இஞ்சி இடையழகி 4


காலையில் பரபரப்பாக வெளியே கிளம்பி கொண்டிருந்தான் பாரி.."டேய் எங்கடா போற கல்யாணம் பண்ணி நாலஞ்சு நாளு தான் ஆகுது உங்கள பாக்க வீட்டுக்கு விருந்தாளிங்க யாராச்சும் வருவாங்க நீ இல்லேன்னா எப்டிடா".. 

"எந்த பெருச்சாளி வந்தாலும் எனக்கு கவல இல்ல அதான் உன் மருமக இருக்காளே அவள பாத்த என்ன பாத்த மாறி" . 

மென்மையாக"நீ வேற அவ வேற இல்லேனு சொல்றியா ராசா,"

"சீ சீ உன் மருமக ரெண்டு பேருக்கு சமம்னு சொல்றேன்"... 

"வாயில நல்லா வந்துரும் நாயே எப்போ பாரு அந்த பொண்ண ஏதாச்சும் சொல்லிட்டு வெளிய பொறுக்க தானே போற அதுக்கு முன்னாடி கொட்டிக்கிட்டு போ"

"வெளிய சாபிடுக்குறேன்ம்மா"... 

"டேய் என் மருமக தாண்டா சமைக்குற சாப்டு போ.. அப்டியே ஒரு வார்த்த நல்லா இருக்குனு சொல்லு வெளங்குதா".. 

"நல்லா இருக்குனு ம்ம்ம் சொல்லிருவோம்".. கமலி பாரியை முறைத்து கொண்டு அடுக்களைக்குள் செல்ல அங்கே ஆசை மருமகள் காலை சிற்றுண்டி செய்து கொண்டிருந்தாள்..சப்பாத்தி அதற்கு கோழியை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் உருளை கிழங்கு காலிஃலாவர் கேராட் சேர்த்து அருமையாக குர்மா வைத்திருந்தாள்.. வாசமே ஆளை இழுக்க "கண்ணு வாசமே ஆள இழுக்குது நீ வேணும்னா பாரேன் என் புள்ள இத சாப்டுட்டு உன்ன பெருசா ஏதாச்சும் வாங்கி தர போறான்"... 

"உங்க புள்ள தானே பெரிய ஆப்பா வேணா வைப்பான்"மனசுக்குள் நினைத்தவள் வெளியே சிரித்து வைக்க அதற்குள் சாப்பிட அமர்ந்தான் பாரி...முல்லையே அவனுக்கு பரிமாற என்னதான் முகத்தை கடுமையாக வைத்திருந்தாலும் அவன் என்ன கூற போகிறான் என்ற ஆர்வமே அதிகமாக இருந்தது.. உண்மையில் சப்பாத்தி குர்மா அமிர்தமாக தான் இருந்தது.. தன்னையே ஆர்வமாக நோக்கும் விழிகளை பார்க்கையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மறு பக்கம் அவளை சீண்டும் எண்ணமே வர"அம்மா அம்மா"... 

"ஏன்டா சும்மா அம்மா நொம்மானு கூவுற அதான் உன் பொண்டாட்டி பக்கத்துல குத்துகல்லாட்டம் இருக்காள அவ கிட்ட சொல்ல வேண்டிதானே".. 

"ப்ச் சும்மா சொல்லக்கூடாது இன்னக்கி டிபன் செம்ம... அதுக்கு வரும்போது உன் மருமகளுக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வரேன் அத சொல்லத்தான் கூப்டேன்"... அவன் கூறியதை கேட்டு ஜிவ்வென்று வானத்தில் பறந்த மனதை அடக்கி 

"அத்த நல்லா இருந்தா இன்னும் கொஞ்சம் முழுங்கிட்டு போக சொல்லுங்க உன் புள்ள வேண்டா வெறுப்பா வாங்கி கொடுக்குற கிப்ட் எல்லாம் எனக்கு தேவையில்ல"... வாய் பேசியதே தவிர கை அவனுக்கு பக்குவமாக பரிமாறியது.. 

நமட்டு சிரிப்புடன் உண்டு முடித்தவன் அருகில் நின்றிருந்த அம்மாவிடம்"ம்மா கெளம்புறேன்,..
"

"எரும எரும எதுக்குடா காது ஜவ்வு கிழிய கத்துற நா என்ன பங்களாதேஷ்லயா இருக்கேன் பக்கதுல தானே இருக்கேன்"...

"எனக்கு என்ன கண்ணு நொல்லயா பொதுவா சொன்னேன்"...முல்லை இதனை கண்டு கொள்ளாமல் உண்பதில் குறியாக இருக்க 

"திங்குறதுலயே குறியா இருக்கடா என் பொண்டாட்டி"...அதற்கு மேல் வெளியே கிளம்பியவன் கண்ணனை காண ரெஸ்டாரன் சென்றான்.. அங்கே அதே ரெஸ்டாரனில் அமர்ந்திருந்த ரியோ மூளையை உருக்கி கொண்டிருந்தான்..முல்லையின் கண்களில் துளியும் சந்தோசம் இல்லை.. புதிதாக கள்ள தனம் ஒன்று குடியேறி உள்ளது..அவளிடம் கேட்டால் வாயை திறக்க மாட்டாள்..இந்த திடீர் கல்யாணத்தின் நோக்கம் என்ன அவன் யோசித்து மண்டை காய்ந்து கிளம்பும் வேளை பாரியும் கண்ணனும் உள்ளே வர அதுவும் இவன் அமர்ந்திருந்த மேஜை பக்கம் வர சட்டென்று அமர்ந்தான்..நாற்காலி மறைத்திருந்ததால் அவர்கள் இவனை கவனிக்க வில்லை... 

கண்ணனே முதலில் பேச்சை தொடர்ந்தான்.. "டேய் ரெண்டு வாரம் தான் என் பாட்டிக்கு இழுக்குதுனு ஊருக்கு போயி திரும்பி வர்றதுக்குள்ள கல்யாணம் பண்ணிருக்க..நீலாம் என்னடா ஜென்மம் உயிர் நண்பன் கிட்ட ஒரு வார்த்த சொன்னியா துரோகி ஆனா ஒன்னு மச்சி எப்டி முல்லை உன்ன கட்டிக்கிச்சு அந்த உண்மைய மட்டும் நீ சொல்லிரு"

" மச்சி முன்னாடியே சொல்றேன் கடுப்பாகாதே டேய் ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு டா... "

" என்னடா பண்ணி தொலச்ச"

" முல்லைக்கு இந்த கல்யாணத்துல துளியும் இஷ்டமில்லை... நான் அவளை ப்ளக் மெயில் பண்ணி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கேன்... "

"டேய்"

" ஆமா மச்சி... எப்படியாவது அவள கல்யாணம் பண்ணனும்னு நெனச்ச.. அந்த நேரம்தான் ரியோ என் தங்கச்சிய லவ் பண்றான்னு எனக்கு தெரிஞ்சது.. அத என்கிட்ட சொன்னதே முல்லை தான்.. இது ரியோவோட கெட்ட நேரமா இல்ல என்னோட நல்ல நேரமா எனக்கு தெரியல.. அவளோட ஃபிரண்ட் காதலுக்காக எங்கிட்ட பழச மறந்து கெஞ்சுகிட்டு இருந்தா.. அப்போதான் மச்சி எனக்கு இந்த யோசனை வந்துச்சு.. தப்புதான் ஆனா என்ன பண்றது.. ரியோக்கு என் தங்கச்சி கட்டி கொடுக்கணும்னா நீ என்ன கல்யாணம் பண்ணனும்னு சொன்னேன்... அதுவும் ஒரே வாரத்தில்.."... 

" அடப்பாவி நீ எல்லாம் ஒரு மனுஷனா.. டேய் உன் தங்கச்சி நிலைமையை யோசிச்சு பார்த்தியா... ரியோ மாதிரி மாப்பிள உங்களுக்கெல்லாம் இந்த ஜென்மத்துல எங்கயாச்சும் கிடைப்பானா.. நீ என்னனா உன் தங்கச்சி வாழ்க்கை காட்டி ஒரு பொண்ணோட வாழ்க்கையில் விளையாடி இருக்க... கொஞ்சமாச்சும் அந்த புள்ளையோட மனசை யோசிச்சு பார்த்தியா.. சும்மாவே உனக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்.. இதுல ஜென்மத்துக்கும் சேரவே முடியாத மாதிரி செஞ்சிருக்க.. உண்மைய சொல்லு அவளை பழிவாங்க தான் இப்படி செஞ்ச. "... 

" அவ பண்ண தப்புக்கு அவ என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.. ஆனால் உண்மையாகவே நான் அவளை காதலிக்கிறேன் மச்சான்.. அவ இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை.. அன்பு அவளுக்கு மாப்பிள்ளை பார்க்குறாருனு கேள்விப்பட்டேன்.. அவ அண்ணன் சொன்னா கண்ண மூடிகிட்டு கிணத்துல கூட விழுவா.. அப்படி ஏதாச்சும் ஒரு மாப்பிள்ளை வந்து குட்டையை குழப்பிருவானோனு பயந்து தா இப்டி பண்ணிட்டேன்".. 


"நீ என்ன சொன்னாலும் இப்டி ஒரு பொண்ண நிர்பந்தத்துல நிறுத்தி கல்யாணம் பண்றது தப்பு டா"... 

'எனக்கு அதெல்லாம் தேவையில்ல...எனக்கு முல்லை வேணும் அவ என்கூடவே இருக்கனும்"

"உயிரோடவா பொணமாவா"

"டேய்'

"என்ன மச்சி காண்டாவுற..உண்ம அதானே.. அவளுக்கு உண்ம தெரிஞ்சா உன் மூஞ்சில காரி துப்ப மாட்டா..இல்ல அவளால அத தாங்க தான் முடியுமா"

"முடியாது தான்.. அதுக்கு தானே கடைசி வர அந்த உண்மைய சொல்லவே மாட்டேன்".. 

"டேய் எப்படியாச்சும் அவளுக்கு தெரிஞ்சு போச்சுன்னா, 

"தெரிய வாய்ப்பே இல்ல..விட்டா நீயே சொல்லுவ போல மூட்டிட்டு இரு"... 

"அப்போ உன் தங்கச்சி கல்யாணம்"

"கொஞ்ச நாள் போட்டும் மச்சி"... 

இவனுங்க எந்த உண்ம முல்லைக்கு தெரிய கூடாதுனு பேசுறானுங்க ஒரு எழவும் புரியலையே... தலை சுற்றி போய் அமர்ந்திருந்தவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்றியதை போல அந்த உண்மை தெரிவிக்க பட உடைந்தே போனான்.. இது மட்டும் முல்லைக்கு தெரிந்தால் அவள் நிலை ஐயோ இறைவா இப்போது பாரியின் மேல் அவனுக்கு தனி மரியாதையே வந்தது..அதோ பாரியும் கண்ணனும் கிளம்பி போக இங்கே ரியோவும் கிளம்பினான்.. 

சிக்னலில் கார் நிற்க விண்டோ தட்ட பட திறந்தால்"அண்ணா கிளி வாங்குறீங்களா"...ஒரு சிறுவன் கையில் சிறிய கூண்டோடு நின்றிருக்க 

"என்ன கிளியா.. டேய் பொம்ம ஜாமான்னு போயி இப்ப கிளிக்கு வந்துடிங்கள"

"அண்ணா இல்லேனா இது எங்க சொந்த கிளி நல்லா பேசும் அண்ணா"

கண்ணா"பேசுமா எங்க பேச சொல்லு"


"நீங்க பேசுங்கண்ணா"

கண்ணா"ஹாய்"

கிளி"சனியன் சனியன்"... 

கண்ணா"டேய் என்னடா இப்போதான் பெயர்ச்சி ஆகி அந்தாளு அந்தப்பக்கம் போயிருக்காரு அவர உன் கிளி கூப்பிடுது"

"இது தான்ண்ணா பிரச்சன.. இந்த கிளிய என் மாமா வளத்தாரு அவரு லோக்கல்லா பேசி கிளிய பழகிடாரு இப்ப மாமா செத்துட்டாரு.. இந்த கிளிய வளக்காலம்னு பாத்தா இது ஓவரா பேசுது"

கண்ணா"அதனால இளிச்சவாயன் தலையில கட்டிடலாம்னு நெனச்சியா".. 

"ண்ணா இல்லண்ணா வேணும்னா வாங்குங்க இல்லனா விடுங்க".... 

பாரி"தம்பி கிளி எவ்ளோ"

கண்ணா"டேய் மச்சி இந்த கிளி தேவையாடா உனக்கு"


பாரி"ஆமா தம்பி எவ்ளோ"

"ண்ணா 1000 ருபா ண்ணா அது போதும்"சின்ன கூண்டில் அடைக்கப்பட்டு அவனை முறைத்த கிளியை வாங்கி கொண்டான்.. 

"டேய் இப்ப ஏண்டா இத வாங்குனா"

"எல்லாம் காரணமாத... "

"என்னடா காரணம் மச்சி சொன்னா கேளு ஏற்கனவே உன் ராசி விருச்சிகம் வீணாப்போயி வெளங்காம போயிருச்சு..இப்ப தா பெயர்ச்சி ஆகி போனவர நீயா வெத்தல பாக்கு வெச்சு கூப்டுற..சொந்த காசுல சூனியம் வெச்சிக்காத சொல்லிட்டேன்"... 

"அதெல்லாம் பாத்துக்கலாம் மச்சி நீ சும்மா இரு".. அந்த கிளிக்கு அழகிய கூண்டு வாங்கி அதை அதில் இடம்மாற்றி கண்ணனை ட்ரோப் செய்து விட்டு வீட்டுக்கு சென்றான்... 

"ம்மா"

"என்னடா வந்தோனே கூவுற"

"எங்க உன் மருமக"

"உள்ளதா இருக்கா..ஏன் கையில என்ன கூண்டு மாறி இருக்கு"


"ம்ம்ம் உன் மருமகளுக்கு"

"பரிசா டா.. என் செல்லம்.. இருடா முல்லைய கூப்பிடுறேன் முல்லைம்மா இங்க கொஞ்சம் வாயேன்"...கமலின் குரல் கேட்டு வந்தாள் முல்லை.. அவளிடம் கூண்டை கொடுக்க புரியாத பார்வையுடன் வாங்கியவள் கிளியை பார்க்க அதுவோ அவளை முறைத்தது... 

"ஐய் கிளி எனக்கா பாரி.. அத்த இங்க பாருங்க கிளி...ஹாய் பேபி உன் பேரு என்ன"... 

"சனியன் சனியன்'.... ஒரு கிளி இப்படி பேச அதிர்ந்து போன முல்லையும் கமளியும் பாரியை முறைக்க

"ம்மா என்ன என்ன முறைக்குறிங்க சிக்னல்ல ஒருத்தன் வித்தான் உன் மருமகளுக்காக வாங்கிட்டு வந்தேன்"

"அதுக்குன்னு என்னடா கிளி இப்டி சொல்லுது..நடு வீட்ல இப்டி சொன்னா வீடு விளங்குமா"


"அப்போ சைடுல சொன்னா வீடு விளங்குமா"


"வெளக்கமாறு பிஞ்சிரும்.. இந்த கருமத்த கொண்டு போயி எங்கயாச்சும் விட்டு வாடா"... 

"ம்மா காசு கொடுத்து வாங்கியிருக்கேன் விட்டு வர சொல்ற... "


"அத்த எனக்கு இந்த கிளிய ரொம்ப பிடிச்சிருக்கு நானே வளக்குறேன் ப்ளீஸ்"


"இல்ல கண்ணு அது எப்டி சொல்லுது பாரு"

"அத்த மனுசனுக்கே அறிவில்ல இது கிளிதானே விடுங்க பாத்துக்கலாம்"முல்லைக்காக கமலி சம்மதிக்க கோவக்கார கிளியை பாரியின் செல்ல கிளி கொஞ்ச அதை கண்டு உள்ளே புன்னகைத்தான் பாரி... 

இங்கே ரியோ பாரி கண்ணா பேச்சில் உழன்று கொண்டிருந்தான்.. அவன் காதுகளில் விழுந்தது"மச்சி முல்லை உன்ன காதலிக்கல.. உன்ன அண்ணன தான் காதலிச்சா."

"என் அண்ணன பாரினு நெனச்சு தானே காதலிச்சா..அவன் அவள என்ன மாறியே நடிச்சு ஏமாத்துனான்.. அவளுக்கு நா ட்வின்ஸ் பேபின்னு தெரியாது மச்சி அவளுக்குன்னு இல்ல எனக்கே தெரியாம தானே இருந்துச்சு"..... 

"சரிடா உன்ன மாறி நடிச்சு ஏமாத்துனாலும் அவ காதலிச்சது உன் அண்ணா வளரிய...பாரிய இல்ல.. "

"அவ வளரியோட உருவத்த பாத்துருக்கலாம் ஆனா அவ மனசுல காதலிச்சது பாரின்ற என்ன.. மச்சி இப்ப வளரி இல்ல.. அவன் இருந்தான்னு அடையாளமே இல்ல.. ஒன்லி பாரி வேந்தன் தான் நோ மோர் வளரி வேந்தன்...புரிஞ்சிதா".... இதை கேட்டு தான் ரியோ குழம்பி தவித்தான்.. 

பாரி இரட்டை குழந்தைகளா அப்போது முல்லை காதலித்தது யாரை முதலில் முல்லை காதலித்தலா அதும் தனக்கு தெரியாமல் அப்படியென்றால் வளரி எங்கே பாரி ஏன் முல்லையை நிர்பந்த படுத்தி மணந்தான் இதற்கான பதில் இருப்பது கண்ணாவிடம் அவனை தனிமையில் சந்திக்க முடிவு செய்தான் ரியோ…

Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி