இஞ்சி இடையழகி 10


முல்லைஈஈஈ.... "ஆஆ பாரிரீ"காதினுள் யாரோ பெயர் சொல்லி கதற அலறியடித்து எழுந்தாள் முல்லை... அவளின் கத்தலில் 

"ஆடியே என்னத்துக்குடி இப்டி கத்துற"

"யா யாரோ என் காதுல கத்துன மாறி இருந்துச்சு".. 

"காதோட சேத்து வச்சேன்னு வையு காதே கேக்காம போய்டும் ஒழுங்கா படுத்துறு".. 

"ப்ச் உன்கிட்ட போயி சொன்னேன் பாரு என்ன சொல்லணும்".. 

"ஸ்ஸ் முல்லை இங்க நம்மள தவிர யாரும் இல்ல பேசாம படு".. 

"எனக்கு தெரியும் மூடிட்டு படு"

தள்ளி படுத்தவளை அள்ளி தன் மேல் போட்டு கொள்ள திமிறியவளை இரும்பு கரம் கொண்டு அடக்கி வெற்றி திருமகனாய் அவளை கைவளையாதில் சிறைபிடிக்க ஆணவனின் சிறையில் இதமாய் உறங்கி போனாள் முல்லை.. அங்கே கரும்புகை சிறிது நேரம் அவர்களை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது..அவர்களின் பிடிவாத சண்டை கூட ஒரு பிரச்சனை என்று வந்தால் பின்னுக்கு போய் காதல் முன்னுக்கு வந்து விடுகிறது..அவர்ளை சுற்றி சுற்றி வந்தது அது..

அவளின் உதிரம் அதற்கு போதவில்லை போலும் வேகமாக வெளியே சென்றது..அங்கே ஆடம்பர தங்கும் விடுதியில் நவநாகரிக யுவதியுடன் சல்லாபத்தில் இருந்தான் ஒரு பண முதலையின் மகன்..அந்த யுவதி கூடல் முடிந்து கழிவறைக்கு செல்ல இங்கே கண்ணில் போதையுடன் மெத்தையில் உருண்டவன் நெஞ்சில் ஏறி அமர்ந்தது அது..அவனோ அதிர்ந்து போய் கண் திறக்க அங்கே சதை பிய்த்து வயிறு கிழிக்கப்பட்டு காலிலிருந்து வழியும் உதிரம் பாதம் தொட தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தது அது...கத்துவதற்கு வாய் திறந்தான் இயலவில்லை..அவனை பார்த்து கோரமாக சிரித்து கொண்டே"என்னடா நா எப்டி வெளிய வந்தேன்னு பாக்கறியா..எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா என்னையே அடைச்சு வைப்ப..இப்ப வந்துட்டேன்டா..என்ன பண்ண போற இப்ப...ஹாஹாஹா ஹஹஹஹ"..பயங்கரமாக அவள் சிரிக்க அவன் கைகள் மெத்தையடியில் கையை விட்டு துழாவி தாயத்து எடுக்க முயல அதற்குள் விரலை கண்ணுக்குள் விட்டு கண்ணை பிடிங்கி குரல்வளையை கடித்து ரத்தத்தை உறிந்து அவன் துடி துடிக்கும் போதே வயிறை கிழித்து குடலை உருவி தின்ன தொடங்கினாள்..அவனின் உடலில் இருந்து வெளிவந்த ஆன்மா கூட அவளை காண அஞ்சி மறைந்து போனது..கழிவறைக்குள் இருந்து வெளியே வந்தவள் இந்த கொடூர காட்சியை கண்டு மூர்ச்சையாகி போனாள்..தன் ஆவேசம் தீரும் வரை அவன் ரத்தத்தை உறிஞ்சு மம்மி போல ஆக்கிவிட்டு மிஞ்சி இருக்கும் இன்னும் ஒருவனுக்கு நாள் குறித்து சென்றாள்..

செக் அவுட் நேரம் வந்தும் அறையை காலி செய்யாததால் அறை கதவை தட்ட யாரும் திறக்காததால் சந்தேகத்தின் பேரில் அறைக்கதவை திறந்த விடுதி நிறுவனத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் காவல் துறைக்கு தகவல் கொடுத்தது..அந்த பெண் தான் கொலை நடந்த இடத்தில் இருந்தால் என்பதால் அவளை கைது செய்தனர் காவல் துறையினர்..ஆனால் என்ன செய்வது அவள் தான் பயத்தில் சிந்தை கலங்கி விட்டாளே ஓ என்ற அலறலை தவிர அவளிடமிருந்து எந்த தகவலையும் பெற இயலவில்லை..

விடுதி நிறுவன அதிபர் வேண்டி கேட்டு கொண்டதால் விடுதி பெயர் வெளியே தெரியாமல் ரகசிமாக கேஸை விசாரிக்க தொடங்கினர்..பெரும் கோடிஸ்வரனின் ஒரே மகன் கர்ண கொடூரமாக கொலைசெய்யப்ட்டு கிடந்தான் என்பது மறுநாள் செய்தியில் வெளியானது..

நாளிதழை பாரியிடம் காட்டினாள் முல்லை.."பாரி இங்க பாருங்களேன் என்னதான் தப்பு செஞ்சிருந்தாலும் இப்படியா கொடூரமா கொல்றது நா அடிச்சு சொல்வேன் இப்டி கொடூரமா ஒரு மனுஷனாலே கொல்லவே முடியாது". 

"அப்ரோ பேய் கொன்றுச்ச". 

"யாரு கண்டா இருந்தாலும் இருக்கும்"..அதற்குள் ரியோவிடமிருந்து அழைப்பு வர சந்தோசமாக எடுத்து பேச தொடங்கியவளை கொலை வெறியுடன் பார்த்தது அது.."நா யார தேடுறேனோ அவன நீயே என் கண் முன்ன காட்டிட..இருடா இன்னும் ஒருத்தன் பாக்கி இருக்கான் அவனயும் முடிச்சிட்டு நா இப்டி பேயா அலைய காரணமான உன்ன சும்மா விட மாட்டேன்டா..இவ உன் உயிர் தோழி போல உன்கிட்ட பேசும்போதே எவ்ளோ சந்தோசமா பேசுறா..இவள நா படுத்துற பாட்டுல நீயா என்ன தேடி வருவ."...

இது எதையும் அறியாமல் முல்லை ரியோவுடன் பேசி முடித்து பாரியை பார்க்க அவனோ அவ்வளவு நேரம் சுவரில் சாய்ந்து அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்..மனம் திக்கென்றது..இருந்தாலும் அலட்சிய பார்வையோடு அவனை கடந்து செல்ல அவள் குறுக்கே கை நீட்டி"ன்ன மேடம் பாத்தும் பாக்காம போறீங்க.."..

"ஏன் உங்க மூஞ்சில படமா ஓடுது..நின்னு பாத்துட்டு போவ"..

"இல்லதா.. காலைல இருந்தே உதடு எல்லாம் காய்ஞ்சு போன மாறி இருக்கு"  


"அதுக்கு ஒழுங்கா தண்ணி குடிச்சா தானே"  

"தண்ணி எல்லாம் வேணா பேபி நேத்து மாறி இந்த அழகான உதட்டால ஒரு உம்மா கொடுத்தனா போதும்.."அவன் உதடை தொட்டு காட்ட

"நேத்து ஏதோ பயத்துல அப்டி.. அதுக்குன்னு இதான் சான்ஸ்னு அப்டி செய்வியா வெக்கமா இல்ல உனக்கு.. அதானே உனக்கு என்னிக்குமே என் மனசு தேவையில்ல..உடம்பு தானே தேவ"...நேற்று அவனோடு இழைந்த தன் மீது எழுந்த ஆத்திரம் கொண்டவன் மீது முழுதாய் திரும்ப கோவத்தில் வார்த்தைகளை சிதற விட்டாள் முல்லை... 

அவளின் வார்த்தைகள் அவனின் நிதானத்தை இழக்க வைக்க அவள் கையை முறுக்கி முதுகு பின்னால் வைக்க அவனின் பிடியில் முனங்கியவளை"ஆமாடி அன்னைக்கு அப்டி பண்ணேன் தான்.. அது ஏதோ ஒரு வேகத்துல பண்ணிட்டேன்..அப்பவும் உங்கிட்ட நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டு பேச வந்தேன் அத்தன பேரு முன்னாடியும் வெச்சு நீ என்ன அசிங்கப்படுத்திட்ட..எனக்கு எப்டி இருந்துருக்கும்...அதுக்கு பழிவாங்க தாண்டி உன்ன கட்டிக்கிட்டேன்..பாரி நீ இல்லாம என் வாழ்க்கையே இல்லனு என் கால புடிச்சு நீ கதறுற நாள் வரும் அப்போத்தாண்டி நா பட்ட அவமானம் போகும்"....

"நா செத்தாலும் அப்டி செய்ய மாட்டேன்டா கைய விட்றா பொருக்கி"..

"பொறுக்கியா... பொறுக்கியா இருந்தா தாலி கட்டியும் விட்டு வெச்சிருப்பேனா.. பான பானையா கொட்டிகுறியே அதெல்லாம் எங்க போய் தொலையுது கொஞ்சனாச்சும் மூளைய யூஸ் பண்ணு".. 

"அதெல்லாம் எனக்கு தெரியும் கைய விடு இல்லேனா கத்துவேன்".. அவள் கையை விடாமல் அப்படியே தன் முன் திருப்பி இரு கரங்களையும் முதுகு பின்னால் சேர்த்து பிடித்து ஒற்றை காலால் அவள் கால்களை சிறை செய்து சுவரோடு தள்ளி இதழ்களை மூர்க்கமாய் மென்று திங்க அவனின் செயலால் கண்ணீரை தாரையாக வழிந்தது அவளுக்கு..சிறிது நேரத்தில் அவளை விடுவித்தவன் கோவமாக பார்த்து கொண்டே வெளியேற அங்கேயே சரிந்து அழுதாள் முல்லை.. 

அழும் அவளை காணவே பாவமாக இருந்தது கரும்புகைக்கு..பாரி மேல் கட்டுக்கடங்கா கோவம் வந்தது.. அழுது அழுது தோய்ந்து போன முல்லை அப்படியே உறங்கி போயிருந்தாள்..அதன் பிறகு பாறி வர அவனிடம் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டும் இருந்தாள்..

இரவு சாப்பிட்டு விட்டு இருவருமே எதையும் பேசாமல் படுத்து கொள்ள நடுநிசியாகியது..அப்போது தான் வீட்டின் பொருட்கள் ஒவ்வொன்றாக கீழே விழும் சத்ததில் கண்விழித்தான் பாரி..ஒருவேளை நிலநடுக்கமா என்ற பயத்தில் விழித்தவன் முன் அகோரமான ரூபத்துடன் வந்து நின்றது அது..

பயத்தில் உடல் நடுங்க கண்கள் விரிய உதடு துடிக்க நா வறண்டு மயக்கம் கண்களை சுழற்ற இருந்தாலும் அங்கிருந்து தப்ப வேண்டுமே என்ற எண்ணம் இருந்ததால் பல்லை கடித்து கண்களை அதனிடமிருந்து பிரித்து உறங்கி கொண்டிருந்த முல்லையை எழுப்ப அரைகுறை தூக்கத்துடன் என்ன பாரி என்றவளை அடியே பேய் டி என அவளோ பேயா அப்ரோ வர சொல்லு என்று மீண்டும் படுக்கையில் சரிய அவளை கைகளில் ஏந்தி கொண்டு எடுத்தான் ஒரு ஓட்டம் வாசல் கதவை அடையும் நேரம் மீண்டும் அதே அறையில் நின்றான்..தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமலே மீண்டும் ஓடினான் மீண்டும் அதே அறை மீண்டும் ஓடினான் மீண்டும் அதே அறை இப்போது பூஜை அறையை நோக்கி ஓடினான்..அவனின் பதற்றத்தில் கண்விழித்த முல்லையும் இப்போது நன்றாக அந்த உருவத்தை பார்த்திட பயத்தில் கணவன் கழுத்தை கட்டி கொண்டு அழ தொடங்கினாள்...

யாரோ கால் நீட்டி தட்டி விட குப்புற விழுந்து செம்ம அடி.. இருவருமே எழ முயல முல்லையின் முடியை கொத்தாக பிடித்து அந்த கோர உருவம் இழுத்து கொண்டு போக இப்போது பயத்தில் அலறவே ஆரம்பித்தாள் முல்லை பாரி அவள் பின்னாலே ஓடினான்...மீண்டும் அதே அறையில் அவளை இழுத்து வந்து போட்டது அது... 

பயத்தில் மூச்சு திணறியவளுக்கு தானாக ஏசி திறந்து சில்லென்ற காற்று முகத்தில் பட்டது.. எங்கிருந்தோ மினெரல் பாட்டில் உருண்டு அவள் கிட்ட வர அதனை எடுத்து அவளுக்கு குடிக்க கொடுத்தவன் மூளை வேலை செய்து கொண்டுதான் இருந்தது... 


இது பேயேதான்.. கெட்ட பேயாக இருந்தால் இந்நேரம் நம்மை பாடாய் படுத்திருக்கும்..ஆனால் இது நமக்கு ஏசி போட்டு தண்ணி கொடுக்குது.. அப்போ அது நம்மகிட்ட ஏதோ சொல்ல வருது..ஒருவாறு தைரியத்தை ஒன்று திரட்டி"நீ யாரு உனக்கு என்ன வேணும் எத என்கிட்ட சொல்லணும் உனக்கு."அங்கே அந்த புகை உருவம் மிதந்து அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் நிலைத்தது.. கோர ரூபம்தனை விடுத்து நங்கை ஒருவள் சாந்தமாக தோன்றினாள்..

முல்லை பயத்தில் மயங்கி சரிய அவளை அள்ளி மாருக்குள் அழுத்தியவன் திறந்த வாய் மூடாமல் பார்க்க அந்த பெண் பேச தொடங்கினாள்.. "என்பேரு சிவா..சிவஸ்ரீ..உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. சொல்ல போனா எனக்கு விடுதல கொடுத்ததே உன் பொண்டாட்டி தான்..அதுக்கு அவளுக்கு நா நன்றி சொல்லணும்.. உன் மூலமா எனக்கு ஒரு காரியம் ஆகணும் அது உன்னால மட்டும் தான் முடியும்...

எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா..அவ பேரு சக்தி..எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் ஐஞ்சு வருசத்துக்கு முன்ன ஒரு அச்சிடேன்ட்ல போய்டாங்க..அப்ரோ நானும் என் தங்கச்சியும் மட்டும் தான்.. என்ன விட நாலு வயசு சின்னவ..ரொம்ப அப்பாவி அதனாலேயே அவ குண்டு உடம்பயும் கருப்பு நிறத்தையும் மத்தவங்க கேலி செய்யும் போது அவங்கள அலட்சிய படுத்தாம பயந்து அழுவா.. சென்னைல உன் பொண்டாட்டி யோட ஃப்ரன்ட்டு ரியோ படிச்ச அதே காலேஜ்ல தான் அவளும் படிச்சா.. யாரையும் திரும்பி பாக்காத ரியோ அவ கிட்ட மட்டும் நல்லா பேசுவான்.. அவள யாராவது மட்டம் தட்டினா அவளுக்காக சண்ட போட்ருக்கான்..

தனக்காக ஒருவன் தான் எப்டி இருக்கோமோ அப்டியே அவள தோழியா ஏத்துக்கிட்ட ஒருத்தன் மேல அவளுக்கு காதல் வந்துச்சு..அத அவன் கிட்ட சொன்னா..ஆனா அவன்...மொத தன்னால யாரையும் காதலிக்க முடியாது.. வேற ஒரு பொண்ண காதலிக்குறேனு சொல்லிருக்கான்.. இவ அத நம்பாம அவன் கிட்ட மறுபடியும் பேச அப்போதான் அவளோட தோற்றத்த பத்தி பேசி என் தங்கச்சி மனச குத்தி கிழிச்சிருக்கான்...எவன நல்லவன் பண்பானவன்னு நெனச்சு காதலிச்சாலோ அவனே அவ மனச ஒடச்சிட்டான்.. அத தாங்க முடியாம அவ இங்க வந்துட்டா.. என்கிட்ட சொல்லி கதறி அழுதா.. 

எனக்கு இருக்குற ஒரே சொந்தம் என் ரத்தம் அவ.. அவ அழறத பாக்க முடில.. அவகிட்ட பொய் சொல்லிட்டு சென்னை கிளம்ப பஸ் ஸ்டாண்ட் போய்ட்டு இருந்தேன்.அப்போ ஒரு கார் என்கிட்ட வந்து நின்னு அட்ரஸ் கேக்க அவங்களுக்கு அட்ரஸ் சொல்லும் போதே காருல இழுத்து போட்டு மயக்க மருந்து துணியை மூக்குல வைக்க மயங்கிடேன்.. 

ஆளில்லாத ரோட்ல இத யாருமே பாக்கல.. என் மயக்கம் தெளியறப்போ நாலு பேரு என்ன சுத்தி ஒக்காந்து குடிச்சிட்டு இருதானுங்க.. 

ஏன் என்ன எதுக்குன்னு யோசிக்கும் போதே என்ன அவங்க நாலு பேரும்....ம்ம்ம்ம் எல்லாம் முடிஞ்சது என் கதறல் அவங்களுக்கு கேக்கல.. என்ன சீரழிச்ச அவங்க காலுலயே விழுந்து கதறி அழுதேன் என்ன உயிரோட விட சொல்லி.. ஆனா அந்த மிருகங்க என்ன ஈவு இரக்கமே இல்லாம கொன்னு மலை மேலருந்து வீசிட்டாங்க..என்கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லாம தவிச்சு போன என் தங்கச்சி போலீஸ்க்கு தகவல் தர அவங்க மலைக்கு கீழ அழுகி போய் கிடந்த என் உடம்ப மீட்டு கொடுத்தாங்க..ஏற்கனவே காதலிச்சவன் வார்த்தையில பாதி செத்துருந்த அவ என்ன அப்டி பாத்ததும் மீதியும் செத்துட்டா.. 

போலீஸ் உண்மையான குற்றவாளிங்கள கண்டு புடிச்சாலும் அவங்க பணமும் அதிகாரமும் போலீஸ் வாய அடைச்சிருச்சு காதல் தோல்வியில நா தற்கொலை பண்ணிட்டேன்னு கேஸ முடிச்சாங்க என் தங்கச்சி அழுக அவங்கள உருக்கல.. 

ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்டவ அவ அதுக்கு மேல ஏதும் செய்யல சென்னைக்கும் போகல.. படிச்ச படிப்புக்கு இங்கேயே ஸ்கூல்ல ஒரு வேலைய தேடிகிட்டா..என்ன கொன்னு என் தங்கச்சிய அனாதையாக்குன அவங்க நாலு பேருல ரெண்டு பேர துடிக்க துடிக்க கொன்னுட்டேன்..மீதி ரெண்டு பேரு எனக்கு பயந்து இதுக்கெல்லாம் காரணம் நானு தெரிஞ்சு ஒரு மந்திரவாதி உதவியோட என்ன ஒரு சங்கிலியோட லொக்கெட் குள்ள அடச்சிடாங்க.ஆக்ரோஷமான என் ஆன்மா வெளிய வரணும்னா அதுக்கு கல்யாணம் ஆகியும் கன்னி கழியாத ஒரு பொண்ணு என்ன தொடணும்..அவனுங்கள நா கொல்லனும்னா அதுக்கு ஏத்த பலம் கெடைக்கணும்னா அந்த பொண்ணோட ரத்தத்த நா குடிக்கணும்..ரெண்டு வருஷம் அந்த லொக்கெட் குள்ள அடைபட்டு கிடந்தேன்..ஆன்டிக் சாமானோட அந்த சங்கிலி ஒரு பொம்மை கழுத்துல தெரு கடையில இருக்க அப்போ நீதான் அந்த அந்த பொம்மைய வாங்குன..அத இந்த வீட்டுக்கு எடுத்து வந்து வெச்ச..அதோட ஒருவருசத்துக்கு இந்த வீட்டுக்குள்ள பழிவெறியோட அந்த லொக்கெட் குள்ள கிடந்தேன்..கடைசியா என் கண்ணீருக்கும் என் தங்கச்சி கண்ணீருக்கும் பதில் சொல்ற மாறி உன் பொண்டாட்டி கையாள வெளிய வந்தேன்..நேத்து அவ ரத்தத்த குடிச்சு அந்த அரக்கன கொல்ற அளவு பலம் வந்துச்சு...நேத்தே ஒருத்தனோட கதைய முடிச்சிட்டேன் இன்னும் ஒருத்தன் இருக்கான்"

"சரி என் பொண்டாட்டி ரத்தத்த குடிச்சு தெம்பாயிடல..அந்த இன்னொருத்தன கதைய முடிச்சிட்டு போய் தொலயாம எதுக்கு எங்க உசுர வாங்குற"..


"என் தங்கச்சி இங்க தான் இருக்கா..உன் ஸ்கூல்ல தான் வேல செய்யுறா..தினம் தினம் அவனயும் என்னயும் நெனச்சு செத்துகிட்டு இருக்கா..எனக்கு என் தங்கச்சி காதலிச்ச ரியோ இங்க வரணும்.. என் தங்கச்சிய கல்யாணம் பண்ணனும்".. 

"தோ பாரு சிவா உனக்கு நடந்தது அநியாயம் தான்..யாரும் இல்லாத உன் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கைய நா அமைச்சு கொடுக்குறேன் என்ன நம்பு..அந்த ரியோ மட்டும் வேணா.."... 

"ஹேய் நா என்ன செய்யணும்னு எனக்கு சொல்லாத உன் பொண்டாட்டி உனக்கு வேணும்னா அவன இங்க வர சொல்லு"... 

"சிவா உன் தங்கச்சிய மட்டும் நெனச்சு பேசுறியே என் தங்கச்சி வாழ்க்கைய நெனச்சு பாத்தியா..ரியோ என் தங்கச்சி வெண்பாவ லவ் பண்றான்..அவன் வேற பொண்ண லவ் பண்றான்னு சொன்னது உண்மைதான்... ப்ளீஸ் அவன விட்ரு உன்ன ரிலீஸ் பண்ண பாவத்துக்கு என் பொண்டாட்டிய விட்ரு.எத்தனையோ பிரச்சனைக்கு அப்றம் இப்போதான் கல்யாணமே பண்ணிருக்கோம் ப்ளீஸ்"... 

"ஹாஹாஹா ஏண்டா நீங்க எல்லோரும் நல்லா இருக்கனும் நானும் என் தங்கச்சியும் மட்டும் நாசமா போணுமா..விட மாட்டேன் அந்த ரியோ இங்க வரணும் இல்ல உன் பொண்டாட்டி அனு அணுவா செத்துருவா"... கண்ணாடி தெறித்து உடைய சிவாவின் ஆவி முல்லையின் உடலுக்குள் புகுந்து கொள்ள அவனிடமிருந்து திமிறி விலகியவள் கதவை அறைந்து சாற்றி கொண்டாள்.. கை உடையும் வரை கதவை தட்டியவனுக்கு பதில் இன்னொரு முறை கதவை தட்டினால் முல்லை அதன் விளைவை எதிர்நோக்குவாள் என்று... 

இடிந்து அமர்ந்தவன் அடுத்த நிமிடமே கண்ணனுக்கு அழைத்து விஷயத்தை கூறி ரியோவுடன் உடனே வர சொன்னான்.. கண்ணீர் சொட்டு சொட்டாக விழ எதை வைத்து மிரட்டி முல்லையை திருமணம் செய்தேனோ அதுவே இப்போது ஆட்டம் காண உயிரினும் மேலானவள் உயிரை காக்கும் வழியறிமால் திணறி கொண்டிருந்தான் பாரி..


Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி