இஞ்சி இடையழகி 20


இரவில் தாமதமாக வீடு வந்து சேர்ந்தான் ரியோ..சக்தி தனதறையில் உட்க்கார்ந்து நோட்டை திருத்தி கொண்டிருந்தாள்..காலையில் சக்தியை கோபித்தது மனம் கேளவில்லை அவனுக்கு..சக்தியை கண்டதும் அவள் ரியோவின் பைக் சாவியை கொண்டு வந்து அவனிடம் கொடுக்க அவளின் கரத்தினை பற்றி"என்ன மன்னிச்சிறு சக்தி காலைல என் தப்புக்கு உன்ன ஏசிட்டேன்"..

"பரவாலங்க..ஹான் முல்லை அக்கா வந்துருக்காங்க..அவங்களுக்கும் அண்ணாவுக்கும் ஏதோ பிரச்சனை போல..கொஞ்சம் கோவமா இருந்தாங்க"...

"இங்கயா தங்கிருக்கா". 

"ம்ம்ம் ஆமா மொத அவங்க வந்தாங்க அப்ரோ ராத்திரி போல அண்ணாவும் வந்துட்டாரு."

"அவளுக்கு பாரிய புரிஞ்சிக்காம சண்ட போடுறதே பொழப்பா போச்சு.."..

"அப்றம் ரியோ முல்லைக்கா சொன்னாங்க..கண்ணாவுக்கும் வெண்பாக்கும் கல்யாணம் பண்ணி வைக்க எல்லோரும் சம்மதிச்சுட்டாங்களாம்"..

"ஓ...சரி நீ சாப்டியா சக்தி"..

"சாப்டேன்..நீங்க குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்குறேன் ரியோ"..

"இல்லம்மா நா வெளிய சாப்டேன்..நீ போய் தூங்கு போ"..சக்திக்கு சுருக்கென்றது..அவளுக்கு தெரியுமே அவன் வெண்பா நினைவுகளுடன் போராட செல்கிறான் என்று..தனதறைக்குள் நுழைந்தவன் அலமாரியில் மறைத்து வைத்திருந்த வெண்பாவின் புகைப்படத்தை கையிலெடுத்தான்..அந்த நேரம் சரியாக அவனுக்கு பிடித்த பாடலே நினைவு வந்து அவனை வேதனை படுத்தியது...

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

கண்ணில் கண்ணீர் வழிய அப்படியே அமர்ந்து விட்டான் ரியோ..அவனால் இதனை தங்கிடவே இயலவில்லை..சக்திக்கு இருப்பு கொள்ளவில்லை..ரியோவின் மனம் படும் வேதனை அவளுக்கு நன்றாகவே புரிந்தது..கதவை தட்டி பார்த்தாள்..சத்தமே இல்லை..கதவை திறந்து கொண்டு உள்ளே போக அங்கே தரையில் படுத்து வெண்பா புகைப்படத்திடம் புலம்பி கொண்டிருந்தான் ரியோ..மனம் நொறுங்குவது சக்திக்கு புதிதல்ல இருந்தாலும் இப்போதும் அந்த மரண வலியை சுமந்து கொண்டு ரியோவை நெருங்கினாள்..அவன் தலையை எடுத்து தன் மடியில் கிடத்தி கொண்டாள்..அவளின் தொடுகை உணர்ந்தாலும் விலகி செல்லும் நிலையில் அல்ல ரியோ..சக்தி மடியில் தலைவைத்து அவள் கையை நெஞ்சில் பொதிந்து கேவலுடன் கேட்டான் என்னால என்னைக்காவது வெண்பாவ மறக்க முடியுமா என்று..

பிடிவாதம் 
மனதினை உணர மறுக்கும்

பிடிவாதம் 
மனம் விரும்பியவரை காயப்படுத்தும் 

பிடிவாதம் 
மனதிற்கு இனியவர்களை விலக்கி நிறுத்தும்


அப்படி பட்ட பிடிவாதமே முல்லை கொடியின் பிடிவாதமானது ஒருவனின் உயர் உயிர் காதலை ஏற்க மறுத்தது..நான் குண்டு தான் என்ன யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன் என வெளியே கெத்தாக கூறும் பெண்கள் உள்ளே நெருங்கியவர்களின் அறியாத கேலியில் துவண்டு போவார்கள்..ஏனென்றால் அவர்கள் அடி மனதில் எப்போதுமே ஒரு தாழ்வுணர்ச்சி இருக்கும்..தைரியமான பெண்ணான முல்லையும் அப்படியே..

தன்னவன் அழகிற்கு தான் பொருத்தமில்லை என்பது மட்டுமே அவள் அடி மனதில் அடித்தளமிட்டு இருந்தது..அவன் காதல் அவளுக்கு புரிந்தாலும் அதை ஏற்று கொள்ள மறுத்து அவனையும் வருத்தி தானும் வாழாமல் வாடுகிறாள்..முல்லையின் அனைத்து முயற்சிகளையும் பாரி தனது காதல் கொண்டே முறியடித்து வருகிறான்..

இந்த ஒன்றரை மாத கால போராடத்திலே முல்லை பெரிதும் துவண்டு போனாள்.. பாரி அவளை அதிகாலையில் எழுந்து யோகா செய்ய வைத்தான்.. ஒரு மருத்துவனாக அவள் உணவு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தான்...உடல் பருமனான பெண்கள் எவ்வாறு அந்த பிரச்சனைகளை சமாளித்து தாண்டி வந்தார்கள் என்ற ஒளிப்பதிவுகளை முகநூலில் முல்லைக்கு பகிர்ந்து பார்க்க வைத்தான்..ஒரு கணவனாக காதலனாக தோழனாக அனைத்து வழிகளிலும் அவளின் விருப்பத்தை நன்முறையில் நிறைவேற்ற துடித்தான்.. 

ஆனால் முல்லை இன்னும் சோர்ந்து போனாள்..தானாக இவ்வளவு செய்யும் கணவனுக்கு தான் என்ன செய்திட முடியும் என கலங்கினாள்.. ஒருவேளை தன்னால் எடையை குறைக்க முடியாமல் போனாள் என்ற தேவையற்ற பயத்தை உள்ளே வளர்த்தாள்..பாரியிடமிருந்து விளக்கவும் முடியாமல் ஒன்றவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.. 

காலையில் எழும் போதே இடுப்பு வீங்கி வலி உயிர் போயிற்று..கால் பாதம் அனைத்தும் வீங்கி அடியெடுத்து வைக்க முடியாமல் வேதனையை கொடுக்க உடல் பருமனால் தான் இத்தகைய வேதனை என தவறாக புரிந்து கொண்டவள் எழ முயற்சித்தாள்..தலை வேறு கனக்க அப்படியே படுத்து துயில் கொண்டாள்..சிறிது நேரத்தில் எழுந்த பாரி உடற்பயிற்சி செய்யாமல் தன்னருகில் படுத்திருந்த மனையாளின் கன்னத்தில் கை வைத்து பார்த்தான்..கன்னம் சுட்டது..வேகமாக நெற்றியில் கை வைக்க அனலாய் கொதித்தது..திடிர்னு காய்ச்சல் வரும் அளவிற்கு அவள் என்ன செய்தாலென யோசித்தவன் அவளுக்கு பல்ஸ் பார்க்க ஒரு மருத்துவனுக்கு தெரியாதா விசை தட்டியது போல ஒரு ஒளி பாரியின் முகத்தில்..

நாடி இரண்டாக துடிக்க பாரியின் உள்ளமோ ஏகத்துக்கும் துடித்தது..அவன் தந்தையாகி விட்டான்..காதல் மனைவியின் காந்த முகத்தை கையிலேந்தி மென்மையாக முத்தமிட அவன் ஈரம் உணர்ந்து கண்திறந்தால் முல்லை..அவளின் வயிற்றில் மென்மையாக வருடியபடியே"கண்ணம்மா நீ அம்மாவா ஆக போறடி"... 

காய்ச்சலின் வீரியத்தில் அவன் கூறியது அறையும் குறையுமாக கேட்டது முல்லைக்கு.. அவள் அவனையே பார்க்க"அடியே நீ அம்மாவா ஆக போறடி.. நமக்கு ஒரு பாப்பா வர போது"... 

இப்போது கணவன் சொன்னது கருத்தை தொட உதடு வரை எட்டாத மென்னகை ஒன்று உதிர்ந்தது அவளிடம்.. "என்ன ஏமாத்துற வேலைய நீங்க இன்னும் விடலையா.. "
"என்னடி சொல்ற"

"எனக்கு ஒன் வீக் முன்னாடி தானே பிரியட்ஸ் முடிஞ்சு.. அப்ரோ எப்டி மாசமா இருக்க முடியும்"...அவள் சொல்வதும் மெய் தான்.. மீண்டும் அவள் நாடி பிடித்து பார்த்தான்..நாடியும் பொய்யுரைக்கவில்லை.. 

"சரி இப்ப நீ தூங்கு மார்னிங் ஹாஸ்பிடல்ல செக் பண்ணலாம் ஆனா ப்ச் ஒன்னும் இல்ல தூங்கு"... அவளை உறங்க வைத்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.. பின் அப்படி தான் ஒருவேளை இருக்குமோ என யோசித்தவன் உறங்கும் மனைவியையே பார்த்து கொண்டிருந்தான்..காலையில் முல்லையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தவன் பெண் மகப்பேறு மருத்துவரிடம் அவளை பரிசோதிக்க கூறினான்.. பாரி கணித்தது சரியே முல்லை தாய்மையடைந்துள்ளாள்..

அனைத்து பெண்களுக்கும் ஒரே போல் உடலமைப்பு அமைவதில்லை..சில பெண்கள் மகப்பேறு காலம் வரையிலும் கூட உதிரப்போக்கு ஏற்படும்..சிலருக்கு முன் மாதங்கள் ஓரிரண்டு நாட்கள் இந்த பிரச்சனை ஏற்படும்..ஆனால் இது சிலருக்கு பேரும் ஆபத்தையும் தரும்..முல்லையை பொருத்த வரை மருத்துவர் சில மாதங்கள் பொறுத்திருக்கலாம் என கூறி விட்டார்... 

பின்னால் நடப்பது யாருக்கு தெரியும் இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு மனைவியுடன் வீடு வந்து சேர்ந்தான் பாரி..விஷயம் அறிந்து ஆனந்த கூத்தாடினார் கமலி..அன்பு கிரேஸ் சக்தியுடன் வந்து தங்கையை கண்கலங்க அணைத்து கொண்டான்.. பாரியின் கரத்தை பிடித்து கொண்டு"மாப்ள என் தங்கச்சி சண்டய மறந்து உங்க கூட மனசு மாறி இவ்ளோ சீக்கிரம் வாழுவானு நா நினைக்கவே இல்ல ரொம்ப சந்தோசம் மாப்ள"... 

"மச்சான் ரொம்ப உணர்ச்சிவச படாதிங்க..உங்க தங்கச்சி இன்னும் மனசு மாறவே இல்ல இப்ப கூட பாருங்க எப்டி என்ன மொறச்சிட்டு இருக்கான்னு".. 

"அப்றம் எப்டி மாப்ள"

"என்ன மச்சான் வெக்கமே இல்லாம தங்கச்சி பண்ண ரொமான்ஸ பத்தி கேட்டுகிட்டு அது எப்டியோ நடந்துச்சு விடுங்களேன்".. 

"எப்டியோ மாப்ள என்ன மாமா ஆகிடிங்க அதுவே போதும் சீக்கிரம் என் தங்கச்சி மனச மாத்துங்க".. 

"நீ ஏன்யா சொல்ல மாட்ட பிசாச வளத்து வெச்சிட்டு பேச்சா பேசுற"பாரி மனதிற்கு நினைத்து கொண்டான்..ரியோவும் கண்ணாவும் ஒன்றாக வந்தனர்..ரியோ வரும்போதே முல்லைக்கு பிடித்த சாக்லேட் கேக்குடன் வந்து தோழியின் கன்னத்தை பிடித்து கிள்ளி வாழ்த்து கூறினான்..முல்லையின் அருகே அமர்ந்திருந்த சக்தி முகத்தில் ஏக்கத்துடன் ரியோவை ஏற்றிட்டாள்..அவன் அந்த முகத்தை பாத்தால் தானே அவன் தான் தோழியிடம் அளவளாவி கொண்டிருந்தானே. 

ஆனால் பாரியின் கண்கள் சக்தியின் ஏக்கத்தை படம் பிடித்தது.. முல்லையிடம் பேசி விட்டு பாரி கண்ணாவிடம் வந்தான் ரியோ.. "அப்றம் பாரி சார் சண்ட சண்டனு எங்கள எல்லாம் ஏமாத்திட்டு இன்னைக்கு என் முல்லைய அம்மா ஆக்கிடிங்களே"... 

"ஆமா ஏமாத்துனாங்க அட ஏன்டா நீ வேற வயித்து எரிச்சல கெளப்பிகிட்டு அந்த குந்தாணி இன்னும் என்மேல காண்டுல தான் இருக்கா.."

ரியோ"அப்றம் எப்டி மச்சான்".. 

"உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்குறேன் நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன்.... "

கண்ணா"ஏன் மச்சான் பாட சொன்னா சங்கு புடிக்குற..."

"டேய் ரொம்ப ஓட்றீங்கடா..கண்ணா கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு..ஹனிமூன் எங்க பிளான் பண்ணிருக்க"..பாரி வெண்பா கண்ணா திருமணத்தை பற்றி பேசியதும் ரியோவின் முகம் துணைகொண்டு துடைத்தார் போல் மாறிவிட்டது.. உணர்ச்சியை வெளி காட்டாமல் நின்றவனை ஓர கண்ணால் கண்ணாவிடம் ஜாடை காட்டி விட்டு"இல்ல இனிமே தா பிளான் பண்ண போறியா".. 

கண்ணாவும்"இல்ல மச்சான் செம்ம வேல கெடக்கு ஹனிமூன அப்ரோ பாத்துக்கலாம்".. 

"டேய் என் தங்கச்சிய உன்ன நம்பி தரேன் ஒழுங்கா பாத்துக்கோ டா".. 

"மச்சான் கவலைய விட்டு கண்ணீர தொட...அவ இனிமே உன் தங்கச்சி இல்ல.. என் மனைவி அவள பாத்துக்க எனக்கு தெரியும்".. கண்ணா வெண்பாவை மனைவி என குறிப்பிட்டதும் ரியோ மனதிற்கு வேதனையாக இருந்தது இருந்தாலும் வேதனையை மறைத்து வெளியே சிரித்து பேசி சீக்கிரமே சக்தியுடன் கிளம்பி விட்டான்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்