இஞ்சி இடையழகி 11


ரியோ கேள்விகளால் கண்ணாவை துளைத்தெடுத்தான்..அவனை சமாளிப்பதே பெரும் பாடாக இருக்க ஒரு புறம் நண்பனை நினைத்து கவலை கொண்டான் கண்ணா..ஏதேதோ கூறியும் சந்தேக பார்வை பார்த்தவனை இறுதியில் முல்லைக்கு ஆபத்து என்றதும் அவனை நகர சொல்லிவிட்டு தானே காரை ஓட்டினான் அசுர வேகத்தில்.. 

முல்லைக்கு தொடர்பு கொண்டால் அவள் எடுக்கவில்லை அதுவே காரின் வேகத்தை கூட்ட உயிரோடு ஊர் போய் சேருவோமா என்ற பயத்தில் வந்த சிறுநீரையும் அடக்கி கொண்டு ஒரு நிமிடம் கூட கண் அசராமல் வந்து கொண்டிருந்தான் கண்ணா.. இடையிடையே பாரி வேறு எங்கு உள்ளீர்கள் என கண்ணாவின் உயிரை எடுக்க ஒருவழியாக ஊட்டி வந்து உயிரோடு சேர்க்கப்பட்டான் கண்ணா..காரிலிருந்து இறங்கிய ரியோ முல்லையை காண வீட்டினுள் ஓடினான்.. 

அங்கே பொட்டு உறக்கம் இல்லாமல் மூடிய கதவின் அருகே கீழே சரிந்து கிடந்தான் பாரி.. அவனது அயர்ந்த தோற்றமே தோழியின் நிலையை பயங்கரப்படுத்த பாரியின் சட்டையை பற்றி தூக்கி"டேய் எங்கடா முல்லை அவள என்ன பண்ண..அவளுக்கு மட்டும் ஏதாச்சும் ஆனுச்சு"...அவனை தடுக்க பாரி முயலவில்லை..ரியோவின் பின்னோடே வந்த கண்ணா தான் பாய்ந்து வந்து"டேய் கைய எட்றா மொத..அவன் ஒன்னும் பண்ணல முல்லை இப்டி இருக்க காரணமே நீதான்டா"... 

பாரியின் உடையில் இருந்து நழுவியது கரங்கள்.."என்.. என்னாலையா".. 

"ஆமாடா உன்னால தான்.. டேய் ரியோ உனக்கு சக்தின்னு ஏதாச்சும் பொண்ண தெரியுமா".. 

"சக்தியா சக்தி சக்தி ஆமா என்கூட காலேஜ்ல ஒருத்தி படிச்சா இப்ப ஏன் அது"... 

"அவள என்னடா பண்ணி தொலச்ச"

"ஐயோ மச்சான் நா என்னத்த அவள பண்ணேன்..அவ தான் என்ன லவ் பண்றேன்னு என் பின்னாடியே சுத்துனா ஆனா நா உன் தங்கச்சிய தானே லவ் பண்றேன் அத தா மொத சொன்னேன் ஆனா அவ கேக்கல.. திரும்ப திரும்ப டார்ச்சர் பண்ண வேற வழியே இல்லாம அவ குண்டு அசிங்கமுன்னு சொல்லி துரத்தி விட்டேன்... "

"நல்லா தொறதுன போ..அவளோட அக்கா இங்க பேயா வந்து உசுர வாங்குறா..சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்த மாறி என் பொண்டாட்டி குந்தாணி அந்த பேய ரிலீஸ் பண்ணி இப்ப அது இரக்கமே இல்லாம அவ மேலயே ஏறி கிட்டு ஆடுது..டேய் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ அந்த பேயிகிட்ட இருந்து என் பொண்டாட்டிய ரிலீஸ் பண்ற"... 

"மச்சான் உன் பொண்டாட்டி என்ன புது படமா ரிலீஸ் பண்றதுக்கு"..

பளார்

கன்னத்தை தாங்கி கொண்டு கண்ணா விழிக்க "வாய தொறந்த கொன்றுவேன்..டேய் என்னடா என் பொண்டாட்டிய அதுகிட்ட இருந்து உன்னால தா காப்பாத்த முடியும்"..

"நீங்க சொல்றதே புரில சக்திக்கு அக்கா இருக்குனு தெரியும் சொல்ல போனா அக்கா மட்டும் தான் இருக்கு..ஆனா அவ எதுக்கு நம்ம முல்லை மேல ஏறணும்"..பாரி நடந்த அனைத்தையும் ரியோவிடம் சொல்ல ரியோவால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..

வெண்பாவை பிரிந்து அந்த சக்தியை மணப்பதா நினைக்கும் போதே நெஞ்சை அறுக்கும் வேதனை..ஆனாலும் முதலில் தோழியே சிந்தையை நிறைக்க கதவை திறக்க சென்றான்..சடாரென்று கதவு தானாக திறந்தது..ரியோவின் கை கதவிற்கு இரண்டு இன்ச் இடைவெளியில் நிற்க கதவு எப்படி திறந்தது..ஆராய்ச்சி செய்ய நேரமில்லாமல் உள்ளே செல்ல அவனை தள்ளி கொண்டு பாரி நுழைந்தான்.
முல்லை முல்லை என்று அவன் அறை முழுவதும் தேட அங்கே அவள் இல்லை..

"டேய் எங்கடா தங்கச்சி"..

"இங்க தாண்டா நேத்து அந்த பேய் வந்து கதவ சாத்துன்னுச்சு"..

"பேய் கதவ சாத்துன்னுச்சா..என்ன கதையா சொல்ற..தோ பாரு பாரி உனக்கு ஏற்கனவே முல்லைய புடிக்காது..எனக்கு என்னவோ நீதான் அவள ஏதோ பண்ணிட்டு இப்ப பேய் பிசாசுன்னு கத விடுற மாறி இருக்கு"..

"டேய் அவ என் பொண்டாட்டிடா நா போயி அவள"..

"ரொம்ப நடிக்காத உண்மைய சொல்லு முல்லை எங்க..மொத இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லு நீ நெஜமாவே பாரியா இல்ல வளறியா"...

"ரியோ நீ அவசர படுற நிதானமா பேசு மொத வா முல்லைய தேடலாம்"..

"அதான் உன் ஃப்ரண்ட்டு தொலைச்சிடானே"..அவர்கள் மூவரும் சண்டையிடும் போதே சொட்டு சொட்டாக மேலிருந்து ரத்தம் ஒழுக மெல்ல மூவரும் நிமிர்ந்து பார்க்க அங்கே முல்லை பல்லியை போல சுவரில் மேய்ந்து கொண்டிருந்தாள்..அவளின் பிறப்பிடத்தில் இருந்து தான் ரத்தம் ஒழுகியது..

அந்த நிலையில் முல்லையை கண்டதும் ரியோ ஆடி போய் விட்டான்..படத்தில் கூட பேயை காணாத தன் தோழி இப்போது பேய் போல ரூபத்தில்...கண்ணாவிற்கு பயத்தில் நெஞ்சே அடைத்தது ஆனாலும் சமாளித்து நண்பனை காண அங்கே உணர்ச்சியற்ற கண்களில் கண்ணீர் மட்டும் தங்கு தடையின்றி வழிய முல்லையை மட்டுமே பார்த்திருந்தான்..எத்துணை மிருதுவானவள்..இப்போது அவள் முகமே கோரமாய் அச்சுறுத்துகிறது..அதென்ன அவள் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் சொட்டுகிறது..ஒரு வேலை அவளுக்கு இன்று நாளோ?.. பெண் என்றால் பேயும் இறங்கும் இங்கே பேயே பெண்ணென்றால் என்ன சொல்வது..

முதலில் சுத்தகரித்த பாரி"சிவா தோ இவன் தான் ரியோ..வந்துட்டான் ப்ளீஸ் என் பொண்டாட்டிய விட்றேன்.."

"ஹாஹாஹா இவனா இவனா ரியோ என் தங்கச்சிய வேணாம்னு தூக்கி எரிஞ்ச ரியோ..அவ்ளோ ஆணவமாடா உனக்கு.."...

"யாரு யார தூக்கி எரிஞ்சது..நா வேற பொண்ண விரும்புறேன்னு சொல்லியும் பைத்தியம் மாறி அத நம்பாம திரும்ப திரும்ப என்னயே சுத்தி வந்தது உன் தங்கச்சி..அவள அவொய்ட் பண்ண தான் அன்னைக்கு அப்டி பேசினேன்..அதுக்கு அவ காலுல விழறேன் ப்ளீஸ் எங்க முல்லைய விட்ரு அவ பாவம் அவளால தானே உனக்கு விடுதல கெடச்சிது ப்ளீஸ் சிவா"...

"கெஞ்சுடா நல்லா கத்தி கதறி கெஞ்சு ஏன்டா இவளுக்கு ஒன்னுனா அழுந்து கெஞ்சுரியே அன்னைக்கு என் தங்கச்சி எப்டி கெஞ்சிருப்பா அப்போ எங்கடா போணுச்சி உன் புத்தி உன்னால தாண்டா எனக்கும் இந்த நெலம".. 

"தோ பாரு சிவா உன் பிரச்சனைய ஓரமா வெச்சிக்கோ என் பொண்டாட்டி மேல இருந்து ரத்தம் வருது அவளுக்கு என்ன அச்சோ இல்ல டேட்டானு தெரில நீயும் பொண்ணு தானே ஏண்டி என் பொண்டாட்டிய இப்டி பண்றே..உனக்கெல்லாம் நல்ல சாவே வரதுடி"...

"மச்சான் அவ ஆல்ரெடி செத்துட்டா டா பேய்க்கு போயி சாபம் கொடுக்குற..."..

"இப்ப செத்துட்ட அடுத்த ஜென்மத்துலயும் அல்பாயுசா சாவடி"..

"ஹாஹாஹா அடேய் உன் பொண்டாட்டி என் கிட்ட தான் இருக்கான்னு மறந்துடியா".. தன் தவறை உணர்ந்து 

"ப்ளீஸ் சிவா கொஞ்ச நேரம் என் பொண்டாட்டி உடம்ப விட்டு போ உனக்கு விடுதல கொடுத்தத நெனச்சு பாரு ப்ளீஸ்".. சிவா என்ன நினைத்தாளோ முல்லை உடலை விட்டு வெளியேறினால்.. சுவரில் பல்லியை போல ஒட்டி கொண்டிருந்தவள் திடீரன பிடிமானம் இன்றி விழ அவளை தன் மேல் தாங்கி கொண்டு கீழே சரிந்தான் பாரி..அவனும் ரியோவும் மாறி மாறி அழைத்தும் முல்லை கண் திறக்கவில்லை.. நாடியை பிடித்து பார்த்தான் பல்ஸ் குறைவாக இருந்தது.. உடலில் பலமே இல்லாமல் துவண்டிருந்தால் முல்லை.. 

முதலில் தாயாக மாறிய பாரி அவளை குளிப்பாட்ட தண்ணீர் பட்டதும் கண் திறந்தவள் பயத்தில் சிந்தை மறந்து அரற்ற பாரி அவளை ஒருவழியாக குளிப்பாட்டி உடை மாற்றி உணுவுட்டி மருந்து கொடுத்து உறங்க வைத்தான்.. அதுவரை யாரையும் அறியாமல் அறிந்தும் கொள்ளாமல் பயத்தில் ஒரே அலட்டல்.. ரியோ கண்ணீர் வடிப்பதை தவிர என்ன செய்வான்.. 

மருந்தின் வீரியத்தில் முல்லை உறங்க அடுத்து செய்வதை எண்ண தொடங்கினர்..ஒரு முடிவுடன் கண்ணாவும் பாரியும் கிளம்பி செல்ல பாரி முல்லையை மடியில் கிடத்தி கொண்டு அமர்ந்திருத்தான்.. 

அவனின் அருகில் அருவமாக நின்றிருந்த சிவாவிற்கு ஏக்கமாக இருந்தது.. தான் செய்த தவறு என்ன எதனால் பேயாக உலாவ நேரிட்டது.. இந்த முல்லை எவ்வளவு கொடுத்து வைத்தவள்..அவளும் குண்டு தானே ஆனால் அதை ஒரு குறையாக கூட எண்ணாமல் அவளை அவளுக்காகவே ஏற்று கொண்ட ஒருவன்.. தன் தங்கைக்கும் இம்மாதிரி வாழ்வு அமையுமானால்... 

அங்கே ரியோவும் கண்ணாவும் அக்கம் பக்கம் விசாரித்து சக்தியின் வீட்டை அடைந்தார்கள்..கதவை தட்டி நெடுநேரமாகியும் திறக்கப்படாமல் இருக்க அக்கம் பக்கம் சுற்றி பார்த்து விட்டு கதவு பூட்டை உடைத்தான் ரியோ..

"டேய் என்னடா பண்ற தனியா இருக்குற பொண்ணு வீட்டு கதவ ஒடைக்குறத எவனாச்சும் பாத்தானு வையு வெட்டு கன்போர்ம்.."

"ண்ணா பயந்து சாகாத உள்ளே சத்தமே காணோம் அவ இருக்காளா இல்லையானு தெரில நமக்கு யூஸ் ஆகுற மாறி ஏதாச்சும் இருக்கானு பாப்போம் வா"...

உள்ளே ரியோ நுழைய கண்ணா நடுங்கியபடி நுழைய அங்கே குளிர் காய்ச்சலில் தன்னிலை இழந்து கிடந்தாள் சக்தி..அவளை கண்டதும் திகைத்து போனான் ரியோ..எப்படி கலையாக இருந்தவள்..அந்த உப்பிய கன்னங்கள் எங்கே திராட்ச்சையாக உருளும் கண்கள் எங்கே கருத்து இளைத்து ஆளே பாதியாகி விட்டவளை காண்கையில் கொண்ட கோவம் பின்னால் சென்றது..

கண்ணா தான் அவளை மருத்துவமனைக்கு தூக்கி போவதை பற்றி கூற அவளை கையில் ஏந்தி கொண்டான் ரியோ..அப்போது தான் கவனித்தான் அவள் கையில் காணாமல் போன ரியோவின் வெள்ளி காப்பு..அது முல்லை அவனுக்கு பரிசளித்தது அதில் ரியோ என்று பொறிக்கப்பட்டிருக்கும்..கிரிக்கெட் விளையாடும் போது கழற்றி வைத்தது காணாமல் போன மாயம் இப்போது புரிந்தது..கூடவே அவளின் காதலும் ஆனால் தன் காதல்...

மருத்துவமனையில் தன் முன் நின்றவனை அதிர்ந்த விழிகளுடன் பார்த்திருந்தால் சக்தி..தன்னை மறுத்தவன் இன்று காப்பாற்ற காரணம் என்ன...அவளின் பார்வைக்கு பதில் கூறினான் கண்ணா..அவன் கூறியதை நம்ப முடியாமல் பார்த்தவளை"உண்மைதான் சக்தி நீ வரலன்னா எங்க முல்லை எங்களுக்கு கிடைக்க மாட்டா ப்ளீஸ் பழச மனசுல வெச்சுக்காம ஹெல்ப் பண்ணு"...

இதோ அவன் பேசுகிறான் வருடங்கள் கடந்தாலும் குரல் தான் மாறிடுமோ அவன் தான் அவனே தான் ரியோ சக்தியின் ரியோ..இல்லை அவன் வெண்பாவின் ரியோ..தன்னை காயபடுத்தி தூக்கி எறிந்த ரியோ..ஆனால் அவன் வேதனையோடு அவள் உதவி எதிர்நோக்கி நிற்கையில் உள்ளம் பதைபதைக்கிறது..

அவர்களோடு பாரி வீட்டிற்கு சென்றாள்..அங்கே இரவு தூங்காத காரணத்தால் சற்று கண் அயர்ந்திருந்தான் பாரி..கதவு தட்டும் சத்ததில் கண் திறந்தவன் விழிகள் மனையாளை கண்டு நிம்மதியுற்று கதவை திறந்தான்..பின் எழுந்து சென்று பார்த்தவன் பார்வை சக்தியை கண்டதும் கனிந்தது.சிவா சொன்னதை வைத்து பார்த்தால் அவள் சற்று பூசினார் போல் உடல்வாகு உடையவள் ஆனால் அந்த உடல் எங்கே என்புதோல் போர்த்திய உடம்பாய் இங்கே நிற்பவள் சக்தியா..உண்மையில் ரியோ மேல் இவள் கொண்ட காதல் ஆழமானால் என் தங்கையின் வாழ்க்கை..

யோசித்தபடி நின்றவனை குரலை செருமி நிகழ்வுக்கு கொண்டு வந்தான்.."முல்லை எப்டி இருக்கா மச்சான்..முல்லையா இருக்காளா இல்ல சக்தியா இருக்காளா"..

"அவ தூங்குறா டா"...எந்த நேரத்தில் கண்ணா வாயை வைத்தானோ அருவமாக இருந்தவள் தன் ரத்தத்தை கண்டதும் சடாரென்று முல்லை உடலில் நுழைந்தாள்..தூங்கி கொண்டிருந்தவள் வெறி பிடித்தவள் போல எழுந்து வந்தாள்..ஆவேசமாக வந்தவள் கண்ணில் பயத்துடன் தன்னை நோக்கும் சகோதரியை கண்டு நின்றால்.

சந்தேக பார்வை பார்த்த சக்தியை நோக்கி புஜ்ஜிமா என முல்லை அழைத்திட சக்தி உடைந்தே போனாள்..அவள் அவளே தான் சக்தியின் அன்பு அக்கா குரல் கூட மாறாமல் அக்காவின் தனிப்பட்ட அழைப்பில் தங்கையை அழைக்க ஒரு நிமிடம் முல்லையின் உடலில் சிவாவை கண்டாள்..

ஓடி சென்று அவளை அணைத்து கொண்டு சக்தி கதறியதை காண ஆண்கள் மூவருக்கும் கண் கலங்கியது.."ஐயோ அக்கா உன்ன இந்த நிலமைலயா நா பாக்கணும்..எல்லாம் என்னால தானே எனக்காக பேச போயி தானே உன்ன இப்டி பண்ணிட்டாங்க"..

கதறியலும் தங்கையை ஆறுதல் படுத்தியவள்"இப்பவும் உனக்காக தான் இங்க இருக்கேன்..புஜ்ஜிமா நீ இனிமே கஷ்டபடவே கூடாது நீ ஆசப்பட்ட ரியோவையே உனக்கு கட்டி வைக்குறேன்"...

"அக்கா என்ன சொல்ற நீ..அதெல்லாம் நா அப்போவே மறந்துட்டேன்..நீயே இல்லனு ஆனதுக்கு அப்புறமும் எனக்குன்னு ஒரு வாழ்க்கை தேவையா"..

"கண்டிப்பா என் தங்கச்சிக்கு ஒரு வாழ்க்கை தேவை அதும் அவ ஆசபட்ட வாழ்க்கை"...

"அக்கா நா சொல்றத கேளு அவரு வேற பொண்ண விரும்புறாரு என் மனசுலயும் அவர் இல்ல"..

"இல்ல இல்ல என்ன பாத்து சொல்லுடி அவன் உன் மனசுல இல்ல"..பதில் கூற வக்கற்று வாளா இருந்தவளை உறுத்து விழித்து விட்டு "இந்த ரியோ என் தங்கச்சிய கல்யாணம் பண்ணனும் இல்லேனா உங்க முல்லை உங்களுக்கு இல்ல"..ஆவேசமாக கத்தியவள் அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டாள்..

Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி