இஞ்சி இடையழகி 18
எதுக்காக கிட்ட வந்தாளோ?
எத தேடி விட்டு போனாளோ?
விழுந்தாலும்
நா ஒடஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்
இந்த இருவாரமாக பாரியும் பார்த்து கொண்டே தான் இருக்கிறான்..என்று முல்லையை மணந்து கொண்டானோ அன்றிலிருந்து அவனுக்கு தினம் சவாலாகவே இருக்கிறாள் அவன் காதல் மனைவி..அவனுக்கு இந்த இருவாரமும் நிறைய ஆப்ரேஷன் இருந்ததால் சரியாக வீட்டிற்கு வர இயலவில்லை..ஆனாலும் ஒரு அறை நிமிடமாவது வந்து விடுவான் அவளை பார்க்க..அவள் முகம் கொடுத்து பேசினால் தானே அவள் தான் அவனை கண்டாலே சிட்டாக பறந்து விடுகிறாளே..
முல்லையின் மனது தவறு செய்த குழந்தையை போல அடித்து கொண்டது..ஆம் அவள் தவறு தான் செய்து கொண்டிருக்கிறாள் அதும் மருத்துவனான தன் கணவனின் கண்களில் மறைந்து கொண்டு..அன்று அகிலன் பேசியது அவள் செவிகளில் அலைமோத தனது கொழு கொழு மேனியை கட்டுடல் மேனியாக மாற்ற முயற்சி எடுத்தாள்..அதன் விளைவு காலை மட்டுமே உணவை உட்க்கொண்டு மதியம் ஜூஸ் பழம் உண்டு இரவில் கமலியை ஏமாற்றி ஏதும் உண்ணாமல் தவறான உணவு முறையை கையாண்டாள்.. அதனோடு உடல் குறையும் மாத்திரையும் வாங்கி உட்க்கொள்ள அந்த மாத்திரையும் உணவில்லாத தேகமும் இரண்டே வாரத்தில் வேலையை காட்டியது..
உடல் சோர்ந்து கண்களை சுற்றி கருமை படர்ந்து இரண்டு வாரத்தில் பஞ்சத்தில் அடிபட்ட பெண்ணை போல இருந்தாள்.. அன்று பள்ளி விடுமுறை கமலி"இப்போல்லாம் நீ சரியாவே சாப்பிட மாட்ற..இன்னைக்கு உனக்கு புடிச்ச சமையல் தான் ஒழுங்கா சாப்டுறே.. உன் புருசனும் வேல வேல ஆஸ்பத்திரிக்கு ஓடுறான்..எதையும் கண்டுகிறானா பாரு வரட்டும் பேசிக்குறேன் அவன"... தட்டில் முல்லைக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்த கமலி
"கண்ணு நீ சாப்டுடா.. நம்ம பார்வதி இல்ல அவ பொண்ணுக்கு சடங்கு சுத்துறாங்க அத்த போய்ட்டு அப்டியே மீனாட்சிக்கு பேர புள்ள பொறந்துருக்கு அதையும் பார்த்துட்டு வரேன் சரியாடா"..
"சரித்த பாத்து போங்க".. கமலி கிளம்பும் வரை ஒரு இட்லியை தட்டில் வைத்து சாப்பிடுவது போல பாசாங்கு செய்த்தவள் அவர் மறைந்ததும் எழுந்து சென்று கை கழுவினாள்.. பாரி காலையிலேயே மருத்துவமனை சென்றிருந்ததான்..சரி வீட்டை சுத்தம் செய்யலாமென செய்ய ஆரம்பித்தவள் கண்கள் இருள கால் மடிய அப்படியே மயங்கி விழுந்தாள்..
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குள் நுழைந்த பாரி முதலில் கண்டது மயங்கிய நிலையில் கிடந்த மனையாளை தான்..அவளை தூக்கி கன்னம் தட்டி பார்த்தான் அவள் விழிக்கவில்லை..நாடியில் கைவைத்து பார்த்தான்..அவளை பார்க்கவே பல நாள் பட்டினி போல இருக்க ஓடி சென்று ஆராஞ்சு சாரு எடுத்து வந்து புகட்டினான்..
பசியின் வேகத்தில் அனைத்தையும் குடித்து முடித்தவள் மெல்ல கண்திறந்தாள்..பேயறைந்த முகத்துடன் தன்னை கலவரத்துடன் நோக்கும் கணவன் முகம் தெரிய"நீங்க எப்ப வந்திங்க"..
"இப்ப தான்.. ஏன் சாப்பிடாம இருக்க...எத்தன நாளு இந்த மாறி பட்டினி இருக்க"..அதட்டலுடன் அவன் குரலை கேட்க்கையில் நெஞ்சம் நடுங்க
"இல்ல நா தினமும் சாப்டு தான் இருக்கேன்"...கூறியபடியே மெல்ல எழுந்தாள்..அவளை பிடித்து இழுத்து நிற்கவைத்தவன்
"என்னடி என்கிட்டயே நடிக்குறியா..உன்ன பாத்தாலே தெரியுது நீ ஒழுங்கா சாப்பிடுறது இல்லனு..ஏன்டி...ஏண்டி இப்டி பண்ற"...
"ப்ச் அத விடு..நீ போ குளிச்சிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்குறேன்"...
"ஹேய் நா என்ன கேட்டுட்டு இருக்கேன்..நீ என்ன சொல்லிட்டு இருக்க.."
"என் கைய விடு பாரி நா போயி சாப்பாடு எடுத்து வைக்குறேன்"...
"அம்மா எங்க'
'விசேஷத்துக்கு போயிருக்காங்க".. அதற்கு மேல் அவளிடம் ஏதும் கேளாமல் அவர்கள் அறைக்குள் சென்றவன் ஒரு பத்து நிமிடங்களில் முல்லையை அழைத்தான்.. அவன் கரங்கள் அந்த வெள்ளை பாட்டிலை அவள் முன் ஏந்தி பார்வையாலே என்னவென்று கேட்க அவளோ வாய் மூடி அமைதி காத்தாள்..
"என்னடி இது..இதெல்லாம் சாப்டு மேடம் ஒல்லியாவ போறிங்களா.."...
"உன்ன யாரு என் பர்சனல் திங்க்ஸ் எல்லாம் எடுக்க சொன்னது.. அத கொடுத்துரு பாரி"..
"இது உடம்புக்கு எவ்ளோ கெடுதினு தெரியுமாடி..ஒல்லியாவுறதுன்ன ப்ரோபர் டயட் எடு எக்ஸர்சைஸ் பண்ணு அதவிட்டுட்டு இதோட சைட் எபெக்ட் இப்ப தெரியாது படுறப்போ தெரியும்... "
"ஏன் இதெல்லாம் குடிச்சு நா ஒல்லியான உனக்கு தானே பெருமை".
"எனக்கு பெருமையா"..
"ஆமா உன் பொண்டாட்டி அழகா இருந்தா உனக்கு தானே பெருமையா இருக்கும் இப்போ என்கூட வெளிய வந்தா எல்லோரும் உன்னயும் என்னயும் ஒரு மாறி பாக்குறாங்க அந்த பார்வையோட அர்த்தம் என்ன.. இவன் இவ்ளோ ஹண்டசமா சீக்ஸ் பேக் உடம்போட இருக்கான் ஆனா இவன் பொண்டாட்டிய பாரு குண்டு கத்திரிக்கா மாறினு அந்த பார்வ சொல்லாம சொல்லுது"..
"அடுத்தவன் பார்வைக்கு அர்த்தத்தை தேடுனா நம்ம பார்வ வழி தவறி போயிரும் முல்லை..நீ என்ன நம்ப வேணா என் காதல கூடவா நம்ப மாட்ற.."...
"அந்த காதல நா நம்புறேன் அதுக்காக தான் என்ன நானே மாத்திக்க ட்ரை பண்றேன்"..
"வேணாம்மா நீ இப்டியே இரு.. நா காதலிக்குறது தான் எப்டி இருக்கோமோ அதுல எந்த குறையும் படாம சந்தோசமா அத அப்டியே ஏத்துக்குற முல்லைய தான்..."...
"என்னால முடியாது பாரி அடுத்தவங்க என்ன கேலியா பாக்குறத என்னால ஏத்துக்க முடில.. நா இந்த டயட்லாம் செய்ஞ்சி ஒல்லியாவேன்"...
"சே உன்னால எனக்கு நிம்மதியே இல்லடி எதையாச்சும் சொன்னா புரிஞ்சிக்கணும் அத விட்டுட்டு எப்ப பாரு ஏழரைய கூட்டிட்டு"...
"ஓ என்னால தான் நிம்மதி இல்லாம போச்சுல..நா உனக்கு போர் அடிச்சிட்டேன் போல அதான் இப்டி பேசுற.. இப்டி சலிச்சிக்கிட்டு யாரும் என்கூட வாழ வேணா பேசாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்"...அவளின் கடைசி வார்த்தையில் சினம் ஏற நிமிர்ந்து பார்த்தவன் சிணுங்கும் குழந்தையிடம் எவ்வாறு கோவம் கொள்வான்.
இருந்தும் அவளின் வார்த்தையின் வீரியம் அவனுக்கு உரைக்காமல் அல்ல..இதற்கு மேல் இதனை விட்டால் விபரீதமாகி விடும்..அவளை நெருங்கி மென்மையாக பேச முயன்றவனின் மேல் பொருட்களை வீசி அழுது கத்தி ஆர்பாட்டம் செய்தவள் தன்னுடைய இயலாமை காரணமில்லா ஆத்திரம் இதனால் மேலும் மேலும் வார்த்தைகள் கொண்டு பாரியை வதைத்து கொண்டிருந்தாள்..
அவன் அப்போதும் பொறுமையாக தன் காதலை வலியுறுத்த தான் அவனுக்கு சரியான இணையில்லையென தாழ்வுணர்ச்சியில் வெறி கொண்டவளை போல தாலியில் கைவைக்க அதுவரையில் பொறுமையாக பேசிக்கொண்டிருந்தவன் பொங்கி விட்டான்.
"ஏண்டி நா கிளி பிள்ளைக்கு சொல்ற மாறி சொல்லிட்டு இருக்கேன் உனக்கு அப்பவும் மர மண்டைக்கு ஏறல தானே..இனிமேயும் ஏற வேணா..டிவோர்ஸ்ஸா கேக்குற டிவோர்ஸ்சு இனிமே ஜென்மத்துக்கும் நீ என்ன விட்டு போனும்னு நினைக்கவே கூடாதுடி"...அருகே நெருங்கியவனை அடித்தவளின் அடிகளை தவிர்த்து இடை இறுக்கி திமிற திமிற தூக்கி வந்து படுக்கையில் தள்ளினான்..
எழுந்து ஓட முயன்றவளை ஓட விடாமல் அவள் மேல் பாய்ந்து அவளின் அழுகை கதறல் கெஞ்சல் அனைத்தையும் பொருட்படுத்தாமல் அவளை முழுமையாக தன்னவளாக மாற்றி கொண்டான் பாரி வேந்தன்..அவளின் அழுகை கூட அடங்கி விட்டது அவனின் அணைப்பில் ஆனால் அவனின் அழுகை அடங்க மறுத்தது..
அட காதல் என்பது மாய வலை
சிக்காமல் போனவன் யாரும் இல்லை
சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை
தேவையில்லை, தேவையில்லை..
மனைவியை காதல் மொழி கொண்டு கலவியில் கலந்திட ஏங்கியவனுக்கு கிடைத்தது கண்ணீருடன் கிடைத்த சிற்றின்பமே..இதற்கு காரணம் அவனின் மெய் காதலை துளியும் ஏற்காது தன் தாழ்வுணர்ச்சியில் உழன்று கொண்டிருக்கும் அவனவள் தான்...அழுது ஓய்ந்து போய் படுத்திருந்தவளை அள்ளி வாரி எடுத்தவன் குளியலறைக்கு தூக்கி சென்று ஷவரின் அடியில் நிற்க வைத்தான்..
தண்ணீர் சுளீரென்று மேனியில் பட சற்று முன் நிகழ்ந்த அனைத்தும் நினைவு வர கண்ணீருடன் அவனை விலக முயன்றாள் முல்லை..அவளின் முயற்சி நல் முயற்சியாகவில்லை..தானும் குளித்து அவளை குளிப்பாட்டி உடை அணிவித்து இதுவரை அனைத்திற்குமே ஒரு போராடத்துடனே பாரி செய்தான்..
உணவை தட்டில் வைத்து அவள் வாய் முன் கை நீட்ட "இந்த சாப்பாடு எதுக்கு..எனக்கா இல்ல உனக்கு வேண்டிய உடம்புக்கு எந்த கேடும் வராம இருக்கவா"...
"முல்லை இதெல்லாம் நீயே தேடிகிட்ட ஒன்னு..உனக்கு என்ன பத்தி தெரிஞ்சும் ஒரே தப்ப திரும்ப திரும்ப செய்ஞ்ச..".
"ஓ இது தப்புக்கு தண்டனையா"..
"இல்ல உனக்கு என் காதல வெளிப்படுத்திருக்கேன்"..
உதடு சுழிக்க"எது இதான் உன்னோட காதலா"...அவள் சற்று முன் நிகழ்ந்ததை வைத்து கேட்க
பாரியோ கொஞ்சமும் அசராமல்"ஆமா நீ ஒத்துக்கிட்டாலும் இல்லனாலும் இதான் என்னோட காதல் இனிமே என்ன பிரிஞ்சு போகணும்னு உன் கனவுல கூட நினைக்காத முல்லை..அது உன்னால முடியாது நா விடவும் மாட்டேன்.."
"அதையும் பாக்கலாம் இனிமே உன்கூட சேந்து நா வாழ மாட்டேன்..உனக்கும் எனக்கு எந்த சம்மதமும் இல்ல..இதோட எல்லாமே முடிஞ்சு போச்சு...எப்பவுமே உனக்கு தேவ நா இல்ல பாரி என் உடம்பு தான்னு சொல்லாம சொல்லிட்ட.."
"நீ என்னவேனாலும் சொல்லிக்கோ டி.உன்ன மாறி பஜாரிக்கு எல்லாம் சொன்னா புரியாது..இப்ப ஒழுங்கா சாப்டு வாய தொற"...அவள் பிடிவாதத்துடன் இருக்க
"மாமா இன்னும் மூடோட தான் இருக்கேன்..டைனிங் டேபிள்ல வெச்சு இன்னொரு ரவுண்டு எனக்கு ஓகே தான்..."அவன் குறும்பாக சொன்னாலும் அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு தீவிரம் அவளை பணிய வைத்தது..உணவை அளந்தவளின் கரத்தை எடுத்து விட்டு அவனே ஊட்ட முனைந்தான்..வாயை திறக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தவளை கன்னத்தை அழுத்தி பிடித்து வாய்க்குள் திணித்து மறு கரத்தை வைத்து அவள் வாயை மூடினான்..
அவள் திணறி முலுங்கவும் இப்படியே உணவூட்டி முடித்தான்..வெளியே சென்ற கமலி வீட்டிற்கு வருவதற்குள் முல்லை அறைக்குள் முடங்கி கொண்டாள்..பயணக்களைப்பில் கமலியும் வந்தவுடன் உண்டு விட்டு தூங்கி விட கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் தன்னவளை நெருங்கினான்..
"முல்லை முல்லை எழுந்திரு"..அவள் அசையாமல் படுதிருக்க
"எழுந்திருச்சி இந்த வைட்டமின் மாத்திரை சாப்டு படுடி"...காதிருந்தும் செவிடுயாகி போனாள் முல்லை..
"இவ கிட்ட இதெல்லாம் வேலைக்காகாது"அந்த மாத்திரையை தான் வாயில் போட்டு அவளை பிடித்திழுத்து முகத்தை அசையாமல் பிடித்து இதழ்களை சிறை செய்து இதழ் வழியே மருந்து கொடுத்து விழுங்க வைத்து விடுதலை செய்தான்..அவள் கோவத்தின் உச்சத்தில் இடியென கொடுத்த அடிகளை வாங்கியவன் அவளை பார்த்து கொண்டே உறங்கி போனான்..
Comments
Post a Comment