இஞ்சி இடையழகி 14


எவ்வளவு ஆவலாக வேண்டுதலோடு பல பொய்கள் கூறி நண்பர்கள் வாழ்வு சிறக்க இப்பயணத்தை மேற்கொள்ள வைத்தனர் ரியோவும் கண்ணாவும் இப்போது அந்த பயணமே புதிய குழப்பங்களுக்கு காரணமாக அமைந்து விட்டது யாரை குறை சொல்வது வழக்கமான இளிச்சவாயன் விதி தானே அதன் தலையில் அனைத்தையும் இறக்கி விட்டு வரவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்த சக்தியை சரி பண்ணி அவளுக்கு பள்ளியில் டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு முறுக்கி கொண்ட முல்லையை சமாதானப்படுத்தி ஏற்றி கொண்டு சென்னை கிளம்பினர்.. 

பாரியும் முல்லையும் அவர்கள் காரில் வந்தனர்.. வரும் வழியில் சும்மா இருக்க முடியாமல் இறுக்கம் குறைய எம்பிட்ரீ யை திறந்தான் பாரி.. முதல் பாடலே எமன்.. 

மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஏ...ய்..

"பாரிரிரி.... "

"அடியே சாத்தியமா வேணும்னே பண்ணலடி அதுவா தான் வந்துருச்சு"

"இருக்குற கடுப்பு பத்தலன்னு என்ன வெறுப்பேத்துறியா"

"தெரியாம பண்ணிட்டேன் மா"

"நீங்க எல்லாத்தையும் தெரியாம தானே பண்றிங்க இதையும் தெரியாம பண்ணிடிங்கனு நா நம்ப".. 

"ப்ச் முல்லை நீ எத மனசுல வெச்சு பேசுறேன்னு எனக்கு தெரியுது ஏண்டி அத விடவே மாட்டியா நான் பிளாக்மெயில் பண்ணி கட்டிகிட்டது தப்பு தான் வேணும்னா உன் காலுல விழறேன் ஏண்டி அதையே புடிச்சி வேதாளம் மாறி தொங்குற"

"ஆமா நா வேதாளம் தான் எதுக்கு இந்த வேதாளத்த கட்டிக்கிடிங்க..நீங்க அடுக்கா சொல்ற பொய்ய நம்ப நா முட்டாள் இல்ல.. காதலாம் காதல் யாருக்கு உங்களுக்காக..கேக்குறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியுமாம் ஓ ஓனானாம்".. 

"என்ன நம்பவே மாட்டியா முல்லை".. அந்த குரல் அவளை ஏதோ செய்த்தது.. 

"இல்ல என்னால நம்ப முடியாது..நீங்க செஞ்சத மறக்கவும் முடியாது.. ப்ளீஸ் பாரி இருக்குற டென்ஷன்ல எதையும் ஞாபகம் படுத்தாதீங்க..ரியோ அண்ணா அண்ணி கிட்ட என்ன சொல்றான்னு நானும் பாக்குறேன்..அவன் இப்டி மாறுவான்னு நா நெனச்சு கூட பாக்கல பாரி" 

"முல்லை அவன பத்தி உனக்கு தெரியாதா.. எதுவா இருந்தாலும் நல்லா யோசி யாரையும் தூக்கி எரிஞ்சு பேசாத".. 

"எனக்கு யோசிக்க தெரியும் அத கூட நீங்க சொல்லி தரணும்னு அவசியம் இல்ல"..அதற்கு மேல் பேச பிடிக்காதவளை போல கண்களை மூடி கொண்டாள் முல்லை..கல்லாய் மனதை இறுகி கொள்கிறவளை உளி கொண்டு செதுக்கவா முடியும் அந்த அளவு பொறுமை யாருக்கு உள்ளது எனவே பாம் வைத்து வெடிக்க திட்டமிடலானான் பாரி.. 

வண்டி சென்னையை அடைந்தது..முல்லையை வீட்டில் விட்டு விட்டு ரியோ வீட்டிற்கு விரைந்தான் பாரி.. அங்கே அவனை அடித்து வௌக்குமாரில் துவைத்து கொண்டிருந்தாள் கிரேஸ்..கண்ணா தடுக்க முயன்றும் முடியாமல் ஒரு ஓரத்தில் நின்றிருந்தான்..வீட்டிற்குள் நுழைந்ததும் ரியோ அடி வாங்குவதை கண்ட பாரி குறுக்கே புகுந்து பல அடிகளை தானும் வாங்கி சண்டையை விலகினான்..

அங்கே ஓரமாக நின்றிருந்த கண்ணாவை நோக்கி"டேய் அக்கா தான் அடி பின்றாங்களே அவங்கள தடுக்க மாட்டியா".. 

"தடுக்கணும் ம்ம்ம் எப்ப வந்து நீங்க தடுத்தீங்க ஒரு கட்டு வெளக்கமாறு ஒண்ணா பிஞ்சு விழுந்து அடுத்த சுற்று ஸ்டார்ட் ஆயி முடியுற நேரத்துல கரெக்ட்டா என்ட்ரி கொடுக்குற.."... 

"அப்போ வாங்கிட்டு தான் நிக்குறீயா..என் மச்சான் எங்கடா"... 

"அந்தா மூலையில இருக்காரு பாரு". 
அங்கே அன்பு மூலையில் தலையில் கைவைத்து அமர்த்திருந்தான்.. குடும்பமே வாங்கிருச்சா.. கிரேஸ் கோவம் அடங்காமல் இன்னொரு வெளக்குமாரை கையிலெடுக்க"அக்கா போதும் இதுக்கு மேல வாங்க முடியாது அவன் என்ன கொல குத்தமா செஞ்சிருக்கான் இந்த அடி அடிக்குறிங்க". 

"அடிக்காம நீங்க சும்மா இருங்க தம்பி.. அவன் உங்க தங்கச்சி வெண்பாவ தானே காதலிச்சான் இப்ப எவ்ளோ ஊரு பேரு தெரியாத சிறுக்கிய கூட்டிட்டு வந்து வாக்கு கொடுத்துட்டேன் இவள தான் கட்டிக்குவேன்னு நிக்குறான் என்ன நெனச்சிட்டு இருக்கான் இவன்"..

"அண்ணி உங்க கிட்டயாவது உண்மைய சொல்றோம் ப்ளீஸ் நீங்கலாச்சும் காது கொடுத்து கேளுங்க..யோவ் மச்சான் உன்ன என்னமோ நெனச்சேன் பொண்டாட்டி கிட்ட வெளக்கமாத்து அடியில இருந்து நீயும் தப்பிக்கலையா"

"அது புருசனுக்கே உண்டான சாபம் மாப்ள என் தங்கச்சி கிட்ட இன்னும் நீ வாங்கலையா.."

"அண்ணனும் தங்கச்சியும் என்ன போட்டு தள்றதுலையே குறி இருக்கீங்களே வெளங்குவிங்களா.."..

'தம்பி அவரு கெடக்காரு என்னமோ உண்மைய சொல்றேன்னு சொன்னிங்களே என்ன அது"...ரியோ வேண்டாமென தடுத்தும் பாரி அனைத்தையும் கூறினான் அதோடு நில்லாமல் வளரியை பற்றியும் அவன் முல்லையிடம் தகாத முறையில் நடந்ததை பற்றியும் முல்லையை இக்கட்டில் நிறுத்தி மணந்த கதையையும் பாரி கூறி முடிக்க அதுவரை இருந்த இலகு தன்மை மாறி அவனின் சட்டையை பற்றி உலுக்கினான் அன்பு..

"எவ்ளோ தைரியம் இருந்தா அண்ணனும் தாபியுமா என் தங்கச்சி வாழ்க்கையில விளையாடுவீங்க..பாவம் டா என் தங்கச்சி..உன்ன உண்மையா காதலிச்சத தவிர வேற என்னடா பண்ணா..."... 

"மாமா பாரிய விடுங்க..நாம எல்லோருமா சேந்து தேடிருந்தாலும் முல்லைக்கு இவர விட நல்ல மாப்ள கெடச்சிருக்காது..அவரு அவள கல்யாணம் பண்ண வழி தப்பாயிருக்கலாம் ஆனா அவரோட காதல் உண்மை..மொள்ளமாரி தனம் பண்ணியாவது அவரோட காதல காப்பாத்திகிட்டாரு".. இதை சொல்லும் போது அவனின் கண்களில் அடிபட்ட செயல் வந்து செல்ல அன்புவின் கோவம் குறைந்தது...ஒரு ஆத்மாவிற்கு கொடுத்த வாக்கை மீற யாருக்கும் மனமில்லை.

இருப்பினும் ரியோவிடம் பக்குவமாக பேசி பார்த்தனர்..சக்திக்கு நல்ல இடமாக பார்த்து திருமணம் முடிக்கலாம் என கிரேசும் அன்பும் எடுத்து கூற இதில் எதையும் காதில் வாங்கும் சக்தியற்று சக்தி சுவரோடு சுவராக நின்றிருந்தாள்..ரியோவின் பார்வை சக்தியை வெறித்து பார்த்தது அவள் என்ன ஜடமா எல்லோருமே எனக்காக என் காதலை காப்பாற்ற துடிக்கின்றனர் அவளுக்கு யாரும் இல்லாததால் அவள் பக்கம் பேச நாதியும் கிடையாமல் என் வாழ்வை நோகடிக்க கூடாதென்று மனதில் வலியை சுமந்து கொண்டு நிற்கிறாளே இவளுக்கு எப்படி துரோகம் செய்வேன் இல்லை என் முடிவில் மாற்றம் இல்லை..


ரியோ நிதானமாக பேச தொடங்கினான்.."அக்கா மாமா உங்க எல்லோருக்கும் தெரியும்.. முல்லை எனக்கு தோழி மட்டும் இல்ல அவளுக்கும் எனக்குமான உறவுக்கு இந்த உலகத்துல பேரே இல்ல அன்பு பாசம் நேசன் நட்பு உரிமை இப்டி எல்லாத்தையும் தாண்டுன பந்தம் அப்டி பட்ட என் முல்லையை காப்பத்த எனக்கு உதவி செஞ்சவ சக்தி யாருக்காகவும் அவள கைவிட மாட்டேன்.. கண்ணா அண்ணா வெண்பாவ நல்லா பாத்துப்பாரு..அத விட அதிகமா என்னால என் பொண்டாட்டி சக்திய பாத்துக்க முடியும் ரிஜிஸ்ட்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு செய்யுங்க..அக்கா நா சக்திய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ".. 
என்றவன் பக்கத்தில் இருந்த தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.. 

ரியோ இவ்வளவு உறுதியாக இருப்பதால் அவனிடம் ஏதும் பேச இயலவில்லை..பாரியின் கரங்களை பிடித்து"என்ன மன்னிச்சிருங்க மாப்ள.. மரியாத இல்லாம பேசிட்டேன்..இத நீங்க முல்லை கிட்ட சொல்லிருக்கலாமே இதுனு இல்ல எல்லாத்தையும்".. 

"சொல்லிருக்கலாம் மச்சான் ஆனா உங்க தங்கச்சி கேக்குற ஜாதி இல்ல..எல்லாத்துக்கும் பிடிவாதம்..ரொம்ப ஈகோ..தனக்காக தான் ரியோ காதல தியாகம் செஞ்சான்னு தெரிஞ்சா ரொம்ப கில்ட்டியா பீல் பண்ணுவா..வளரி விஷயமும் அப்டித்தான் அவசரபட்டு என்ன அவமான படுத்திடோம்ன்னு உடைஞ்சு போயிருவா அவள அவ வழியில போய் கரெக்ட் பண்ணிக்குறேன்'... 

"உங்க மனச புரிஞ்சிக்க தெரியலையே இந்த பொண்ணுக்கு.. மாப்ள என் தங்கச்சி ரொம்ப நல்லவ.. ஆனா அதவிட ரொம்ப பிடிவாதக்காரி அவ ஏதாச்சும் தப்பு பண்ணா என்கிட்ட சொல்லுங்க தயவு செஞ்சி கைய மட்டும் நீட்டிராதிங்க"... 


"அட என்ன மச்சான் நீங்க என் பொண்டாட்டிய எப்டி லவ் டார்ச்சர் பண்ணி கரெக்ட் பண்றேன் பாருங்க".. பாரியின் வார்த்தையில் அன்பின் மனம் குளிர்ந்தது..ரியோ வீட்டில் பஞ்சாயத்தை முடித்தவன் தன் வீட்டிற்கு வந்தான்..கமலி அவர் அறையில் இருந்தார்.. சத்தம் செய்யாமல் மேலே சென்றான்..கதவை திறந்து மெல்ல எட்டி பார்த்தான்..குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம்.. பிசாசு குளிக்குறா போல.. 

இருடி என்ன பேச்சு பேசுற இன்னைக்கு இந்த பேய் மாஸ்க்க போட்டு எப்டி பயம் குடுத்துறேன்னு பாரு.. பாரி கட்டிலின் கீழே பேய் மாஸ்க்கை அணிந்து மறைந்திருந்தான்.. பாரி இருந்தால் குளியலறையில் உடை மாற்றுபவள் இன்று அவன் இல்லாததால் துண்டுடன் வெளியேறினாள்..பாத்ரூம் கதவு திறந்து மூடும் ஓசையில் தனக்குள் சிரித்து கொண்டே பே என கத்தியவாறே எழுந்து நின்றான் பாரி.. 

அவனின் பேய் முகமூடியை கண்டு பயந்து அலறி விட்டாள் முல்லை..கை நடுங்க உடல் நடுங்க அவளை சுற்றிருந்த துண்டின் பிடி நழுவ வண்ண உடல் யாவும் காணும் யோகம் அவனுக்கு கிடைத்தது.. ஆனால் பயத்தில் வெடவெடத்து கொண்டிருந்த மனையாளின் விழிகளை தாண்டி அவன் பார்வை செல்லவில்லை.. 

ஒரே எடிட்டில் அவளை அணுகி துண்டை எடுத்து சுற்றி விட்டு"முல்லை நான் தாண்டா சும்மா விளையாட்டுக்கு பண்ணேன் மன்னிச்சிரு மா.. முல்லை ஹேய் முல்லை".. அவளின் முகவாயை தொட்டு அவன் விளக்க அப்போது தான் தன் நிலை உரைக்க அவனை விலக்கி தள்ளினாள் முல்லை.. 

"சீ நீ இவ்ளோ கேடு கெட்டவனா..பிளான் செம்ம.. பேய் மாறி என்ன பயமுறுத்தி நா பயத்துல உன்ன கட்டிபுடிக்க நீ இதான் சாக்குன்னு என்ன என் கூட சீ த்து சொல்லவே நாக்கு கூசுது..".. 

"முல்லை வாய அடக்கி பேசு விளையாட்டுக்கு தாண்டி செஞ்சேன் பிளான் எல்லாம் ஒரு கருமமும் இல்ல.".. 

"அடச்சீ வாய மூடு நீ என்ன பெரிய யோக்கியனா உடம்பு சரியில்லாம நடிச்சு என்ன வரவெச்சு தப்பு செய்ய பார்த்தவன் தானே".. 

"ஹேய் எப்பவோ நடந்தது இன்னும் எதுக்குடி புடிச்சு தொங்குற ஆமா அன்னைக்கு தப்பு பண்ணிட்டேன் அதுக்குன்னு எத்தனை தடவ மன்னிப்பு கேக்குறேன் என்ன மன்னிக்கவே மாட்டியா டி".. 

"மாட்டேன் மன்னிக்க முடியாது என்னடா பண்ணுவ.. ரியோக்காக உன்ன கட்டிகிட்டேன் இப்போது தா அவனே உன் தங்கச்சிய வேணாம்னு சொல்லிட்டானே சோ"... 

"சோ"என்றான் கண்களில் கூர்மையுடன்".. 

"எனக்கு டிவோர்ஸ் வேணும்"... 

"ம்ம்ம் நல்ல யோசன தான்..ஆமா செல்லம் கோர்ட்ல கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல ஏன் டிவோர்ஸ்னு கேப்பாங்களே என்ன சொல்லலாம்னு இருக்க...என் புருஷன் ஒரு மொள்ளமாரி முடிச்சவிக்கி அதுக்கும் மேல அவன் ஆம்பளையே இல்ல..அப்டினு சொல்ல போறியா"... 

"நா என்ன சொன்னா உங்களுக்கு என்ன"  

"நீ பொய் எல்லாம் சொல்ல வேணா.. பேபி ஒன்னே ஒன்ன மட்டும் சொல்லு".. முல்லை அவனை வெறித்து பார்க்க 

"என் புருஷன் என் அனுமதி இல்லமா என்ன ரேப் பண்ணிட்டானு சொல்லு"முல்லை திடுக்கிட்டு விழிக்க அவளை சுற்றி வளைத்தான் பாரி.. 

முல்லையின் திமிறல் அவனை அசைக்க வில்லை..கத்த தொடங்கினாள் ஆனால் பலனில்லை பாரியின் அறை சவுண்ட் ப்ரூப்..அவனை கையில் கிடைத்த பொருட்களால் அடிக்க தொடங்கினாள்.. அதையும் சமாளித்து அவளை திமிற திமிற தூங்கி வந்து மெத்தையில் போட்டான்..அந்த துண்டு அவிழாமல் அவள் போராடினால்.. 

முரட்டு உதட்டின் உரசல் மேனியில் உரச அவனை தடுத்திட முடியாமல் கண்ணீர் விட்டு கெஞ்சலானாள் முல்லை..கெஞ்சும் இதழ்களில் ரத்தம் கசியுமளவு முத்தமிட்டவன் அவளை உதறி தள்ளி எழுந்தான்.. 

"விருப்பமே இல்லாத பொண்ண தொடுறவன் மிருகத்துக்கும் கீழானவன்.. கட்டுன மனைவியாவே இருந்தாலும் உறவுக்கு அவங்க அனுமதி வேணும்..நா மதிச்சு உயிரா நேசிக்குற பொண்ணு நீ உன்ன கஷ்டபடுத்தி சந்தோச பட என்னால முடியாது டி.. ஆனா ஏன் இப்டி செஞ்சேன்னு பாக்கறியா நீ இனிமே டிவோர்ஸ்னு வாயே தொறக்க கூடாது தொறக்கணும்னு நெனைக்கும் போதே இதான் ஞாபகம் வரணும்.. இப்ப விட்டுட்டேன் இனிமேலும் விடுவனானு தெரில பாத்துக்கோ என் கிட்ட இருந்து அவ்ளோ ஈஸியா நீ போக முடியாது முல்லை"... அவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் ஒன்றும் அறியாத சிறுவனை போல இங்கே முல்லை தான் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்..


Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி