இஞ்சி இடையழகி 28


நெருங்கிய உறவுகள் நண்பர்கள் மட்டுமே..கண்ணா வெண்பாவுடன் வந்திருந்தான்..ரியோவின் கண்கள் ஒரு முழு நிமிடம் வெண்பாவிடம் நிலைத்தது.. அது அவள் முகத்தில் இருந்த புன்னகையால்..அதற்கு மேல் அவன் பார்வைக்கு வெண்பா தெரியவில்லை.. முல்லையுடன் பேசி சிரித்து கொண்டிருந்த தன் மனைவியின் முத்து சிரிப்பில் ஒட்டி கொண்டது ரியோவின் பார்வை.. எதேர்சையாக திரும்பிய சக்தி ரியோவை கண்டாள்.. இப்போது அவன் கண்களில் வழியும் காதல் தனக்கே உரித்தென கர்வம் அவளுள் எழுந்தது..அருகில் வெண்பா இருந்தும் அவனின் மனம் நாடுவது சக்தியை..இது போதாதா அவளுக்கு.. சக்தி இப்போது தன் பழைய உடலை அடைந்து விட்டாள்.. தாய்மை பூரிப்பில் ஒரு சுற்று உடல் ஏறி மாநிறம் கொண்ட வட்ட முகம் மாங்கனியாக ஜொலித்தது.. 

வளைகாப்பில் யாரும் அழைக்காவிடினும் முல்லையின் அழைப்பை ஏற்று வந்திருந்தான் வளரி..அவனை கண்டதும் மலர்ந்த அவள் முகமே அவனுக்கு போதுமானதாக இருந்தது..வளைகாப்பு நல்ல விதமாக முடிந்தது..பாரிக்கு தான் அவளை பிரியவே மனமில்லாமல் அவளுடனே தங்கி கொண்டான்..அவர்கள் மூவரின் வாழ்வில் நடக்க போகும் மாற்றத்தை காண அனைவருமே பீதியுடன் இருந்தனர்..நெஞ்சுக்குள் திக் திக்கென ரயில் ஓடிக்கொண்டிருந்தது கமலிக்கு..

அன்று கமலிக்கு மனமே சரியில்லை..அவருக்கு வந்த கனவை பற்றியே யோசித்து கொண்டிருந்தார்..கனவில் ஒரு பெண் மஞ்சள் பட்டுடுத்தி கமலின் கையில் இரு தேங்காய் கொடுக்கிறார் அவர் முகத்தில் அப்படியொரு தேஜஸ்..அந்த தேங்காய் இரண்டும் கமலின் கையிலிருந்து தவறி விழுகிறது..இரண்டும் உடைந்து விட அதில் ஒன்றில் பூ விழுந்திருக்க மற்றோன்று அழுகி போயிருந்தது..விடிய காலையில் கண்ட கனவில் பதறியடித்து எழுந்தார் கமலி..இரு தேங்காய் இரு மகன்கள் அல்ல இரு பேர குழந்தைகள் என்று மட்டும் புரிந்தது..

வளரி முறை தவறி சுற்றினாலும் அவன் இதுவரை அத்துமீறவில்லை..அவனை ஒதுக்கி தள்ளவும் தாய்மனம் ஒத்துக்கொள்ளவில்லை..பாரியோ இப்போது தான் சந்தோசமாக இருக்கிறான்..கடவுளே மனம் அலைமோத குடும்ப ஜோதிடரை வரவழைத்து கனவை பற்றி கூறினார்.மருமகள் ஈருயிராக இருக்கும் நேரத்தில் ஏன் இந்த பயங்கர கனவு..பாரிக்கு ஒண்டென்றால் முல்லை தாங்குவாளா..ஜோதிடரோ பாரி முல்லையுடன் குல தெய்வ வழிபாடு செய்தால் நல்லதென கூறி சென்றார்..

கமலிக்கும் அதுவே சரியென பட்டது.பாரியிடம் மட்டும் கனவை கூறி அன்பிடம் கூறினால் மனம் சஞ்சல படும் என்பதால் வெறும் குலதெய்வ வழிபாடு என கூறி முல்லையை அழைத்து செல்ல போவதாக கூறினார்.. வளரியை அவரே சென்று அழைத்ததால் வர சம்மதித்தான்.. கிரேஷால் வர இயலவில்லை.. சக்தியை கவனித்து கொள்ள வேண்டும்.. முல்லையுடன் கமலி செல்வதால் நிம்மதியாக வழியனுப்பி வைத்தனர்..

விதியோ வழிமேல் விழி வைத்து இவர்கள் வரவை பார்த்துக்கொண்டிருந்தது..

