இஞ்சி இடையழகி 7


"ஓகே வில்லி கதைய கேட்டாச்சு நெஸ்ட் வில்லன் கதைய கேப்போம்"நேராக பாரியின் மருத்துவமனைக்கு சென்றான் ரியோ.. அது பாரிக்கு சொந்தமான மருத்துமனை..தமிழ் வேந்தன் ஜமின் குடும்பத்தை சேர்ந்தவர்..நல்ல அரசியல்வாதியும் கூட..அவரின் பாட்டன் வழி சொத்துக்கள் யாவும் பாரிக்கே வந்து விட அதில் கட்டியது தான் இந்த மருத்துவமனை..ரியோ ரிஷப்ஸனில் பாரியை பார்க்க விரும்புவதாக கூற அந்த பெண் அவனை ஏற இறங்க பார்த்து விட்டு பாரிக்கு தொடர்பு கொண்டு ரியோ வரவை தெரிவிக்க அடுத்த நிமிடம் மரியாதையாக பாரியின் அறைக்கு வழி கூறியது.. 

பாரி ரியோவை எதிர்பார்த்தே இருப்பான் போல ரியோ உள்ளே நுழைந்ததும்"வா மாப்ள எப்டி இருக்க.."..

"என்ன மச்சான் காலைல தானே பாத்திங்க"

"அதுவா என் பொண்டாட்டி நெனப்பு வந்தா மத்தது எல்லாம் மறந்துடுது என்ன பண்ண..சரி சொல்லு என்ன இவ்ளோ தூரம் அவள விட்டுட்டு நேரா இங்கதான் வர போல என்ன சொன்னா பிசாசு"..

"பொம்பள பிசாசு எல்லா கதையும் சொல்லிருச்சு ஆம்பள பிசாசு தான் இப்ப கதைய ஓட்டணும்"..ரியோ முல்லை கூறியதை பாரியிடம் கூறி விட்டு கண்ணனை சந்திததையும் சொல்லி "சொல்லுங்க மிஸ்டர் பாரி வேந்தன் முல்லைய பாத்தாலே இஞ்சி இடுப்பழகினு நக்கலா பாட்டு பாடுவிங்க எப்டி அவ மேல லவ் வந்துச்சு அதும் பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ற அளவு"...

"நம்ம கத எல்லாம் ரொம்ப சிம்பிள் மாப்ள..எனக்கு அவள ஆரம்பத்துல இருந்தே புடிக்கும் உனக்காக அவ என்கூட சண்ட போடுறது மன்னிப்பு கேட்டுட்டு என்னயே கவுக்குறது சண்ட கோழி கணக்கா சிலுப்பிகிட்டு நிக்குறது இப்டி எல்லாமே புடிக்கும்..அப்றம் ஸ்கூல் முடிச்சு ரொம்ப நாள் கழிச்சு ஒரு மழ நாளுல அவள பாத்தேன் மழையில நனைஞ்ச கோழிக்குஞ்சு மாறி மரத்தோட மரமா நின்னுட்டு இருந்தா ப்ப்பா அவ்ளோ கியூட்டா..அந்த மழையில நானும் கரைஞ்சு போய்ட்டேன் டா மாப்ள..அப்ரோ அங்கே இங்கேன்னு அவள ரோட்ல பாத்தே லவ் கூடிருச்சு..அந்த கருமத்த சொல்லலாம்னு நெனைக்கும் போது தான் என்கூட பொறந்தவன் எமன் மாறி வந்து கெடுத்துடான்..

அத அவகிட்ட சொல்லி புரிய வைக்கலாம்னு பாத்தா அவ காரி துப்பி அடிச்சு அனுப்பிட்டா..என்ன இருந்தாலும் இப்படியா திமிரு புடிச்சு ஆட சொல்லுது..நானும் மனுஷன் தானே எனக்கும் சூடு சொரண இருக்கு தானே என்னடா பாக்குற இருக்கு தானே".. 

"என்ன கேட்டா நீதான்யா சொல்லணும்"...

"இருக்குடா இருக்கு அவள விட நிறையவே இருக்கு..எப்டி அவள பழிவாங்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..அப்பதான் உங்க லவ் மேட்டர் பேச வந்தா..அவள அப்டியே பிளாக்மெயில் பண்ணி கட்டிக்கிட்டேன் ஹாஹாஹா இனிமே தெரியும் இந்த பாரி யாருனு"...

"ஏன் இப்ப மட்டும் என் கண்ணு நொல்லையா நீ தான் குத்து கல்லாட்டம் நல்லா தெரியுறியே"...

"ஹே த்து உன்ன சொல்லல உன் தோழி குந்தானிய சொல்றேன்.."

"மச்சான் அவளுக்கு தான் உண்ம தெரில எல்லாம் தெரிஞ்ச நீயும் ஏன் இப்டி இம்ச பண்ற அவ பாவம்"..

"இல்ல ரியோ நீ என்ன சொன்னாலும் நா என்ன பேச வரேன்னு கூட கேக்காம கேவல படுத்திட்டா..என் மேல உண்மையாவே லவ் இருந்தா இப்டி பன்னிருப்பாளா..அவ என்ன அடிக்கல என் நெஞ்சுலயே அடிச்சிட்டா"..

"த்து கருமோ எப்டி அடிச்சிக்கிட்டு சாவுங்க..அந்த வளரி மட்டும் என் கைல கெடைக்கட்டும் அப்ரோ பாத்துக்குறேன்..யோவ் மச்சான் உன் மேட்டர்ல என் மேட்டர மறந்துராத..உன் தங்கச்சிய எப்படியாச்சும் எனக்கு கட்டி வெச்சிரு"...

"அவனவனனுக்கு அவன் பிரச்சன..போயி தொல..சரி உண்மையா என்ன லவ் பண்றதா முல்லை சொன்னுச்சா"..

"ம்ம்ம்ம் போயி அவகிட்டயே கேளுயா லூசு மச்சான்"...ரியோ சென்றுவிட இங்கே பாரி முல்லையை பற்றிய சிந்தனையில் இறங்கினான்..அவள் எப்படி தன்னை அவமான படுத்தலாம் என்ற எண்ணம் மட்டுமே அவனுள் அங்கே பள்ளி ஓய்வு நேரத்தில் அவன் எப்படி என் மனதை புரிந்து கொள்ளாமல் மிரட்டி திருமணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் அவள்...

Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி