இஞ்சி இடையழகி 24


முல்லை புதியவனை பாரியின் நண்பன் என்ற முறையில் அண்ணா என்று அழைக்க பாரி வந்த சிரிப்பை அடக்கி கொண்டான்..ஆனால் வளரியோ அப்படி அழைக்க வேண்டாமென்றும் தனக்கொரு தங்கை இருந்து சிறுவயதில் இறந்து போனதால் அடுத்தவரின் அண்ணா என்ற அழைப்பு அவனுக்கு வேதனை ஏற்படுத்தும் என போலி வருத்தத்துடன் கூற முல்லை அதனை உண்மையென நம்பி இனி அப்படி கூப்பிட வில்லை தங்களின் பெயர் என வினவ ஒரு வினாடி கமலி பாரியை நோட்டம் விட்டு விட்டு வளரி என்றான்..முல்லை"வளறியா என் ஹஸ்பண்ட் பேரு பாரி உங்க பேரு வளரி பாருங்களேன் ட்வின்ஸ் பேரு மாறி இருக்கு"...அவள் பேசிக்கொண்டே போக மற்ற மூவரும் வெவ்வேறு மனநிலையில் உழன்றனர்.

முல்லை வளரி பாரியின் பெயர் ஒற்றுமையை குறிப்பிட்டு பேச பாரிக்கு நெருப்பு மேல் நிற்பதை போன்ற தவிப்பு தம்பியின் தவிப்பு வளரியின் பூரிப்பு.. ஓர கண்ணால் அம்மா தம்பி இருவரும் படும்பாட்டை அடக்கப்பட்ட புன்னகையுடன் ரசித்தான் வளரி..அதற்குள் முல்லை கமலியிடம் இரவு சமையலை பற்றி வினவ தாயுடன் பேசும் அவளையே வளரியின் கண்கள் மொய்த்தது..அவன் பார்வை அத்து மீறிருந்தால் பாரி பொறுத்திருக்க மாட்டான் ஆனால் அவன் பார்வையோ அவள் முகத்தையும் உடையின் மறைவில் உரசி கிடைக்கும் தாலி சரட்டையும் வலியுடன் கண்டு மீண்டது..கமலியுடன் பேசிக்கொண்டே இருந்தவள் சற்று தடுமாற அவளை தாங்கிட வளரி நெருக்கும் முன்னரே பாரி கைகளில் ஏந்திருந்தான் தன்னவளை.. 

இறுக்க மூடிய கரங்களில் நரம்புகள் தெரித்தாலும் ஆச்சர்யம் இல்லை அந்த அளவு கரங்களை மூடி கொண்டு அசையாமல் நின்றான் வளரி.. பாரியின் செய்கை இவள் என்னவள் இவளை நெருங்காதே என்பது வளரிக்கு நன்கு புரிந்தது..முல்லையை தூக்கி கொண்டு அவன் அறைக்கு செல்ல அதுவரை பொறுமை காத்த கமலி வளரியை இழுத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றார்.. 

அவனை தீப்பார்வை பார்த்தவரை"ஏன் மா இப்டி பாக்குறீங்க ஓ உங்க சின்ன மகன் தான் என்ன பெத்த உங்களுக்கே அடையாளம் தெரியாம பண்ணிட்டானே என்ன செய்ய..நா வளரி மா உங்க மூத்த பையன்"... 

"நீ என் பையன்றது உண்மைன்னா இந்த அம்மா சொல்றது கேளுடா.. உன் தம்பியே இப்போ தா அந்த பொண்ணு கூட சந்தோசமா வாழுறான்..நீ அடிச்சு வெச்ச கூத்த சரி பண்ணவே அவனுக்கு நாக்கு தள்ளிடுச்சுடா.. எல்லாம் சரியாகி வர்ற நேரத்துல குட்டய குழப்ப ஏன்டா வந்த".. 

"உன் புருஷனுக்கு பயந்து என்ன தூக்கி எரிஞ்சிட்ட..நானே எல்லாம் தெரிஞ்சு திரும்ப வந்தப்போ என்ன வேணான்னு தூக்கி போட்டதுக்கு காரணம் சொன்ன..உனக்கு தெரியுமா மா இத்தன வருஷத்துல நா உன்னயும் பாரியயும் மறந்ததே இல்ல...ஆனா அன்னைக்கு செஞ்ச ஒரு தப்பு என்ன உங்கள பாக்க விடல..அதே மாறி முல்லையயும் என்னால மறக்க முடிலமா..உங்கள பாக்காம இருந்த என்னால அவள பாக்காம இருக்க முடியல அதான் இந்தியா வந்தேன்".. 

"சரிடா நீ நெனச்சு வந்த முல்லை கல்யாணம் ஆகாதவ.. இப்ப இருக்குற முல்லை கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைய பெக்க போறவ... டேய் பாவம்டா உன் தம்பி உன்னால அவன் பட்டது எல்லாம் போதும்டா உன் காலுல கூட விழறேன் இங்க இருந்து போயிறேன்... ".. 

"ம்மா என்ன பாத்தா உனக்கு எப்டி இருக்கு என்னமோ வில்லன் ரேன்ஜ்க்கு பேசுற உண்மையில உங்க கூட ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்னு வந்தேன் ஆனா எப்ப தம்பி பொண்டாட்டிய தள்ளிட்டு போயிருவேன்னு நெனச்சு பேசுனியோ நா முடிவு பண்ணிட்டேன்..நா ஒன்னும் அவன் பொண்டாட்டிய தேடி வரல.. என் காதலிய தேடி வந்தேன்..ஒருவேள முல்லையே பாரி வேணா இந்த வளரி தான் வேணும்னு சொன்னா அவள என்கூடவே கூட்டிடு போயிருவேன்".... கமலி நின்ற இடத்தில் சிலையாக நிற்க முல்லையை ஓய்வெடுக்க வைத்து விட்டு கீழே வந்த பாரி வளரி கூறியதை கேட்டு அவனது சட்டையை கொத்தாக பற்றி இழுத்து இடைவிடாமல் நாலைந்து அறை விட அதை தடுக்கவும் சக்தியற்று நின்றிருந்தார் கமலி..ஆனால் வளரியோ சளைக்காமல் பாரியின் கோபத்தை ஏற்றுக்கொண்டான்.. 

"ஏன்டா நாயே என்ன தைரியம் இருந்தா எவ்ளோ அசிங்கமான எண்ணம் இருந்தா இப்டி பேசுவ..இப்போவே இந்த வீட்ட விட்டு வெளிய போட பொருக்கி ராஸ்கல்"..சட்டையை பற்றிருந்த தம்பியின் கரங்களை விலகிய வளரி 

"வெளிய போறதா..தம்பி.. எனக்கும் இந்த வீட்ல ரைட்ஸ் இருக்கு..இன்னொரு விஷயம் நீ என் முகத்த தா மாத்திருக்க மூளைய இல்ல..நா விஷான்னு நிரூபிக்க என் பாஸ்போர்ட் இருக்கு..இன்டர்நேஸ்னல் டிரைவிங் லைசென்ஸ் என்னோட ஸ்கூல் காலேஜ் சர்டிபிகேட் ஏன் என்ன வளத்த அப்பா அம்மா எல்லோரும் இருக்காங்க..அன்னைக்கு நடந்தது நா எழுதுன வரைக்கும் தான் உனக்கு தெரியும் எழுத்துக்கும் ரியளுக்கும் எவ்ளவோ வித்தியாசம் இருக்கு..அத அவகிட்ட சொன்னாலே போதும்"

"கண்டிப்பா உன்ன செருப்பால அடிப்பா".. 

"உன் மூஞ்சிலயும் காரி துப்பிட்டு போயிருவா பரவாலையா"..வளரி பரிகாசத்துடன் வினவ அந்த வார்த்தையின் வீரியம் பாரி அறியாததா அதற்கு பயந்து தானே முல்லை எவ்வளவு வேதனைப்படுத்தினாலும் அதனை தாங்கி தன் மீது எள்ளளவும் தவறில்லாத நிலையிலும் தண்டனை ஏற்றான்..இப்போது இதனை கூறினால் அவள் நிலை அவள் வயிற்றில் உலகை காண துடிக்கும் தன் உயிர்களின் நிலை...இப்போது தான் மனஉளைச்சலில் இருந்து மீள தொடங்கியவள் நத்தையாக தன்னுள் சுருண்டு கொள்வாளே.. அதற்காக இந்த அயோக்கியனுக்கு பயந்து அடிபணிவதா"...

"என்ன தம்பி பேச்சே காணோம்..எப்டி வரும் எல்லாமே படமா ஓடிருக்கும் அதான் பேச முடில.."

"உனக்கு என்ன வேணும்"..

"எனக்கு தேவை உன் பொண்டாட்டி இல்ல..என்னோட முல்லை அவ்ளோதான் அவ கிட்ட ஒரு நல்ல ஃப்ரன்ட்டா பழகுவேன்..அவளுக்கு பேபி பொறக்குற வரை இங்கதான் இருப்பேன்..என் லவ் உண்மைனா அத நா சொல்லாமலே என் உணர்வு சொல்லும்..ஏற்கனவே உங்களுக்குள்ள சண்டையில தான் வாழ்க்கை போது போல.அப்டி ஒரு வாழ்கை அவளுக்கு வேணம்னா அவ என்கூட வரட்டும்..நானா அவக்கிட்ட நா விஷான்னு சொல்ல மாட்டேன் நீங்களா சொல்ல வெச்சீராதீங்க என்ன வேணும்னு கேட்ட நா சொல்லிட்டேன்".. பாரி ஆழ்ந்த பார்வையுடன் அண்ணனை பார்த்து கொண்டிருந்தான்..வாயை திறந்து ஒன்றும் பேசவில்லை.. கமலி தான் 

"அட வீணா போனவனே ஏன்டா வந்து என் வயித்துல பொறந்த தம்பி பொண்டாட்டிய எடுத்துக்க நெனைக்குறியே நீ நல்லாருப்பியா சாத்தியமா இல்லடா நா வயிறெரிஞ்சு சொல்றேன் இன்னைக்கு என் மவன் மனசு எப்டி கலங்கி நிக்குறானோ அதே மாறி நீ வாழ்க்க பூரா கலங்கி நிப்ப"... வளரியை ஓயாமல் அடித்து கொண்டே சாபமிட்டவரை பிரித்தெடுத்தான் பாரி..வளரியை நோக்கி"நீ சொன்னதுக்கு உண்மையா உன்ன வெட்டிருக்கணும் ஆனா நா அத செய்ய மாட்டேன் நீ என்ன நெனச்ச..என் கூட தினம் சண்ட போடுறதால என் முல்ல என்ன விட்டுட்டு உன் கூட வந்துருவானா அவ சண்ட போடுறது கூட எனக்காக தான் அதும் என்கிட்ட இல்ல..உண்மையாவே அவ கிட்ட அவளே சண்ட போடுறா இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது ஆனா ஒன்னு அத்து மீறி ஏதாவது நடந்துகிட்ட நானே பாக்காத பாரிய நீ பாப்ப..அவ என் மனைவி"...பாரி சொல்லிவிட்டு கமலி கூப்பிட கூப்பிட வெளியே சென்று விட்டான்..வளரி முன்பு வந்த போது தங்கியிருந்த அறைக்கு சென்று விட்டான்..கமலி பூஜை அறைக்குள் கண்ணீருடன் தஞ்சம் புகுந்தார்..

வெண்பா கைகளை நெஞ்சருகே கட்டி கொண்டு உம்மென்று அமர்ந்திருந்தாள்.கடுங்கோபத்தில் அவள் இருப்பதற்கு அறிகுறி அது..இன்று அவளை வெளியே அழைத்து செல்வதாக கூறிய கணவன் இரவாக போகிறது இன்னும் வரவில்லை அவனுக்காக ஆர்ப்பாட்டமில்லா அலங்காரத்தில் அழகோவியம் அலுத்து போய் அமர்ந்து விட்டது..முகத்தில் கவலை அப்பி கொண்டு வந்து சேர்ந்தான் கண்ணா..இவ்வளவு நேரம் பாரியுடன் தான் பேசிக்கொண்டிருந்தான் இல்லை அவனை கழுவி ஊற்றி குமுறி கொண்டிருந்தான்..

"டேய் அறிவு இருக்காடா உனக்கு அவ என்ன பொண்ணா பொருளா அண்ணனும் தம்பியும் பங்கு போட..அந்த நாய் அப்டி பிளாக்மெயில் பண்ணுச்சினா என் கிட்ட சொல்லவேண்டிதானே பெண்டிங்ல இருக்குற கேஸ்ஸ போட்டு உள்ள வெச்சு உரிச்சிருப்பேனே அத விட்டுட்டு ஏன்டா பரதேசி இப்டி பண்ண"...

"இல்ல மச்சான் உனக்கு புரியுதா நா ஏன் இப்டி பண்ணேன்னு வளரி கண்ணுல எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்ல..அவன் ஏன் இப்டி பண்றானு புரில.."

"அத கண்டுபுடிக்க போறியா"..

"சீ ரொம்ப முக்கியம் இப்ப..அவன் நல்லவன் டா..அவன் என்ன செய்ய பாக்குறானு பாப்போம்...எனக்கு என் முல்லை பத்தி தெரியும்..முல்லை மனசு எப்பவும் எனக்கு மட்டும் தானு அவனுக்கு புரியனும் அதுக்கு தான் சம்மதிச்சேன்..எனக்கு என் அண்ணனும் நல்லா இருக்கனும்..முல்லைய முழுசா மறந்துட்டு"..

"இது விஷ பரிட்ச்சை மச்சான் உன் அண்ணன ஏற்கனவே நீ லவ் பண்ற பொண்ணுன்னு தெரிஞ்சே வேலைய பாத்தவன்..இப்ப அவன நம்பி வீட்டுல விட்டுட்ட முல்லை வேற இப்போதான் கொஞ்சங் கொஞ்சமா மனசு மாறி வர்ற நேரத்துல"..

"எனக்கு வேற வழி இல்ல மச்சான்..என்ன புரிஞ்சிக்கோ..சரி வெண்பா என்ன பண்றா"

"அவளா ஐயோ மச்சான் அவள வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னேன் டா இன்னைக்கு இந்நேரம் கெளம்பி காத்திட்டு இருப்பா.."

"ஓகேடா நீ கெளம்பு நானும் வீட்டுக்கு போறேன்"...நண்பனின் முடிவில் திருப்தியில்லாமல் கிளம்பினான் கண்ணா..அவனும் வெண்பாவும் மனமொத்த தம்பதிகளாக வாழ தொடங்கி விட்டனர்..நட்பாக ஆரம்பித்த அவர்களின் வாழ்வு மெல்ல காதலாக மாறி காவியம் பாடி கொண்டிருக்கிறார்கள்..செய்கை செய்யும் போது நளினமாய் அசையும் கரங்களின் அசைவிலும் கரை மோதி செல்லும் அலையை போல அங்கும் இங்கும் சுழன்று அவன் மனதில் மோதி செல்லும் கருவிழிகளில் சொக்கி போனான் கண்ணா..இருவர் மனதிலும் காதல் வந்து யார் முதலில் சொல்வது என குழம்பும் நேரம் ஒரு அவளுக்கு மிக பிடித்த லாலி பாப் மிட்டாயை ஐ லவ் யூ என எழுதுகளாக அடுக்கி வைத்து வெண்பாவை அழைத்து வந்து காண்பித்தான்..அவள் வெட்கத்தில் சிவந்தாலும் ஒரு மிட்டாயை பிரித்து ருசிக்கையில் அவளின் மனமும் புரிந்தது..

அதிலிருந்து அவர்கள் வாழ்க்கை அழகாக செல்ல தொடங்கியது..தாமதமாக வந்தவன் முகத்தில் தெரிந்த சோகம் வெண்பாவின் கோபத்தை விரட்டியது..கண்ணா முன் சென்று கண்களால் வினவினாள்..அவன் மணியை பார்த்து உள்ளங்கையை மடக்கி நெஞ்சில் வைத்து மன்னிப்பு வேண்ட அவளோ அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..கணவன் வேதனை புரிந்து அவனுக்கு மருந்தனால் வெண்பா..


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்