பாரி வேந்தன் முல்லைக்கொடியுடன் கமலி வளரி வேந்தன் அனைவரும் அவர்கள் குடும்பத்தின் குல தெய்வ வழிபாட்டிற்காக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்..வளரியும் பாரியும் முன்னாள் அமர்ந்திருக்க முல்லையும் கமலியும் பின்னே அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.. அதிகாலையில் தொடங்கிய இவர்களது பயணம் சென்று கொண்டே இருந்தது..முல்லைக்கு முதுகு வலிக்கும் போதும் அவள் உட்க்கார முடியாமல் அவதிப்படும் போதும் பாரி காரை நிறுத்தி விடுவான்..

அவளை ஆசுவாசப்படுத்தி மீண்டும் பயணம் தொடரும்..பாரி முன் கண்ணாடி வழியே தன்னவளை ரசித்த கொண்டிருக்க அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தவளுக்கு வெட்கமும் காதலும் ஒருங்கே வந்தது..கண்களால் மட்டுமே அவர்கள் பேசும் நயன பாஷை அவர்கள் இருவர் தவிர வளரிக்கு புரிந்தது..மனதில் நெருப்பில் காட்டிய ஊசியை நகக்கண்ணில் ஏற்றுவது போல ஒரு வலி..வேதனையில் தொண்டை அடைத்தது ஆனால் அழுகை வரவில்லை..

கண்ணீர் வழிந்திடாமல் இருக்க அந்த கணம் மனதிற்குள் தோன்றிய பாடலை பாடினான்..

கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்

அடிமேல் அடியாய்
மேளம் போல் மனதால்
உயிர் வேறோ உடல் வேறோ
விதியா விதியா செடி மேல்
இடியா செல்லாதே செல்லாதே

வளரி பாடிய பாடலில் உண்மையான வேதனை வெளிப்படையாக தெரிந்தது..அந்த உடைந்த குரலே நொறுங்கின இதயத்தை வெளிச்சம் போட்டு காட்டியது..முல்லை கொடியின் கண்கள் வளரி பாட தொடங்கும் போதே அவனை கூறு போட தொடங்கி விட்டது..அந்த குரலோ அதன் உள்ளர்த்தமோ அவள் அறியால் ஆனால் அவனின் வேதனை அவளை வருத்தியது..ஏதோ ஒரு பெண் அவன் மனதிலிருக்கிறாள்..அவளை எண்ணியே இவன் வாடுகிறான் என புரிந்து கொண்டாள்..ஆனால் கமலிக்கோ நெருப்பில் நிற்பது போல வேதனை யார் மனதில் என்ன ஓடுகிறது என்றே தெரியவில்லை..பாரியின் நிலை அவன் ஓட்டும் வேகத்தில் தெரிந்தது..முல்லை பயந்து"பாரி ஏன் இப்டி வேகமாக போறீங்க..ஸ்லோவா போங்க"...

"ஆமாடா எதுக்கு இப்டி பறக்குற..மூடிட்டு மெதுவா போ..நமக்கே நேரம் சரியில்ல."...

பாரி வேகத்தை மட்டுப்படுத்த ஒரு கட்டதில் முல்லை கொடி உறங்கி போனாள்.. ஆனால் உறங்குவதற்கு முன் வளரிக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.."வளரி உனக்கு என்ன பிரச்சனனு எனக்கு தெரில.. ஆனா உனக்குள்ள ஒரு வலி இருக்கு அத எப்பவும் நா உன் கண்ணுல பாத்துருக்கேன்..அந்த வலி போக வழி என்னானு எனக்கு தெரில.. ஆனா எந்த வலியா இருந்தாலும் உன் மனசுல போட்டு வெச்சிக்காத.. உனக்கு ஷேர் பண்ண யாரும் இல்லனு நெனைக்காத எனக்கு ரியோ எப்டியோ அதே மாறித்தான் நீயும் சரியா"..அதோடு முல்லை களைப்பின் பிடியில் உறங்கி போனாள்.. ஆனால் பாரி மனதில் வளரியை பற்றிய சிந்தனைகள் படர்ந்து கொண்டிருந்தது..அவன் மன வேதனை பாரிக்கு புரியாமல் அல்ல இதுவே வளரி விரும்புவது வேறு ஒரு திருமணமாகாத பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக அண்ணனின் காதலை சேர்த்து வைத்திருப்பான். 
ஆனால் அண்ணன் விரும்பும் பெண் தம்பியின் மனைவி அதிலும் கர்ப்பிணி.. இது எந்த விதத்தில் நியாயம்.. வளரியோ தான் வேதனை கொண்டால் அது முல்லையை பாதிக்கிறது என்பதால் இனி அவள் முன் தன் வேதனைகளை காட்ட கூடாதென முடிவெடுத்தான்..

