இஞ்சி இடையழகி 2


அழகிய காலை வேளை திருமணமாகி மறுநாள் பொழுது ரம்யமாக விடிய அந்த எழிலை ரசிக்க முடியாத மனநிலையில் கண்ணாடி முன்னின்று விசில் அடித்துபடியே தலை வாரி கொண்டிருந்தவனை கண்ட முல்லைக்கு பற்றி கொண்டு வந்தது...ஒரே நாளில் அவளை பாசம் எனும் மந்திர கயிறை கொண்டு கட்டி இழுத்து மனைவியாக கொண்டு வந்தவன்..நினைத்ததை சாதிக்கையில் விசிலுக்கு குறை என்ன....

"ம்க்கும்"

"ம்க்கும் லொக் லொக் லொக்'.. 

"என்ன டீபியா இருமிட்டே இருக்க"  

"உன் வாயில ஒரு நாள் கூட நல்லதே வராதா".. 

"அதெல்லாம் வரும் உனக்கு மட்டும் வராது"

"என் வீட்டுக்கு போனும்"

"இதான் உன் வீடு"

"ப்ச் எங்க வீட்டுக்கு போனும், 

"இதான் உங்க வீடு"

"ஹேய் தெரிஞ்சி கிட்டே நடிக்காத எங்க வீட்ல இன்னைக்கு விருந்துக்கு போனும் அண்ணா அண்ணி காத்துட்டு இருப்பாங்க'.. 

"இருக்கட்டும் நா காத்திருக்க சொல்லலையே".. 

"பாரி ப்ளீஸ் இப்டி செய்யாத அவங்களாம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க சும்மா நீ வந்து தலைய மட்டும் காட்டிட்டு போ ப்ளீஸ்"

"என்னமோ சொல்றிங்க மேடம் திரும்ப சொல்லுங்க, 

"அண்ணா எல்லாம் நமக்காக வெயிட்... "

"ப்ச் ப்ச் அதுல்ல மேடம் கடைசியா தலைய காட்டிட்டு போ அதுக்கு அப்ரோ ஒன்னு சொன்னியே அத சொல்லு"...

"ஸ்ஸ்ஸ் ப்ளீஸ் மிஸ்டர் பாரி வேந்தன் உங்களுக்கு கழுத்த நீட்டுன பாவத்துக்கு மனம் இறங்கியாச்சும் எங்க வீட்டுக்கு வாங்க தயவுசெஞ்சு"இரு கரம் கூப்பி பல்லை கடித்து கூறியவளை மேலிருந்து கீழ்வரை நமட்டு சிரிப்புடன் பார்த்தவனை பிஞ்சு போன வெளக்கமாரில் அடிக்கலாம் போல இருந்தது முல்லைக்கு... 

"என்ன வெலகமாத்துல சாத்தலாம் அப்டினு இருக்கா...இருக்கும் இருக்கும் முடிஞ்சா அடிச்சு பாருங்களேன் பொண்டாட்டி"...

"உங்கள எதுக்கு சார் அடிக்கணும் என்னையே தான் நா அடிச்சிக்குனும் ப்ளீஸ் டைம் ஆகுது வாங்க நா அத்தய பாத்துட்டு வரேன்"..அதற்கு மேல் அங்கிருந்தால் வாக்கு வாதம் நீளும் என எண்ணி இடத்தை காலி செய்தாள் முல்லை..தன் அத்தை கமலியை தேடி சென்றாள்..அவரோ ஆசை மருமகளுக்கு காலையில் குடிக்க பிரெஷ் ஜூஸ் போட்டு கொண்டிருந்தார்..

"அத்த என்ன பண்றிங்க"..

"வா கண்ணு குளிச்சிட்டியா..உனக்கு தான் ஜூஸ் போட்டுட்டு இருக்கேன் டா..நேத்தே உன் அண்ணா சொன்னாரு நீ காலையில ஜூஸ் குடிப்பேன்னு அதான்...இந்த குடி கண்ணு"...

"அத்த அது எங்க வீட்ல..இங்க எல்லாம் வேணா.."

"இதும் உன் வீடு தான் கண்ணு..இங்க நீ ஒரு வேலையும் செய்ய கூடாது எல்லாம் இந்த அத்த தான் செய்வேன் சரியா"...

"ஆமா ஆமா ஒரு வேலையும் செய்யாம இன்னும் ஒரு சுத்து பெருத்து போயி வாசல இடிச்சு தான் கட்டனும்"...

"அத்த எனக்கு ஜூஸ் வேணா, 

"டேய் சாப்பிடுற பிள்ளைய கண்ணு வைக்காத..என் மருமகளுக்கு நா வேல செய்வேன் உனக்கென்னடா பொறாமை புடிச்சவன்..கண்ணு அத்த சொல்றேன்ல ஜூஸ் குடி இந்தா"..கமலியை முல்லையால் மீற முடியாது..அவர் கொடுத்த ஜூஸை குடித்தவள் அவருடன் சேர்ந்து காலை உணவை தயாரிக்க பேச்சும் சிரிப்புமாக ஒரே அரட்டை..

"எம்மா இன்னைக்குக்குள்ள சமைச்சிருவியா இல்ல உன் மருமக அங்கேயே வெச்சி எல்லாத்தையும் தின்னு முடிச்சிட்டாலா பசி உசுரு போது சீக்கிரம் வாம்மா"...அடுத்து நொடி டொக் டொக்கென்று அவன் முன் உணவு பாத்திரங்களை மேஜையில் வைத்தாள் முல்லை..

"டொக் டொக்குனு வெச்சா பயந்துருவோமா..யாரு பரிமாறுவா"..

"ஏன் கை வெளங்காம போச்சா சொந்தமா எடுத்து வெச்சு சாப்ட தெரியாத"

"அதெல்லாம் தெரியும் ஒரு பொண்டாட்டியா உன் கடமை என்ன சொல்லு டி கடமை என்ன"..

"கடம இல்ல எல்லாம் கொடும..தட்ட காட்டி தொல..தட்டியில் இட்லியை வைத்து சட்னி பரிமாற

"ம்மா இட்லி என்ன சின்னதா இருக்கு..அட ஆமால்ல என் பொண்டாட்டி பக்கத்துல எல்லாமே சின்னதா தான் தெரியும் மறந்துட்டேன்"...

"அத்த....."

"டேய் வாய மூடிக்கிட்டு சாப்டு..கண்ணு வா அத்த பரிமாறுறேன் சாப்டு"

"வேணா அத்த அப்ரோ சாப்டுறேன், 

"எப்புறம்..வா உன் புருஷன் பக்கத்துல உக்காந்து சாப்டு"...முல்லை மறுக்க மறுக்க கமலி மகனின் அருகில் அவளை அமர வைத்து பரிமாற எப்போதும் எட்டு இட்லி சாப்பிடுப்பவள் இன்று இரண்டே தொண்டையில் சிக்க அரையும் குறையுமாக சாப்பிட்டு விட்டு அறைக்குள் நுழைந்து விட்டாள்..

"டேய் பாரி ஏண்டா அவள இப்டி படுத்துற..பாவம் டா..மூஞ்சே செத்துருச்சு"

"ம்மா அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது...போ போயி உன் மருமகளுக்கு ஜால்ரா அடி"...மகனை திருத்தவே முடியாது என நன்கறிந்த தாய் தன் வேலையை பார்க்க செல்ல சில நிமிடங்களில் தயாராகி வெளியே வந்தாள் முல்லை..ஆகாய நீலத்தில் கை முட்டி வரை ப்ளாவ்ஸ் கர்லிங் கூந்தலை இடை வரை தவழ விட்டு கண்களில் பெரிய ப்ரேம் கண்ணாடி அணிந்து இருந்தவளுக்கு மேலும் அழகு சேர்த்தது அவளின் கழுத்தில் புதிதாய் முளைத்த தாலி..

தன்னையே விழுங்கி விடுவதை போல பார்த்தவனை முறைத்து கொண்டே அத்தையிடம் சென்றவள் 

"அத்த எப்டி இருக்கேன் ஓகேவா"

"என் கண்ணே பட்ரும் போல என்ன அழகு ஐயோ கண்ணு அப்டியே பொம்மை மாறி இருக்க"...

"ம்மா போதும் உன் மருமகள கொஞ்சினது அவள வேகமா வர சொல்லு"

"பொறாம டா அவனுக்கு..அவன் கெடக்குறான் நீ அழகு செல்லம்..பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க கண்ணு"

"நீங்களும் வரலாம் தானே எத்தன தடவ கூப்பிடுறேன்'..

"இல்லடா இப்ப நீங்க போங்க இன்னொரு நாள் எல்லோரும் போலாம் சரியா கண்ணு அவன் ஹார்ன் அடிக்குறான் நீ வேகமா போடா"...அத்தையிடம் கூறியவள் காரில் அமர்ந்திருந்தவனை கண்டதும் வீடு போய் சேருற வரை அவன் பக்கமே திரும்ப கூடாது கடவுளே என்ற பிரார்த்தனையுடன் கதவை திறக்க போனாள்..எங்கே அவன்தான் லாக் செய்து உள்ளே சொகுசாக அமர்ந்து அவளை வேடிக்கை பார்க்கிறானே..

"பரதேசி எப்டி பாக்குறான் பாரு..ப்ச் பாரி கதவ தொற"...கதவை தட்ட அவன் அப்போதும் வேண்டுமென்றே அமர்ந்திருக்க அவளும் எவ்வளவு தான் பொறுப்பாள்..அருகில் இருந்து பூஜாடியை கையிலெடுக்க அவனுக்கு தெரிந்து விட்டது கொஞ்சம் விட்டால் அவனின் மனைவி காரை பதம் பார்த்து விடுவாள் என..எனவே கதவை அன் லாக் செய்தவன் அவளை முறைக்க தூக்கிய ஜாடியை அழகாக வைத்து விட்டு அலட்சிய பார்வை வீசி அவனருகில் அமர்ந்தாள்...

கார் அவளின் அண்ணன் அன்புவின் வீட்டை நோக்கி பயணப்பட்டது..இடையில் அவள் படித்த பள்ளியை கடக்கையில் அவளின் கண்கள் எதார்ச்சையாக பாரியை நோக்க அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்..

அன்று கண்ணன் எவ்வளவு கெஞ்சியும் அதை எதையும் காதில் வாங்காத பாரி முல்லைக்கொடி வரவிற்காக காத்திருந்தான் பள்ளியில்..அவளும் அதே பள்ளி தான்..ஆனால் இதுவரை அவன் அவளை பார்த்ததில்லை..ஆனால் ரியோவை பார்த்திருக்கிறான்..ரியோ நிறைய தடவை பாரியுடன் கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறான்..

அதோ தேர் போல அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தாள் முல்லை ரியோவுடன்..இரட்டை ஜடை குண்டு கன்னங்கள் மஞ்சள் தேகம் குழந்தை முகம் பார்க்கவே ஒரு பொம்பை போல இருந்தாள்..வாயில் எதையோ அதக்கி கொண்டே ரியோவுடன் கதையளந்து கொண்டிருந்தாள்..அவர்கள் அருகில் வர அவர்கள் எதிரில் போய் நின்றான் பாரி...இருவரும் அவனை பார்க்க முல்லை ரியோ காதில்"இவனும் நம்ம ஸ்கூல்லா"...

"ம்ம் ஆமா கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நில்லு"....

"என்ன இவனும் இந்த ஸ்கூல்லானு ஷாக்கா இருக்கா.. "..முல்லை திருதிருவென முழிக்க 

"என்ன குண்டு பாப்பா நேத்து அந்த பேச்சு பேசுன எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே மரியாத இல்லாம பேசுவ எங்க இப்ப பேசு பாக்கலாம்"...

கண்ணனிற்கு முல்லையை பார்க்க பாவமாக இருந்தது.."டேய் மச்சி சின்ன பிள்ள டா தெரியாம பேசிருச்சு விடேன்..பாப்பா நீ போ"...முல்லையும் ரியோவும் நகர தொடங்க 

"ஹேய் நில்லு நா போ சொன்னேனா."

"அண்ணா நேத்து தெரியாம பேசிட்டா அவளுக்கு பதிலா நா மன்னிப்பு கேட்டேனே இப்பவும் கேக்குறேன் ப்ளீஸ் அண்ணா எங்கள போக விடுங்க"..

"தம்பி உன் ஃப்ரன்ட மன்னிப்பு கேக்க சொல்லு நல்லா உப்பி போன டியூப் மாறி நிக்குறாளே மன்னிப்பு கேட்டா கொறைஞ்சு போய்டுவாளா"

"இப்ப என்ன மன்னிப்பு தானே மன்னிச்சிருங்க போதுமா..வா ரியோ கிளாஸ்க்கு போலாம்"அவள் அவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்ப்பாள் என பாரி எதிர்பார்க்கவில்லை..ஏதோ ஒரு விதத்தில் அதில் அவனுக்கு ஏமாற்றமே...அவளையே பார்த்து கொண்டிருந்தவன் திரும்பி நடக்க முல்லை அவனை அழைத்தாள்..

பாரி... அவன் திரும்பிய வேகத்தில் அவனின் மீது இங்க்கை தெளித்தவள் மன்னிப்பு கேட்டது இதுக்கு தான்.யார் கிட்ட என கூறிவிட்டு ரியோவை இழுத்து கொண்டு ஓடியே விட்டாள்..கண்ணா"மச்சி வேலியில போன ஓணான புடிச்சு வேஷ்டில வுட்ட கதையாச்சு தேவையா இது"...

பாரியும் இதனை எதிர்பார்க்கவில்லை அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு மன்னிப்பு கேட்டவள் எங்கே வில்லத்தனமாக இங்க் அடித்தவள் எங்கே"மச்சி ஏற்கனவே செம காண்டுல இருக்கேன் மூடிட்டு வந்துரு"..நல்ல சட்டையை நாசப்படுத்திய திருப்தியில் முல்லை உலாவர ரியோவிற்கு தான் பயம் தொண்டையை அடைத்தது...இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் தோழியின் பின்னே வால் பிடித்து நடந்தான்..

அப்படி இருந்தும் கழிவறைக்கு தனியாக செல்லும் போது பாரியிடம் மாட்டி கொண்டாள் முல்லை.."ஏண்டி குண்டு கத்திரிக்கா எவ்ளோ தைரியம் இருந்தா என்மேல இங்க் அடிப்ப இப்ப அட்றி பாக்கலாம்"..

"தோ பாருங்க நீங்க ஓவரா பேசுனீங்க அதுக்கான புனிஷ்மென்ட் தான் மொத செஞ்சது..இப்ப திரும்பவும் தப்பு பண்றிங்க.."

"ஓ பார்டா மேடம்க்கு மரியாதையலாம் பேச வருமா அச்சச்சோ தெரியாம போச்சே"..அவன் போலியாக பாவப்பட்டு உச்சு கொட்ட அந்த நொடியை பயன்படுத்தி ஓட பார்த்தவளின் ஒற்றை ஜடையை பிடித்து இழுத்தான் பாரி..அவள் அப்போதும் அவனிடம் கெஞ்சாமல் அவனையே திருப்பி அடிக்க போக அவளின் தாக்குதலை தகர்த்தவன் இப்போது அவளின் குண்டு கன்னங்களை பிடித்து நன்றாக கிள்ளி விட்டான்..பாவம் முல்லைக்கு வலியில் கண்ணீரே வந்து விட்டது..கண்ணா தூரத்தில் இருந்து இதனை பார்த்தவன் ஓடி வந்து"மச்சி என்னடா பண்றே பாவம் டா வலிக்குது போல விட்றா அந்த பிள்ள அழுவுது விட்றா பக்கி"..பாரியின் கரங்களில் இருந்து முல்லையின் கன்னங்களுக்கு விடுதலை கொடுத்தவன் பாரிக்கு பதிலாக மன்னிப்பு கேட்டான்..கன்னம் இரண்டும் நன்றாக சிவந்து போயிருந்தது..பதில் பேசாமல் சென்றவளை காணும் போது மனம் 
வலித்தது கண்ணாவுக்கு..ஆனால் பாரிக்கு பனிக்கட்டியை உள்ளத்தில் வைத்ததை போல சில்லென்று இருந்தது...

கலங்கிய கண்களும் சிவந்து கன்னங்களுடன் முல்லையை கண்ட ரியோ அவளிடம் காரணம் கேட்க தோழியின் கண்ணீரின் காரணம் பாரி என அறிந்ததும் நேராக பாரியிடம் சென்றான்..எப்போதும் மரியாதையாக அண்ணா என அழைப்பவன் இன்று பெயரிட்டு அழைத்து பாரியுடன் சண்டைக்கு சென்றான்..இருவரும் கட்டி புரண்டு அடித்து கொள்ள மாணவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க முல்லை ரியோவையும் கண்ணா பாரியையும் பிடித்து இழுக்க அடுத்த சில வினாடிகளில் இருவரும் பிரின்சிபால் முன் நின்றிருந்தனர்..

சண்டையின் காரணத்தை இருவரும் கூறாமல் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டிருக்க வீட்டிலிருந்து பெரியவர்கள் யாராவது வந்தால் ஒழிய வகுப்பிற்கு செல்ல முடியாதென்று பிரின்சிபால் கூறிட பாரி வீட்டில் அவனின் தந்தையின் பிஏ வந்திருந்தார்..ரியோவிற்கு அவனின் அக்கா கிரேஸ் வந்திருந்தாள்..

பாரிக்கு அவ்வளவாக எந்த துப்பும் விழவில்லை..அமைச்சரின் மகனை கண்டிக்க பிரின்சிபாலுக்கு மனமும் கூடாவே தைரியமும் இல்லை ஆனால் ஏழை கிரேஸ் தம்பியை நன்றாக காய்ச்சி எடுத்து விட்டார்..வெளியே வந்த கிரேஸ்"ஏன்டா எவ்ளோ கஷ்டத்துல உன்ன படிக்க வைக்குறேன் உனக்கு அடிதடி கேக்குதா அதும் இந்த வயசுல"

"அக்கா சும்மா அடிச்சேன் அடிச்சேன்னு பேசாத..ஏன் அடிச்சேன்னு கேளு..."அவன் நடந்த அனைதையும் சொல்ல அதே நேரம் அங்கு வந்த முல்லையும் சொல்ல நடந்ததை அறிந்த கிரேஸ் இருவரிடமும்"தோ பாருங்க அவங்க எல்லாம் பணக்காரங்க..அவங்களும் ஒன்னுனா ஊரே நிக்கும் நமக்கு ஒன்னுனா ஒரு ஈ காக்கா இருக்காது..இனிமே அந்த பையன் பக்கமே பாக்காம ஒழுங்கா படிக்குற வழிய பாருங்க ரெண்டு பேரும்"...இருவரும் தலையாட்ட கிரேஸ் கிளம்பி சென்றாள்...அன்றிலிருந்து தினம் தினம் முல்லையை வம்பிழுப்பதே பாரியின் வேலை..ரியோ அவனை கேட்க துடித்தாலும் கிரேஸ் கூறியது மனதில் இருக்க முல்லை அவனை அடக்கி விடுவாள்..கண்ணா தான் பாரியின் சார்பாக மன்னிப்பு கேட்டே ஓய்ந்து போனான்..முல்லையின் குண்டு தேகத்தை பரிகசித்து அனைவரும் குண்டு கத்திரிக்கா என பாட்டு பாட பாரி மட்டுமே சற்று வித்தியாசமாக அதே சமயம் அவளுக்கு அதிகம் வலிக்கும் அளவு ஒரு பாடலை படுவான்...

பழைய நினைவுகள் மறைய அவனை பார்த்தாள் அவனும் அவளை பார்த்தான்..இன்றும் அதே உருவம்..குண்டு விழிகள் கொழு கொழு கன்னம் கோடுகள் கொண்ட கழுத்து ப்ளௌஸ் மூன்று இன்ச் சிறியதாக தைத்து இருந்ததால் கொஞ்சம் வடிவரிவம் தெரிந்தது..

அவனின் கண்கள் தன்னை அளவெடுப்பதை கண்டவள் நாணம் பாய திரும்ப காதில் ஈயம் பாய்ந்த உணர்வு அதே பாடல் அவளை பரிகசித்து அவன் பாடும் அதே பாடல்..

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா 

"பேபி எப்டி மாமா வாய்ஸ் செம்மயா இருக்குல்ல"..

"ஆமா ஆமா உன் வாய்ஸ் கேட்டா நல்ல சகுனம்னு கூட சொல்லுவாங்க"அவன் புரியாமல் பார்க்க "கழுதை கத்துனா நல்லது தானே மிஸ்டர் பாரி வேந்தன்"...

அவனின் முறைப்பை ஆனந்தமாக பெற்று கொள்ள அதற்குள் அன்புவின் வீடு வந்தது..இதுவரை இருந்த மனநிலை மாறி அன்புவின் அன்பு தங்கையாக மட்டுமே அந்த வீட்டில் அடியெடுத்து வைக்க முயன்றாள்..ஆனால் முடியவில்லை அவளின் கரங்களை இறுக்க பற்றி கொண்டு நீ என் மனைவி என சொல்லாமல் சொல்லி அவளுடனே வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தான் பாரி..தங்கைக்காக காத்திருந்த அன்பு "வாங்க மாப்ள பாப்பா வாடா"..என பாசம் ஒழுக வரவேற்க அவனின் மனைவி கிரேஸ்ஸும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்றாள்..

ஆனால் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அங்கே ஒரு ஜீவன் நின்றது..அது முல்லையின் ஆருயிர் நண்பன் ரியோ..அறவே பிடிக்காத இவனை எப்படி முல்லை மணக்க சம்மதித்திருப்பாள்..அனைவரிடமும் காதல் நாடகம் ஆடினாலும் அவனுக்கு தெரியாத அவளின் ரகசியம் உண்டா...அண்ணன் அண்ணியை எதிர்கொண்டவளின் பார்வை தோழனை ஏறிடவும் துணிவின்றி தவித்தது..ரியோ வாழ்வில் முதன் முறையாக ஆசை பட்ட ஒரே விஷயம் வெண்பா..அந்த வெண்பா இந்த பாரிவேந்தனின் தங்கை என கண்டாளா முல்லை..எப்படி அவளை அடையலாம் என பேயாய் அழைந்தவனிடம் இப்படி ஒரு வழி கிடைக்க பாரி வில்லனாக உருவெடுத்தான்..ரியோவின் காதல் நிறைவேற முல்லை பாரியை மணக்க வேண்டும்..அதும் காதல் எனும் போர்வையில்..தங்கையின் காதலை பணயம் வைத்து தன் காதலை அடைந்து விட்டான்..இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவன் அவன்..இதயமே இல்லாமல் அவன் செய்த இந்த செயல் தான் முல்லையை அவனை அடியோடு வெறுக்க வைத்தது..உள்ளே காதலை வைத்து கொண்டு வெளியே அவளை பழிவாங்க துடிக்கின்றான் பாரி..குமுறி சீரும் காதல் கண்களில் வழியாமல் இருக்கவே பேரும் பாடு படும் முல்லை தன்னை நிர்பந்தத்தின் பேரில் இந்த பந்தத்தில் இணைத்தவனை பழிவாங்க துடிக்கிறாள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்