இஞ்சி இடையழகி 23
வளரி அறுவை சிகிச்சையின் பலனாய் முற்றிலும் வேறு ஆளாக மாறிருந்தான்..இப்போது தான் பாரி நன்றாக இழுத்து மூச்சே விட்டான்..முல்லையுடன் அவன் கழிக்கும் பொழுதுகள் வேலைப்பளுவினால் குறைய அவளுக்கு இருக்கும் மன அழுத்தம் அவன் அறியாமல் போனது..இதற்கிடையே செக் அப்பில் அவளுக்கு ட்வின்ஸ் பிறக்கும் சாத்திய கூறு இருப்பதாக தெரியவர கமலி வளரியை பற்றிய கவலையை அடித்து மூலையில் தள்ளி விட்டு மருமகளை கவனிப்பதே கடமையாக கொண்டார்..கமலியின் அன்பில் தாய்மையின் பொழிவில் அழகிய சித்திரமாக மாறிருந்தவளை காண்கையில் பாரியின் இதயம் சிதறி விழுந்து விடும்..
என்ன அழகு இவள்..அதை அவளிடம் அவன் கூறும் போது அவளோ கண்ணாடியில் இடை பெருத்து போகும் அளவை அவன் கேலி செய்கிறான் என புரிந்து கொண்டாள்..பாரி முல்லையை மகிழ்விக்க அடிக்கடி ஏதாவது பரிசளிப்பான்..அப்படி தான் அன்றும் அழகிய சாக்லேட் டெட்டி பியர் பொம்மையை பரிசளிக்க அவளோ நா குண்டா இருக்கேனு குத்தி காட்றியானு கூச்சலிட்டு அந்த பொம்மையை நார் நாராக கிழித்து எறிந்த போதுதான் ஒரு மருத்துவனாக பாரியின் மூளை வேலை செய்த்தது.
முல்லை கொடி என்றுமே பாரியிடம் கொஞ்சி குலாவும் மனைவி அல்ல அதே சமயம் அவனை வெறுத்து ஒதுக்கி விலகி போகும் துணைவியும் அல்ல.. அவள் மனதில் பசுமரத்தாணி போல பாரியின் மீது கொண்ட நேசம் அப்படியே பசுமையாக இருக்கிறது.. அதை அவள் உணர்ந்ததே அவளின் வேதனைக்கும் பெரும் பங்கு..தன்னை பற்றி பிறர் கூற்றை ஆரம்பத்தில் அவள் புறக்கணித்தாலும் என்று பாரியின் சரிபாதியாகி போனாலோ அன்றே அவள் எதிலோ தோற்று போன உணர்வு..ஆனாலும் சுகமான தோல்வி.அது காதல் என்று அறிந்து கொண்டாலும் அகிலன் எனும் வயிற்று எரிச்சல்காரனின் பேச்சு அவள் காதலையும் மீறி தாழ்வுணர்வை தூண்டியது..
கணவனுக்கு தான் பொருத்தம் இல்லையோ..அவன் காதலை கொட்டுகிறான் அந்த காதலுக்கு தான் தகுதி அற்றவளோ என்ற வீண் யோசனைகள் முல்லையை படுத்தியது..அதிலும் மகப்பேறு அடைந்த நிலையில் இதற்கு பிறகு உடல் இடை இன்னும் கூடுமே என மேலும் கலங்கினாள்..வளரியை பற்றிய வேளையில் பாரி அவளை சர்ரே கவனிக்க தவறிருந்தான்..அந்த வேளையில் அவளின் மனம் பலதை எண்ணி குழம்பியது..
கண்ணாடியில் தெரியும் நான்கு மாத மேடிட்ட வயிறும் சர்ரே உப்பிய கன்னங்களும் அவளை பேரழகியாக காட்டுவதை அவள் கண்களை தழுவவில்லை மாறாக அந்த கண்கள் அதை உருமாற்றமாக கண்டு மேலும் அழகற்று போனமோ என வேதனை அடைந்தது..அனைத்து பெண்களுக்கும் உடல் இடை அதிகம் என்றால் அதை குறித்து தாழ்வுணர்ச்சி இருக்கும் அதுவே கவனிக்காமல் விட்டால் மனழுத்தம் தரும்..முல்லை கொடி கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனழுத்தத்தின் உள்ளே சென்று கொண்டிருந்தாள்..
அதை தாமதமாக என்றாலும் பாரி அறிந்து கொண்டான்.. கணவனாக கலங்கினாலும் மருத்துவனாக மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றான்..முல்லை முதலில் அதை அறிந்து தாம் தூமென குதிக்க அவள் முன் மண்டியிட்டு"என்ன நம்பி வர மாட்டியாமா"..அவனின் ஆழ்ந்த குரல் வேதனையை அடக்கி கொண்டு பேசினாலும் அதற்கு மேல் முல்லை மறுக்கவில்லை மரணத்தின் விளிம்பிற்கு அவன் அந்த குரலில் அழைத்தாலும் அவள் செல்ல தயார்..
மருத்துவர் முல்லையை நன்றாக பரிசோதித்தார்..அவளிடம் சில பல கேள்விகளை கேட்டவர் பாரியிடம் அவளை இன்னொரு கவுன்சிலிங் நாளை கூறி அழைத்து வர சொன்னார் தனியாக தன்னை சந்திக்க மொழிந்தார்..
உள்ளே பயம் பந்தாய் அடைத்தாலும் முல்லையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தான்.."வெல் டாக்டர் பாரி உங்க வைப் இப்ப என்ன நிலமைல இருகாங்க தெரியுமா"..
"அத தெரிஞ்சிக்க தான் உங்க கிட்ட கூட்டி வந்தேன் சொல்லுங்க டாக்டர் என் வைப் எப்டி இருக்கா.. அவளுக்கு என்ன பிரச்சன"..
"டாக்டர் உங்க வைப் தாழ்வுணர்ச்சில இருகாங்க..இதுக்கு ஒரு காரணம் நீங்கனு சொல்லலாம் அவங்கள நிர்பந்தத்துல நிறுத்தி மேரேஜ் பண்ணிருக்கீங்க..அதுக்கு அப்ரோ அவங்க கூட ஸ்மூத்தா பேசி ஒரு முடிவுக்கு வராம அதிரடியா அவங்கள அடைஞ்சிருக்கீங்க..இதெல்லாம் அவங்களுக்கு ஒரு டிஸ்கரேஜ் மைண்ட் செட்டுக்கு கொண்டு வந்துருச்சு..அது மட்டும் இல்ல அவங்களுக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கு அதுக்கெல்லாம் பதில் தெரியாம பாவம் ரொம்ப கொழம்பி போய்டாங்க.
உங்க மனைவி உங்களுக்கு வேணும்னா நீங்க தான் அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கனும்..
அவங்கள இதுல இருந்து மீட்டு கொண்டு வரணும்.. அவங்க கேள்விக்கு உங்க கிட்ட தான் பதில் இருக்கு.".. அந்த மருத்துவர் கூறி முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தவன் எண்ணங்கள் யாவும் அழகு மங்கையே..
அவன் அதிரடி காதலே எமனாக வந்து விட்டது..அவன் காதலுக்கே ஒரு சவுக்கடி..இதிலிருந்து அவளை காப்பது எப்படி..எப்படியாயினும் அவளை காப்பேன்..அவள் என்னவள் என்ற எண்ணம் மேலோங்க ரியோவிற்கு அழைத்தான்..
வீட்டில் அயர்வுடன் கண்மூடி சோபாவில் சாய்ந்திருந்தாள் முல்லை.. பிக்காச்சு அவள் தோளில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தது..மாம்பழ சாற்றை கெட்டியாக பிழிந்து எடுத்து வந்தார் கமலி..மருமகள் தலையை வருடி"கண்ணு இந்தா ஜூசு குடி வெயிலுக்கு நல்லா இருக்கும்.."
"வேணா அத்த வாந்தி வர மாறி இருக்கு"..
"இல்லடா வயிறு காலியா இருக்கு பாரு உள்ள இருக்குற உன் பிள்ளைங்களுக்கு பசிக்கும்..ரெண்டு வாய் குடி டா".. அவரின் வற்புறுத்தலின் இரு வாய் குடித்தவள் அதற்கு மேல் முடியாமல் வைத்து விட அப்போது அவளுக்கு ரொம்ப பிடித்த இளம் சிவப்பு வர்ண ரோஜா கொத்துகளுடன் சக்தியின் கரம் பிடித்து கொண்டு பழைய துள்ளலோடு அங்கே வந்தான் ரியோ..
அரை மயக்க நிலையில் இருந்தவளுக்கு மங்கலாக தெரிந்தது என்னவோ கண்களும் உதடும் ஒருங்கே சிரிக்க பழைய ரியோ வருகை கூடவே புது பொலிவுடன் சக்தி.. பாரி ரியோவிற்கு அழைத்து அவன் சக்தியுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாக காட்டி நடிக்க சொன்னான்..ஆனால் ரியோ உண்மையாவே தான் சக்தியுடன் வாழ ஆரம்பித்து அவள் கர்ப்பமாக இருப்பதை கூற அப்படியென்றால் உடனே பொண்டாட்டியுடன் வந்து சேர சொன்னான் பாரி..பாரிக்கு தெரியும் முல்லையின் மனம் நண்பனை எண்ணி பெரும் வேதனை அடைந்துள்ளது..அவன் வாழ்க்கையை காரணம் காட்டி தானே இந்த கல்யாணமே..அவன் வாழ்வு சீரானதை அறிந்தால் அவளின் பாரம் சற்று இலக்காதா..பாரியின் எண்ண படியே ரியோ வந்து சேர்ந்தான்..
"என்னடா திடிர்னு வந்துருக்க ஏதாச்சும் பிரச்சனயா".. கலக்கத்துடன் கேட்டவளை கண்டு லேசாக முறுவலித்து
"பிரச்சன தா.. இனிமே நம்ம வீட்ல நெறைய குட்டிஸ் வந்து நம்மள பாடா படுத்த போறாங்க.. ".. அவள் மலங்க விழிக்க
"ஹேய் லூசு ஏன் இப்டி முழிக்குற நா அப்பா ஆயிட்டேன் மா"..முல்லை வேகமாக சக்தியை காண அவள் முகமே கூறியது ரியோ கூறியது உண்மையென.. கமலி உடனே சக்தியின் கன்னம் வழித்து திருஷ்ட்டி கழித்து வந்தவர்களுக்கு உண்ண ஏதாவது எடுத்து வர சென்றார்..அவருடனே நண்பர்கள் இருவருக்கும் தனிமை தந்து கமலி பின்னே சென்றாள் சக்தி..அவள் மறைந்ததும்"டேய் என்னடா சொல்ற அப்போ வெண்பாவ மறந்துட்டியா"..
"அவள நா சாகற வர மறக்க முடியாது முல்ல அது உனக்கும் தெரியும் அது வெறும் நெனப்பு நீரு பூத்த நெருப்பு மாறி அவ நெனப்பு என் மனசுலயே இருக்கும்.."
"அப்போ சக்தி"
"வெண்பா என் நெனவுல தான் இருப்பா.. அதுகூட நா காதலிச்ச கல்யாணத்துக்கு முன்ன இருந்த வெண்பா..உனக்கு முழுசா சொன்னதான் புரியும் கேளு"... ரியோ நடந்த அனைத்தையும் முல்லையிடம் கூறி முடிக்க அவள் வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தாள்.
"லேட்டா புரிஞ்சிக்கிட்டாலும் சக்திய நா புரிஞ்சிக்கிட்டேன் முல்ல..இப்போல்லாம் நா வெண்பாவ நெனைக்குறதே இல்ல முல்ல..எனக்காக பொறந்தவ என் சக்தி தான்.."
"ரொம்ப சந்தோசமா இருக்குடா எங்க உன் வாழ்க்கயோட சக்தி வாழ்க்கயும் நாசமா போயிரும்னு பயந்துட்டே இருந்தேன் இப்போ தான் நிம்மதியா இருக்கு..அண்ணா அண்ணி கிட்ட சொல்லிட்டியா"
"இல்ல எனக்கு முக்கியம் நீதான் உங்கிட்ட சொல்லிட்டு தான் அவங்க கிட்ட சொல்லணும்".. கமலியுடன் சக்தியும் வந்து சேர்ந்தாள்.. அவர்கள் பேசிக்கொண்டிருக்க கமலி சமையலை கவனிக்க சென்றார்..முல்லை சக்தியின் கரம் பற்றி"எப்பவும் இப்டியே நீங்க சந்தோசமா இருக்கனும்..எனக்கு ரியோ மட்டும் முக்கியம் இல்ல நீயும் எனக்கு முக்கியம் தான்.."..
"அதே மாறி நீயும் எனக்கு முக்கியம் தானே முல்ல..".. ரியோ குறுக்கிட்டு பேச அவனை ஆழ்ந்து நோக்கினாள் முல்லை..
"சொல்லு உன் சந்தோசம் உன் வாழ்க்க எங்களுக்கு முக்கியம் தானே"
"நீ என்ன சொல்ல வர்ற"
"முல்ல நீ ஏன் இப்டி மாறி போன..எதுனால நான்னு வரும்போது நா செய்ற தப்ப கூட மன்னிக்குற நீ பாரின்னு வரும்போது ஏன் அதையே புடிச்சு தொங்குற..நீயும் அவர லவ் பண்ற.. அத அவர்கிட்ட சொல்லி இந்த மாறி நேரத்துல சந்தோசமா இல்லாம நீயும் கஷ்டப்பட்டு அவர படுத்தி எடுக்குற.. "
"அப்டினு அவர் சொன்னாரா"
"உன் கத தான் ஊரே தெரியுமே அவரு வேற தனியா சொல்லனுமா".
"பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. முல்ல நல்ல வாழ்க்க எல்லோருக்கும் கிடைக்காது..கிடைச்ச வாழ்க்கய தான் ஏனோ தானோனு வாழுறோம்.. எனக்கும் உனக்கும் அப்டி இல்ல..நீயே உன் வாழ்க்கய கெடுத்துக்காத உனக்காக இல்லன்னாலும் உன் பிள்ளைகளுக்காக யோசி..எல்லா கேள்விக்கும் பதில் கெடைக்காது ஆனா முடிவு இருக்கும் அந்த முடிவு உன் கையில இருக்கு மனசுல எதயோ போட்டு கொலம்பிட்டு இருக்க அதுல இருந்து வெளிய வா"...ரியோ சக்தியும் மேலும் இதனை பற்றி பேசாமல் வேறு பேசி சாப்பிட்டு கிளம்பி சென்றனர்..
அவர்கள் சென்றும் முல்லை ரியோ கூறிய வார்த்தையில் உழன்றாள்..இத்தனை மாதங்களில் பாரியிடம் அவள் நடந்து கொண்ட விதத்தை எண்ணி பார்த்தாள்..ஒன்று கூட அவள் காதலை காட்டவில்லை அவனை காயப்படுத்தி கொண்டே இருந்த நினைவுகள்..இப்படி பட்ட பெண்ணையா அவன் உருகி உருகி விரும்புகிறான் அப்படி தன்னிடம் என்ன உள்ளது..அவள் கண்கள் நிலை கண்ணாடியை கண்டது..பெருத்த தேகமும் சோர்ந்த முகமும் இதை கண்டு கூட காதல் வருமா வேறு எதை கண்டு என்னை காதலிக்கிறான்..இதுவரை மனதை அழுத்திய ரியோ பிரச்சனை முடிந்ததவுடன் கணவனை பற்றி சிந்தித்தாள்.. அவளின் தப்பு அவளுக்கே உரைத்தது..அப்படியே தூங்கி போனாள் முல்லை.
கண்முழித்து பார்க்கும் போது அவள் கால் விரல்களில் நக பூச்சு பூசிக்கொண்டிருந்தான் பாரி..அழுத்தி கூட பற்றாமல் மலர் பாதத்தை மெல்ல கரம் தாங்கி காற்றுக்கும் நோகாமல் காரியதில் கண்ணாக இருந்தான்..முதன் முதலில் இவன் மேல் ஏன் கண்மூடி தனமான கோவம் எல்லா பிரச்னைக்கும் காரணம் நானே வெளிதோற்றத்தை கண்டு காதலிப்பவன் அல்ல இவன் என்னை எனக்காக ஏற்று கொண்டவன் அந்த நிமிடம் அவளுக்கு ஒரு கர்வம் பிறந்தது இவன் என்னவன் என..அவனோ அனைத்து நகங்களுக்கும் நக பூச்சு பூசி விட்டு அதை வாயால் மெல்ல ஊதி காய வைத்தான்.. கூச்சத்தில் விரலை மடக்கி கொண்டாள் முல்லை.. அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவள் விழித்திருபத்தை காண"இல்ல நீ தூங்கிட்டு இருந்த..இந்த கலர் உனக்கு நல்லா இருக்கும் அதான்.."தவறு செய்த குழந்தை போல மிரண்ட பார்வையுடன் அவன் கூற புன்னகைத்தாள் முல்லை..
மெல்ல எழுந்தவள் என்ன நினைத்தாளோ அவன் மடியில் தலைவைத்து படுத்து கொண்டாள்..அவளின் செய்கை மாற்றத்தை உணர்ந்தாலும் ஏதும் கேட்க்காமல் அவள் கூந்தலை வருடி கொடுத்தான்..அவளே"பாரி"
"ம்ம்ம்"
"நா ஒன்னு கேப்பேன் உண்மைய சொல்லணும்"...
"கேளு"..
"என்ன ஏன் லவ் பண்றிங்க"..
"ம்ம்ம் தெரிலயே"
"ப்ச் அது எப்டி தெரியாம இருக்கும் எப்டினு சொல்லுங்க ப்ளீஸ்"..
"தெரிலடி..என்கிட்ட சின்ன வயசுல இருந்தே சரிக்கு சரி மல்லுக்கட்டிய பொண்ணு நீ மட்டும் தான்..அதனால உன்கிட்ட ஒரு ஈர்ப்பு.. உன்ன பாத்தாலே சீண்டி விளையாடணும்னு தோணும்..அப்ரோ இந்த குண்டு கன்னம் அத கடிக்கணும்னு இருக்கும் அப்ரோ அந்த பிங்க் லிப்ஸ் ஓயாம எதயாச்சும் சாப்பிடுகிட்டே பேசிட்டே இருக்குல்ல அத கிஸ் பண்ணனும்..கொழு கொழுன்னு இருக்குற இடுப்ப கில்லனும் கரடி பொம்ம மாறி இருக்குற உன்ன கட்டி புடிச்சு லைப் லோங் தூங்கணும்னு ஆச வந்துருச்சு..அந்த ஆசயே லவ்வா மாறி உன்ன என் வாழ்க்கயாவே மாத்திடுச்சு"...
"நா எப்பவும் உங்கள ஏசிட்டே இருக்கேன் என் மேல கோவமே வராத உங்களுக்கு"..
"உன் கோபம் சின்ன குழந்தையோட கோபம் மாறி ரசிக்க தோணும் சில நேரம் கண்டிக்க தோணும் ஆனா அத வெறுக்க முடியாது.. ".. அவன் மாடியிலிருந்து எழுந்தவள் அவன் முகம் பார்த்தாள்..அந்த கண்களில் தான் எவ்வளவு காதல் அது எனக்கானது.. அவன் மார்பில் அவளாக ஒடுங்க அவளை அணைத்து கொண்டு அப்படியே மெத்தையில் சாய்ந்தான் பாரி..அந்த மௌனம் இருவருக்குள்ளும் இனிமையாக இருந்தது அந்த இனிமை ஆன்மாவை இணைத்து கயிறு கட்ட அந்த நொடியை ரசித்தார்கள் இருவரும்..
பாரிக்கு நிம்மதி கொடுத்து வைக்கலையோ மருத்துவமனையில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.. இத்தனை நேரம் அனுபவித்த சுகம் மாறி பயமே வந்தது.. முல்லையிடம் சொல்லி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்.. அங்கே வளரி கண்விழித்திருந்தான் இவ்வளவு சீக்கிரம் அவன் இயல்புக்கு திரும்புவான் என சத்தியமாக யாரும் எதிர்பார்க்கவில்லை..இப்போது தான் எல்லாம் சரியாகி விடுமென நம்பிய பாரியின் மனதில் இடியே இறங்கி விட்டது..கோமாவில் இருந்து எழுந்த வளரி தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என அறிந்து கொண்டு முகத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது என கேள்வியுற்று தன் முகத்தை பயத்துடனே கண்ணாடியில் பார்த்தான்.
அவ்வளவு தான் அவன் போட்ட கூச்சலில் அனைவரும் நடுங்கி பாரிக்கு அழைப்பு விடுத்தனர்..பாரி அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு வளரியிடம் பேசினான்..ஆனால் வளரி"ஏண்டா இப்டி பண்ண பிளாஸ்டிக் சர்ஜெரி பண்ணி என் முகத்தையே கொண்டு வர முடியாதா..உன் சுயநலத்துக்காக என் அடையாளத்தையே மாத்திட்டியே நீயெல்லாம் ஒரு டாக்டரா த்து..."..
"சுயநலம் தான்..நீ என் அண்ணன்னு தெரிஞ்சப்போ எவ்ளோ சந்தோச பட்டேன் தெரியுமா ஆனா நீ நா லவ் பண்ற பொண்ணயே லவ் பண்ண அது ஆரம்பத்துல தெரியாம நடந்துருச்சு ஆனா உண்ம தெரிஞ்சதுக்கு அப்றம் என்ன பண்ண..எப்டிடா உன்னால இவ்ளோ கேவலமா நடக்க முடின்சிது..என்ன மாறியே நடிச்சி அவள வீட்டுக்கு வர வெச்சு அத நெனைக்கும் போதே உன்னலாம் விஷ ஊசி போட்டு கொன்னுருக்கணும் பேசிட்டு இருக்கேன் பாத்தியா என்ன சொல்லணும்"...
வளரி பேச்சற்று போனான் அவனால் என்ன செய்ய முடியும் உண்மை வாயடைத்தது..வளரிக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்து அவன் வீட்டிற்கு செல்லலாம் என கூறிவிட பாரி வேண்டா வெறுப்பாக அவன் முன் வந்து"இன்னையோட நீ வீட்டுக்கு போலாம் அப்றம் உனக்கு அடி பட்டது உன் அம்மா அப்பாவுக்கு தெரியாது நம்பர் இல்ல சொல்றதுக்கு"..
"ப்ரோப்லேம் இல்ல..நா சொல்லிட்டு தான் வந்தேன் எத்தன மாசம் ஆனாலும் என்ன தேட வேணாம்னு"
"டிக்கெட் போடடுமா"
"வேணா"
"அப்றம், "
"நா என் வீட்டுக்கு போ போறேன்"
"அதான் டா உன் வீடு என்ன பக்கத்து தெருவுலயா இருக்கு..டிக்கெட் போடணும்னு தெரியாதா,.. "
"என் வீடு இங்க தா இருக்கு என் அம்மா தம்பி ரெண்டு பேரும் இங்கதான் இருகாங்க,"
"வாய ஒடச்சிருவேன்..என்ன உறவு கொண்டாடுறியா..இதெல்லாம் நீ ஏன் செய்றேன்னு தெரியும்..தோ பாரு முல்லை இப்ப என் பொண்டாட்டி அவ மாசமா இருக்கா..அவள டிஸ்டர்ப் பண்ற வேல வெச்சிக்காத உன்ன காப்பாத்துன எனக்கு உன்ன கொல்லவும் தெரியும்"..
"டேய் தம்பி ஏண்டா டென்ஷன் ஆகுற..அதான் என் மூஞ்சிய மாத்திட்டியே..நானே போயி நா விஷான்னு சொன்ன கூட அவ நம்ப மாட்டா..ஏன் உன் லவ் மேல நம்பிக்க இல்ல உன் பொண்டாட்டிய நா கரெக்ட் பண்ணிருவேன்னு பயப்படுறியா"..பாரி வளரி சட்டையை பிடிக்க அவன் சிரித்தான்..
பாரி சந்தேக பட்டது சரிதான் வளரி காலை சுற்றிய பாம்பு..அவனிடமிருந்து தப்ப முடியாது முல்லை ஈருயிராக இருக்கும் பொழுது அவள் மேலும் குழம்ப வேண்டாம்..முள்ளில் விழுந்த சேலையை மெல்ல எடுக்க நினைத்து டிஸ்சார்ஜ் செய்து தன் வீட்டிற்கே அழைத்து வந்தான் பாரி..கமலியிடம் முன்னமே அழைத்து கூறிருந்ததால் அவர் பீதியை உள்ளே மறைத்து வெளியே மகனின் நண்பனாக அவனை வரவேற்றார்…
Comments
Post a Comment