இஞ்சி இடையழகி 6


முல்லை பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தாள்..இன்று வேலைக்கு மீண்டும் செல்கிறாள்.அவள் ஆசிரியை.சுருக்கமாக சொன்னால் கணித மேதை என்றே சொல்லலாம். ஆமாங்க பிளஸ் டூ புள்ளைங்களுக்கு கணக்கு டீச்சர்.ஆனா ரொம்ப நல்ல டீச்சர்.முல்லை டீச்சர் கிளாஸ்ன்ன புள்ளைங்க யாரும் கட் அடிக்கவே மாட்டாங்க..அவ பாடம் நடத்துற அழகே அழகுதான் போங்க..கிளி பச்சையில் காட்டன் சாரி கட்டி அடர்ந்த கூந்தலை தவழ விட்டு நெற்றி வகிட்டில் அழகாய் சிவப்பு கொடு இழுத்து புன்னகை மாறாமல் அவள் கிளம்பி வெளியே வர அங்கே சோபாவில் சரிந்து வீடியோ கேம் ஆடி கொண்டிருந்தான் பாரி.

முல்லை ஹாலில் நடுநாயகமாக தொங்கி கொண்டிருந்த அழகிய கூண்டிலிருந்த பிகாச்சு அருகில் சென்றாள்..இரண்டு நாள் முன்பு பாரி வாங்கி வந்த கிளிதான் அது..முல்லையின் ட்ரேனிங்கில் இப்போது ரெண்டு நல்ல வார்த்தைய பழகிருச்சு.."ஹே பிகாச்சு என்ன செய்யுற..பாத்தியா உனக்கு மார்னிங் பிரேக்பாஸ்ட் என்னானு கொய்யாபழம்..உனக்கு புடிக்குமா வா வந்து சாப்டு செல்லம்".. அதற்குள் கமலி அழைக்க

"நீ சாப்டு நா வரேன்"..அவள் உள்ளே சென்றதும் கூண்டின் அருகே சென்றவன்'ம்ம் கட்டுன புருஷன் மல மாறி சரிஞ்சு கெடக்கேன் என்ன என்னானு சீண்டல கிளிக்கு கொய்யாக்கா கொடுக்குற..ஓய் ன்னா பாக்குற உனக்கு கொய்யா கேக்குதா கொய்யால ரெண்டு நெல்லு போடுறேன் அதுவே பெருசு பே.."அவன் கூண்டின் உள்ளே கையை நுழைத்து கொய்யாவை வெளியே எடுத்து"ஆஹா கொய்யாவா நல்ல கனி நல்ல கனி"அதை லபக்கென்று வாயில் போட அதுவோ சனியன் சனியன் என்று அவனை வசைபாடி கொத்த வர அவன் கூண்டை சாத்தி"என்னயா கொத்த வர்ற இருடி கிளி சூப்பு வைக்குறேன்"...அவன் சொல்லி கொண்டே திரும்ப அங்கே ரியோ நின்றிருந்தான்... 

"டேய் வாடா நல்லவனே என்ன காலங்காத்தால இந்த பக்கம் காத்து வீசுது.. எப்போ வந்த"... 

"நீங்க கிளிகிட்ட மானங்கெட்ட கிழி வாங்குறப்போவே வந்துட்டேன்.. தேவையா உங்களுக்கு இது"... 

"உன் ஃப்ரன்ட்டு குந்தாணி கிட்ட பழகுனா கிளி கூட கிழிக்க கத்துக்குது"..ரியோ அவனை முறைக்க பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தாள் முல்லை. ரியோவை கண்டதும் அவ்வளவு சந்தோசம் அவள் முகத்தில்.ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டவள்"இப்போதா வழி தெரியுதா என்ன பாக்க..ஏண்டா நா ஃபோன் பண்ணியும் பேசல நேர்ல பாத்தும் பேசல..இப்ப மட்டும் எதுக்கு வந்த..நீ பேசுனா பேசணும் இல்லேனா மூடிக்கணும் என்ன பாத்தா நாய் மாறி இருக்கா"..அவனை கட்டி கொண்டே அவள் விசும்பலோட பேச அவனும் கண்களில் துளிர்த்த நீரோடு"அப்டி இல்ல மாடு..உன்கூட பேசாம யார்கிட்ட பேச போறேன் எதுக்கு இப்ப ஊலம் வுடுற"...அவள் நிமிர்ந்து சரமாரியாக அவனை வெளுக்க அவனும் சிரித்து கொண்டே அதனை வாங்கி பின் அவளுக்கு பிடித்த சாக்லேட்டை கொடுக்க இங்கே அவர்களை பார்த்து பொறாமையில் எரிந்து கொண்டிருந்தான் பாரி.. 

கமலி சுட சுட நுரை போங்க ப்ரு காஃபியோடு வந்தார்"வா தம்பி எப்டி இருக்க..வீட்ல அக்கா மாமா எல்லாம் எப்டி இருகாங்க..இந்தா காப்பி குடி"..அவரின் கேள்விக்கு பதிலுரைத்தவன் காப்பியை மிடறு விழுங்க அது அவனுக்கு பிடித்த பதத்தில் இருப்பதை கண்டதும் கமலியே"முல்லை சொன்னுச்சு தம்பி உங்களுக்கு ப்ரு காஃபில சக்கர தூக்கலா போட்டாதான் புடிக்கும்னு.. இங்க வந்ததுல இருந்து அது பேசுற பாதி வார்த்தை அண்ணா அண்ணி ரியோ தான்.அதான் சரியா காஃபி போட்டு கொண்டாந்தேன்.பாரு தம்பி சாப்டு தான் போற சரியா"... 

"ம்மா நானும் இங்கதான் இருக்கேன் எனக்கு எங்கம்மா காஃபி".. 

"உனக்கு உள்ள வந்து எடுத்துக்க தெரியாதா ஒரு ஆளு போட்டு கொண்டுவருணுமா..."... 

"ஆமா உன் களனி தண்ணிய வான்தடா வந்து வேற எடுத்து குடிக்கனுமாக்கும்"

"அடி செருப்பால எடுபட்ட நாயே..உனக்கு இன்னிக்கு பழைய கஞ்சி கூட இல்ல..அப்டியே வேலைக்கு ஓடிரு..முல்ல கண்ணு நீ வாடா..நெய் தோசை கேட்டல்ல"..கமலி மகனை முறைத்து கொண்டு போக ரியோ கேவலமாக ஒரு சிரிப்பை சிரித்தான்..சாப்பிடும் போது கூட முல்லை ரியோவுடன் கதையளந்து கொண்டிருக்க இங்கே ஒருத்தன் பொசு பொசுவென மூச்சு விடுவதை ஓர கண்ணால் அளந்தான் ரியோ..

"முல்லை நா உன் ஸ்கூல் வழியாதா போறேன் வா நானே விடுறேன்"..அவளுக்கு தெரியாதா அவனை பற்றி திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்தே முறுக்கிக்கிட்டு தெரிஞ்சவன் திடிர்னு பேசுனா டவுட் வராது..நண்பனுக்கு தன்னிடம் கேட்க கேள்விகள் பல இருப்பதை அறிந்தவள் அவனுடன் கிளம்பி விட பாரி நெற்றியை சுருக்கினான்..கண்ணனுக்கு அழைக்க அழைப்பு செல்லவில்லை.. 

அவனும் தன்னுடைய மருத்துவமனைக்கு செல்ல ரியோ காரில் சென்று கொண்டே முல்லையை பார்க்க அவளோ"சரி சொல்லு சார்க்கு என்ன தெரியனும் இத்தன நாளு இஞ்சி தின்ன கொரங்கு மாறி தெரிஞ்ச திடிர்னு எப்டி பாசம் பொத்துக்குச்சு"... 

"தெரிஞ்சிருச்சா நேத்து கண்ணாவ பாத்தேன்.."... 

"எதுவரைக்கும் சொன்னாரு".. 

"ப்பா செம உஷாரு தான் நீ..ஏண்டி எரும ஒன்ற மாசம் மஞ்ச காமால தானே வந்து படுத்தேன் ஒரேடியாவா படுத்துட்டேன்.. இவ்ளோ நடந்துருக்கு என்கிட்ட மூச்சு விட்டியா.."ரியோ வளரியை தவிர்த்து கண்ணன் கூறிய அனைத்தையும் கூற

"நா என்னானு வந்து சொல்லுவேன்..அவன போயி நல்லவன்னு நம்பி அவனுக்கு ஒண்ணுனா துடிச்சு போயி ஓடுனா அந்த வீணாப்போனவன் என்ன வேல பாத்தான் தெரியுமாடா உனக்கு"... 

"ஐயோ அது பாரி இல்லமா வளரி. 
இத போயி எப்டி உங்கிட்ட சொல்லுவேன்..."

"டேய் என்னடா வாய்க்குல்ள்ளயே பேசிக்குற".. 

"அது ஒண்ணுமில்ல..ஏதோ ஒரு வேகத்துல அப்டி பண்ணிட்டான்..இப்ப தான் கல்யாணம் ஆயிருச்சுல அவன மன்னிக்க மாட்டியா".. 

"கல்யாணம் பெரிய கல்யாணம்.."

"ஏன் புடிச்சு தானே கட்டிகிட்ட"... 

"தோ பாரு ரியோ அவன் உன்காதல வெச்சு பிளாக்மெயில் பண்ணித்தான் என்ன கட்டிகிட்டான்..எனக்கு ஒன்னும் தலையெழுத்து இல்ல அவன மாறி ஒரு பொறுக்கிய கட்டிக்க.. உனக்காக தான் இந்த கல்யாணமே"... 

"நா கேட்டனா உன் வாழ்க்கைய பணயம் வெச்சு எனக்கு கல்யாணம் வேணும்னு,".. 

"டேய் நீ வாழ்கைல ஆசபட்ட ஒரே விஷயம் அந்த பொண்ணு..நம்ம கேடு கெட்ட நேரம் அது அவன் தங்கச்சி.. என்ன என்னா பண்ண சொல்ற.. எனக்கு உன் வாழ்கை தான் முக்கியம்"... 

"தோ பாரு முல்ல..என்ன தவிர உன்ன சரியா புரிஞ்சவங்க யாருமே இல்ல..மனசுல அந்தாளு மேல லவ் இல்லாமயா கட்டிகிட்ட..இதுவே வேற ஒருத்தன் பாரி இடத்துல இருந்துருந்தா என்ன பண்ணிருப்பா தெரியுமா அவள தூக்கிட்டு வந்து எனக்கு கட்டி வெச்சிருப்ப..இப்டி புடிக்காத ஒருத்தன கட்டிக்கிட்டு நின்னுருக்க மாட்ட"... இதற்கு அவளின் வாய் மௌனித்து விட்டது..அவன் கூறுவது உண்மை தானே.. ஆழ் மனதில் பாரியின் மேல் கொண்ட நேசமே அவனின் மிரட்டலையும் மீறி அவனின் அருகாமையை நாடியது..ஆனால் அதை அவள் கொண்ட கோவமே மறைக்க மீண்டும் சினம் கொண்டாள்..

"ன்னா அமைதியா இருக்க.."..

"தோ பாரு தேவையில்லாம பேசாத.."

"சரி பேசல கேக்குறேன் அவன பாத்தாலே பத்திக்கிட்டு வருமே உனக்கு அப்ரோ எப்டி லவ் வந்துச்சு"...

"சொல்லாம விட மாட்டியே.."...அவள் சொல்ல தொடங்கினாள் அவளின் காதலை...

பள்ளி இறுதியாண்டு மாணவி அவள்..ரியோ கிரிக்கெட் விளையாட சென்று விட அவள் அவளின் மற்ற இரு தோழிகளுடன் டியூசன் சென்று கொண்டிருந்தாள்..எப்பவும் போல கல்லூரி முடிந்து அந்த பாதையில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தான் பாரி..தினமும் இவர்கள் வரும் நேரம் அவனின் பார்வை இவர்களை அளக்கும்..கீர்த்தி நல்ல அழகி அனு கறுப்பழகி..கீர்த்திக்கு என்றுமே தான் அழகி என்ற கர்வம் உண்டு..அன்றும் தோழிகளிடம்"ஹேய் அந்த பையன் இங்க தான் பாக்குறான் பாரேன்"..

"அவன் பாக்குறான் ஆனா யார பாக்குறானு தெரிலையே, அவன் நம்ம ஸ்கூல் தானே படிச்சான்"..

"ம்ம்ம் ஆமா அவன் இப்ப என்னதான் பாக்குறான்.."

"அவன் சொன்னானா உன்ன பாக்குறேன்னு"..

"சொல்லித்தான் தெரியனுமா..நீ கருவாச்சி இவ குண்டு கத்திரிக்கா நா மட்டும் தான் அழகா இருக்கேன்..என்ன பாக்காம உங்கள பாக்க அவனுக்கு என்ன கண்ணு நொல்லையா"

"ஆமா ஆமா நாங்க கருவாச்சி கத்திரிக்கா இவங்க கிளியோபாட்ரா பாரு"முல்லை ஏதும் கூறவில்லை..இது எப்பவும் நடக்கும் கூத்து தான்..ஆனால் இம்முறை பாரி அவர்களை நோக்கி வர கீர்த்தி விறுவிறுப்பாக கலைந்த கூந்தலை காதுக்கு பின்னே சொருக மற்ற இருவரும் இவன் எப்படியும் நம்மகிட்ட பேசிறுவான் என ஒதுங்கி நிற்க அவனோ கீர்த்தியை சீண்டாமல் முல்லையை நோக்கி வந்தான்..கீர்த்தி விழிவிரிய பார்த்து கொண்டிருக்கும் போதே"ஓய் இஞ்சி இடுப்பழகி என்ன இங்க நிக்குற..எப்பவும் காலுல சக்கரத்த கட்டுன மாறி பறப்பிங்க"...

அவன் நேராக தன்னிடம் பேசியதில் விழி விரிய பார்த்தவள் கீர்த்தியை பார்க்க அவளோ அவனையே பார்த்து கொண்டிருந்தாள்..அனு"அண்ணா நீங்க நேராக கீர்த்திய பாத்து வந்திங்க அதான் அவகிட்ட பேசபோரிங்கனு நாங்க ஒதுங்கி நிக்குறோம்"...

"கீர்த்தியா அது யாரு"...

"அதோ அங்க ஒரு பொண்ணு நிக்குதா"..

"ஆமா நின்னுட்டு போட்டும்"

"அது பேருதான் கீர்த்தி"

"நல்ல பேரு வெச்சிட்டு போட்டும்"..

"அழகா இருக்குல்ல அந்த பொண்ணு"

"அழகோ அசிங்கமா எப்டியோ இருந்துட்டு போட்டும் அத எதுக்கு என்கிட்ட சொல்ற"...அவன் கடுப்பாக கீர்த்தியை பார்த்து சொல்ல அவளோ அவமானத்தில் சிவந்து போனாள்.. 

அனு"அப்ப நீங்க முல்லைய பாக்கத்தான் வந்திங்களா"... 

"ம்ம் ஆமா..எனக்கு முல்லைய தான் தெரியும் டெய்லி இந்த ரூட்ல தான் போறீங்க அதான் இன்னைக்கு பேசலாம்னு வந்தேன்..அப்ரோ முல்லை"... அவன் எப்போதும் போல பரிகாசம் பாசம் மிரட்டல் திமிரு இப்படி கலவையாக பேச கீர்த்தி அந்த இடத்தில் இருந்தே போக அனு முல்லையுடன் நின்று பாரியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.என்று பாரி முல்லைக்கு மழையில் உதவினானோ அன்றிலிருந்து அவனிடம் பேசும்போது தனிவாக பேசுவாள்.. 

இப்படியே சில தருணங்கள் இவர்கள் சந்திப்புகள் தொடர முல்லை கல்லூரியில் முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்தாள்..என்னதான் பாரி அவளிடம் நல்ல விதமாக பேசினாலும் அந்த இஞ்சி இடுப்பழகி பாடலை அவன் விடுவதாக இல்லை..பாரி அவ்வப்போது வழியில் பேசுவான் என ரியோவிடம் கூறியிருந்தால் முல்லை. ஏதாவது பிரச்சனை என்றால் கூறு என்றதுடன் முடித்து கொண்டான் ரியோ..

பிரச்சனை தான் வந்தது அதிலிருந்து தான் பாரியின் மீதான காதலும் வந்தது.. நாளை அனுவின் அக்காவிற்கு திருமணம்.. அனு வீட்டில் ஆயிரம் வேலை.. தோழி என்ற முறையில் முல்லையும் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தி.. இரவு வரை அனு வீட்டில் உதவியவள் அவர்கள் அங்கேயே தங்க சொல்லியும் கேளாமல் அண்ணனை பார்க்க கிளம்பி விட்டாள்.. 

அன்பிற்கு அழைத்தால் வந்திருப்பான் அண்ணனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் வந்து விடுவதாக கூறிய அனு வீட்டாரையும் மறுத்து தனியாக கிளம்பி விட்டாள்..ஒரு ஆட்டோ பிடித்து இரவு 11.30 மணிக்கு தனியாக வந்துகொண்டிருந்தாள்..பாதி தூரம் வந்ததும் ஆட்டோ ஓரிடத்தில் நிற்க மேலும் இருவர் ஏற"அண்ணா யாரு இவங்க.. இவங்க ஏன் ஏறுறாங்க".. 

"இல்லம்மா எனக்கு தெரிஞ்சவங்க தான்..கொஞ்சம் அவசரம் நீ பயப்படாத நா இருக்கேன்ல"..முல்லைக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயம் தொண்டையை அடைத்தது..செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும் முன்னரே இறங்கி விட்டிருந்தாள்..கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்..நடந்து கொண்டிருந்தாள் ஆள் அரவமற்ற சாலையில்.. 

திடிரென முகத்தில் விளக்கு வெளிச்சம் பட கண்ணை சுருக்கி பார்த்தால் எதிரே இரு பைக்கில் வந்த நால்வர் அவளை பார்த்து பல் இளிக்க முகத்தை சுருக்கி வேகமாக நடந்தாள்.."இந்தா குட்டி என்ன இவ்ளோ வேகமா போற..மெல்ல போனா நாங்களும் வருவோம்ல"... 

"இருட்டுல தனியா போற பாவம் வா பொண்ணு வண்டில உக்காரு நாங்க வந்து வூட்ல வுடுறோம்"..முல்லை எதையும் காதில் வாங்காமல் வேகமாக நடக்க அவர்கள் பைக்கில் இருந்து இறங்கி அவளுடனே நடந்து வம்பிழுத்து கொண்டிருந்தனர்.. போதையின் உச்சத்தில் இருக்கும் அவர்களிடம் என்ன சொல்வது..ஒரு கட்டத்தில் ஒருவன் முல்லையின் கரத்தினை பற்ற அவனை ஒரே குத்து மூக்கில் அவன் நிலை தடுமாறி விழ மற்ற மூவரும் அவள் மீது பாய சட்டேன்று பின் நகர்ந்தவள் ஒருவன் வயிற்றில் ஒரு எத்து.ஒருவன் கன்னத்தில் அறை.இன்னொருவன் வாயில் ஒரு மிதி அவர்கள் நால்வரும் தடுமாறி நிற்கும் நொடியில் ஓட தொடங்கியிருந்தாள்.. 

அவர்களும் எழுந்து அவளை துரத்த ஐயோ ஆட்டோகாரன தப்பா நெனச்சி கடைசில இந்த பன்னாடைங்க கிட்ட மாட்டிகிட்டோமே ஓட முடியாமல் ஓடி கொண்டிருந்தவளை எதிர் சாலையில் வந்து கொண்டிருந்த பாரி பார்த்தான்.. சினிமா முடிந்து கண்ணாவை வீட்டில் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தவன் முல்லை ஓடி வருவது கண்டதும் பைக்கை அவளை நோக்கி ஓட்டினான்.. 

அவளை வழிமறித்து நிறுத்தியவன் இறங்கிய வேகத்தில் பின்னே வந்து கொண்டிருந்த நால்வரை சரமாரியாக போட்டு தாக்கி விட்டு தனக்கு பழக்கமான அந்த ஏரியா எஸ்ஐக்கு தொடர்பு கொண்டு வரவழைத்து அந்த பரதேசிகளை அள்ளி கொண்டு போக வைத்தான்..

இதுவரை நடந்த அனைத்தையும் அங்கே ஓர் ஓரமாய் பார்வையாளராக பார்த்து கொண்டிருந்த முல்லையை கடுப்புடன் நெருங்கியவன்"ஏண்டி குந்தாணி காட்றேரும மாறி வளந்துருக்க ஓங்கி ரெண்டு மிதி இல்ல நீ ஒரே மிதி மிதிச்சாலே போதும் அவனுங்க பின்னாடி வந்துருப்பானுங்களா"... 

"தோ பாருங்க ரொம்ப தெரிஞ்ச மாறி பேசாதீங்க.. நானும் அவனுங்கள மிதிச்சிட்டு தான் ஓடி வந்தேன்.. அவனுங்க வேற எதையோ அடிச்சிருக்கானுங்க போல அத நா மிதிச்சும் பின்னாடியே வந்துருக்கானுங்க"... 

"சரி இத்தன மணிக்கு உனக்கு நடு ரோட்ல என்ன வேல".. 

"அனு அக்காவுக்கு நாளைக்கு கல்யாணம்.. அவங்க வீட்ல ஹெல்ப் பண்ணிட்டு அங்கேயே தங்க சொன்னாங்க நா தான் வேணா அண்ணனா பாக்கணும்னு வந்துட்டேன்".. 

"ஆமா பாப்பா உன் நொன்னேன் உன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணிருந்தா அவனே வந்துருப்பானே இல்ல எங்க உன் வால காணோம்".. 

"அண்ணன் பாவம் ராவும் பகலும் மாடா வேல பாக்குது இப்போதான் வீட்டுக்கே போயிருக்கும்.. ரியோ பார்ட் டைம் வேல பாக்குறான் அவனும் வேல முடிஞ்சு இப்போதான் வந்துருப்பான் அதான் அவங்கள டிஸ்டர்ப் பண்ணல நானே ஆட்டோ புடிச்சி வந்தேன் நடுவுல ரெண்டு பேரு ஏறுனாங்க அவனுங்கள பாத்து சந்தேக பட்டு எறங்கி இந்த பரதேசிங்க கிட்ட சிக்கி இப்ப ஒரு இம்ச கிட்ட பதில் சொல்லிட்டு இருக்கேன்"... 

"அடிங்..என்னடி கொழுப்பா காப்பாத்துனதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்ல முடில பேச்சு உனக்கு"... 

"என்ன அரும்பாடு பட்டு காப்பாத்துனதுக்கு நன்றி தெய்வமே நா போறேன்".. 

"ஹேய் நில்லு வா நானே வந்து ட்ரோப் பண்றேன்"... 

"தேவையில்ல"... 

"இப்ப நீ வரல நா சத்தமா பாடி இந்த ஏரியாவையே எழுப்பி விட்ருவேன்"

"உங்களுக்கு செருப்படி வாங்க இஷ்டம்னா நா என்ன பண்றது,... 

"ம்ம்ம் இஞ்சி இடுப்ப"...அவன் தொண்டையை திறக்கும் போதே அவள் கையை அவன் வாயில் அழுத்தி"ஐயா சாமி வந்து தொலைக்குறேன் உன் தொண்டைய தொறக்காத... "அவன் சிரித்து கொண்டு பைக்கில் ஏற அவளும் பின்னே ஏற 

"ஹேய் குந்தாணி ஒழுங்கா உடம்ப கொர.. பைக் நவுறவே மாட்டுது பாரு...".. 

"அது எங்களுக்கு தெரியும் மூடிட்டு ஓட்டுங்க..என்ன ஓட்ட சொன்னா உருட்டுறிங்க".. 


"பின்னாடி அரிசி மூட்ட ஏறுனா இப்டி தான்"அவள் அவன் முதுகில் மத்தளம் வாசிக்க சிரித்து கொண்டே அவளின் வீட்டில் இறக்கி விட்டான்..அன்று இரவு படுக்கையில் அவன் அருகாமையும் அவன் மேலிருந்த வந்த அவனின் வாசனையும் காற்றில் அலைபாய்ந்து கேசமும் அவளுக்கு ஆபத்து என்றதும் என்ன ஏதென்று விசாரியாமல் செய்த உதவியும் அவன் மேலிருந்த ஈர்ப்பை காதலாக மாற்றியது... 

அன்றிலிருந்து அவனை பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் காதல் வேர்விட தொடங்கி மரமாக செழித்து வளர தொடங்கியது..அதன் பின் தான் விதி வளரி ரூபத்தில் வந்து குண்டு வைத்து விளையாடி இவளும் வளரியை பாரி என்று நினைத்து வெறுத்து நாட்கள் ஓட இந்த பாரி படுபாவி இவளை பிளாக்மெயில் செய்து திருமணம் முடித்திருந்தான்..இதாங்க முல்லை கொடியின் காதல் கதை... 

முல்லை கூறி முடிக்க அவள் பள்ளியும் வந்து விட்டிருந்தது."சரி ஸ்கூல் வந்துருச்சு எல்லாத்தையும் பொறுமையா பேசிக்கலாம் நீ மனசுல போட்டு கொழப்பிக்காம போயி வேலைய பாரு".

"என்னத்த பேசிக்கலாம் நீ ஒரு ஆணியும் புடுங்க வேணா..இத பத்தி அந்த கொரங்கு கிட்ட வாய தொறந்த செத்த ஒழுங்கா வீடு போயி சேரு"நண்பனிடம் அனைத்தையும் கொட்டி தீர்த்தது மனதுக்கு நிம்மதியை கொடுக்க அதை விட பாரி மேல் கொண்ட கோபம் அனைத்தையும் மறைக்க விடைபெறறால் முல்லை..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்