இஞ்சி இடையழகி 15
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா
தடுமாற்றமா..
என் நெஞ்சிலே
பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
இதே நிலைதான் பாரியின் உள்ளத்தில்..முல்லை கத்தி தாம் தூமென்று குதிப்பாள் என்று தான் நினைத்திருந்தானே தவிர அவள் மணவிலக்கு கேட்ப்பாள் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை..அவன் அறியாததா அவள் பாரியை எத்துணை தூரம் விரும்புகிறாள் என்று..பிறகு அவளின் சிறு பிள்ளை தனத்திற்கு காரணம் என்ன..வேறு ஒன்றும் பெரிதாக இல்லை..வளரி அவளிடம் நடந்து கொண்ட விதம்..அவள் கண்களுக்கு அவன் பாரிதானே தான் யாரை நல்லவன் என்று நினைத்து மனதை பறிகொடுத்தளோ அவனே அவள் மானத்தை பறிக்க முயன்றால் பாவம் பேதை அவள் எப்படி தங்குவாள்...
முல்லைக்கு ரியோ மீது கோபம் இல்லை ஆதங்கம் மட்டுமே..நண்பனை நன்கறிந்த அவளால் அவனை தவறாக எண்ண இயலவில்லை..ஆனால் பாரியை அவள் நம்புவதாக இல்லை..பழையதை மறந்து வாழவும் முடியாமல் பாரியிடம் இருந்து விலகவும் முடியாமல் முல்லை தவிக்கலானாள்..பாரிக்கோ அண்ணன் என்ற ரூபத்தில் வில்லனாக வந்து விட்டான் ஒருவன்..இனி பழையதை பேசி ஒன்றுமில்லை..முல்லையின் மனதை மென்மையாக கவர முயன்றால் அது அடுத்த ஜென்மத்திலும் இளகாது..எனவே அதிரடி காதலே இனி தன் ஆயுதம் என முடிவெடுத்தான்..
குளியலறையில் ஷவரை திறந்து அதனடியில் நின்றவன் கண்களில் கண்ணீர் வழிந்து தண்ணீரோடு கலந்தது..முல்லையை பழிவாங்க வேண்டும் அவளை காலில் விழ வைக்க வேண்டுமென்ற அவன் முடிவுகள் எங்கேயோ கண் காணாத தூரத்திற்கு சென்று விட்டன..பாரி அவள் காலில் விழுந்து கெஞ்சினால் ஒருவேளை ஏதாவது பலன் கிட்டலாம் ஆனால் அவனால் அதும் முடியாது..அழுதான் கண்களில் கண்ணீர் வற்றி இனி அழுவதற்கு கண்ணீர் ஸ்டாக் இல்லையெனும் வரை அழுதான்..குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்டது அவன் எந்த நிலையில் விட்டு சென்றானோ அதே நிலையில் படுத்து கிடந்த முல்லையை தான்..
மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது..அவளின் உதடு சிவந்து வீங்கி கிடந்தது..எப்டிதான் இவளுக்கெல்லாம் நிக்காம கண்ணுல தண்ணி வருதோ தெரிலையே ஒன்றும் பேசாமல் உடை மாற்றி வெளியே சென்று விட்டான் பாரி..
கீழே கமலி மகனிடம்"ஏன்டா பாரி ஊட்டி போனீங்களே நல்லா என்ஜோய் பண்ணிங்களா"..
"என்ஜோய் ம்ம்ம் அதெல்லாம் நல்ல ஜாலியா தான் இருந்தோம்"
"அப்றம் ஏண்டா என் மருமக மூஞ்ச தூக்கி வெச்சிருக்கா உண்மய சொல்லுடா என்ன பண்ண அவள"..
"நான் என்னத்த பண்ணேன் அந்த பேய் தான் எல்லாத்தயும் பண்ணுச்சு"..
"என்ன எழவ தான்டா வாய்க்குள்ளேயே முணுமுணுப்ப"...
"எம்மா பேசியே கொல்லாத சோத்த போடு"
'இருடா அவளும் வரட்டும் சேந்து சாப்பிடலாம்"
"அவ இன்னும் குளிக்கவே இல்லம்மா அவ குளிச்சு சீவி சிங்காரிச்சு வர்றதுக்குள்ள எனக்கு சங்கு தான்"..
"உன் நாரவாய கழுவுடா எரும..அங்க பாரு என் மருமக குளிச்சு பிரெஷ்ஷா வர்ற"..பாரி திரும்பி பார்த்தான் புதிதாக பூத்த மலர் போல முல்லை இறங்கி வந்து கொண்டிருந்தாள்..கீழே வந்தவள் நேராக பிக்காச்சு கூண்டின் அருகே சென்றாள்..அது ஏற்கனவே செர்ரி பழம் உண்ட களைப்பில் உறங்கி கொண்டிருந்தது..பிகாச்சு பிகாச்சு இங்க பாரு நா வந்துட்டேன் அத்தய தொல்ல பண்ணாம சமத்தா இருந்திய..என்னடா செல்லம் சாப்டு தூக்கம் வந்துருச்சா இப்டி தூங்குற"...
"ம்க்கும் அதெல்லாம் நல்லா முழுங்கிட்டு தா தூங்குது நீங்களும் வந்து கொட்டிக்கிட்டா எல்லோரும் காலாகாலத்துல சாப்டு தூங்கலாம் நாளைக்கு வேல இருக்கு"...அவனை முறைத்து கொண்டே வந்தவள் கமலியுடன் கதையளந்தவாறே சாப்பிட்டு முடித்தாள்..
வீங்கிய இதழ்களுக்கு அவள் லிப் பாம் கொடுத்து மறைத்திருந்தாள்..அழுது சிவந்த கண்களுக்கு தூக்கமின்மை காரணமாயிற்று..இரண்டே சப்பாத்தியை அறை மணி நேரமாக கொறித்து விட்டு அறைக்குள் ஓடி விட்டாள்...பாரி அனைத்தையும் கவனித்து கொண்டே இருந்தவன் கமலியை உறங்க கூறி விட்டு தனதறைக்குள் நுழைந்தான்.
அங்கே எகிப்து மம்மி போல போர்வையை தலை முதல் கால் வரை சுற்றிருந்தவளை காணும் போது எங்கே முட்டி கொள்ளலாம் என இருந்தது அவனுக்கு..தலைகாணியால் அணை வேறு கட்டிருந்தாள்....
"இது பெரிய எல்லை பார்டரு இத தாண்டவே முடியாது கருமோ கருமோ இவளுக்கெல்லாம் எந்த மடையன் வாத்தியாரு வேல கொடுத்தான்"..அவள் தூங்கவில்லை என்பது போர்வையை தாண்டி பயத்தில் நடுங்கும் மேனியில் தெரிந்தது..கனத்த மனதுடன் பேசாமல் உறங்கி போனான் பாரி..
மறுநாள் காலை விடிந்ததும் சக்தி ரியோவை தேடி சென்றாள்..அவன் அறை கதவை தட்டியவள் உள்ளே சத்தம் வராமல் போக தானே திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..அங்கே நேற்று அடித்த சரக்கின் மகிமையால் தலைக்கு கைகளால் முட்டு கொடுத்து அமர்ந்திருந்தான் ரியோ..அவள் உள்ளே வர"என்ன சக்தி ஏதாச்சும் வேணுமா..கண்ணெல்லாம் செவந்திருக்க நைட்டு நல்லா தூங்குனியா இல்லயா"...
"ரியோ எப்டி உங்களால எதுவும் நடக்காத மாறி பேச இப்டி கேஸுவலா இருக்க முடியுது.."
"அதுக்குன்னு நடுரோட்ல நின்னு குத்து டான்ஸ் ஆடவா"...
"நைட் எல்லாம் யோசிச்சு நா ஒரு முடிவுக்கு வந்துருக்கேன்..என் அக்கா செத்து போனவ..செத்தவ ஆசைய நிறைவேத்துனா உயிரோட இருக்குறவங்க எல்லோரும் சாக வேண்டிதான்..எனக்கு இந்த கல்யாணம் வேணா..நா போறேன்"..
"எங்க"
"அத உங்க கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல"...
"ம்ம்ம் சரி சக்தி தாராளமா போ..உன்ன தடுக்க மாட்டேன் ஆனா உன் கூடவே நானும் வருவேன் உன் டிரஸ்ஸ பேக் பண்ணிட்டு என்னோடதயும் எடுத்து வையு...நாலு புது செட்டு ஜட்டி அந்த ட்ராவ் குள்ள இருக்கு அதையும் மறக்காம எடுத்து வெச்சிரு"
"நா சீரியஸ்ஸா சொல்லிட்டு இருக்கேன் ரியோ"அவளை விழியிடுங்க பார்த்தவன் எழுந்து வந்தான்..
"சக்தி கண்ண மூடு"..
"என்ன எதுக்கு"...
"கண்ண மூடு சொல்றேன்ல"..ஒரு சில வினாடிகளில் "கண்ண தொற"...கண்ணை திறந்தவள் "ஹேய் சீ"என திரும்பி கொண்டாள்..
"கருமம் புடிச்சவன என்ன எழவுக்குடா இப்டி எல்லாத்தையும் அவுத்துட்டு நிக்குற..சீ ஒரு பொண்ணு கிட்ட எப்டி பிகேவ் பண்றதுனு தெரியாது"...
"ஒரு பொண்ணு கிட்ட எப்டி பிகேவ் பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும்..என்ன பொறுத்த வரை ஒரு ஆம்பள தன்னோட அம்மா கிட்ட உடம்ப காட்டுவான் அது சின்ன வயசுல...அக்கா கிட்டயும் காட்டலாம் அது அம்மாவா அக்கா மாறும்போது..பெத்த மக கிட்ட காட்டலாம் தொட்டு தூக்க நாதியில்லாம வயசான காலத்துல..ஆனா பொண்டாட்டி கிட்ட தான் காரணமே இல்லாம காட்ட முடியும் கற்பு உங்களுக்கு மட்டும் இல்லமா எங்களுக்கும் இருக்கு..நா உன்ன நம்புறேன் அதான் முழுசா என்ன காட்டிட்டேன்..இனிமே இன்னொரு பொண்ணு முன்னாடி என்னால இப்டி நிக்க முடியாது..அதனால என்ன முழுசா பாத்த நீயே எனக்கு வாழ்க்க கொடு"..அவள் இன்னும் கண்முடி திரும்பாமல் நிற்பதை கண்டவன்
"சட்ட போட்டு ரொம்ப நேரமாச்சு நீ திரும்பலாம்".. திரும்பிய சக்தியால் ரியோவை பார்க்க இயலவில்லை..கூச்சம் பிடிங்கி தின்ன தலைகுனிந்து நின்றவளை நெருங்கி"சக்தி எனக்கு ஒரு விஷயத்த ஓயாம பேச புடிக்காது..நா சொன்னது சொன்னது தான் இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி..அக்கா வீட்டுக்கு போ..நா குளிச்சிட்டு வரேன்"...
அவன் விட்டால் போதுமென ஓடிவிட இங்கே கதவை தாளிட்டு அதன் மேலேயே சாய்ந்து அமர்ந்தான் ரியோ.. அவன் மனம் எங்கிலும் ரணமாக வலித்தது..உண்மையில் அவன் இவ்வாறு செய்த்தததின் நோக்கம் சக்தி எங்கேனும் சென்று விட கூடும் என்ற பயமே அவள் கண்களில் அந்த உறுதி தெரிந்தது.. இப்போது வெண்பாவை விரும்பிய ரியோ எப்படி தன்னிடம் இவ்வாறு நடந்து கொண்டான் என்ற குழப்பத்தில் இருப்பாள் சக்தி அதனால் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயும் ஓட மாட்டாள்.. ரியோவிற்கு வெண்பாவை மறந்து சக்தியுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை உருவாக்கி இருந்தது.. நேற்றைய இரவு முழுவதும் உறங்காமல் இதைத்தான் சிந்தித்து கொண்டிருந்தான்.. என்ன அதற்கு கொஞ்சம் தாமதமாகலாம்..
வெண்பா கண்ணாவுடன் இன்பமாக வாழ்வதை கண்டு விட்டால் போதும் அவனின் வாழ்வும் சக்தியுடன் இன்புற அமைந்து விடும்.. ரியோ அறியாத ஒன்று சக்தி மேல் அவனுக்கும் ஏற்கனவே ஈர்ப்பு இருந்துள்ளது என அதனாலே அவன் சக்தியிடம் உரிமையாக நடந்து கொண்டான்.. ரியோ ஒரு புரியாத புதிர் தான்..
முல்லை பள்ளி செல்ல கிளம்பி கொண்டிருந்தாள்..குளித்து முடித்து துண்டுடன் வந்தவன் வேண்டுமென்றே அவள் அருகில் சென்று ட்ரெஸிங் டேபிள் மீது சாய்த்து நின்றான்.. முல்லைக்கு கோபம் தலைக்கேற"ஏன் குளிச்ச டிரஸ் போட தெரியாத..என்ன பாரு என் அழக பாருன்னு இப்படிதான் காட்டிட்டு நிப்பீங்களா"...
"நீ ஏன் என்னயும் என் அழகயும் பாக்குற..கண்ணாடில தான் உங்க பொன்னான முகம் தெரியுதே அத பாரு"
"எத பாக்கணும்னு எனக்கு தெரியும் நீங்க உங்க வேலைய பாருங்க... சே மணி வேற ஆகுது உங்க கிட்ட பேசறதுக்கு எல்லாம் எனக்கு டைம் இல்ல"..
அவள் அவசரமாக கிளம்பி நகர அவள் முந்தானையை பிடித்து இழுத்தான் பாரி.. நேற்றைய நிகழ்வு நினைவு வர பயத்தில் அவனிடம் இருந்து விலக போராடினாள் முல்லை.. அவளின் ஆர்ப்பாட்டங்களை சின்ன சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தவன் கண்களை சந்தித்தால் முல்லை..அதில் தெரிந்த காதல் அவளை அமைதி கொள்ள வைத்தது..மெல்ல அவள் திமிறலை நிறுத்த தன் உதடால் அவள் இதழ் உரசி மென்னையாக முத்தமிட்டு ஓய் இஞ்சி இடுப்பழகி ஐ லவ் யூ டி என கூறியவன் சிரித்து கொண்டே விடுவித்தான்.. அவள் இன்னும் விரிந்த விழிகளுடன் அங்கேயே நிற்க "அடியே மாமா டிரஸ் போட போறேன்"அவள் இன்னமும் அங்கேயே நிற்க"எனக்கென்ன என் பொண்டாட்டி தானே பாக்குறா".. என்று துண்டில் கை வைக்க அவளோ பிரமை கலைந்து உண்மை உரைக்க
"ஹேய் வேணா வேணா நா போறேன் என ஓடி விட்டாள்"..சிரிப்புடனே காலை பொழுது இதமாக விடிந்தது..
Comments
Post a Comment