இஞ்சி இடையழகி 3
முல்லை வீட்டில் மறுவிருந்துக்கு சென்ற பாரி இயல்பாக அந்த சூழலில் பொருந்தி கொள்ள முல்லை சொந்த வீட்டில் அன்னியமாக உணர்ந்தாள்.. ஒருபக்கம் அண்ணனின் பாச பார்வை ஒருபக்கம் அண்ணியின் அக்கறை பார்வை ஒரு பக்கம் ரியோவின் சந்தேக பார்வை இவை அனைத்தையும் விட அவளை சீண்டும் பார்வையுடன் அன்பிடம் கதையளந்து கொண்டிருந்த கணவனை காணும் போதே அடுத்து எந்த குட்டையை கிளறுவானோ என்ற அச்சமே மேலோங்கியது.. அவன் கண்முன் நிற்காமல் அண்ணியுடன் சேர்ந்து சமையலை கவனிக்க சென்றாள்.. அங்கும்"முல்ல ஏண்டி பேயறைஞ்ச மாறி இருக்க..நானும் வந்ததுல இருந்தே பாக்குறேன்"
"இல்ல அண்ணி நா எப்பவும் போலத்தான் இருக்கேன்"
"யாரு நீயு..உன்ன இன்னைக்கு நேத்தா பாக்குறேன்.. இந்நேரம் வந்த நேரத்துக்கு எதயாவது வாயில போட்ருக்க மாட்ட..மொத உனக்கு புடிக்குமேனு லட்டு செஞ்சு எடுத்து வெச்சா தொட்டு கூட பாக்களையே உன் புருஷன் தான் எல்லா லட்டயும் சாப்டாரு.. என்னடி ஆச்சு உங்களுக்குள்ள எல்லாம் ஓகே தானே"
"ஐயோ அண்ணி எல்லாம் ஓகே தான் காலையில இருந்தே வயிறு சரியில்ல அதான் ஒன்னும் சாப்பிடல.."
"ஏண்டி மொதயே சொல்லி தொலைய கூடாது.இந்த ஓமத்தண்ணி குடி சூடா இருந்தா சரியாயிரும்"சொன்ன பொய்க்காக ஓமத்தண்ணீரை பருகியவள் அண்ணியுடன் பேசிக்கொண்டே சமையலை கவனித்தாள்...
"மாப்ள உங்களுக்கே தெரியும் முல்லைக்கு எல்லாமே நான்தான்..அவ சின்ன வயசுல இருந்தே எதுக்கும் அடம் புடிக்க மாட்ட..தகுதிக்கு மீறியும் ஆசப்பட மாட்ட.. ஆனா அவ அடம்புடிச்சு எங்க தகுதிக்கு மீறின விஷயம் நீங்கதான்.. உங்கள லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைக்கலனா செத்துருவேன்னு ஒத்த காலுல நின்னா.. அவ ஏதாச்சும் தப்பு பண்ணிட்டானா எடுத்து சொல்லுங்க..திட்டாதிங்க அவ அழுதா எங்களால தாங்க முடியாது.."
"மச்சான் இத நீங்க சொல்லனுமா ரெண்டு நாள் முன்னாடி வர அவ உங்க தங்கச்சி நேத்து இருந்து என் பொண்டாட்டி..என் பொண்டாட்டி எப்பவுமே சந்தோஷமா இருப்பா".. சமையல் ஆகி அவர்களை உணவருந்த அழைக்க வந்த முல்லையை பார்த்து கொண்டே அவன் அழுத்தி கூற உதடு வேறு சொல்ல கண்களோ வேறு சொல்லியது அது அவள் மேல் அவனுக்கிருந்த கோவத்தை..
விருந்து தடபுடலாக நடந்தது..அன்பும் கிரேஸும் ஆசையாக பரிமாற உணவை ஒரு பிடி பிடித்தான் பாரி..முல்லைக்கு தான் உணவு தொண்டையில் இறங்க மறுத்தது..வந்ததில் இருந்து ரியோ அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவளே வழிய சென்று பேசினாலும் அவளுடனான பேச்சை தவிர்த்தான்..
உயிர் நண்பனை தன்னிடமிருந்து பிரித்து விட்டு அந்த குற்ற உணர்வே இல்லாமல் உணவை உள்ளே தள்ளி கொண்டிருந்தவனை பார்க்கையில் வெறியேறியது அவளுக்கு.. இந்த அழகில் அவன் அவளுக்கு ஊட்ட முயல அவளோ அவனை முறைக்க இவர்களை மூன்று ஜோடி கண்கள் கவனிப்பதை உணர்ந்தவள் உணவை வாங்கி கொண்டாள்..
விருந்து நல்லபடியாக முடிய அங்கேயே இரண்டு நாள் தங்கி செல்லுமாறு வற்புறுத்திய அண்ணன் அண்ணியிடம் பாரி உளறும் முன்னே அத்தை தனியாக இருப்பார்கள் என்றும் பாரிக்கு வேலையென்றும் பொய் உரைத்து அங்கிருந்து கிளம்பி விட்டாள்..தூக்கி வளர்த்த அண்ணனின் முன் போலி வேடம் தரிக்க தாரகையின் உள்ளம் உய்யவில்லை..
வீட்டிற்கு வந்தவர்களை தங்காமல் வந்த நோக்கம் கேட்க கமளியிடம் தாங்கள் தனியாக எப்படி இருப்பிர்கள் அதான் என கூறியவள் தனதறைக்குள் புகுந்து கொண்டாள்..அறைக்குள் புகுந்த வேகத்தில் பாத்ரூம் உள்ளே சென்றவள் அறிந்து கொண்டாள் மாதவிடாய் வந்து விட்டது என..இந்த பாரி அடித்த கூத்தினால் இதனை கூட மறந்து விட்டாள்..உடல் சோர்வை விட மனசோர்வு பெரிதாக இருக்க பேசாமல் வந்து படுத்து கொண்டாள்..
அவளின் நினைவுகள் மட்டும் கண் மூடாமல் பழையதை கிளறியது..பள்ளியில் பாரியின் தொல்லை ஒருவழியாக தீர்ந்தது..ப்ளஸ் டூ தேர்வு முடிந்து அவன் கல்லூரியில் சேர்ந்தான்..இப்போது முன் போல அவனை பார்ப்பது இல்லை..முல்லையும் ரியோவும் நிம்மதியாக உணர்ந்தனர்.. அன்று இரவு பதினோரு மணியிருக்கும்..ஏதோ உணர்வு தோன்ற பாத்ரூம் சென்றாள் முல்லை.. சிறுநீர் கழிக்கும் போது ரத்த திட்டுகள் வெளியேற பயந்தே விட்டாள்..
"அண்ணா அண்ணா"அவள் போட்ட அலறலில் அரை உறக்கத்தில் இருந்த அன்பு பதறியடித்து ஓடி வந்தான்"ஹேய் முல்ல என்னடா ஏன் கத்துற"...அவள் ரத்த திட்டுகளை காட்டி"பாத்ரூம் போற இடத்துல இருந்து ரத்தமா வருதுண்ணா"...அன்புக்கு அனைத்தும் புரிந்தது.. அவன் செல்ல தங்கை பூப்பெய்து விட்டாள்.அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்"ஒன்னும் பயப்படாத செல்லம்..நீங்க பெரிய பொண்ணு ஆயிடிங்க..அதான் இப்டி..நீ இங்க உக்காரு டா..அண்ணா இப்ப வரேன்..."..வெளியே வந்தவன் சுடுநீர் போட்டு அதை விழாவி விட்டு"இப்ப நீ போய் தலைக்கு குளிடா..குளிச்சு முடிச்சு அண்ணாவ கூப்டு"...இத்தனை மணிக்கு எதுக்கு அன்பு குளிக்க சொல்கிறான் என புரியாவிடினும் அவன் சொல்படி செய்த்தவள் குளித்து முடித்து அவனை அழைத்தாள்..
எப்போதும் பெண் பூப்படைந்தால் அவளின் தாய் தான் முதல் தண்ணீர் தலைக்கு ஊற்றுவார்கள்..ஆனால் அன்பு அந்த இரவில் எந்த உறவினரை அழைப்பான் அர்த்த ராத்திரியில் கிரேஸை அழைப்பதும் அவனுக்கு சரியாக படவில்லை எனவே தங்கைக்கு தாயாக மாறி அவனே தலைக்கு தண்ணீர் ஊற்றி முல்லைக்கு பத்து வயதாகும் போதிலிருந்தே முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்து கொண்டிருக்கும் விஷ்பரை எடுத்து அதன் பின் அட்டையை பார்த்து அதை உபயோகிக்கும் வழிமுறைகளை கூறிவிட்டு சென்றான்..
.அவளும் அவன் சொல்படி செய்து வெளியே வர சூடாக பால் கலக்கி பருக கொடுத்து கலக்கத்தில் அலைபாய்ந்து விழியிரண்டை நோக்கி"பாப்பா இப்ப நீ பெரிய பொண்ணா ஆயிட்ட..இனிமே முன்ன விட கவனமா இருக்கனும்..எப்பவும் சொல்ற மாறி பாய்ஸ் யாரையும் தொட்டு பேச விடாத..ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டென் பண்ணு..ஒருத்தன் பாக்குற பார்வைய வெச்சே அவன் எதுக்கு எப்படி பாக்குறானு தெரிஞ்சிக்கோ..இங்க வெறி நாயிங்க அதிகம் அண்ணா எப்பவும் உன் கூட இருக்க முடியாதுல அதனால அடுத்த வாரத்துல இருந்து நீ கராத்தே க்ளாஸ் போனும் உன்ன காப்பாத்திக்க உனக்கு தெரியணும்..நீ தைரியமான பொண்ணா இருக்கனும்..."...இப்படி தந்தையாக அறிவுரை கூறினான்..
அண்ணன் கூறிய அனைத்தும் பசுமரத்தாணி போல அவள் பிஞ்சு இதயத்தில் பதிந்தது..மறுநாள் பெரியம்மா அத்தைக்கு செய்தி சொன்னவன் கிரேசிடமும் கூறினான்.. பின் பெரியவர்கள் வந்து அவளை பார்த்து சென்றாலும் பெரும்பாலும் கிரேஸ் அவள் கூடவே இருந்து பார்த்து கொண்டாள்..
அண்ணனின் நினைவில் கண்களில் கண்ணீர் கோடுகள் பிரதிபலிக்க உறங்கி போனவளை சத்தமில்லாமல் அறைக்குள் வந்தவன் விழிகள் அளவெடுத்தது..அவள் முகத்தில் தெரிந்த சோர்வும் வயிறை அழுத்த பற்றிருந்த கரங்களும் கூறியது அவளின் நிலையை ஒரு மருத்துவனுக்கு இது தெரியாதா..மெல்ல அவளருகில் அமர்ந்து கூந்தலை கோதி விட்டான்..
அன்று கொட்டும் மழையில் காலேஜ் முடிந்து கண்ணனை வீட்டில் விட்டவன் தன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான்.. அப்போது பெரிய மரத்தடியில் நனைந்த கோழிக்குஞ்சு போல மிரண்டு நின்று கொண்டிருந்தாள் முல்லை.. அவளை பார்த்ததும் அவனின் கைகள் தானாக பிரேக் போட வண்டியை நிறுத்தியவன் அவளருகில் சென்றான்..
தலையை கீழே குனிந்து புத்தகத்தை மாரோடு அழுத்தி நின்றவளை பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டன.இன்று அவளை கண்டதும் ஓய் இஞ்சி இடுப்பழகி என்றதும் சடாரென்று தலை நிமிர்த்தி பார்த்தவள் கண்கள் ஐயோ என்ற உணர்வை வெளிப்படுத்தியது..அப்போது தான் அவனும் கவனித்தான்..அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தை..அங்கொன்றும் இங்கொன்றுமாக பருக்கள் நட்சத்திரமாய் மின்ன கொழு கொழு கன்னங்கள் வெளிறி போய் ஒவ்வொரு இடிக்கும் எங்கே அந்த இடி மரத்தில் தான் விழுந்து விட்டதோ என்ற பயத்தில் மரத்தை அண்ணார்ந்து பார்க்கும் அடுக்குகள் கொண்ட கழுத்து அதற்கு கீழ் அவன் கண்கள் செல்ல தடை போட்டது..
"ஓய் என்ன நீ மட்டும் நிக்குற உன்னோட வாலு எங்க".. அவனை முறைத்தவள் பதிலுரைக்காமல் இருக்க "உன்னத்தான் திமிறா"
"ப்ச் அவனுக்கு காய்ச்ச.. ஸ்கூல் வரல"..
"நல்லதா போச்சு.. ஆமா எரும கணக்கா வளந்துருகியே அறிவில்ல மழை பேயும் போது யாராச்சும் மரத்துக்கு கீழே நிப்பாங்களா"... அவளுக்கு மட்டும் என்ன ஆசையா..அன்று அவளுக்கு மாதவிடாய் முதல் நாள்..பெரும்பாலும் பள்ளி செல்லும் மாணவிகள் எதிர்நோக்கும் பிரச்சனை மாதவிடாய் வரும் தேதியே..
அந்த நாள் நெருங்க நெருங்க எங்கே ஆடையில் பட்டு விடுமோ என்ற பயமே அவர்களை அசாதாரண நிலைக்கு கொண்டு செல்லும்.. முல்லையின் நிலையும் அதுவோ.. நேற்றே வரவேண்டியது இன்னும் வரவில்லையே என்ற பதற்றம் அவளை தவிப்புக்கு தள்ள சரியாக பள்ளி முடியும் நேரம் அவள் பயந்த மாதிரி ஆடையில் பட்டு விட்டது..
அவளின் பெண் தோழிகளும் அவளை மறைத்த மாதிரி பாதி வழி வரும் போது தான் மழை பிடித்து கொண்டது.. அவரவர் ஒரு காரணம் கூறி வீட்டிற்கு ஓடி விட இப்படியே எப்படி செல்வது இருபக்கம் மாட்டும் பேக்காக இருந்தாலும் கீழிறக்கி செல்லலாம்..அவள் பேக் ஒரு பக்கம் மாட்டுவது..ஒரு பெரிய மரத்தின் கீழே நின்றாள்.. தெரிந்த ஆண்ட்டி யாராவது வந்தால் அவர்களுடன் செல்ல எண்ண அந்த நேரம் பார்த்து பாரி வர வலியும் எரிச்சலும் ஒன்று சேர அவனை பார்த்தாள்..
அவன் கேட்க்கும் கேள்விக்கு எப்படி சொல்லுவாள்..பதில் கூறாமல் முகம் பார்த்து நின்றவளை காண அவனுக்கு ஏதோ விளங்கியது.."உனக்கு இன்னைக்கு பிரியேட்ஸ்ஸா"... இதை அவள் எதிர்பார்க்கவில்லை..
"ஷாக் ஆகாத என் அம்மாவும் பொண்ணு தான்.. டிரஸ்ல பட்ருச்சா.."அவள் தலையாட்ட "சரி மழை பேயும் போது மரத்தடியில் நிக்க கூடாது வா நா உன்ன வீட்ல விடுறேன்"..
சாத்தன் வேதம் ஓதுகிறது நம்பலாமா வேண்டாமா என்ற யோசனை பூக்க அவனோ வண்டியை ஸ்டார்ட் செய்து அவளை பார்த்தான்..வீட்டிற்கு போவதே சிறப்பு என தோன்ற பைக்கில் ஏறினாள்.. அவளை பத்திரமாக வீட்டில் விட்டவன்"ஹேய் குண்டு இனிமே மழை பெய்ஞ்சா வேற எங்கயாவது ஒதுங்கி நில்லு மரத்துக்கீழ நின்னு இடி விழுந்து போயிற போற"...அவனுக்கு பெரிய நன்றியை கூறியவள் வீடிருக்குள் ஓட அன்றுதான் முல்லைக்கொடி பாரியின் இதயத்தில் ஒட்டி கொண்டாள்..மிரண்டு விழிக்கும் வளர்ந்த குழந்தை முகம் அவனை ஏதோ செய்த்தது... அது காதல் என அவன் அறிந்த அன்றே அவன் காதல் கருகி போனது அதற்கு காரணம் சுகமாக துயில் கொள்ளும் முல்லைக்கொடி பாரிவேந்தேன்..
"ஏண்டி அன்னைக்கு அப்டி செஞ்ச..உன்ன எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா உங்கிட்ட சண்ட போட்டாலும் அது எல்லாம் உன் மேல இருக்குற லவ்வால தான்..அந்த லவ்வ நீயே நெருப்பு வச்சு பொசுக்கிட்ட..கடைசியா உன்ன பழிவாங்க என் தங்கச்சி காதல காரணம் காட்ட வெச்சிடியே பாவி..."..உள்ளம் கதறுவது விரல்களுக்கு விளங்கவில்லை அது பாட்டில் கூந்தலை கோதி கொண்டிருக்க அவளை கண்களால் சிறை செய்தான்..
அவள் குண்டு தான்..இடை வரை தாண்டிய சுருட்டை முடி..மஞ்சள் மேனி.. அந்த குண்டு விழிகள் சிறு கூறிய மூக்கு பிடித்து கிள்ள கெஞ்சும் கன்னங்கள் சிறிய உதடு கோடுகள் இறங்கும் கழுத்து பரந்த தோல் பட்டைகள் மஞ்சமென நெஞ்சம் அடுக்குகள் கொண்ட பெரிய இடை பஞ்சை விட மென்மையான தொடைகள் சிவந்த பாதங்கள் இப்படி அவளை கண்களால் ரசித்து காதலித்து கொண்டிருந்தான்
கோவத்திலும்..
Acho
ReplyDeleteYen ippadi