இஞ்சி இடையழகி 5


ஒரு மனிதன் எவ்வளவு தான் யோசிப்பான் ரியோ மூளையே சூடாகி உருகும் நிலைக்கு வந்து விட்டது..இதற்கு மேல் தாங்க முடியாமல் கண்ணனின் வீட்டிற்கு சென்றான்..அப்போதுதான் எழுந்து பல் தேய்ந்தவன் யார்டா காலங்கத்தலயே வந்து உசுர வாங்குறதுன்னு பார்த்தால் ரியோ..அவனை சற்றும் அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது கண்ணனின் அதிர்ந்த பார்வையில் தெரிந்தது...

"ண்ணா எவ்ளோ நேரம் பேயறைஞ்ச மாறி நிப்பீங்க"... 

"ஹே ரியோ என்னடா வீட்டுக்கெல்லாம் வா உள்ள..."... ரியோவை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தவன் தன் அம்மாவிடம் காஃபி கொண்டு வர சொன்னான்.. 

"ம்ம்ம் சொல்ற என்ன வீட்டு பக்கம்'

"ஏன் நாங்கல்லாம் உங்க வீட்டுக்கு வர கூடாதா"

"வரலாம் ஆனா இந்த பக்கம் தலைய கூட திருபாதவன் திடிர்னு வந்தா என்ன விஷயம்"

"நேத்து நீங்களும் பாரியும் காஃபி ஷாப்ல உக்காந்து இருந்த டேபிள் பக்கத்துல தான் நானும் இருந்தேன்..".. கண்ணா திருதிருவென விழிக்க அதற்குள் காஃபி கப்புடன் வந்தார் அவன் அம்மா..அவரிடமிருந்து கப்பை வாங்கிய ரியோ சில பரஸ்பரங்களை விசாரித்து விட்டு அவர் உள்ளே சென்றதும் கண்ணனை நோக்கினான்..ரியோவின் கூறிய பார்வையே அவனின் நோக்கத்தை தெரியப்படுத்த

 "இங்க வேணா இரு குளிச்சிட்டு வரேன் வெளியே போயி பேசுவோம்"...சொன்னவன் குளியலை முடித்து அவசர அவசரமாக அம்மா கொடுத்த உணவை வாயில் அடைத்து ரியோவை இழுத்து கொண்டு கிளம்பினான்..கார் கடற்கரையில் போய் நின்றது..கடல் அலைகளை போல உள்ளே அலையென எழுந்த நினைவுகளை ரியோவிடம் பகிர தொடங்கினான் கண்ணா.. 

அமைச்சர் தமிழ் வேந்தன் கமலி இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் வளரி வேந்தன் பாரி வேந்தன்..இரட்டை குழந்தைகள்..ஏற்கனவே ஜோதிட பைத்தியமான அமைச்சர் குழந்தைகள் பிறந்த நேரத்தை கணிக்க சொல்ல அந்த வெளங்காத ஜோதிடனோ வழக்கம் போல குண்டை வைத்து இரட்டையரை பிரித்தான்..அமைச்சரின் உயிருக்கு ஆபத்து என சொல்லிருந்தால் கூட ஆடாத மனிதர் அரசியலுக்கே உலை என்றவுடன் ஆடி விட்டார்.. அதும் முதல் குழந்தை வளரி அவருடன் இருந்தால் மட்டுமே..

பரிகாரம் முதல் குழந்தை பெற்றோரை விட்டு பிரிந்திருக்க வேண்டும் ஏன் அப்படி ஒரு குழந்தை இருப்பதே யாரும் அறியாமல் இருந்தால் சிறப்பு என்றிட பச்சை உடம்புடன் மகனை பிரிய இயலாமல் கமலி கதறிய கதறலையும் பொருட்படுத்தாமல் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் போட்டார்..அக்குழந்தையின் நல்ல நேரம் தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு வாசியான இந்திய குடும்பம் அக்குழந்தையை தத்து எடுத்து சென்றனர்.. வளரி வேந்தன் விஷான் என்றாகி போனான்... 

இப்போது பாரி வேந்தன் மட்டுமே தமிழ் வேந்தனின் வாரிசாக மாறினான்..கமலி அப்பாவி பிறவியே பயந்த சுபாவம் அமைச்சரின் அசச்சுறுத்தலுக்கு பயந்து உள்ளுக்குள்ளேயே கண்ணீர் வடித்து வந்தார்.. பாரியை காணும் போதெல்லாம் வளரியின் நினைவு அழையாமல் வரும்..அமைச்சரின் ஒரே வாரிசாக பாரி மாறிப்போனான்..நாட்கள் ஆண்டுகளாக பாரி வளர்ந்து பிளஸ் டூ மாணவனாக இருக்கும் நேரத்தில் முதன் முதலாக முல்லையை சந்தித்தான்..அவர்களின் சந்திப்புகள் பள்ளியில் தொடர அது மோதலாக வளர பின் பாரி கல்லூரி சென்றதும் இந்த மோதல் சற்று மறைந்திருந்தது..

அதன் பின் மழை நாள் ஒன்றில் மரத்தின் அடியில் ஒதுங்கி நின்ற முல்லைக்கு உதவிய பாரிக்கு முதன் முதலில் ஒரு பெண்ணின் மேல் ஈர்ப்பு வந்தது..ஆனால் அவள் பள்ளி சிறுமி அதனால் அவளை தொந்தரவு செய்யாமல் தன் படிப்பில் கவனமாக இருந்தான்..அப்போது தான் அமைச்சர் காலமானார்..கட்சி விசுவாசிகள் பாரியை அரசியலுக்கு வர சொல்ல அவனோ அடியோடு மறுத்து விட்டான்..

அந்த நேரம் விஷான் தன்னுடன் சிட்னியில் ஒன்றாக பயிலும் இந்திய நண்பனுடன் இந்தியாவை சுற்றி பார்க்க வந்தான்..அதும் பாரி குடும்பம் இருந்த சென்னைக்கே..நண்பனின் வீடடில் விருந்தோம்பல் தடபுடலாக இருக்க சந்தோசமாக பொழுதை கழித்தான்..நண்பனுடன் ஒரு நாள் கோவிலுக்கு சென்றிருந்தான்.

அங்கு ஒரு குழந்தையின் கழுத்தில் கிடந்த சங்கிலியை கள்வன் ஒருவன் அறுத்து கொண்டு ஓட அவனை பின்தொடர்ந்து ஓடினான் வளரி..அவனுக்கு பின்னால் ஒரு கூட்டமே ஓட அந்த திருடனின் எதிர்புறம் வந்த ஒருத்தி ஓங்கி அவன் மூக்கில் குத்தினாள்..ஓடிக்கொண்டு இருந்தவன் தடுமாறி விழ அவளோ இரண்டே மிதி தான் அவனை..சங்கிலியை அவள் மேல் விட்டேறிந்தவன் ஓடியே விட்டான்..

சங்கிலியை குழந்தையின் தாயிடம் தந்தவள் வளரியை நோக்கி தான் வந்தாள்..அதுவரை அவள் செய்த சாகசங்களை கண்டு மெய்மறந்து நின்று கொண்டு இருந்தவன் அவள் அருகில் வர பேந்த விழித்தான்..வந்தவள்"ஒரு திருடன புடிக்க துப்பில்ல என்கிட்ட மட்டும் எகிறிட்டு வருவீங்க"

அவள் தன்னை யாரோ என்றெண்ணி பேசுகிறாள் என்று உணர்ந்தவன்"என்ன யாருனு தெரியுமா உங்களுக்கு என்னமோ தெரிஞ்ச மாறி பேசுறீங்க"

"ம்ம் இந்த மொகரைய தெரியாதா என்ன மிஸ்டர் பாரிவேந்தன் மண்டையில அடிபட்டு கபாலம் கலங்கிருச்சா ஏற்கனவே அர லூசு மாறி பேசுவீங்க இனிமே முழு லூசு தான்"...

"என்ன பாரிவேந்தன்னா ஹெலோ ஐம் விஷான்'..

"என்ன விஷால்லா"..

"விஷான்"

"ஏன் விஷம்னு வெச்சிக்குறது வந்துட்டாரு பெரிய ஒலக அழகன் நாளுக்கு நாள் பேர மாத்துறாரு"

விஷானின் நண்பன் அவனுக்கு உதவிக்கு வந்து "ஹேய் பொண்ணு அவன் பேரு விஷான் தான்..நீதான் யாரோன்னு நெனச்சு பேசிட்டு இருக்க"

"நாட்டமை சரத்குமார் பஞ்சாயத்து பண்ண வந்துடாறு இந்த மொகரகட்டைய எனக்கு தெரியாதா"...விஷானின் நண்பன் ஏதோ பேச முயல அவனை அடக்கிய விஷான்"சரி நா பாரி தான்..என் வீடு எங்கன்னு சொல்லு பார்க்கலாம்"...

"சொல்லிட்டா"

"ம்ம்ம் சரியா சொல்லு மொத"..முல்லை பாரியின் விலாசத்தை கூற அதனை குறித்து கொண்டவன்"ஆமா உன் பேரு என்ன"..

"என்ன நடிப்புடா சாமி வைஷு மாதா என்னயே யாருனு கேட்டுட்டியே"...மெல்லிய புன்னகை அவனிடமிருந்து வந்தது...

"இதான் ஃரஸ்ட் டைம் நீங்க சிரிக்குறத பாக்குறேன்.ஏதோ பரவால கொஞ்சம் கியூட்டா தா இருக்கு"..மெல்லிய புன்னகை பெரியதாக விரிந்தது..அவள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ள அவன் மனம் பரபரத்தது..அவளோ தெரிந்து கொண்டே சீண்டுகிறான் என்று வாயை மூடி கொண்டாள்..

அவனின் அவசரம் புரிந்ததோ என்னவோ முல்லையை அழைத்து செல்ல வந்த அன்பு"முல்லமா சீக்கிரம் வா எனக்கு வேல இருக்கு..உன்ன ட்ரோப் பண்ணிட்டு கெளம்பனும்"..

"தோ வரேண்ணா ஓகே பாரி சார் பாதைய மறந்துடாம வீடு போயி சேருங்க"...அன்புடன் அவள் சென்று விட நண்பன் கேள்வி கணைகளால் அவனை துளைத்து எடுத்தான்..கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்த வளரி அவனிடம் உண்மையில் அவன் இந்தியா வந்த நோக்கத்தை கூற தொடங்கினான்..

சில மாதங்களுக்கு முன்பு அவனது வளர்ப்பு பெற்றோர் அவனின் குழந்தை பருவ படங்களை பார்த்து கொண்டே அந்த அனாதை இல்லத்திற்கு டொனேசன் கொடுக்க சென்ற போது பச்சிளங்குழந்தையாக அவன் இவர்களை பார்த்து சிரித்ததையும் அவனை தத்து எடுத்து கொண்டு வந்ததையும் பேசி கொண்டிருக்க அங்கே கண்ணீருடன் நின்றிருந்த அவனை அவர்கள் கவனிக்கவில்லை..

அவர்களிடம் சென்று நான் தங்களின் தத்து மகனா என்று வினவிட அவனால் எப்படி முடியும்..அவர்கள் அவனை சீராட்டி பாராட்டி வளர்ப்பதை அவன் எப்படி மறுப்பான் இருந்தாலும் ஏன் என்னை பெற்றவர்கள் என்னை அனாதை விடுதியில் விட்டார்கள் வெறும் காமத்திற்கு மட்டுமே பிறந்தவனா இல்லை காம கொடுரர்களால் சீரழிக்கப்பட்ட அப்பெண் வளர்க்க இயலாமல் தன்னை வீசி விட்டாளா இல்லை தந்தை பெயர் தெரியாமல் பிறந்தவனா யோசிக்க முடியவில்லை அவனால்..

அவர்கள் பேசிய பேச்சில் இருந்த தகவல் தமிழ்நாடு சென்னை அவ்வளவே..அவனை தத்து எடுத்த தேதியை தான் அவனது பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள்..அவனுக்கு உடனே இந்தியா செல்லவேண்டும் தன் மெய் பெற்றோரை சந்தித்து ஏன் என்னை வீசினார்கள் என்று கேட்க வேண்டும்..எப்படி இந்தியா செல்வது அப்போது தான் தன் நண்பன் தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்பதும் அவனும் சென்னை தான் என்பதும் நினைவு வந்தது கூடவே அவன் படிப்பு முடிந்து தாயகம் திரும்புவது அவனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் இருந்தது...

அவனுடன் தானும் சென்று இந்தியாவை சுற்றி பார்த்து வருவதாக கூறி கிளம்பி விட்டான்..எப்படி எங்கே சென்று தேட போகிறான் என்றெல்லாம் தெரியாது ஆனாலும் கிளப்பி விட்டான்..அவனே எதிர்பாராத நிகழ்வு முல்லையின் சந்திப்பு..அவள் அவனை பாரி என்று அழைத்த அழைப்பு..அவள் இவ்வளவு தூரம் அடுத்து சொல்கிறாள் என்றால் தன்னை போலவே ஒருவன் இங்கே உள்ளான் என புரிந்து கொண்டான்..அந்த பாரியின் வீட்டிற்கு சென்று பார்க்க சித்தம் கொண்டான்..இவை அனைத்தையும் தன்னிடம் கொட்டி தீர்த்தவனை ஆறுதலாக கரம் பற்றி கொண்டான் நண்பன்..

நண்பர்கள் இருவரும் காலம் தாழ்த்தாமல் பாரியின் முகவரியை தேடி சென்றனர்.இதான் விதி என்பது அன்றுதான் வளரி பாரியின் பிறந்தநாள்..பாரி கண்ணாவுடன் வெளியில் சென்றிருக்க வளரி நண்பனுடன் வீட்டு வாசலில் நின்றான்..பெரிய வீடு ஒருவேளை இந்த வீட்டின் உரிமையாளர்கள் தன் பெற்றோராக இருந்தால் எதற்காக என்னை மறுத்திருப்பார்கள்...அழைப்பு மணியின் ஓசை கேட்டு கமலி வெளியே எட்டி பார்த்தார்..

"டேய் எரும சொந்த வீட்ல உனக்கு கால்லிங் பெல்லு கேக்குதா அடி செருப்பால"....வளரிக்கும் அவன் நண்பனுக்கும் ஒரே அதிர்ச்சி அப்போது அந்த பெண் கூறியது உண்மை தான்...விஷான் போலவே பாரி இருக்கிறான் எப்படி இது சாத்தியம்..ஒருவரை போல ஏழு பேர் இருப்பது உண்மை தான் போல..

அவர்கள் இன்னும் வெளியே நிற்பதை கண்டு"டேய் என்னடா வீட்டுக்குள்ள வர வெத்தல பாக்கு வைக்கணுமா அது யாரது கூட புதுசா ஒரு பையன்..அந்த கண்ணா நாய் எங்க வீட்டுக்கு போய்டானா..அந்த நாய் அப்படியெல்லாம் போவதே பிரியாணி செய்யுறேன்னு அதுக்கு தெரியுமே"...கமலி தன் பாட்டில் பேசிக்கொண்டிருக்க உள்ளே நுழைந்த இருவரும் அந்த வீட்டை சுற்றி கண்களை மேய விட்டனர்..சுவரில் அச்சு அசலாக வளரியை உரித்து வைத்தாற்போல பாரியின் நிழற்படம் தொங்க அதை பார்த்த இருவரும் ஒரு நிமிடம் திடுக்கிட்டு போயினர்...

கமலி வாய் ஓயாமல் கேள்விகளை எழுப்ப"கொஞ்சம் இருங்கம்மா..நீங்க நெனைக்குற மாறி நா உங்க மகன் பாரி இல்ல..நா விஷான் சிட்னில இருந்து வந்துருக்கேன்,... 
"

"என்னது விஷம்மா..யாருடா விஷம்"..

"இல்லம்மா என் பேரு விஷான்..நா உங்க மகன் இல்ல..."என்று விஷான் தன்னை பற்றிய அனைத்தையும் கூறி முகவரி கிடைத்த கதையையும் கூறி"என்ன மாறியே ஒருத்தர் இருக்காருன்னு பார்க்க வந்தேன் அவ்ளோதான்..நாங்க கெளம்புறோம்மா"..

அதுவரை அவன் கூறியதை பேயறைந்ததை போல கேட்டு கொண்டிருந்த கமலி அவன் கிளம்ப எத்தனிக்க அவனருகில் வந்து அவனை திருப்பி புறங்கழுத்தை பார்த்தார்..அதில் நாக வடிவில் சிறு மச்சம் இருக்க அவனை முன் திருப்பி"ஐயா வளரி "என கட்டியணைத்து கதற தொடங்கி விட்டார்...வளரிக்கும் அவன் நண்பனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. 

கமலி அம்மா வளரியை கட்டியணைத்து முத்தம் பதித்து"ஐயா ராசா என்னய மன்னிச்சிருயா நீ தேடி வந்த உன்ன பெத்தவ நான்தான்...இந்த பாவி தான்யா உன்ன பெத்தவ.. விதி உன்ன நீ பொறந்த வீட்டுக்கே கொண்டு வந்து சேத்துருச்சு கண்ணு".... 

"என்னம்மா சொல்றிங்க என்னால நம்பவே முடில.. நீங்க என்னோட அம்மாவா.. அப்ப ஏன் என்ன வேணாம்னு வீசுனீங்க"... 

"நா எங்க ராசா உன்ன வேணாம்னு சொன்னேன் நீ என் மொத கொழந்த ராசா உன்ன போயி இந்த சிறுக்கி வேணாம்னு சொல்லுவேனா.. எல்லாம் அந்த வீணாப்போனவன் உங்கப்பன் செய்ஞ்ச வேல... பாவி மனுஷன் ஜோசியத்த நம்பிட்டு உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான்."கமலி ஒப்பாரியுடன் நடந்ததை கூற நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் வளரி நெளிய கமலி ஓடி சென்று ஒரு புகைப்படத்தை எடுத்து வந்தார்.. சட்டமிட பட்ட புகைப்படத்தில் இரண்டு இரட்டை குழந்தைகள்.. இது வளரியே தான்.. அவன் சிட்னி வீட்டில் இதே மாதிரி புகைப்படம் உள்ளது ஆனால் அவன் மட்டுமே..குழந்தையை பிரிக்க அமைச்சர் முடிவு செய்த போது கமலி அவரின் காலில் விழுந்து மன்றாடிய பயன் தான் இந்த புகைப்படம்..அதும் தாலி மேல் சத்தியதோடு..அந்த புகைப்படம் ஒருபோதும் வெளியே யாருக்கும் தெரியவே கூடாது என்பதுதான்...அவன் கழுத்தில் உள்ள மச்சம் யாருக்கும் தெரியாது.. ஆனால் கமளிக்கு தெரியுமென்றால் அப்போது அவனின் உண்மை தாயார் கமலி தான்.. 

அவரின் முகத்தை உற்று பார்த்தான்.யாதும் அறியாத பேதை முகம் அடித்தாலும் மிதித்தாலும் மணாளனே கதி என்று கிடக்கும் பழமையில் ஊறியவர்...தன்னை பெற்றவர் மேல் அவனுக்கிருந்த கோவம் பஞ்சாய் பறந்து போனது.பாவம் அவர் தான் என்ன செய்வார் கணவனை எதிர்க்க முதுகெலும்பு இல்லாத கோழை... அம்மா என்று வளரியின் அழைப்பில் உருகியே விட்டார் கமலி.. மகனை கட்டியணைத்து இத்தனை வருட கண்ணீரையும் கொட்டி தீர்க்க அதுவரை கதவருகில் அதிர்ச்சியோடு நின்றிருந்த பாரியும் கண்ணாவும் உள்ளே வந்தனர்.. அரவம் கேட்டு வளரி திரும்பி பார்க்க ஜீன்ஸ் படம் கண்முன்னே ஓடியது.. 

வெளிநாட்டு தாக்கம் வளரியிடம்.. மற்றபடி அதே உருவம் மட்டுமே... பாரியின் முகத்தில் இருந்தே அவனுக்கு அனைத்தும் தெரிந்தது என கணித்து விட்டான் வளரி.என்ன பேசுவது என்று அவன் தயங்க டேய் அண்ணா என அவனை கட்டியணைத்தான் பாரி... 

வளரியும் கட்டிக்கொள்ள கமலியின் கண்ணீர் எல்லை கடந்தது..."டேய் அண்ணா ஹாப்பி பர்த்டே டா"...

"யாருக்கு பர்த்டே".. 

"நமக்கு தாண்டா... "பாரி கூறி தான் வளரிக்கே உண்மையான பிறந்தநாள் தெரிந்தது.. அதன் பின் வளரியின் நண்பன் கமலி சாப்பிட வற்புறுத்தியும் வேலை இருப்பதாக கூறி செல்ல வளரி நீண்ட நாள் கழித்து சந்தித்த தன் குடும்பத்துடன் இருந்தான்.. கண்ணாவும் அவனுடன் நட்பு பாராட்ட கமலி இரு மகன்களையும் அருகருகே அமர்த்தி உணவூட்டி மகிழ்ந்தார்..

அதன் பின் கண்ணாவும் கிளம்பி விட தம்பி அம்மாவுடன் பழக்கதைகள் பேசி மகிழ்ந்தான்..மாலை வளரியின் நண்பன் வளரியின் உடமையோடு வர வளரி பாரி வீட்டிலே தங்க சம்மதித்தான் கமளியின் அன்பு தொல்லையில்.. இரவில் தம்பியின் அருகில் படுத்திருந்தவன் நினைவு கோவிலில் சந்திந்த பெண்ணின் மேல் இருந்தது.. எங்கிருந்து வந்தாள் அவன் எண்ணி வந்த காரியத்தை எளிதில் நடத்தி விட்டாளே பம்பர விழிகள் பரபரப்பாக சுழல அவள் உருளை வடிவம் முழுதும் அசைய அவள் தலை சாய்த்து பேசிய பேசில் தான் எத்துணை அழகு... 

அவளை மீண்டும் பார்க்க தூண்டிய மனதை அடக்கி விட்டு உறங்கி போனான்.. தொடர்ந்து அவனுக்கு வீட்டில் ராஜவிருந்து நடக்க அந்நேரம் பாரிக்கு காலேஜ் டூர் வந்தது.. அவன் சென்றே ஆகவேண்டிய தருணம்.. அப்படியே அவன் நண்பனின் அக்கா திருமணம் வர டூர் முடிந்து திருமணத்திற்கு சென்று இன்னும் இரண்டு வாரங்கள் கழித்தே வரும் நிலை.அவனுக்கும் மனமில்லை போக.ஆனால் டூர் போகாமல் இருக்கவும் முடியவில்லை.வளரிதான் தம்பியை தேற்றி அனுப்பி வைத்தான்.. 

பாரி ஊருக்கு சென்றவுடன் வளரி கமளியுடன் சந்தோசமாக பொழுதை கழித்தான்..அவன் கமளியுடன் எங்கே சென்றாலும் அனைவரும் அவனை பாரி என்றே எண்ணி பேசினர்.கமலி தடுக்க நினைத்தாலும் வளரி வேண்டாம் என தடுத்தான்.கொஞ்ச நாள் கழித்து சொல்லி கொள்ளலாம் என்று விடுவான்..

இப்படியே ஓரிரண்டு நாள் ஓட மீண்டும் அவளை சந்தித்தான்.. பூங்காவில் கிரேஸ் முல்லையிடம் மன்றாடி கொண்டிருந்தாள்..ஓட்ட பயிற்சிக்கு வர.. எங்கே அவள் தான் குத்து கல்லாட்டம் அமர்ந்து விட்டாளே தலையில் அடித்து கொண்டு கிரேஸ் ஓட தொடங்க அவள் தலை மறையவும் இவள் பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லேட்டை வெளியே எடுத்தாள்.. 

அவளின் செய்கையை கியூட் என கூறிகொண்டே அவள் முன் நின்றான் வளரி.. தன் முன் இருந்த நீண்ட கால்களை கண்டு நிமிர்ந்து பார்த்தவள்"வாங்க விஷம் சார் எப்டி இருக்கீங்க".. 

அவள் அன்று தான் கூறிய பெயரை வைத்து பரிகாசிப்பதை புரிந்து கொண்டவன்'விஷம் இல்ல விஷான்".. 

"எனக்கு என்னமோ உங்களுக்கு விஷம் தான் சரியான பேருனு நெனைக்குறேன்..."

"சரி உன் பேரு முல்லை தானே".. 

"இல்ல முல்லைகொடி தெரியாத மாறியே கேக்குறீங்க".. 

"சும்மா கேட்டேன்"

"ம்ம்ம் ஒரு மார்க்கமா தான் சுத்திட்டு இருக்கீங்க".. 

"ஏன்". 

"அப்ரோ இந்நேரம் என்ன பாத்ததுக்கு என்னா பேச்சு பேசிருப்பிங்க..இப்ப என்னன்னா இவ்ளோ அடக்கமா பேசுறீங்க.. உண்மையாவே தலையில அடிப்படிருச்சா"... 

"அப்படியெல்லாம் இல்ல..நீங்க என்ன தப்பா புரிஞ்சிருக்கீங்க நா பாரி இல்ல அவன் அண்ணா"... 

"அஹான் நீங்க ரெட்ட புள்ளைங்க பொறந்த உடனே ஹாஸ்பிடல்ல ஒரு பிள்ளய திருடிட்டாங்க உங்க கழுத்துல கெடந்த செயின்ன திருடி உங்கள குப்ப தொட்டில போட்டுட்டாங்க..ஏதோ ஒரு நல்ல உள்ளம் உங்கள மீட்டு ஆசிரமத்துல சேத்தாங்க அங்கே இருந்தே படிச்சு பெருசாகி சொந்த அம்மா அப்பாவ தேடுறீங்க.. அம்மா அப்பாவோட சேந்து இலவச இணைப்பா ஓட்ட வாய் தம்பியும் கிடைசாச்சு... ஸ்ஸ்ஸ்ப்பா எப்டி கத.. இத தானே சொல்ல போறே.. ஏண்டா என்ன பாக்க எப்டி இருக்கு..கேணச்சி மாரியா.. உன்ன பத்தி தெரியாது எனக்கு வந்துட்டாரு கத அளக்க.. பக்கி ஒரு சாக்லேட்ட திங்க உடுறியா மலமாடு"...

அவளே ஒரு கதையை கதை திரைக்கதை வசனம் இயக்கம் அனைத்தும் செய்ய வளரி வாயை பிளந்தான்.. அவளோ அவனை முறைத்து கொண்டே சாக்லேட்டை தின்று விட்டு கவரை அவன் முகத்தில் வீசிவிட்டு ஓடி வந்துகொண்டிருந்த கிரேஸை நோக்கி நகர்ந்தாள்.. 

வளரி வளர்ந்த நாட்டில் இவையனைத்தும் சாதாரணம்..அவனுக்கே கேர்ள் ஃரண்ட்ஸ் கணக்கெடுப்பு எடுக்கலாம் ஆனால் காதல் என்ற வலையில் விழவில்லை..முதல் முறை ஒரு பெண்ணை அருகில் வைத்தே பார்க்க தூண்டியது மனம்.. அவள் பிரிந்து சென்றவுடன் வாடிய இதயம் எதை உணர்த்துகிறது.. அவள் இன்னும் தன்னை பாரியென்றே எண்ணியுள்ளாள்.. முதல் அதை தெளியப்படுத்த வேண்டும்.. 

மறுநாளும் அதே பார்க்குக்கு சென்றான்.. அவள் வருவாள் என்று.. ஆனால் அவளை காணவில்லை.. மாலை வரை காத்திருந்தான்..ஒரு பயனும் இல்லை.. மறுநாள் அதற்கும் மறுநாள் இப்படியே நான்கு நாட்கள் ஓடியது..முதன் முதலில் அவளை சந்தித்த கோவிலுக்கும் சென்று பார்த்தான்.. பலன் பூஜியமே... அவனின் முகம் சுரத்தே இல்லாமல் இருக்க கமலி காரணம் கேட்டார்.. அவரிடம் மழுப்பியவன் நண்பனிடம் மாட்டி கொண்டான்..முல்லையை காணாத நாட்களில் அவனின் இருதயம் தவித்த தவிப்பு அவனுக்கு உணர்த்தியது இது வெறும் ஈர்ப்பு இது அதற்கும் மேலான உணர்வு அவளை பற்றியே எண்ண சொல்லி அவளை தவிர ஒன்றுமே இல்லையென துடிக்க வைத்த உணர்வு.. 

அவளின்றி தான் இருக்க முடியுமா.இல்லை இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும்.. ஆனால் தான் பாரி அல்ல விஷான் என கூறிட வேண்டும் அவன் நண்பனும் இதையே வலியுறுத்த அவளை தேடி நண்பனுடன் அலைய ஆரம்பித்தான்.தெரு தெருவாக கோவில் கோவிலாக ஷாப்பிங் மால்ஸ் காபி ஷாப் பியூட்டி பார்லர் இப்படி தேடாத இடமில்லை.. 

ஒரு மரத்தடியின் கீழ் சோர்ந்து நின்றான் வளரி..மீண்டும் அவளை காணவே மாட்டோமா.. பாரி கண்ணனிடம் கேட்கலாம் தான் ஆனால் அவன் மனம் ஏனோ மறுத்தது.. கடவுளே எங்கிருந்து வந்தாள் அவள் ஒரே நாளில் என் குடும்பத்தை என்னிடம் கொடுத்தவள் அவளை என் கண்ணில் காட்ட மாட்டாயா... 

கடவுள் அப்போது பிரீயாக இருந்தாற்போல அந்த மரம் முல்லையின் வீட்டு ஏரியாவில் உள்ள மரம்..கடையில் ஏதோ வாங்கிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தவளை கண்டவன் கண்களை நம்பவே முடியவில்லை..அவள் அவளே தான்..வடிவமே இல்லாமல் வண்ணமலர் அவள் நடந்து வர அவளுடைய பாதையில் சென்று விழுந்தது அவன் மனம்..கூடவே அவனும் அவளை மறித்து நின்றான்..

அவனை கண்ட அவள் முகத்தில் தான் எத்துணை ஆர்வம்"ஹேய் பாரி இங்க என்ன பண்றிங்க"...அவள் கண்களில் தோன்றிய ஆர்வம் தனக்கானது இல்லை என்பதே அவனுக்கு வலியை கொடுக்க உண்மையை சொல்ல முயன்றான்..எங்கே அதற்குல் அவள் தான் அவன் கையை பிடித்து இழுத்து விட்டாள்..வளரியை உரசிக்கொண்டு சென்றது ஒரு கேம்ரி.

அவளின் தொடுகை வார்த்தையை தடுக்க அவளோ பேசிக்கொண்டே போனாள்..அவளின் ஒவ்வொரு வார்த்தையும் பாரி பாரி என்றே வர முதன் முறை தம்பியின் மீது பொறாமை வந்தது..இருந்தும் அவளிடம் தான் விஷான் என்று கூற அவளோ அதனை நம்ப மறுக்க தலையிலடித்து கொண்டான்..

அவள் கிளம்ப எத்தனிக்க அவளிடம் போன் நம்பர் கேட்டான்..அவனை மேலும் கிழும் பார்த்தவள் ன்ன கொழுப்பா கொன்றுவேன்...என்று விட்டு வீட்டிற்கு செல்ல தொடங்கினாள்..அவளின் பின்னே கூவி கொண்டே சென்றான் பாரி..தங்கையின் பின்னே ஒருவன் வருவதை கண்ட அன்பு கையில் ஸ்பானருடன் "ஹேய் யார்டா அது ஓ பாரி என்னப்பா இந்த பக்கம்"..அண்ணனை கண்ட தங்கை அங்கேயே நிற்க 

வளரியோ திருதிருவென முழித்தான்...அன்பும் தன்னை பாரி என்று பேசுவதை கேட்டவன் ஈஈஈ என இளித்து வைத்தான்..அன்பு பாட்டுக்கு பேசிக்கொண்டே செல்ல வளரி தலையை மட்டுமே ஆட்டி கொண்டிருந்தான் அவனின் நண்பனோ அடிவாங்காமல் செல்வது எப்படி என யோசித்து கொண்டிருந்தான்..

முல்லைக்கு வளரியின் நிலை சிரிப்பாக இருந்தது..அவன் அவளை பாவமாக பார்க்க அவளே அண்ணனிடம்"ண்ணா அவருக்கு என்ன வேலையோ நீ பாட்டுக்கு கத பேசிட்டு இருக்க..அவரு போட்டும்ண்ணா"...

"அட ஆமாடா சரி தம்பி இன்னொரு நாள் பாப்போம்"...அன்பு சென்றவுடன் நன்றியோடு நோக்கிய வளரியை காதலாக நோக்கினாள் முல்லை..அந்த காதல் பார்வையில் சிக்கிய வளரியின் உள்ளம் எக்குத்தப்பாய் சிதறியது..ஆனால் மறு நிமிடமே உயிரற்று போனது ஏனெனில் அந்த பார்வைக்கு சொந்தக்காரன் அவனல்லவே..

வேலை இருப்பதாக கூறியவன் அங்கிருந்து நண்பனுடன் சென்றான்..முல்லை பாரியை விரும்புகிறாளா..அது எப்படி முடியும்..அவள் பாரி என நினைத்து தானே அவனிடம் பேசுகிறாள் ஆனால் காதலனிடம் பேசுவதை போல அவள் பேசவில்லையே ஆக அவளுக்கு பாரியின் மீது ஈர்ப்பு உள்ளது ஆனால் இன்னும் அவனிடம் தெரிவிக்கவில்லை..பாரிக்கும் இதே எண்ணம் இருக்குமா அப்படி இருந்தால் தம்பி விரும்பும் பெண்ணை தான் நினைப்பதா...

தலையே வெடித்து விடும் போல..பாரியின் அறை முழுதும் தேடினான் அவன் கையில் சிக்கியது ஒரு டைரி..அதில் முல்லையின் முதல் சந்திப்பில் இருந்து இறுதி சந்திப்பு வரை எழுதிருந்தவன் அவள் மேல் கொண்ட காதலையும் அதனை அவனது கல்லூரி படிப்பு முடிந்து கூற போவதையும் எழுதிருக்க வளரி உடைந்தே போனான்..

அவனால் முல்லையை மறக்க முடியாது..அவள் இல்லாமல் வாழ்வே இல்லை..அவனின் புத்தி கோணலாக சிந்திக்க தொடங்கியது..முல்லைக்கு பாரியின் மீது இருக்கும் அன்பை தனக்காக உபயோக படுத்த திட்டமிட்டான்..பாரியாக நடிக்க தொடங்கினான்..பாரி திரும்பி வர இன்னும் ஒரு வாரம் உள்ளது அதற்குள் அவள் இதயத்தில் தான் அமர்ந்து விட்டால் பின் மெதுவாக அவளிடமும் பாரியிடமும் உண்மையை தெரிவு படுத்தி கொள்ளலாம் என யோசித்தான்..

அதன் படி பாரியின் உடைகளை அணிந்தான்..கமலி பார்த்து விட்டு அண்ணன் தம்பி சட்டையை போடுவது இயல்புதானே என விட்டு விட்டார்..பாரியை போலவே தன்னை மாற்றி கொண்டான்..முல்லையின் வீட்டை சுலபமாக கண்டு பிடித்து விட்டான்...

அவள் அன்றாட செயல்களை அறிந்து அவளிடம் சந்திப்புகளை உருவாக்கி கொண்டான் பாரியாக..வளரியை பாரியாக எண்ணி அவனிடம் பேசும்போது மலரும் அவள் முகத்தை காணும் போதெல்லாம் பற்றி எரியும்..என்ன செய்வது அவள் மனதில் இடம் வேண்டும் தன் நாட்டிற்கு கிளம்பும் நாளும் பாரி திரும்பி வரும் நாளும் நெருங்க பயம் தொண்டையை அடைத்தது அவனுக்கு..

அவளிடம் பேசி பழகி கெஞ்சி கூத்தாடி கைபேசி எண் வாங்கியிருந்தான்.அன்று கமலி அவசரமாக உறவினர் திருமணத்திற்கு செல்ல வேண்டும்.வளரியை அழைத்தார் அவன் மறுத்துவிடவே அவர் மட்டும் செல்லும் நிலை.விஷான் யோசனையில் ஆழ்ந்தான்.முல்லைக்கு அழைப்பு விடுத்தான்.உடல் நலமில்லாதவன் போல லொக்கு லொக்கென்று இருமி கொண்டே பேசியவன் இறுதியில் வாந்தி எடுப்பவன் போல பாவ்லா செய்து படியில் உருண்டு விழுபவன் போல அம்மா என்ற அலறலுடன் போனை துண்டித்தான்..அந்த பக்கம் பாரி பாரி என்று கதறியவரே முல்லை துடிப்பதை கேட்கவே அசூசையாக இருந்தது வளரிக்கு..

அவள் பலமுறை வளரிக்கு பாரியென எண்ணி தொடர்பு கொண்டாள் ஆனால் கைபேசி தான் பல்லை காட்டியது..அவன் அதை தொடவே இல்லை..பாவம் முல்லை அவளிடம் பாரியின் எண் இல்லை..வளரி தந்த எண்ணை பாரியுடையது என எண்ணிருந்தாள்.வளரி தொடர்பை ஏற்காததால் வேறு வழியின்றி அவன் வீட்டிற்கே சென்றாள்..அங்கே கேட் பூட்டாமல் இருக்க வாசல் கதவும் தாளின்றி இருந்தது..கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் குரல் வளரியின் செவியில் விழுந்தது பாரி என்று...

கீழே தேடியவள் மாடி ஏற அங்கே தரையில் மயங்கி கிடந்தான் வளரி..அவனை கண்டதும் பாரி பாரி எந்திரி என்ன ஆச்சு உனக்கு..அவளின் பரிதவிப்பு கண்ணீராக பெருக்கெடுக்க தண்ணீர் தெளித்து எழுப்பினாள்..அறை மயக்கமாக இருப்பது போல கண்ணை திறந்தான் வளரி..அவனுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுதியவள் மருத்துவமனைக்கு அழைக்க வளரி மறுத்து விட்டான்..

அவளின் கண்ணீர் தவிப்பு துடிப்பு ஏதும் தனக்கானது இல்லை என எண்ணும் போதே இதயம் உடைய முல்லையின் இடையை இறுக்கி மார்பில் முகம் புதைத்து விம்மி அழ தொடங்கினான்..திகைத்து தடுமாறினாள் முல்லை..அவனை விலக்கிட அவள் போராட அவனோ அழுவதை நிறுத்தி அவளிடம் கெஞ்ச தொடங்கினான்.."ப்ளீஸ் முல்லை என்ன விட்டு போகாத..என்ன நடந்தாலும் என்ன விட்டு போகாத எனக்கு நீ வேணும்..நா உன்ன லவ் பண்றேன் பேபி ப்ளீஸ்"...

அவள் என்ன கூறுவது என்று யோசிக்கும் போதே அதை கெடுக்கும் விதமாக அதுவரை அழுதுகொண்டிருந்தவன் கரங்கள் எல்லை மீறலை தொடங்க முல்லையின் பெண்மை விழித்து கொண்டது..பாரி என்ன பண்ற கைய எடு அவள் கத்திக்கொண்டிருப்பதை வளரி கண்டு கொள்ளவே இல்லை..

ஒருவேளை அவளது கற்பை தனக்கு சொந்தமாக்கி கொண்டாள் அவள் தன்னை விட்டு செல்ல மாட்டாலோ தமிழ் பெண்களின் மரபு இது தானே வளரியின் மூளை கோணலாக வேலை செய்ய முல்லையோ தன் பலமனைத்தையும் திரட்டி அவனை பிடித்து தள்ளி விட்டு ஓடியே விட்டாள்..நிலை குலைந்து விழுந்தவன் அவள் பின் ஓட அவளோ வந்த ஆட்டோவில் ஏறி தப்பி விட்டாள்..

வளரிக்கு ஐயோ என்றிருந்தது..அவன் இந்த ட்ராமா போட்ட காரணமே அவள் காலில் விழுந்து தான் பாரி அல்ல அவன் அண்ணன் வளரி என்றும் அவன் அவளை காதலிப்பதை ஏற்று கொள்ளுமாறும் சொல்ல நினைத்தான்..சாதாரணமாக அவளை பார்த்து அவளிடம் இதனை கூற முடியாது..அவள் பதறி கவனம் சிதறும் நேரம் அவளது காலில் விழ நினைத்தான் பாவி இடம் மாறி தடம் மாறி நெஞ்சில் விழ எல்லாம் தலைகீழாகி போனது..அவள் உடல் அவனுக்கு தேவையில்லை ஆனால் அந்த நேரம் அவனின் புத்தி பேதலித்து விட்டது...

இனி எல்லாம் முடிந்தது..அவனின் காதல் கானல் நீர்தான்..அழுதான் தன் மூட தனத்தை எண்ணி அழுதான்..கதறினான்..அழுது அழுது ஓய்ந்தவன் முல்லைக்கு தொடர்பு கொண்டான்..முதல் தடவை தொடர்பு துண்டிக்க பட மறு தடவை அலைபேசி அடைக்கப்பட்டது..

அவளுக்கு என்னை மன்னித்து விடு முல்லையென தகவல் அனுப்பியவன் பாரிக்கு ஒரு வீடியோ செய்து பெண்டிரைவ்வில் பதிவிறக்கம் செய்து கமலிக்காக காத்திருந்தான்..மூத்த மகனை அதிகம் காக்க வைக்காமல் அந்த தாய் வர அவரிடம் தான் உடனே சிட்னி செல்லவேண்டும் என்றும் இனி இந்தியா வரப்போவதில்லை தனக்கு என்றுமே பெற்றோர் தனது வளர்ப்பு பெற்றோர் தான் உங்களுக்கு இனி பாரி மட்டுமே ஒரே புதல்வன் என்றும் அவன் இடியை இறக்க கமலிக்கு மயக்கம் வராத குறை..

அவரோ எவ்வளவோ மன்றாடி பார்த்தார் அவன் அசையவே இல்லை..இறுதியாக ஒழுங்காக வழியனுப்பினால் திரும்பி வருவேன் இல்லையேல் இனி சாகும் வரை வரப்போவதில்லை எனவும் அந்த தாய் என்ன செய்வார் தன்னை யாரும் தேடி வரக்கூடாதென்று கூறிட வேறு வழியின்றி அவன் என்றாவது ஒரு நாள் திரும்பி வருவானென்று நம்பிக்கையில் அவனுக்கு உணவூட்டி திருப்பி அனுப்பினர் கமலி..

அவனும் என்ன செய்வான் உண்மை தெரிந்து அம்மாவும் தம்பியும் காரி உமிழ்வதை ஏற்று கொள்ள முடியுமா..நண்பனிடம் மட்டும் உண்மையை கூறி விட்டு சிட்னி சென்று விட்டான்..இங்கே இரு நாட்கள் கழித்து அண்ணனுக்கும் தனக்கும் ஒரே மாதிரியான பல உடைகளுடன் வந்தான் பாரி..அவன் வந்ததுதான் தாமதம் கமலி அவனை கட்டிப்பிடித்து"டேய் பாரி உன் அண்ணன் போய்டான் டா..பாவி மகன் வந்த வேகத்துலயே போய்டான் அவன தேடி வரக்கூடாதுன்னு சொல்லிட்டு போய்டானே ஐயோ அவன் வராமயே இருந்துருக்கலாம் இப்படி சதையும் உயிருமா அவன பாத்துட்டு எப்டிடா பிரிஞ்சு இருப்பேன் பாரி போடா அவன போயி தேடி புடிச்சு கூப்டு வா"....

"ம்மா என்னமா சொல்ற அண்ணா எங்க..என்னமா ஆச்சு"..கமலி நடந்ததை கூற பாரிக்கு ஒன்றுமே புரியவில்லை..ஏன் வந்தான் ஏன் சென்றான்..அம்மாவுக்கு ஆறுதல் கூறியவன் அறைக்குள் நுழைய அங்கே கண்ணாடி அலமாரி முன் ஒரு பாக்ஸ்.அதன் கீழ் பாரியின் டைரி..வேகமாக சென்று அந்த பெட்டியை திறந்தான் அதில் ஒரு பென்ட்ரைவ்..அவசரமாக லேப்டாப்பில் போட்டு பார்த்தான்..வளரி முல்லையை சந்தித்தது அவள் தம்பியின் காதலி என்று அறியாமலே அவள் மேல் காதல் கொண்டது பின் அறிந்தபோதும் தகிடு தத்தம் செய்து அவளை அடைய நினைத்தது இறுதியில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று இப்படி அனைதையும் கூறியவன் தம்பியிடம் மன்னிப்பு வேண்டி கதறினான்..

முல்லை பெயரை அவன் கூறும்போதே கண்களில் தெரிந்தது அவள் மேல் அவன் கொண்ட காதல்..அழுவதா சிரிப்பதா அப்படியே தரையில் அமர்ந்து விட்டான்..முல்லை என் காதலி என் உயிர் அவளை தொட எண்ணிய அண்ணனை என்ன செய்வது இந்த விஷயத்தை கூற திராணியற்று தான் ஓடி விட்டானா..கதவு ஓரம் நிழலாடியது.பாரிக்கு காஃபி கொண்டு வந்த கமலி அனைதையும் கேட்டிருந்தார்..மகனின் மூட தனத்தை எண்ணி மேலும் ஒரு மூச்சு அழுதவர்"அவன் வரும்போது வரட்டும் ஆனா நம்ம வீட்டுக்கு மருமக முல்லை தா"சொல்லிவிட்டு செல்ல மறுநாள் முல்லையை தேடி சென்றான் பாரி..நடந்ததை தெளிவு படுததி அப்படியே தன் காதலை அவளிடம் கொட்டவும்...

அவள் கல்லூரி முடிந்து வெளியே வந்து பேருந்து நிலையத்தில் நின்றாள்..அவளின் அருகில் சென்று நின்றான் பாரி..அவனை கண்டதும் கண்களில் கனல் பறக்க பார்த்தவள் முகத்தை திருப்பி கொண்டாள்..அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்றே பாரிக்கு தெரியவில்லை..எச்சிலை கூட்டி தொண்டையை நினைத்து "முல்லை".

அவ்வளவுதான்.இருக்கும் இடம்தனை மறந்து"உனக்கெல்லாம் வெக்கமா இல்ல..எந்த மூஞ்சிய வெச்சிட்டு என்கிட்ட பேசுற என் பேர சொல்ல கூட உனக்கு உரிம இல்ல..சீ உன்ன பத்தி தெரிஞ்சும் நீ அப்டி இல்ல மாற்றிட்டனு நெனச்சேனு பாரு என் புத்திய செருப்பால அடிக்கணும்..உனக்கு கேடுன்னு பதறிக்கிட்டு ஓடி வந்தான் ஆனா நீ"கோவம் அழுகையாக வெடிக்க அதற்கு மேல் பேச முடியாமல் கேவல் வெடிக்க"முல்ல நா சொல்றத கேளு"அவள் கைப்பிடிக்க முயல அவளோ எச்சிலை காரி உமிழ்ந்தால் அவன் முகத்தில்.

சுற்றிலும் ஆட்கள் வேடிக்கை பார்க்க பாரிக்கு அவமானத்தில் உயிரே போனதே..அவள் மேல் கொண்ட காதலையும் மீறி"சே என்ன பெண்ணவள் சொல்ல வருவதை கூட கேட்க்காமல் பொது இடத்தில் என்னை அவமானப்படுத்தி விட்டாளே விட மாட்டேன் முல்லை உன்னை விடவே மாட்டேன் என் காலில் விழுந்து நீ கதறி துடித்து மன்றாடி மன்னிப்பு கேட்க வேண்டும் இதை செய்யாடில் நான் பாரி வேந்தன் இல்லையடி,... "..சுயநினைவுக்கு வந்தவன் அவளை தேட அவளோ ஆட்டோவில் ஏறி சென்றிருந்தாள்..

ஒரு பக்கம் காதலும் பறி போய் அவமானமும் அடைய காரணம் தன் உடன் பிறந்தவன்..வேதனையில் உழன்றவன் அதன் பின் மேல் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினான்..ஒரு சிறந்த இதய மருத்துவனாக உருவாகினான்..முல்லையை ரியோவின் காதலை காரணம் காட்டி மணந்தான்..

கண்ணா தனக்கு தெரிந்து அனைதையும் கூறி முடிக்க "முல்லைக்கு பாரி மேல எப்டி லவ் வந்துச்சு நான் இல்லாம அவ எங்கேயும் போக மாட்டாளே ஒருவேள அப்டியா தா இருக்கும்..எனக்கு மஞ்சள் காமாலை வந்து ஒரு ரெண்டு மாசம் வீட்லயே இருந்தேன் அப்ப தான் இது நடந்துருக்கணும் ஆனா ஏன் முல்லை இத மறைச்சா..பாரிக்கு எப்படி முல்லை மேல லவ் வந்துச்சு..."

"அத நீ முல்லைகிட்டயும் பாரி கிட்டயும் கேட்கணும்..எப்போ எப்டி லவ் வந்துச்சுனு"...

"அந்த வளரி என்ன ஆனான்"

"அந்த பீட எங்க போய் தொலஞ்சித்தோ"..

"அப்போ முல்லைக்கு உண்ம தெரிஞ்சா"

"எனக்கும் தெரில பாப்போம் இனிமே அவங்க தான் எப்டி லவ் வந்துச்சுனு கதைய சொல்லணும்"...

தொடரும் 


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்