இஞ்சி இடையழகி 22


இதோ கண்ணா வெண்பா திருமணம் முடிந்து ஒருவரமாகி விட்டது..பாரி முல்லையை சமாளிப்பதே தலையாய கடமையாக கொண்டுள்ளான்..கண்ணா வெண்பா இடையே அழகிய நட்பு துளிர்விட்டு கொண்டு இருந்தது..ரியோ சக்தியை நேரில் சந்திக்க சங்கட பட்டு கொண்டு அவளிடம் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தான்..கொஞ்சமாவது நிம்மதி இருக்க அதையும் கெடுக்கும் விதமாக ஒன்று நடந்தது..

முல்லை காலையில் குளித்து கொண்டிருந்தாள்.. பாரி கமலியுடன் அரட்டை அடித்தபடி சாப்பிட்டு கொண்டிருந்தான்..அப்போது அம்மா மகன் இருவரும் எதிர்பாராத வரவாக வந்து சேர்ந்தான் வளரி வேந்தன்..அவனை திடுதிப்பென்று பார்த்ததால் இருவருக்கும் ஒரு சேர புரையேற ஒரு சில வினாடி உறைந்து போய் நின்றனர்.. இவன் எதற்கு இங்கே வந்தான் இவன் செய்ததது போதாதா முல்லைக்கு விஷயம் தெரிந்தால் என்ன செய்வாளோ என பாரியும் பிறந்ததில் இருந்தே பிரிந்திருந்த மகன் அவன் தவறு செய்திருந்தாலும் ஒரு மனம் அவன் வரவை கொண்டாடியது மறு மனம் பாரிக்கு அவன் செய்த துரோகத்தை எண்ணி கலங்கியது..

வளரி பேசும் முன்னே"நீ எதுக்கு இங்க வந்த.. நீ செஞ்சது பாத்தாதா.. இன்னும் புதுசா ஏதாச்சும் செய்யலாம்னு செய்ஞ்சு எங்க நிம்மதிய போட்டு தள்ளிரலாம்னு வந்தியா.."... 

"பாரி அப்டி இல்லடா.. நா சொல்றத கொஞ்சம் கேளேன்.."

"ஒரு ஆணியும் புடுங்க வேணா நீ போயி தொலைஞ்சா சரி"... 

"நா போறேன் பாரி..உன்னயும் அம்மாவயும் பாக்க தான் நா வந்தேன் பாத்துட்டேன்.. என்ன மன்னிக்க மாட்டேன்னு தெரியும் இருந்தாலும் சாரிடா,... ".. 

"நீயும் உன் சாரியும்.. ப்ளீஸ் அப்டியே போயிரு திரும்ப எங்க முன்னாடி வந்துராத".. 

"டேய் பாரி என்னாடா இது அவன் எதுக்கு வந்தான்னு கூட கேக்காம".. 

"எதுக்கு நம்ம குடிய கெடுக்க வந்துருப்பான்,... "

"இல்ல பாரி நா வந்தது முல்லைக்காக..ஆமா டா.. என்னால அவள மறக்கவே முடிலடா.. இத்தன வருசத்துல எத்தனயோ பொண்ணுங்கள பாத்துட்டேன் ஆனா என் மனசு அவள தான் தேடுது.. அதான் அவள பாத்து அன்னைக்கு நடந்துக்கும் மன்னிப்பு கேட்டு அவள கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன்"... 

"டேய் என்கிட்ட அடிப்பட்டு சாகரத்துக்குள்ள போயிரு..நீ அப்ப செஞ்சதுக்கே உன்ன வெட்டி போட்ருக்கனும் சொல்லாம கொள்ளாம ஓடிட்ட.. நல்லா கேட்டுக்கோ நீ தேடி வந்த முல்லை இப்ப என் பொண்டாட்டி..அவ நீ தப்பா நடக்க ட்ரை பண்ண பழைய சின்ன பொண்ணு இல்லை.. இப்ப அவ மிசஸ் முல்லைக்கொடி பாரி வேந்தன்..மிஸ்டர் வளரி ஓப்ஸ் சொர்ரி மிஸ்டர் விஷான் நீங்க உங்க ஊர பாத்துட்டு கெளம்புங்க..என் பொண்டாட்டிய டிஸ்டர்ப் பண்ணீங்க உயிரோட ஊரு போயி சேர மாட்ட"... 

வளரி இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை..இத்தனை ஆண்டுகளில் அவன் எவ்வளோ சாதித்து இருந்தான்..அவன் வளர்ப்பு தந்தையின் பிஸ்னசை அவன் கையிலெடுத்து அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறான்..எத்தனையோ பெண்களை கடந்து வாழ்ந்து வந்தபோதிலும் அவன் மனதில் ஆழ பதிந்தது முல்லையே..அவளை மறந்திட முடியாமல் தன் மனம் புரிந்து அவளிடம் உண்மையை கூறி மணக்க வேண்ட நினைத்தவனிடம் அவள் அவனின் தம்பியின் மனைவி என்றால் எப்படி... 

வளரியின் நிலையை காண கமலியின் இதயம் வலித்தது.. இருந்தாலும் கருவுற்ற மருமகளும் அவளை சமாளிக்க பாடுபடும் இளைய மகனின் வாழ்க்கையும் கண் முன் தெரிய சிலையாக நின்றார்..பாரி தன் அறையை நிமிர்ந்து பார்த்து வளரியிடம் வாசலை நோக்கி கை காட்டினான்...எந்திரத்தில் கட்டுப்பட்டதை போல வளரி அடிபட்ட உணர்வுடன் திரும்ப அடுத்த நொடி அவன் பார்வை அந்த வீட்டை சுற்றி வட்டமடித்தது..முல்லையை தேடுகிறான் என புரிந்ததும் பாரி அடக்கப்பட்ட கோபத்துடன் கமலியை முறைத்தான்.. கமலி இருகரம் குவித்து வளரியிடன் வேண்டினார்.. "தயவு செஞ்சு போயிரு பா..இங்க இனிமே வராத.. உன் தம்பி அப்பாவாக போறான் அவன் புள்ள நல்லபடியா பொறக்கணும்னா நீ இந்த பக்கமே வந்துராத போயிரு வளரி போயிரு".. முகத்தை மூடி கொண்டு கமலி அழ வளரி இறுகிய முகத்துடன் அங்கிருந்து சென்று விட்டான்.. 

அவன் சென்றதும் அவசரமாக மாடிக்கு ஓடினான் பாரி..நல்லவேளையாக முல்லை இன்னும் குளித்து கொண்டிருந்தாள்..பெருமூச்சுடன் அப்படியே அமர்ந்து விட்டான்..குளித்து முடித்து வெளியே வந்த முல்லை அயர்ந்த தோற்றத்துடன் இருந்த பாரியை கண்டாள்.. அவனின் தோற்றம் மனதை பிசைய அவனருகே சென்று"என்னாச்சு பாரி".. அவள் கேட்டது தான் தாமதம் அவள் இடையை சுற்றி கட்டி கொண்டு பேசாமல் இருந்தவனை மேலும் கேள்வி கேட்க்காமல் முடியை கோதி விட்டாள்..கண்டிப்பாக வளரியால் பிரச்சனை வருமென நம்பினான் பாரி..கமலிக்கும் பயம் நெஞ்சை அடைத்தது..சிறிது நேரமே கடந்திருக்கும்..கண்ணாவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது..

அது வளரிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர பிரிவில் உயிருக்கு போறாடி கொண்டிருக்கிறான் என்பதே..அடித்து பிடித்து பாரி யாரிடமும் கூறாமல் அங்கே செல்ல காவல் உடையில் நண்பனை நோக்கி ஓடி வந்தான் கண்ணா.."மச்சான் நா சிக்னல்ல நின்னுட்டு இருந்தேன்டா..அப்போதான் அச்சிடேன்ட் ஆச்சு..யாரோன்னு போயி பாத்தா இவன்டா..நான் உடனே நீனு நெனச்சு பயந்துட்டேன் மச்சான்..அப்ரோ அவனை கார்ல ஹாஸ்பிடல் கொண்டு வரும்போது அவன் பர்ஸ வெளிய எடுத்து பாத்தேன்..அதுல விஷானு அவன் ஐடென்தி கார்டு இருந்தது.அப்போ தான் தெரிஞ்சது இவன் வளரின்னு அதான் டா உடனே உனக்கு கோல் பண்ணேன்..இவன் எதுக்குடா வந்தான்"..பாரி நடந்ததை கூறி முடிக்க கண்ணாவும் கலங்கி நின்றான்..சில மணி நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் கண்ணாடி சில்கள் முகத்தில் கடுமையாக குத்தியதில் முகம் கோரமாகி கிழிந்து உள்ளதாகவும் மற்றபடி அவன் எழுந்து நடக்க மேலும் இரு மாதங்கள் ஆகும் எனவும் கூறினார்..அதோடு அதிர்ச்சி காரணமாக அவன் கோமா நிலைக்கு தள்ளபட்டதையும் சொல்லி சென்றார்..பாரிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை..

கமலி மனவேதனையில் உழன்று கொண்டிருந்தார்..வளரியை கண்டதும் அவர் மனம் தாய் பாசத்தில் கும்மாளமிட அதை தட்டி அடக்கியது தூக்கி வளர்த்த இன்னொரு பிள்ளையின் பாசம் அவரின் மனதை.பெற்ற உடனே அவனை கணவனுக்கு பயந்து தாரை வார்த்த மகனா பெற்று உயிரையே வைத்து ஊட்டி வளர்த்த மகனா..நிச்சயமாக பாரி வளரியை மன்னிக்க போவது இல்லை..இனி என் இரு மகன்களையும் அருகில் நிறுத்தி ஆர தழுவிட முடியாதோ கலங்கி தவித்தார் கமலி..பாரி வளரிக்கு நடந்த விபத்தை பற்றி கமலியிடம் கூறிருந்தான்..ஒரே ஒரு முறை அவரை அழைத்து சென்றும் காட்டினான்..இவன் எதற்கு இங்கு வந்தான் வராமல் இருந்திருந்தால் இந்த வேதனை இராதல்லவா.. முகம் சிதைவடைந்து போயிருக்க கமலி அதை பற்றி பாரியிடம் கவலையை பகிர்ந்து கொண்டார்.. 

"மா நானும் அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. பேசாம அவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்றது பெட்டர்..".. 

"என்னடா சொல்ற அப்போ அவன் இனிமே உன்ன மாறியே இருக்க மாட்டானா.. அவன் பழைய முகத்தை கொண்டு வர முடியாதா".. 

"முடியும் ம்மா.. ஆனா"

"ஆனா என்னடா"

"ம்மா அவனும் நானும் ஒரே மாறி இருந்தா பிரச்சனை கண்டிப்பா வரும்.. நா அடிச்சு சொல்றேன் அவன் அவ்ளோ சீக்கிரம் முல்லைய விட்டு கொடுக்க மாட்டான்..அவன் கூட நா வளரல ஆனா ஒரே வயித்துல இருந்த உணர்வுல சொல்றேன்..அம்மா எனக்கு வேற வழி தெரில.. ஒரு டாக்டரா நா என் தொழிலுக்கு துரோகம் செய்றேன் ஆனா ஒரு புருஷனா ஒரு தம்பியா எனக்கு தெரிஞ்ச ஒரே வழி இது தான்..இவன் மட்டும் முல்லை முன்னாடி போயி நின்னு எல்லாத்தையும் சொன்னா அவ்ளோதான்..அண்ணனும் தம்பியும் சேந்து என்ன பங்கு போடுறிங்களானு கேப்பா..இப்ப அவ இருக்குற நிலமைல இதெல்லாம் தேவையா ம்மா"... 

"நீ சொல்றதெல்லாம் சரி தாண்டா ஆனா வளரி எழுந்தா என்ன சொல்லுவான்".. 

"அதெல்லாம் பாத்துக்கலாம்.. அவனுக்கு ரெண்டு நாள்ல சர்ஜரி பண்ணனும் அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் வராங்க நாளைக்கு".. கமலிக்கு பாரியின் கூற்று ஒரு தாயாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை ஆனால் வேறு வழியும் அல்ல..மருத்துவ நிபுணர்கள் குறித்த நாளில் வளரிக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..முல்லை மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தாள்..கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை கண்டே அருவருக்க தொடங்கினாள்..ஏற்கனவே பெருத்த உடல் வாகு கொண்டவள் ஆனாலும் அவளின் சரீரம் தங்கம் போல மின்னும்.. இப்போது அதும் இல்லாமல் சோர்ந்த தோற்றத்துடன் அவள் இருந்தாள்.. வளரியின் கவலையில் கமலியும் அடுத்து அவன் எழுந்தால் என்ன நடக்கும் என்ற பதற்றத்தில் பாரியும் இருந்ததால் அவளை சரிவர யாரும் கவனிக்கவில்லை.. 

ஆனால் அவளின் உணவிலும் அவளுக்கு தரும் வைட்டமின்ஸ் போன்றவைகளில் பாரி சிரத்தையுடன் இருந்தான்..இப்படியே முழுமாதம் சென்று விட முல்லை நான்காம் மாதத்தில் அடியெடுத்து வைத்தாள்..இப்போது அடிவயிறு சற்று வெளியே தெரிய தொடங்கியது.. தாய்மையின் பூரிப்பு முகத்தில் வழிய அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை கண்டதையும் யோசித்து தனக்குள் குழம்பி தவித்தாள்..

ரியோ வழக்கம் போல வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பினான்..அவனுமே முல்லையை எண்ணி கலங்கி போயிருந்தான்.வளரியின் வரவு அவனுக்கு தெரியுமென்பதால் ஒருவித பயம் உணர்வு அவனை ஆட்க்கொண்டது..அன்று சுயநினைவற்று சக்தியுடன் இணைந்து பின் அவள் முகம் பார்க்கவே கூச்சமுற்றான்..அன்றைய நாளில் சக்தியின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் அவனை தடுக்க எப்படி முயன்றாலோ குடிபோதையில் மிருகமாக மாறி விட்டேனே என தன்னையே நொந்து கொண்டான்..இப்போது நொந்து என்ன பலன் குடிப்பதற்கு முன் நினைத்திருக்க வேண்டும்..

அந்த சம்பவத்திற்கு பின் ஒரு முக்கிய அரசியல்வாதி ஒருவர் சம்மந்தப்பட்ட கொலை வழக்கின் பின்னணி பற்றிய அலசலில் வீட்டிற்கு வருவதே குறைந்து விட்டிருந்தது..சக்தியின் முகம் பார்த்து பேசவே நா எழவில்லை..ஆனால் எப்போதும் தூங்கும் முன் அவள் அறை கதவை தட்டி சாப்டியா என வினவுவான் அவள் கதவை திறந்து சாப்டேன் என கூறி அவன் விழி பார்வைக்காக ஏங்குவாள்..இது இவனுக்கு புரிந்தாலும் குற்றவுணர்ச்சியில் அங்கேயிருந்து சென்று விடுவான்..இப்படியே இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு மாதமாக தொடர அன்று வீட்டிற்கு வந்தவன் கதவை தட்டும் முன்பாகவே திறந்து விட்டாள் சக்தி..

தட்ட ஓங்கிய கை அந்தரத்தில் நிற்க அவளோ அவன் கையில் எதையோ திணித்தாள்..என்ன அது..அது ஒரு பிரெக்னன்சி கிட் அதில் இரு கோடுகள் தெள்ள தெளிவாக ஒன்றை அவனுக்கு விளக்கின..ஆம் ரியோ அப்பா ஆகி விட்டான்..அவனால் நம்ப முடியாத அதிர்ச்சி..அந்த ஓர் நாள் இரவு படமாக ஓடியது..உடலில் உள்ள ஒவ்வொரு ரோமமும் சிலிர்த்து எழுந்து நர்த்தனமாடியது..எதிரே சக்தி அவன் முகபாவனைகளை கவனமாக பார்த்து கொண்டிருந்தாள்..கண்களில் நீர் திரையிட சக்தி என அழைத்தான்..அவளின் பார்வையே அவனை சுட்டு பொசுக்க அதற்கு மேலும் தாங்கிட முடியாமல் அவளின் கரங்களை பற்றி"சக்தி என்ன மன்னிச்சிரு மா..நா நா உனக்கு பெரிய பாவத்த செஞ்சிட்டேன்"...

"பாவமா எத ரியோ பாவம்னு சொல்றிங்க..நீங்க எனக்கு கொடுத்த இந்த உயிரயா இல்ல உங்க வாழ்க்கைல வேண்டாத வந்த நானா"..

"ஐயோ சக்தி ப்ளீஸ் அப்டி சொல்லாத"..

"வேற எப்டி சொல்லணும் ரியோ..நீங்கதான் சொல்லுங்களேன்..அன்னைக்கு நீங்க என்கிட்ட அப்டி பண்ணதுக்கு அப்றம் ஒரு நாள் ஒரே ஒரு நாள் என்கிட்ட மூஞ்சி கொடுத்து பேசுனீங்களா இல்ல நா என்ன நெனைக்குறேனு கேட்டிங்களா..ஆமா நா தெரியாம கேக்குறேன் நீங்க என்ன பக்கத்து வீட்டுகாரன் பொண்டாட்டி கூடயா போயி படுத்திங்க..இப்டி ஓடி ஒழிய..சட்டப்படி கல்யாணம் பண்ண என்கூட தானே அப்டி செஞ்சீங்க அப்ரோ ஏன் இப்டி பயந்து ஓடுறிங்க..இன்னும் உங்க மனசுல அந்த வெண்பா தான் இருக்காளா..இவ்ளோ நடந்து இத்தன மாசம் உங்க கூட வாழுற நா உங்க கண்ணுக்கு தெரிலையா..ஏன் ரியோ இப்டி பண்றிங்க என் காதல புரிஞ்சிக்கவே மாட்டிங்களா..நமக்குள்ள எதுவுமே சரியாகல அதுக்குள்ள புள்ள வேற..இந்த பாவப்பட்ட அம்மாவுக்கு நீ பொறக்கவே வேணா போயிரு போயிரு"..சக்தி கத்தி கொண்டு வயிற்றில் அடிக்க அவள் கைகளை அழுத்தி பற்றி கொண்டு தடுத்தவன் 

"சக்தி என்ன பண்றடி நீ..இப்டி அடிச்சா அபோர்ட்ஷன் ஆயிரும்..பைத்தியமா உனக்கு"

"என்ன விடுங்க ரியோ..என்ன மாறி வாழ்க்கை இது..மனசுல ஒருத்திய வெச்சிக்கிட்டு ஒரு நாள் குடிபோதையில உருவான குழந்தை..நிர்பந்தத்துல நிக்க வெச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டி இப்டி எதுவும் உங்களுக்கு வேணா..நீங்க சந்தோசமா இருங்க தனியா அதானே உங்களுக்கு வேணும்..நானும் இந்த பிள்ளயும் எப்டி போனா என்ன உங்களுக்கு..நாங்க இருந்தா தானே உங்களுக்கு கஷ்டம் நாங்க போறோம்"...இத்துணை நாள் அடக்கிய கண்ணீர் வார்த்தைகளாக வெடித்து சிதற அப்போது தான் ரியோ ஒன்றை உணர்ந்தான்..என்று சக்தியுடன் இணைந்தானோ அன்றிலிருந்து வெண்பா அவன் மனசில் இல்லை..

பேசவிடினும் அவன் நினைவு முழுதும் சக்தியே இருந்தாள்..அவளை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான்..வெண்பா என்ற பெயரே சக்தி நினைவு படுத்தி தான் வருகிறது..அப்படியென்றால் வெண்பா என்ற மாயக்கயிறு அறுந்து விழுந்திட அங்கே சக்தி எனும் மங்கையின் மன கயிறு ரியோவின் இதயத்தை சுற்றி பின்னப்பட்டது..

அவளின் இத்தனை வருட காதல் அன்று தான் ரியோவை தாக்கியது..அங்கே கதறிக்கொண்டிருந்தவளை அள்ளி இழுத்து இதழை முத்தமிட்டான்..அதிர்ந்து விலக துடித்தவளை தொடர் முத்தங்களால் சமாதானப்படுத்தி இதழை பிரித்தான்..சக்திக்கு அதிர்ச்சியில் தலை சுற்ற அவளை கரங்களில் தாங்கி சோபாவில் அமர்ந்தான்..நெஞ்சோடு அவளை அணைத்து கொண்டிருந்தவனை விழிவிரிய பார்த்தவளை கண்டு சிரிப்பும் வந்தது அவள் ஏக்கம் புரிந்து வேதனையும் தந்தது..

அவள் ஒட்டி போன கன்னங்களை வருடி கொண்டே பேசினான் ரியோ.."சக்தி அன்னைக்கு நடந்தது இதுவரைக்கும் எனக்கு தப்பா தான் தெரியுது ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம தொடரது சரியில்ல..உனக்காக எதுவுமே செய்யாம ஒரு கணவனா என் ஆசைய தீத்துகறது எனக்கு சரியா படல..அத உன் முகம் பாத்து சொல்லவே வெக்கபட்டு தான் ஓடி ஒளிச்சேன்..ஆனா இத்தன நாள்ல என் நினைப்பு முழுசும் நீதாண்டி இருந்த..வெண்பான்ற பேரே நீ நினைவு படுத்தி தான் வருது..சக்தி நீ எனக்குள்ள வந்துட்ட மா..உன் காதல் எனக்கு எவ்ளோ கர்வமா இருக்கு தெரியுமா..தாய் பால போல சுத்தமான அந்த காதல் முதலும் கடைசியுமா எனக்கு மட்டும் தான்..என்னால அந்த மாறி காதல உனக்கு கொடுக்க முடியாது சக்தி..ஆனா என் கடைசி மூச்சு இருக்குற வரை அம்மாவோட கருவூல இருக்குற குழந்த போல உன்ன என் நெஞ்சுல வெச்சிருப்பேன்..ஐ லவ் யு சக்தி"....

அவ்வளவு தான் அவன் கழுத்தை கட்டி கொண்டு அழுதே விட்டாள் சக்தி..இந்த வார்த்தைக்காக அவள் தனக்காக இருந்த ஒரே சொந்தமான அக்காவையும் இழந்தாள்..அனாதையாக நின்றவளுக்கு இன்று அந்த காதல் கிடைத்து விட்டது..கூடவே காதலின் பரிசுடன்..அவள் முதுகை நீவி அழுகையை குறைந்தவன் அவள் உண்ணவில்லை என அறிந்து அவளுக்கு உணவூட்டி தன்னறைக்கு அழைத்து சென்றான்..

ஒரு ஆள் படுக்கும் கட்டிலில் அவளுடன் நெருக்கியடித்து படுத்தவனை "ஏன் ரியோ இப்டி இடமே இல்லாம படுக்கணும் நா என் ரூம்ல படுத்துக்கறேன்"

"ம்ஹும் இனிமே இதான் தங்கம் உன் ரூம்."  

"தங்கமா"

"ஆமா என்னோட தங்ககட்டிடி நீ..இனிமே நா என் பொண்டாட்டிய அப்டித்தான் கூப்டுவேன்..ஓகே தங்கம் இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி மாமா மேல படுத்துகோங்க நாளைக்கே குயின் சைஸ் பெட் வாங்கிறலாம் ஓகேவா"..வெட்க சிரிப்புடன் ரியோவின் நெஞ்சில் புதைந்து கொண்டவளை நிமிர்த்தி அவள் வயிற்றில் கரம் வைத்து "தங்கம் என் புள்ள ஸ்ட்ரோங் தானே"...அவன் கேட்பது எதுக்கு என புரிந்து கொண்டவள் கருவாய் கனிந்த நாளே பிரிந்திருந்த தாய் தகப்பனை சேர்த்து வைத்த குழந்தை வலுவிழந்து போகுமா அதனால் அவளே ரியோவின் டீ ஷர்ட்டை பிடித்து இழுக்க அவர்களின் அழகிய கூடல் அங்கே அரங்கேறியது..பாதம் ஆரம்பித்த ரியோவின் உதடுகள் மெல்ல ஊர்ந்து சக்தியின் இதழில் இளைப்பாறி வளைந்து நெளிந்து செல்லும் அழகிய பாதைகளில் நடைபயின்று மென்மையாக பெண்மையை ஆக்கிரமித்து கொண்டான்..ரியோ சக்தியின் மனம் உண்மையான காதல் கொண்டு நடக்கும் தாம்பத்யத்தின் மகிழ்ச்சியில் திளைத்து போயினர்..


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்