இஞ்சி இடையழகி 21


சக்திக்கு ரியோவின் முகமே அவன் மன வேதனையை கூறியது இது அவனே ஏற்படுத்தி ஏற்று கொண்ட வேதனை தீ அதில் மூழ்கி பரிசுத்தமானவனாக வருவானா இல்லை அந்த தீயிற்கே இரையவானா என்பது அவனே முடிவு செய்ய வேண்டும்..சக்தியை அழைத்து கொண்டு நேராக தேவாலயத்திற்கு சென்றான்..அன்பு ததும்பும் கருணை தேவனின் முன் மண்டியிட்டு அமர்ந்து மானசீகமான உரையாடலை ஆரம்பித்தான்..மூடிருந்த விழிகளில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது..

சக்தியும் அவனருகில் அமர்ந்து தனது மனசிகமான வேண்டுதலை கர்த்தர் முன் வைத்தாள்.."ஆண்டவரே என் ரியோ எப்பவும் சந்தோசமா இருக்கனும் அவர் மனசுல பெரிய பூகம்பமே நடந்துட்டு இருக்கு அத நீங்க தான் தீர்த்து வெச்சு நல்ல வழி காட்டனும்"...

ரியோ மனத்திலோ"ஆண்டவரே நா உயிருக்கு உயிரா காதலிச்ச காதலிக்கு கல்யாணம்..இது நானே ஏத்துகிட்ட சிலுவை.ஆனா என்னால அந்த வேதனைய தாங்க முடில..தோ பக்கத்துல இருக்காளே ஒருத்தி அவ என்ன பாவம் செஞ்சா..என்ன மனசால லவ் பண்ண ஒரே பாவத்துக்கு இன்னைக்கு அனாதையா நிக்குறா.அவள என் சுயநலத்துக்காக கல்யாணம் பண்ணி இவ கூடவும் வாழாம வெண்பாவையும் மறக்க முடியாம நரக வேதனைய அனுபவிக்குறேன் இதுல இருந்து என்ன காப்பாத்துங்க ஆண்டவரே"...

இருவரின் வேண்டுதலையும் தான் கேட்டு கொண்டதற்கு அடையாளமாக ஆலய மணி அடித்தது..கர்த்தரிடம் மன பாரத்தை இறக்கி வைத்து விட்டு வீட்டிற்கு வந்தனர் இருவரும்..வந்தவுடன் சமையலை கவனிக்க சென்றவளை கரம் பிடித்து இழுத்தான் ரியோ..தடுமாறி அவன் மேல விழ போனவள் சமாளித்து நின்றாள்..புரியாத பார்வையுடன் ரியோவை பார்த்து"என்னங்க ரொம்ப பசிக்குதா..கொஞ்சம் இருங்க இப்ப சமைச்சிருவேன்"...சொல்லி முடித்தவளை அள்ளி எடுத்து அணைத்து கொண்டான் ரியோ..

அதிர்ந்து விலக திமிறியவளை"ப்ளீஸ் சக்தி..எனக்கு என் மனசுக்கு நீ வேணும் இத பண்ண எனக்கு பர்மிசன் தருவியா"...அவள் மிரண்டு விழிக்கும் போதே அவளின் இதழில் தன் முதல் முத்தத்தை பதித்தான் ரியோ..

சில நிமிஷங்கள் வரை நீடித்த முத்தத்திற்கு ரியோவே விடுதலை அளித்தான்..சக்தியின் முகத்தை கைகளில் ஏந்தி அவள் கண்களில் எதையோ தேடினான்..பின் நிம்மதியுற்று அவன் அறைக்குள் சென்று விட இங்கே தரையில் வேரூன்றி அப்படியே நின்றாள் சக்தி..ரியோ தன் மனதின் கொல்லும் வேதனையில் இருந்து தப்பிக்க கொண்டவளை கேடயமாக எண்ணி நெருங்குகிறான்..அடிப்பட்ட சிறுவனாக அவனுக்கு மருந்திட சக்தி வேண்டும் ஆனால் அடி வாங்கி அடி வாங்கியே மறுத்து போயிருந்த சக்திக்கு யார் மருந்திடுவர்..ஏதோ ஒருவகையில் தன்னவனின் இந்நிலைக்கு தானே காரணம்..மனதால் அந்த வெண்பா ரியோவை வென்றிருக்கலாம்..ஆனால் உணர்வால் உயிர்ப்பாய் அவனை வைத்திருக்க தன்னால் மட்டுமே முடியும் என்பதை புரிந்து கொண்டாள் சக்தி..

முல்லையை பார்த்து விட்டு அன்பும் கிரேசும் கிளம்பி விட அவள் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து கால் வீக்கத்திற்கு சுடுநீரால் உத்தடம் கொடுத்து கொண்டிருந்தான் பாரி..அவனை அசையாமல் பார்வையால் வதம் செய்து கொண்டிருந்தவளை ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென்று விசாரித்தான்..

"நெனச்சது எல்லாம் நடக்குது போல..."

"எத பத்தி சொல்ற முல்லை"..

"நீங்க எதுக்கு பிளான் பண்ணி எண்ணி தொட்டிங்களோ அதான் கெடச்சிருச்சே..இனிமேயும் நா உங்கள விட்டு போ முடியும்னு நெனைக்குறிங்களா"..குழந்தை பேருக்கு பிறகு பெண்களின் உடலில் சில பரிணாம மாற்றங்கள் வந்து சிலருக்கு எடை கூடும்..அதிலும் ஏற்கனவே எடை அதிகமாக இருக்கும் முல்லைக்கு இந்த குழந்தை வரவு மகிழ்வுக்கு பதில் பயத்தை கொடுத்தது..

என்றேனும் ஒரு நாள் இந்த உடல் எடையால் அவள் பாரியை இழந்து விடுவாளோ என்ற பயமும் அவளின் தாழ்வுணர்ச்சியும் அவளை இம்சித்தது..அதனாலே தன்னவனை காயப்படுத்தினாள்..அவனா அசருவான்..

அவள் பாதத்தை விடுத்து மெல்ல அருகில் வந்து அவள் வயிற்றில் முகம் புதைத்து தன் உயிரிடம் பேசினான்.."செல்லம் கேடிங்களா உங்க அம்மா சொல்றத..உங்களுக்காக மட்டும் தா உங்கம்மாவ தொட்ட மாறி பேசுறா..இதுலாம் தப்புன்னு உங்க அம்மாக்கு சீக்கிரம் புரிய வைக்க சீக்கிரமா வெளிய வாங்க செல்லம்"..வயிற்றில் முத்தமிட்டு அவன் கொஞ்ச முல்லையோ கூச்சத்தில் நெளிந்தாள்..

"நீ ஏண்டி நெளியுற..நா என் செல்லத்த கொஞ்சிறேன் உனக்கு என்ன"

"உங்க செல்லம் என் வயித்துக்குள்ள இருக்கு"..

"அதுக்கு நா என்னடி பண்றது..செல்லம் உங்கள கொஞ்சுனா உங்க அம்மாவுக்கு வயிறு எரியுது என்ன பண்ணலாம் அம்மாவையும் சேத்து கொஞ்சலாமா"...

முல்லையின் கரத்தை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தி"முல்லைம்மா நீ இன்னும் உன் காம்ப்ளெக்ஸ விடலையா..குண்டு ஒல்லின்னு எதுவுமே இல்லடி..ஒல்லி தா அழகு குண்டு அசிங்கம்னு யாருடி சொன்னது..ஒல்லியா இருக்குற பொண்ணுங்க பேரழகி தா யாரு இல்லனு சொன்னா"...

"அப்ப குண்டா இருக்குற நா அசிங்கமுன்னு நீங்களே ஒத்துகிட்டிங்க தானே"கலக்கத்துடன் வினவியவளை 

"ம்ஹும் ஒல்லி பொண்ணுங்க பேரழகிங்கனா குண்டு பொண்ணுங்க தேவதைங்க டி..எந்த மடையனாவது தேவதைய வேணாம்னு சொல்லுவானா..நா கண்டிப்பா சொல்ல மாட்டேன்..மனசுல எதையும் போட்டு கொழப்பிக்காத..நானும் என் காதலும் எப்பவும் ஒரே ஒருத்திக்கு மட்டுமே சொந்தம் அது இந்த இஞ்சி இடுப்பழகிக்கு தான்..பேசாம தூங்கு"...

பாரியின் ஆறுதல் வார்த்தைகளை மீறி அப்போது ஏதும் கூறவில்லை முல்லை..அவன் நெஞ்சில் சாய்ந்தே உறங்கி போனாள்..இரண்டு வாரத்தில் கண்ணா வெண்பா திருமணம் விமர்சையாக நடைபெற்றது..ஒரு பிரச்சனை முடிந்து விட்டது என பாரி மூச்சு விடும் போதே அவன் மூச்சை நிறுத்த வந்து சேர்ந்தான் வளரி வேந்தன்..

கண்ணா வெண்பாவின் திருமண வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது..ரியோவும் தன் பங்கிற்கு வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்தான்..மனதால் நேசித்த அவளுக்கு உடலால் செய்யும் இவ்வேலைகளால் ஒரு ஆத்ம திருப்தி.. முல்லைக்கு கடுப்பாக இருந்தது ரியோவை பார்க்கும் போது.. அவன் முகத்தில் துளி கூட மகிழ்ச்சியே இல்லாமல் வெளியே சிரிப்பது போல நடித்து அவன் நடமாடும் போது அதற்கு காரணம் தெரியாமல் பற்றி கொண்டு வந்தது..இதற்கெல்லாம் காரணகர்த்தா தன் கணவன் தான் என தவறாக எண்ணினாள்..தலை சுற்றல் மயக்கம் என காரணம் சொல்லி இதில் எதிலும் பங்கெடுக்காமல் ஒதுங்கி கொண்டாள்.. 

பாரிக்கு அனைத்தும் தெரிந்தும் அவளை வற்புறுத்தவில்லை..வேலைகள் அதன் பாட்டில் நடைபெற இதோ உற்றமும் சுற்றமும் சூழ கண்ணா வெண்பா திருமணம் இனிதே நடந்தேறியது..முல்லைக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது ரியோவை காண..கண்களில் எட்டாத சிரிப்புடன் உதட்டில் போலி புன்னகையை தவழ விட்டு அவன் அர்ச்சத்தை தூவும் போது ஏண்டா இப்டி பண்ண என கேட்க துடித்த மனதை அடக்கி கொண்டாள் முல்லை.. இனி கேட்டு என்ன பலன் வெண்பா இப்போது வேறொருவரின் மனைவி.. 

மன அழுத்தத்தில் தடுமாறியவளின் கரம் பற்றி தாங்கினான் கொண்டவன்..அவனுக்கு மட்டும் இதில் சந்தோசமா என்ன..ரியோ படும் பாடு அவன் அறியாததா இல்லை காதலின் வலிதான் தெரியாததா..சக்தியின் இருதயத்தில் கத்தியை வைத்து கிழிந்தாலும் அதை உணரும் நிலையில் இல்லை அவள்.. ரணப்பட்டு உணர்வுகள் மறுக்கப்பட்ட நிலையில் இருந்தாள்..தன் கணவன் மனதில் வேறு ஒருத்தி சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதை எந்த பெண் தாங்கி கொள்வாள்.. ஆனால் இதற்கெல்லாம் மூல காரணம் அவள் தானே.. தங்கை மேல் கொண்ட அன்பால் சிவா செய்த வேலை இன்று அந்த தங்கையை பார்த்து கெக்கலி கொட்டி நகைக்கிறது..வென்றது உண்மையில் யார் சிவாவா இல்லையே தோழிக்காக தன் காதலை தியாகம் செய்த ரியோ..நட்பிற்காக கனவிலும் நினைத்திடாத பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட கண்ணா.. காதல் மனைவியின் உயிர் காக்க அவளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் உண்மை தெரிந்தும் அதை கூறவும் வழியற்று ஊமையாக உள்ளே அழுது கொண்டிருக்கும் பாரி.. உண்மையில் வென்றது இவர்களே.. 

அனைவர் முன்னிலும் அழுது விட்டோமா என அவசரமாக கண்ணை தொட்டு பார்த்தாள் சக்தி.. கண்ணீர் வற்றி விட்டது போலும்..விரக்தி சிரிப்புடன் வேலையை பார்க்க தொடங்கினாள்..கண்ணா பலத்த யோசனையில் இருந்தான்.. பாரியின் தங்கை தனக்கும் தங்கை என்ற கண்ணியமான மனநிலையில் இருந்தவன்..தேவையென்றால் ஒழிய வெண்பாவிடம் அவன் பேசியது இல்லை.. என்றுமே அவள் அவன் கண்களுக்கு சிறு குழந்தையென தெரிவாள்..பிள்ளை முகம் கொண்டவளை கடவுள் பேச்சை பறித்து செவியை செயலிழக்க வைத்து படைத்து விட்டான்..அவள் இப்போது தனக்கு மனைவி..கண்ணாவிற்கு பேச்சு தான் உயிர் மூச்சே..சிறு சத்தம் கேட்டால் கூட படக்கென்று எழுந்து விடுவான்..ஆனால் அவனின் வாழ்க்கை துணையோ வேறு மாதிரி.என்ன விந்தை..இப்போதும் வெண்பா அவன் கண்களுக்கு அதே குட்டி பெண் போலவே தெரிய அவளை மனைவியாக எண்ணிட முடியாமல் தவித்தான்..

இரவின் தனிமையில் வெண்பாவை சந்திக்க நேர்கையில் அவள் பயந்து பயந்து மிரண்ட விழிகளுடன் அறைக்குள் நுழைந்தாள்..அவன் முன் வந்து நின்றவளை கண்டு எழுந்து நின்றவனின் நெஞ்சு வரையே இருந்தவளை பார்க்கையில் உள்ளம் கனிந்தது..அவளை அமர வைத்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளை தன்னை கவனிக்க கூறினான்..வெண்பாவும் அவன் கண்களையும் உதடுகளையும் மாறி மாறி பார்த்தாள்..கண்ணா செய்கையில் இன்னைக்கு நமக்குள்ள எதுவும் நடக்க போறது இல்ல..நாம மொத புரிஞ்சிக்கணும்..அப்றம் நமக்குள்ள இது நடக்கும் உனக்கு ஓகேவா என கேட்க அவளோ பெருவிரலை தம்ஸ் அப் போல காட்டினாள்..அவளுக்குமே உள்ளே உதறல் இருந்து கொண்டே இருந்தது..

அவள் சைகையில் உனக்கு எனக்கு பிடிக்குமா என வினவினாள்..கண்களில் சற்று பயத்துடன் அதை மீறிய ஆவலுடன் அவள் கேட்க அவனால் மறுக்க இயலவில்லை..அவள் முகத்தின் முன் உள்ளங்கையை நீட்டி அவள் முகத்தை ஒரு அரை வட்ட சுற்றலில் விரல்களை மடக்கி அதை தன் நெஞ்சில் வைத்து கொண்டான்..அவளையே அள்ளி எடுத்து நெஞ்சில் சாற்றி கொண்டதை போல உணர்ந்தாள் வெண்பா..

இருவரும் சின்ன சிரிப்புடன் உறங்கி போயினர்..பாரி ஒரு பாரம் இறங்கிய உணர்வுடன் இருந்தான்..எப்படியும் கண்ணா வெண்பாவை நன்றாக பார்த்து கொள்வான் அவன் வாழ்க்கை சிறந்து விடும் ஆனால் ரியோ அவனை நினைக்கவே பயமாக இருந்தது..எப்படியும் சக்தியின் காதலை அவன் உணர்ந்தால் சரி என இருந்தான்.. 

கல்யாண அசதியில் கண்ணயர்ந்தவனை எழுப்பியது மனைவியின் குரல்.. "நெனச்ச மாறியே உங்க தங்கச்சி கல்யாணத்த முடிச்சிடிங்க போல".. 

"என்னமோ நா பிளான் பண்ணி கண்ணாக்கு என் தங்கச்சிய கட்டி வெச்ச மாறி பேசுற.. உன் ரியோ தானே இதுக்கு காரணம்"... மனம் வலித்தாலும் ரியோ பேரை கூறி முல்லையை திசை திருப்ப முயன்றான்.. 

"அந்த நாயால தான் எல்லாமே.. என்ன கேடு வந்துச்சோ தெரில.. வெண்பா வெண்பான்னு திரிஞ்சவன் அந்த சக்திய கட்டிக்கிட்டான்.. சரி என்ன எழவோ அவன் நல்லா இருந்தா சரின்னு நெனச்சா எனக்கு தெரிஞ்சு அவன் சக்தி கூட வாழவே இல்ல.."

"உனக்கு எப்டி தெரியும் அவன் சொன்னானா".. 

"அவன் வாயால வேற சொல்லனுமா..அவன் மூஞ்ச பாத்தா தெரிலையா..நா அடிச்சு சொல்றேன் அவங்க ரெண்டு பெரும் இன்னும் வாழவே இல்ல..அவனும் வாழாம அந்த பொண்ணயும் வாழ விடாம என்ன வாழ்க்க இது ஏன் எதுக்காக அவன் வாழ்க்கய இப்டி அழிச்சுக்குறான்".. 

"முல்லை அது அவன் வாழ்க்கடி.. அவன் வாழ்க்க மேல அவனுக்கு அக்கற இருக்காதா நீ வேணும்னா பாரேன் சக்தி தான் ரியோக்காக பொறந்தவனு அவன் ஒத்துக்குவான்..அவங்க ரெண்டு பேருக்கும் தான் கடவுள் முடிச்சு போட்டு வெச்சிருக்காங்க.."

"என்னவோ போங்க நீங்க.. அவங்க வாழ்க்கய நெனச்சாலே மனசே பாரமா இருக்கு.. கடவுளே என் ரியோ நல்லா இருக்கனும்"... 

"அவன் எல்லாம் நல்லாத்தான் இருப்பான்..நீ மொத நல்லா இருடி அப்போ தா நம்ம புள்ள நல்லபடியா பொறக்கும்". 

"ஏன் எனக்கு என்ன".. 

"அத நீதான் சொல்லணும்".. 

"ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..நீங்க பேசாம படுங்க..எனக்கு தூக்கம் வருது"... முல்லை பாரியின் பக்கத்தில் படுத்து வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டாள்.. மென்னகையுடன் மனைவியின் செய்கையை ரசித்தபடி அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து கொள்ள அவனிடமிருந்து விலக்கியவளை பிடிவாதமாய் அணைத்து கொண்டு உறங்கி போனான். 

கல்யாணம் முடிந்து வீட்டிற்கும் வந்தாயிற்று இன்னும் ரியோவை காணவில்லை..தொடர்பு கொண்டாலும் வேண்டுமென்றே ஏற்காமல் இருக்கிறான்..சக்திக்கு நேரமாக நேரமாக உயிர் உடலை விட்டு மெல்லமாக விலகுவது போல உணர்ந்தாள்..சாப்பாடு மறந்து தூக்கம் துறந்து விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்..

கதவு தட்டப்படும் சத்தத்தில் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடினாள் சக்தி.. அங்கே கண்கள் சிவந்து கதவு மேலயே சாய்த்து நின்றுகொண்டிருந்தான் ரியோ..அவன் தோற்றமே கூறியது அவன் முழு போதையில் உள்ளான் என்று..சக்திக்கு அவன் குடித்தது கூட பெரியதாக இல்லை..இவ்வளவு நேரமாகியும் அவளை தவிக்க விட்டு தனியாக சோகத்தை அனுபவித்தவனை காண்கையில் கோபம் தலைக்கேறியது..அவனை இழுத்து சென்று குளியலறை ஷவரின் அடியில் நிற்க வைத்தாள்..முரண்டு பிடித்து நகர முயன்றவனை இறுக்கி பிடித்து குளிக்க வைத்து லுங்கி கட்ட வைத்து உணவூட்டி கொண்டிருந்தாள்.. அவனுக்கு அரை போதை அப்படியே இருந்தது..இருந்தாலும்"நீ...நீ சா..ப்...ட்யா ச.. க்தி"... 

"நா அப்ரோ சாபிடுக்குறேன் நீங்க சாப்பிடுங்க"... 

"ம்ஹும்... "நீ.. யும் சாப்டு. ".. உணவை அள்ளி அவள் மூக்கின் அருகே கொண்டு செல்ல அவன் கரம் பிடித்து தன் வாயின் அருகே கொண்டு சென்று வாங்கி கொண்டாள்..இப்படியே அவனுக்கு ஊட்டி அவன் கையால் அவளும் உண்டு அவனை படுக்க வைக்க கைத்தாங்கலாக அழைத்து சென்றாள்.. படுக்கையில் படுக்க வைத்து நிமிர்ந்தவளை தன்னோடு இழுத்து அணைத்து கொண்டான் ரியோ.. 

தொள தொள நைட்டியில் அவளின் பெண்மையின் மென்மை அவன் மேனியில் அழுத்த அவன் பிடி இறுகியது.. அவளை தன்னோடே சேர்த்து இழுத்து அணைக்க இப்போது சக்தி முழுவதும் ரியோவின் பிடிக்குள் இருந்தாள்..ரியோவின் கரம் அவள் வளைவு நெளிவுகளில் வளைந்து மேடு பள்ளங்களை கடந்து செல்ல அவனை தடுக்க முயன்றும் தோற்று கொண்டிருந்தாள்.. அவள் இதழில் அழுந்த முத்தமிடுகையில் கண்ணீர் கோடுகளாக பிரிந்தது..மனதில் வெண்பாவை நினைத்து கொண்டு தன்னை அணைக்கிறானே என்ற எண்ணமே வேதனை தீயில் தள்ளி கொண்டிருக்க சக்தி தன் பலத்தை திரட்டி அவனை தள்ளி கொண்டிருந்தாள்.."ப்ளீஸ் சக்தி...எனக்கு நீ இப்ப வேணும்"..ரியோ தான் அவன் மனதில் இப்போது வெண்பா இல்லை.. அவன் மனதிற்கு புரிகிறது தன்னுடன் இருப்பவள் சக்தி என்று.. அதற்கு மேல் சக்திக்கு வேறு ஏதும் தேவையில்லை ஆனால் சுயநினைவு இல்லாத போது இது நடக்க கூடாதென்று அவள் தன்னால் முடிந்த வரை மறுப்பை காட்டினாள்.. அவள் மறுப்புகளையும் மீறி சக்தியை அடைந்தான் ரியோ.. 

காலை விடிந்து நெடுநேரமாகி விட மெல்ல கண் திறந்தான் ரியோ..அவன் மேல் ஏதோ கணம் அழுத்த கலைந்த ஓவியமாக கிடந்தாள் சக்தி.. அவளையும் தன்னையும் பார்த்தவன் அதிர்ந்து பின் வேகமாக நேற்றிரவு நடந்ததை யோசித்து பார்த்தான்..நிழலாக நேற்றைய இரவு படமாக ஓடியது..தானா இப்படி உணர்வுகளை அடக்க முடியாமல் ச்சை.. மெல்ல சக்தியிடமிருந்து எழுந்தவன் அவளுக்கு முழுதாக போர்த்தி விட்டு குளித்து முடித்து வெளியே கிளம்பினான்.. மனம் கேளாமல் சக்திக்கு சாரி எனும் குறுந்தகவலை அனுப்பி விட்டு கனத்த மனதுடன் கிளம்பி விட்டான்..எழுந்து சக்தி பார்க்கும் போது ரியோ இல்லை அவன் குறுந்தகவலை படித்தவள் இதை ஓரளவு எதிர்பார்த்தது தான் அதனால் மனதை அடைத்து கொண்டு வந்ததை விழுங்கி விட்டு குளிக்க சென்றாள்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்