இஞ்சி இடையழகி 25


பாரி வீட்டிற்கு வருவதற்குள் அனைவரும் சாப்பிட்டு விட்டனர்..கமலிக்கு உணவே இறங்கவில்லை..முல்லை கட்டாயபடுத்தி உணவு கொடுத்து மருந்து குடிக்க வைத்தாள்..வளரியை காணும் போது சிறு சிரிப்புடன் வாங்க சாப்டலாம் என கூறி பரிமாறினாள்.பொதுவாக அவர்களிடையே நாட்டு நடப்பு பற்றியே பேச்சு சென்றது கமலிக்கு ஒவ்வொரு கவளமும் தொண்டையில் அடைத்து இறங்கியது..முல்லைக்காக சாப்பிட்டார்..சாப்பிட்டு முடித்து விரைவாக தூங்கிடும் கமலி இன்று வளரிக்கு பயந்து அங்கேயே அமர்ந்திருந்தார்..முல்லை சோபாவில் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தாள்..

இடையிடையே அந்த படத்தை பற்றி வளரி விமர்சிக்க முல்லையும் சிரித்து கொண்டிருந்தாள்..கமலிக்கு பகீர் என்றது..நொடிக்கொரு தரம் வாசலை பார்த்தார்..கமலியை புரிந்து கொண்ட வளரி மெல்ல நகர்ந்து அவர் காதில்"என்னமா என் மேல நம்பிக்க இல்ல சரி உன் மருமக மேலயும் நம்பிக்க இல்லையா"..அவ்வளவு தான் மகனை கண்டன பார்வை பார்த்தவர் மெல்ல"என் மருமக நெருப்புடா..."..என கூறி தூங்க சென்று விட்டார்..

பாரி களைத்து போய் வீடு வந்தான்..அவனை கண்டதும் முல்லை முகத்தில் அதுவரை இருந்த சோர்வு மறைந்து புன்னகை வந்தது..மெல்ல எழுந்தவள் பாரியை நோக்கி சென்றாள்..அவளை எதிர் கொண்டு அணைத்து கொண்டான் பாரி..அவள் வளரியை கண்ணால் காட்டி விலகி கொள்ள"ஏன் இவ்ளோ லேட்டு பாரி..எங்க போனீங்க..சரி நாங்க எல்லாம் சாப்டோம்..நீங்க போய் குளிச்சிட்டு வாங்க சாப்டலாம்"..

"ம்ம்ம்"என்றவன் அவளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வளரியை பார்த்து "சாப்டியாடா"..என்றான் ஒரு கேலி சிரிப்புடன்"சாப்டேன் மச்சான்"என்றான் வளரி..குளித்து வந்தவன் முல்லை பரிமாற சாப்பிட்டு முடித்து அவனும் கீழே அமராமல் அவளையும் படம் பார்க்க விடாமல் இழுத்து கொண்டு அறைக்குள் சென்றான்..

"என்ன பாரி நீங்க கீழே உங்க ஃப்ரன்டடு இருக்காரு அவரு கிட்ட பேசாம என்ன இழுத்துட்டு ரூம் குள்ள வந்துடிங்க அவரு என்ன நெனைப்பாரு"..

"அந்த நாதாரி நாயி என்ன நெனச்சா எனக்கு என்ன"...

"பாரி நா அழகா இருக்கேனா"...முல்லை பாரியிடம் இயல்பாக பேச தொடங்கிய நாள் முதல் அவள் கேட்க்கும் கேள்வி இது..தாய்மையின் பூரிப்பில் அவள் அழகியாக தான் இருக்கிறாள்..அதனை அப்படியே சொல்லாமல் 

"ம்ம்ம் நல்லா கொலுக்கு மொலுக்குனு குலாப் ஜாமுன் மாறி இருக்க டி"...

"அப்போ நா குண்டா இருக்கேனு சொல்றிங்களா"அவள் குரலில் பேதம் தெரியும்..

"குண்டா இருக்குற குலாப் ஜாமுன் எவ்ளோ டேஸ்ட்டோ அதே மாறி குண்டா கும்முனு இருக்குற என் பொண்டாட்டி தான் உலகத்துலேயே அழகி"என்பான் பாரி..அவள் முகத்தில் நிம்மதியும் சிரிப்பும் ஒருங்கே வரும்..இப்போதும் பாரி அதனையே சொல்ல வெட்க சிரிப்புடன் அவன் கரங்களை பிடித்து கொண்டு உறங்கி போனாள் முல்லை..பாரிக்கு உறக்கம் வரவில்லை..அதே நிலையில் தான் வளரியும் இருந்தான்..மறு நாள் காலை தோட்டதில் நடைபயின்ற முல்லையின் கண்கள் ஒன்றை கண்டது அது பிக்காச்சு உடன் கொஞ்சி விளையாடும் வளரி..பாரி அதனிடம் இருந்து பிடிங்கி தான் உண்பான்..ஆனால் வளரியோ அதற்கு பொறுமையாக உணவளித்து கொண்டிருந்தான்..அவன் அருகில் சென்ற முல்லை"என்ன வளரி என் பிக்காச்சு உங்க ஃப்ரன்ட்டாச்சு போல"...

"ஒரு பத்து நிமிஷம் முன்னாடி இருந்து"...இவர்களின் உரையாடல் பிக்காச்சுவில் தொடங்கி தோட்டத்து மலர்களில் தாவி அப்படியே வளர்ந்தது.. மதியத்திற்குள் முல்லை வளரியை ஒருமையில் அழைக்கும் அளவு நட்பு வளர்ந்திருந்தது..

இரவு வேலை முடிந்து வீடு வந்தவன் சற்று பயந்து தான் போனான்.. சக்தி விளக்கு போடாமல் இருளில் வீட்டை மூழ்கடித்து வைத்திருந்தாள்.."என்னாச்சு இவளுக்கு ஏன் வீட்ட இருட்டுல வெச்சிருக்குறா இப்டி செய்ய மாட்டாளே ஒரு வேல உடம்பு முடியலையோ"தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் சொல்லி கொண்ட ரியோ விளக்கை தட்டி விட்டு சக்தியை அழைத்து கொண்டு அறைக்குள் சென்றான்..பூமியை கதறடிக்கும் சூரியனின் தாகத்திற்கு ஒன்றிற்கு இரண்டு ஏசி போடலாம் என்ற நிலையில் ஜன்னலை கூட திறவாமல் ஒரு பொட்டு காற்றுக்கு இடமில்லாமல் தலையோடு போர்த்தி கிடந்தாள் சக்தி.. 

இரண்டே எட்டில் அவளை அணுகியவன் சக்தி என அழைத்து கொண்டே போர்வையை விலகினான்.. உள்ளே தொடர் இடிக்கு நடுங்கும் குழந்தை போல வெடவெடத்து கொண்டிருந்தாள் சக்தி.. சக்தி "என்னமா என்ன செய்யுது"...அவளை மெல்ல தூக்கி தான் தோளில் சாய்த்தபடி அமர்ந்தான்.. அவள் மேனி சூடே கூறியது அவளின் நிலையை.. 

"எப்ப இருந்து காய்ச்சல் அடிக்குது ஏன் எனக்கு ஃபோன் பண்ணல.."அவளை கடிந்து கொள்ள மனமற்றவன் மெல்ல கேட்டான்.. 

"லேசா தானே காய்ச்சல் அடிக்குது அதான் ஃபோன் பண்ணல"... 

"அக்கா கிட்ட சொல்லறது தானே"

"அவங்கள எதுக்கு கஷ்டபடுதனும்"

"அட போடி இவளே"... பாரியை அழைத்து முடிந்தால் வீட்டிற்கு வர சொன்னான்..பாரியும் சற்று நேரத்தில் வந்தவுடன் சக்தியை பரிசோதித்து அதிக வீரியம் அல்லாத மருந்து டானிக்குகளை கொடுத்து அவளை உறங்க கூறினான்.வெளியே அவன் கார்வரை வந்தவன் "டேய் ரியோ சக்தியை பத்திரமா பாத்துக்கோ மன்த்லி செக்கப்புக்கு அவ கூட ஒழுங்கா போ வேல வேலன்னு இருந்துறாத"..

"அதெல்லாம் நா பாத்துக்குரன் வளரி என்ன தான் சொல்றான்..நீங்க இன்னும் எத்தன நாளுக்கு பொறுமையா இருக்க போறீங்க.. இங்க ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோனு நாங்க உயிர கையில புடிச்சுகிட்டு இருக்கேன்"...வளரியை பற்றிய அனைத்தும் ரியோ அன்பு கிரேஸ் கண்ணா நால்வருக்கும் தெரியும்..பயத்தில் ரியோ கேட்க 

"எல்லாம் நல்லதே நடக்கும்"..ஞானியை போல கூறியவன் லேசான புன்னகையுடன் கிளம்பி விட்டான்..வீட்டில் அவனுக்காக ஏழு மாத பிறை நிலவு காத்திருந்தது..அவன் கார் சத்தம் கேட்டதும் வெளியே வந்தவள் அவன் இறங்குவதற்குள் அருகில் சென்று"பாரி சக்திக்கு என்னாச்சு என்ன பண்ணுது ரொம்ப பீவரா நல்லா செக் பண்ணி மருந்து கொடுத்தீங்களா"

"அடியே நா இன்னும் கால கூட கீழ வைக்கலடி அதுக்குள்ள எவ்ளோ கேள்வி கேக்குற..சக்திக்கு ஒன்னுமில்ல லேசா பீவர் அவ்ளோதான் உன்ன தூங்க தானே சொன்னேன் பேய் மாறி முழிச்சிட்டு இருக்க"

"ஆமா நா பேய் அப்ப இந்த பேய கட்டிகிட்ட நீங்க யாராம்'..

"பேய்க்கு வாக்கப்பட்டா முருங்க மரம் ஏறித்தான ஆகணும்"..அவனை முறைத்து பார்பவளை ஆசையாக பார்த்து கண்ணடித்து உள்ளே அழைத்து சென்றான்..இவர்களை மேல் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தான் வளரி..கண்களில் மட்டும் நிற்காமல் கண்ணீர் வடிந்தது..ஏதோ உணர்வு தோன்ற கண்களை தொட்டு பார்த்தான் ஓ கண்ணீரா என் அனுமதி இல்லாமலே இப்போது வர ஆரம்பித்து விட்டாய் போல நீயாவது என் மீது நேசம் கொண்டு வருகிறாயா இல்லை நீயும் என்னை வெறுத்து ஒதுக்கி தள்ளுவாயா கண்ணீரே...

முல்லை சற்று நேரம் ஓயாமல் கதை பேசி விட்டு தூங்கி விட பாரி ரியோவின் கேள்வியை நினைத்து பார்த்தான்.காலையில் எழுந்ததும் லேசான உடற்பயிற்சி செய்து விட்டு காலை கடன்களை முடித்து கொண்டு கீழே செல்வாள் முல்லை.கமலி தரும் பழச்சாற்றை பருகி கொண்டே அந்த அழகிய தோட்டத்தை சுற்றி வருவாள்..இந்த நேரம் வளரி எப்போதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரம்..சொல்லப்போனால் அவன் வாழ்வின் பொக்கிஷ நேரங்கள் முல்லையுடன் அவன் கழிக்கும் நேரங்கள் தான்..முல்லைக்காக காத்திருப்பவன் அவளுக்கு முன்பாகவே தோட்டத்தில் காதில் எட் போன் மாட்டிக்கொண்டு பாடல்களை கேட்பது போல காத்திருப்பான்..இப்போது முல்லையின் நெருங்கிய தோழனாவான் வளரி..

கமலிக்கு படபடப்பு இப்போது எல்லாம் சாதாரணமாகி விட்டது..சில நேரங்களில் முல்லையுடன் பாரியும் வருவான் அப்போது அவர்களுக்கு தொல்லை தராமல் ஒதுங்கி கொள்வான் ஆனால் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்று உணர்ச்சியற்ற பார்வையுடன் முல்லை கரம் கோர்க்கப்பட்டிருக்கும் பாரியின் கரத்தினை காண்பான்..

இதனை பாரி கவனித்தாலும் அந்த இரு கண்கள் உரைக்கும் செய்தி புரியாமல் குழம்பினான்..ஆனாலும் இதுவரை தவறான பார்வைக்கு இடமில்லை..பாரி மருத்துவமனைக்கு சென்றவுடன் முல்லையுடனான வளரியின் நேரம் ஆரம்பமாகி விடும்..முல்லை முல்லை என்று அவளையே சுற்றி சுற்றி வருவான் மென்னகையுடன் நகைச்சுவை கலந்த அவன் பேச்சில் அவள் சிரிக்காத நாளே இல்லை..சொல்ல போனால் அவள் பாரியிடம் கூட இப்படி சிரித்தது இல்லை..கமலிக்கு ஒரு பக்கம் நெஞ்சம் பதறும் மறுபக்கம் பெற்று வளர்க்க இயலாத குழந்தை இன்று வாலிபனாக சிரித்து பேசுவதை காண ஆனந்தமாக இருந்தது..அற்ப ஆயுள் கொண்ட ஆனந்தம் ஏனெனில் அவனின் நோக்கம் வேறாயிர்றே தம்பி சுக்ரீவனின் மனைவியை உடமையாக்க நினைத்த வாலியை போல இவனும் காய் நகர்த்துகிறான்..

என்ன நடக்குமோ கமலியின் ஒரு கண் இவர்கள் பின் வால் பிடித்து கொண்டு செல்லும்..வளரியின் விருப்பு வெறுப்பு அனைத்தும் முல்லைக்கு தெரியும் அதே போல அவளை பற்றியும் நன்கறிந்து கொண்டான்..முல்லை பேசும் பத்து வாக்கியங்களில் இரண்டு கண்டிப்பாக பாரியை பற்றியது..இது வளரிக்கு உவப்பாக இருக்காது..பேச்சை மாற்றி விடுவான்.அப்படி தான் ஒரு நாள் உண்மை காதல் என்றால் என்ன என முல்லையிடம் வினவினான் வளரி..

முல்லை"உண்ம காதலா ம்ம்ம் சொல்றேன் எனக்கு அந்த கிரேப்ஸ் எடுத்துட்டு வாயேன் ப்ளீஸ்"...திராட்ச்சை பழங்களை தின்று கொண்டே"எனக்கு தெரிஞ்ச ஒரு லவ் ஸ்டோரி இருக்கு அத சொல்றேன்..ஒரு பையன் அவனுக்கு யாரும் இல்ல..ஒரே ஒரு தங்கச்சி தான் அவள நல்லபடியா வளக்கணும் அதான் அவன் வாழ்க்க லட்சியமே..அதே மாறி பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு அவ குட்டி தம்பி அம்மாவோட வாழ்ந்துட்டு இருந்தா.."

"ம்ம்ம்"

"திடிர்னு ஒரு நாள் அந்த பொண்ணோட அம்மாவுக்கு பிரைன் டியூமர்..கிரிட்டிகள் ஸ்டேஜ்னு தெரியுது..அந்த பொண்ணோட சொந்தகாரங்க யாரும் ஹெல்ப் பண்ணல..அந்த பொண்ணோட அம்மா வீட்டு வேல செய்றவங்க எல்லோரு வீட்டுக்கும் போயி ஹெல்ப் கேட்டு பாத்தா யாரும் ஹெல்ப் பண்ணல..இந்த டைம்ல பக்கத்து வீட்டு பையன் அவன் தங்கச்சியோட ஊர்ல சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போய்டான்..எங்க தேடியும் காசு கிடைக்கல..அவளுக்கு இருக்குற ஒரே ஆறுதல் அம்மா விவரம் புரியாத தம்பி இவங்கள காப்பாத்தணும்..அப்போதான் அந்த முடிவுக்கு வந்தா..அவங்க தெருவுல ஒரு பொண்ணு இருந்தா அவள எல்லோரும் கோல் கேர்ள்னு சொல்லுவாங்க..வேற வழியே இல்லாம அவ கிட்ட போயி ஹெல்ப் கேட்டா..இந்த பொண்ண பத்தி தெரிஞ்ச அந்த பொண்ணு ஹெல்ப் பண்ண தான் நெனச்சா ஆனா அவ கிட்ட அவ்ளோ காசு இல்ல..

அவ என்ன பண்ண..அவ கிட்ட இருக்குற ஆதாயமே அவ உடம்பு தான்..ஆனா இப்ப அவளுக்கும் உடம்பு முடில..இருக்குற காசு நகை எல்லாத்தையும் கொடுத்த அப்பவும் கொஞ்சம் காசு பத்தல..இந்த பொண்ணுக்கு அவ அம்மா வேணும் வேற வழியே இல்லாம அந்த பொண்ணு கிட்ட எந்த பொண்ணும் கேக்காத உதவி கேட்டா..'

"என்ன யாரையாவது பேசி விட சொன்னாளா.."..

"ம்ம்ம் ஆமா..அனாதையா கால் காசுக்கு வக்குலாதவங்க கதி ஆபத்து காலத்துல இத விட கேவலமா இருக்கும்..தனக்குன்னு ஒரு வாழ்க்கையே இல்லனு அந்த பொண்ணு ஒரு முடிவுக்கு வந்தா துணிஞ்சு ஒரு பணக்காரனோட ஆசைக்கு பலியானா..அவ அம்மாவ காப்பாத்துனா..அப்போதான் ஊருக்கு போயிருந்த பக்கத்து வீட்டு பையன் வந்தான்..விஷயம் தெரிஞ்சு துடிச்சு போய்ட்டான்..பாவம் அவன் மட்டும் என்ன செய்வான்..அந்த பொண்ணோட தியாகம் ஊருக்கு முன்னாடி தப்பா போச்சு அவள ப்ரொஸ்டியுட்னு சொன்னாங்க..அவங்க அம்மா தன்ன காப்பாத்த போயி தான் மகளுக்கு இந்த கதின்னு கவல பட்டே செத்துட்டாங்க"..

"ஐயோ அப்ரோ"

"யாருக்காக அவ இவ்ளோ தூரம் செஞ்சாலோ அவங்களே அவள விட்டு போய்டாங்க..அவ மனசலவுல இடிஞ்சு போயிடா..அப்ப அவளுக்கு துணையா இருந்தது அவ தம்பியும் பக்கத்து வீட்டு பையன் அவன் தங்கச்சியும் தான்..அந்த பொண்ணுக்கு இந்த கொடும நடக்குறப்போ அவ ஸ்கூல் கூட முடிக்கல..அப்றம் தம்பிக்காக வாழ தொடங்கினா..யாரு அவள தப்பா பேசினாலும் அத காதுல வாங்கல.."

"குட் இப்படிதான் போல்ட்டா இருக்கனும்"..

"ம்ம்ம் ஆனா அவ வாழ்க்க அவளுக்கு நெறைய அடி கொடுத்துச்சு கேவலம் அவமானம் அசிங்கம்னு தாண்டி வந்தா..அவளுக்குனு ஃப்ரன்ட்ஸ்சே இல்ல..அவளும் வேல செஞ்சிட்டே படிச்சா தம்பியயும் படிக்க வெச்சா நெறய பேர் அவகிட்ட தப்பா நடக்க பாத்தாங்க ஆனா முடில ஏன் தெரியும் அந்த பக்கத்து வீட்டு பையன்..அவன் அந்த பொண்ணுக்கு ஒரு தூண் மாறி இருந்தான்..அவள எப்பவும் பாதுகாத்தான்...நல்லதோ கெட்டதோ அவளுக்காக அவன் இருந்தான்.."..

"லவ்வா"

"இல்ல..இத லவ்வுன்னு சொல்லி ஒரு வார்தைக்குள்ள அடக்க முடியாது..அளந்து பாக்க முடியாத வானம் மாறி ஒரு நேச உணர்வு அது..அந்த பொண்ணுக்கு இது புரிஞ்சாலும் அவ ஒன்னும் சொல்லல..அவங்களுக்கு வயசாயிட்டே போறதால அவங்க தம்பி தங்கச்சி தான் இதுக்கு ஒரு முடிவு கட்டுனாங்க..அவங்க தனியா பேச வழி செஞ்சாங்க அந்த பையன் அவன் மனசுல இருக்குறத சொன்னான் அந்த பொண்ணு வேணான்னு அழுதா நாளைக்கி உன் தங்கச்சி கல்யாணம் இதால பாதிக்கப்படும்னு சொன்னா..அவனுக்கும் அவமானம்னு சொல்லி என்ன விட்ருனு அழுதா..அந்த பையன் ஒன்னுமே சொல்லல..மெதுவா எந்திரிச்சு பாக்கெட் குள்ள கை விட்டு அந்த கயிற எடுத்தான்.. அந்த பொண்ணு கழுத்துல கட்டி நீ என் பொண்டாட்டி ஆயிட்ட..எவன் என்ன சொல்றான்னு பாக்குறேனு சொல்லி அவள பாத்தான் அப்போ அந்த பொண்ணு கேட்டா ஏன் என்ன பிடிச்சது உனக்குன்னு"

"அவன் என்ன சொன்னான்"

"சாத்தியமா அவனுக்கு தெரியல..எப்போ எப்படினு அவனுக்கே புரியல ஆனா அந்த பொண்ணு இல்லாம அவன் வாழ்க்க இல்ல..இத அந்த பொண்ணும் புரிஞ்சிக்கிட்டா இப்ப அவங்க வாழ்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு"..

"வாவ் செம்ம ல..பக்கத்துல இருந்து பாத்த மாறியே சொல்றே உனக்கு தெரிஞ்சவங்கள"

"ம்ம்ம் ஆமா அந்த பையன் என் அண்ணா அன்பு அந்த பொண்ணு என் அண்ணி கிரேஸ்"..

"முல்லை நீ இவ்ளோ நேரம் சொன்னது உன் அண்ணா அண்ணி கதையா'

"ம்ம் எனக்கு தெரிஞ்ச ட்ரு லவ்..சரி லஞ்ச் டைம் தாண்டிருச்சு பாரி சாப்பிடாறானு தெரில நா ஃபோன் பண்ணிட்டு வரேன்"..முல்லை சென்று விட வளரி யோசனையில் ஆழ்ந்தான் அவன் வாழ்கிற ஊரில் இது சாதாரணம் ஆனால் இங்கு அப்படி இல்லையே என்ன தான் லிவிங் டுகெதர் வந்தாலும் ஊரார் காரி துப்புவது உண்டு தானே..காலம் முழுதும் ஊர் வாயில் அரைக்கப்படும் அவல் கதையாயிர்றே..இப்படியும் காதல் இருக்குமா..இருக்கிறதே அன்பு கிரேஸ் இவர்களின் காதல் இதே போல் உண்மை காதல்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது..

முல்லையிடம் வீடியோ அழைப்பு பேசிக்கொண்டே உண்டு முடித்தான் பாரி..இப்போதெல்லாம் அவள் தாழ்வுமனப்பான்மை அவளை விட்டு தள்ளியே உள்ளது ஆனாலும் அவளின் கேள்வி தள்ளி போகவில்லை.."பாரி நா எப்டி இருக்கேன்"..

"காலைல தானடி பாத்தேன் அப்ப எப்டி இருந்தியோ இப்பவும் அப்டியே தான் இருக்க"..

"ப்ச் நா அத கேக்கல நா அழகா இருக்கேனா"

"காலைல லட்டு மாறி இருக்க இப்போ பால்கோவா மாறி இருக்க.."

"ராத்திரி ஜிலேபி மாறி இருப்பேனா"

"இல்ல இல்ல பட்ட ஜிலேபி மாறி கும்முனு இருப்படி என் செல்லம்"...

"அய்ய வழியுது தொடச்சிக்கோங்க டாக்டர்..அப்றம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துருங்க ஓகேவா"..

"ம்ம்ம் ஓகேடா டாடா"..உரையாடல் முடிந்து மென் சிரிப்பு உதட்டில் உறைய மாலை விரைவாக வீட்டிற்கு வந்தான் பாரி..ஹாலில் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தான் வளரி..கமலி பூ சரத்தை தொடுத்து கொண்டிருந்தார்..முல்லையோ பிக்காச்சுவிற்கு தன் கைகளால் திராட்ச்சை பழங்களை கொடுத்து கொஞ்சி கொண்டிருந்தாள்..வளரி தொலைக்காட்சியில் பார்வையை செலுத்தினாலும் கவனம் எல்லாம் முல்லை மீதே..அவள் சிரிக்கும் இதழ்களும் கொஞ்சும் கண்களும் திகட்டவில்லை அவனுக்கு..கவனமாக உணர்ச்சி துடைக்கப்பட்ட கண்களுக்குள் இருப்பது என்ன காமமா காதலா இல்லை சகோதரனின் மனையாளை கவர துடிக்கும் களவு மனமா அறிய இயலவில்லை..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்