இஞ்சி இடையழகி 1


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!


உஷ்ணமே அறியாத பச்சை குழந்தையென இளங்காலை வெயில் மனதை மயக்க தழுவி கொள்ள கெஞ்சும் உறக்கத்தை உதறி தள்ளி அந்த இனிய பொழுதை சுறுசுறுப்பாகி கொண்டிருந்தனர் மக்கள்...பாரதியார் கவிதைகள் வழக்கம் போல ஒலிக்க அதனை கேட்டு கொண்டு கண் விழித்தாள் முல்லை கொடி..பன்னிரண்டு வயது சிறு மொட்டு அவள்..எழுந்ததும் எப்போதும் போல இறைவனுக்கு நன்றி செலுத்தியவள் காலை கடன்களை முடித்து வெளியே வர அங்கே அவளின் விருப்பமான ஆவி பறக்கும் ப்ரூ காபியுடன் நின்றிருந்தான் அன்பு கணியன் அவளின் சகோதரன்.. 


"ண்ணா இன்னைக்கு என்ன டிபன் உப்புமானு மட்டும் சொல்லிராத தெய்வமே"


"ஏன் உப்புமா சாப்டா தொண்டையில் அடச்சிக்குமா.. ஒழுங்கா இருக்குறத சாப்டு ஸ்கூல்க்கு கெளம்பு"..அவனை முறைத்து கொண்டே காபியை உறிஞ்சியவள் முன் தட்டை வைத்து அதில் அவளுக்கு பிடித்த குண்டு இட்லி கோழி கறி பரிமாற அண்ணனை தலையில் தட்டியவள்"எனக்கு தெரியுமே என் அண்ணன் எப்பவும் எனக்கு பிடிக்காதத செய்யவே மாட்டான்"... 


"நாளைக்கு உப்புமா தான் இப்பவே சொல்லிட்டேன்... "



"இப்பதானே உன்ன புகழ்ந்து பேசுனேன் அதுக்குள்ள ஆப்பா"... 


"சாப்டு கிட்டே பேசு இந்த ஆ"...அவளுக்கு வழக்கம் போல உணவினை ஊட்ட தொடங்கினான் அவளை விட ஆறு வயது பெரியவனான அன்பு..வழமை போல சுட்டி டீவியில் ஒரு கண்ணை பதித்து அவனிடம் வாயடித்து கொண்டு சாப்பிட அவனும் அவள் ஏதோ ராணுவ ரகசியத்தை கூறுவதை போல கர்ம சிரத்தையாக தங்கை கூறுவதை கேட்டு கொண்டிருந்தான்.. 

முல்லை கொடி அம்மாவின் பாசத்தை உணராதவள் அல்ல.. தந்தையின் அரவணைப்பை அறியாதவளும் அல்ல..அன்னையின் பாசம் தந்தையின் அரவணைப்பு ரெண்டுமே அவளுக்கு கிடைப்பது தமையன் அன்பின் மூலமே..


முல்லை பிறந்து ஒரே மாதத்தில் அவள் அப்பா மாரடைப்பில் மாண்டு போக அவளின் அம்மாவும் அவளுக்கு ஏழு வயது இருக்கும் போதே கிட்னி பழுதடைந்து இறந்து போனார்..ஒரே தங்கையுடன் அனாதையாக நின்றான் அன்பு..பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் உலகத்தை பார்த்து அவன் கலங்கவில்லை விவரம் அறியாமல் தன் சட்டையை இருக்க பற்றியபடி நின்றிருந்த தங்கையை எண்ணியே கலங்கினான்.. அவனின் உறவுகள் பாசமற்றவர்கள் இல்லை ஆனால் நாக்கிற்கு பதிலாக தேள் கொடுக்கை வாயில் வைத்திருப்பவர்கள்.. ஏற்கனவே முல்லை பிறந்த நேரம் சரியில்லை அதனாலே அவளின் அப்பா இறந்து போனாரென வசைபாடும் கூட்டம் இப்போது அம்மாவும் இறந்து போக முல்லையை வறுத்து வாயில் போட்டு கொண்டனர்..ஆனாலும் பெண் பிள்ளையை எப்படி அன்பு பார்த்து கொள்வான் அதனால் தாங்கள் அழைத்து செல்வதாக அன்பின் பெரியம்மா கூற அன்பு மறுத்து விட்டான்.. தன் தங்கை யார் வீட்டிலும் அனாதை போல வளருவதை அதை விட இடிசோறு வாங்கி உண்பதை அவன் விரும்பவில்லை தன் உடலில் உயிர் இருக்கும் வரை தன் தங்கையை பார்த்து கொள்ள தன்னால் முடியும் என உறவுகளிடம் கூறியவன் முல்லையை அவனே வளர்க்கலானான்.. 


அன்புவின் அப்பா இறந்து பிறகு அவரின் மெக்கானிக் ஷாப்பை வாடகைக்கு விட்டிருந்தான்.. இப்போது அவனே அதில் சொந்தமாக வேலை செய்ய தொடங்கினான்.. பதிமூன்று வயதில் தங்கையையும் பார்த்து வேலையும் கற்று அவனும் படித்தான்.. 

இன்று பதினெட்டு வயது இளைஞன்..


அவனின் உலகம் தங்கை முல்லை..அவளின் ஒவ்வொரு செயலும் அசைவும் அவனுக்கு அவசியமே..தங்கைக்கு ஊட்டியவன் தானும் உண்டு முடித்து அவளுக்கு தலை வாரி கொண்டே"பாப்பா அண்ணா கெளம்புறேன்டா..லஞ்ச் பேக் பண்ணி வெச்சிருக்கேன் எல்லாத்தையும் சாப்பிடணும் புரியுதா ஸ்கூல் விட்டோன சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு பத்திரமா இரு"


"ம்ம்ம் ஓகேண்ணா ஆனா நாளைக்கு நோ உப்புமா"


"சரி எரும எங்க அந்த எருமய காணோம்"


"அதெல்லாம் அவன் டான்னு மணிக்குருவி மாறி வந்துருவான் நீ கெளம்பு"...அன்பு காலேஜ் கிளம்பியவுடன் முல்லையும் கிளம்பி உட்காந்திருக்க அவளின் அண்டை வீட்டு சிறுவன் ஓடி வந்து"முல்லக்கா சீக்கிரம் வாயேன் நம்ம ரியோ அண்ணாவ தெரு முச்சந்தி கிட்ட பெரிய மரம் இருக்குல்ல அங்க மூனு பேரு அடிக்குறாங்க"...


"டேய் நல்லா பாத்தியா இவன் அவங்கள அடிக்குறானா இல்ல அவங்க இவன அடிக்குறாங்களா"


"ஐயோ அக்கா அண்ணன தான் வெச்சு வெழுகுறாங்க சீக்கிரம் வா".. அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை அவள் ஓட தொடங்கியிருந்தாள்.. 


அந்த பெரிய மரத்தை நெருங்கும் வேலை இரண்டு பேர் ரியோவை சுற்றி அதில் ஒருவன் அவன் சட்டையை பிடித்து நெஞ்சில் தட்டி கொண்டிருந்தான்..தன் நண்பனை ஒருவன் அடிப்பதை கண்டதும் வேகமாக ஓடியவள் அவனை பிடித்து தள்ளி விட்டாள்..திடீர் தாக்குதலை எதிர்பாராத அவனும் முன் இரவு பெய்த மழையின் காரணமாக தேங்கியிருந்த சேற்றில் விழுந்து எழுந்தான்.. 


"ஹேய் முல்ல எதுக்கு அந்த அண்ணாவ பிடிச்சு தள்ளி விட்ட"   


"அட எரும அவன் உன்ன அடிக்குறான் அவன கொஞ்ச சொல்றியா அண்ணாவாம் அண்ணா".. 


"என்ன அடிக்குறானா அடிச்சவனுங்க கிட்ட இருந்து இந்த அண்ணா தான் காப்பாத்துனாரு லூசு"... 


"அப்போ உன் சட்டய பிடிச்சு கிட்டு நின்னானே நா பாத்தேனே".. 


"சட்டயில இருந்த மண்ண தட்டி விட்டாறு எரும"... 


"அடப்பாவி இத மொதயே சொல்ல கூடாதா"... 


"நீ எங்க சொல்ல விட்ட வந்த வேகத்துல மாடு மாறி அந்த அண்ணன தள்ளி விட்டுட்ட"...முல்லை ரியோவை முறைத்து கொண்டே அந்த புதியவனை பார்க்க அவனோ முதல்வன் அர்ஜுன் போல சேற்றில் குளித்து இருந்தான்.. 


அவனை கண்டதும் சிரிப்பை அடக்க இயலாமால் சத்தமாக சிரிக்க அவனோ கொலைவெறியுடன் பார்த்து கொண்டிருந்தான்..ரியோ தான்"அண்ணா சாரிண்ணா அவ நீங்க தா என்ன அடிக்குறிங்கனு தப்பா நெனச்சி தள்ளி விட்டுட்டா"... 


"ஏன் உன் ஃரன்ட்டுக்கு வாய் இல்லயா ஒழுங்கா மன்னிப்பு கேட்க சொல்லு".. 


சிரிப்பை அடக்கியவள்"ரொம்ப நன்றி ரியோவுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு.. மன்னிப்பு எல்லாம் கேக்க முடியாது அதான் எனக்கு பதிலா அவன் கேட்டுடானே"


"ஹேய் என்னடி திமிறா வெச்சேனு வையு வாய் கிழிஞ்சிரும்...ஒழுங்கா மன்னிப்பு கேளுடி" . 


"என்ன டியா..தோ பாருடா அவ்ளோ தான் உனக்கு மரியாத எங்கள விட பெரிய பையன்னா பயந்துருவோமா"...


"அடிங்க"..அவன் முல்லையை நோக்கி வர அவளை தன் பின்னே தள்ளி முன்னே நின்றான் ரியோ"ண்ணா மன்னிப்பு தானே முல்லைக்கு பதிலா நா கேக்குறேன் எங்கள மன்னிச்சிருங்க"...


"டேய் என்னடா நீ"


"வாய மூடு வா போலாம் ஸ்கூல்க்கு டைம் ஆச்சு"முல்லை கை பிடித்து ரியோ அழைத்து செல்ல தன்வயிற்றிற்கும் சற்று மேல் இருக்கும் முல்லை உருண்டு செல்வதை கடுப்புடன் பார்த்து நின்றிருந்தான் பாரி வேந்தன்..


"மச்சி விடுடா சின்ன புள்ள தெரியாம செய்ஞ்சிருச்சு"...அவனின் நண்பன் கண்ணன் கூற அவனை முறைத்தவன் 

"அந்த குண்டு எந்த ஸ்கூல்டா"...


"நம்ம ஸ்கூல் தான்டா எப்பவும் அந்த பையன் கூடவே தா இருக்கும்..நம்ம கொடி மெக்கானிக் ஷாப் அன்பு அண்ணா இருக்காங்கல்ல அவரு தங்கச்சி,.... 


"செம்ம திமிரு ஆள பாரு குட்டி யான மாறி இருக்கு ஸ்கூல்ல அவளுக்கு"....


இங்கே ரியோவிடம்"டேய் யாருடா உன்ன அடிச்சது.."


"வேற யாரு அந்த அசோக்கும் அவன் பிரின்ட்ஸ்ஸும் தான்"...அவனுடன் பயிலும் மாணவனை கூற


"எதுக்கு டா"...


"வழக்கம் போல அக்காவ பத்தி பேசி வம்பிழுத்தாங்க..எப்பவும் அடிப்பேன் இன்னைக்கு ஒதுங்கி போனேன் அதான் அவனுங்க என்ன அடிச்சிடாங்க"


"நீ ஏண்டா திருப்பி அடிக்கல"


"நீதானே நேத்து சொன்ன அக்காவ பத்தி இவனுங்க இப்படித்தான் பேசுவானுங்க அவங்கள எல்லோரையும் அடிச்சு என் அக்காவ பத்தி விளக்க தேவையில்லன்னு ப்ரோமிஸ் வாங்குனால அதான் அடிக்கல"...


அவனின் கரத்தை இறுக்க பற்றி கொண்டு வீட்டிருக்கு சென்று இருவரும் பேக் எடுத்து கொண்டு ஸ்கூல்லிற்கு கிளம்பினர்..ரியோ  முல்லையின் உயிர் நண்பன்..பக்கத்து வீடு..என்ன கஷ்டம் இருந்தாலும் அதனை உள்ளயே வைத்து வெளியே சிரிப்பவன்..அவன் முகம் பார்த்தே முல்லை தான் அனைத்தையும் கண்டு கொள்வாள்..அவனின் அக்கா ஊருக்கு விலைமாது..ஆனால் அவனுக்கு அம்மா...


பொழுது விடிந்து இவ்வளவு நேரமும் தன் அருகில் கன்னத்தின் அடியில் கை கொடுத்து உறங்கி கொண்டிருக்கும் மனைவி முல்லை கொடிக்கும் தனக்குமான முதல் சந்திப்பை நினைத்து பார்த்தவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..


"குண்டச்சி இழுத்துட்டு வீசுன சிகரெட் துண்டு மாறி இருந்தப்பவே அந்த பேச்சு பேசுவாளே இப்ப இவள முழுசா சுத்தி வரவே ஒரு நாள் ஆகுமே என்ன செய்ய போறாளோ பிசாசு தூங்குறா பாரு கும்பகர்ணி பிரஸ்ட் நைட்ல கட்டுன புருஷன இப்டி புலம்ப விட்ருயேடி"...புலம்பியவன் இதழ்களோ லட்டு போல உப்பிய அவள் கன்னத்தை மொய்க்க ஆர்வம் கொள்ள பூனை போல மெல்ல அவள் குண்டு கன்னங்களில் இதழ்களை பதிக்க அவள் கருவிழி அசைய தொடங்க அவன் போர்த்தி படுத்து விட்டான்..


முல்லை கண்விழித்ததே அவனின் முகத்தில் தான்..வாகாக அவன் புறம் திரும்பி படுத்தவள்"ராத்திரி முழுக்க என்னத்த வெட்டி முறிச்சாருன்னு இவன் அடிச்சு போட்ட ஓனா மாறி படுத்துருக்கான்.ஆளையும் மூஞ்சியும் பாரு கொரங்கு..இந்த கொரங்கு மூஞ்சிக்கு நா வாழ்க கொடுத்ததே பெருசு இதுல இவரு பெரிய கட்டழகன்  மாறி என்ன குண்டுன்னு சொல்லுவான்..அவனின் கூறிய நாசி என்றுமே அவளுக்கு பிடிக்கும் அதன் நுனியில் ஆசையாக முத்தமிட்டு நறுக்கென்று கடிக்க படக்கென்று கண்திறந்தான் பாரி வேந்தன்…

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்