இஞ்சி இடையழகி 26
பாரி வந்தவுடன் வீடு பரபரப்பானது..முல்லை எழுந்து சென்று காபி கலந்து வந்தாள் கூடவே கொறிப்பதற்கும் எடுத்து வந்து பாரியின் பக்கத்தில் அமர்ந்தாள்..கமலி முல்லை பாரி அனைவரும் பேசிக்கொண்டிருக்க வளரி எதிலும் கலந்து கொள்ளவில்லை அவனையும் தங்களுடன் பேச்சில் இழுத்து கொண்டாள் முல்லை..அப்போதும் அவன் சிறு சிரிப்புடன் அமைதியாக இருந்தான்..பாரி வீட்டில் வேலை செய்யும் பெண்ணொருத்தி தன் தன் பதினைந்து வயது மகளுடன் வந்தாள்..ஊரில் நெருங்கிய சொந்தம் திடீரென இறந்து விட கை செலவுக்கு பணம் வாங்கி செல்ல வந்தாள்..கணவனை இழந்து பாரியின் வீட்டோடு மேலும் இருவீட்டில் வேலை செய்து மகளை வளர்கிறாள்..
ஆனாலும் அந்த சிறுமியின் படிப்பு செலவு முழுதும் பாரியே பார்த்து கொள்கிறான் மற்ற வீட்டை விட இந்த வீட்டில் வயிற்று பாட்டிற்காக அல்லாமல் குடும்ப உறுப்பினராக இருந்து வேலை செய்பவள் சுந்தரி..
அவளை இந்த நேரம் கண்டதும் விசாரித்த கமலி பணமெடுக்க உள்ளே சென்றார்..சுந்தரியின் மகள் கன்னிகா என்றால் கொள்ளை பிரியம் முல்லைக்கு..எப்போது முல்லையை கண்டாலும் அக்கா என்று அவளுக்காக தான் வாங்கி வந்த கடலை மிட்டாயை கொடுப்பாள்..இப்போது சில தினங்களாக அவள் வருவதே இல்லை..சுந்தரியிடம் கேட்டால் பரிட்சைக்கு படிப்பதாக கூறினாள்..
கன்னிகாவை கண்டதும் முல்லை எழுந்து சென்று பேசினாள் எப்போதும் துள்ளலுடன் பேசும் கன்னிகா முல்லையின் கேள்விகளுக்கு ம்ம் ம்ஹும் என்றே பதிலளித்தாள்..கன்னிகாவின் கண்கள் எதையோ கூற தவித்தது..உடல் மெலிந்து கருவளையம் சூழ்ந்து அந்த பிஞ்சு முகத்தில் ஏதோ ஒரு பயம்..
பேசுவது போல கன்னிகாவை வெளியே அழைத்து வந்தாள் முல்லை..அவளிடம் சுற்றி வளைக்காமல் காரணம் கேட்க முதலில் மௌனமாக இருந்த கன்னிகா அக்கா என்ற கதறலுடன் அனைதையும் கூறி முடித்தாள்..
கூட பயிலும் தோழியின் அண்ணன்..கல்லூரி மாணவன்..படிப்பதற்காக சில சமயம் தோழி வீட்டிற்கு செல்வது உண்டு..அப்படி தான் அவனை தெரியும்..காதல் கன்றாவி என அவன் பிதற்ற ஆரம்பிக்க தோழி வீட்டிற்கு செல்வது நின்றது..பள்ளி செல்லும் வழிகளில் காத்திருந்து காதல் கூறினான்..கன்னிகா தோழியிடம் கூறினாள்..தோழியோ அவள் அண்ணனை ஏற்று கொள்ளும்படி ஆலோசனை கூறினாள்..காரணம் அவளின் அப்பா..ஆண் மகவு மேல் அளவு கடந்த அன்பு அவருக்கு தோழியோ எப்போதும் வேண்டாத பிள்ளை அவருக்கு..இப்போது கன்னிகா தோழியின் அண்ணன் காதலை மறுத்தால் நிச்சயம் பிரச்சனை வருமென்று தோழி கூறினாள்..கன்னிகா அதற்கு சம்மதிக்கவில்லை..
அவனின் அத்து மீறல் அதிகரிக்க இவளின் பயம் அதிகரித்தது..இவளின் பாராமுகம் அவனுக்கு அவமானத்தை கொடுத்தது..புத்தி கோணலாக வேலை செய்ய கன்னிகாவை அவள் அறியாமல் பின் தொடர்ந்து படங்கள் எடுத்து கொண்டான்..அதனை கிராபிக்ஸ் உதவியுடன் பல ஆபாச உடல்களுடன் கன்னிகா தலையை இணைத்து கிராபிக்ஸ் என்றே தெரியாத வண்ணம் தத்ருபமாக செய்து கன்னிகாவிடம் காட்டி மிரட்டினான்..
காதலை ஏற்காவிடில் இதனை முகநூலில் பதிவிடுவதாக அவன் மிரட்ட இதை தாயிடம் கூற பயந்தவள் தோழியிடம் வழி கேட்டாள்..அவளும் அண்ணனிடம் பேசியதற்கு கன்னம் பழுக்கும் அளவு இரு அறை கிடைத்தது..வேறு வழியின்றி கன்னிகா அவன் பேச்சை கேட்க தொடங்கினாள்..அம்மாவிடம் கூறினால் படிப்பு பாதியில் நின்று விடும் என பயம்..அவனோ அவளை மனரீதியாக சித்திரவதை செய்ய தொடங்கினான்..தினமும் கைபேசி அழைப்பில் ஆயிரம் முத்தம் தர வேண்டும் இரவு முழுதும் பேச வேண்டும் பள்ளிக்கு செல்லும் போது வரும் போது குளிக்க செல்லும் போது குளித்து முடித்தவுடன் இப்படி அவனிடம் அனைத்தையும் சொல்லி கொண்டே இருக்க வேண்டும்..அவன் அழைத்து இவள் ஏற்காமல் போனால் மறுநாள் அந்த ஆபாச படம் ஏதாவது ஒன்று அவளுக்கு வந்து சேரும்..இதனால் மனரீதியாக பாதிப்படைந்தாள் கன்னிகா..
அவனின் சித்திரவதையை சகிக்க இயலாமல் அந்த மொட்டு வெம்பியது..முல்லை கன்னிகாவிற்கு ஆறுதல் கூறி அவனை பற்றிய தகவல்களை வாங்கி கொண்டு அனுப்பி வைத்தாள்..
கன்னிகா கண்ணீருடன் விடைபெற்று சென்று விட முல்லை கொடி யோசனையில் ஆழ்ந்தாள்..இரவு கண்ணாடியை கதற விடாமல் உறங்க மாட்டாள் முல்லை..தன் மீட்டிட வயிறை பார்த்து ரசித்து கொண்டிருப்பாள்..பாரி வந்தவுடன் வாய் ஓயாமல் எதையாவது பேசுவாள் அதிலும் இப்போது வளறியை பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும் வளரி வெளியே சென்று திரும்பும் ஒவ்வொரு வேலையும் அவளுக்காக ஏதாவது வாங்கி வருவான் நல்ல புத்தகங்கள் வண்ண வண்ண மலர்கள் அவளுக்கு பிடித்த இனிப்பு புளிப்பு வகைகள் சின்ன சின்ன பரிசுகள் இப்படி ஏதாவது ஒன்று கண்டிப்பாக வரும்..
நண்பன் என்ற ரீதியுடன் அவனை பார்க்கும் அவளுக்கு ஏதும் தவறாக இல்லை..அவளுக்கு அவனும் ரியோவும் வேறாக தெரியவில்லை.. சொல்ல போனால் ரியோ இப்போதெல்லாம் அவள் கூட இல்லையே என்ற ஏக்கம் வளரியால் மறைந்தது..ஆனால் கமலிக்கு அறவே இது பிடிக்கவில்லை..வளரியை கண்டிக்கவும் முடியவில்லை பாரியை கழுவி ஊற்றாமல் இருக்கவும் இயலவில்லை..பாரி ஏதும் பேசாமல் முல்லை கூறும் கதைகளையும் அவள் எடுத்து வந்து காட்டும் பரிசுகளையும் பார்த்து கொண்டிருப்பான்..பெரும்பாலும் அவள் பேச அவன் ம்ம் சொல்வது மட்டுமே நடக்கும்...ஆனால் இன்று அவள் மெத்தையில் சாய்வாக படுத்திருந்தாள்..கண்கள் திறந்து கனவு காண்கிறாள் போல..பாரி உள்ளே வந்ததை கூட உணராமல் இருக்கிறாள்..
அவளருகில் நெருங்கி அமர்ந்து"ஓய் குலாப் ஜாமுன் என்ன யோசிக்குற..வாய் ரொம்ப நேரமா காலியா இருக்கே என்ன சாப்பிடலாம்னு யோசிக்குறியா"..
"ப்ச் என்ன ஏதாச்சும் சொல்லலனா உங்களுக்கு தூக்கம் வராதா.."
"சரி சொல்லு என்னாச்சு ஏன் ஒருமாறி இருக்க..உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா"..
"அதெல்லாம் இல்ல..பாரி உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் மொத கன்னிகா வந்தால"...முல்லை கன்னிகா கூறிய அனைத்தையும் பாரியிடம் ஒப்புவித்தாள்..கேட்டு கொண்டிருந்த பாரியின் உடல் விறைத்தது அந்த கயவனை அடித்து உடம்பில் உள்ள ஒவ்வொரு நரம்புகளையும் பிய்த்து எடுக்க சினம் தூண்டியது.கன்னிகா சின்ன பெண் விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்பதே அவளின் கனவு லட்சியம் எல்லாம்..அப்படிபட்ட உயர் கொள்கை கொண்ட பெண்ணை கொச்சைப்படுத்தி காயப்படுத்துகிறான் கயவன் ஒருவன்..ஆனால் கோவத்தை அடக்கி கொண்டான்..கண்களில் மிரட்சியுடன் மிரண்டு விழித்து கொண்டிருந்தாள் முல்லை.
இதுவரை இவ்வளவு சினம் கொண்ட பாரி வேந்தனை அவள் கண்டதில்லை..கோபத்தை கூட அளவாக அவளிடம் காட்டிருக்கிறான் அந்த காதலன்.."பாரி உனக்கு இவ்ளோ கோபம் வருமா"..
"சீ சீ இல்லடா அது அநியாயத்த கேட்டு ரத்தம் சூடாயி நரம்பு எல்லாம் முண்டியடிச்சு பொடச்சி வெளிய வர பாத்துச்சு மாமா விடல தட்டி ஆப் பண்ணிட்டேன்"..
"நா பயப்படுவேன்னு பேச்ச மாத்துறியா"..
"யாரு நீ பயப்படுற மூஞ்சி..என்ன ஆரம்பத்துல இருந்து இப்ப வரை எவ்ளோ கொடும படுத்துற"
"யாரு நா நா உன்ன கொடும படுத்துறேன்..அப்போ போ எவ உன்ன தங்க தட்டுல வெச்சு பாத்துக்குறளோ அவ கிட்ட போ"..
"நா ஒக்கார்ற அளவு தட்டுக்கு அவ எங்கடி போவா பாவம்..'பாரியை முறைத்து கொண்டு இருந்தவளை குண்டு கன்னங்களை கிள்ளி கொஞ்சி விட்டு கன்னிகா பிரச்சனையை தான் பார்த்து கொள்வதாக கூறி உறங்க செய்தான்..பின் கண்ணாவிற்கு தொடர்பு கொண்டு அந்த கயவன் பற்றிய அணைத்து தகவலையும் கூறி விட்டு அவனும் உறங்கி போனான்..அன்றிலிருந்து மூன்றாம் நாள் பழைய துள்ளலுடன் அவள் முன் வந்து நின்றாள் கன்னிகா.."முல்லைக்கா வாய தொற"முல்லையின் வாயில் டைரி மில்க் சாக்லேட்டை திணித்து விட்டு அவளின் இரு கன்னத்திலும் இதழ் பதித்தாள்..முல்லைக்கு ஒன்றும் விளங்கவில்லை.."ஹேய் என்னடி பண்ற..அன்னைக்கு இடி விழுந்த மாறி மூஞ்ச வெச்சிருந்த இப்போ இந்த குதி குதிக்குற ஒருவேளை அந்த பக்கி செத்து கித்து போய்டானா"..
"அச்சோ உனக்கு விஷயமே தெரியாதா அவன யாரோ அடிச்சு கைய கால ஒடச்சி முடிய வேற மொட்ட அடிச்சு விட்டிருக்காங்க..அவன் உடம்புல ஒடையதா பார்ட்சே இல்ல..எல்லாத்தயும் நொறுக்கிடாங்க..அவன் கிட்ட இருந்து பணம் ஃபோன் மோதிரம் எல்லாத்தயும் உருவிட்டாங்களாம்..அவன் பாத்ரூம் போக கூட பெட் பேட் வைக்குற நிலையில இருக்கானாம்..அவன் தங்கச்சி சொன்னா..இதோட அவன் தொல்லயே இருக்காது..திருட வந்தவங்க அடிச்சு போட்டு திருடிட்டு போயிருப்பாங்க ஏன் மொட்ட அடிக்கணும் சோ இது யாரு வேல தெரியுமா"..
"யாரு வேல"..
"உங்க புருஷன் வேல அக்கா..நீங்க கண்டிப்பா பாரி அண்ணா கிட்ட சொல்லிருப்பிங்க அவரு அவனுக்கு நலுங்கு வெச்சிட்டாரு"...கன்னிகா சந்தோசமாக சொல்லி சிரித்து கொண்டிருந்தாள் இந்த சிரிப்பு என்றும் அவள் முகத்தில் நிலைக்க வேண்டுமென மனமார முல்லை வேண்டிக்கொண்டாள் ஆனால் அந்த கயவனின் தந்தை பெரிய ஆளாமே..அவனால் பாரிக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என உள்ளுக்குள் ஒரு குளிர் பரவியது..கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு மனதை அமைதி படுத்தினாள்..இருந்தாலும் அவள் பயம் புரிந்து கேள்வி மேல் கேள்வி கேட்ட வளரியிடம் அனைத்தையும் சொன்னாள்..அவன் அவளது பயம் தேவையற்றது என கூறி பேச்சை மாற்றினான்..
மேலும் சில நாட்கள் கழிய ஒருநாள் காலை பாரி மருத்துவமனைக்கு விரைவாக சென்றவுடன் முல்லை மெதுவாக கீழிறங்கி வந்தாள்..கமலி தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்..அவரின் பால்ய சினேகிதி ஒருவர் அமெரிக்காவில் வசிக்கிறார் திருமணம் முடிந்து குடும்பத்துடன் அங்கே செட்டில் ஆனவர் உறவினர் திருமணத்திற்காக இங்கே வருகிறார் இந்த முறை அவர் மட்டும் தனியே தோழியை தன் வீட்டிலேயே தங்க கூறிவிட்டார் கமலி..சிறுவயதிலேயே குடும்பத்துடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி நகரில் படித்து திருமணம் செய்து அமெரிக்காவில் குடிபுகுந்த தோழி கமலின் நட்பை என்றும் மறக்காமல் கடிதம் போடுவார் அதுவே நாளடைவில் தொலைபேசுயில் தொடர இன்னும் அவர்கள் நட்பு இனிமையாக உள்ளது..அவருக்காக பார்த்து பார்த்து சமைத்து கொண்டிருந்தார் கமலி..வளரி உணவு மேஜையில் அமர்ந்து காலை உணவு உண்டு கொண்டிருந்தான்..
முல்லை வருவதை கண்ட கமலி அவளுக்கு உணவு எடுத்து வைக்க தொடங்கினர் இல்லையென்றால் சரியாக சாப்பிடாமல் எழுந்து விடுவாள்.."அத்த நா கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்"..
"எதுக்குடா கண்ணு"
"நாளைக்கு பாரியோட பர்த்டே அதுக்கு பர்சஸ் பண்ண வேண்டாமா அதுக்கு தான்"..
"தனியாவா போற..வேண்டா கண்ணு சாயங்காலமா வெண்பாவ வர சொல்றேன் அவ கூட போ..இல்ல உன் அண்ணி இல்ல சக்திய கூப்டு அவங்க கூட போடா"..முல்லைக்கு இன்னும் மாதவிடாய் வந்து கொண்டு தான் இருந்தது..சில பெண்களில் உடலமைப்பு அப்படி..இன்று அவளுக்கு மாதவிடாய் நேரம்..ஓரிரு நாட்கள் மட்டுமே வரும் ஆனாலும் இந்த நேரத்தில் முல்லை மிகவும் சோர்ந்து போவாள்..கமலிக்கு இது தெரிந்து தான் அவளை தனியே விட மனமில்லாமல் இருந்தார்.
"அத்த இன்னைக்கு சக்திக்கு செக்காப்..அண்ணி தான் கூட போறாங்க..அவங்கள ஏன் கஷ்டபடுத்தனும்"..
"அப்போ சரி இரு நானும் கூட வரேன்"...
"ப்ச் அத்த உங்க ஃப்ரன்ட்டு சுஜாதா ஆண்ட்டி வராங்கனு காலைல இருந்து பம்பரமா சமைச்சிட்டு இருக்கீங்க நீங்க எப்டி வருவீங்க எனக்கு தனியா போக தெரியாதா..ஏன் இப்டி பயப்படுறீங்க"..
"அதில்ல டா கண்ணு"
"சரி நா தனியா போல என்கூட வளரிய கூட்டிட்டு போறேன்..வளரி என்கூட வரியா ஷாப்பிங் போனும்"..வளரி உணவை வாயில் வைத்து கொண்டு கமலியை பார்க்க அந்த பார்வையில் இருந்தது அடக்கப்பட்ட சிரிப்பு..கமலி தடுப்பதற்குல் போகலாமே என எழுந்து விட்டான் வளரி..முல்லை கமலியிடம் சொல்லி கொண்டு கிளம்ப அவள் முன்னே செல்ல அவளுக்கு பக்கத்தில் சென்ற வளரி ஓர கண்ணால் கமலியை பார்த்து கொண்டே முல்லை தோளில் கை போடுவதை போல கொண்டு சென்று அப்படி செய்யாமல் தலைமுடியை கோதி செல்ல கமலிக்கு இருதயம் நின்று துடித்தது..பாரியை கரித்து கொட்டி கொண்டே வேலையை பார்த்தார்..
Comments
Post a Comment