இஞ்சி இடையழகி 17


பாரியிடன் சிலுப்பி கொண்டு போன முல்லை கீழே பிக்காச்சுவுடன் விளையாடி விட்டு சோபாவில் சாய்ந்தே உறங்கிருந்தால்..அவள் இன்னும் படுக்கைக்கு வராததால் அவளை தேடி சென்றான் பாரி..அங்கே சிறிதாக வாய் பிளந்து பிறை நிலா அவள் துயில் கொள்ள சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தான்..அவளை அள்ளி செல்ல கரம் நீட்ட அவளிடம் அசைவு தெரிந்தது..ஐயோ குந்தாணி தூங்கலையா..முல்லை முல்லை அவளை உசுப்பி எழுந்து வந்து படுக்க கூறினான்..அவளோ தூக்க கலக்கத்தில்"ஏன் பாரி நீ என்ன தூக்கிட்டு போ மாட்டியா"...

"தூக்கலாம் என் இடுப்பு உடைஞ்சிட்டா"...அவ்வளவு தான் உறக்க கலக்கம் கலைந்து கண் திறந்தால் முல்லை..பாரியை முறைத்து கொண்டே தட்டு தடுமாறி படியேறினாள்..அவளின் பின்னே அவள் ஆட்டதை ரசித்தவாறே ஏறினான் பாரி..தள்ளாடி கொண்டு படுக்கையில் விழுந்தவள் மறு வினாடியே உறங்கி போக கழுத்து வரை அவளுக்கு போர்த்தி விட்டு உறங்கி போனான் பாரி வேந்தன்..

நேரம் இரவு மணி ஒன்று முப்பது.. இன்னும் பாரி வரவில்லை.. இன்று அவன் வர மாட்டான்.. ஒரு அவசர கேஸ் அதனால் மருத்துவமனையில் தங்க நேர்ந்து விட்டது..இன்று அவனுக்கு எரிச்சலாக வந்தது.. காலையில் இருந்து வேலை பளு அவனை அழுத்தி கொண்டிருந்தது.. இதில் அவனை வெறி கொள்ள வைத்தது எப்போதும் போல அவன் அருமை மனைவியின் அட்டகாசம் தான்..வேலையின் நடுவே நிம்மதி தேடி தன்னவளுக்கு அழைத்தான்.. பாரி அவளுக்கு தொடர்பு கொள்வது குறைவு ஏதாவது அவசரம் என்பதால் அன்றி.. திரையில் அவன் எண்ணை பார்த்ததும் பொங்கி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்து கொண்டு ஹெலோ என்றாள்.. 

"என்ன பண்ற".. 

"என்ன பண்ணுவாங்க வேலைதான்".. 

"நா மட்டும் என்ன நீ துணி துவைக்குறேனா சொன்னேன்..சாப்டியா"

"இல்ல ஏன் நீங்க வந்து வாங்கி தர போறிங்களா".. 

"ஹேய் ஏண்டி இப்டி பேசுற.. என்ன பண்ற சாப்டியான்னு கேட்க தான் ஃபோன் பண்ணேன் என்னமோ பேசவே புடிக்காதவ மாறி பேசுற.. ஆமா நா தா லூசு உனக்கு தான் என்கூட பேசவே புடிக்காதே அப்ரோ இப்டி தான் பேசவ..மன்னிச்சிருங்க டீச்சர் நீங்க போயி உங்க வேலைய பாருங்க".. அதற்கு மேல் அவன் கைபேசியை வைத்திருக்க அதுதான் அவளுக்கும் அப்போது வேண்டியதாய் இருந்தது.. 

அவள் அழுவது அவனுக்கு தெரிய கூடாது.. அதும் அதற்கான காரணம் தெரியவே கூடாது..தெரிந்தால் கண்டிப்பாக பாரி சும்மா இருக்க மாட்டான்..அன்று எப்போதும் போல பள்ளிக்கு வந்தவள் தான் பாடம் எடுக்கும் வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.. யாருமில்லாத படி கட்டில் ஏறும்போது அவளுடன் பணிபுரியும் சக ஆண் ஆசிரியர் ஒருவர் வழிமறைத்தார்.. அவனுக்கு மரியாதை எல்லாம் ஓவர்..அவன் அகிலன்..முல்லையை அவனுக்கு பிடிக்கும் ஆனால் அவள் மேல் காதலெல்லாம் கிடையாது. அவன் நோக்கமே தவறான கண்ணோடத்தில் பெண்களை பார்ப்பது தான்.. இவனுக்கெல்லாம் எவன் ஆசிரியர் வேல கொடுத்தானு தெரில.. அப்படி தான் அவன் முல்லையை பார்ப்பதும்.. அவள் குண்டு தான் ஆனால் டெட்டி பியர் போன்ற அவளை கட்டி அணைக்க அவன் பேராவல் கொண்டிருந்தான்..

காதல் என்று முன்பே அவளிடம் ஏதோ பினாத்த முல்லை முதலில் நாகரிகமாக மறுத்தாள் பின் கொஞ்சம் காட்டமாக கூறினாள்.. எங்கே போய்விட போகிறாள் என்ற மமதையில் வேறொரு பெண்ணை சரி கட்டுவதில் மும்முரமாக இருந்தான் அகிலன்.. ஆனால் அவன் எதிர்பார்க்காத நேரத்தில் முல்லை பாரியின் திருமணம்..

இது அவனுக்கு ஒரு விஷயமே இல்லை தான்.. ஆனாலும் முல்லைக்கு ஒரு நல்ல இடத்தில் மணம் முடிந்ததை அவனால் ஏற்க முடியவில்லை..அவனுக்கு பிறவியிலேயே அடுத்தவர்களுக்கு நல்லது நடந்தால் ஏற்க முடியாது குணம் உண்டு..அதனால் சமயம் பார்த்து காத்திருந்தான்..இப்போது தான் நேரம் வாய்த்தது..தனியாக பார்த்த முல்லையின் மனதை காய படுத்த முயன்றான்.. 

"என்ன முல்லை டீச்சர் என்ன மாறி சாதாரண ஸ்கூல் வாத்திய கட்டிக்க மாட்டேன் காதலிக்க மாட்டேன்னு சொல்லிட்டு பெரிய புளியங்கொம்பா புடிச்சிடிங்க போல..ஆனா எனக்கு ஒரு டவுட்டு பாரி முன்னாள் அமைச்சர் மகன் ஒரு டாக்டர் சொந்தமா ஹாஸ்பிடல் இருக்கு சொத்து பத்து இருக்கு அழகா ஹண்ட்ஸமா இருக்கான் அப்படியெல்லாம் இருக்கறவன் எப்டி தான் போயும் போயும் உன்ன மாறி ஒரு ரோட் ரோலர்ர கட்டிகிட்டானோ தெரில எத காட்டி அவன மயக்குனிங்க டீச்சர் நீங்க மட்டும் பெரிய சைஸ் இல்ல உங்க"... அவன் அடுத்த கொச்சை வார்த்தை சொல்லும் முன் அவன் கன்னத்தில் இடியென கரத்தை இறங்கியவள் திரும்பியும் பாராமல் கழிவறைக்குள் சென்று விட்டாள்.. 

என்ன பத்தி என்னலாம் சொல்லிட்டான்.. பொறுக்கி பன்னாட பரதேசி..கோபத்துடன் அழுகையும் சேர்ந்து வர அழுதாள்.. அழுது முடித்து வெளியே வந்தவள் வாஷ் பேஷன் முன்னிருந்த கண்ணாடியில் தன் முகம் கண்டாள்.. அதில் அவளின் பெருத்த உடல்வாகு தெரிந்தது.. பளிங்கு முகமோ உருண்டை விழிகளோ சிவந்த இதலோ எதுவும் தெரியாமல் வடிவே இல்லாத இடையும் உருண்டை கைகளும் தெரிந்தது.. 

கண்முன்னே பாரியின் சிக்ஸ் பேக் உடல் கட்டும் ஆணழகனாக சிரிக்கும் முகமும் நினைவு வர தான் அவனுக்கு பொருத்தமா எதனால் என்னை இத்தனை கிடுக்கு பிடி போட்டு மணந்தான் கொடியிடையில் அழகிகள் பலர் இருக்கையில் இடையே தெரியாத என் மேல் காதல் வந்த மாயம் என்ன.. 

இவ்வாறு யோசித்து கொண்டிருந்தவளுக்கு ஒன்று விளங்கவில்லை..பாரி முல்லை மேல் கொண்டது காதல்..காரணம் காரியமின்றி சேருவோமா சேர மாட்டோமா என்பது அறியாமல் உடல் அழகை பாராமல் ஆத்மாவால் இணையும் அற்புத உறவு.. இது இன்னும் முல்லைக்கு தெரியவில்லை.. 

இதுவரை தன் உடலை பற்றி யாராவது பரிகாசம் செய்தால் ஆமா நா குண்டு தான் உங்கப்பனா வந்து அரிசி வாங்கி போடுறான் என அலட்சியமாக தலையை சிலுப்பும் முல்லை இப்போது வேறு விதமாக யோசிக்க தொடங்கினாள்..அவள் மனதில் தான் பாரிக்கு பொருத்தமில்லை என்ற எண்ணம் உருவாக தொடங்கியது..கண்களில் நீர் நிற்காமல் வழிய தொடங்க கைபேசி சிணுங்கியது திரையில் பாரியின் பெயர்.. 

இவன் என்ன இந்த நேரத்தில் நா அழறத கண்டுபுடிச்ச ஏன் எதுக்குன்னு நோண்டுவான் அதுக்கு அகிலன் சொன்னத சொன்னா அவ்ளோதான் ஸ்கூல்லுக்கே வந்து சாமி ஆடிருவான்.. அவன் கிட்ட கடுப்பா பேசி போன வெச்சிரணும்...அதே போல கடுப்புடன் பேசி பாரியை வெறியேற்றி பேசி முடித்ததும் இப்போதும் அழுகையே வந்தது.. பாவம் என்னிடம் பேச வேண்டுமென அழைத்திருப்பான் அவனை உண்டாயா என்று கூட கேளாமல் போனேனே.. 

தன்னையே நொந்து கொண்டு அகிலனை காணாது தவிர்த்து வீட்டிற்கு வந்தவள் கமலியுடன் பொழுதை நெட்டி தள்ளி விட்டு பாரிக்காக காத்திருதாள்..நேரம் நள்ளிரவை தொட அவளின் கைபேசி ஒளிர்ந்தது..பாரி தான் வாட்சப் செய்திருந்தான்.நைட் வர மாட்டேன் நீ சாப்டு நிம்மதியா தூங்கு பை"...அவளுக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது..என்னமோ அவன் அருகில் இருக்க வேண்டுமென மனம் ஏங்கியது..

சில வினாடிகளில் மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது..வாய்ஸ் நோட் செய்திருந்தான்..உள்ளே பதற்றம் ஓட அதனை தட்டி கேட்கலானாள்.."ஓய் இஞ்சி இடுப்பழகி மாமா வரலன்னு இன்னைக்கு சந்தோசமா இருப்பியே நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ நா காலைல வந்து பாத்துக்குறேன் மொத உங்கிட்ட அப்டி கோவமா பேசியிருக்க கூடாது சாரி டா..எங்க மாமாவுக்கு ஒரு உம்மா கொடு நீ அப்டியே கொடுத்துடாலும் மாமா தரேண்டி செல்லம் உம்மா...என்னமோ தெரில உன்ன பாக்கணும் போல இருக்கு லவ் யூ பொண்டாட்டி".... அவனது குறுந்தகவலுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை..அவள் பார்த்ததற்கான நீல குறியீடுகளை கண்டதும் அதுவே போதுமானதாக இருந்தது பாரிக்கு.

உண்மையில் தப்பு செய்தவள் அவள் ஆனால் மன்னிப்பு கேட்பது என்னவோ அவன்..சும்மாவே அன்று அழுது கொண்டிருந்தவள் இப்போது மேலும் தேம்பி அழ அங்கேயே தூங்கி போனாள்..விடிய காலையில் வீடு திரும்பிய பாரி கண்டது சோபாவில் உறங்கும் மனையாளை தான்..என்ன இவ இங்க தூங்குறா..அவளை எழுப்ப எத்தனித்தான்..உடல் நெருப்பாக கொதித்தது..என்ன ஏதென்று அறை வெளிச்சத்தில் தொட்டு பார்க்க முல்லையின் முகம் உடல் எல்லாம் சிரு சிரு பருக்கள் தென்பட்டது.. அவள் சொரிந்து இருக்கிறாள் அதன் அடையாளம் கை கால் எல்லாம் நக குறி..முல்லைக்கு அம்மை கண்டிருந்தது.. அவளை அப்படியே தூக்கி சென்று படுக்கையில் கிடத்தியவன் மருத்துவனாக அவளுக்கு வேண்டியதை செய்தான் பின் கமலி எழுந்ததும் முல்லை நிலை குறித்து கூற அவரோ உடனே ஆத்தா மகமாயி என்று கூவி அந்த நேரம் அங்கே வந்த கண்ணாவை அடித்து துரத்தாத குறையாக துரத்தி வேப்பிலை பறித்து வர செய்தவர் எல்லா இடங்களிலும் வேப்பிலை கட்டி முல்லை படுக்கையை சுற்றி சிறிது வேப்பிலைகளை போட்டு வைத்தார்..

மருமகளை குளிப்பாட்ட முன்வந்தவரை தடுத்து தன் மனைவிக்கு தானே பணிவிடை செய்தான் பாரி..நேற்றிலிருந்து பொட்டு கண் மூடவில்லை.. கண் சிவந்து இருந்தது.. ஆனாலும் அதனை பொருட்படுத்தாது தன்னவளை தாயென காத்தான்..கமலி எவ்வளவு தடுத்தும் கேளாமல் முல்லைக்கு ஆங்கில மருத்துவம் செய்தான்..காய்ச்சலின் வீரியத்தில் துவண்ட கொடியாகி போனாள் முல்லை கொடி..

ரியோ அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான்..அவனை விட அவசரமாக எங்கே அவன் சாப்பிடாமல் சென்று விடுவானோ என்ற பயத்தில் காலை உணவை தயாரித்து கொண்டிருந்தாள் சக்தி..ஒரு பக்கம் வெந்நீர் கொதித்து கொண்டிருந்தது..அதனை இறக்கி வைக்க முயலும் போது அது கை வழுக்கி கீழே விழ அவள் அம்மா என்று கதற ஓடி வந்தான் ரியோ..

ஆவி பறக்கும் பானையை கண்டதும் புரிந்தவனுக்கு கண் மண் தெரியாத கோவம்..அவளை பிடித்து இழுத்து விட்டான் ஒரு அறை.."அறிவு கெட்ட முண்டம் எத்தன தடவ சொல்றது அதான் கேத்தல் இருக்குல்ல அதுல போட தெரியாது இந்த அண்டாவுல தான் போடணுமா எரும..இப்ப காலுல ஊத்தி யாரு கஷ்டபடுறது..ஆளும் மூஞ்சியும்"...அவளை குண்டு கட்டாக தூக்கி முன்னே வந்தவன் ஓடி சென்று ஒரு களிம்பை எடுத்து வந்தான்.."எங்கே கால காட்டு இத தடவிட்டு க்ளினிக் போலாம் சரியா..."..

புடவையை விலக்கி அவள் காலை பார்க்க அங்கே ஒன்றும் இல்லை..கேள்வியோடு அவளை நோக்க"எனக்கு ஒன்னும் அடிபடலங்க..சின்ன துளிதான் மேல தெறிச்சது அதான் கத்துனேன்.."..மிரண்ட குழந்தை போல திக்கி திணறி சொல்றவளை என்ன செய்வது...

"ம்ம் இனிமே கேத்தல்ல தண்ணி போடு நா கெளம்புறேன்"...

"ரியோ சாப்டு போங்க"...மறுக்க நினைத்தவன் அவள் முகம் பார்த்து சரியென அவள் பரிமாறிய உணவை உண்டு விட்டே சென்றான்..


Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி