இஞ்சி இடையழகி 9


ரியோவும் கண்ணாவும் அடித்த சரக்கின் மூலம் புது புது பொய்களை கண்டு பிடித்து ரியோ முல்லையிடமும் கண்ணா பாரியிடமும் கெஞ்சி கூத்தாடி காலில் விழாத குறையாக அனுப்பி வைத்தனர்..அங்குள்ள எஸ்டேட் ஸ்கூல்லை பார்வையிடவும் புதிதாக திருமணம் முடிந்த ஜோடிகள் தேன்நிலவாக இதனை கொண்டாடவும் அனுப்பி வைக்க கமலிக்காகவும் அன்புக்காகவும் பயணத்தை மேற்கொண்டனர் பாரி முல்லை இருவரும்..

ஊட்டி அவளின் அழகை சொல்லத்தான் வேண்டுமா எப்போதும் இங்கே வருபவன் தான் பாரி..ஆனாலும் ஊட்டியின் அழகு மட்டும் குறைவதே இல்லை..முல்லைக்கு இது முதல் தடவை.. அன்பு அவளை தனியாக தூரம் எங்கும் அனுப்பியது இல்லை.. அவள் குஷியாக அனைத்தையும் படம் பிடித்து கொண்டும் பாரியிடம் அங்க பாருங்க இங்க பாருங்க கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க என சண்டையை மறந்து பேச அவனும் அவளின் குதூகலத்தில் கலந்து கொண்டான்.. 

எஸ்டேட்டின் நடுவே அவர்களின் பிரெஞ்சு கால வடிவமைப்பில் கட்டபட்டிருந்த வீட்டை பார்த்து வாயை பிளந்தாள் முல்லை.. சுற்றிலும் பச்சை பசேலென இயற்கையின் எழிலில் நட்ட நடுவே புள்ளி வைத்தார் போல அழகான வீடு அடக்கமான வீடும் கூட.. அவள் மெய்மறந்து பார்த்திருக்க அவளை விழி மூடாமல் ஒருவன் ரசித்தான் என்றால் இன்னொரு விழிகளோ"நீயாச்சும் வந்து எனக்கு விடுதல கொடுக்க மாட்டியா"என ஏக்கமாக பார்த்தது.. 

தோழியின் வாழ்க்கை எப்படியாவது சரியாகிட வேண்டுமென தேவாலயத்திற்கு சென்று மனமுருக அந்த தேவனிடம் ஜெபித்தவன் வெளியே வர கைபேசி மெசேஜ் காட்டியது..யாரென்ன பார்த்தவன் விரல்கள் வேகமாக டைப் அடிக்க அடுத்த சில நிமிடங்களில் அம்மன் கோவிலுக்கு சென்றான்..அங்கே அவனின் வண்ணமயில் வெண்பா இருந்தாள்..ரியோ அவனை பற்றி இதுவரை சொல்லவே இல்லையே.. அவன் ஒரு பத்திரிகையாளன் பயம் என்ற ஒன்றே அறியாமல் பல பயங்கர இடங்களில் புகுந்து ஆதாரங்களை திரட்டி பெரிய தலைகளை நாளிதழின் மூலம் கிழி கிழியென கிழித்திருக்கிறான்..நல்லவனுக்கு நல்லவன் வல்லவனுக்கு வல்லவன் அழகன் என்று கூறிட முடியாது ஆனால் எதற்கும் அஞ்சாத மனஉறுதி தீட்சண்யம் வழியும் பார்வையும் அவனின் சிறப்பு..

வெண்பா கோவிலில் அமர்ந்து கைகளை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தாள்..அவளின் முன் அவளின் தோழி சாரு அமர்ந்து அவள் கூறுவதை பார்த்து கொண்டிருந்தாள்..தான் கூற வந்ததை அழகாய் தெளிவாய் செய்கையில் தெரிவித்து கொண்டிருந்தாள்..ஆம் அவளுக்கு காது கேட்க்காது பேசவும் வராது..செய்கையில் சிலதை சொன்னாலும் தெளிவான பார்வையே மீதியை மற்றவருக்கு உணர்த்தி விடும்..வெண்பாவின் தோழி சாரு ரியோ நண்பன் சரணின் காதலி..சாருவை ஒருமுறை கல்லூரியில் எவனோ வம்பிளுக்கு அவள் அழுது சரனிடம் புகாரளிக்க காதலியின் கண்ணீரை கண்டு பொங்கி எழுந்து சிவனேனு இருந்த ரியோவையும் இழுத்து கொண்டு சாருவின் கல்லூரிக்கு சென்றான்..

கல்லூரி வெளியே அந்த இளைஞனுடன் சரண் சண்டையிட சாருவின் பின்னே நின்று கொண்டு மிரண்ட பார்வையுடன் வெண்பா..ஒரு கட்டத்தில் சண்டை பெரிதாக ஒருவன் ஹாக்கி ஸ்டிக்குடன் வர அவனை போட்டு புரட்டி எடுத்த ரியோவை அச்சத்துடன் பார்த்த கண்களை அவன் கவனிக்க தவறவில்லை..சண்டை முடிந்து வார்னிங்குடன் இவர்கள் செல்ல வெண்பா பச்சக்கென்று ரியோ மனதில் ஒட்டி கொண்டாள்..

ஏதோ ஒரு ஈர்ப்பு அவளின் மேல்..சொந்தமாக சிரித்து கொண்டான்..சரணை இழுத்து கொண்டு சாருவின் கல்லூரி முன்னே பலியாய் கிடந்தான்..சாருவுடன் எப்போதும் அவளிருப்பாள்..இவனை கண்டால் மட்டும் ஓடி விடுவாள்..ஒருநாள் ஓட முயன்ற அவளை வழிமறித்து"ஹெலோ மேடம் என்ன பாக்க மனுஷன் மாறி இல்லயா ஏலியன் மாறி இருக்கோ எதுக்கு பயந்து ஓடுறிங்க"..அவளின் கண்கள் சாருவை உதவிக்கு அழைக்க 

"அண்ணா அவ அப்டித்தான் விடுங்களேன்".

"அத அவங்க சொல்ல மாட்டாங்களா "

"சொல்ல மாட்டா "

"ஏன் வாயில கொலகட்டயா "

"அவளால பேச முடியாது கேட்கவும் முடியாது"..அடுத்த வார்த்தையின்றி சாருவை பார்த்தான் ரியோ.

"ஆமாண்ணா அவ பொறந்ததுல இருந்தே இப்படிதான்..ஆனா செம்ம ஷார்ப் நாம பேசுறத வெச்சே எல்லாத்தையும் புரிஞ்சிப்பா எங்க காலேஜ் டாப்பர்..நார்மல் ஸ்கூல்ல தான் படிச்சா..என்ன கொஞ்சம் பயந்த சுபாவம்..எப்பவும் என்கூட தான் இருப்பா"..ரியோ பார்வை இப்போது வெண்பாவிடம்..அவனின் உதடுகள் சாரி என்க 

அவளோ தலையசைத்து மிரண்ட விழியால் ஏற்று கொண்டாள்.ரியோ அதிலிருந்து அவளை தொந்தரவு செய்வதில்லை..அவள் மேல் கொண்ட ஈர்ப்பு மெல்ல மெல்ல உருமாறி காதலாகியது..ஆனாலும் அவள் படிக்கட்டும் என்று ஒதுங்கி இருந்தான்.அவளை பற்றி சாருவிடம் கேட்டு கொள்வான்..ஒரு நாள் அவளை தொலைவில் இருந்தே பார்த்தவன் நெருங்கி வருவதற்குள் இன்னொருவனின் பைக்கில் ஏறி சென்று விட்டாள்..அந்த இன்னொருவன் பாரி..இவன் கூட ஏன் போறா சாருவிடம் கேட்டான்..பதில் வெண்பா பாரியின் தங்கை சித்தி மகள்..தந்தையற்ற அவளுக்கு பாரி தந்தையும் ஆவான்..அவனை மீறி அவள் ஏதும் செய்வதுதில்லை..

ரியோவிற்கு தலை சுற்றியது..தனக்கு பிடிக்காத ஒருவனின் தங்கையா..தன் அண்ணனின் எதிரி என்றால் வெண்பா எவ்வாறு என் காதலை ஏற்று கொள்வாள்..பாரி எப்படி சம்மதிப்பான்..சோர்ந்து அமர்த்தவனை மடி சாய்த்து தலைகோதி தோழியவள் காரணம் கேட்க அதற்கு ஏற்கனவே தான் ஒரு பெண்ணை விரும்புவதை அவளிடம் கூறிருந்தவன் இப்போது அவள் பாரியின் தங்கை என்று கூறி எப்படி பாரி சம்மதிக்க மாட்டான் அவனுக்கு என்னை கண்டாலே ஆகாது என புலம்பி தவித்தான்..நண்பனுக்கு ஆறுதல் கூறியவள் அதற்கு பின் தான் பாரியை சந்தித்து பல கூத்துக்கள் நடந்தது..

பாரி முல்லையின் திருமணத்தில் ரியோவை கண்டவள் தன் அண்ணியின் நண்பன் என்ற முறையில் ரியோவை கண்டு சிநேக புன்னகை உதிர்த்தாள்..அதை கவனிக்கும் நிலையில் அப்போது ரியோ இல்லை..தோழி எவ்வாறு திருமணத்திற்கு சம்மதித்தாள் அதும் இவனோடு என்ற கேள்வியே மண்டையில் ஓடியது..இப்போது அனைத்தும் தீர்ந்து தன் காதலை தெரிவிக்க வெண்பாவை சந்திக்க ஏற்பாடு செய்தான் சாரு மூலம்..அவள் அருகில் செல்லும் நேரம் அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வர அதனை தவிர்க்க முடியாதவன் சாருவிற்கு மெசேஜ் செய்து கிளம்பி விட்டான்..அவனின் காதலை சொல்ல முடியாமலே போனது..

"பாரி பா......ரி"..

"ப்ச் என்னடி"..

"வந்தோன படுக்கணுமா"..

"தோ பாரு முல்ல உனக்குத்தான் இந்த இடம் புதுசு பட்டிகாட்டான் முட்டாய் கடைய பாக்குற மாதிரி ஆ னு வாய பொளந்து பாக்குற நா சின்ன வயசுல இருந்தே பாக்குறேன் இப்ப புதுசா பாக்க என்ன இருக்கு" 

"அதுக்குன்னு வந்ததும் வராததுமா குளிக்காம கொள்ளாம படுக்கணுமா"..

"உனக்கு எங்கடி வலிக்குது..வேணும்னா வா என் பக்கத்துல வந்து படு'..

"நீ மூடு..எனக்கு பசிக்குது பாரி போயி ஏதாச்சும் சாப்ட வாங்கிட்டு வா"..

"என்னடா பொழுது போயிருச்சே இன்னும் வாய தொறக்கலையேன்னு பாத்தேன்..தேவிம்மா தான் எப்போ நா இங்க வந்தாலும் சமைப்பாங்க நம்ம வீட்டையும் அப்பப்போ சுத்தம் செய்வாங்க அவங்கள இன்னும் காணும் சரி நா வெளியே போயி சாப்ட ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்"..அவன் கிளம்பி சென்றதும் வீட்டை நிதானமாக சுற்றி வந்தாள் முல்லை..

அங்கே பல விதமான கலைப்பொருட்கள் அடுக்கியும் சுவரில் தொங்கியும் தங்கள் அழகை வெளிப்படுத்த ஒவ்வொன்றையும் தொட்டு தடவி பார்த்தவள் அதில் மிக மிக நுணுக்கமாக வடிவமைக்கபட்ட அழகிய பெண் சிலையை கண்டாள்..அந்த சிலையின் கழுத்தில் அதைவிட அழகாக ஒரு சங்கிலி மிளிர்ந்தது..கையாலையே அதனை வடிவமைத்திருக்க வேண்டும்..பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார்கள்..சுற்றிலும் பலவிதமான பூக்களின் இதழ்கள்..அதற்கு நடுவே சிறிய கண்ணாடி..அதன் உள்ளே நெருப்பு போன்று ஏதோ ஒன்று கனன்று கொண்டிருந்தது..உற்று பார்த்தால் மட்டுமே அந்த ஒளி கண்ணுக்கு தெரியும்..முல்லை அதையே உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்க திடிரென்று கதவு தட்டபட அந்த சங்கிலியை கீழே போட்டு விட்டாள்..மீண்டும் அதனை எடுத்து சிலையின் கழுத்தில் போட்டு விட்டு சென்று விட  

அந்த சங்கிலியின் கண்ணாடி சிறு விரிசல் விழுந்திருக்க இதற்காகவே காத்திருந்த கரும்புகை ஒன்று அதிலிருந்து வெளியேறியது ஆவேசமாய்..அங்கிருந்து வேகமாக எங்கோ பறந்து சென்றது..அது செல்லும் வழியெங்கிலும் இருந்த பசுமை வெம்பி வாடி போனது அதனுடைய உஷ்ணத்தில்..

கதவை திறக்க அங்கே தேவிம்மா நின்றிருந்தார்."வணக்கம் பாப்பா நா தேவி..இந்த வீட்டை சுத்தம் பண்றதும் நா தான் தம்பியோ இல்ல அம்மா வந்தா சமைக்குரதும் நான்தான்..வீட்ல கொஞ்சம் வேல முடிச்சிட்டு வர லேட்டாச்சு..பாப்பா தான் தம்பியோட வீட்டுக்காரம்மாவா"...

"ஆமா ம்மா..உள்ள வாங்க இப்போதான் பாரி உங்கள பத்தி சொல்லிட்டு சாப்பாடு வாங்க போனாரு"

"அப்டியா ம்மா..இந்த ஒருதடவ மன்னிச்சிருங்க மா..இனிமே இப்டி லேட்டு ஆகாது'..

"பரவால்ல ம்மா..இங்க இருக்குற வரை இனிமே நானே சமச்சிக்குறேன்.."

"ஐயோ அம்மாவுக்கு தெரிஞ்சா நா செத்தேன்". 

"அதெல்லாம் அத்த கிட்ட நா பேசிக்குறேன் நீங்க வீட்டு வேலைக்கு கூட மாட ஹெல்ப் பண்ணா போதும்.."..தேவிக்கு முல்லையை பிடித்து விட வீட்டை பேசிக்கொண்டே இருவரும் சுத்தம் செய்ய உணவுடன் பாரியும் வர நேரம் சிட்டாக பறந்தது..

ஆக்ரோஷமாக வெளியேறி அது அங்கே அவளை கண்டது..அவளை நெருங்க இயலவில்லை..தொட துடித்த கரங்கள் காற்றில் அலைமோதியது..புகையாக அவளையே சுற்றி சுற்றி வந்தது..மரணத்தின் போதிலும் கூட இவ்வளவு வேதனையை உணரவில்லை..இப்போது அவளை காணும் போது தொட்டு தழுவ முடியாமல் போக அந்த வேதனையை சொல்லத்தான் முடியுமா...காற்றாக கதறியது மீண்டும் ஆவேசமாக அங்கிருந்து வந்து அந்த சங்கிலியின் உள்ளே நுழைந்தது..

"பாரி பாரி கதவ தொறங்க எதுக்கு வெளிய லாக் பண்ணீங்க இப்ப ஒழுங்கா தொறக்க போறிங்களா இல்லயா"... முல்லை தான் இரவு உறங்கும் முன் குளிருக்கு இதமாக குளித்து விட்டு படுக்க எண்ணி குளிக்க சென்றாள்..குளிரில் நடுங்கி ஒருவழியாய் குளித்து முடித்தவள் வெளியே வர எண்ணி கதவை திறக்க அது வெளி பக்கமாய் தாளிடபட்டிருந்தது..பாரியின் வேலையென்று நினைத்து கதவை தட்டி கொண்டே இருந்தாள்.. 

வீட்டில் சரியாக சிக்னல் கிடைக்காததால் அவள் குளிக்க செல்லும் போதே வெளியே வந்தவன் நீண்ட நேர உரையாடலில் இருந்தான்..முல்லை கதவை தட்டி கை வலியெடுக்க ஒற்றை துண்டு குளிரை தங்கிட முடியாமல் துவள முதுகு பின்னால் யாரோ மூச்சு விடும் சத்தம் மெல்லமாக கேட்க ஏற்கனவே குளிரில் வெடவெடத்து கொண்டிருந்தவள் லேசாக கண்களை ஓரத்தில் ஓட விட்டாள்..அவள் பயந்தது போல ஏதும் இல்லை.. அப்பாடா என்று நன்றாக பின் திரும்பி பார்த்து முன் திரும்ப அதற்குள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கபட்டது..திடீரென இருள் சூழ பயம் நெஞ்சை கவ்வ இப்போது பாரி பாரி என கதவே உடையும் வண்ணம் தட்ட மின்சாரம் போனதும் உள்ளே வந்த பாரி சத்தம் கேட்டு கைபேசி டார்ச்சின் உதவியுடன் கதவை திறந்தான்.. 

வெளியே வந்ததும்"அறிவு கெட்ட முண்டம் ஏண்டா கதவ லாக் பண்ண.. என்ன இங்க கூட்டிட்டு வந்து போட்டு தள்ள பாக்கறியா".. 

"அடிங்க அப்டியே வெச்சேன பாரு நா எங்கடி கதவ லாக் பண்ணேன் சொல்ல சொல்ல கேக்காம நீதானா ராத்திரி குளிக்க போன சரி அப்டியே வெறச்சி சாவுன்னு நானும் விட்டுட்டேன் அதுக்குள்ள ஃபோன் வந்துச்சு பேசிட்டே வெளியே போய்ட்டேன்".. 

"நடிக்காத எப்ப எப்பன்னு இருக்கே நீ என்ன பழிவாங்க..எவ்ளோ நேரம் தான் நானும் நடுங்கிட்டே நிப்பேன் இது சாதாரண துண்டு குளிர் தாங்குமா இதுல கரெண்ட்டு வேற போய் அதுவேற வயித்த கலக்கி".. கோவத்தில் ஆரம்பித்த அவள் ஆதங்கத்தில் முடிக்க அதுவரை அவள் புலம்பலை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தவன் பார்வை பொன் மேனியை மேய இருளில் அவள் எதை கண்டால்.. 

என்னடா நாம மட்டும் ரொம்ப நேரமா லூசு மாறி பேசுறோமே என்ற உணர்வு தோன்ற நிமிர்ந்து பார்த்தவள் அங்கே கண்களில் போதையுடன் காதலும் போட்டியிட தன்னை வலிக்காமல் பார்வையால் கொல்லும் ஒருவன்..பேசிய வாய் தானாக பூட்டு போட்டு கொள்ள கைகள் எதேர்சையாக வெற்று தோள்களை தழுவ பயத்தில் வெட்கம் வேறு வந்து தொலைக்க திரும்பி நின்று கொண்டாள் முல்லை.. 

அவளின் தவிப்பை ரசித்தவன் மெல்ல நெருங்கி பின்னிருந்து அவளை அணைத்து கொண்டான்..விதிர்விதிர்த்து திணறியவளை கழுத்தில் முகம் புதைத்து அடக்கினான்..குளித்ததின் விளைவாக செயற்கை வாசமும் அவளின் இயற்கை வாசமும் ஒன்றோடு ஒன்று கலந்து அவனை பித்தனாக மெல்ல பின் கழுத்தில் உஷ்ண உதடுகளை பொருத்தினான்..மோன நிலையில் அவளின் கண்கள் மூடி கொள்ள அவனின் முத்தத்தின் வெம்மை சிறு தோய்வை தர பிடிமானம் ஏதுமின்றி கீழே சரிய தொடங்கியவளை முன் திருப்பி முகத்தை கையில் ஏந்தி முத்த சிதறல்களை சிதற விட அதிலே கண்மூடி சொக்கி போனவள் அவனின் முதல் உயிர் தொடும் இதழ் முத்தத்தில் முற்றிலும் கரைந்தே போனாள்..

இருவருக்குமே முத்தத்தை முடிக்கும் எண்ணமில்லை மூச்சு விட திணரும் வேலை கூட தன் மூச்சை அவளுக்கு கொடுத்து சுவாசிக்க வைத்தான் பாரி அவர்களின் சண்டை கூட பின்னுக்கு தள்ளப்பட காதல் மட்டும் அங்கே ஆட்சி செய்தது..நீண்ட நேரம் நீடித்த மோன நிலை கண்ணாடி விழுந்து நொறுங்கும் சத்தத்தில் முடிவுற்றது... 

அவசரமாக பிரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க முதலில் சுத்தகரித்த பாரி"முல்லை நீ டிரஸ் போடு வெளிய என்னமோ சத்தம் கேக்குது பாத்துட்டு வரேன்!.. 

"இல்ல நீ நீங்க இங்கயே இருங்க..எனக்கு இருட்டுல பயமா இருக்கு"

"ப்ச் நா இங்கிருந்த எப்டிடி டிரஸ் மாத்துவ"  

"நீங்க திரும்பிக்கோங்க நா டக்குனு மாதிக்குறேன்".

"திரும்பணுமா ம்ம்ம்"

"ப்ளீஸ் பாரி".. 

அவன் திரும்பி கொள்ள அவசரமாக நைட்டிகுள் நுழைந்தவள் அவனுடன் வெளியே கேட்ட சத்தத்தை காண சென்றாள்.. அங்கே வரவேற்பு அறையில் பெரிய கண்ணாடி பிரேம் உடைந்து சிதறி கிடந்தது.. சுவரில் தொங்கி கொண்டிருந்தது எப்படி தானாக விழும் சாத்தியமே இல்லையே...முல்லை வேறு இருளில் தெரியாமல் காலை வைக்க கண்ணாடி துண்டு பட்டு காலில் ரத்தம் வடிந்தது... 

"ஸ்ஸ்ஸ் ஆ பாரி"

"என்னடி கண்ணாடி கிழிச்சிருச்சா"

"வலிக்குது பாரி".. 

"சரி எதையும் மிதிச்சிரத பாத்து இப்டி வா".. அவர்கள் பேசும்போதே மின்சாரம் வர முல்லையின் காலில் காயம் ஆழம் தான்.. அவளை தன் கையில் ஏந்தியவன் அறைக்குள் தூக்கி சென்று மருந்திட்டு தானும் அவளுடனே தூங்கி போனான்.. ஆனால் இருவரின் எண்ணமும் எப்படி பிரேம் உடைந்திருக்கும் என்பதே.. 

அங்கே பென்சிலையின் கழுத்தணியில் இருந்து கரும்புகை வெளியேறியது..சிந்திய உதிர துளிகளை கரும்புகையின் நாக்கு உள்ளிழுத்து உதிரத்திற்கு சொந்தமான அவளை சுற்றி வந்தது..கண்களின் அத்தனை வெறி..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்