இஞ்சி இடையழகி 16
ரெஜிஸ்டர் அலுவலகத்தில் மனதில் பாரத்துடன் நின்றிருந்தான் ரியோ..துவண்டு விழாமல் இருக்க பாரியின் தோளில் கை போட்டு தன்னை தானே தாங்கி கொண்டு நின்றான்..அவனை பார்த்தால் மாப்பிள்ளை என்று யாருமே கூறமுடியாது.. அந்த அளவிற்கு களையிழந்து முகம் சரிக்கப்படாத தாடி கருவளையம் சுழன்ற கண்கள் இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி எதையோ என்ன அவன் பறிகொடுத்தது அவனின் காதலை சொல்ல படாத காதல் ஓராயிரம் உயிர் வலியை கொடுத்தது..எங்கே சக்தி சொல்லாமல் கொள்ளாமல் எங்கேனும் ஓடி விடுவாளோ என்ற பயத்தில் அவளை மிரட்டி இல்லாத குரங்கு சேட்டை செய்து இதோ திருமணம் வரை கொண்டு வந்தவனும் அவனே.. ஆனால் இங்கே நிற்கும் ஒவ்வொரு வினாடியும் வெண்பாவின் நினைவு அவனை கொன்று குவித்தது..
நண்பனின் முகமறுதல்களை சக்தியுடன் நின்றிருந்த முல்லை பார்த்து கொண்டே இருந்தாள்..அவனை அவனே கட்டுப்படுத்த முயல்வது அவளுக்கு தெரியாதா.. இதற்கு மேலும் அவன் தாங்க மாட்டான் என புரிந்து கொண்டவள் நொடியும் தாமதியாமல் ரியோ அருகில் சென்றாள்..
அங்கே நின்றிருந்த கண்ணாவிடம்"இன்னும் எவ்ளோ நேரம்ண்ணா"..
"இன்னும் ஒரு ஆளு இருகாங்க அப்ரோ நாம்தான்"...
"ம்ம் ரியோ என்கூட வா"..
"எங்க முல்லை"...
"எங்கன்னு சொன்னதா வருவியா".. அதற்கு மேல் வாதம் செய்யாமல் அவளுடன் சென்றான் ரியோ.. இங்கே கண்ணா மனதிற்குள்'கடவுளே கடைசி நிமிசத்துல இந்த கல்யாணத்த நிறுத்திர மாட்டியா..ரியோ அவன் ஆசபட்ட வெண்பா கூட சேர்த்து வெச்சிடு தெய்வமே பாவம் அவன்"..கண்ணாவின் வேண்டுதலை போலவே பாரி கிரேஸ் அன்புவின் வேண்டுதலும் அதுவாகவே இருந்தது..
ரியோவை கைபிடித்து கிட்டதட்ட இழுத்து கொண்டு போனவள் கார் பின் இருக்கையின் உள்ளே அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டாள்..அவளை புரியாமல் பார்த்தவனை இழுத்து மடியில் சாய்த்து கொண்டு"ரியோ எனக்கு தெரியும் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லனு அப்ரோ ஏண்டா சக்திய கல்யாணம் பண்ணிக்குரேனு புடிவாதம் புடிக்குற..உன் கண்ணுல காதல் இருக்கு ஆனா அது சக்திக்கு இல்ல..வெண்பாக்கு..எனக்கு தெரியும் டா..நீ ஏதோ ஒரு காரணத்துக்காக இப்டி பண்ற..என் ஃப்ரன்ட்டு தப்பு பண்ண மாட்டானு எனக்கு தெரியும் இவ்ளோ தூரம் வந்தாச்சு இன்னும் குடி முழுகி போயிரள..நல்லா யோசிடா"...
"இல்ல முல்லைம்மா இந்த ஜென்மத்துல எனக்கு சக்தி தான் பொண்டாட்டி இதுல மாற்றமே இல்ல.."...வாயால் கூறியவன் மனதிற்குள்"ஒரு ஆன்மாவுக்கு கொடுத்த வாக்க என்னால மீற முடில முல்லை..அதும் உனக்காக.."..முல்லையின் கரங்கள் ரியோ முதுகை நீவிட அதுவரை அடக்கி வைத்திருந்த கண் அணை உடைந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது..அழட்டும் அவன் மன பாரம் தீர போவதில்லை ஆனால் குறையும்..முல்லையும் கண்ணீர் சிந்தினாள் இறைவா என் ரியோவின் வாழ்வில் வசந்தம் கொடு என்று..
ஒருவழியாக அழுகை குறைந்து விட தோழியின் மடியில் கண்ணீரை இறக்கி விட்டு சற்று தெம்புடன் எழுந்தான் ரியோ..ரியோவின் கன்னத்தில் கைவைத்து"ரியோ சக்திக்கு யாரும் இல்ல..அவ உன்ன மட்டுமே நம்பி வர்ரா..அவள எப்பவும் அழ வெச்சிரத..இன்னொரு விஷயம் இனிமே உனக்கும் வெண்பாக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..சோ எக்காரணம் கொண்டும் வெண்பாவ சக்தி கிட்ட தேடாத..புரியுதா"...
"சரிங்க பாட்டி..எனக்கு இவ்ளோ அட்வைஸ் சொல்றியே அத கொஞ்சம் நீங்க கடைபுடிச்சா நல்லா இருக்கும்"..
"ஏன் நா என்ன பண்றேன்,..
"முல்லைம்மா நா எது செஞ்சாலும் அதுல நியாமான காரணம் இருக்குனு நம்புற ஆனா உன் புருஷன மட்டும் ஏன் நம்பவே மாட்ற..யாருதான் இங்க தப்பு செய்யல பாரி செஞ்ச தப்ப ஒதுக்கி வெச்சிட்டு நீ செய்யுற தப்ப யோசிச்சு பாரு..நா நல்லா இருக்கணும்னு நீ நெனைக்குற மாறி என் உயிர் தோழி நீ நல்லா வாழணும்னு நா நெனைக்க மாட்டேனே"...ரியோவின் வார்த்தைகள் மென்மையாக இருப்பினும் அது முல்லையின் இதயத்தை சவுக்காக மாறி அடித்தது..
கண்ணா கார் கண்ணாடியை தட்ட இருவரும் கீழே இறங்கினர்..இப்போது ரியோவின் முகம் தெளிவாகவும் முல்லையின் முகம் குழம்பியும் இருந்தது..பாரி இதனை கண்டும் காணாததை போல இருந்தான்..ரியோ சக்தி திருமணம் சட்டபூர்வமாக முடிந்தது..இருவரும் மாலை மாற்றி மோதிரம் அணிவித்தனர்..முயன்று வரவழைத்த புன்னகையில் ரியோவும் சிரிக்கவே தெரியாதவளை போல சக்தியும் திருமணம் செய்து கொண்டனர்..
ரியோ தன் அக்கா மாமாவிற்கு தொல்லை தர விரும்பவில்லை..அதனால் அவன் தங்கள் வீட்டிலேயே இருந்து கொள்வதாக கூறினான்..அன்புவிற்கும் அதுவே சரியாக பட்டது..தனிமை இருவரின் உள்ளத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கையில் சரி என்றான்..பக்கத்து வீடு தானே குரல் கொடுத்தால் வந்து விட போகிறான்..சிறிது நேரம் ரியோ வீட்டில் இருந்து விட்டு அனைவரும் கிளம்பினர்..
கிளம்பும் நேரம் முல்லை சக்தியிடம்"சக்தி எது எப்டியோ இப்ப நீ என் ரியோவோட மனைவி..உன் முகத்தை பாத்தாலே எனக்கு புரியுது..அவன் வெண்பாவ மறக்க முயற்சி பண்றான் நீயும் அவனுக்கு ஹெல்ப் பண்ண சீக்கிரமா அதுல ஜெயிச்சிருவான்.. நீ என் ரியோவ நல்லா பாத்துப்பேன்னு நம்புறேன்.. பாத்துப்பியா"...
"கண்டிப்பா அக்கா.. உங்க ரியோவ என்னால முடிஞ்ச அளவு பாத்துப்பேன்"...நிம்மதி புன்னகையுடன் சக்தியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு சென்றாள் முல்லை..இதை பார்த்து கொண்டிருந்த பாரி மனதிற்குள்"நானும் பாக்குறேன் ஃப்ரன்ட்ட கட்டி புடிக்குறா.. அவன் பொண்டாட்டிய கட்டி புடிக்குறா.. கட்ன புருஷன் நானு என்கிட்ட மட்டும் ரெண்டு அடி பின்னால நிக்குறா...அடியே குந்தாணி இதெல்லாம் அநியாயம்டி.. வீட்டுக்கு வா உன்ன வெச்சிக்குறேன்"..
பாரி முல்லையை வீட்டில் விட்டு விட்டு ஹாஸ்பிடல் சென்றான்..வீட்டில் கமலியுடன் பேசினாலும் பிக்காச்சு கூட விளையாடினாலும் அவளின் கவனம் முழுதும் ரியோவின் பேச்சில் இருந்தது..பாரி வேந்தனின் ஒரு பக்கத்தை பார்த்தாள்..அதில் அவளை மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டிய பாரி...அவளை பரிகாசம் செய்து வெறுப்பேற்றிய பாரி..இஞ்சி இடுப்பழகி என்று அழவைத்த பாரி..ஜடையை பற்றி இழுத்து வேதனையை காட்டிய பாரி..தனக்கு நோய் என நடித்து ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து தவறாக நடக்க முயன்ற பாரி..தன் நண்பனின் காதலை பணயம் வைத்து நட்பை காரணம் காட்டி அவளை நிர்பந்த படுத்தி மணந்த பாரி..அவள் மணவிலக்கு கேட்ட போது ஆண்மை திமிரால் அடக்கிய பாரி...இப்படி அவனின் தீமைகள் அனைத்தும் முண்டி அடித்து முன்னுக்கு வந்து நின்றது..
அதனை ஒதுக்கி பாரி வேந்தனின் மறு பக்கத்தை திருப்பி பார்த்தாள்..அவளின் வேதனை அறிந்து தானாக உதவிய பாரி..அழகிய பெண் தன்னருகில் இருந்தும் அவளை தவிர்த்து தன்னிடம் உரிமையாக பேசிய பாரி.. கண்களால் காதல் பேசிய பாரி..கண்ணியதால் அவளை வென்ற பாரி.. நடு ரோடு என்றும் பாராமல் அவள் அறைந்ததை கண்ணில் வலியுடன் சுமந்து ஒன்றும் கூறாமல் சென்ற பாரி.. நிர்பந்த படுத்தி மணந்தும் கூட கணவன் என்ற உரிமையை எடுத்து கொள்ளாத பாரி.. ஊட்டியில் அவள் நெகிழ்ந்திருந்த போதும் கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக நடந்து கொண்ட பாரி..ரியோ விஷயத்தில் தன் மனமும் புண்படாமல் பொறுமையாக நிலைமையை விளக்கிய பாரி.. தான் விவாகரத்து கேட்டதற்கு ஆண் திமிரை முத்தத்தில் காட்டினாலும் மொத்தமாய் தன் கன்னி தன்மை காத்த பாரி.. அவன் நினைத்திருந்தால் அவளை வேட்டையாடிருப்பானே.
ஏன் செய்யவில்லை..அன்றைய நாளில் காதலை விடுத்து காமத்தை காட்டியவனும் இவனே இன்று காமத்தை விடுத்து கண்ணியம் காக்கிறவனும் இவனே..முதன் முதலாக தன் பிடிவாதம் தகர்வதை கண்டால் முல்லை..ஒருவேளை அவனை நாம் தான் சரியாக புரிந்து கொள்ள தவறி விட்டோமோ அன்று அவன் நடந்து கொண்டதிற்கும் ஏதேனும் காரணம் இருக்க கூடுமோ..
என்ன காரணம் இருந்தாலும் மீண்டும் அவனிடம் சென்று நிற்க அவளின் ஈகோ மனம் தடுத்தது..அவனின் காதலின் ஆழத்தை அறிய இப்போது இருப்பது போலவே இருக்க முடிவு செய்தாள் முல்லை..அவளின் முடிவு முதல் கட்டமாக அன்று இரவு வீட்டிற்கு வந்தவனிடம் பேச வேண்டுமேன கூறினாள்..புருவம் மத்தியில் முடிச்சுடன்
"சொல்லு டா".என்றான்.
"நா நேத்து சொன்னதுக்கு நீங்க என்ன முடிவு பண்ணிருக்கீங்க"..
"எதுக்கு"
"டிவோர்ஸ்க்கு"..அவன் அவளை ஏளன சிரிப்புடன் பார்க்க அவளோ நேற்றைய தினத்தின் முன்னெச்செரிக்கைக்காக ஓடுவதற்கு தயாராக நின்றாள்..
"நேத்தே நா என் முடிவ சொல்லிட்டேனே அப்ரோ ஏன் திரும்ப கேக்குற"...
"அது...தெரியும்..ஆனா பாரி என்னால நீங்க எதிர்பாக்குற காதல் பொண்டாட்டியா வாழ முடியாது..அப்ரோ எதுக்கு டைம் வேஸ்ட் பண்றிங்க..உங்களுக்கு ஏத்த பொண்ண கட்டிக்கலாமே"..இதனை கூறும் போது அவள் மனமே முணுக் முணுக்கென்று வலிக்க அவன் என்ன சொல்வானோ என்ற பயமும் ஆர்வமும் கண்களில் போட்டி போட அவனை நோக்கினாள்..
தன்னவளின் கண்களை மட்டுமே இதுவரை பார்த்து கொண்டிருந்தவன்"இதும் நல்ல ஐடியா தான் ஆனா இப்போ நா எதிர்பாக்குற பொண்ணு மாறி யாரும் இல்லையே மேபி அப்டி ஒருத்தி வந்தா அப்ரோ டிவோர்ஸ் பண்ணிக்குறேன் ஓகேவா"...
அவ்வளவு தான் முல்லையின் எதிர்பார்ப்பு அனைத்தும் சுக்கு நூறாக உடைந்து சிதறியது..அன்று விவாகரத்து கேட்டதற்கு என்னவெல்லாம் சொன்னான் இன்றோ வேறு ஒருத்திக்கு வாழ்க்கையை பகிர தயாராக உள்ளான் அப்போ என் மேல் காதல் என்று இவன் கூறியது..வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது..
"அப்போவே நெனச்சேன்..ஏன்டா உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்ன பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணி என் என்னலாம் கொடும பண்ண..உன்ன மட்டும் அவ்ளோ ஈஸியா விட்ருவேனா ஐயோ பாவமேனு டிவோர்ஸ் தரலாம்னு நெனச்சேன் இப்ப சொல்றேன் உனக்கு டிவோர்ஸ்ஸும் இல்ல ஒரு மண்ணும் இல்ல காலம் முழுக்க என்ன கிட்ட மாட்டிகிட்டு சாவு"...சிலுப்பி கொண்டு போனவளை வெற்றி புன்னகையுடன் பார்த்தான் பாரி..அவனுக்கு தான் தெரியுமே முல்லை ஒரு வளர்ந்த குழந்தை என்று.
ஒரே வீட்டில் இதுவரை இருந்தவர்கள் இப்போது ஒரே வீட்டில் கணவன் மனைவி என்ற உறவில் இருந்தனர்..இதுவரை இல்லாத ஏதோ ஒரு தயக்கம் சக்தியிடம்..ரியோ இப்போது என்ன நினைக்கிறான்?
அவன் என்ன நினைப்பான் வெண்பாவின் நினைவுகளை கொலை செய்ய பார்க்கிறான் ஆனால் அதுவோ அவனை கொன்று வதைக்கிறது..தினமும் இரவில் பால் குடிப்பது ரியோவின் வழக்கம்..அவனுக்கு பால் கலந்து கொண்டு சென்றவள் அறை கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்..அங்கே லேப் டாப்பில் மூழ்கிருந்தவன் "என்ன சக்தி ஓ பாலா அப்டி வெச்சிரு..நீ குடிச்சிட்டியா"..
"ம்ம்ம்"..
"ம்ம் ஓகே சக்தி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு நா முடிச்சிட்டு தூங்குறேன் நீ போயி தூங்கு போ"..
"ம்ம்ம்"...அதற்கு மேல் சக்தியிடம் வார்த்தை இல்லை..அவளின் மனமோ இந்நேரம் வெண்பாவுடன் அவன் திருமணம் முடிந்திருந்தால் என்ன மாதிரி இரவாக இது இருக்க கூடும் என எண்ணி வாடினாள்..ரியோவும் அதையே எண்ணித்தான் "என்ன மன்னிச்சிரு சக்தி..என் மனசுல இன்னும் நீ இல்ல..வெண்பாவுக்கு ஒரு நல்லது நடக்குற வரை இந்த கேப் நம்மக்கிட்ட இருக்கும்"...பெருமூச்சுடன் லேப் டாப்பை அணைத்து கண்மூடினான் ரியோ..
Comments
Post a Comment