே..அப்போது அங்கே வந்து சேர்ந்த கமலி அண்ணன் கோஸ்ட்டி வளரியை அடையாளம் கண்டு தூக்கி மற்றவர்களை ஆம்புலன்ஸ்சிற்கும் காவல் துறையினருக்கும் அழைத்து சொல்லி வளரியுடன் மருத்துவமனைக்கு சென்றனர்..கமலி அடித்து பிடித்து ஓடி வந்தார்.. அவரின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் உயிருள்ள பிணமாக அமர்ந்திருந்த பாரியை கண்டதும் தகர்ந்து விட்டது.. 

எதையும் தாங்கும் இதயம் கொண்டவன் பாரி வேந்தன்.. அவனே நொறுங்கி போயிருந்தால் அப்போது நிலைமையின் தீவிரம் புரிந்தது..அவசரமாக மகனை நோக்கி ஓடினார்"டேய் பாரி ஏண்டா இப்டி ஒக்காந்துருக்க.. ஐயோ கடவுளே எவ்ளோ ரத்தம்டா உன்மேல..முல்ல எப்டி டா இருக்கா டாக்டர் என்ன சொல்றாங்க..என் பேரபிள்ளைக எங்க டா..".. 

"ம்மா முல்லைக்கு டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு.. ரெண்டும் பொம்பள பிள்ளைங்க..இங்குபென்டர்ல வெச்சிருக்காங்க.. "இயந்திரமாக பதிலளித்தான் பாரி.. 

"இங்குபென்டரா.. டேய் வளரி.. வளரி எங்கடா"..

"வருவான்..".. அதற்கு மேல் அங்கே நில்லாமல் வெளியே வந்தான் பாரி..கமலி அங்கேயே அமர்ந்து ஒப்பாரி வைக்க உறவு பெண்கள் அவரை தேற்றினார்கள்..அழுகையின் ஊடே கமலியே அன்புவுக்கும் கண்ணாவிற்கும் தொடர்பு கொண்டு நடந்ததை கூறி வர சொன்னார்..உடனே தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பினர் அனைவரும்
கிரேஸ் சக்தியுடன் இருந்தாள்..வெண்பாவை அவள் தாய் வீட்டில் விட்டு விட்டு கண்ணா ரியோ அன்பு மூவரும் கிளம்பி விட்டனர்..

வளரியை தூக்கி கொண்டு முல்லை சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கே வந்து சேர்ந்தனர்..சரியாக பாரி வெளியே வர வளரியை தூக்கி கொண்டு உள்ளே வந்தார் அவன் மாமா..தன் மனைவியை காதலிக்கும் ஒருவனை அவன் எவனாக இருப்பினும் ஒரு கணவனால் சகிக்க இயலாது..பாரிக்கும் சில வேளைகளில் அந்த சகிக்க முடியா நிலை வரும் ஆனாலும் ஒரு காரணத்திற்காக அவன் சகித்து கொண்டிருந்தான்..இன்றோ அந்த அண்ணன் ரத்த வெள்ளத்தில் நனைந்து உடலெங்கும் சல்லடையாகி உயிரை இழுத்து பிடித்திருப்பது யாருக்காக எல்லாம் முல்லைக்காக தானே..

அவனை தூக்கி கொண்டு உள்ளே ஓடினார்கள்..அவனும் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டான்..ஆனால் அவனை அந்த கோலத்தில் பார்த்து கமலி மயங்கியே விழுந்து விட்டார்..உயர் ரத்த அழுத்தம் சிறிது நேரத்தில் விழித்து விடுவாரென அங்கிருந்து மருத்துவர் ஒருவர் கூறினார்..முல்லையை போல வளரிக்கும் கையெழுத்து வேண்டினர்..வளரியை தன் சொந்த அண்ணனென்று கையெழுத்து போட்டு கொடுத்தான் பாரி..எல்லாமும் இயந்திர கதியில் செய்தான்..முல்லை கொடிக்கு தீவிர சிகிச்சை சென்றது..அவளை ஒரு முறை கதவின் வட்ட கண்ணாடியின் வழியாக எட்டி பார்த்தான்..மருத்துவர் குழு படு வேகமாக வேலை செய்த்தது..மனமே சூனியமானதொரு நிலை..மெல்லமாக நடந்து கொண்டிருந்தான் பாரி..அப்போது அவனின் கைபேசி ஒலித்தது..எடுத்து பார்த்தான் அது கண்ணா..அவனிடம் நடந்ததை கூறி அவர்களை அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கூறினான்..மேலும் வளரி தற்காப்புக்கு தான் அவர்களை வெட்டினான் என கேஸை முடிக்க கூறினான்..கண்ணா அனைத்தையும் தான் பார்த்து கொள்வதாக கூறினான்..அவனிடமிருந்த கைபேசியை பிடிங்கி"மாப்ள என் தங்கச்சி எப்டி இருக்கா..குழந்தைங்க நல்லா இருக்கா"

"குழந்தைங்க...உங்க மருமக ரெண்டு பெரும் நல்லா இருகாங்க மச்சான்..அவங்கள பெத்த உங்க தங்கச்சி நம்மள விட்டுட்டு போயிருவா போல"..

"ஐயோ மாப்ள என்ன சொல்ற என் தங்கச்சிய எப்படியாச்சும் காப்பாத்துங்க"..

"அவ நெனச்சா கூட என்ன விட்டு போ முடியாது மச்சான் நீங்க சீக்கிரமா வாங்க'...அங்கே கண்ணா கைபேசி வழியாக பாரி இருக்கும் ஊர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசினான்..ரியோவும் அன்பும் முல்லையை எண்ணி கலங்கி தவித்தனர்..ஒரு பக்கம் கிரேஸ் வேறு ஓயாமல் அழைத்து முல்லையை பற்றி விசாரித்தாள்..அவளிடம் உண்மையை கூறாமல் மழுப்பி கொண்டிருந்தான் அன்பு..

முல்லையின் உயிர் மெல்ல அவளை விட்டு சென்று கொண்டிருந்தது..அவளை காப்பாற்ற பாடுபட்டனர் மருத்துவர்கள்..இவையனைத்தையும் பார்த்து கொண்டிருந்த பாரி அழவில்லை..அழும் அளவு அவனுக்கு தெம்பில்லை..கண்ணீர் எல்லாம் வற்றி விட மூச்சு உள்ள பிணமாக நின்றான்..வெளியே வந்த நர்ஸிடம் சொல்லி உள்ளே செல்ல அனுமதி கேட்டான்..அவனும் ஒரு மருத்துவன் என்ற ரீதியில் அவனை உள்ளே அனுமதித்தனர் மருத்துவர் குழு..முக கவசத்துடன் தலையையும் கைகளையும் உரையால் மூடி கனத்த மனதுடன் மனைவியை அணுகினான் பாரி..

அங்கே முல்லை கொடி துவண்ட கொடியென கிடந்தாள்..அவளின் பல்ஸ் இறங்கி கொண்டே சென்றது..இன்னும் சில வினாடிகளே மட்டுமே அவள் உயிர்..அவளின் அருகே வந்து அவள் தோளின் மீது முகத்தை வைத்து கழுத்தில் அவள் வாசம் பிடித்தான்..வற்றிருந்த கண்ணீர் மீண்டும் உயிர்பெற்று ஓடியது..மெல்லமாக அவளை அழைத்தான்.."முல்லைம்மா நேத்து என்கிட்ட எவ்ளோ ஆசைய சொன்ன ஆனா அது எதுவுமே நடக்காம எப்டிடி என்ன விட்டு போலாம் நீ..எப்பவும் நீ சொல்லுவ என்கிட்ட நீ தோத்து போய்ட்டே இருக்கன்னு..ஆனா உண்மையா எல்லா நேரமும் ஜெயிச்சது நீதான்..நீ என்ன விட்டு போய்ட்டா நா நானா இருக்க மாடடேன்டி..உயிரோட இருப்பேன் நம்ம பிள்ளைங்கள நல்லா வளப்பேன்..அவங்கனால நிம்மதியா இருப்பேன் ஆனா சந்தோசமா மட்டும் இருக்க மாட்டேன்டி..என் சிரிப்பே நீதான்..இத்தன நாள் உன்கிட்ட போட்டி போட்டதுக்கு என்ன அழ வைக்காதடி..என்கிட்ட வந்திரு.."..அதற்கு மேல் அவளிடம் பேச எதுவும் இல்லை அவனிடம் சொல்லப்போனால் பேச வார்த்தை வரவில்லை என்பது தான் உண்மை..இன்னும் ஒரு நிமிடம் அங்கே நின்றாலும் அவன் நெஞ்சம் அடைத்து மேலோகம் சென்று விடுவான்.. அவன் வாழ வேண்டும் அவனின் இரு குழந்தைகளுக்காக வாழ்ந்தே ஆக வேண்டும்.. 

அங்கிருந்து வேகமாக வெளியேறி அவனின் காருக்கு வந்தான்.. அங்கே சில மணி நேரத்திற்கு முன் அவனவள் சிந்திய உதிர ஆறு காய்த்து போய் பிசுபிசுத்து இருந்தது..அந்த ரத்த வாடையை நுகர்க்கையில் அதன் வடையில் யாராயிருந்தாலும் வாந்தியே வந்து விடும் ஆனால் பாரி அதையெல்லாம் கடந்த நிலையில் இருந்தான்.. 

அந்த உதிரத்தை கையால் தொட்டு பார்த்தான்..உள்ளங்கை முழுவதும் அவளின் ரத்தமே.. அதை அப்படியே தன் நெஞ்சின் மேல் வைத்து கொண்டான்...மூடிய கண்களில் கண்ணீர் துளிகள் நிற்காமல் வழிய வேதனையின் விளிம்பில் அவனின் தொண்டை அடைத்து கொள்ள அந்த நேரம் அந்த இயற்கையாகிய இறைவனிடம் அவன் வேண்டியது ஒன்றே ஒன்று தான் அது முல்லை கொடி இறந்தே ஆகவேண்டும் என்றால் எந்த வலியும் இல்லாமல் அவள் உயிர் பிரிய வேண்டுமென்பதே.. 

அந்த காய்ந்த உதிரத்தின் மேலே அமர்ந்து கண்மூடி கிடந்தான்..அவன் நெஞ்சம் விரக்தியில் காலியாக கிடந்தது..இந்த இருக்கையில் அவள் அமர ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர்ந்திருக்க பின் பார்க்கும் கண்ணாடி வழி அவளிடம் கண்ணால் காதல் பேசிய நினைவு அழையாமல் வந்தது..

எவ்வளவு நேரமோ யாரோ கண்ணாடியை தட்டினர்..நெஞ்சம் ஒரு இடியை தாங்க தயாராக இருந்தது..என்ன நடந்தாலும் அவன் வாழ வேண்டும்..மெல்ல கதவை திறந்து வெளியே வந்தான்.. அங்கே நின்றது அவனின் மாமா தான்..இவ்வளவு நேரமும் அவனின் துன்பத்தை கண்டு வேதனையில் வாடியவர்..காலையில் அவனனிந்திருந்த ஆகாய நீல நிற சட்டை இப்போது முழு சிவப்பு மையமாக இருந்தது..சோர்ந்த விழிகளில் உயிரே இல்லை..

அவனை அப்படியே அணைத்து கொண்டார் மாமா.."டேய் மாப்ள உன் பொண்டாட்டி..."எச்சிலை விழுங்கி கொண்டார்.."உன் பொண்டாட்டி நம்மள ஏமாத்தளடா அவ பொழச்சிகிட்டா.."

அதுவரை உயிரே இல்லாமல் கூடாகி நின்றவன் உயிருற்று நிமிர்ந்தான்.. அவன் கேட்டது நிஜமா.. "மாமா நீங்க என்ன சொல்றிங்க.. "

"ஆமாடா அவ பொழச்சிட்டா.. உன் வேண்டுதல் கடவுளுக்கு கேட்ருச்சு போல.. போடா போ உன் பொண்டாட்டிய பாரு போ".. பாரியால் அவர்கள் கூறியதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் வேகமாக உள்ளே ஓடினான்.. அங்கே கமலி உலகத்திலுள்ள அனைத்து கடவுளுக்கும் நன்றி கூறி கொண்டிருந்தார்.. மகனை கண்டதும் கட்டி பிடித்து"நம்ம முல்ல பொழச்சிகிட்டா டா".. அவர் குரலில் அவ்வளவு சந்தோசம்.. 

அவரை தாண்டி கொண்டு வேகமாக அந்த அறையின் உள் நுழைந்தான் பாரி.நர்ஸ் ஒருவர் அங்கே இருந்தார்..அவனிடம் ஏதும் கூறவில்லை..அவனுக்கே இம்மாதிரி நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமென தெரியுமென்பதால்..அவளை நெருங்க நெருங்க மனம் ஒன்றை அழுத்தி கூறியது..அவள் வந்து விட்டாள்..என்னவள் என்னிடமே வந்து விட்டாள் என்று..அவளின் தலைமுடியை மெல்லமாக நீவி விட மூடிய சிப்பி இமைக்குள் கருவிழிகள் உருண்டன..

"முல்லை"..

அவனுக்கும் கேட்டிருக்குமோ சந்தேகம் தான்..ஆனால் அவளுக்கு கேட்டது.வெளிச்சத்தை காண விரும்பாதது போல அவளின் இமைகள் திறந்து திறந்து மூடி கடைசியில் வெளிச்சம் பழகி கண்கள் முழுவதும் திறந்து கொண்டு கணவனை கண்டது..

இப்போதும் கண்கள் கண்ணீரை சொரிந்தது ஆனால் இது மகிழ்ச்சியின் வெளிப்பாடு..இதழ்களோ நிற்காமல் சிரித்தது..அவள் கரத்தை பற்றி இதழ் பதித்து"நீ ஜெயிச்சிட்டடி".. 

"ம்ஹும் உங்க கிட்ட சந்தோசமா தோத்து போய்ட்டேன்"...மீண்டும் அங்கே சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது.. "பாரி என்ன பேபி பொறந்துச்சு..பேபிய எப்ப பாப்பேன்". 

"ரெண்டும் உன்ன மாறியே அழகான பொண்ணுங்க..அப்புறமா பேபிஸ்ஸ பாக்கலாம் சரியா"

"பாரி வளரி எங்க..அவனுக்கு என்னாச்சு"..

"அவனுக்கு ஒன்னும் இல்லடா நல்லாத்தான் இருக்கான்.."அதை சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கியது.ஏதோ சரியில்லையென அவளுக்கு புரிந்தது..

"உணமைய சொல்லு பாரி..அவனுக்கு என்ன"..

"அவன் பொழச்சிட்டான் ஆனா இன்னும் கண்ணு முழிக்கல..டாக்டர் நாளைக்கு வர பாக்கணும்னு சொல்லிருக்காரு"..

"எனக்காக தான அவனுக்கு இப்டிலாம் நடந்துச்சு..நான் அவன பாக்கணும் பாரி "

"இப்போ எப்டிடி அதெல்லாம் வேணா"

"ப்ளீஸ் பாரி அவன் கிட்ட என்ன கூட்டிட்டு போ ப்ளீஸ்"..முல்லையின் வேதனை பாரியை பாதித்தது..மருத்துவரிடம் பேசி முல்லையை வீல் சேரில் அமர வைத்து வளரியின் அறைக்குள் அழைத்து சென்றான்..அந்த அறை முழுதும் திக் திக் என மானிட்டர் சத்தமே கேட்டது..வளரி உடலெங்கும் கட்டுங்கள் மற்றும் பிளாஸ்டர் ஒட்டி படுத்திருந்தான்..எவ்வளவு துடிப்பானவன்..முல்லையை காணும் போதே அவன் இதழ்கள் லேசாக விரியும்..அந்த மென்மையான சிரிப்பு தான் அவனிடம் அவளுக்கு பிடித்ததே..

இப்போது அது இருந்த இடம் அறியவில்லை..கிழிந்த வாழையாக கிடந்தான் அந்த ஆறடி ஆண்மகன்..எல்லாம் யாருக்காக அவளுக்காக அல்லவா.அப்படி அவள் அவனுக்கு என்ன செய்தாள்..ஏன் அவளுக்காக இவன் இதையெல்லாம் செய்தான்..அவனருகில் சென்று அவன் கரங்களை ஏந்தி கொண்டாள் முல்லை..வளரி என்று அழைத்து பார்த்தாள்..அவன் டாட்டூவை தடவி பார்த்தாள்.. கண்கள் தானாக கண்ணீரை கொட்டியது..என்றோ எப்போதோ அவன் அவளிடம் ஆசையாக கேட்டது ஒன்று அவள் நினைவிற்கு வந்தது..வளரிக்கு இசையென்றால் கொள்ளை பிரியம் அவனின் சந்தோசமோ துக்கமோ அது இசையோடு கலந்த ஒன்றாகி விடும்.. ஒரு முல்லையை ஒரு பாடல் பாட கூறினான்.. ஆனால் அவள் அவன் எவ்வளவு கெஞ்சியும் பாடவில்லை.. அது அவனுக்கு வருத்தத்தை தந்தாலும் அவளை மேலும் வற்புறுத்தவில்லை..அந்த நிகழ்வு இப்போது நினைவு வந்து நீண்டு பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியே விட்டாள்..அன்று ஆசையாக அவன் கேட்டதை இன்று கடைசி ஆசையாக பாட தொடங்கினாள். 

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயே?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா.. 

அதற்கு மேல் அவள் பாடவில்லை..ஓயாத மன உளைச்சல் அவளுக்கு..அளவுக்கு அதிகமான உதிர போக்கு..அவளை அறை மயக்க நிலைக்கு தள்ளியது.. அவளின் கண்கள் சொருக தொடங்க அவளை அழைத்து சென்று அவளின் அறையில் படுக்க வைத்தான்.. மீண்டும் அண்ணனின் அறைக்குள் வந்தான்.. அங்கே சலனமற்று கிடந்தவன் அருகே அமர்ந்து"வளரி முல்லை மேல நா வெச்சிருக்கிற காதல் தான் ரொம்ப பெருசுன்னு நெனச்சேன் ஆனா அப்டி இல்ல..தோ உன் காதல் இருக்கே என் காதலோட போட்டி போட..உன்னால தான்.. நீ அவள நெருங்க நெருங்க நா அவ மேல இருந்த காதல உணர்தேன்.. உன்னால தான் உண்மையிலயே அவ தாழ்வுணர்ச்சில இருந்து ரிலீவ் ஆனா..முன்னாடியே நீ முல்லைய லவ் பண்றத என்கிட்ட சொல்லிருந்தா நா விலகி போயிருப்பேனேடா.. பொறந்ததுல இருந்து உனக்குன்னு எதுவும் கிடைக்கல அத என்னால கொடுக்க முடியாது ஆனா நீ ஆசபட்ட பொண்ண கொடுத்துருப்பேனே.. இப்பவும் என் சுயநலத்துக்காக தான் இங்க வந்துருக்கேன்.. உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா முல்லை தாங்க மாட்டா..அவளுக்காக உயிர கொடுக்க துணிஞ்ச நீ அவளுக்காக உயிரோட எழுந்து வரணும் ப்ளீஸ் வாடா அண்ணா".. பாரி அவன் கரத்தை பிடித்து அழும் போதே வளரியிடம் அசைவு தெரிந்தது.. அவன் சிந்தை முல்லை பாடும் போதே விழித்து கொள்ள தம்பி அழவும் முழுவதும் தெளிந்து கொண்டது.. 

வளரியின் அசைவை பார்த்த பாரி அண்ணனை பார்க்க அவனோ மெல்லமாக தம்பியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.. இருவருமே அதற்கு மேல் பேசவில்லை..ஆனால் கண்களில் ஒரு சிரிப்பு வந்தது.. கமலிக்கு ஒரே ஆனந்தம்.. மகனும் மருமகளும் பிழைத்து கொண்டனர்..உயிருள்ள பொம்மை போல இரு பேத்திகள்..அனைத்தும் நல்லபடியாக முடிந்தது.. பாரி அன்புவிற்கு அழைத்து நடந்ததை கூறினான்.. அன்பு ரியோ கண்ணா மூவருக்கும் அப்போதுதான் உயிரே வந்தது...கிட்ட தட்ட நள்ளிரவில் தான் அவர்கள் பிரச்சனை முடிவுக்கு வந்தது..

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்