இஞ்சி இடையழகி 19
ஆற்றுவாரோ தேற்றுவாரோ இல்லாமல் அழுது கொண்டிருந்த முல்லைக்கு இந்த பாரி வேந்தன் வேறு மாதிரி தெரிந்தான்..மன்னிப்பு கேட்டே ஆகவேண்டுமென சிறு வயதில் பிடிவாதத்துடன் நின்ற அதே ஆணவம் இப்போது மீண்டும் அவனிடம்.இதுவரை காதலை மட்டுமே காட்டிய பாரி இனி பிடிவாதமான காதலை வலுகட்டாயமாக அவள் மேல் திணிக்க உள்ளான்..இதனை உடைத்தெறிய அவள் ஒரு திட்டதுடன் கண்ணயர பாவம் முல்லை அந்த திட்டதை பாரி நிறைவேற்றும் முன்பே கிள்ளியெறிவான் என்று அறியவில்லை.
"சக்தி சக்தி"...
"என்ன ரியோ"..
"பைக் கீ பாத்தியா"..
"இல்லயே எங்க வெச்ச"
"அது தெரிஞ்சா உங்கிட்ட எதுக்கு கேக்க போறேன்"...
"சரி தேடலாம் கெடச்சிரும்,...
காலையில் ரியோவும் சக்தியை பைக் கீயை தேட அது கிடைக்காமல் போக முக்கியமான இடத்திற்கு செல்லவேண்டியதால் தான் செய்த தவறுக்கு சக்தி மேல் எரிந்து விழுந்தான் ரியோ..
"இந்த வீட்ல வெச்சது வெச்ச இடத்துல இருக்கா..எங்கே தா போய் தொலையுமோ"..
"ரியோ நீங்க எங்கேயோ வெச்சிட்டு இங்க தேடுனா எப்டி கெடைக்கும்"..
"வெச்ச எனக்கு தெரியாதா எங்க வெச்சேனு உன் வேல எதுவோ அத மட்டும் பாரு"..எவ்வளவு தேடியும் கிடைக்காமல் போக கோபத்துடன் கிளம்பியவனை
"ரியோ சாப்டு போங்க வெறும் வயத்துல போகாதீங்க"
"சாப்பாடு ஒன்னு தான் கேடு இப்ப.. நீயே கொட்டிக்கொ நவுறு"..வழியில் நின்றவளை இழுத்து தள்ளிவிட்டு விறு விறுவென அவன் சென்று விட்டான்..இதுவரை ரியோ அன்பை கொட்டிவிடவில்லை தான்.. இருந்தாலும் இம்மாதிரி வெறுப்பாக நடந்ததும் இல்லை..இயல்பான தம்பதிகள் என்றால் மாலை அவன் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும் என்ற எண்ணம் தோன்றும் ஆனால் இவர்கள் கதை வேறாயிர்றே..
காலையில் கிளம்பியவன் சிலநேரம் நள்ளிரவில் கூட வருவான்..அவன் எப்போது சாப்பிடுவான் எப்போது உறங்குவான் என்ற ஏதும் அறியாள் சக்தி..ரியோவின் நல்ல பழக்கத்தில் ஒன்று எத்தனை மணிக்கு வந்தாலும் சக்தியின் அறையை தட்டி அவள் உண்டாளா என கேட்டு அதன் பின் அவனும் உண்டு அந்த பாத்திரங்களை சுத்தம் செய்து விட்டு தான் தூங்குவான்..சக்தி முதலில் தானே சுத்தம் செய்வதாக கூறியும் அவன் கேட்கவில்லை..
கணவன் மனைவியாக ஊருக்கு வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை..இத்தனை நாட்களில் சக்தி ஒன்றை அறிந்து கொண்டாள்.. அவள் ரியோ மேல் கொண்ட காதல் இன்னும் அப்படியே உள்ளது என்ன இன்னும் உறுதியாக..அவன் என்றேனும் ஒரு நாள் வெண்பாவை மறக்க கூடுமா அவளை மறக்க இயலாது தான் ஆனால் அவள் நினைவுகளை பின் தள்ளி இவள் நினைவுகளை ஆராதித்து அவன் காதலை பொழிய கூடுமோ காலமே பதில் சொல்லும்..
இரவு முழுவதும் யோசித்து விடிய காலையில் கண்ணயர்ந்தாள் முல்லை கொடி..விடிந்து எழுந்தவன் முதலில் கண்டது கன்னத்தின் கீழே கை கொடுத்து சிறுகுழந்தையென துயில் கொள்ளும் மனையாளை தான்..மூடியிருந்த போதும் கண்ணிமை சிவந்து வீங்கிருப்பது அவன் கண்களில் தப்பவில்லை..போர்வையை இழுத்து அவளுக்கு போர்த்தியவன் குளிக்க சென்றான்..வெகு நேரம் கழித்து எழுந்த முல்லை மணியை பார்க்க அவசர அவசரமாக குளித்து கிளம்பினாள்..இவனால எவ்ளோ லேட் ஆச்சு எல்லாம் தலையெழுத்து..
அவசரமாக கீழே சென்றவள் பிக்காச்சு கூண்டின் அருகில் சென்று"பிக்காச்சு குட் மார்னிங்..பிரேக் பிரஸ்ட் சாப்பிட்டியா"..அதும் பதிலுக்கு குட் மார்னிங் என கத்த அதற்கு சில ஆப்பிள் துண்டுகளை கொடுத்தவள் இரண்டே இட்லிகளை வாயில் அடைத்து எழ போனாள்..
எழுந்த அவளின் தோள்களில் கரம் வைத்து அழுத்தி மீண்டும் அமரவைத்தான் பாரி..ஐயோ இவன் இங்கதான் சுத்திட்டு இருக்கானா ஹாஸ்பிடல் போய்டானு நெனச்சேன்..அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து" எனக்கு இன்னும் டைம் இருக்கு..என்ன ரெண்டு இட்லியோட எழுந்துட்ட ஒழுங்கா இன்னும் மூணு சாப்பிடு"...
"இல்ல போதும்"...
"அதெல்லாம் இல்ல சாப்பிடு"..
"வேணான்னு சொல்றேன்ல"..
"வேணா ம்ம்ம்..இப்ப நீ சாப்டுல நேத்து மருந்து கொடுத்த மாறி இதையும் ஊட்டி விட்ருவேன்"..நேத்து மருந்து கொடுத்த மாதிரி என்றால் விழிவிரித்து பாரியை பார்த்தாள்..அவன் பார்வையே சொன்னது இவன் செய்வான் என்று..எதிர்த்து வாதாட வாயை திறக்கையில் கமலி சட்டினியோடு வந்து விட்டார்..அதான் சாக்கென்று அவள் தட்டில் நான்கு இட்லிகளை பாரி வைத்து விட முறைப்புடனே சாப்பிட்டு முடித்து எழுந்தாள் முல்லை..
கமலியிடம் சொல்லி விட்டு தன் ஸ்கூட்டியை பார்க்க அதுவோ காற்றிழந்த சக்கரத்துடன் காட்சியளித்தது..மணி வேறு ஆக கேப் கூப்பிட அதுவும் வேலையை காட்ட அந்த நேரம்"ஹெலோ மேடம் இப்டியே நின்னா எந்த ஜென்மத்துல ஸ்கூல்லுக்கு போயி சேருவிங்க வாங்க நா ட்ரோப் பண்றேன்"...
"உன்கிட்ட கேட்டனா உன் வேளையை
பாத்துட்டு மூட்டிடு கெளம்பு".
"பொண்டாட்டிய ட்ரோப் பண்றதும் என் வேலையில இருக்கு..தோ பாரு உனக்கும் டைம் ஆகுது ஏன் பிடிவாதம் புடிக்குற..வேணும்னா இறங்கும் போது காசு கொடுத்துரு"... இந்த யோசனை சரியாகபட்டது முல்லைக்கு..
வேறுவழி இல்லாமல் முறைப்புடனே அவனுடன் ஏறிக்கொண்டாள்..கார் அதன் பாட்டுக்கு செல்ல மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை..அவனே பேச்சை ஆரம்பித்தான்.."அப்ரோ இஞ்சி இடுப்பழகி என்ன முடிவு பண்ணிருக்கீங்க"...
"எதுக்கு"..
"என்ன விட்டு போவேன்னு அடம்புடிச்சிங்களே அதுக்கு"..
"முடிவு தானே சாயங்காலம் சொல்றேன்"..
"ஓ முடிவு பண்ணிட்டு தான் கம்முனு வரிங்களா..நானும் சாயங்காலம் ஒரு புது முடிவ சொல்லணும்.. சோ சீக்கிரம் வந்துருங்க"... அவள் பதில் சொல்லாமல் அவனை முறைத்து கொண்டிருக்க அதற்குள் பள்ளி வந்து விட்டது..அவனிடம் காசு கொடுக்க மனமற்று சீட்டில் வைத்து விட்டு சென்றாள்..முடிவு எடுக்க வேண்டியவள் அவள் இவன் எதற்கு தேவையில்லாமல் பேசுகிறான் என்ன குளறுபடி செய்ய போகிறானோ ஆண்டவா என்ற யோசனையில் வேளையில் இறங்கினாள் முல்லை..
ஹாஸ்பிடல் சென்றவன் கண்ணாவிற்கு தொடர்பு கொண்டான்.. "மச்சி எங்கடா இருக்க"
"பாத்ரூம்ல கேக்குற கேள்விய பாரு வேற எங்கடா இருப்பேன் ஸ்டேஷன்ல தான்..என்ன காலையில போன் பண்ணிருக்க "..
"உங்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரீயா இருந்தா ஹாஸ்பிடல் வந்துட்டு போ"..
"நீ எப்போ தாண்டா பேசாம இருக்க.. அந்த சைடு கொஞ்சம் வேல இருக்கு.. இன்னும் அற மணி நேரத்துல அங்க இருப்பேன் வையு...".. கண்ணா கூறியது போலவே அறை மணி நேரத்தில் பாரி முன் இருந்தான்..
"ஏன்டா வர சொல்லிட்டு வாயில இடி விழுந்த மாறி பேசாம இருக்க"..
"ம்ம்ம் என் பொண்டாட்டி குந்தாணிக்கு டிவோர்ஸ் வேணுமாம்"..
"என்னடா சொல்ற.. என்னமோ பஞ்சு முட்டாய் வேணுமாம் மாறி கூலா சொல்ற"..
"கொஞ்ச நாளாவே இந்த எழவ தான் கேட்டுட்டு இருந்தா..அப்ரோ லாஸ்ட் டூ வீக்ஸ்ஸா செம்ம பிஸி..அவள சரியா கவனிக்க முடில..இந்த கேப்ல என்ன நடந்துச்சோ தெரில மேடம் ஸ்லிம் ஆக ட்ரை பண்ணிருக்காங்க அதும் எப்டி ப்ரோபர் டயட் இல்லாம கண்ட கரும பில்ஸ் எடுத்து.. நேத்து வீட்டுக்கு போறேன் மயங்கி கெடக்கா என்ன ஏதேனு பதறி போயி பாத்தா அவ சரியா சாப்டு ரெண்டு வாரம் ஆச்சு."
"ஐயோ அப்ரோ"..
"அப்ரோ என்ன எதுக்குடி இப்டி பன்னேனு கேட்ட எனக்காகன்னு சொல்றா..அவ குண்டா இருந்தா எனக்கு அவமானமாம் எல்லோரும் ஒரு மாறி பேசுவங்களாம் அதான் ஒல்லியாகி பேசுறவங்க வாய அடைக்க போறாளாம்"...
"அதுக்கு நீ என்ன பண்ண"..
"நா என்னடா பண்றது.. "
"நீ பேசுறதுலயே தெரியுது என்னமோ பண்ணிருக்க.. அவ அப்டி சொன்னதுக்கு என்ன பண்ண சொல்லு"..
'என்ன பண்ணேன் எவ்ளோ எடுத்து சொல்லி பாத்தேன் பேய் புடிச்ச மாறி கத்த ஸ்டார்ட் பண்ணிட்டா..எனக்கு அவ தகுதி இல்லாதவனு ஓவரா பேசி தாலியில கைவைக்க எனக்கும் மண்டைக்கு ஏறி"...
"ஏறி"..
"முடிச்சிட்டேன் மச்சி"..
"அடப்பாவி.. இது என்னடா புது விதமான பனிஷ்மென்ட்டா இருக்கு.."..
"நீ வேற அவ எங்க என்ன விட்டு போயிருவானு வேற வழி தெரியாம அது நடந்துருச்சு.. பாவம் டா அவ எவ்ளோ துடிச்சு போய்ட்ட தெரியுமா நைட்டு பூரா அழுந்துட்டே இருந்தா..என்ன கல்யாணம் பண்ணி அழுறதே அவ பொழப்பா போச்சு"...
"நீ தெரியாம செய்றவனா எல்லாம் பிளான் பண்ணி செய்ஞ்சி புட்டு எப்டிடா இப்டி நடிக்குற"...
"செருப்பால அடிப்பேன் பரதேசி.."..
"நன்றி.. இப்ப என்னடா செய்ய போற.. ஏன்டா இருக்குற பிரச்சனைய பெருசாகிட்டே போற...உன்ன வெச்சிட்டு "
"எனக்கு தான் ஆச பாரு..அவகூட சண்ட போட..அவ ஏதோ ஒரு பிளான்ல இருக்கா..ஆனா அதுக்கு முன்ன நா ஒரு பிளான் பண்ணிருக்கேன்"
"என்ன"...
"இன்னைக்கே என் சித்தி கிட்ட உனக்கும் வெண்பாகும் கல்யாணம் பத்தி பேச போறேன் அதுக்கு தான் அவங்கள ஈவினிங் வீட்டுக்கு வர சொல்லிருக்கேன் நீ என்ன பண்ற ஒழுங்கா சாயங்காலம் வீடு வந்து சேரு"..
"டேய் இப்ப இது அவசியமாடா..முல்லை இன்னும் பேயட்டம் ஆடுவா"..
"அதெல்லாம் நா அடக்கிருவேன்..நீ மூடிட்டு வந்து சேரு..நா சொன்னா சித்தி கேப்பாங்க..வெண்பாவும் கேட்ப்பா..பாவம் டா ரியோ வெண்பாக்கு நல்ல வாழ்க்கை அமையாமா அவன் வாழ்க்கய வாழ மாட்டான்"..
"என்னமோடா அந்த சிவா பேய் வந்து எல்லோரு வாழ்க்கைலயும் ஆப்பு வெச்சிருச்சு..உன் பொண்டாட்டி வேற கேள்வி மேல கேள்வி கேட்டு கொல்லுவாளே உன் கூடலாம் பிரண்ட்ஷிப் வெச்சதுக்கு பப்பாளி மரத்துல தூக்கு போட்டு சாவலாம்டா"...
புலம்பிக்கொண்டே கண்ணா கிளம்பிட பாரியும் வேலையை தொடங்கினான்..மாலை பள்ளி முடிந்ததும் கேப்பில் வீடு வந்து சேர்ந்தாள் முல்லை..வீட்டிற்கு வரும்போதே வெண்பாவும் அவள் அம்மா மேகலையும் இருந்தனர்..வெண்பாவை காணும் போதே ரியோவின் நினைவு நெஞ்சை அறுத்தது முல்லைக்கு..
நண்பனை நினைக்கையில் கண்ணீர் எட்டி பார்க்க அதனை உள்ளிழுத்தவள்"வாங்க அத்த..வா வெண்பா..வந்து ரொம்ப நேரமாச்சா"..
"இல்லம்மா முல்லை..இப்பதான் வந்தோம்..என்னமா தெரியாத மாறி கேக்குற உன் புருஷன் தானே ஃபோனு மேல போன் போட்டு எங்கள வர சொல்லிருந்தான் இப்ப எங்க அவன ஆள காணல"...
"ஓ பாரி வர சொன்னாரா..நேத்து பிஸியா இருந்தாரு அதான் சொல்லல போல..நீங்க காஃபி சாப்பிடுங்க அத்த..நா இப்ப வந்துறேன்"...அறைக்குள் சென்றவள் ஏன் இவங்கள வர சொல்லிருக்கான் என்கிட்ட வேற சாயங்காலம் ஏதோ முடிவு சொல்றேன்னு சொன்னான்..ஐயையோ என்ன பண்ண போறானோ..
பாரியுடன் கண்ணாவும் வந்து விட சிறிது நேரம் கலகலப்பாக சென்றது..பிறகு மேகலை"டேய் பாரி எதுக்குடா எங்கள வர சொன்ன..அத சொல்லாம கத பேசிட்டு இருக்க"..
"இல்ல சித்தி நீ செஞ்ச வட செம்மயா இருக்கா அதான் வாய தொறக்க முடில..ஹான் எதுக்கு வர சொன்னேன்..ஈஈஈ டென்ஷன் ஆகாத சித்தி சொல்றேன் நம்ம வெண்பாக்கு கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா இல்லயா உனக்கு"..
"அவ கல்யாணதுக்கு இப்ப என்னடா அவசரம்"..
"அவசரம் தான் நல்ல மாப்ள போனா வருமா"..
"என்னமோ பாக்கெட்ல நல்ல மாப்ள வெச்சிருக்குற மாறி பேசுற"..
"பாக்கெட்ல இல்ல பக்கத்துல..தோ இந்த கண்ணா தான் அந்த மாப்ள..உனக்கே தெரியும் சித்தி கண்ணா சின்ன வயசுல இருந்தே என் ஃப்ரன்ட்டு..என்ன விட நல்லவன் அவன் வீட்டுக்கு ஒரே புள்ள..அவன் அம்மா அப்பாவும் நம்ம வெண்பாவ நல்லா பாத்துப்பாங்க..அவனும் பாத்துப்பான் நீ என்ன சொல்ற"...
"நா என்னடா சொல்ல போறேன் அவ உன் தங்கச்சி உனக்கு இல்லாத உரிமையா..கண்ணா என்ன அந்நியமா இத்துணுண்டு வயசுல இருந்தே பாக்குறது தானே"..
கமலி"எத்தன நாளடா இந்த பிளான் போட்டிங்க"..
"அது கொஞ்ச நாளாவே இந்த யோசனை தான்..நீ என்னமா சொல்ற"..
"என்ன ஏன்டா கேக்குற உன் தங்கச்சிய கேளு"..பாரி வெண்பாவை தனியே அழைத்து அவளிடம் கேட்க அவள் செய்கையில் கூறினாள்..எனக்கு எல்லாமே நீங்கதானே நீங்க பாத்தா ஓகே..
அந்த குடும்பமே சந்தோஷத்தில் இருக்க முல்லையால் இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை..என்ன இது அராஜகம் அங்கே என் நண்பன் மனமுடைந்து வேதனையில் உள்ளான் இங்கே அவன் உருகி உருகி காதலித்த பெண்ணிற்கு திருமணம்..என்னை சுற்றி என்னதான் நடக்கிறது..இந்த நேரத்தில் நம் முடிவை சொன்னால் ஏற்று கொள்வார்களா..முதலில் கண்ணா அண்ணா எப்படி இதற்கு சம்மதித்தார்..ரியோவின் காதல் அவர் அறியாததா"...கண்ணாவிற்கு அழைப்பு வர அவன் வெளியே செல்ல அவன் பின்னோடே சென்றாள் முல்லை..
பேசி விட்டு திரும்பியவன்"என்ன முல்லை இங்க நிக்குற"...எல்லாம் தெரிந்தும் தெரியாததை போல வினவினான்..அவன் கண்களோ"மச்சான் பாவி எங்கடா போயி தொலஞ்சே..உன் பொண்டாட்டி கேள்வியா கேட்டு கொல்ல போறாளே"..
"கண்ணா அண்ணா நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா...ரியோ வெண்பாவ லவ் பண்ணனும் உங்களுக்கு தெரியாதா..தெரிஞ்சும் எப்டி நீங்க வெண்பாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலாம்"...
"ஏன் சம்மதிக்க கூடாது..உன் அருமை ரியோ தான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டானே..அப்ரோ என் தங்கச்சிக்கு ஒரு வாழ்க்க வேணாமா"..முல்லை பின்னோடே வந்து பாரி கேட்டான்
"வேணும் தான்..அதுக்குன்னு ஒரு நியாயம் வேணா..வெண்பா கண்ணா அண்ணாவுக்கு தங்கச்சி மாறி"...
"ஹேய் மாறி தான் தங்கச்சி கெடையாது.."
"உங்களுக்கு தான் அறிவே இல்ல கண்ணா அண்ணா உங்களுக்கு அறிவு எங்க போச்சு..".
"ம்ம்ம் ஊரு மேய போச்சு என் தங்கச்சிய யாருக்கு கட்டி வைக்கணும்னு எனக்கு தெரியும்...உன் வேல எதுவோ அத பாரு".
"என் வேலைய பாக்க எனக்கு தெரியும் நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..என்ன சுத்தி ஏதோ நடக்குது..உங்க முழியே சரியில்ல..எல்லோரும் என்கிட்ட எதையோ மறைக்குறிங்க அத மொத கண்டுபுடிக்குறேன்..அப்ரோ இருக்கு எல்லோருக்கும்..அந்த ரியோவுக்கும் சேத்து தான்..அந்த நாய் ஒழுங்கா வெண்பாவ கட்டிருந்தா இப்டி கண்ட நாய் கிட்ட பேச்சு வாங்கிருப்பேனா எல்லாம் தலையெழுத்து சீ..தோ பாரு பாரி நா இனிமே இங்க இருக்க மாட்டேன் நா என் வீட்டுக்கு போறேன் அதும் இப்பவே இதுதான் காலையில சொன்ன என் முடிவு"...
உள்ளே சென்ற முல்லை கமலியிடன் அண்ணன் வீட்டில் இரண்டு நாள் இருந்து விட்டு வருவதாக கூறி அவரின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பி சென்றாள்..மகனுக்கும் மருமகளுக்கும் இடையே ஏதோ கோளாறு என்பது மட்டும் புரிந்தது கமலிக்கு..
"டேய் மச்சான் உன் பொண்டாட்டி போறாடா.."..
"என் கண்ணு என்ன நொல்லையா அவ போறது தெரியாமையா நிக்குறேன்"..
"டேய் போயி தடுத்து நிறுத்துடா அவ ஒரு முடிவோட தான் போற மாறி இருக்கு"...
"என்ன பேச்சு பேசுனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நா நாயா அவளுக்கு..போட்டும் விட்றா"...அதற்கு மேலும் கண்ணாவை பேச விடாமல் உள்ளே இழுத்து சென்றான் பாரி..
தங்கள் வீட்டிற்கு வந்த முல்லைக்கு ஆத்திரம் பொங்கி கொண்டிருந்தது..நேராக ரியோ வீட்டிற்கு சென்றாள்..அங்கே சக்தி மட்டும் இருந்தால்..முல்லையை கண்டதும்"அக்கா வாங்க வாங்க எப்போ வந்திங்க பாரி அண்ணா எங்க நீங்க மட்டும் தான் வந்திங்களா"...
"ரியோ எங்க"..
"அவரு இன்னும் வரலக்கா..நீங்க வாங்க ஒக்காருங்க காஃபி எடுத்துட்டு வரேன்".
"அதெல்லாம் வேணா நீ ஒக்காரு..எப்டி இருக்க..என்ன கண்ணெல்லாம் சிவந்து போயிருக்க சரியா தூங்குறது இல்லையா"..
"அப்டி எல்லாம் இல்லக்கா..நேத்து நைட்டு நோட்டெல்லாம் கரெக்ட்ஷன் பண்ணிட்டு தூங்க டைம் ஆச்சு அதான்"..
"சக்தி ரியோ உன்ன நல்லா பத்துக்குறானா"..
"ஓ நல்லா பாத்துக்குறாருக்கா.."
"உண்மையாவா"..முல்லையின் பார்வையில் பதிலற்று போனாள் சக்தி..
"எனக்கு தெரியும் சக்தி..அவன் வெண்பாவ மறந்துருக்க மாட்டான்..அவள இவ்ளோ லவ் பண்ணவன் ஏன் உன்ன கல்யாணம் பன்னானு புரில..என்ன சுத்தி ஏதேதோ நடக்குது சக்தி எனக்கு ஒன்னுமே புரில..அங்க பாரி வெண்பாவுக்கு கண்ணா அண்ணாவ கட்டி வைக்க பேசிட்டு இருக்கான்"..இது சக்திக்கு முன்னமே தெரிந்த கதைதானே..கண்ணா வெண்பாவை கட்டிக்கொள்ள சம்மதித்த பிறகு தான் ரியோ சக்தியை ஏற்று கொண்டான்..இதை முல்லையிடம் காட்டாமல்
"ஓ அப்டியாக்கா"..
"ம்ம் ஆமா என்னதான் நடக்குதோ ஒரு எழவும் தெரில..சரி சக்தி அப்ரோ பேசுறேன்"..தன் வீட்டிற்கு வந்தவள் முகமே கூறியது அவள் குழப்ப நிலையை..அன்பும் கிரேசும் ஏதும் கேட்கவில்லை..அன்பு தங்கையை மடியில் சாய்த்து தலை வருடி கொடுத்தான்..அதில் கண்ணை கரித்து கொண்டு வர தனதறைக்கு சென்று கதவை தாளிட்டு கொண்டாள் முல்லை..இரவு சாப்பிட கூட வரவில்லை..பாரிக்கு தொடர்பு கொண்டு கை தான் ஓய்ந்து போனது அன்புக்கு..அவன் எடுத்தால் தானே..என்ன நடந்துருக்கும் என யோசிக்கும் முன்பே அன்பு வீட்டிற்கு வந்தான் பாரி..
"வாங்க பாரி..உங்களுக்கும் முல்லைக்கும் ஏதாச்சும் பிரச்சனையா..வந்தவ ஒன்னும் பேசாம ரூம் குள்ள போயி கதவ சாத்திகிட்டா..தட்டுனாலும் தொரக்கல.."...
"உங்க தங்கச்சி பிரச்சனை பண்ணாம இருந்ததான் அதிசயமே மச்சான்..அவ சாப்டாலா"
"இல்ல பாரி வந்து கொஞ்ச நேரம் ஒக்காந்தா அப்றம் ரூம் குள்ள போயிட்டா"..
"சரி மச்சான் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க..இதுல நைட் ஷோ டிக்கெட் இருக்கு அக்காவ கூட்டிடு அப்டியே போய்ட்டு வாங்களேன் நா அதுக்குள்ள என் பொண்டாட்டிய சரி பண்ணிருறேன் "..
அன்பும் கிரேசும் சிரித்து கொண்டே கிளம்பி சென்று விட பாரி முல்லை அறையின் கதவை தட்டினான்..பேச்சு குரல் வைத்தே கணவன் வரவை அறிந்தவள் வேண்டுமென்றே கதவை திறக்காமல் இருக்க சிறிது நேரத்தில் தட்டும் ஓசை நின்றது..
ஆனால் சில நிமிடங்களில் கதவு திறந்தது.ஸ்பேர் சாவி அவன் கரத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது.நாங்கள்லாம் இப்டி ஒரு சந்தர்ப்பத்த எதிர்பார்த்து ரெடியா இருப்போம்ல.
"உன்ன என்னமோ நெனச்சேன் டி ஆனா நீ இப்டி பயந்தாங்கொள்ளி மாறி இங்க வந்து ஒளிஞ்சிருக்க..ஆமா யாரு கிட்ட இருந்து தப்பிக்க பாக்குற முல்லை"..
"நா ஏன் ஒழியனும்.இது என் வீடு இங்க நா வர்றதுக்கு யாரு கிட்டயும் கேக்கணும்னு அவசியம் இல்ல"..
"தப்புடா செல்லம் இது உன் அண்ணன் வீடு நம்ம வீடு இங்க இல்ல..அங்கேயிருந்து தான் இங்க வந்துருக்க"
"அதான் உங்க வீட்ல இருந்து வந்துடென்ல அப்றம் எதுக்கு வெக்கம் கெட்ட நாய் மாறி என்னயே சுத்தி வர்ற"..
"ஏண்டி நானும் பாக்குறேன் மொத இருந்தே என்ன நாயினு சொல்லிட்டு இருக்க..என்னடி கொழுப்பா"...
"ஆமா உங்க வீட்ல ஒக்காந்து தின்னு கொழுப்பு கூடிருச்சு இப்ப அதுக்கு என்னன்ற ஒழுங்கு மரியாதையா வெளிய போடா பொறுக்கி..எனக்கு உன்ன பாக்கவே புடிக்கல"...
"எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கே பொண்டாட்டி என்ன செய்ய..உன்ன பாத்தாலே மாமா மூட அடக்க முடிலயே"..
"ஹேய் நேத்து மாறி இன்னைக்கும் என்ன ஏதாச்சும் பண்ண பாத்தா உன்ன கொன்றுவேன் போடா வெளிய போடா".
"வெளிய போறதுக்காடி ஸ்பேர் கீ போட்டு கதவ தொறந்தேன்..இன்னைக்கு நைட்டு மாமாவுக்கு கோபேரட் பண்ணுவியாம் நாளைக்கு காலைல நாம நம்ம வீட்டுக்கு போவோமா...சரியா செல்லம்"...
"பல்ல ஒடச்சிருவேன் பொறுக்கி நேத்து தப்பிசிட்ட இன்னைக்கு செத்த நீ"...குறும்பு சிரிப்புடன் பாரி முல்லையை நெருங்க அவனை தலையணை கொண்டு அடித்து வெளுத்தாள் முல்லை..அவன் நெஞ்சில் ஏறி உட்க்கார்ந்து அவனின் தலைமயிரை பிடித்து ஆட்டியதால் கொத்தாக அவன் முடி அவள் கையில் வந்தது.."அடிப்பாவி இருக்குற நாலு முடியையும் புடிங்கிடியே உன்ன"...
அவளின் முடியை இவனும் பிடிக்க அவளோ நீண்ட நகங்களில் அவன் கைகளில் கொடு கிழிக்க அந்த அறை முழுவதும் பொருட்கள் கீழே விழுந்து தலையணை பஞ்சு பறந்து பயங்கரமாக காட்சியளித்தது..இவர்கள் இருவரையும் சொல்லவே வேண்டாம்..
முல்லையின் குண்டு கன்னங்கள் சிவந்து போய் கருங்குந்தால் முழுவதும் வெண்பஞ்சு படர அசல் உயிர் பொம்மை போலவே இருந்தாள்..தான் முதுகில் சப்பாத்தி சுட்டவளை வாரி இழுத்து அணைத்து இதழ் கடித்தான் பாரி..அவனின் எச்சிலை அதாவது அவன் முத்தத்தை ஆக்ரோஷமாய் துடைத்தவளை கண்டு என் கிஸ்ஸ தொடச்சிடாங்களாம் என பரிகாசித்து கொண்டே மீண்டும் இழுத்து அழுத்தி முத்தமிட இம்முறை அவனை கிள்ளி கிள்ளி கதற விட்டாள் முல்லை..
அவள் கைகளை திமிற திமிற முறுக்கி தன் இலக்கை அடைய அவன் போராட அவளும் அவனுக்கு வலி கொடுக்க என்ன செய்து என்ன அவன் அவள் வீட்டில் மீண்டும் அவளை வென்றான்..அசதியில் பாரி உறங்கிட அவனை முறைத்து கொண்டு உட்க்கார்ந்து இருந்தவள் இன்று அழவில்லை..எதையும் இழந்தால் தானே அழுகை வரும்..அவள் தான் இழக்கவே இல்லையே..ஒரு கணவனுக்கு எல்லா மனைவியும் தரும் சுகத்தை தானே அவளும் கொடுத்தாள் இதில் புதிதாக அவள் இழக்க என்ன இருக்கிறது..ஆனால் அவளுக்கு கோபம் மட்டும் குறையவில்லை..அவன் காதல் அவளுக்கு தெரியும் இருந்தாலும் அவனுக்கு அவள் பொருத்தமில்லாததும் அன்றொரு நாள் வளரி செய்த செயலும் பாரியின் மிரட்டல் திருமணமும் அவளால் மன்னிக்க இயலவில்லை..
என்னமோ அவளுக்கும் அவனுக்குமான போட்டியில் அவனே ஜெய்பது போன்ற பிரமை..அவன் விருப்பத்துக்கு திருமணம் செய்து அவன் விருப்பத்துக்கு அவளை ஆட்க்கொள்கிறான் அவள் எது செய்தாலும் அதை முறியடிக்கிறான்..அவனின் தொடுகை ஏன் வலிக்கு பதிலாக இதயத்தில் இனிக்கிறது..மென்மையும் காதலுமாய் அவனின் ஸ்பரிசம் அவளை களவு கொள்கிறதே ஏன் உண்மையாக அவள் உடமை பறிபோனதற்கு அவள் கோவிக்க வேண்டுமே ஆனால் ஏன் இந்த வெட்கம் கெட்ட வெட்கம் வந்து தொலைகிறது..ஏன்னென்றால் அவள் மனதிலும் காதல் உண்டு இதை அவள் புரிந்து கொள்ள மறுப்பது தான் உண்மை..
Comments
Post a Comment