இஞ்சி இடையழகி 27


நாளை பாரிவேந்தனின் பிறந்தநாள் சொல்லப்போனால் வளரி வேந்தனின் பிறந்தநாளும் கூட..ஒருமுறை பேச்சில் முல்லை வளரியின் பிறந்தநாளை வினவ அவன் பாரியையும் கமளியையும் பார்த்து கொண்டே உண்மையான பிறந்தநாளை கூறினான்..முல்லை தான் ஆச்சர்ய பட்டு போனாள்..பெயர் பொருத்தம் தான் ஒரே மாதிரி என்றால் பிறந்தநாளும் கூடவே ஒரே மாதிரி இருக்கும் என..முதலில் ஒரு நகை கடைக்கு சென்றார்கள் ஏற்க்கனவே முல்லை ஆர்டர் கொடுத்திருந்தாள் போல..எந்த டிசைன்னும் இல்லாமல் மையப்பகுதியில் மட்டும் வட்டமாக சற்று மேல் தூக்கி அதன் மேல் ஆழ்கடல் நிறத்தில் ஒரு கல் பதித்திருந்தது..அவள் அந்த கல் பதித்த இடத்தை அழுத்தி நகர்த்த அதனுள் பாதி வெள்ளை முத்து போன்ற ஒரு கல்லில் பாரி முல்லையின் உருவ படங்கள் பதிந்திருந்தது..அவள் மூளையை உருக்கி கண்டு பிடித்த டிசைன்..மேலும் சில பொருட்கள் வாங்கி கொண்டு வளரியுடன் பேசியவாறே வீட்டிற்கு வந்தாள்..அங்கே சுஜாதா வந்திருந்தார்..அவருக்கு மட்டும் வளரியை பற்றி தெரியும்..முல்லை அவருடன் பேசி நகர்ந்ததும் சுஜாதா வளரிக்கு அறிவுரை கூறினார்..அவனோ எதுவும் கூறாமல் எழுந்து சென்று விட்டான்..அவனுக்கு மனம் முழுக்க வேதனை தீ பற்றி எரிந்தது..

முல்லை ஒருவார்த்தைக்கு கூட நாளை உனக்கும் பிறந்தநாள் தானே என வினவவில்லை..அவன் மனம் பாரியை எண்ணி பொறாமை கொண்டது அந்த பொறாமை தீ அவனை மேலும் மேலும் சுட்டு பொசுக்கியது..அதனால் முல்லை வந்து அழைத்தும் உணவுண்ண செல்லாமல் இருந்தான்..சரியாக பன்னிரண்டு..முல்லை வந்து கதவை தட்டினாள் ஆனால் வளரி திறக்கவே இல்லை..அவனுக்கு கேக் வெட்டி கொண்டாடுவாங்க அவங்க கூட நின்னு ஹாப்பி பர்த்டே பாடணுமா என பேசாமல் அறைக்குள் இருந்தான்..

அவன் கழிவறையில் இருப்பதாக நினைத்தவள் பாரியை தான் செய்த கேக்குடன் சென்று எழுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்த முல்லை அவனின் கரத்தில் அவள் வாங்கிய மோதிரத்தை அணிவித்தாள்.வெறும் மோதிரமென அவன் நினைக்க அதற்குள் இருக்கும் உருவ பதிவை அவள் காண்பிக்க முதல் முறையாக அவள் அன்பில் நெகிழ்ந்து போனான் பாரி வேந்தன்..அவனையும் அழைத்து கொண்டு கமலியுடன் மீண்டும் வளரி அறை கதவை தட்டினாள்..இதற்கு மேல் திறக்காமல் இருக்க முடியாதே..

தலைவிதியை நொந்து கொண்டே கதவை திறந்தான் வளரி..அங்கே கையில் கேக்கை ஏந்தி முல்லை நின்றிருக்க பாரியும் கமலியும் உடன் இருந்தனர்..ஹாப்பி பர்த்டே வளரி என முல்லை கூற உண்மையிலே சிலையாக நின்றான் வளரி..

அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது பாரியின் அணைப்புடன் கூடிய வாழ்த்து..வளரி வேந்தன் அவன் ஜனித்த நாளிலே கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது.அவன் மேல் கோபம் இருந்தாலும் இன்று காட்டுவது சரியல்ல..கேக் வெட்டி முதல் முறையாக தன் ரத்த உறவுகளுடன் கொண்டாடினான்..அந்த நாள் அவன் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகியது..

காலை பாரி எழுந்து குளித்து கிளம்பி வெளியே வரும் போதே அவனின் அழகு மனைவி அவன் முன் வந்து நின்றாள்..புன்சிரிப்புடன் அவன் அவளை பார்க்க அவளோ தனக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த பல வண்ண மலர்கள் அடங்கிய அழகிய பூங்கொத்தை கையில் பிடித்து முதல் முறையாக அந்த வார்த்தையை கூறினாள்.."நா உங்கள காதலிக்குறேன் பாரி"...இது கனவா நினைவா நினைவில் தோன்றும் மாய கனவா அந்த நொடி அவனின் இத்தனை வருட அடங்காத காதல் முழுவதும் தன்னை அர்பணித்து அவள் முன் நின்றது..அவன் திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்திருக்க மலர்களால் அவன் முகத்தில் அடித்தாள்..அதில் உணர்வு பெற்றவன் பேச எத்தனிக்கும் போதே அவனின் கழுத்தில் கரம் கோர்த்து எம்பி அவன் இதழில் அவள் தந்த முத்தம் உயிர் வரை சென்றது..

அவள் மனதில் தன் மீதான காதல் வெளிப்பட்டு விட்டத்தை கண்டு சிறு கண்ணீர் துளி எட்டி பார்த்தது..அதை அவள் கவனிக்கும் முன்பே துடைத்தவன் அலைபேசி அலறியது..அவசர பிரிவில் இருந்து அழைப்பு அவன் போயே ஆக வேண்டும்..பல முறை முல்லையிடம் மன்னிப்பு வேண்டி விட்டு ஓடி விட்டான்..வளரி காலை கமலின் காலில் விழ அவருக்கோ அழுகையை அடக்க முடியவில்லை..அவனை மனமார ஆசிர்வதித்து "நாம அடுத்தவங்களுக்கு உதவி செய்யலனாலும் பரவால்ல உபத்திரம் மட்டும் செய்ய கூடாது நல்லா இருடா ராசா"..அவனுக்கு தன் கையால் பாயசம் ஊட்டி விட்டு கொண்டிருக்கும் போதே முல்லை வரும் அரவம் கேட்டது..அதற்கு மேல் பாயசம் சாப்பிட மனமில்லை வளரிக்கு..வந்தவள் சாப்பிட்டு வளரியை அழைத்து கொண்டு வெளியே சென்றாள்..எங்கு அழைத்து செல்கிறாள் என்று புரியாமல் அவளுடன் சென்றான்..அவள் அழைத்து வந்தது பெண் மாற்று திறனாளி குழந்தைகள் கொண்ட காப்பகத்திற்கு..

"வளரி இதுல கொஞ்சம் பணம் இருக்கு இத உன்கையாலே அந்த மேம் கிட்ட கொடு "என பணத்தை கொடுக்க அதை வாங்காமல் தவிர்த்தவன் அவனுடைய சொந்த பணத்தை டொனேஷன் அளித்தான்..முல்லை அந்த குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வளரியோ அங்கிருந்த பதினைந்து குழந்தைகளின் படிப்பு செலவையும் தானே ஏற்று கொள்வதாக கூறி முதல் கட்டமாக பெரிய தொகைக்கு செக் கொடுத்தான் இதை யாரிடமும் சொல்ல கூடாதென நிபந்தனையுடன்.

பின் அவனும் குழந்தைகளுடன் விளையாடி விட்டு கிளம்ப அவனை அழைத்து கொண்டு ஒரு டாட்டூ கடைக்கு சென்றாள்..அங்கே வளரியை கண் மூட கூறியவள் டாட்டூ நிபுணரிடம் அந்த படத்தை காட்டினாள் அவன் கையில் டாட்டூ போட்டு முடித்தும் இவள் கரத்திலும் போட்டு கொண்டாள்..அதுவரை அவன் கண் திறக்கவே இல்லை..அவள் வலியில் முனங்க"முல்லை நீயும் டாட்டூ போடுறியா"..

"ஆமா நீ கண்ண தொறக்காத"..

எல்லாம் முடிந்ததும் கண் திறந்தான் வளரி.அவர்கள் கரத்தில் புதிதாக இடம்பிடித்தது நட்பிற்கான டாட்டூ..அவள் மனதில் அவனின் இடம் அது..வளரியிடம்"இந்த பர்த்டே நீ மறக்கவே கூடாது ஓகே..என்னையும் மறக்க கூடாது இந்த உலகத்துல நீ எங்க போனாலும் நம்ம நட்பு அப்டியே இருக்கும் சரியா"...மென்னகையே அவனின் பதிலானது..

முல்லை கொடிக்கு இது எட்டாம் மாதம்.. அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல அன்பும் கிரேசும் வந்திருந்தனர்..கமலி வந்தவர்களுக்கு தேனீர் கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்.. மேல் அறையில் தன் வீட்டிற்கு செல்ல மாட்டேனென்று பாரியின் உயிரை எடுத்து கொண்டிருந்தாள் ஒருத்தி..ஒரு சில நொடிகளிலே பொல பொலவென அழுததால் முகமே சிவந்து விட்டது..பாரியும் எவ்வளவு தான் எடுத்து கூறுவான்..கெஞ்சி கொஞ்சி காலில் விழாத குறையாக மன்றாடி விட்டான் அழாதே என்று.. 

"ஏண்டி இப்டி அழுது தொலைக்குற.."

"ஓ உன்ன விட்டு நா போறது உனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கோ".. 

"அப்டி சொல்லலடி நீயே யோசிச்சு பாரு உன் அண்ணன் உன்ன எப்டி வளத்தாரு ஒரு நாளாச்சும் அப்பா அம்மா இல்லயேன்னு பீல் பன்னிருப்பியா..இப்போ எவ்ளோ ஆசையா உன்ன கூட்டிட்டு போக வந்துருக்காரு..நான் வரல என் புருஷன் கூடதான் இருப்பேன்னு சொல்றியே இது உனக்கே நியாயமா இதெல்லாம் கேட்டா அவருக்கு கஷ்டமா இருக்காது".. 

"ஆனா உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது பாரி..."

"ஆமா நீ நாடு விட்டு நாடு போற பாரு பாக்காம இருக்க அடியே இப்போல்லாம் கல்யாணமே வீடியோ கோல்ல பண்ற நிலைக்கு வந்துருச்சு..மூடிட்டு மாமா சொல்றத கேளு நா தினமும் ஒரு ரெண்டு மணி நேரம் அங்க வந்து உன்கூடவே இருப்பேன் ஓகேவா".. 

"ம்ஹும் முடியாது பாரி உனக்கு எதுக்கு கஷ்டம் பேசாம நா இங்கயே இருந்துட்டா".. 

"அடிங்க கொன்றுவேன் உன்ன.. பாவம்டி உன் அண்ணன் அண்ணி அவங்க கடமைய செய்ய விடுடி..என் செல்லம்ல என் கண்ணு குட்டில"

"போறேன் ஆனா டெய்லி ரெண்டு மணி நேரம் அங்கே வர இல்லனா நா இங்க வந்துருவேன்"... 

"சரி ப்ரோமிஸ்"

"அச்சோ பாரி.. நா அங்க போய்ட்ட வளரி என்ன பண்ணுவான்"

"ம்ம் தூக்குல தொங்குவான்..அவன் என்ன பண்ண உனக்கு என்னடி '

"சீ வாய கழுவு பாரி..பேருக்கு தான் அவன் உன் ஃப்ரன்ட்டு நானும் அவன் வந்ததுல இருந்து பாக்குறேன் அவன் கூட சரியாவே பேச மாட்ர..பாவம் அவன் தனியாவே இருக்கான்.. ஏதோ நா இருக்கேன்றதால என்கூட அவன் நேரம் போது..நானும் போய்ட்டா அவன் என்ன பண்ணுவான்"..பாரி ஒன்றும் கூறாமல் அவளையே பார்த்தான்..

"முல்லை அவன் மேல ஏன் உனக்கு இவ்ளோ அக்கற இத்தன வருஷமா அவன அவன் பாத்துக்கிட்டான் தானே இதுக்கு மேலயும் பாத்துக்குவான் "

"அவனே அவன பாத்துகிட்டது வேற பாரி.. அவன் ரொம்ப பாவம் அவன் மனசுல ஏதோ ஒரு ஆசை இருக்கு அது இன்னும் நிறைவேறும இருக்கு..என்கூட பேசும் போது அவன் கண்ணுல தெரியுற ஒரு சந்தோசம் அதுக்கு அப்றம் அவன் கிட்ட இல்ல..சீக்கிரம் அவன் ஆசைய கேட்டு தெரிஞ்சிக்கணும்"..

அத தெரிஞ்சிக்கிட்டா நம்ம நிம்மதி போயிரும் முல்லை மனதிற்குள் எண்ணி கொண்டான்.. அன்று இவர்களின் பிறந்தநாளின் போது வளரியுடன் தான் போட்டு கொண்ட டாட்டூவை பாரியிடம் காட்டினாள்..அது நட்பிற்கான டாட்டூ..பாரிக்கு தெரியுமே தன்னவள் மனதில் தான் மட்டும் என்று ஆனால் இதனை குத்திடும் போது வளரியின் மனவோட்டம் எப்படி இருந்திருக்கும்...அவனுக்கு இனியேனும் புத்தி வேலை செய்யுமா.. 

கீழே கமலி அழைத்திட வருவதாக குரல் கொடுத்து விட்டு கணவனை கட்டி கொண்டு நின்றாள் முல்லை..அவனுக்குமே மனம் ஒன்றி வாழ தொடங்கிய பின் வரும் முதல் பிரிவு வலியை கொடுத்தது..இதழ் வழியே வலியை பகிர்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.. பின் வயிற்றில் முத்தமிட்டு தன் உயிர்களை அனுப்பி வைத்தான்..தினமும் தன்னை வந்து பார்க்குமாறு கூறி விட்டு தன் அண்ணன் அண்ணியுடன் கிளம்பினாள் முல்லை..அதுவரை அவளின் நினைவு முழுவதும் அவனவன் மட்டுமே கார் வரை சென்றவள் திடீரென நினைவு வர"அச்சோ வளரிட்ட சொல்லவே இல்ல அண்ணா இரு அவன்ட்ட சொல்லிட்டு வரேன்".. 

"முல்லமா அதெல்லாம் வேணா..மாப்ள அவன்ட்ட சொல்லிப்பாரு நீ ஒக்காரு உள்ள".. 

"இல்லண்ணா என்கூட ரொம்ப கிளோஸ் அவன்.. இரு சொல்லிட்டு வரேன்"..அன்பு பாரியை பார்க்க அவனோ அவனை பேசாமல் இருக்க கூறினான்..முல்லை படியேற போக அறை கதவை திறந்து வெளியே வந்தான் வளரி..அவளை கீழேயே நிற்க சொல்லி விட்டு அவன் இறங்கி வந்தான்.."வளரி நா அண்ணா வீட்டுக்கு போறேன் பாப்பா பொறந்த அப்ரோ தான் வருவேன் அடுத்த வாரம் வளைகாப்பு செய்வாங்க நீயும் பாரி கூட வர சரியா அப்றம் ஒழுங்கா சாப்டு வீடியோ கேம்லயே படுத்து தூங்கிறத நா வரேன் "... 

"ம்ம் பாத்து போய்ட்டு வா முல்லை..மிஸ் யூ".. 

"பாய் வளரி".. முல்லை வெளியே வந்தாள் அவள் பின்னோடே வந்தான் வளரி.. அவனை கண்டு அன்பு பல்லை கடித்தான்.. பாரியின் முன் வந்தவள்"பாரி நா எப்டி இருக்கேன்".. 

"அந்த நிலா மாறி இருக்கடி பொண்டாட்டி..".. 

"ம்ம்ம் ஒழுங்கா சாப்டு டெய்லி ரெண்டு மணி நேரம் மறந்த கொன்றுவேன்".. 

"சரிடி"

"போய்ட்டு வரேன் பாரி... வரேன் அத்த பிகாச்சுவ பாத்துக்கோங்க"... கண்களில் நீர் திரள சென்றாள் முல்லை.. அவளில்லாத அந்த வீடு மூவருக்குமே வெறுமையை கொடுத்தது..பாரி மருத்துவமனைக்கு சென்று விட வளரி தோட்டதில் ஹெட் போன் மாட்டி கொண்டு அமர்ந்து விட்டான்... ஏனோ மனமே வெறுமையாக தெரிந்தது..இதற்கு பெயர் தான் என்ன..எங்கு சென்று முடியும்.. அவளில்லாத ஒரு பொழுதையே கழிக்க முடியவில்லையே அவளில்லாத வாழ்வு என்னாகும்..ஏன் இறைவா என்னை இப்படி படைத்தாய்..அப்போது அவன் மனதிற்கு இதமளித்தது அந்த பாடல் தான்..அவளுடன் சென்று குத்திய டாட்டூவை பார்த்து கொண்டே படுத்திருந்தான் வளரி..

கதறிக் கதறி
எனது உள்ளம் உடைந்து
போனதே இன்று சிதறிப்
போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே

கண்ணீரில்
தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி

சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே

அன்பு வீட்டில் அனைவரும் முல்லையை பிரியமாக பார்த்து கொண்டனர்..ரியோவுடன் அவள் செய்த குறும்புகளை சக்தியிடம் வாய் ஓயாமல் சொல்லி கொண்டிருப்பாள் முல்லை..சக்திக்கு இது ஆறாம் மாதம்..ரியோவுடனான அவளின் வாழ்வு அவளது பொலிவு ததும்பிய முகத்தில் தெரிந்தது..கிரேஸ் விதவிதமாக பதார்த்தங்கள் செய்து இருவருக்கும் தருவார்..ரியோவும் மனைவி தோழி அக்கா மூவருடனும் தன் நேரத்தை செலவிடுவான்..இதற்கிடையே பாரி தினமும் இரண்டு மணி நேரம் தன் மனைவியை காண வருவான்..அது அவளுக்கும் அவனுக்குமான நேரம் கிரேஸ் அன்பு இருவரும் ரியோ வீட்டிற்கு சென்று விட அந்நேரம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கிடைக்கும்..

அவளை மடி மேல் அமரவைத்து கொஞ்சி கொண்டிருப்பான்..அன்று நடந்த சுவாரசிய நிகழ்வுகளை சொல்லி கொண்டிருப்பான்..பெரும்பாலும் அவன் பேச்சில் அவளை பற்றியே இருக்கும் அவளின் விருப்பு வெறுப்பு குழந்தைகள் பற்றிய பேச்சு அவனிடம் மாற்ற வேண்டியது என எதிர்காலத்தை பற்றியும் நிகழ்காலத்தை தொட்டும் பேசிக்கொள்வர்.. 

முதல் இரண்டு நாள் வளரியிடம் கைபேசியில் பேசினால் முல்லை.. முன்றாம் நாள் அவனே வீட்டிற்க்கு வந்து விட்டான் அவளின் பிகாச்சுவுடன்.. கூடவே சூர்யகாந்தி பூக்கள் அடங்கிய அழகான பூங்கொத்து..அன்பின் வரவேற்காத பாவமே அவனுக்கு அனைத்தும் தெரியுமென காட்டியது வளரிக்கு. 

யார் வரவேற்றால் என்ன அவன் பார்க்க வந்தது முல்லையை..அவளுக்கு ஒரே சந்தோசம்..அவளை அழைத்து கொண்டு பக்கத்தில் இருந்த பார்க்கிற்கு சென்றான்.. அன்பினால் தடுக்க இயலவில்லை..பாரி எது நடந்தாலும் பொறுமையாக இருக்க கூறிருந்தான்.. 

தினமும் மாலை நான்கு மணியளவில் வளரி வந்து விடுவான்..வரும்போதே அவள் முகத்தில் புன்னகையை வரவைக்கும் விதமாக ஏதாவது ஒன்று அவன் கையிலிருக்கும்.. பெரும்பாலும் நல்ல நல்ல புத்தங்கள் மலர்கள் இது போன்றே வரும்.. ரியோ அன்பும் கூட இவன் ஏன் நல்லவனாக இருக்கவில்லை என எண்ணினார்..மாலையில் பார்க்கில் நடைப்பயிற்சி நடக்கும்..முல்லை சோர்ந்து போகும் போதெல்லாம் அவளுக்கு தண்ணீர் கொடுத்து முடியாமல் அமரும் போது காற்று வீசி அவளை ஊக்கப்படுத்தி நடக்க வைப்பான்.. தினம் ஒரு பேச்சு அப்படி.. இதற்கிடையே முல்லை கொடியின் வளைகாப்பு விமர்சையாக நடந்து முடிந்தது..


Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி