இஞ்சி இடையழகி 30(இறுதி பாகம்)
மறுநாள் காலை இங்கு பெண்டரில் இருந்த தங்கள் உயிர்களை காண மனைவியை அழைத்து சென்றான் பாரி..தேவதைகளை நேரில் கண்டிறாத முல்லை இதோ காண்கிறாள் தன் மகள்களின் ரூபத்தில்..அவள் முகமலர்ந்து சிரிப்பை இன்னும் பெரியதாக்க வளரி கண் விழித்து விட்டதை கூறினான் பாரி..முல்லை கொடியின் இதழ்களும் விழிகளும் ஒருங்கே மலர்ந்தன..அன்பு கண்ணா ரியோ மூவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்..
முல்லையையும் அவளின் இரு தேவதைகளையும் பார்த்து பூரித்து போயினர்..அவர்களை அழகாக படமெடுத்து தன் மனைவிக்கு அனுப்பி வைத்தான் அன்பு.. கிரேசிற்கு மகிழ்ச்சி தாளவில்லை..எப்படியோ தன் தோழி உயிர் போரட்டத்தில் வென்று மீண்டும் வந்ததை எண்ணி நிம்மதி அடைந்தான் ரியோ..முல்லையை தவிர ரியோ கண்ணா அன்பு பாரி நால்வரும் வளரியை காண சென்றனர்..அவனிடம் இருகரம் கூப்பி நன்றி கூறுவதை தவிர்த்து அன்பாலும் ரியோவாழும் என்ன செய்திட முடியும். சின்ன சிரிப்பில் அவர்களின் நன்றியை ஏற்று கொண்டான் வளரி..கமலி மருமகளையும் மகனையும் மாறி மாறி கவனித்து கொண்டார்..
முல்லை மருத்துவமனையில் வளரியை காண விரும்பவில்லை.மீண்டும் அவனை அதே படுக்கையின் மேல் பார்க்க அவளுக்கு சக்தி இல்லை..மேலும் மூன்று நாட்கள் உடல்நிலை சற்று தேறி முல்லை கொடி குழந்தைகளுடன் வீடு வந்து சேர்ந்தாள்..அதற்கு மறுநாளே வளரி அடம்பிடித்து வீட்டிற்கு வந்து விட்டான்..
அப்போது தான் முல்லை வளரியை சந்தித்தாள்..ஒன்றும் பேசவில்லை..அவர்களை சுற்றி யார் இருக்கிறார்கள் என்று அவள் பார்க்கவில்லை நேராக சென்று அவனை அணைத்து கொண்டாள்..அந்த அணைப்பில் இருந்தது என்ன..ஒரு தாயாக தன் குழந்தைகளை காப்பாறியதற்கு நன்றி..ஒரு மனைவியாக தன் கணவனிடம் தன்னை சேர்ப்பித்ததற்கு நன்றி.ஒரு தோழியாக அவள் உயிரை மீட்டு தந்ததற்கு நன்றி இது மட்டுமே..அங்கிருந்த யாவரும் இதனை தவறாக நினைக்க வில்லை..
அவள் வளரியை பார்க்க மீண்டும் அதே சின்ன சிரிப்பு..மேலும் இரண்டு நாட்கள் அங்கிருந்து தங்கள் ஊருக்கு கிளம்பினர் அனைவரும்..வளரிக்கு வெட்டு காயங்கள் மட்டுமே..மற்றபடி அவனுக்கு எலும்பு முறிவு ஒன்றுமில்லை..பாரி பார்த்தே காரினை செலுத்தினான்..
கண்ணாவின் அதிரடி நடவடிக்கையில் அந்த கயவனின் கூட்டத்தை அடியோடு பிடித்து உள்ளே தள்ளி விட்டான்..கிரேஸ் சக்திக்கு முல்லையின் குழந்தைகளை கண்டு பேரானந்தம்..குறை பிரசவத்தில் பிறந்திருந்தாலும் குறையொன்றும் இல்லை கடவுள் கிருபையில்..
முல்லையை கமளி தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்திருந்தார்..மகனுக்கும் மருமகளுக்கும் பேர குழந்தைகளுக்கும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்து சென்றார்..அன்றிலிருந்து அந்த வீட்டில் புதிதாக ஒரு களை வந்தது..குழந்தைகளின் சிரிப்பொலி அதன் அழுகை இப்படி மாறி மாறி ஏதாவது ஒன்று கேட்டு கொண்டே இருக்கும்..ஒரு நாள் விட்டு ஒரு நாள் கிரேஸ் வந்து விடுவாள்..அவளை போலவே வெண்பாவும்..அந்த பிஞ்சுகளின் சிரிப்பு அவர்களை சுண்டி இழுத்தது..கிரேசிற்கு திருமணமாகி வருடம் ஐந்து கடந்த நிலையிலும் இன்று வரை குழந்தை இல்லை..அது அவள் மனதை நோகடிதாலும் வெளியே இயல்பாக இருப்பாள்..இப்போது அந்த துன்பமும் மறைந்து போயிற்று முல்லையின் குழந்தைகளை பார்க்கையில்.
மாமியாரின் கவனித்தலில் ஒரே மாதத்தில் உடல் தேறி புது பொலிவு பெற்றாள் முல்லை..அதே போல வளரியும் காயங்கள் ஆறி அவனது ஆரோக்ய உடலை மீண்டும் அடைந்தான்..இப்போதெல்லாம் முல்லையுடன் வளரி கழிக்கும் நேரங்கள் குறைவாக இருந்தது..அவள் நேரங்கள் பெரும்பாலும் தன் குழந்தைகளை சுற்றியே இருந்தது..ஆனாலும் அவனின் தேவைகள் அவனது மாத்திரைகள் என்று அவனது ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தாள்..கமலியும் அவன் மேலிருந்த கோபத்தை ஒதுக்கி மகனை தன் அன்பால் குளிப்பாடினார்..முல்லை நன்கு தேறியவுடன் ரியோ சக்திக்கு வளைகாப்பு நடத்தினான்..பாரியும் முல்லையும் தங்கள் இறுகுழந்தைகளை ஆளுக்கு ஒருவர் தூக்கி நின்ற காட்சி அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது..
அது வளரியின் இதயத்திலும் விழுந்தது..வளைகாப்பு முடிந்து இரு தினங்களில் வலி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள் சக்தி..வெளியே அன்பு ரியோ கிரேஸ் மூவரும் படபடப்பாக இருக்க அதிக பதற்றத்தில் மயங்கி விழுந்தாள் கிரேஸ்..
பயந்து போன அன்பு ரியோ இருவரும் அவளை தூக்கி கொண்டு சிகிச்சை அறைக்கு சென்றனர் அங்கே அவளை பரிசோதித்த மருத்துவர் மேலும் சில டெஸ்ட் செய்து அவள் தாய்மை அடைந்திருபத்தை கூறினார்..அதே சமயம் ரியோவிற்கு ஆண் குழந்தை பிறந்தது..அந்த குடும்பமே இரட்டிப்பு மகிழ்ச்சியில் தள்ளாடியது..
முல்லைக்கு ஆனந்தமே...பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணன் அண்ணிக்கு குழந்தை வர போவதை எண்ணி.. அதை வாய் ஓயாமல் வளரியிடமும் பாரியிடமும் மாறி மாறி சொல்லி கொண்டே இருந்தாள்..ரியோ அவன் வாழ்வில் அதிரடியாக நுழைக்கப்பட்டவள் சக்தி.. ஆனால் இப்போது அவனின் முழு சக்தியே அவளாகி போனால்..எத்தனை வருட காதலாக இருந்தாலும் அது தோல்வியில் முடிந்தால் வாழ்வதற்கே விருப்பமற்று போகிறோம் ஆனால் ஒன்று வாழ்க்கை அனைவருக்கும் இரண்டாம் வாய்ப்பு தரும் அதை சரியாக பயன்படுத்தினால் அந்த வாழ்வு சொர்க்கம்..அப்படி ரியோ வாழ்வில் இரண்டாவது வாய்ப்பாக வந்தவள் சக்தி இன்று அவன் வாழ்வாகி போனாள்.. அவர்களின் குழந்தை இருவருக்குமே ஒரு பாலமாகி சிரித்தது..
முல்லை கொடி பாரி வேந்தனின் குழந்தைகளுக்கு தொட்டிலில் கிடத்தி பெயர் வைத்தனர்.. ஒரு பெயர் பாரி கூறினான்.."ஊர்வி"என்று..மறுபெயரை முல்லை வளரியை கூற சொன்னாள்.. அவனோ அதிர்ச்சியாக அவளை பார்க்க அவள் அவனருகில் சென்று"சொல்லு வளரி உனக்கு என்ன பேரு தோணுதோ அத வையு"..என்றால்.. வளரி பாரியை பார்த்தான்.. அவன் விழியிலே பெயர் வைக்க சொல்ல வளரி சற்று யோசித்து"சுதர்வி"என பெயரிட்டான்..
அதே போல ரியோ குழந்தைக்கு பெயர் சூட்டும் போது சிவாஷன் என்று பெயரிட்டான்..சக்தி தன் அக்காவின் பெயரை மறுக்காமல் தன் கணவன் மகனுக்கு சூட்டுவதை எண்ணி மனமகிழ்ந்து போனாள்..இப்படியே மூன்று மாதங்கள் ஓடி விட வளரி முல்லையிடம் பேச வந்தான்..
அன்று மாலை தோட்டதில் அமர்ந்திருந்தவளின் அருகே அமர்ந்து"முல்லை"என அழைத்தான்..
அவனை திரும்பி பார்த்தவள்"சொல்லு வளரி..ஏன் ஒரு மாறி இருக்க"..
"இல்ல நா என் நாட்டுக்கு போலாம்னு இருக்கேன்"...
அவள் முகத்தில் அதிர்ச்சியா இல்லை கவலையா"ஓ ஆமால வந்து ரொம்ப நாளாச்சுல..ஆனா இப்பவே போணுமா"..
"ம்ம்ம் அங்க பிஸ்னஸ் இருக்கு.. சோ போய்த்தான் ஆகணும்..இங்க நா வந்த வேல முடிஞ்சு முல்லை. "
"வளரி நா உன்கிட்ட ஒன்னு கேப்பேன் உண்மைய சொல்லுவியா"..
"ம்ம்"
"நீ லவ் பண்ற பொண்ணு யாரு..அவள பத்தி சொல்லு.. என்ன அவ்ளோ ஷாக் ஆகுற..எனக்கு தெரியும்டா.. உன் கண்னே சொல்லுது.. சொல்லு அவ எப்டி பட்ட பொண்ணு"..
"அவ எப்டி பட்ட பொண்ணு..ம்ம்ம சின்ன பாட்டில்ல அடைச்சு வைக்குற புயல் அவ..குடிச்சாலும் சாகாத விஷம் அவ..பாத்தாலே பரவசம் தர்ற சந்தோசம் அவ.. மொத்ததுல அவ ஒரு மேஜிக்.."
"இப்ப அவ எங்க இருக்குற"
"ம்ம் இங்க".. வளரி தன் நெஞ்சை தொட்டு காட்டினான்..அவனை முறைத்தவள்
"ஒழுங்கா சொல்லு.. உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதாச்சும் சண்டையா நா வேணா பேசி பாக்கவா"
"ம்ஹும் அவளுக்கு மன்னிக்கவே முடியாத ஒரு தப்ப பண்ணிட்டேன்.. அவ அத மன்னிக்கவே மாட்டா"
"நீ எப்டி சொல்லலாம் நீ அவ கிட்ட மன்னிப்பு கேட்டியா"
"இல்ல..சில நேரத்துல நாம கேக்குற மன்னிப்பு நமக்கு வரம் அதே நேரத்துல சில பேர் கிட்ட நாம கேக்குற மன்னிப்பு சாபம்.. அவ கிட்ட சாபம் வாங்க எனக்கு பிடிக்கல முல்லை.."..
"இல்ல வளரி"
"ப்ச் அத விடு எதுக்கு சின்ன பாப்பாக்கு என்ன பேரு வைக்க சொன்ன"
"நீயும் பாரியும் இல்லேன்னா நானும் இல்ல பாப்பாவும் இல்ல..சோ ஒரு பிள்ளைக்கு அவன் பேரு வெச்சான் இன்னோனுக்கு நீ வெச்ச"..
"முல்லை நா இத்தன நாள்ல உன்ன ஏதாச்சும் ஹர்ட் பண்ணிருந்தா என்ன மன்னிச்சுரு டா.."
"ஹேய் அடி வாங்க போற.. நீ என்ன பண்ண. சொல்ல போனா எனக்கு நல்லது தான் பண்ணிருக்க தெரியுமா.. நீ வரரதுக்கு முன்னாடி எனக்கு ரொம்ப தாழ்வுணர்ச்சியா இருக்கும்.. என்னமோ நா குண்டா அசிங்கமா இருக்கேன் பாரி அழகா இருக்கான் நா அவனுக்கு மேட்ச் இல்லனு தோணும்.. ஆனா நீ வந்ததுக்கு அப்றம் அவன் என்கிட்ட ரொம்ப கிளோஸ் ஆயிட்டான்..அவனோட அன்பால தான் நா உண்மைய புரிஞ்சிக்கிட்டேன்.. அதுக்கு உனக்கும் நன்றி சொல்லணும்.. ரியோ என்னோட பெஸ்ட் ஹாஃப்..அவனுக்கு தெரியாத விஷயமே இல்லனு சொல்லலாம் ஆனா கொஞ்ச நாளா அவன விட்டு தள்ளி வந்த பீல்..என் மனசுல இருந்தத யார் கிட்ட ஷேர் பண்றதுனு நா இருந்தப்போ நீ வந்த..எனக்காக பாத்து பாத்து செஞ்ச. கடைசில உன் உயிர கொடுக்கவும் துணிஞ்சிட்ட..இத உயிர் இருக்குற வர மறக்க மாட்டேன் வளரி.."..
"ஹேய் அதெல்லாம் ஒன்னும் இல்ல..நீ சந்தோசமா இருந்தாலே போதும் அப்ரோ இன்னொரு விஷயம்.."
"என்ன வளரி"
"நா இன்னும் ரெண்டு நாளுல கிளம்ப போறேன் அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு ஷாக் இருக்கு"..
"என்னது".. அவள் குரல் உள்ளே போயிருந்தது..
"நாளைக்கு சொல்றேன்"...அவன் பேச்சை முடித்து எழுந்து சென்று விட சில நாட்களுக்கு பிறகு மனம் கனத்த உணர்வு முல்லைக்கு.. எங்கோ இருந்து வந்தவன் தான் ஆனால் அவன் அவள் வாழ்வில் இன்றியமையாத ஒருவனாக ஆகி விட்டானே திடீரென அவனது பிரிவு வலியை தந்தது..கண்மூடி புல் தரையில் அமர்ந்திருந்தவள் விழிகளில் அவனுக்கான கண்ணீர்.. இதை மறைவிலிருந்து பார்த்து கொண்டிருந்தவன் கண்களிலும் கண்ணீர்..
கமலிக்கு வளரி கிளம்புவது ஆனந்தமாகவும் அதை விட வருத்தமாகவும் இருந்தது..முல்லை மேல் அவன் கொண்ட காதல் கமலியை உறுத்தி கொண்டே இருந்தது..ஆனாலும் அவனும் அவர் மகன் தானே அவன் மீண்டும் பிரிந்து செல்வது வலித்தது.. இருப்பினும் எங்கோ இருந்து அவன் வாழ்வு சிறக்கட்டும் இங்கே தம்பியின் வாழ்வும் மலரட்டும் என்று அமைதியாக இந்த பயணத்தை ஏற்று கொண்டார்..பாரி ஒன்றுமே பேசவில்லை..அவன் மனம் ஆழ்கடலை போல அமைதியாக இருந்தது..இரவு அவனிடம் முல்லைதான் புலம்பி தள்ளினாள்..
"அவன் போறான் பாரி.. என்னால தாங்கவே முடில.. எனக்கு புரியுது அவன் நம்ம கூடவே இருக்க முடியாதுன்னு ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு.. ரியோ என் பக்கத்துல இருக்கான் ஆனா இவன் கண்காணாத ஊருக்கு போறான்"
"அடியே லட்டு அது அவன் நாடுடி.. அவனோட எல்லாமே அங்க தான் இருக்கு.. அவன் என்ன கிரகம் விட்டு கிரகமா போறான்.. பேச முடியாம போக நாடு விட்டு நாடு தானே போறான் டெய்லி பேசலாம் நீ பீல் பண்ணாத ஓகே.."
"என்னவோ போங்க எனக்கு என்னமோ கஷ்டமா இருக்கு"..அவளை தோளில் சாய்த்து தலைகோதி தூங்க வைத்தான் பாரி..அவனுக்குமே மனதில் ஒரு கேள்வி.. வளரி அடுத்து செய்யப்போகும் காரியம் என்ன...
மறுநாள் காலையே வெளியே சென்று விட்டான் வளரி..அன்று பாரி ஓய்வில் இருந்தான்..வளரி என்ன செய்ய போகிறான் என்ற கேள்வி உள்ளுக்குள் ஓடி கொண்டே இருந்தது..அதற்காகவே வீட்டில் இருந்தான்... முல்லை அவளது இருமகள்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தாள்.. கமலி காலையில் கோவிலுக்கு போனவர் தான் இன்னும் வரவில்லை..பாரியின் கண்கள் வாசலையே நோக்கியது.. கமலியும் வந்து விட்டார்.இன்னும் வளரி வரவில்லை..வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை.. கமலியின் இதயம் எகிறி குதித்தது...உள்ளே வந்தான் வளரி வேந்தன் வந்தவனை வாயை பிளந்து பார்த்தனர் அனைவரும்..
ஏனெனில் அவன் கரம் ஒரு பூச்செண்டை தாங்கிருந்தது..ஆறு மாதம் பெண் குழந்தை அது..அழகான மஞ்சள் நிற மேல் சட்டையும் கருப்பு நிற மினி ஸ்கிர்ட் போட்டு கண்ணை பறிக்கும் அழகுடன் அவர்களை பார்த்து சிரித்தது..
"வளரி யாரு இந்த பாப்பா".. முல்லை தான் முதலில் கேள்வி கேட்டாள்..
"என் பொண்ணு முல்லை"..நிதானமாக வளரி கூற மூவருமே அதிர்ந்து போயினர்..
"டேய் உனக்குத்தான் கல்யாணமே ஆகளையே"..பாரி தாங்க முடியாமல் கேட்டே விட்டான்..
"கல்யாணம் ஆனாதான் பேபி வருமா.. இவ என் பொண்ணு தான்..என்ன பெத்த அம்மா அப்பா எந்த ஹோம்ல என்ன வேணாம்னு போட்டுட்டு போனாங்களோ அதே ஹோம்ல தான் இப்ப இவளோட அம்மா அப்பா இவள போட்டுட்டு போயிருக்காங்க..எனக்குன்னு வாழ்க்கைல இனிமே இவ போதும்..இவளுக்காக நா என் வாழ்க்கைய வாழ போறேன் இவள சட்டப்படி தத்து எடுத்துட்டேன்"...கமலியால் அவனை என்ன சொல்ல முடியும்..முல்லைக்கு வளரியின் கதை முன்பே தெரியும்.. ஆனால் அவனின் உண்மையான தாய் தந்தை யாரென அறியாள்..எனவே சிரித்த முகத்துடன் அந்த குழந்தையை தூக்கி கொண்டாள்..
அதும் அவளிடம் வந்து அவளின் சுருட்டை முடியை பிடித்து இழுத்து விளையாடியது.."வளரி பாப்பா ரொம்ப அழகா இருக்கா பேரு என்ன"..
"அவ பேரு மான்வி"..
"ஐ பாரேன் ஊர்வி சுதர்வி இப்போ மான்வி.. பேரு ரொம்ப அழகா இருக்குல்ல பாரி.. இந்த பாப்பா பாரேன் ஐயோ என்ன அழகு கொழுகொழுனு லட்டு மாறி இருக்கா..ஹெலோ மான்வி குட்டி என்ன பாக்குறீங்க நீங்க..மான்வி குட்டிக்கு என்ன வேணும் இந்த தோடு வேணுமா..இது பெரியாளு போடுறது நா உங்களுக்கு வேற தரேன் ஓகேவா.. உம்ம்மா..வளரி பாப்பா சாப்பிடாலா"
"இல்ல முல்லை"..
"ஓகே நீ சாப்ட வா நா பாப்பாக்கு சாப்பாடு ரெடி பண்றேன்"...கஞ்சியை நன்கு வேகவைத்து அதனுடன் சிவப்பு முள்ளங்கி உருளைக்கிழங்கு பட்டாணி சிறியதாக நறுக்கிய கோழி சதைகள் சேர்த்து வேகவைத்து அதை ப்ளன்ட் செய்து குழந்தைக்கு ஊட்டினாள் முல்லை..அதும் அவளிடம் ஆ ஊ என கதை பேசியபடி உண்டது.. இதையெல்லாம் தன் மனதில் சேகரித்தான் வளரி..
அவனுக்கே ஆச்சர்யம் முல்லை எப்படி அவன் முடிவை ஏற்று கொண்டாள் என்று..மான்வியை தன் குழந்தை போலவே பாவித்து பாலூட்டி உறங்க வைத்தாள் முல்லை.."டேய் நீ என்ன பண்ணிட்டு இருக்கானு தெரியுதா"..மனம் பொறுக்காமல் அண்ணனை கேட்டான் பாரி..
"ம்ம் நல்லாவே தெரியுது.. "
"அப்ப உனக்கு கல்யாணம் ஆனா உங்களுக்கு ஒரு குழந்தை பொறக்கும் அப்போ இந்த குழந்தையோட நிலைம"..கமலியும் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..
"எனக்கு கல்யாணமா அதெல்லாம் கனவுல கூட நடக்காது..நா மனசார விரும்புனது ஒருத்திய தான்..அவள தவிர என் மனசு யாரையும் ஏத்துக்க மாட்டுது..கல்யாணம்னு ஒன்னு பண்ணி ஏன் ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்கனும்..அதான் நல்லா யோசிச்சு இந்த முடிவுக்கு வந்தேன்.. இது என்னோட முடிவு இதுல யாருக்கு விருப்பம்னு நா கேக்கல.."
"உன் அம்மா அப்பா இத ஏத்துப்பாங்களா"
"கண்டிப்பா..என் முடிவுல முடிவு சொல்ல யாருக்கும் உரிம இல்ல..மான்வி என் பொண்ணு..அவ்ளோதான்.. நாளைக்கு என் நாட்டுக்கு கெளம்புறேன்"...வளரி அதோடு எழுந்து முல்லையை பார்க்க சென்றான்.. கமலிக்கு இதில் துளியும் விருப்பமில்லை ஆனாலும் அவரால் என்ன செய்ய முடியும்.. கலங்கி போய் பாரியை பார்த்தார்.. அவன் அவருக்கு சமாதானம் சொல்லி அமைதி படுத்தினான்..
முல்லை மான்வியை உறங்க வைத்து கொண்டிருந்தாள்..மான்வி பார்க்க முல்லை போலவே இருந்தாள்.. ஜாடையில் அல்ல ஆனால் அவளிடம் இருந்து ஏதோ ஒன்று மான்வியிடமும் இருந்தது..இருவரையும் வெளியே இருந்து பார்த்த வளரி உள்ளே வந்தான்..அவனை கண்ட முல்லை"வளரி மான்வி ரொம்ப அழகா இருக்கால.."
"ம்ம்ம்"
"நீ ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு நா கேக்க மாட்டேன்.. இது உன்னோட முடிவு.. ஆனா மான்விக்கு ஒரு அம்மா வேணும்..அம்மா இல்லாம ஒரு குழந்தை வளந்தா அது எவ்ளோ கஷ்டம்னு எனக்கும் தெரியும்.. "
"அப்டியா ஆனா நீ உன் அம்மாவ பீல் பண்ணாதே இல்லனு சொன்ன"
"ஏன்னா எனக்கு என் அண்ணன் இருந்தான்.. அம்மாவா அப்பாவா எல்லாமுமா அவன் இருந்தான்"
"அதே மாறித்தான் முல்லை.. என் பொண்ணுக்கு அம்மாவா அப்பாவா எல்லாமுமா நானே இருப்பேன்..."நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் முல்லை...அவன் கண்களில் ஒரு தீர்க்கம் தெரிந்தது.. அதற்கு மேல் எந்த வாதமும் அவர்களிடம் இல்லை..சாதாரணமாக பேசி கொண்டே அவனுக்கு பேக் செய்ய உதவினாள்..
குழந்தையை எப்படி கையாளுவது என்று கற்று தந்தாள்...தினமும் அவளிடம் வீடியோ அழைப்பு பேச வேண்டுமென கட்டளை போட்டாள்..அவள் என்னதான் இயல்பாக பேசினாலும் அவனை பிரியும் வலி லேசான கண்ணீராக தேங்கி நின்றது..அதை அவனும் உணர்ந்து தான் இருந்தான்..மறுநாள் காலை அவனுக்காக அவளே சமைத்தாள்..கமலிக்கு ஒரு பக்கம் வருத்தமாகவும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. எப்படியோ பாரி முல்லை வாழ்க்கை சீராகி விட்டது...வளரி அவன் வாழ்வை அவனே முடிவு செய்து கொண்டான்..ஆனாலும் தாய் மனம் அவனும் எங்கே இருந்தாலும் நலமோடு வாழ வேண்டுமென பிரார்த்தனை செய்த்தது..
வளரியின் கண்கள் அன்று முழுவதும் முல்லையை சுற்றியே இருந்தது..அவளின் கவலையே மான்வி தான்..கை குழந்தையை இவன் எப்படி தனியாக வளர்ப்பான் என்று..ஆனால் அந்த கவலை கூட மறைந்து போயிற்று..ஏனெனில் வளரி மான்வியை பார்க்கும் பார்வையில் அன்னையின் கனிவும் தூக்கும் போது தந்தையின் பரிவும் சேர்ந்தே இருந்தது..
இரவு விமானம்..மாலையே வளரி அனைவரிடமும் விடைபெற்றான்..பாரியின் வீட்டில் அன்பு குடும்பம் ரியோ குடும்பம் கண்ணா குடும்பமென ஒரு கூட்டமே இருந்தது.. அனைவரிடமும் பொதுவாக விடைபெற்றான் வளரி..அனைவருக்குமே ஒரு நிம்மதி உள்ளே..அவன் கிளம்புவதில் இப்போது சந்தோசமே..கூடவே சிறு வருத்தமும் கூட..அவன் இல்லையெனில் முல்லை இல்லையே..வளரி கமலியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்..கரம் நடுங்க அவன் முகவடிவரிவை அளந்தார் கமலி..நல்லபடியா போய்ட்டு வா ராசா.. ரொம்ப நாளைக்கு பிறகு கமலியின் பாசமான குரல்..சிறு சிரிப்பையே பதிலாக கொடுத்தான்..அவனுடன் பாரியின் முல்லையும் தங்கள் இரு குழந்தைகளுடன் ஏர்போர்ட் சென்றனர்..
காரில் கூட யாரும் அதுவும் பேசவில்லை..ஏர்போர்ட்டில் முல்லை குழந்தைகளை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி கொண்டு சென்றாள்..பாரி வளரியின் உடமைகளை தள்ளி எடுத்து கொண்டான்.. வளரி கையில் மான்வியை ஏந்தி உள்ளே சென்றான்.. விமானம் கிளம்ப சில நிமிடங்களே இருந்தது..செக்கிங் முடிந்து பாரி முல்லை இருவரையும் நோக்கி வந்தான்..
முல்லையிடம் மான்வியை கொடுத்து விட்டு பாரியின் தோளில் கரம் போட்டு அவனை தனியே அழைத்து சென்றான்..முல்லை மான்வியை மடியில் கிடத்தி கொண்டு அமர்ந்திருந்தாள்..சற்று தள்ளி வந்த வளரி"என்ன பாரி ரொம்ப யோசிக்குற..என்னடா இவன் வந்தான்..நம்ம பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொன்னான்..நம்மளையே பிளாக்மெயில் பண்ணி நம்ம கூடவே இருந்து இப்போ ஒரு குழந்தைய தத்து எடுத்துட்டு வந்த வழியே போறான்னு தோணுதா..எல்லோரும் உன்ன ஏசுனாங்க ஏன்டா இவன நடு வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு ஆனா நீ அதெல்லாம் காதுல போட்டுக்கள..இப்போ நா கேக்குறேன் எந்த தைரியத்துல என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போன..ஆபரேஷன் செஞ்சு என் அடையாளத்த மாத்துன தைரியமா இல்ல உன் பொண்டாட்டி மேல இருந்த நம்பிக்கையா"...
"நம்பிக்கை தான் என் பொண்டாட்டி மேல மட்டும் இல்ல என்கூட பத்து மாதம் அம்மா வயித்துல ஒண்ணா இருந்த அண்ணன் மேலயும் தான்..முதல்ல நீ வீட்டுக்கு வந்தப்போ உன் கண்ணுல உண்மையான காதல் தெரிஞ்சிது..உன் அடையாளத்த மாத்துனது என் சுயநலம்னு இருந்தாலும் அதனால உனக்கும் நஷ்டம் இல்லையே..நீ வீட்டுக்கு கூட்டிட்டு போனு சொன்னப்போ உன் மிரட்டலுக்கு பயந்து கூட்டிட்டு போனேனு நெனச்சியா..இல்ல..எனக்கு முல்லை முக்கியம் தான் அதே மாறி என் அண்ணனும் முக்கியம்..அவ மேல உனக்கு இருக்குற காதல் கிட்ட இருந்து இப்போ உன்னயும் காப்பாத்திட்டேன் அவளயும் காப்பாத்திட்டேன்..இது உனக்கு புரியணும்னு தான் நா வாயே தொறக்காம இருந்தேன்"
"வாவ் மாஸ்டர் ப்ளான் தான்.. நீ சொல்றது உண்ம தான்..நீ மட்டும் ஆபரேஷன் செஞ்சு என் அடையாளத்த மாத்தலன்னா எனக்கு முல்லை கூட பழகுற வாய்ப்பு கெடச்சிருக்குமா இல்ல என்னைக்கோ ஒருநாள் அவளுக்கு செய்ய இருந்த தப்புக்கு அவ உயிர காப்பாத்தி கைமாறு செய்யத்தான் சான்ஸ் கெடச்சிருக்குமா சொல்லு..அவளுக்கு நா யாருன்னே தெரியாது.. அவள பொருத்த வர நா உன் ஃப்ரன்ட்டு சோ அவளுக்கும் ஃப்ரண்டு அவளோட ரியோ மாறி..ஆனா அவ மனசுல இவ்ளோ ஷார்ட் டைம்ல எனக்கு கொடுத்துருக்குற இடம் ரொம்ப பெருசு..அவ அதுக்கு பேரு நட்புன்னு வெச்சிருக்கா.. நா காதல்னு அத அசிங்கப்படுத்த விரும்பல..அதே சமயம் நட்புனு சொல்லி அந்த சுத்தமா ரிலேஷன்ஷிப்ப கேவலபடுத்தவும் பிடிக்கல..இது ரெண்டுத்துக்கும் மேலான ஒரு உறவு..இப்ப என் மனசுல அவ மேல காதல் இல்ல..நட்பும் இல்ல.. எல்லாத்தையும் கடந்த ஒரு உணர்வு போராட்டம் அவ..டேய் தம்பி உன் காதல் கடைசி வர நின்னு ஜெய்ச்சிடுச்சு டா..உன் காதலுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்ல..இன்னைக்கு முல்லைனு ஒருத்தி இருக்கானா அது உன்னால மட்டும் தான்.. அவள எப்பவும் சந்தோசமா வெச்சிக்கோ.. அப்றம் நா இனிமே இங்க வர மாட்டேன் அவ கூட எந்த விதத்துலயும் காண்டாக்ட் வெச்சிக்க மாட்டேன் ஏன்னா இந்த மனசு ஒரு மானங்கெட்டது மாறினாலும் மாறிரும்.. அவ கிட்ட சொல்லாத அவள பாத்துக்கோ".. பாரிக்கு லேசாக கண்கள் கலங்கியது ஒரு நிமிடம் வளரியை கண்டான் மறுநொடி அவனை அணைத்து கொண்டான்..
ஒரு புன்னகை அவர்கள் மனக்கசப்பை மாற்றியது..இருவரும் முல்லையை நோக்கி வந்தனர்..இவர்களை கண்டதும் அவள் எழுந்து நின்றாள்.இன்னும் சில நிமிடங்களே வளரி கிளம்ப உள்ளான்..மன பாரம் முல்லையை பேச விடவில்லை..வளரிக்கும் அதே நிலைதான்..ஆனால் அவளின் கலங்கும் கண்களுக்கு பதில் கூற விரும்பினான்..அவள் கண்களை மட்டுமே பார்த்து"முல்லை உனக்கு நா ஹெல்ப் பண்ணேன் உன்ன காப்பாத்துனனு சொன்ன..உண்ம அது இல்ல.. உண்மையில இன்னைக்கு நா உயிரோட இருக்க அத விட மனுசனா இருக்க காரணமே நீதான்..நீ எப்பவும் சந்தோசமா இருக்கனும்..உன்னால நா புதுசா பொறந்த மாறி பீல் பண்றேன்"...அவனுக்குமே தொண்டையை அடைத்த வேதனையை விழுங்கி கொண்டான் இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாலும் அழுது விடுவான் போல..
முல்லைக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது..அவள் கண்களையே பார்த்து நா பாடுன உனக்கு புடிக்கும்னு சொல்லுவியே..உனக்காக ஒரு பாட்டு.. என்ன மறந்துராத முல்லை...
காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தால்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வேனே
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே...
அவள் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட அவள் நெற்றியோடு தன் நெற்றி வைத்து முட்டியபடியே சிரித்தான்..மான்வியை வாங்கி கொண்டான்..ஊர்வி சுதர்வியை தொட்டு தடவி கண்களாலே விடை பெற்றான் வளரி வேந்தன் மீண்டும் விஷானாக..தங்கள் இரு குழந்தைகளோடு பாரி வேந்தனும் முல்லை கொடியும் அவனுக்கு விடை கொடுத்தனர்..அந்த பறக்கும் இயந்திர பறவையின் உள்ளே அமர்ந்திருந்தான் வளரி..சீட் பெல்டை போட்டு கொண்டான்.. இன்னும் சில கணங்களே அவனுக்கும் தாய் நாட்டிற்குமான தொடர்பு அறுந்து விடும் ஆனால் அதன் வேரானது அவன் மனமெங்கிலும் வியாபித்திருந்தது..
கண்களை மூடி ஒரு முழு நிமிடம் அந்த இனிய நினைவுகளை எண்ணி பார்த்தான்...அவன் வாழ்வு புத்தகத்தில் முல்லை கொடி அழியாத இடம் பெற்றிருந்தாள்..அரிதான வரம் போல கிடைத்தவளை தனது அவசர புத்தியினால் தொலைத்து விட்டான்..காதல் என்பது தேக உணர்ச்சியையும் தாண்டியது என அவன் புரிந்து வருவதற்குள் எல்லாமே கை மீறி விட்டது..ஆனாலும் வாழ்க்கை அவனுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தது அவன் தவறை உணர்வதற்கும் அதற்கு பிராயச்சித்தம் செய்வதற்கும் ஆனால் அதையும் தாண்டி இப்போது அவனுக்கு கிடைத்தது அவன் காதலித்த முல்லையின் பரிசுத்தமான அன்பு..கற்பனை கதைகளில் நாம் படித்திருக்கிறோம்..
ஃனிக்ஸ் என்ற பறவை தன் ஆயுள் நாட்கள் முடியும் தருவாயில் சூரியனை நோக்கி பறக்குமாம்..சூரிய நெருங்க நெருங்க அதன் வெப்ப கதிர்களால் அந்த பறவை கொஞ்சம் கொஞ்சமாக எறிந்து சாம்பலாகி விடுமாம்.. எறிந்த சாம்பல் திட்டுகளில் இருந்து ஒரு புழு உருவாகும்..அந்த புழுவே மீண்டும் ஃனிக்ஸ் பறவையாக மாறி தன் வாழ்நாளை இன்பமாக வாழுமாம்.. எப்படி அந்த பறவை எறிந்து விடுவோம் என அறிந்தும் சூரியனை நோக்கி பறந்ததோ அது போல தான் இந்த காதல் ஏற்கப்படாது என அறிந்தும் முல்லை கொடியை நோக்கி தன் மனதை செலுத்தினான் வளரி..
இன்று அவன் மனதில் காதல் இல்லை.. காமம் இல்லை..அனைத்தையும் கடந்த உணர்வு..எல்லா கேள்விக்கும் விடையளிக்க முடியாததை போல எல்லா உறவுக்கும் உணர்வுக்கும் பெயரில்லையே..விமானம் வானில் பறக்க தயாராக இருந்தது.. கண்களை மெல்ல திறந்தான்.. மான்வி தன் போட்டு கண்களை அகல விரித்து பொக்கை வாய் மலர சிரித்தாள்.. ஒரு நொடி அவள் சிரிப்பை கண்டான்.. மறுநொடி அவன் வலக்கரத்தில் முலையோடு குத்தி கொண்ட டாட்டூவை கண்டான்..லேசான சிரிப்பு அவன் இதழை வியாபித்திருந்தது..தன் மகளை நெஞ்சோடு அணைத்து அவன் பயணம் தொடர்ந்து..
கண்ணா இவன் வெண்பாவை மணந்தது காதல் கொண்டு அல்ல..நண்பனின் வேதனை போக்கவே..ரியோ என்ற ஒருவன் உருகி உருகி காதலித்த ஒரு பெண்ணை தான் கண்ணா திருமணம் செய்தான்..ஆனால் வெண்பாவின் மனதில் முதலும் கடைசியுமான கன்னி காதல் கண்ணாவே..அந்த காதல் தான் கண்ணாவை சுண்டி இழுத்தது..அந்த காதல் தான் அவளிடம் தன் அன்பை காட்ட வைத்தது..நிர்பந்தத்தின் பெயரில் ஆரம்பித்த உறவு இன்று நிர்மலமான வானம் போல அவர்கள் வாழ்வை அழகாகியது..
ரியோ உயிர் தோழியின் உயிருக்காக தன் வாழ்வின் அடித்தளமான காதலையே தியாகம் செய்தவன்..ஒருதலையாக காதலித்த பெண்ணின் வாழ்வு கூட ஒரு தீயவன் கையில் சிக்கிட கூடாதென விரும்பிய நல்லவன்..மனதார காதலித்த பெண்ணின் வாழ்வுக்கு வழி செய்த பின்னே தனக்கென்ற வாழ்வை கையிலெடுத்தவன்..கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்தாலும் சக்தியின் மெய் அன்பினை புரிந்து கொண்டவன்..அந்த சிவனின் சக்தியை போல இந்த சக்தியும் ரியோவின் ஆதி அந்தமுமாகி போனாள்..அவர்களின் காதலின் இனிய பரிசாக என்றும் விளங்குவான் சிவாஷன்..
அன்பு இவனை பற்றி என்ன கூறுவது..தாய் தகப்பனற்ற தங்கைக்கு தாயுமானவனாக மாறி தன் வாழ்வை அர்பணித்தவன்..அவளை என்றுமே ஒரு அண்ணனாக காத்து வந்தவன்..கிரேஸ் ஊரார் கண்ணுக்கு அவள் வேசியாக தெரியலாம் அவர்கள் அவள் உடலை பார்ப்பவர்கள்..ஆனால் அன்பு அவள் மனதில் கரைபவன்..மாற்றான் பேச்சிற்கு மனம் சாய்க்காமல் மனம் விரும்பியவளை மனமார ஏற்று அவள் தாய்மை அடைய முடியா நிலையிலும் அவளை தன் காதலால் காத்து இன்று அவர்களின் உண்மை காதலே கர்ப்பத்தில் கனியாக உதித்தது..அன்பு கிரேஸ் மனம் போலவே அவர்கள் காதலும் பரிசுத்தமானது..
பாரிவேந்தன் பால்ய பருவத்தில் உண்டான ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறியது..முல்லை உண்மை புரியாமல் அவமானப்படுத்திய போதும் அவள் பிடிவாதமாக உண்மையை அறிய மறுக்கும் போதும் அவனுக்கு ஆத்திரம் வந்தது உண்மையே..ஆனால் தன்மானத்தை இழந்து அவளிடம் சென்று நிற்க அவன் விரும்பவில்லை..எந்த காதலிலும் உயிரை கூட இழக்கலாம் ஆனால் தன்மானத்தை இழக்கும் நிலை வரவே கூடாது..அதற்கு பெயர் காதலே கிடையாது..சந்தர்ப்பம் அவன் வசமாகிய போது முல்லையே அவனை தேடி வந்தாள்..அவள் மேல் கொண்ட காதலால் அவளை நிர்பந்தத்தில் நிறுத்தி மணந்து கொண்டான்..
ஆனால் அது கூட அவள் மனதை அறிந்து கொண்டு தான்..அவனும் அறிவான் அவனை பார்க்கும் போது நாணத்தில் நனையும் கண்களை.ஆத்திரத்தில் காதலை உணர முல்லை மறுத்தாலும் மீண்டும் மீண்டும் அவளை தன் காதலால் கட்டி போட்டு அந்த காதலை உணர வைக்க போராடினான் பாரி..அவளின் தாழ்வுணர்வை உடைத்து அவள் உணர்வுகளையும் காதலித்து அவளை அவளிடமிருந்தே மீட்டு எடுத்தான்..
காரில் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர் பாரியும் முல்லையும்..குழந்தைகள் இருவரும் பின்னிருக்கையில் குட்டி தலையணைகள் சூழ படுத்து கொண்டிருந்தனர்..காரில் குழந்தைகளின் மழலையே கேட்டு கொண்டிருந்தது..அதை கலைத்தவன் பாரியே
"என்ன முல்லை..என்ன யோசன"
"ஒன்னும் இல்ல..நம்மல பத்தி தான்..ஏன் பாரி நாமளும் இவங்கள மாறி தானே பொறந்து வளந்தோம்..இத்தன வயசுல நாம எவ்ளோ சிரிச்சு வலி வேதனை கண்ணீர் கசப்புனு எவ்ளோ தாண்டி வந்துட்டோம்.."
"ம்ம்ம்"
"என்ன சுத்தி இருக்குற எதுவுமே உண்ம இல்ல..என் அண்ணன் அவருக்குனு ஒரு குடும்பம் என் ரியோ அவனுக்கும் ஒரு குடும்பம் இப்போ வளரி அவனும் போய்டான்..எதுவுமே நிரந்தம் இல்ல"..
"எதுவுமே இல்லையா முல்லை"
"ஒன்னே ஒன்ன தவிர"
"என்னடி அது"
"நீ...இதோ நம்ம பொண்ணுங்க கூட ஒரு கட்டதுல அவங்க குடும்பத்தோட போயிருவாங்க..ஆனா நீ அப்டி இல்ல..உன் காதல் அப்டி இல்ல..எனக்காக எவ்ளோ கஷ்டபட்ருக்க..எவ்ளோ போராடிருக்க..நா உன்ன புரிஞ்சிக்காம ரொம்ப காயப்படுத்திருக்கேன்..அதயெல்லாம் தாண்டி எனக்காக என்கிட்டயே போறாடி என்னையே மீட்டு கொடுத்திருக்க பாரி..எல்லாமே என் மேல இருக்குற காதல் தானே..நம்ம பொண்ணுங்க கிட்ட சொல்லி வளக்கணும் உங்க அப்பாவ மாறி ஒருத்தன புடிங்கடின்னு"..
"ஒருத்தனையா..ரெண்டு பேரு எப்டி டி ஒருத்தன கட்டுவாங்க"
"கொன்றுவேன் உன்ன..வாய பாரு எரும.."
"ஹேய் சும்மாடி"அவனை இரண்டு அடி அடித்து விட்டு வெளியே பார்த்தாள் முல்லை..அப்போது அவர்கள் படித்த பள்ளியை கடந்து கொண்டிருந்தார்கள்..கண்களில் ஒரு எதிர்பார்போடும் காதலோடும் அவனை பார்க்க அவனோ சாலையை பார்த்து கொண்டே ஸ்டேரிங்கில் விரல்களால் தாளம் போட்டு
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா
முல்லை அவனை காதலோடு பார்த்து சிரிக்க பாரியும் அவளை அதே காதலோடு பார்க்க பின் இருக்கையில் அவர்களின் குட்டி இளவரசிகள் இருவரும் அவர்களை பார்த்து அழகாய் சிரித்தனர்..பாரி வேந்தனின் முல்லை கொடி என்றுமே அவனுக்கு மட்டும் இஞ்சி இடுப்பழகி தான்..
அகலப்படைத்த உடல்
உனதென்று
உள்ளூள்
நீ கொள்ளும் உணர்வு?
வெறும் பொய்யுணர்வு
என்னுள் எப்பொழுதும்
எழில் கொள்ளும் உன்
உருவம் அகலமல்ல
அவ்வளவும் அன்பு....
சுபம்....
Wowwww Semmmaaa ka awesome
ReplyDeleteTq dr
DeleteSemma sago
ReplyDeleteTq sagi
Deleteஅருமையான படைப்பு சூப்பர் சூப்பர்
ReplyDeleteTq sagi
DeleteNice story....
ReplyDeleteTq sagi💕
Delete