மதியம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்..அங்கே உறவுகளின் வரவேற்ப்பு தடபுடலாக இருந்தது.வளரியை பாரியின் நண்பனென சொல்லி அறிமுகப்படுத்தினார் கமலி..விருந்துபசரிப்பு முடிந்து அனைவரும் ஓய்வெடுத்தனர்..மாலை அந்த கிராமமே அழகோவியமாக இருந்தது..மஞ்சளை குழைத்து வர்ணம் பூசியது போல பொன் வெயில் எழிலை அள்ளி வீசியது..பச்சை பசேலென இருந்து கிராமத்தை காண கண்ணிரண்டு பற்றவில்லை முல்லைக்கு..அவளுக்கு கிராமத்து அழகை சுற்றி காட்ட அழைத்து வந்திருந்தான் பாரி..பார்க்கும் இடமெங்கும் வண்ண மயம்..கரம் பிடித்தவன் கரம் கோர்த்து அவன் ஆள்கட்டி விரல் சுட்டி காட்டும் அழகினை ஆசையாக பார்த்து கொண்டிருந்தாள் முல்லை..

அந்த அகிலமே இயற்கையின் முன் அமைதியாக இருந்தது.."பாரி"

"என்னமா"

"இந்த ஊரு ரொம்ப அழகா இருக்குல"

"ம்ம்"

"நாமளும் வயசான காலத்துல இந்த ஊருக்கு பொட்டிய கட்டிட்டு வந்து சேரனும்.."

"எதுக்கு"

"காலம் போன காலத்துல நம்ம பிள்ளைங்க எல்லாம் நம்மல நின்னு கூட பாக்க மாட்டாங்க..சோ நாம அவங்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்காம இங்க வந்து தனியா லவ் பண்ணலாம்"..

"ம்ம்ம் அப்டியா செல்லம் வேற என்ன பண்ணலாம்"..அவளை பின்னிருந்து அணைத்து கொண்டு ஒரு தென்னை மரத்தில் சாய்ந்து நின்றான்..அவன் மேல் வாகாக சாய்ந்தவள்"ம்ம்ம் அப்ரோ இங்க நமக்கு நெறைய நிலம் இருக்குனு அத்த சொன்னாங்க சோ நாம விவசாயம் பண்ணலாம்..ஏதாச்சும் பார்ம் வைக்கலாம்..பெரிய பூ தோட்டம்..நெறைய வெரைட்டி பூ இருக்கனும்..அந்த தோட்டதுக்கு நடுவுல சின்னதா ஒரு வீடு..அந்த வீட்டு வெளி தூண்ல எல்லாம் பேப்பர் பூ இருக்குல்ல அத நெறைய ரெண்டு மூனு கலர்ல வளத்து அது அந்த தூண்ண சுத்தி வர்ற மாறி இருக்கனும்..பாக்கவே நம்ம வீடு fairy tall வீடு மாறி இருக்கனும்..

"ம்ம்ம்ம் அப்றம்"

"அப்றம் மூனு ரூம் இருக்கனும்..ஒன்னு நமக்கு..மத்த ரெண்டு ரூம்மயும் பூட்டி வைக்கணும்"

"அதுக்கு ஒரே ஒரு ரூம் கட்டுனாலே போதுமே டி எதுக்கு வீணா மூணு ரூம்"

"ப்ச் அப்போ நம்ம பிள்ளைங்க பேர பிள்ளைங்க வந்தா தெருவுல படுப்பங்களா எரும"

"ஓ ஆமால..உனக்கும் மூள இருக்கு செல்லம்.."

"கொன்றுவேன் உன்ன..போடா நான் எதுவும் சொல்லல"

"ஹேய் சொல்லுடி சரி நா நடுவுல பேசல நீயே சொல்லு"

"ம்ம்ம் நம்ம ரூம்ல ஒரு ஆளு படுக்குற பெட் இருக்கனும்"..

"புரியுது பேபி நாம இப்டி இறுக்கமா கட்டிபுடிச்சு படுக்கணும் அதுக்கு தானே"

"ம்ம் அப்படியே அந்த இயற்கையோடு நாம ஒண்ணா இருக்கனும்..நைட்ல வெளிய சாய்வு நாற்காலில உன் மேல நா ஒக்காந்து அந்த நிலாவ ரசிகனும்..எப்பவும் போட்டி போட்டு லவ் பண்ணிட்டே இருக்கனும்..கடைசியா நீ எனக்கு முன்ன செத்து போயிரணும்.."

"ஏண்டி அப்டி சொல்ற"..

"ஆமா பாரி..என்னால நீ எவ்ளோ கஷ்டப்பட்டுருக்க..உன்ன படுத்தி எடுத்துருக்கேன்..அதுக்கெல்லாம் நீ எனக்கு எவ்ளோ பனிஷ்மென்ட் கொடுத்தாலும் பரவால்ல..ஆனா நீ கொடுக்க மாட்ட.உனக்கு ஒன்னு தெரியுமா பாரி..சின்ன வயசுல இருந்தே உன்ன லவ் பண்றேன் பாரி..அத உங்கிட்ட சொல்லலாம்னு நெனைக்கும் போதுதான் நீ அப்டி பண்ண..உனக்கு உடம்புக்கு முடிலனு எப்டி அடிச்சு புடிச்சு ஓடி வந்தேன் தெரியுமா என் உயிரே என்கிட்ட இல்லனு சொல்லலாம்..ஆனா நீ பொய் சொல்லி வரவெச்சு ப்ச் ஏன்டா அன்னைக்கு அப்டி பண்ண..அதுனால நா எவ்ளோ ஹர்ட் ஆயிருப்பேனு நெனச்சு பாத்துருப்பியா..சொல்ல போனா என் உயிர யாரோ வெளிய இழுத்து வெளையாடுற மாறி இருக்கும்.."

"முல்லைம்மா"

"அப்ரோ ஒரு பொண்ண எப்டி இப்டி பண்ணலாம்..அதும் நீ எப்டி இத பண்ணலாம்..அதான் என்னால தாங்கவே முடில உன்ன மன்னிக்கவும் முடில..அப்றம் ரியோக்காக உன்கிட்ட வந்தேன்..நீ அப்பவும் நடந்ததுக்கு பீல் பண்ணாம என்ன பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிட்ட..அதுக்கு அப்புறமும் நமக்குள்ள எதுவும் சரியா நடக்கல..ஆனா உன் லவ் எனக்கு புரிஞ்சிது..அத ஏத்துக்க முடில..ஏன்னா நா குண்டா அசிங்கமா இருக்கேன் ஆனா நீ எவ்ளோ அழகா இருக்க..உனக்கும் எனக்கும் எப்டி செட் ஆகும்னு ஒரு பீல் வந்துருச்சு பாரி..இதுக்கு எல்லாம் காரணம் உன்னால தான்..ஏண்டா அன்னைக்கு அப்டி பண்ண"..

"முல்லைம்மா சில விசயத்துக்கு காரணம் சொல்ல முடியாது..முடியல அதான் உண்மை..அன்னைக்கு லூசு மாறி ஏதோ நடந்துகிட்டேன்டி..ஆனா நீ போன அப்ரோ தான் புரிஞ்சிது அதான் உன்கிட்ட மன்னிப்பு கேக்க வந்தேன் ஆனா நீ என்ன அசிங்கபடுத்தி அனுப்பிட்ட..உன்ன பழிவாங்கணும்னு தோணுச்சு ஆனா முடிலடி..என் மனசு முழுக்க நீதான் இருக்க.நா இழுத்து விடுற மூச்சு கூட உனக்காக தானு சொல்லலாம் அவ்ளோ பைத்தியமா இருக்கேன்டி உன்மேல..நீ எனக்கு வேணும்னு நெனச்சேன் அப்போதான் நீயா என்ன தேடி வந்து..அப்டியே கோழி அமுக்குற மாறி அமுகிட்டேன்..உனக்கு ஒன்னு தெரியுமா முல்லை நீ மட்டும் ஒல்லியா இருந்திருந்தா நா திரும்பியும் பாத்துருக்க மாட்டேன்..இந்த முட்ட கண்ண பாத்து தான் பைத்தியமா ஆனேன்..குண்டு உடம்பு பாத்துதான் உன் கிட்ட வாயடிக்க ஆரம்பிச்சேன்..இதுவர எந்த பொண்ணு கிட்டயும் இப்டி நா பண்ணது இல்ல..எனக்கு சரிசமமா நின்னு பேசுன மொத பொண்ணும் நீதான்..என் உயிருல கலந்து நான்ற எல்லாமே நீயாயிட்ட அவ்ளோ தான்"..

பாரி சொல்லி முடித்ததும் முல்லை கண்களில் கண்ணீர் வடிய தொடங்கியது..பேசினால் தீராத பிரச்சனை இல்லை அதுவே தான் இங்கும் நடந்திருக்கிறது..இத்தனை நாள் அவன் பேசாத பேச்சு அவள் பேச விடாத பேச்சு இயற்கை பேச வைத்தது..தூய காற்றில் அவர்கள் காதலும் தூசி தட்டி வைரமாக மிளிர்ந்தது..ஆம் முல்லை கொடி பாரியை மன்னித்து விட்டாள்..என்றோ ஒரு நாள் அவன் மேல் கொண்ட கோபம் கூட அவனது அன்பில் கானல் நீராய் கரைந்து போனது..அவள் மேல் கொண்ட மெய் நேசத்தை புரிந்து கொள்ளாமல் அவள் செய்த சிறு தவறுக்கு தண்டனை தர வெறி பிடித்து அலைந்து அவளை நிர்பந்தத்தில் நிற்கவைத்து மணந்து கொண்டு அவள் விரும்பமின்றியே அவளை அடைந்தான் தன் உயிரை விதைத்தான்..இவையனைத்தும் அவள் மேல் கொண்ட மெய் காதலின் பிரதிபலிப்பே..அவர்கள் காதலை கண்டு வேகமெடுத்து வீசிய காற்று கூட மெல்லிய பூங்காற்றாய் மாறி அவர்களை தழுவி சென்றது..

தூரத்தில் அவர்களை ஒரு பெரிய ஆலமரத்தின் பின்னிருந்து பார்த்து கொண்டிருந்தான் வளரி..மனம் கனத்து போனது..ஆனாலும் இந்த வலி இயல்பு தானே..வந்த தடயமே இல்லாமல் திரும்பி சென்றான்..மனதில் அடைத்து கிடந்ததை வெளியே கொட்டிய பின் மனம் லேசாகியது இருவருக்கும்..அவர்கள் வீடு திரும்ப இதுவரை அவர்கள் முகத்தில் இல்லாத அளவு நிம்மதியை கண்டதும் கமலிக்கு மனம் நிறைந்தது..இரவு உண்டு உறங்கி மறுநாள் குலதெய்வ வாழிபாட்டிற்கு சென்றனர்..

முல்லை கையால் பொங்கல் வைத்து மனமுருகி தன் குலதெய்வத்திடம் வேண்டுதல் வைத்தார் கமலி"சாமி என் பிள்ளைங்களுக்கும் பேர பிள்ளைங்களுக்கும் எந்த குறையும் வர கூடாது..என் மருமக நல்லபடியா பெத்துட்டெடுத்து ஆரோக்கியமா வீடு வரணும்..நீதான் அவங்க கூட இருக்கனும்"..

தெய்வ வழிபாடு முடிந்து கமலின் மனபாரம் சற்று இறங்கியது..நிம்மதி பெருமூச்சுடன் கிளம்ப ஆயுதமானார்கள்..உறவினர் ஒருவரின் பெண்ணிற்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர்களை சென்று பார்க்க விரும்பினார் கமலி..ஆனால் முல்லை ரொம்பவே சோர்ந்து காணப்பட்டாள்..அவளை அந்நிலையில் கூட்டிக்கொண்டு அலைய முடியாது..எனவே கமலின் அத்தை முல்லை பாரியை வீட்டிற்கு கிளம்ப சொன்னார்..தலைவலிப்பதாக கூறி வளரியும் அவர்களோடே சென்றான்..கமலி மற்ற சில உறவுகளுடன் குழந்தை பெற்ற பெண்ணை காண சென்றார்..

முல்லை பின்னிருக்கையில் சாய்ந்திருந்தாள்..ரொம்பவே அசதி அவளுக்கு..அளவுக்கு மீறிய உஷ்ணம் வேறு..சேலை தலைப்பால் விசிறி கொண்டிருந்தாள்..பாரி ஏசியை அதிகமாக வைத்தும் அவளின் வியர்வை அடங்கவில்லை..பாரியை காரை நிறுத்த கூறினான் வளரி..அவனை ஒரு பார்வை பார்த்தபடியே காரை நிறுத்தினான் பாரி..கீழே இறங்கிய வளரி முல்லையுடன் பின்னே அமர்ந்தான்..காரிலிருந்து ஒரு நாளிதழை எடுத்து முல்லைக்கு விசிற தொடங்கினான்..அவனை முறைத்தபடியே காரை வேகமாக இயக்கினான் பாரி..அவர்கள் குலதெய்வ கோவில் கிராமத்தை விட்டு வெகுவாக தள்ளிருந்தது..

சொல்லப்போனால் படும் கிராமம்..ஆள் நடமாட்டமே இல்லை..சுற்றியும் பொட்டல் காடு..பாரிக்கே ஏசி காரில் வியர்வை வழிந்தது..முடிந்த வரை விரைவாக சென்றான்..திடீரென நடு ரோட்டில் யாரோ மரத்தை வெட்டி போட்டு வழிமறித்து வைத்திருந்தனர்..எவன்டா அது நடு ரோட்ல மரத்தை வெட்டி போட்ருக்கறது அறிவு கெட்ட பன்னாட..பாரி கறுவி கொண்டே கீழிறிங்கி அந்த மரத்தை இழுக்க முயன்றான் ஆனால் முடியவில்லை..வளறியும் இறங்கி சென்று பாரிக்கு உதவினான்..

மரம் சர்ரே அசைந்தது..இருவரும் முக்கி தூக்கி மரத்தை அந்த பக்கம் போட்டு விட்டு திரும்ப சர்ரென்று இரண்டு கார்கள் வந்து நின்றது அதிலிருந்து ஆறேழு பேர் இறங்கினர்..பாரியும் வளரியும் என்னவென்று பார்க்கும் போதே அவர்கள் இவர்களை தாக்க தொடங்கினர்.."ஏன்டா என்ன தைரியம் இருந்தா என் தலைவன் மகனயே அடிச்சிருப்ப..அதும் ஒரு அனாத நாயிக்காக..உன்ன போட்டு தள்ள டைம் பார்த்துட்டே இருந்தோம்டா..இப்ப தான் தனியா வந்து சிக்கிருக்க..இந்த பொட்ட காட்லயே உன் கதைய முடிக்குறோம்டா டேய் போடுங்கடா அவன"

"ண்ணா அவன் கூட எவனோ இருக்கான்"..

"அவனையும் போட்டு தள்ளுங்கடா எவனும் இங்கிருந்து உசுரோட போக கூடாது"..அவர்கள் பேச பேச உறக்கம் கலைந்த முல்லை பயந்து பதறி கீழே இறங்கினாள்..

"முல்லை ஏண்டி கார்ல இருந்து இறங்குன..கார்ல ஒக்காரு நா சொல்ற வரை இறங்காத"..

"பாரி நீயும் வா..நாம போயிரலாம் அவங்க நெறைய பேரு இருகாங்க வந்துரு பாரி..வளரி பாரிய கூட்டிட்டு வந்துரு"...

"இல்ல முல்லை இவங்கள இப்டியே விட்டு வர முடியாது பாரி சொல்ற மாறி நீ உள்ள போய் ஒக்காரு"..

"அண்ணா அந்த பொண்ணு இவன் பொண்டாட்டி போல..மாசமா வேற இருக்கா இப்ப என்னணா பண்றது.."

"டேய் பரதேசி மொத இவனுங்கள போட்டுட்டு அவளையும் போட்டு தள்ளுங்கடா..அடடா இன்னா அழகா இருக்கா கொழு கொழுன்னு..ப்ச் மாசமா இருந்து தொலைச்சிட்டா இல்லேனா ஒரு கை பாத்துருக்கலாம்.."

"இப்ப மட்டும் என்னணா எப்படியும் சாவ தானே போறா..சாவரத்துக்கு முன்னாடி நமக்கு சொகத்த கொடுத்துட்டு போட்டுமே"...அவர்கள் வேறு யாரும் இல்லை..கன்னிகாவை சித்திரவதை செய்த கயவன் தந்தையின் கையாட்கள்..வஞ்சம் தீர்க்க சரியான சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்து இவர்களை மோப்பம் பிடித்து கொண்டே இவ்வளவு தூரம் வந்து விட்டிருந்தனர்..

அவர்கள் தேவை தாம் எனும் வரை கோபத்தை அடக்கி கொண்டிருந்த பாரி அவர்கள் தம் மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் அவளை சீரழிக்க போவதாய் கூற உடல் விறைக்க கோபத்தில் முஷ்டி இறுகி நின்றான்..அவனுக்கு சற்றும் சளைக்காத கோபத்தில் வளறிம் இருந்தான்..

பாரியின் சொல்படி காரினுள் அமர்ந்து கொண்ட முல்லை கைபேசியில் கண்ணாவிற்கு அழைக்க முயற்சித்தாள்.. அறவே சிங்னல் இல்லாததால் அவளின் முயற்சி தோல்வியே..பயம் பந்தாய் அடைக்க வெளியே பார்த்தாள் அங்கே அந்த ஆறேழு ஆடவர்களுடன் உடம்பிறப்பு இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்தனர்..

ஒருவன் பாரியை பின்னிருந்த கத்தியால் குத்த போக அதை பார்த்த முல்லை காரிலிருந்து இறங்கி ஓடினாள்..அவளின் குரல் கேட்டு பாரி சட்டென திரும்பி பார்த்து அந்த அடியாளை அடித்து நொறுக்கினான்..சற்று நிம்மதி பெருமூச்சுடன் நின்றாள் முல்லை..அந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவு போல அவளின் பின்ன அடியில் சுருண்டு கிடந்த ஒருவன் எழுந்தான்..கையில் கட்டையுடன் அவளை நெருங்க இப்போது வளரியும் பாரியும் ஒரு சேர முல்லையென கத்தி கொண்டே ஓடி வந்தனர்..அதற்குள் இன்னொருவன் இரும்பு கம்பியை தூக்கி முல்லையை நோக்கி வீச அது சரியாக அவள் வயிற்றை தாக்கியது..

வலியில் அவள் அப்படியே வயிறை பிடித்து கொண்டு விழ பின்னே வந்தவன் வேறு கட்டையால் அவள் முதுகில் அடித்து விட்டான்..வலியில் சுருண்டு விழுந்தே விட்டாள் முல்லை..அவள் விழும் முன் கையில் தாங்கி கொண்டான் பாரி..வளரிக்கு அவளை அந்நிலையில் பார்த்து என்ன செய்வதென்றே தெரியவில்லை..அவர்களை நோக்கி வந்த அடியாட்களை முர்கத்தனமாய் தாக்கினான்..முல்லை வலியில் துடிக்க பாரியை நோக்கி"டேய் அவள தூக்கிட்டு போடா காருக்குள்ள போ"..

பாரி முல்லையை தூக்கி கொண்டு காருக்குள் சென்றான்..அவன் மேலும் காயத்தின் ரத்தம்..காரில் அவளை படுக்க வைத்தவனுக்கு புரிந்து விட்டது குழந்தை வெளியே வர துடிப்பது..இந்த பொட்டை காட்டில் எந்த மருத்துவ வசதி உள்ளது..அவன் கரமே அழுக்காக தான் இருந்தது..இங்கிருந்து மருத்துவமனை செல்லும் வரை முல்லை தாங்க மாட்டாள்..அவளின் பிறப்புறுப்பில் இருந்து குருதி வழிய தொடங்கியது..அங்கே வளரி காரை நெருங்க முயலும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தான்.வெறி கொண்டவனை போல அவன் தாக்குதலில் சிக்கிய அனைவரும் பலத்த காயங்களுடன் சுருண்டு விழுந்தனர்..உடனே காரின் அருகே ஓடி வந்தான்..

"டேய் முல்லைக்கு வலியெடுத்துருச்சுடா..இப்ப என்ன பண்றது"..

"வண்டில ஏறுடா சீக்கிரமா ஹாஸ்பிடல் போயிரலாம்"

"இல்லடா அதுவரைக்கும் அவ தாங்க மாட்டா.."..அவர்களுக்குள் இருக்கும் மனக்கசப்பு கூட அந்நேரம் காணாமல் போனது..முல்லையின் கதறல் உயிரை அறுத்தது.."பாரி ஐயோ என்னால முடில பாரி..சீக்கிரம் ஏதாச்சும் செய்யு ப்ளீஸ் ஆ அம்மா"...

முல்லையின் கதறல் நின்றபாடில்லை வலியில் துடியாய் துடித்தாள் வேறு வழியே இல்லை..கார் பின்னே திறந்தான் பாரி..அங்கே சாமிக்கு படைக்க அதிகப்படியாக எடுத்து சென்ற சேலையும் இரண்டு பாட்டிலிகளில் தண்ணீரும் இருந்தது..அந்த சேலையை எடுத்து ரெண்டாக கிழித்தான்..முல்லை மேல் விரித்தான் ஒரு பாகத்தை..பாட்டில் தண்ணீரில் கைகளை கழுவினான்..ஓட்டுநர் இருக்கையை முன் இழுத்து சாய்த்தான்..முல்லையின் கால்களை விரித்த நிலையில் வைத்தான் பாரி..வளரி காரின் அந்த பக்க கதவின் அருகே சென்று முல்லை தலைமாட்டில் நின்று கொண்டான்..அவள் கரத்தினை பற்றி கொண்டு"முல்லைம்மா தோ பாரு ஒன்னும் இல்லடா..பாப்பா பொறக்க போறாங்க சரியா தைரியமா இருடா"..கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே பேசினான்..

ஆனால் முல்லையோ"முடில வளரி ரொம்ப வலிக்குது செத்துருவேன் போல..ஐயோ ரொம்ப வலிக்குது"...

"அப்டி சொல்லாத மா உனக்கு ஒன்னும் ஆகாது..டேய் பாரி சீக்கிரம் டா"...பாரி முல்லையின் கால் புறம் நின்றான் காரின் மறு பக்கத்தில்.."முல்லை தோ பாரு மூச்ச இழுத்து புஷ் பண்ணுடி"...

"முடில பாரி ஆஆ"..

"புஷ் பண்ணுடி உன்னால முடியும்..பண்ணு ம்ம்ம் புஷ் பண்ணு"...அதற்குள் ஒருவன் எழுந்து வருவதை கண்டான் வளரி முல்லையின் கரத்தை விட்டு வேகமாக ஓடினான்..இரும்பை எடுத்து அவன் தலையே உடையும் வரை ஓங்கி அடித்தான்..அவன் மயங்கி விழ இரும்பை போட்டு விட்டு முல்லையிடம் ஓடினான் அவளின் கதறல் பொட்டல் காட்டை கிழித்து கொண்டு கேட்டது..

அதிக ரத்த போக்கினால் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள் முல்லை..தன்னவளை காக்க போறாடி கொண்டிருந்தான் பாரி..முல்லையின் கரத்தை பற்றி முகத்தில் வேகமாக அடிதான் வளரி..அவள் கண்கள் திறந்து கொண்டது.."ப்ளீஸ் முல்லை புஷ் பண்ணு ம்ம்ம்ம் புஷ் பண்ணுமா"..

"புஷ் பண்ணுடி உன்னால முடியும் நா இருக்கேன்டா புஷ் பண்ணுடி"..

பாரி வளரியின் குரல்கள் முல்லை செவியை எட்ட உயிரை இழுத்து பிடித்து முக்கினாள்..அவள் முதல் குழந்தையின் தலை வெளியே வர அதை லாவகமாக பிடித்திழுத்தான் பாரி..அறை மயக்க நிலைகே சென்று விட்டாள் முல்லை..வீறிட்டு அழுதது பாரி முல்லையின் முதல் குழந்தை..

கிழித்த சேலையில் குழந்தையை சுற்றி ஓட்டுநர் இருக்கையின் பக்கத்து இருக்கையில் கிடத்தினான்..ரத்த வெள்ளத்தில் காரினுள் கிடக்கிறாள் முல்லை அடுத்த சில வினாடிகளில் மீண்டும் வலியெடுக்க அவர்களின் இரண்டாவது குழந்தை வெளிவந்தது..

வளரியின் கரங்கள் முழுவதும் முல்லை வலியின் அடையாள நக கீறல்கள்..தனது இரண்டு குழந்தைகளையும் பெர்றேடுத்த மறுகணமே மயக்க நிலைக்கு சென்று விட்டாள் முல்லை..அவள் உயிர் ஊசலாடி கொண்டிருந்தது..சில நிமிடங்களில் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவளை காப்பாற்ற முடியும்..

ஆனால் அது முடியாத காரியம் ஏனெனில் அடியில் சுருண்டு கிடந்தவர்கள் எழுந்து இவர்களை தாக்க வந்தனர்..பாரிக்கு அவன் கண்முன்னே அவனின் உயிர் சென்றுகொண்டிருந்தது.
வேறுவழியின்றி அவர்களை தாக்க செல்ல அவனை தடுத்தான் வளரி..அவசரமாக "பாரி முல்லையை தூக்கிட்டு ஹாஸ்பிடல் போ..அவள காப்பாத்து இவனுங்கள நா பாத்துக்குறேன் ."

"அப்போ நீ..எப்டிடா தனியா இவனுங்கள சாமளிப்ப"

"தோ பாரு நா செத்துட்டா என் காதலும் இதோட செத்துரும் ஆனா நா பொழச்சு வந்தா சாகற வர என் காதல் தொடரும் முல்லை மேல..அவள காப்பாத்து பேசறதுக்கு நேரம் இல்லடா போ போ.."முல்லை தலையை ஒரு முறை வருடியவன் கார் கதவை அறைந்து சாற்றி கீழே கிடந்த இரும்பை கையிலெடுத்து கொண்டான்..தாக்க வருவோரை கொடூரமாய் தாக்கினான்..பாரி முல்லையை சரியாக படுக்கவைத்து வண்டியை கிளப்பினான்..பக்கத்து இருக்கையில் அவனின் உயிர்கள் இரண்டும் அழுது கொண்டிருந்தது..இரு உயிர்கள் உயிருக்கு ஊசலாடி கொண்டிருக்கிறது ஒன்று அவனின் காதல் மனைவி இன்னொரு அவனின் உடன்பிறந்த அண்ணன்..கார் அசுர வேகத்தில் பறந்தது..

Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி