இஞ்சி இடையழகி 13


திருமணம் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுவது அந்த மர்ம முடிச்சை அவிழ்க்க நாமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம் தோல்வி ஒன்றே நிருத்தரமாயிற்று..ரியோ கண்ணா வாழ்வில் நிகழ்ந்ததும் இதுவே..வாய்விட்டு சொல்லிருந்தால் கூட ஆறிருக்குமோ மனது சொல்லாத காதலின் வலியில் வினாடிக்கு வினாடி செத்து பிழைத்தது..ஒரே நிம்மதி வெண்பாவிற்கு இந்த காதல் தெரியாது..இப்படி ஒரு பிரிவினை ஏற்கவும் அவளால் முடியாது.. 

சக்தி சக்தியின்றி ஓர் சோபாவில் சாய்ந்திருந்தாள்..சிவா மீண்டும் ஒரு நல்ல அக்கா என்று நிரூபித்து விட்டாள் தங்கை ஆசைப்பட்டவனை பேயாக மாறியாவது சேர்த்து வைத்து விட்டு சென்று விட்டாள்..ஆனால் அந்த தங்கையின் நிலை.. இதோ இலக்கற்று விட்டத்தை வெறித்து கொண்டிருக்கிறானே ஒருவன் அவனின் சிந்தை முழுவதும் சற்று முன் கரம் பிடித்த மனையாளின் நினைவுகளா இல்லையே மனம் கொள்ளா காதலுக்கு சொந்தக்காரி வெண்பாவின் நினைவுகள்.அவளை மறந்து என்றேனும் என்னை நினைக்க கூடுமா இவனுடனான என் வாழ்வின் நிலை என்ன.. யோசிக்க யோசிக்க கண்ணீரே மிச்சமாயிரற்று.. 

உள்ளறையிலிருந்து"மச்சான் ரியோ".. என இருவரையும் அழைத்தான் பாரி.. அங்கே கண்களை சுருக்கி சுருக்கி விழித்து மயக்கத்தை போக்கி கொண்டிருந்தாள் முல்லை..அவள்"பாரி எனக்கு ஏதாச்சும் ஆச்சா..ஏதும் எதுவுமே ஞாபகம்"... 

"ப்ச் உனக்கு ஒன்னுமே இல்லடி.. கொஞ்சம் பிவர் அதான் மயக்க மருந்து இன்ஜெக்ஷன் கொடுத்து தூங்க வெச்சேன்".. 

"ஆமாவா.. "அப்போது உள்ளே வந்த இருவரையும் கண்டு"இவங்க ரெண்டு பேரும் இங்க என்ன பன்றாங்க".. 

"அது"..என பாரி இழுக்கும் போதே உள்ளே நுழைந்தாள் சக்தி...அவளை மேலும் கிழும் பார்த்தவள் "பாரி இந்த பொண்ணு யாரு".. 

"அவ அந்த பொண்ணு"... 

"இந்த பொண்ணு என் பொண்டாட்டி சக்தி"பளிச்சென்று பதில் வந்தது ரியோவிடம் இருந்து.. சக்தி கண்கள் விரிய அவனை பார்த்துக்கொண்டிருக்க முல்லைக்கு தன் செவி புலன் மேலே சந்தேகம் வந்து"என்ன சொன்ன திரும்ப சொல்லு".. 

"என் பொண்டாட்டினு சொன்னேன்"அழுத்தமாக அவன் கூற நொடியில் சினம் தலைக்கேற கத்தினாள் முல்லை.."ஹேய் என்ன பாக்க இளிச்சவாய் மாறி இருக்கா..நீ உருகி உருகி வெண்பாவ தானே லவ் பண்ண இப்ப எவளோ ஒருத்திய பொண்டாட்டின்னு சொல்லிட்டு திரியுற யாருடா இவ"... 

"இவ பேரு சக்தி நா சொல்லிருகேன்ல காலேஜ்ல ஒரு பொண்ணு என்ன தொரத்தி தொரத்தி லவ் பண்ணுச்சுனு..அந்த பொண்ணு தா இது..இங்க ஒரு வேலையா நானும் கண்ணா அண்ணாவும் வந்தோம் அப்ப தான் இந்த பொண்ண திரும்பவும் பாத்தேன்..பாரியோட ஸ்கூல்ல தான் டீச்சரா இருக்கா..பாவம் முல்லை இவளுக்குன்னு இருந்த அக்காவும் ஒரு அச்சிடேன்ட்ல இறந்து போய்ட்டா.. யாருமே இல்லாம லவ் பண்ண நானும் இல்லாம வெறுமையா ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கா..இவ இப்டி இருக்க காரணமே நா தானே அதான் நானே இவள கட்டிக்கிட்டேன்"... 

"ஓ பாவம் பாத்து இவள காட்டிகிட்ட..அப்ப வெண்பாவ லவ் பண்ணதுலாம் பொய்..இவ உன்ன லவ் பண்ணது அவ அக்கா செத்தது எல்லாமே அவளோட தலையெழுத்து.. நீ அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல..இப்ப மட்டும் என்ன ஊர கூட்டியா அவள கட்டிக்கிட்ட..அவளுக்கு வேற ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்கலாம்.. நீ பாவம் பாத்து உன் காதல பலி கொடுக்காத..இன்னொரு விஷயம் பாவம் பாத்து கல்யாணம் பண்ணி அந்த பொண்ண அசிங்கபடுத்தாத ரியோ"... 

"இல்ல முல்லை..வெண்பாக்கு வாழ்க்கை அமைச்சு தர ஒரு குடும்பமே இருக்கு..ஆனா சக்திக்கு..அவள இந்த நிலைமைல பாத்துட்டு எப்டி நா குற்ற உணர்ச்சியே இல்லாம வெண்பாவ கட்டிக்குவேன்.. நீயே சொல்லு"...அதற்குள் தள்ளாட்டத்துடன் எழுந்தவள் ஓங்கி அறைந்திருந்தால் ரியோவை.. 

"சீ இவ்ளோ தானா உன்னோட லவ்..நல்ல வேல வெண்பா மனசுல ஆசைய வளத்து விடல..அப்டி மட்டும் இருந்துருந்தா பாவம் அந்த ஊம பொண்ணு என்ன ஆயிருப்பா.. ஏண்டா இப்டி பண்ண.. என் ரியோ இப்டி செய்ய மாட்டானே.. ஹேய் உண்மைய சொல்லுடி என் ரியோ இந்த மாறி மனச மாதிக்குறவன் இல்ல.. அவன என்னடி பண்ண மருந்து மாயம் வெச்சு அவன மயக்கிட்டியா சொல்லுடி சொல்லு"... வெறிபிடித்தவளை போல முல்லை சக்தியை உலுக்க பாரி அவளை தன் புறம் இழுத்து 

"ஹேய் அவன் தான் நடந்தத சொல்றான்ல அப்றம் நீ ஏண்டி குதிக்குற.. அவன் வாழ்க்கைய அவனுக்கு முடிவு பண்ண தெரியாதா".. 

"தெரியாது...அவனுக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுனு என்ன தவிர யாருக்குமே தெரியாது ஏன் என் அண்ணிக்கு கூட தான்..அவன் கண்ணுல உயிரே இல்ல அது உனக்கு தெரிலையா.. எப்டி தெரியும் தங்கச்சி வாழ்க்கைய பணயம் வெச்சு மெரட்டி கல்யாணம் பண்ணவனுக்கு அடுத்தவன் மனசு எப்டி புரியும்"... 

"வேணா முல்லை..எதுக்கும் எதுக்கும் முடிச்சு போட்டு பேசுற நீ..வெண்பா என் தங்கச்சி.. அவள காரணம் காட்டி உன்ன கட்டிக்க காரணமே உன்ன இழந்தர கூடாதுனு தான்..அத ஏண்டி புரிஞ்சிக்கவே மாட்ற..".. 

"வேணா எனக்கு எதையும் புரிஞ்சிக்கவும் வேணா தெரியவும் வேணா..இப்ப என்னால ரியோ கல்யாணத்த ஏத்துக்க முடியாது".. 

"முல்லை உனக்கு அடுத்து தான் என் வாழ்க்கைல எல்லாமே..நீ சொல்லி எதையும் நா செய்யாம இருந்ததே இல்ல..ஆனா இந்த விஷயம் வேற.. ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு ஏமாத்த என்னால முடியாது..இந்த ஜென்மத்துல சக்தி தான் என்னோட வைப்...".. ரியோ முடிவாக சொல்லி விட்டு சக்தியை இழுத்து கொண்டு வெளியே சென்று விட்டான் எல்லாம் ஒரு பயம் தான் இதற்கு மேல் முல்லை முன் நின்றால் அவனை மீறி கதறி விடுவான் என்பதே.. 

இங்கே பாரி முல்லையை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருத்தான்..கண்ணா அவர்களுக்கு தனிமை அளித்த விலகினான்.."முல்லை இது ரியோவோட வாழ்க்கை அவனுக்கு அவன் வாழ்க்கை மேல உரிம இல்லையா".. 

"இருக்கு ஆனா அவன் மனசு உங்களுக்கு புரில.. அவன் கண்ணுல சந்தோசமே காணோம் என்னமோ நடந்துருக்கு நீங்க எல்லோருமே என்கிட்ட மறைக்குறிங்க பரவால நானே கண்டு புடிக்குறேன்..என் ரியோவுக்கு கட்டாயபடுத்தி இந்த கல்யாணம் நடந்துசின்னு தெரிஞ்சது அப்றம் இருக்கு".. 

பாரி வாயடைத்து போனான்.. அவளுக்காக அவள் மேல் கொண்ட நட்பு தானே தான் கொண்டு நேசத்தை உள்ளயே சமாதி கட்டி மனதிற்கு பிடிக்காவிடினும் சக்தியை மணந்தான்.. இப்போது இவளோ உண்மையை அறிய துடிக்கிறாள் தனக்காக ரியோ காதலை துறந்தான் என்று அறிந்தால் என் கண்மணி துடித்து போவாளே ஏற்கனவே வளரி ஏற்படுத்திய பிரச்சனையே தலைக்கு மேல் தொங்க இதில் இது வேறு.. முல்லையை அதட்டி மிரட்டி உண்ண மறுத்தவளை கோபம் காட்டி உண்ண வைத்து மருந்து கொடுத்து தூங்க வைத்து வெளியே வர அங்கே கண்ணா ஒரு புறம் சோகமே உருவாக அமர்ந்திருந்தான்.. 

"மச்சான்"... 

"வா மச்சான் முல்லை தூங்கிருச்சா".. 

"தூங்கிட்டா..வளரி உண்மை தெரிஞ்சாலே என்னாகுமோன்னு மனசு அடிச்சிக்கிட்டு கெடக்குது இதுல இது வேற.. டேய் மச்சான் எனக்காக தானே நீ வெண்பாவ கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன.."... 

"உனக்காக மட்டும் இல்லடா ரியோகாகவும் தான் பாவம் டா அவன் வெண்பாவையும் மறக்க முடியாம முல்லைய விட முடியாம தவிச்சு போய் கண்ணுல எதிர்பார்போட என்கிட்ட கேக்குறப்போ என்னால அத மறுக்க முடிலடா..என்னால முடிஞ்ச அளவு உன் தங்கச்சிய நல்லா பாத்துக்குவேன் டா பட் அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்"...ஒன்றுமே பேசாமல் நண்பனின் கையை பற்றி அழுத்தி இருவரும் ரியோவை நாடி செல்ல அங்கே சக்தி தயங்கி தயங்கி இறுகி போனவனை நெருங்கி கொண்டிருந்தாள்..

"ரியோ"...மெல்லிய தலையசைப்பு தான் இன்னும் முற்றிலும் இறுகி சிலையாகவில்லை என காட்டியது..அவன் கேட்க்கிறான் என்றதும் 

"ரியோ நீங்க என் அக்கா முல்லைய ஏதாச்சும் செய்ஞ்சிருவானு பயந்து என்ன கல்யாணம் பண்ண வேணா..அவ தான் போய்டாலே..நானும் போறேன்..நீங்க உங்க ஆசபடி வெண்பாவ கல்யாணம் பண்ணிகோங்க"...

மெல்ல தலை நிமிர்ந்து அவளை அளந்தான் ரியோ.."தாலி கட்டுனதான் கல்யாணமா நா நல்ல நிதானமா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்..முல்லைக்காக கல்யாணம் பண்ண சம்மதிச்சாலும் உன் அக்காவுக்கு கொடுத்த வாக்க பொய்யாக்க விரும்பல..உன்ன ஒரு நிர்பந்ததுல கட்டிகிட்டேனு அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப ஒடஞ்சு போயிருவ..அதான் மாத்தி சொன்னேன்..உனக்கு எப்டியோ இந்த ஜென்மத்துல நீதான் என் பொண்டாட்டி.."..ரியோ தீர்கமாக முடித்து கொள்ள சக்தி வாய் மூடிக்கொண்டாள்..

இதனை கேட்டு கொண்டிருந்த இருவரும் பேசாமல் ஊருக்கு போக ஆயுத்தமாக்கினர்..அங்கே இனி நடக்கபோகும் கூத்து அறியாமல்..


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்