இஞ்சி இடையழகி 12
எண்ண செய்வதென்று கையை பிசைந்து கொண்டு நிற்க சக்தி தனக்கு தெரிந்த பூசாரி ஒருவர் இருப்பதை கூறினாள்..உடனே பாரியை தவிர மற்றவர்கள் அங்கே சென்று பூசாரியிடம் விஷயத்தை கூறினர்..அவரும் இரவு வருவதாக கூறி அனுப்பி வைத்தார்..
இரவு வந்தது ஆனால் முல்லை மட்டும் அறையை விட்டு வரவே இல்லை..சக்தி கை கன்ற கதவை தட்டியும் அவள் திறந்தபாடில்லை..மீறி கதவை உடைத்தால் முல்லைக்கு பிரச்சனை என்று அனைவரும் அமைதி காத்தனர்..பச்சை தண்ணீர் கூட இல்லாமல் பாரி கிடந்தான்..தன்னால் தன் தோழி அனுபவிக்கும் வேதனை கண்டு ரியோவும் துடித்தான் யாருக்கு ஆறுதல் தருவது என்று புரியாமல் கண்ணா தவித்தான்..இவர்களை கண்டு பிரச்சனையின் மூல காரணமே தான் தான் என நொந்து வெம்பி போனாள் சக்தி..
இரவு வந்தது கூடவே இரண்டு சீடர்களுடன் சாமியாரும் வந்தார்..ஏதேதோ கோலங்கள் வரையப்பட்டு அதன் நடுவே சக்கரம் ஒன்றை வரைந்து அதற்கு நேர் எதிராக அமர்ந்து கொண்டவர் மந்திரங்களை உச்சரிக்க அங்கே அறையில் பொருட்கள் உடையும் ஓசை கேட்டது..
அதை தொடர்ந்து கதவு படாரென்று திறந்து வெளியே வந்தாள் முல்லை ஆக்ரோஷமாக...இப்போது அவள் முல்லையாக இல்லை முழுக்க முழுக்க சிவாவாக மாறி போயிருந்தாள்..நிறுத்த சொல்லு நிறுத்துங்க இல்லேனா இவள இவள...
சுழன்று கொண்டு மேலே பறந்தாள் சிவா..தலைகீழாக அந்தரத்தில் தொங்கினாள்..இப்டியே விழுந்தா இவ கழுத்து ஒடஞ்சு சாவா பாக்குறியா பாக்குறியா
"ஐயோ வேணா அப்டி செஞ்சுறதா சிவா".
"அக்கா வேணாக்கா நா சொல்றத கேளு"..
"அப்ப அவன போ சொல்லுடி இல்ல..."..முல்லையின் கழுத்து முதுகு பக்கம் திரும்பியது..அவள் கோரமாக சிரிக்க பாரியே சாமியாரிடம் கிளம்ப சொல்லி கெஞ்சினான்..அவரோ அசையாமல் சிவாவின் ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தார்..
முல்லையின் கை கால்கள் எசகு பிசகாக சுற்றி பின்னி பிணைந்து கொள்ள மெல்ல பா..பாரி என்ற குரல் முல்லையுடையது..
உயிரே சென்று விட்டது பாரிக்கு.."முல்லை வந்துடியா மா..பயப்படாத மா உனக்கு ஒன்னும் இல்ல ஒன்னும் ஆக விட மாட்டேன்"...
"அப்போ அவன போக சொல்லுடா"..இப்போது சிவா பேசினால்..கண்ணா கதறியலும் நண்பனை தாங்கி கொள்ள ரியோ சாமியாரிடம்
"அந்த பேயா ஆட விட்டு வேடிக்க பாக்கவா இங்க ஒக்காந்து இருக்கீங்க ஏதாச்சும் செய்ங்க சாமி"..
மந்திரங்களை கூறி கொண்டே சாட்டையை கையிலெடுத்து காற்றில் சுழற்ற அது சிவாவின் உடலில் மாய கயிறாக சுற்றி அவளை இழுத்து வந்து சக்கரத்தின் உள்ளே அமர செய்த்தது..அதற்குள் அவளின் கூச்சல் செவியை கிழித்தது..
சாமியார் முல்லையை விட்டு சிவாவை போக சொல்ல அவளோ முடியாதென முடிவாக கூற இறுதியில் என்ன செய்தால் போவாய் என இவர் கேட்க இந்த ரியோ என் தங்கையை மணமுடிக்க வேண்டுமென இவள் கூற கடுப்பான சாமியார் மந்திரங்களுடன் ஒரு குடுவையை திறக்க அந்நேரம் அவரே எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது..
சிவாவின் கண் பார்வையில் பெயர்ந்த ஒரு புகைப்பட சட்டம் கண நேரத்தில் பறந்து வந்து சாமியாரின் தலையை பதம் பார்க்க அவர் ரத்தம் பீறிட சரிய அட்டகாச சிரிப்புடன் அந்த சக்கரத்தை விட்டு வெளியேறினாள்..
"எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே வெளியேத்த பாப்பிங்க ஆஹ்ன்"...சிரித்து கொண்டு கை கால்களை கூறிய நகத்தால் கிரி கிழிக்க அவளிடம் மன்றாடினர் அனைவரும்..முகத்தில் அவளின் கைகள் படர சாமியார் ஏதோ கூறுவது கேட்டது..
"அ..வள் துர் ஆத்மா இல்ல..ரொம்...ப கஷ்டத்த அனு..பவிச்சு அல்பாயுசுல இற..ந்தவ அவ சொன்னத செய்..ங்க இல்...லனா உங்க பொண்டாட்டி உங்க..ளுக்கு இல்ல..."ஈன சுரத்தில் அவர் சொல்லி முடிக்க பாரி ரியோவின் காலை பற்றிருந்தான்..
ரியோ அதிர்ந்த நோக்க"ரியோ ப்ளீஸ் டா என் பொண்டாட்டிய காப்பாத்த வேற வழியில்லடா எனக்கு..முல்லை ஒரு தப்பும் பன்னலடா..ஏற்கனவே ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன் அவள..இப்ப இந்த பேய் அவள பாடா படுத்துது..எனக்கு என் முல்லை வேணும்டா அவ கூட சந்தோசமா வாழனும்..அதுக்கு உன் காதல காவு கேக்குறேன் உன் லவ்வ காரணம் காட்டி அவள கட்டிகிட்டேன் இப்ப உன் லவ்வ விட்டு கொடுத்து என் பொண்டாட்டிய காப்பாத்துடா..."...காலை கட்டி கொண்டு அழும் அவனையே வெறித்து பார்த்தான் ரியோ..
அப்போது என் காதல் சொல்லாமல் மனதில் சுமக்கும் காதல் சொல்லாமலே போக கூடுமோ ஐயோ என் வெண்பா அவள் இடத்தில் இவளா..அவளை யார் திருமணம் செய்வார்கள் திருமணம் ஆனாலும் யார் நன்றாக பார்த்து கொள்வது..என்னை போல அவனை புரிந்து கொள்ள முடியுமா..
அவளுக்கு ஒரு வாழ்க்கை அமையாமல் ரியோவின் பார்வை அவனின் காலில் விழுந்து கதறும் பாரியை தூங்கி நிறுத்த முயன்று கொண்டிருக்கும் கண்ணா மேல் நிலைத்தது..ஒரு முடிவுடன்'கண்ணா அண்ணா"..கண்ணா நிமிர்ந்தான் கண்ணில் கண்ணீர் வழிந்தோட
"எனக்கு ஒரு உதவி செய்வியா வெண்பாவை நீ கட்டிகுறியா"..தன் செவி புலன் மேலே சந்தேகம் வர கண்ணா அதிர பாரியும் அதிர்ந்தான்..
"டேய் என்னடா பேசுற நா அவள தங்கச்சி மாறி நெனைக்குறேன் அவள போயி "..
"நீ அவள கட்டிகிட்டா நா நிம்மதியா இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்..அவ ஒரு பத்திரமான ஆளு கிட்ட ஒப்படைச்ச நிம்மதி கிடைக்கும்..அவ ரொம்ப பயந்தவ அண்ணா ப்ளீஸ்"...பாரி இப்போது கண்ணாவின் கரத்தை பற்றிருந்தான்..அவனிடம் மன்றாட தொடங்கியவனை கண்டான் கண்ணா..
பாரி சாதாரணன் அல்ல அவனின் சொத்துக்கள் செல்வாக்கு மரியாதை பேர் புகழ் அனைத்தும் இன்று தன் மனைவியை காப்பாற்ற தவிடுபொடியாகி மன்றாடி கொண்டிருக்கிறான்..இங்கே இன்னொருவன் சொல்லாத காதல். காதலி நல் ஒருவனை மணக்க வேண்டுமென வேண்டுகிறான் என்ன மாதிரி காதல் இவர்களது..
இறுகிய மனதுடன் அவன் சம்மதம் சொல்ல ரியோவும் சக்தியை மணக்க சம்மதித்தான்..ஆனால் சக்தி அறவே மறுத்தாள்..அவளிடம் முல்லையின் உயிருக்காக வேண்டி கொள்ள அவளும் சம்மதிக்க வெற்றி புன்னகையுடன் சிவா பார்க்க ரியோ தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி சக்தி விரலில் அணிவித்து அங்கே கொட்டிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் வைத்தான்..
மனம் நிறைய தங்கையின் திருமணத்தை கண்டவள் சக்தியின் நெற்றியில் முத்தமிட்டு"எல்லோரும் என்ன மன்னிசிருங்க என் தங்கச்சிக்காக எல்லோரையும் கஷ்டப்படுதிட்டேன்..ரியோ என் தங்கச்சிய நல்லா பாத்துக்கோ..பாரி என்ன மன்னிச்சிரு முல்லைய பாக்க எனக்கு பொறாமையா இருக்கு உன் மாறி புருஷன் கிடைக்க அவ கொடுத்து வெச்சிருக்கணும் நா போகணும்..இன்னும் ஒருத்தன் பாக்கி இருக்கான்..அவன நானே பாத்துக்குறேன்"..என கூறியவள் மயங்கி விழுந்தாள்..முல்லை என கதறிக்கொண்டே அவளை தாங்கினான் பாரி..அடிபட்ட தழும்புகள் அனைத்தும் மறைந்து போக மெல்ல கைவிழித்தால் முல்லை..
Comments
Post a Comment