இஞ்சி இடையழகி 8
முல்லை பள்ளி முடிந்து வெளியே வரும்போது ஒரு கார் அவளை உரசி கொண்டு நின்றது..எவண்டா அது குருட்டு எரும என அவள் முணுமுணுத்து கொண்டே பார்த்தால் வேறு யாரும் அல்ல அவளின் கணவன்..அவனை சட்டை செய்யாமல் முகத்தை திருப்பியவள் பேருந்து நிலையம் நோக்கி நகர தொடங்கினாள்..அவன் அங்கேயும் காருடன் வந்து நிற்க பொறுமை பறக்க காரிலிருந்து இறங்கியவன்"என்ன இஞ்சி இடுப்பழகி உங்கள வெத்தல பாக்கு வெச்சு கூப்டா தான் வந்து வண்டில ஏறுவீங்களோ"..
"ப்ச் கண்டவங்க கார்ல ஏறணும்னு எனக்கு அவசியம் இல்ல..நீங்க உங்க வேலைய பாத்துட்டு கெளம்புங்க"
"கண்டவங்களா அடியே கட்ன புருஷன்டி நானு என்ன பாத்தா கண்டவனு சொன்ன..தோ பாரு முல்லை ஏதா இருந்தாலும் கார்ல ஏறு பேசிக்கலாம் ரோட்ல நின்னு எல்லோருக்கும் பிரீ ஷோ காட்ட வேணா"...
"யாரு உங்கள பிரீயா ஷோ காட்ட சொன்னா மூட்டிடு போ வேண்டிதானே".
"ஹேய் யாருப்பா அது ஒரு பொம்பள புள்ள தனியா நின்னுற கூடாதே ஒடனே நாக்க தொங்க போட்டுட்டு வந்துருவானுங்க அந்த புள்ளைக்கு வேற கல்யாணம் ஆச்சு போலயே ஏன்டா ஊரான் பொண்டாட்டிய கூட விட மாட்டிங்களா"...
"யோவ் இவ என் பொண்டாட்டியா.. இது எங்க குடும்ப விஷயம் நீ மூட்டிடு போயா அங்குட்டு எரிச்சல கெளப்பிகிட்டு..பாருடி தெருவுல போறவன்லாம் பஞ்சாயத்து பண்றான் ஒழுங்கா கார்ல ஏறு"..அவனை மேலும் கீழும் பார்த்தவள் அடுத்த நிமிடமே
"என்ன பாரி எவ்ளோ நேரம் உங்களுக்காக வெயிட் பண்றேன் சீக்கிரம் வர தெரியாதா"..
"என்னது நீ எனக்காக வெயிட் பன்றியா நா தாண்டி ரொம்ப நேரமா உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்"...
"ஓ அப்டியா.."
"இப்ப என்னத்துக்கு இவ லூசு மாறி பேசுறா லுக்கு வேற எங்கேயோ போதே"..lஅங்கே கிரேஸ் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..இதுக்கு தான் கொரங்கு கோல் இல்லாமையே ஆடுதா...
"அண்ணி என்ன இந்த பக்கம்"..
"ஃப்ரன்ட்டு ஒருத்திய பாக்க வந்தேன்டி..என்ன பாரி உன்ன பிக் அப் பண்ண வந்துருக்காரு உன் வண்டி எங்க" .
"காலைல ரியோ என்ன பாக்க வீட்டுக்கு வந்துருந்தான் அவன் கூடவே வந்துட்டேன்..அதான் இப்ப என்ன பிக் அப் பண்ண இவரு வந்துருக்காரு"..
"இவ்ளோ வேலைக்கு நடுவுலயும் பொண்டாட்டிய மறக்கல..எப்பவும் இப்டியே எங்க முல்லைய சந்தோசமா வெச்சிருங்க பாரி"...
"கண்டிப்பாங்க..நா எங்க உங்க பொண்ண சந்தோசமா வெச்சிருக்கேன் அவ தான் என்ன ரொம்ப சந்தோசமா வெச்சிருக்கானா பாருங்களேன்"...
"அப்டியா முல்லம்மா"..
"ஆ ஆமா அண்ணி..சரி வாங்க உங்கள வீட்ல ட்ரோப் பண்ணிட்டு நாங்க போறோம்"..
"இல்லடா நா இப்டியே ஆட்டோ புடிச்சு போய்க்குறேன்"
"என்னங்க நீங்க சும்மா வாங்க..முல்லைக்கும் அவங்க பாசமலர பாத்த மாறி இருக்கும்"..கிரேஸ் வரவும் முல்லை அவளோடு பின்னால் ஏறி கொண்டு கதைகள் அளந்து வர பாரி முன் காண்ணாடி வழியே அவளையே பார்த்து கொண்டிருந்தான்..அவளின் பார்வை எதேர்சையாக திரும்ப ஒற்றை புருவம் உயர்த்தி நாக்கை துருத்தி குந்தாணி என சத்தமில்லாமல் சொல்ல அவனின் செயலில் மெல்லிய இதழ் விரிப்பு அங்கே அவளிடம்..கிரேஸை வீட்டில் விட்டு அன்புவை சந்தித்து கதைகள் அளந்து பிரியவே மனமில்லாமல் கணவனுடன் வீடு வந்து சேர்ந்தாள்..
உள்ளே நுழைந்ததும் அவளின் பிகாச்சு முல்லை முல்லை என அவளை ஏலாம் விட அதை கொஞ்சி விட்டு கமலியிடம் பேசியவாறு அறைக்குள் நுழைந்து பிரெஷ் ஆகி வெளியே வந்தாள்..அதோடு அவளின் நேரம் கமலியோடும் சீரியலோடும் கழிய அங்கே பாவமாய் ஒரு ஜீவன்..
இரவு சாப்பிடும் போது கூட பிக்காச்சுவை மேஜையில் நிற்க வைத்து அதற்கு ஆப்பிளை நறுக்கி கொடுக்க அது கொத்தி தின்னும் அழகை பார்த்தபடி இவளும் உண்டு முடிக்க அங்கே பாரி கிளியை கொலைவெறியோடு பார்த்திருந்தான்..
"ஹேய் பிகாச்சு எங்க வா"..அது தலையை சாய்த்து அவனை ஒரு மார்க்கமாக பார்த்தது பின் முல்லையை பார்த்தது..
"அங்க என்ன உன் ஓனரம்மாவா பாக்குற இங்க வா"...
"அத்த இப்ப எதுக்கு உங்க புள்ள பிகாச்சுவ கூப்பிடுறாரு..காலைல கூட அதுக்கு போட்ட கொய்யாவ அவரு புடிங்கி சாப்டுடாறு'..
"என்ன கண்ணு சொல்ற"
"ஆமா அத்த பிகாச்சு கிட்ட கொய்யா டேஸ்ட்டா இருந்துச்சா அப்டினு கேட்டேன் அதுக்கு அது பாரிய பாத்துட்டு இல்ல இல்லனு சொன்னுச்சு தெரியுமா அப்டினா என்ன அர்த்தம் இவரு அதோட பழத்த திருடி தின்னுருக்காரு"
"என்னது கிளிக்கு போட்ட பழத்த திருடி தின்னுடானா...டேய் என்னடா இது"..
"ஐயோ ம்மா அந்த கிளி பொய் சொல்லுதும்மா"..
"கிளி என்ன மனுசனா அத்த பொய் பித்தலாட்டம் பண்ண"..
"அதானே கிளி எப்டிடா பொய் சொல்லும்..உன் மொகரைய பாத்தாலே தெரியுதே நீ தான் இந்த வேலைய பாத்துருக்க..முண்டம் முண்டம் அறிவு இருக்காடா உனக்கு போயும் போயும் கிளிக்கு திங்க கொடுத்தத திருடி தின்றுகியே வெளங்குவியா நீயு"..
"கொய்யா டேஸ்ட்டா இருக்கான்னு சாப்டு பாத்தேன்ம்மா ரொம்பவே டேஸ்ட்டா இருந்துச்சா அதான் எல்லாத்தையும் வாயில போட்டுட்டேன்"..
"த்து எடுபட்ட பக்கி நீயெல்லாம் ஒரு டாக்டரு உன்கிட்ட வைத்தியம் பாக்குறவன் என்ன கதி ஆனானோ யாரு கண்டா..கண்ணு நீ இந்த பக்கம் வாடா உன் தட்ல இருக்குறதையும் புடுங்கி தின்ற போறான் இந்தா கிளி இது பேரு என்ன வாயிலேயே நொழயு மாட்டுது ஆஹ்ன் இந்தா பிச்சு நீயும் இங்குட்டு வா"..
"ஐயோ அத்த அது பேரு பிச்சு இல்ல பிகாச்சு."
"என்ன உச்சோ என் வாயில இதான் கண்ணு வருது"...
அத்தையும் மருமகளும் அவனை முறைத்து கொண்டிருக்க பிகாச்சு அவனை கேவலமான லுக் விட்டு ஆப்பிளை தின்றது..ஒத்த கிளி முன்னாடி என்ன கிழி வாங்க வெச்சிட்டலடி உன்ன பழிவாங்காம விடமாட்டேன்டி குந்தாணி...
இரவு கை கால் கழுவி விட்ட மெத்தையில் பொத்தென்று விழுந்தாள் முல்லை..பாரியை காணவில்லை..அவன் செய்யும் சேட்டைகளை நினைக்க இதழோரம் புன்னகை பூத்தது..எரும கிளிகிட்ட போயி திருடி தின்னுருக்கு பாரு பொறுக்கி செல்லமாக அவனை பாராட்டினாள்..அதே சமயம் கதவு திறக்கும் அரவம் கேட்க அப்படியே கண்மூடி படுத்து விட்டாள்..
உள்ளே நுழைந்தவன் பாத்ரூம் சென்று பிரெஷாகி வர அங்கே படுத்திருந்த பாவையின் மேல் கண்கள் நிலைகுத்தி நின்றது..மெல்ல அழுத்தமான அடிகளுடன் அவளை நெருங்கினான்..முகத்திற்கு நேராக குனிந்து அவன் அவளையே பார்க்க அவளுக்கோ ஐயோ இந்த தேவாங்கு ஏன் இப்டி பாக்குதுனு தெரிலையே..
மெல்ல மெல்ல அவளை மேலும் நெருங்கி ஒற்றை விரலால் முகத்தின் வடிவரிவதை அவன் அளக்க அவளோ கூசி சிலிர்த்து போனாள்..அவனின் விரல்கள் செம்பவள இதழ்களின் அகலத்தை அளந்து விட்டு அதை அப்படியே கிள்ளி எடுத்து தன் இதழில் ஒற்றி கொண்டு போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தியவன் தானும் மறுபக்கம் அந்த போர்வையில் புகுந்து கொண்டு ஒரு கையை அவள் தலைக்கு கீழ் கொடுத்து பின் புறமாக அவளை அணைத்து கொண்டு படுத்து விட இங்கே முல்லைக்கு கண்களில் கோடாக கண்ணீர் வழிந்தது..
என் மேல் இவ்வளவு காதலா உனக்கு பின் ஏனடா அன்று அவ்வாறு நடந்து கொண்டாய் காதலை கொடுக்கும் முன்பே ஏன் காமத்தை அளிக்க முயன்றாய் நீ உடைத்தது என் இதயத்தை மட்டுமல்ல உன் மேல் நான் கொண்ட காதலையும் தானே தங்கை காதலை பணயம் வைத்து என் காதலை கொன்று விட்டாயே பாவி...
ஊமையாக புலம்பியவள் உறங்கிவிட இரு உள்ளங்களும் அறியவில்லை பேசினால் தீராத பிரச்சனை இல்லையென்று..ஈகோ ஒன்றே அவர்களை தடுக்க மேலும் இனிய வாழ்க்கையை இடியாப்ப சிக்கலாக்கி கொள்கிறார்கள்..இங்கே கண்ணாவும் ரியோவும் ஒரு ஃபுல்லை வைத்து கொண்டு டீப் திங்கிங்கில் இருந்தனர்..எப்படி தத்தமது தோழமைகளின் வாழ்வை சீராக்குவதென்று..ஏனென்றால் அன்று மாலை கமலி இவர்கள் இருவரையும் கோவிலுக்கு அழைத்திருந்தார்..
"ஏன்பா ரியோ முல்லை கண்ணு ஏதாச்சும் உங்கிட்ட சொல்லுச்சா.."..
"எத பத்தி ம்மா"..
"ம்ம்ம் அவங்க வாழ்க்கய பத்தி தான்.."
"அத அவ தனியா சொல்லனுமா அதான் ஊருக்கே தெரியுமே"..
"டேய் கண்ணா உன் கூட்டாளி அந்த வீணாப்போனவன் என்னடா சொல்றான்"
"அவன் மட்டும் என்னத்த புதுசா சொல்லிற போறான் பாடுன பாட்ட தான் டிசைன் டிசைனா பாட்டிடு இருக்கான்"..
"இப்டியே போனா ரெண்டு பேரு வாழ்க்கையும் என்னதான் ஆகும்..அந்த பொண்ணும் பேச மாட்டுது இந்த பையனும் பேச மாட்றான் என்னதான்டா பண்றது"..
"மம்மி என்ன கேட்டா இது ரெண்டு பேரு மேல உள்ள தப்பு..பாரிக்கு உண்ம தெரிஞ்சும் அத எப்படியாச்சும் முல்லைகிட்ட சொல்லி சமாதானப்படுத்தனும் அத விட்டுட்டு என்னென்னமோ காரணம் சொல்லி மிரட்டி அந்த பொண்ணு கட்டிகிட்டான் முல்லை இன்னும் கடுப்பானது தான் மிச்சம்"கண்ணா ரியோவின் காதலை மறைத்து உண்மையை கூற
"இது வேறையா வெளங்கிரும்..இவனும் வீம்பா இருக்கான் அவளும் பேச வாய்ப்பு கொடுக்க மாட்றா..இப்டியே விட்டா சரி வராது.நாமதான் அவங்கள சேத்து வைக்கணும்"..
"மம்மி மாம்ஸ் ஆப் இந்தியா வேலைல எப்போ ஜாயின் பண்ணீங்க"...
"செருப்பு பிஞ்சிரும் நாயே மூடிட்டு சொல்றத கேளு..எப்பா ரியோ என்கிட்ட ஒரு யோசனை இருக்கு"..
"என்ன ம்மா"
"அவங்கள பேசாம தனியா எங்கயாச்சும் அனுப்பிருவோம் ரெண்டு பேரு மட்டும் தான் இருப்பாங்க எப்படியும் பேசி தான் ஆகணும்.".
"ரொம்ம்ம்ம்ம்ப பழைய டெக்கினிக்கா இருக்கே மம்மி...ஆமா உன் வயசுக்கு வேற எது வரும்ம்ம்ம்"...
"குத்துனா உன் முக்குல இருந்து ரத்தம் வரும்ம்ம்..பரதேசி இந்த யோசன கூட உனக்கு வர துப்பிலையே..துப்பு கெட்ட பயலே"...
"வாழ்த்துனதுக்கு நன்றி மம்மி இப்ப தான் தெரியுது பாரியோட அப்பா ஏன் சீக்கிரமா போயி சேந்தாருனு"..
"என்னடா வாயிக்குள்ளயே பேசுற"..
"இல்ல மம்மி எங்க அவங்கள அனுப்பலாம்னு திங்கிங் பண்றேன்.."
"நீ ஒரு ஆணியும் புடுங்க வேணா..நானே யோசிச்சு வெச்சிட்டேன்"..
"எங்க ம்மா"..
"ஊட்டில நமக்கு ஒரு எஸ்டேட் இருக்குப்பா..அங்க சொந்தமா ஸ்கூல் வேற இருக்கு..எல்லாத்தையும் நம்ம மேனேஜர் பாத்துக்குறாரு..இவங்கள அங்கே அனுப்பிட்டா"..
"ஆனா மம்மி யூ சீ முல்லைக்கு லீவு கெடைக்காது உன் பையனும் ஹாஸ்பிடல் விட்டு வர மாட்டானே"
"அது நம்ம சொந்த ஹாஸ்பிடல் தானே..முல்லை ஸ்கூல்ல லீவுக்கு நா ஏற்பாடு பண்றேன்..அவகிட்ட ஏதாச்சும் அளந்து விட்டு லீவு எடுக்க வைக்குறேன் நீங்க ரெண்டு பேரும் எப்படியாச்சும் பேசி அவங்கள சரி கட்டி அங்க அனுப்பி வைக்குறிங்க"..எதை பேசி அவர்களை அனுப்புவது என்று தான் டீப் திங்கிங்..
அங்கே யாராவது வந்து தன்னை விடுவிக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தது அந்த ஆவி...
Comments
Post a Comment