Saturday, 5 April 2025

தாகம் எபிலாக்






எபிளாக்❤️


பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது இரு மகள்களும் அப்பாவுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு  என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்..

ஆம் பூங்காவனத்திற்கு பிரசவ வலி கண்டு அவளின் குழந்தை இந்த உலகத்தை பார்க்க தயாராகி விட்டது.. உள்ளே துடித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மனைவியை பார்த்து கூட மின்னலுக்கு பயமில்லை.  ஆனால் அங்கே ஒரு நிமிடம் கூட அமராமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தன்னுடைய தம்பியை பார்க்கும் போது தான் எரிச்சலாக வந்தது.

"டேய் பைத்தியகாரா! எதுக்குடா இப்படி ஒரு நிமிஷம் கூட உட்காராம உலாத்திட்டு இருக்க.. கொஞ்ச நேரம் அமைதியா உட்காருகிறாயா.. அங்க பாரு அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கும் ஒன்னோட எத்தனை வயசு குறைவு? அதுங்கல்லாம் அமைதியா உட்காரல.. உன்ன ஒரு ஆளு புடிச்சி நீவிகிட்டே இருக்கணுமா.." செல்வியும் காயத்ரியும்  வாய் பொத்தி சிரித்தார்கள்.

" உள்ள போய் இவ்ளோ நேரம் ஆகுது இன்னுமா பாப்பா பொறக்குது? அவளுக்கு வலிக்கும்.. உன்ன உள்ள போடான்னா போக மாட்ற.. சரி என்னையாவது உள்ள விடுன்னு சொன்னா அதையும் விட மாட்ற.. என்னதான்டா பிரச்சனை உனக்கு? " இப்படி கூறியது சாட்சாத் வர்மா தான்..

சின்ன வயதில் இருந்தே பூஞ்சை மனம் கொண்டவன் என்பதால் தாய் தமக்கைக்கு கண் முன்னே நடந்த அநீதியை கண்டவன் மன உளைச்சலுக்கு ஆளானான்.. என்னதான் தமையனின் அன்பில் அவன் மனதை தேற்றிக்கொண்டாலும் வாழும் ஒவ்வொரு நாளுமே சோலை பாண்டியனை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணமே அவனுள் வேரூன்றி இருந்தது..

வெளிநாட்டில் தனியாக இருந்தவனுக்கு ஒவ்வொரு நொடியும் தனக்கென்று குடும்பமாக இருக்கும் அண்ணனோடு வாழ வேண்டும் என்று தான் தோன்றிக் கொண்டே இருக்கும்.." நான் சென்னையில இருந்தே படிக்கிறேன்.. உன் கூடயே இருக்கேன்" பலமுறை மின்னலிடம் கேட்டு விட்டான் வர்மா.

" அதெல்லாம் வேணாம் மூடிகிட்டு நீ அங்கயே படி.. இன்னொரு விஷயம் எனக்கு தெரியாம நீ இந்தியா பக்கட்டு கால கூட எடுத்து வைக்க கூடாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை நானே உன்னை வந்து பார்த்துட்டு வருவேன்.. படிக்கிறது மட்டும்தான் உன் மண்டையில இருக்கணும். அந்த சோலை பாண்டியனை எப்படி முடிக்கணும்னு அண்ணனுக்கு தெரியும். எனக்கு தெரியாம ஏதாவது செய்யணும்னு நினைச்ச  அப்புறம் நானும் உனக்கு இல்லாம போயிடுவேன் ஞாபகத்துல வச்சுக்கோ.. " ஒவ்வொரு தடவையும் இப்படி சொல்லி சொல்லி தான் தம்பியை தாய் நாட்டு பக்கமே காலை எடுத்து வைக்க விடாமல் இருந்தான் மின்னல்.

மின்னலைப் பொருத்தவரை சோலை பாண்டியனை பழி வாங்குவது மட்டும் தான் அவனது வாழ்நாள் இலக்கு. இந்த அரசியல் பதவி பணம் புகழ் இது எதிலுமே அவன் மனம் லயிக்கவில்லை. அதனால்தான் எந்த பெண்ணையும் திரும்பி பாராமல், கடிவாளம் போட்ட குதிரை போல தன்னுடைய இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்..

அவனே எதிர்பாராமல் வாழ்வில் வந்தவள் பூங்காவனம். எந்த அரக்கனை அழிக்க வேண்டும் என்று அவன் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தானோ அந்த அரக்கன் வாயிலாக அவனுக்கு கிடைத்த வரம்.. சோலை பாண்டியனை பழிவாங்கும் படலத்தில் தன்னுடைய திட்டம்  ஒரு துளி தவறானாலும்  தன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பது மின்னலுக்கு தெரியும். அதனாலதான் தன்னுடைய தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தான். வர்மாவுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அனைவரையும் நம்ப வைக்க தான் தம்பியை தாய் நாட்டிற்கு வர கூட அவன் அனுமதிக்கவில்லை. சொல்லப்போனால் சோலை பாண்டியனுக்கும் அவனது பெண்களுக்குமே வர்மா என்ற ஒருவன் இருக்கிறான் என்ற உண்மை தெரியாது.

வர்மாவை பற்றிய உண்மை அறிந்த ஒரே  நபர் நாகா. ஆனால் அவனுக்கும் ஏன் மின்னல் வீரபாண்டியன் வர்மாவை தாய் நாட்டிற்கு காலடி எடுத்து வைக்க விடமாட்டேன் என்கிறான் என்பது புரியவில்லை. தன் தாய் தமக்கைக்கு நடந்த அநீதியை பற்றி யாரிடமும் மின்னல் மூச்சு விடவில்லை.

கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி கவுன்சிலிங் ஒரு பக்கம் வர்மாவை குணமாக்கியது என்றால் இன்னொரு பக்கம் அவனை பூரணமாக குணமாக்கியது பூங்காவனத்தின் அன்பு என்றுதான் சொல்ல வேண்டும்.. முதலில் கணவனிடம் ஏன் அவனுக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்ற உண்மையை கூறவில்லை என்று சண்டை பிடித்தாள்.

" எப்படி நான் சொல்லுவேன்? வீட்டுக்குள்ளேயே என்னை வேவு பாக்க கமலாவ வைத்திருந்தான் அந்த சோலை பாண்டியன். ஆனா கமலா நம்ம ஆளு. சோலை பாண்டியன் கிட்ட வேலை செய்யற மாதிரி அவனோட திட்டம் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுவாங்க.. கமலா மட்டும் இல்லாம என்ன சுத்தி அத்தனை பேர வேவு பார்க்க வச்சிருந்தான்.

எனக்கு ஒரு தம்பி இருக்கிற விஷயம் நாகவ தவிர இங்க இருக்கிற யாருக்கும் தெரியாது. உன்கிட்ட சொல்ல போய் நீ உன் அம்மாகிட்ட சொல்ல போய் அப்புறம் எல்லாருக்கும் இந்த உண்மை தெரிய வரும். இத்தனை வருஷமா நான் செதுக்கி போட்ட திட்டம் எல்லாமே என் கண்ணு முன்னுக்கு பாழா போயிடும்."என்றான்.

"ம்க்கும் ஒரு வார்த்தை நீங்க சொல்லியிருந்தீங்கன்னா  இவ்ளோ தூரம் ஆகி இருக்குமா.. ஆமா நீங்க தான் கல்லூலி மங்கனாச்சே. என்ன பார்த்ததும் புடிச்சது ன்னு சொன்னீங்க. ஆனா என்னையே கழுவி ஊத்துனீங்க. என் அம்மாவை வெச்சு என்னோட நடத்திய கீழ்த்தரமா பேசினீங்க.. ஆனா இப்போ என்ன அவ்ளோ நல்லா பாத்துக்கிறீங்க?" மின்னலின் மார்பில் சாய்ந்து கொண்டு உரிமையாக கேட்டாள் பூங்காவனம்.

" பைத்தியக்காரி அது எல்லாமே நான் உன்னை டெஸ்ட் பண்ணேன்.."

"என்ன"

"ஆமா.. உங்க அம்மா ஒன்னும் விருப்பப்பட்டு சோலை பாண்டியன் கூட இல்ல.. ஆனா பிள்ளைகளை பணயம் வச்சு அவன் உங்க அம்மாவை ஆட்டி வச்சான்.. என்ன சுத்தி எத்தனை பேர் இருந்தாலும், நான் யாரையும் நம்ப மாட்டேன். ஒரு நிமிஷம் நான் அசந்தா கூட  இத்தனை வருஷம் நான் போட்ட திட்டம் எல்லாம் வீணா போயிடும். நீ நடிக்கல நீ சோல பாண்டியன் எனக்கு வேலை செய்யலன்னு வந்த கொஞ்ச நாளிலேயே எனக்கு தெரியும்.

உன்கிட்ட நான் உண்மைய சொல்லி இருந்தா உனக்கு அசாதாரணமான ஒரு தைரியம் வந்திருக்கும்.. என்ன பாக்குறப்போ உன் கண்ணுல இருந்து வெறுப்பு நிஜமா இருந்திருக்காது. ஒவ்வொரு தடவையும் நீ தவிச்ச தவிப்பு உண்மையா இருக்காது. எல்லாமே ஒரு நாடகத் தன்மையா இருந்திருக்கும். வெளி உலகத்துக்கு நீ என்ன வெறுக்கணும். அப்பதான் என்னால போடுற வேஷத்தை ஒழுங்கா போட முடியும்.

மகாலட்சுமி கிட்ட மட்டும் உண்மையை சொல்லலாம்னு நான் இருந்தேன். ஆனா நானே எதிர்பாக்காத ஒன்னு செல்வாவும் சந்தனாவும் ஒண்ணா வந்தாங்க. இந்த தருணத்தை நான் மிஸ் பண்ண முடியுமா? உன்னை அப்படி பேசினேன் நீ சொன்னியே ஒவ்வொரு தடவையும் உன்னை அப்படி பேசும் போது எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்..

மொத மொத உன்னோட பேர கேட்கும் போதே எனக்கு உன்ன பிடிச்சு போச்சு. என்னோட அம்மா பேரு டி உனக்கு. சின்ன வயசுல உன்ன விட்டு போன எங்க அம்மாவே திரும்ப வந்த மாதிரி தோணுச்சு. நீ அழும்போது எனக்கும் அழுக வரும். என்ன விட்டு நீ போறேன்னு சொல்லும்போது எனக்கு உயிரே போற மாதிரி இருக்கும். என் கூட இருந்து நீ அழுதாலும் பரவால்ல ஆனா என்ன விட்டு போக கூடாதுன்னு தான் உன்னை என் கூடவே புடிச்சு வச்சிருந்தேன்.

எனக்கு மத்தவங்க மாதிரி இந்த கொஞ்சி லவ் பண்றது, விதவிதமா பரிசு வாங்கி கொடுத்து உன்னை இம்ப்ரஸ் பண்றது  இதெல்லாம் தெரியாது. நான் அப்படி வளரல.. ஆனா என்னோட லவ் நிஜம். நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லனா அது தான் என்னோட லவ்.. இந்தப் பதவி பணம் அதிகாரம்  எல்லாமே உன் முன்னுக்கு ஒரு தூசிக்கு கூட நிக்காது. அதுதான் நான் உன்னை வெச்சிருக்கிற இடம்.. இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது போடி" இந்த அளவிற்கு மின்னல் வாய் திறந்து சொன்னதே பெரிய விஷயம்.

அவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் பூங்காவனம்.. மின்னலே மன்னித்து விட்டவனுக்கு வர்மா மீது எப்படி கோபம் வரும்? அதிலும் அவளை வா போ என்று அவன் உரிமையாக அழைக்கும் போதும் பூவி என்று சிரிக்கும் போதும் மின்னல் சாயலில் ஒரு குழந்தையாகவே தெரிந்தான்.

" அன்னைக்கு நான் அப்படி செஞ்சிருக்க கூடாது.. என் அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கான்னு தப்பா நினைச்சுட்டேன். என் அம்மா அனுபவிச்ச வேதனையா அவன் மறந்துட்டான்னு எனக்கு அவ மேல கோபம். அந்த வேதனையை அவன் திரும்பவும் அனுபவிச்சா தான் அதோட வலி என்னனு அவனுக்கு புரியும்னு ச்சே என்ன அடி பூவி அடிச்சு கொல்லு.. இந்த கையில தானே உன்ன" தன்னுடைய கரத்தை ஓங்கி சுவரில் அடித்தான் வர்மா..

"ஐயோ என்ன பண்ற வர்மா? அதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. நா மறந்துட்டேன். இனிமே இப்படி நீ செய்யக்கூடாது. நான் சொன்னா கேப்ப தானே" வளர்ந்த குழந்தையாக அவள் முன்பு தலையாட்டினான் வர்மா.

"ம்ம்ம் உனக்கு புடிச்ச தட்டப்பயிறு குழம்பு வெச்சு பீட்ரூட் பொரியல் பண்ணிருக்கேன்.."

"எனக்கு சாப்பாடு வேணா"சோகமாக கூறினான் வர்மா..

"இப்ப" வேகமாக தட்டில் சாப்பாடு போட்டு பிசைந்து அவன் முன்பு நீட்டினாள் பூங்காவனம். கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது அவனுக்கு. அவனது அக்காவும் அம்மாவும் இப்படித்தான் அவன் சாப்பாடு வேண்டாம் என்றால் வேகமாக தட்டில் சாப்பாடு போட்டு பிசைந்து முகத்துக்கு நேராக நீட்டுவார்கள்..

மின்னல் சொல்லாமலேயே அதே மாதிரி பூங்காவனம் செய்ய அவளை தன்னுடைய தாயின் மறு உருவமாகவே பார்க்க ஆரம்பித்து விட்டான் வர்மா.. கொஞ்சம் கொஞ்சமாக மன உளைச்சலில் இருந்து வெளிவந்தவன், எந்நேரமும் பூங்காவோடு இருக்க ஆரம்பித்தான்.மின்னலுக்கு அது சில சமயம் ஆறுதலை கொடுத்தாலும் பல சமயம் கடுப்பையும் கொடுத்தது.

ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாமல் அவன் தவித்த தவிப்பு அவனுக்கு தான் தெரியும்..

"டேய் அவள விட்றா"மிரட்டினாலும் கேட்க மாட்டான் வர்மா.. நெட்டில் பார்த்த அனைத்து வைட்டமின்ஸ் சத்து பொருட்கள் இப்படி வாங்கி வந்து அவளை சாப்பிட வைப்பது, கஷாயம் சூப் நேரத்திற்கு டயட் உணவு என தேவகியை விட ஏன் மின்னலை விட அவளை பார்த்துக் கொண்டவன் அவனே..

இதோ இப்பொழுது தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறான்  குழந்தையை பார்ப்பதற்கு.. மின்னலும் தனக்குள்ளே இருந்த பதற்றத்தை மறைத்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தான். அதிக நேரம் அவர்களை சோதிக்காமல் மின்னலுக்கு குழந்தை பிறந்ததை மருத்துவர் கூற சற்று நேரத்தில் குடும்பமே உள்ளே சென்றது.

இரட்டை பெண் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை செய்யும்போதே ஆரம்பத்தில் ட்வின்ஸ் என்று பூங்காவிற்கு தெரியும். ஆனால் மருத்துவரிடமோ  தன் கணவன் கேட்டால் சொல்லக் கூடாது என்று  கெஞ்சி கேட்டிருந்தாள். என்னதான் அவளோடு மருத்துவ பரிசோதனைக்கு மின்னல் சொல்லவில்லை என்றாலும், அவளை ஒவ்வொரு கணமும்   பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தான். ட்வின்ஸ் என்று அவனுக்கும் தெரியும்.

அவள் வாயாலேயே சொல்ல வேண்டும் என்று காத்திருந்தவனுக்கு சோலைப் பாண்டியனின் கதை முடிந்த பிறகு தான் சொன்னாள் பூங்கா.

" அதான் எனக்கு எப்பவோ தெரியுமே" மீண்டும் தன்னுடைய பாசத்தை நிரூபித்து அவளிடம் அடியும் வாங்கிக் கொண்டான்.

இரண்டு பெண் குழந்தைகள்.. தேவகிக்கு பேர பிள்ளைகளை பார்த்ததும் உச்சி குளிர்ந்து விட்டது. செல்வியும் காயத்ரியும் குழந்தைகளை தொட்டு தொட்டு பார்க்க  மின்னல் நேராகப் பூங்காவிடம் சென்றான்.

"அம்மாடி".. அவனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட அவனின் இரண்டு சொட்டு கண்ணீர் பூங்காவனத்தின் நெற்றியில் பட்டு தெறித்தது..

கணவனைப் பார்த்து கண்ணீரோடு புன்னகைத்தவள் திரும்பி வர்மாவை பார்த்தாள்.. சற்று தள்ளி குழந்தைகளையே பார்த்திருந்தவன்  மெல்லமாக அருகே வந்தான்..

"டேய் அண்ணா பாத்தியா நம்ம அம்மாவும் அக்காவும்டா" கண்களில் கண்ணீரோடு அவன் கூற மின்னலுக்கும் அதே கண்ணீர் தான்..

"நீயும் காலா காலத்துல கல்யாணம் பன்னிருந்தா"பூங்கா கேட்க

"கல்யாணமா போ பூவி.. ரொம்ப வருஷம் கழிச்சு என் அம்மா அக்கா ரெண்டு பேரும் எவ்ளோ குட்டி பாப்பாவா என்கிட்ட வந்துருக்காங்க.. அவங்க கூட இல்லாம கல்யாணம் ஒன்னு தான் கேடு.. என் அண்ணனுக்கு எப்படி நீ கெடச்சியோ அப்படி ஒருத்தி எனக்கு கெடச்சா கல்யாணம் பண்ணிக்குறேன்"என்றவன் குழந்தைகள் பாதத்தில் இதழ் பதித்தான்..

"நாம் என்ன தவம் செஞ்சேன்னு தெரியலடா வரம் கிடைக்க"கண்களில் டன் கணக்கில் காதல் வழிய பூங்காவனத்தை பார்த்து கூறிய கணவனை மையலாக கண்டு முகம் சிவந்தாள் பெண்ணவள்..

குழந்தைகள் பிறந்த விஷயத்தை மூன்று லட்சுமிகளிடமும் பகிர்ந்து கொண்டான் மின்னல். மூவருமே வாழ்த்துக் கூறி விரைவில் இந்தியா வந்து குழந்தையை பார்ப்பதாக தெரிவித்தார்கள். மறந்தும் கூட யாரும் சோலை பாண்டியனை பற்றி மூச்சு விடவில்லை. அவர்களாக கேட்காத போது மின்னலும் அதனை பற்றி பேச்சை எடுக்கவில்லை.  இரண்டு வாரத்திற்கு முன்பு கூட சின்னதும் பெரியதுமாக வட்ட வட்டமாய் புண்கள் தோன்றியதை துர்கா கூறி இருந்தாள்.. மனநிலை பிறழ்ந்து தனிமையின் பிடியில் பைத்தியமாக சோலை பாண்டியன் அந்த வீட்டில் கத்திக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் சாப்பிடும் கஞ்சியை கூட முழுதாக சாப்பிட முடியாமல் வாந்தியாக எடுத்து விடுவதாகவும்  ஒவ்வொரு நாளும் துர்காவிடம் எதையோ சொல்ல முயன்று முடியாமல் கண்ணீர் விட்டு கதறுவதாகவும் அவள் கூறிருக்க அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த மின்னல் பாண்டியனுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான்.

"விதை விதைத்தவன் விதை அறுப்பான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்"..

முற்றும்..


தாகம் 35




பூங்காவிற்கு சிகிக்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.. மின்னலின் தனயன் என்பவனுக்கும் சோலை பாண்டியனுக்கும் கூட சிகிக்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது..

மின்னல் பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தான் நாகா.

"ண்ணே அண்ணியோட அம்மாவுக்கு சொல்லலையா" மின்னிலிடம் பேச்சில்லை.. நீண்ட நேரமாக அவனிடம் தோன்றிய மயான அமைதி நாகாவை பயமுறுத்தியது. மின்னலை மீறி தேவகியிடம் பூங்காவனத்தின் நிலையை அவனால் கூற முடியாது. பூங்காவனத்திற்கு அழைத்து அவள் அழைப்பை ஏற்காமல் போக மருமகனுக்கும் அழைத்து பார்த்திருந்தார் தேவகி. இருவருமே அழைப்பை ஏற்காமல் இருக்க

" அம்மா எதுக்கு இப்படி நீ அவங்கள டார்ச்சர் பண்ற? அக்கா மாமாவும் ரொம்ப நாளுக்கு அப்புறம் இன்னைக்கு தான் சந்தோஷமா வெளியே போறாங்க.. அவங்க எங்கேயாச்சும் ஜாலியா போயிட்டு இருப்பாங்க.. நீ எதுக்கு அவங்களுக்கு கால் பண்ணி தொல்லை கொடுக்கிற.. சாப்பாடு வேணும்னா அக்காவே ஃபோன் பண்ணிருப்பா.. அவங்களுக்கு சாப்பிட தெரியாதா.. நீ வாம்மா"அம்மாவை அழைத்தாள் செல்வி.

" அது இல்லடி எனக்கு என்னமோ படபடன்னு வருது. இவ்ளோ நேரம் நான் போன் அடிச்சா எடுக்காம பூங்கா இருக்க மாட்டாளே.. அதான் மாப்பிள்ளைக்கும் போட்டு பார்க்கிறேன் அவரும் எடுக்க மாட்டறாரு.. என்னவோ ஏதோனு பயமா இருக்குடி." தன் கவலையை பகிர்ந்தார் தேவகி.

"ம்க்கும் உன் மாப்பிள்ளை  வேலை வெட்டி இல்லாம சும்மா தான் இருக்காரு பாரு நீ போன் அடிச்சா எடுக்கறதுக்கு.. மாமாவுக்கு ஆயிரம் வேலை. இருக்கிற நேரத்துல அக்கா கூட சந்தோஷமா இருக்காரு. நீ ஏம்மா அதையும் இதையும் நெனச்சு உன் மனசு கெடுத்துக்கறதும் இல்லாம  அந்தத் தாட்ட அக்கா மேல போடுற.. நீ எதையும் நினைக்காம அமைதியா இரு அக்கா அங்க நல்லா தான் இருக்கா.." தேவகியின் பரிதவிப்பு புரியாமல் பேசினாள் செல்வி..

செல்வி சொல்லிய பிறகு பூங்காவுக்கு அழைக்க தேவகிக்கும் சங்கடமாக இருந்தது. மகளுக்கும் மருமகனுக்கும் இடையே இருந்த பிணக்குகள் அனைத்தும் சரியாகி இப்பொழுது தான் இருவரும் ராசியாகி இருக்கிறார்கள். பூஜை வேளை கரடி போல தான் இருக்கக் கூடாது என்று மனதார மகளும் மருமகளும் நன்றாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டார் தேவகி.

மகாலட்சுமியை வீட்டில் இருக்க சொன்னாலும் அவளும் சகோதரிகளோடு மருத்துவமனைக்கு வந்தே ஆகுவேன் என்று வந்து கைக்குழந்தையோடு அமர்ந்திருந்தாள்..

நேரங்கள் கடக்க முதலில் சோலை பாண்டியனை பரிசோதித்த மருத்துவர் தான் வெளியே வந்தார்..  நேராக மின்னலிடம் வந்தவர் அங்கிருந்த மூன்று பெண்களையும் பார்த்தார். அவர் வேறு யாருமில்லை சோலை பாண்டியனின் குடும்ப மருத்துவர் தான்..

"அது வந்து.." மருத்துவர் சொல்ல வந்து தயங்க செல்வ லட்சுமி முன்பு வந்தாள்..

"என்னாச்சு டாக்டர்.. எங்கப்பா இருக்காரா இல்ல செத்துட்டாரா?" சோலை பாண்டியனின் நிலையை எப்படி கூறுவது என்று மருத்துவர் யோசித்துக் கொண்டிருக்க அது ஒரு பொருட்டே இல்லை என்பதைப் போல செல்வலட்சுமி பேச மறுத்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை..

"செல்வா நீயாம்மா இப்படி பேசுற?" மருத்துவர் ஆச்சரியமாக கேட்க..

" நானே தான் டாக்டர் என்னன்னு சொல்லுங்க.. அவரு இருப்பாரா போயிடுவாரா" தந்தை மகள்களின் இடையே ஏதோ பிணக்கு என்பதை மருத்துவர் புரிந்து கொண்டார். எனவே சொல்ல வந்ததை கனகச்சிதமாக சொல்லி சென்றார்.

"செல்வா உங்க அப்பா படில இருந்து  கீழ விழுந்ததுனால அவரோட முதுகெலும்புல பலமா அடிபட்டு இருக்கு. அவரோட ஆண் குறியிலயும் பலமா அடிபட்டிருக்கு.. சோ இனிமே உங்க அப்பாவுக்கு கழுத்துக்கு இடுப்புக்கு கீழே எந்த பார்ட்ஸ்ம் வேலை செய்யாது. கைய கூட ஓரளவுக்கு தான் அசைக்க முடியும்.. இங்கே வச்சு அவரை பார்த்துக்குறிங்களா?இல்லை வீட்டுக்கு கூட்டிட்டு போய் நர்ஸ் வச்சு பாத்துக்குறிங்களா?" செல்வ லட்சுமி அமைதியாக இருக்க

" வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் டாக்டர்" மின்னல் இடைப் புகுந்து பேசினான்..

" தென் ஆல்ரைட் பேஷண்ட் இப்பதான் கண்ணு முழிச்சி இருக்காரு உடனே போய் யாரும் அவரை பார்த்து டிஸ்டர்ப் பண்ண வேணாம். கொஞ்ச நேரம் கழிச்சு நீங்க எல்லாம் போய் பார்க்கலாம்" மருத்துவர் சென்றுவிட 

"பாத்தியா மின்னலு.. நாமதான் சில நேரத்துல கடவுளே இல்லைன்னு சொல்றோம்.. இங்க நடக்குற அநியாயம் அக்கிரமத்தை எல்லாம் பார்த்தா கடவுள் செத்துப் போய்ட்டாருன்னு கூட முடிவு பண்ணிடறோம்.. ஆனா அப்படி இல்ல கடவுள் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்காரு. யாருக்கு எப்ப எந்த நேரத்துல கொடுக்கணும்னு அவருக்கு சரியா தெரிஞ்சிருக்கு இல்லையா.. மூனு பிள்ளைங்களையும் எங்க அப்பாவுக்கு ரொம்ப செல்லம்னா அது மகா தான்.. இன்னிக்கு அவ பெத்த பிள்ளைய கூட தொட முடியாத ஒரு கேவலமான நிலைமை.." சொல்லிவிட்டு கேவி அழுதாள் செல்வ லட்சுமி..

"அழாத செல்வா.. நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க.." மின்னல் அமைதியாக கூற 

"இல்ல மின்னலு.. நாங்க இங்க இருக்கோம்.. பூங்காவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல? அவளுக்கு உண்மை தெரியாது இல்லையா? நாங்க இங்க இருந்தே ஆகணும்.." சந்தான லட்சுமி அங்கிருக்கும் நிலவரத்தை அவனுக்கு சுட்டி காட்டினாள். அதற்கு மேல் அவர்களை போக சொல்ல மின்னலுக்கும் இயலவில்லை.

மேலும் நிமிடங்கள் கழிய  பூங்காவனம் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவயே பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல்..

அன்று ஒரு நாள் பூங்கா அவனை சாடியது  நினைவுக்கு வந்தது..

"உங்க மனசுல என்னவோ இருக்கு.. என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கு.. சொல்ல மாட்றீங்க. ஒரு கண் ஜாடை கூட இல்லை. ஆனா என்னால உணர முடியுது.. நீங்க பக்கத்துல இருந்தாலும் தூரமா இருந்தாலும் என் மனசுல உங்க நினைப்பு இருந்துகிட்டே இருக்கு. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு ஏழு கழுதை வயசாச்சு உங்களுக்கு தெரியாதா.. இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா..

நீங்களே அரசியல்வாதி உங்களுக்கு நடிக்க சொல்லியா கொடுக்கணும்? நடிச்சு நடிச்சு தானே மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க. இந்த நடிப்பு எல்லாம் நீங்க வெளிய வச்சுக்க கூடாதா.. நான் யாரு உங்க பொண்டாட்டி தானே.. அப்படித்தானே நீங்க சொல்றீங்க. வெளிய மட்டும் எம்பி பொண்டாட்டின்னு பந்தாவா  என்ன சொல்றாங்க. ஆனா உள்ள நான் யாரு உங்களுக்கு?"அவளது கேள்விகளுக்கு வழக்கமான தனது மௌன ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டான் மின்னல்.

சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் "என்னோட துடிப்பும் என்னோட தவிப்பும் உங்களுக்கு.. ஒரு நாள் வரும்.. எனக்காக நீங்க துடிப்பீங்க. எனக்காக நீங்க தவிப்பீங்க. ஐயோ ஐயோன்னு அடிச்சுகுவிங்க. அப்ப சத்தியமா நான் உங்க பக்கத்துல இருக்க மாட்டேன். பக்கத்துல இருக்கிற வரைக்கும் தானே  உங்க கால் தூசிக்கும் சமானமா என்ன நினைக்கிறீங்க.. நீங்க வேணும்னா பாத்துக்கிட்டே இருங்க அப்படி ஒரு நாள் கூடிய சீக்கிரம் வரத்தான் போகுது" எந்த நேரத்தில் எவ்வித மனநிலையில் கூறினாலோ தெரியவில்லை அவள் கூறியதற்கு ஆயிரம் மடங்கான துடிப்பும் தவிப்பும் மின்னலின் மனதிற்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஐயோ ஐயோவென்று வெளிப்படையாக அடித்துக் கொள்ளாவிட்டாலும் ஒவ்வொரு வினாடியும் மனதிற்குள் அவளை நினைத்து கத்தி கதறிக் கொண்டிருக்கிறான் மின்னல் வீரபாண்டியன்..

நேரங்கள் செல்லச் செல்ல மின்னலின் மனோதிடம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருந்தது.

"ம்மா நீ என்கிட்ட சத்தியம் பண்ணிருக்க.. எப்பவும் என் கூட இருப்பேன்னு. என்னால முடியல அம்மா. சுத்தமா முடியல. வெளிப்பார்வைக்கு நான் அமைதியா உட்கார்ந்து இருக்கிற மாதிரி தோணும். ஆனா உள்ள ஒவ்வொரு வினாடியும் நான் செத்துகிட்டு இருக்கேன்.. ஏம்மா எனக்கு இப்படி?

கடவுள் நம்பிக்கையை விட உன்மேல நான் வெச்சிருக்கிற நம்பிக்கை பெருசு.. உண்மையாவே இந்த நிமிஷம் என்ன சுத்தி நீ இருந்தா  எப்படியாவது என் பொண்டாட்டிய காப்பாத்தி கொடு.. அவ என்ன புரிஞ்சுக்கலனாலும் பரவாயில்லை. அவ நல்லபடியா திரும்பி வந்தா போதும்.. நான் சொல்றத கேட்டு என்கூட வாழ்ந்தாலும் சரி, இல்ல தனியா வாழனும்னு அவ ஆசைப்பட்டாலும் சரி அது அவளோட விருப்பம்..  எனக்கு என் கண்ணு முன்னாடி அவ முழுசா திரும்பி வந்துடனும் அவ்ளோ தான்..

தம்பிய பாத்துக்கோன்னு கடைசியா என்கிட்ட சொன்ன. என் கையாலேயே அவனை? அந்த இடத்துல நீ இருந்திருந்தா என்னம்மா செஞ்சிருப்ப? எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலம்மா. மண்டலாம் ஓடுது.. யோசிக்க முடியல.. அவனையும் காப்பாத்தி கொடுத்துரு.." மானசிகமாக தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான் மின்னல்.

நாகா மின்னலை சுரண்டினான்.
"ண்ணே டாக்டர் வராரு" நிமிர்ந்து பார்க்க டாக்டர் மின்னலை நெருங்கினார்.

"உங்க ப்ரோதர் கையில பட்டிருந்த புல்லட்ஸ நாங்க வெளியே எடுத்திட்டோம்..ஹெவி பிளட் லாஸ்.. ரெண்டு கையும் இப்ப தூக்க முடியாது. ஸ்ட்ரெய்ன் பண்ண வேணா..தேன் உங்க வைஃப் கண்ணு முழிச்சுட்டாங்க சார்.. உடம்பு முழுக்க வீக்கமா இருக்கு. அவங்க பேபிய ஸ்கேன் பண்ணி பார்த்தாச்சு. பேபி இஸ் சேவ் நொவ்.. ஒன்னும் பயப்படறதுக்கு இல்ல.. அவங்க பிரக்னண்டா இருக்கிறதுனால எங்களால ஹெவி டோஸ் மெடிசன்ஸ் எதுவும் கொடுக்க முடியல.. இப்போ நீங்க போய் அவங்கள பாக்கலாம்.." மருத்துவர் பேசிவிட்டு செல்ல அமர்ந்தபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல்.

"ண்ணே என்ன அப்படியே உட்கார்ந்துருக்க வா போய் அண்ணிய பார்க்கலாம்.." நாகா அவசரப்படுத்தினான்.. இருந்தும் எழாமல் ஒரு நிமிடம் கண்ணை மூடினான் மின்னல்.

தெய்வமாக அவனது அம்மா கண் முன் தோன்றினாள் மானசீகமாக.

"ம்மா நீ என் கூட தான் இருக்க" என்றவன் கண்களை திறந்து படக்கென நாற்காலியில் இருந்து எழுந்தான். வேகமாக நடந்து சென்று பூங்காவனம் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். அமைச்சர் என்பதால் யாருமே அங்கே தடுக்கவில்லை. மின்னலைப் பின் தொடர்ந்து நாகா மற்றும்  மூன்று சகோதரிகளும் சென்றார்கள்.

முகமெல்லாம் வீங்கி ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது பூங்காவனத்தின் வலது கையில்.. செக்கச் சிவந்த அவள் மேனியில்  அந்தக் காயங்கள் படும் பயங்கரமாக காட்சியளித்தது.. கண்களைத் திறந்திருந்தவள் தன் அருகே மின்னல் வர அவனையே பார்த்தான்.. அவள் கண்களில் ஏகப்பட்ட கேள்விகள்.. முகம் முழுவதும் குழப்பத்தில் வாடியிருந்தது..

அவள் அருகே வந்த மின்னல் அமைதியாக நிற்க இடது கையை நீட்டினாள் பூங்காவனம். நீட்டிய கரத்தை வேகமாக பற்றிக் கொண்டான் மின்னல்.. அவளது கையை இறுக்கமாக பற்றிக்கொள்ள பூங்காவின் விழிகளில் இருந்து இரு சொட்டு கண்ணீர் பக்கவாட்டில் வழிந்தது..

குனிந்து பூங்காவனத்தின் நெற்றியில் முத்தமிட்டான் மின்னல் வீரபாண்டியன். அப்பொழுது அவனது விழி நீர் அவளது நெற்றியில் விழுந்தது..

"அழறிங்களா.."அவனிடம் அமைதி.

" எனக்காகவா" அப்பொழுதும் அமைதி ஆனால்  இம்முறை குனிந்து அவளது இதழில்  தன் இதழை ஆழமாக பதித்தான் மின்னல் வீரபாண்டியன். எத்தனையோ முறை அவளை முத்தமிட்டு இருக்கிறான். ஆனால் இந்த முத்தத்தில் காமம் தவிர்த்து கொட்டிக் கிடந்த காதலை அவளால் உணர முடிந்தது.

" ரொம்ப வலிக்குதா? என்ன மன்னிச்சிடுடி.. உன்னோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்"மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் மின்னல்.

" இப்படி அடிச்சு போட்டா வலிக்காம? உங்களோட மன்னிப்பு எனக்கு தேவையில்லை. ஆனா எனக்கு நிறைய கேள்வி இருக்கு அதுக்கு நீங்க பதில் சொல்லணும்".. அந்த நிலையிலும் தனக்கு சரிசமமாக வாயாடும் அவளை எண்ணி சிரிப்பு வந்தது அவனுக்கு.

" வீட்டுக்கு போயிட்டு அப்புறம் பதில் சொல்றேன்" அவளுக்கு ஓய்வு கொடுக்க எண்ணினான் நானும் மின்னல்.

"ம்ஹும்.. இப்பவே.. இங்கயே.. வீட்டுக்கு போயிட்டா திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்.." கனிவாக அவளை பார்த்தவன் மெல்ல அவளை தூக்கி அவள் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவளை தன் மீது சாய்த்துக் கொண்டான். நாகா, செல்வ லட்சுமி, அவளது குழந்தை சந்தான லட்சுமி, மகாலட்சுமி  அவளது குழந்தை இப்படி அனைவரும் அங்கிருந்தாலும் யாரைப் பற்றியும் அவன் கவலை கொள்ளவில்லை.

தன்னவளை தன்மீது சாய்த்துக் கொண்டு  வாழ்வில் முதன்முறையாக மின்னல் வீரபாண்டியன் யார் என்பதை வெளிப்படுத்த ஆரம்பித்தான்.

" உன் மனசுல ஓடுற கேள்வி எல்லாத்துக்கும் என்கிட்ட பதில் இருக்கு. அந்த பதிலை கேட்டதுக்கு அப்புறம்  நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். தாலிய கழட்டிய மூஞ்சில விட்டு எறிஞ்சிட்டு போனாலும்  இல்ல கடைசி வரைக்கும் என் கூட வாழ்ந்தாலும் சரி  எதுவாயிருந்தாலும் நான் ஏத்துக்கிறேன்.. முடிவு உன் கையில.. அதுவரைக்கும் என் கைக்குள்ள நீ இரு" அவளை தன்னுடைய இரு கரத்திற்குள்ளேயும் அடக்கிக் கொண்டான்..

"அங்க நீ பார்த்தது என்னோட தம்பி.. வர்மா.. நான் பொறந்து பத்து நிமிஷம் கழிச்சு பொறந்தவன்..  எங்க ஊரு தேனி பக்கத்துல ஒரு கிராமம்.. சின்ன வயசிலேயே அப்பா இறந்து போயிட்டாரு. இருந்து கொஞ்சூண்டு நிலத்துல அம்மா எங்கள நல்லா வளர்த்தாங்க. எனக்கு ஒரு அக்கா இருந்தா.. ரொம்ப சின்ன குடும்பம். சந்தோஷமான வாழ்க்கை.

ஒரே நாள்ல அது எல்லாமே உன்னை விட்டு போனா உனக்கு எப்படி இருக்கும்? அந்த ஒரு நாள் என்னோட வாழ்க்கையில வந்துச்சு. எலக்ஷன் டைம். மீட்டிங்ல பேசறதுக்காக சோலை பாண்டியன் எங்க ஊருக்கு வந்தான். எங்க ஊரு வளந்து வர கிராமம்.. மீட்டிங்ல பேசினவன் கோயிலுக்கு  போய் சாமியை கும்பிட்டு இருக்கும்போது எப்படியோ எங்க அக்கா அவன் கண்ணுல விழுந்துடுச்சு..

அப்போ என் அக்காவுக்கு வயசு பதினாலு.. எப்படி எங்க அக்காவ தூக்கினானு எனக்கு இன்ன வரைக்கும் தெரியல.. அதுவும் எங்க வீடு பூந்து. ஊருக்குள்ள இருக்க பிடிக்காம எங்க அப்பா தென்னந்தோப்புக்குள்ளே சின்னதா வீடு கட்டி தான் இருந்திருக்காரு. அவருக்கு பிடிச்ச தனிமை தான் எங்க அக்காவுக்கு எமனா ஆச்சு.

சின்னப்பொண்ணு கூட பாக்காம என் அக்காவை.. எங்களுக்கு ரெண்டு காடு இருக்கு. தென்னந்தோப்பு.. அதுக்கு கொஞ்சம் தூரம் உள்ள போனா மாந்தோப்பு.. மாந்தோப்புக்கு போயிட்டு வந்த எங்க அம்மா  வீட்டுக்குள்ளே எங்க அக்கா கத்துறத கேட்டு வேகமா ஓடி இருக்காங்க. அவங்க போறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு. என் அக்காவை கட்டிப்பிடிச்சு அழ தான் முடிஞ்சது.

அந்தப் பொறுக்கி அதோட போய் இருந்திருக்கலாம். ஆனா அவன் என் அம்மாவையும் விட்டு வைக்கல.. நடுத் தோப்புக்குள்ள ஊருக்குள்ள கத்துறது ஊருக்குள்ள யாரு காதுலையும் விழல.. இல்ல விழுந்தும் நம்மளுக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கி போயிட்டானுங்களானு தெரியல.. அப்பதான் நானும் என் தம்பியும் விளையாடிட்டு வீட்டுக்கு வந்தோம்.

எந்த மகனும் பார்க்க கூடாத காட்சி.. நாங்க பாக்குறப்போ சோலை பாண்டியன் எல்லாத்தையும் முடிச்சிட்டு வெளியே போயிட்டு இருந்தான். எங்கள அவன் பாக்கல.. சின்ன பொண்ணு எங்க அக்கா.. அதோட பாத்ரூம் போற இடம் எல்லாம் ஒரே இரத்தம். என் அக்காவ கட்டி புடிச்சிட்டு உடம்புல விட்டு துணி இல்லாம என் அம்மா..

எங்கள பார்த்ததும் "ஓ"ன்னு எங்க அம்மா அழுத அழுக இன்னும் என் நினைப்புல அப்படியே இருக்கு. நான் வேகமா கொடியில காஞ்சுட்டு இருந்த என் அம்மா சேலை உருவி எடுத்துட்டு போய் அவங்க மேல போர்த்தி விட்டேன்..

என் தம்பி அம்மாவை கட்டி பிடிச்சி அழுந்தான்.. என்னம்மா ஆச்சு யாருமா அவன்? உன்னையும் அக்காவையும் என்னமா பண்ணான்னு.. எங்க அம்மா எதுவுமே சொல்லல. எங்க அக்காவுக்கு பேச்சு மூச்சே இல்ல..

என்னையே தம்பியும் கட்டிப்பிடிச்சு எங்க அம்மா அழுதாங்க. அப்புறம் என்ன நினைச்சாங்களோ வீரா சோத்துப் பானையும் குழம்பு பானையும் தூக்கிட்டு வான்னு சொன்னாங்க.. நானும் தூக்கிட்டு வந்தேன். குழம்பு சோத்துல ஊத்தி எனக்கும் என் தம்பிக்கும் ஊட்டி விட்டாங்க..

நாங்க வேணான்னு சொல்லியும் அவங்க கேட்கல. பேச்சு மூச்சு இல்லாத எங்க அக்காவ பாக்க எங்களுக்கு பயமா இருந்துச்சு. ரெண்டு பேத்துக்கும் சோறு ஊட்டி விட்ட எங்க அம்மா வேகமா எந்திரிச்சாங்க. மர பீரோல அவங்க சேர்த்து வச்சிருந்த பத்து பவுன் நகை மூவாயிரம் ரூபாய் ரொக்கம் எல்லாத்தையும் எடுத்து என் கையில கொடுத்தாங்க.

தம்பியை நீ நல்லா பாத்துக்கணும் வீரா. நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். இங்க நடந்ததை பத்தி யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது. தனியா இருக்கிற பொம்பளைங்கள தான் இந்த ஊரு உலகம் தப்பா பேசும். எந்த சூழ்நிலை வந்தாலும் தம்பிய மட்டும் விட்றாத.. நீயும் உன்ன பாத்துக்கோ. அம்மா எப்பவும் கூடவே இருப்பேன்.. அப்படின்னு எனக்கும் என் தம்பிக்கும் முத்தம் கொடுத்து நீங்க ரெண்டு பேரும் போயி  உங்க பெரியப்பாவை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க..

நம்பி வீட்டை விட்டு கொஞ்சம் தூரம் தான் ஓடிருப்போம். அதுக்குள்ள வீடு  நெருப்பு புடிச்சு எரிய ஆரம்பிச்சு.. நானும் என் தம்பியும் திரும்பவும் வீட்டுக்கு ஓடி வந்தோம். நெருப்பு எரியிறத பார்த்து அக்கம் பக்கத்து தோப்புக்காரங்க எல்லாரும் ஓடி வந்தாங்க. வீடு நெருப்பு புடிச்சுகிச்சுன்னு நினைச்சு அணைக்க முயற்சி பண்ணாங்க. என் அம்மாவும் அக்காவும்  எங்க கண்ணு முன்னாடியே..

பிறவியிலிருந்து என் தம்பி ரொம்ப அமைதி. எங்க அப்பா மாதிரி. பயந்த சுபாவம்.. ஊரும் உறங்க நினைச்ச மாதிரி அது சாதாரண விபத்து இல்லன்னு எங்களுக்கு மட்டும் தான் தெரியும். மானம் போயிடும்னு எங்க அம்மா அவங்கள அவங்களே அழிச்சிக்கிட்டாங்க..

காரியம் எல்லாம் முடிகிற வரைக்கும் பெரியப்பா வீட்ல இருந்தோம்.. அப்போ எங்களுக்கு பத்து வயசு தான்.. அம்மா கொடுத்துட்டு போன நகையும் காசும் என்கிட்ட அப்படியே இருந்துச்சு. அதுக்கப்புறம் ஸ்கூல் முடிகிற வரைக்கும் பெரியப்பா வீடு தான்.. என் தம்பிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. முன்ன விட ரொம்ப அமைதியாயிட்டான். அவன் தான் அம்மாவை என்னமோ பண்ணிட்டான் அக்காவை என்னமோ பண்ணிட்டான்.. அவன விடக்கூடாதுனு சொல்லிக்கிட்டே இருப்பான்.

என் மனசுலயும் அது மட்டும் தான் பட்டுச்சு.. பத்தாவது முடிச்ச கையோட சென்னை வந்துட்டேன் என் தம்பிய கூட்டிட்டு. தோப்பு எல்லாத்தையும் என் பெரியப்பா கிட்ட சொல்லி வித்துட்டு அவரு ஒரு பெரிய தொகையை ஆட்டைய போட்டுட்டாரு.இவ்ளோ தான்டானு கொஞ்சூண்டு காச கையில கொடுத்து அனுப்பிட்டாரு...

என் தம்பி இங்க இருந்தா அவனோட மனநிலை பாதிக்கப்பட்டாலும்  என் ஃரெண்டோட அப்பா கிட்ட பேசி அவன கொடைக்கானலில் சேர்த்தேன். சின்ன வயசுல இருந்து நான் அரசியலுக்குள்ள நுழைஞ்சேன்.. 18 வயசுல முத சம்பவம் செஞ்சேன். அதுவரைக்கும் சின்ன பையனா எடுபுடி வேலை செஞ்சுகிட்டு இருந்த என்ன மத்தவங்க திரும்பி பார்த்தாங்க. அடிதடி கட்டப்பஞ்சாயத்துனு அந்த வயசுல கத்தியை தூக்கனேன்..

என் தம்பியை எதுலையும் நான் இழுக்கல. அவன வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வச்சேன்.. படிச்சு முடிச்சதுக்கு அப்புறமும் அவன் இங்க வரவே இல்லை. ஏன்னா நான் சோல பாண்டியன் கிட்ட சேர்ந்தத அவனால ஏத்துக்க முடியல.. நானும் ஒன்னும் ஆசைப்பட்ட அவன் கிட்ட சேரல. கூடவே இருந்து அவனோட நம்பிக்கைய சம்பாதிச்சு அவனை வேரோடு அழிக்கணும்னு பார்த்தேன்.

நானே என் தம்பிய போய் பார்த்து அவன் கிட்ட இதெல்லாம் சொன்னேன். நேரம் வரும்போது அவன் கதையை முடிக்கிறன்னு என் தம்பிக்கு தைரியம் சொல்லிட்டு வந்தேன். வர்மாவ பொறுத்த வரைக்கும் கத்தியை எடுத்தோமா அவனை ஒரே போடா போட்டமான்னு இருக்கணும்னு ஆசைப்பட்டான்.

ஆனா சோலை பாண்டியன் அப்படி சாகக்கூடாது.. எத்தனையோ பொண்ணுங்களோட வாழ்க்கையை அவன் கெடுத்துருக்கான். ஒரே போடா அவனை போட்டு? நான் ஏன் ஜெயிலுக்கு போகணும்.. என்னோட வாழ்க்கையை தாரவார்க்க எனக்கு விருப்பம் கிடையாது. அதேசமயம் இவ்வளவு தப்பு செஞ்சவன் ஒரே வெட்டுல சாவரதையும் என்னால ஏத்துக்க முடியாது..

எனக்கு தெரிஞ்சு அவன் தப்பு செஞ்சாலும் அதனால தான் நான் வாயை மூடிக்கிட்டு நின்னேன்.. உன்ன கல்யாணம் பண்ணது எல்லாமே என் தம்பிக்கு தெரியும்.. திடீர்னு நேத்து சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டான்.

ஒரு ஹோட்டல்ல தங்கி இருந்தவன நான் போய் பார்க்க இப்ப நீ ரொம்ப மாறிப்போயிட்ட அம்மா அக்காவை நீ மறந்துட்ட. அந்த சோலை பாண்டியன் ஓட வாரிசா மாறிட்ட. உன் பொண்டாட்டி உன் அடியோடு மாத்திட்டான்னு கிறுக்கன் மாதிரி கத்திக்கிட்டு இருந்தான்..

அவன சமாதானப்படுத்தி பேசிட்டு இருக்கும்போது தான் செல்வா எனக்கு போன் பண்ணுச்சு. செல்வாவும் சந்தனாவும் அவங்க அப்பாவுக்கு சப்ரைஸ் கொடுக்கணும்னு சொல்லாம கொள்ளாம ஊருக்கு வந்துட்டாங்க.. அவங்கள விசிட் பண்ண தான் மகாலட்சுமி ஃரண்டுக்கு  விசேஷம்னு சொல்லிட்டு போனா..

கொஞ்ச நாளாவே மகாலட்சுமிக்கு சோலை பாண்டியன் நடத்த மேல ஏதோ சந்தேகம்.. இப்பல்லாம் பொண்ணுங்கள தொடாம என்னமோ போல சுரேஷ் கிட்ட சொன்னத மகாலட்சுமி ஒரு நாள் கேட்டுட்டா. அப்போல இருந்து அவ அப்பாவ கண்காணிக்க ஆரம்பிச்சா. நினைச்ச மாதிரி எதுவும் சிக்கலானாலும் என்னமோ தப்பா இருக்குனு அவ மனசுல பட்டுச்சு..

என்கிட்ட கேட்டா. அப்போ நான் சொல்லல.. ஆனா இந்த நேரத்துக்காக தான் நான் காத்திருந்தேன். சோலை பாண்டியனோட உயிரே அவரோட மூணு பொண்ணுங்க தான். அதுக்கு தகுந்த மாதிரி  மூணு பொண்ணுங்களும் ஒரே நேரத்துல வந்தாங்க. என் தம்பி வந்த அதே நேரம் தான் செல்வா சந்தனா மகா மூணு பேரும் என்ன உடனே பாக்கணும்னு வர சொன்னாங்க.

அந்த நேரம் எனக்கு முக்கியமான மீட்டிங். உன்ன வேற கிளம்பி இருனு சொல்லிட்டேன். ஆபீஸ்ல இருந்தாக வேண்டிய கட்டாயம்  வேற வழியே இல்லாம என் தம்பியை என்ன மாதிரி வேஷம் போட வெச்சு என்னோட போன அவன் கிட்ட கொடுத்து  அனுப்பி வச்சேன்.. நீ போன் பண்ணா  இன்னைக்கு எங்கேயும் போகல வீட்டிலேயே இருன்னு சொல்ல சொன்னேன்..

நேரா இவங்க வர சொன்ன இடத்துக்கு போனேன்.. மொத மூணு பேரும் நான் சொன்னதை நம்பவே இல்ல.ஆனா மகா கொஞ்சம் யோசிச்சா.. அப்போதான் அவளுக்கு வலி வந்தது.. அவள கூட்டிட்டு போய் பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல் சேர்த்து கூடவே இருந்து எல்லாத்தையும் கவனிக்க, சரியா அவளுக்கு குழந்தை பொறக்குற நேரம் என் மனசுல எதுவோ தப்பா பட்டுச்சு.

செல்வா ஃபோனை வாங்கி நாகாவுக்கு கால் பண்ணேன். அவன் வேண்டா வெறுப்பா பேச என்னன்னு கேட்டேன். கட்டுன பொண்டாட்டிய கூட்டிக் கொடுக்கிறவன் கிட்ட எனக்கு என்னென்ன பேச்சு. இனியும் உங்ககிட்ட வேலை செய்ய எனக்கு விருப்பம். நீங்க என்ன சொன்னாலும் சரி இல்ல விட்டு வச்சாலும் சரி நான் உங்க கிட்ட வேலை செய்ய போறது இல்லனு நாகா சொல்லவும் தான் அங்க வேற என்னமோ நடந்து இருக்குன்னு எனக்கு புரிஞ்சது..

நாகா கிட்ட அவசரமா உண்மையை சொல்ல அவனும் அங்க நடந்த எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா.. பக்கத்துல இருந்து செல்வாமோ சந்தனாவும் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. உன்ன காப்பாத்த நான் வரும்போது தான்  மகாவுக்கு குழந்தை பொறந்துச்சு. அவளும் விஷயத்தை கேட்டு பச்ச உடம்புக்காரி  டாக்டர் எவ்வளவு சொல்லியும் கேட்காம  எங்க கூட வந்து ஆகணும்னு அடம் பிடிச்சு  வந்தா. அங்க பாரு நிக்க முடியாம  ஒரு ஓரமா உக்காந்து உன்னையே பாத்துட்டு இருக்கா.. சத்தியமா என் தம்பி ஏன் இப்படி செஞ்சானு எனக்கு புரியல அம்மாடி.. அவன் செஞ்சத நான் நியாயப்படுத்தல. ஆனா அவங்க கிட்ட ஏன்னு கேட்டுட்டு  என்ன தண்டனை வேணாலும் கொடுக்கலாம். அதுவரைக்கும் தயவு செஞ்சு என் தம்பியை தப்பா நினைக்காத. இந்த உலகத்துல எனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் அவன் மட்டும் தான். ப்ளீஸ் டீ.. என்ன பத்தின எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொல்லிட்டேன்.. இதுக்கு மேல நீ தான் முடிவு எடுக்கணும் " மின்னலின் கண்களில் காய்ந்து போன கண்ணீர் ரேகை. அவன் அனுபவித்த வேதனைகளை கேட்டு அங்கிருந்து அனைவருமே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

பூங்காவனத்திற்கு கண்ணீரோடு சேர்ந்து கேள்விகளும் தோன்றியது.
" இவ்ளோ அனுபவச்ச நீங்க ஏன் உனக்கு பொண்ணுங்கள கூட்டி கொடுத்தீங்க? அந்த மாரியப்பன் எவ்வளவு கெஞ்சுனாரு.. நீங்க நினைச்சிருந்தா அவரை காப்பாத்தி இருக்கலாமே.. இது எல்லாத்தையும் என்கிட்ட நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா இவ்ளோ பெரிய பிரச்சனை ஆயிருக்காதே"

" குடும்பத்து பொண்ணுங்களையோ  இல்ல அப்பாவி பொண்ணுங்களையோ  அவனுக்கு நான் கூட்டி விடல. இதுக்காகவே தொழில் பண்ணிட்டு இருந்த பொண்ணுங்கள தான் அவன் கேட்கிறப்ப நான் பேசி அனுப்பி விட்டேன். என் உடம்பெல்லாம் கூசும். ஆனா யோசிச்சு பாரு நான் ஒரு சாமானியம். இந்த பொறுக்கி நாய் செஞ்ச தப்புக்காக இவன போட்டு தள்ளிட்டு நான் எதுக்கு உள்ள போகணும்? அப்படி நான் செஞ்சிருந்தா இதோ இங்க நிக்கிறாங்களே மூணு அக்கா தங்கச்சிங்க இவங்களே நான் வெளிய வரும்போது ஆளு வச்சு என்ன முடிச்சிருப்பாங்க.. என் வாழ்க்கை எதுக்கு நான் வீணாக்கணும்..

இன்னொன்னு என்ன கேட்ட மாரியப்பன்.. அவன் ஒன்னும் யோக்கியம் கிடையாது.. அவனியா அவனோட பேத்திய சோலை பாண்டியனுக்கு அனுப்பத்தான் இருந்தான்.. பேத்திய சோலை பாண்டியன் கிட்ட அனுப்பி பெரிய அமௌன்ட் ஒன்னு அடிக்க இருந்தான்.. பேத்தி அவன் கூட அந்த மாதிரி இருக்கும்போது வீடியோ எடுத்தது சோலை பாண்டியன் கண்டுபிடிச்சிட்டான்.. மாரியப்பன் அடிச்சு வீடியோவ பிடுங்கி கடன் வாங்கிய பணத்தை கேட்க பெரிய நல்லவன் மாதிரி நம்ம வீட்டுக்கு வந்து சீன் போட்டான்..

நான் என்ன இங்க கொட்டியா வச்சிருக்கேன்? ஆரம்பத்திலேயே என்கிட்ட வந்து உதவி கேட்டு இருந்தா நான் செஞ்சிருப்பேன். பேராசைக்காக சொந்த பேத்தியவே கூட்டி கொடுத்துட்டு  கடைசியில மாட்டிக்கிட்டு வந்து பேசினா நான் உதவி செய்யணுமா?

வாங்குன பணத்தை கொடுக்க துப்பு இல்லை. இவன் எடுத்த வீடியோவையே இவனுக்கு எதிரா போடுவேன்னு சோல பாண்டிய மிரட்டுனா கையோட வேற வழியே இல்லாம குடும்பமே தற்கொலை பண்ணிக்கிச்சு..

அம்மாடி நான் தப்பு பண்ணியிருக்கேன். ஆனா உன்ன தவிர எந்த பொண்ணையும் நான் தொட்டது கிடையாது. தேடி ஓடி காதலிச்ச கல்யாணம் பண்ணனும்னு எனக்கு ஆசை இல்லை. ஆனா எனக்காக ஒருத்தி கண்டிப்பா வருவான்னு என் மனசுல சொல்லிக்கிட்டே இருந்துச்சு. உன்ன மொத மொத பாக்குறப்ப அந்த எண்ணம் என் மனசுல ரொம்ப வலுவா இருந்துச்சு.

ஆனா உனக்காக நான் இறங்க போய் இத்தனை வருஷம் நான் பட்ட கஷ்டம் வீணா போயிடக் கூடாது.. அப்போ நான் என் அம்மா கிட்ட கேட்ட விஷயம் இந்த பொண்ணு என் வாழ்க்கையில இருந்தா நல்லா இருக்கும்னு.  என்னால நம்பவே முடியல சோல பாண்டியனே உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சான்.

நீ என் வாழ்க்கையில நான் எதிர்பார்க்காம கிடைச்ச வரம். உன்னை இழக்க எனக்கு மனசு வரல. அதேசமயம் நான் நினைச்சதை என் வாழ்க்கையில அப்ப தான் நடந்துச்சு. என்ன முழுசா நம்பி வாரிசுன்னு அறிவிச்சான்.. நேரமும் காலமும் எனக்கு சாதகமா இருந்துச்சு. வெண்ண திரண்டு வர நேரத்துல தாலியை உடைக்க கூடாதுன்னு உன் மேல இருந்த பாசத்தை எல்லாம் எனக்குள்ளே மறைச்சு வச்சு இன்னைக்கு உன்னை இந்த நிலைமைக்கு ஆளாகிட்டேன்..

இனிமே என்கூட நீ இருக்கிறதோ இல்ல உன் வாழ்க்கையை பார்த்துட்டு போறதும் உன் கையில இருக்கு.. நீ என்ன முடிவு எடுக்கிற அம்மாடி?" பூங்காவனம் இப்பொழுது அமைதியை தன்முறையாக்கி கொண்டாள். பரிதவிப்பாக அவளது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல்.

"பூங்கா மின்னல் சொன்ன எல்லாமே உண்மைதான். முன்னாடி மின்னல் எங்ககிட்ட அப்பாவ பத்தி சொல்லி இருந்தா கண்டிப்பா நாங்க நம்பி இருக்க மாட்டோம். அதேசமயம் மின்னல் எங்க அப்பாவ கொன்னு இருந்தா அவனை நாங்க சும்மா விட்டிருக்கவும் மாட்டோம்.. மின்னல் எடத்துல இருந்து யோசிச்சு பாரு. அவன் இழந்தது கொஞ்ச நஞ்சம் இல்ல. இப்படி ஒரு ஆளை எங்க அப்பனு சொல்றதுக்கே வெட்கமா இருக்கு..

என் பொண்ணு பொறந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல. இவ மேல சத்தியமா சொல்றேன்.. மின்னல் சொன்ன எல்லாமே உண்மைதான் பூங்கா.. தயவு செஞ்சு அவசரப்பட்டு எந்த தப்பான முடிவும் எடுத்துடாத" செல்வா ஆரம்பித்து மகா முடித்தாள்.

" ஆமா அண்ணி.. மொத உங்ககிட்ட பேசினது மட்டும் தான் அண்ணே அதுக்கப்புறம் உங்க கிட்ட பேசினது அண்ணன் கிடையாது.. நானே முதல்ல ஷாக் ஆயிட்டேன் அண்ணன் எப்படி இந்த மாதிரி.. ஆனா அண்ணன் உண்மையாவே உங்கள விரும்புறாரு. அண்ணே ரொம்ப நல்லவரு அண்ணி. உங்களுக்கு தெரியாது சோல பாண்டியன் கிட்ட எத்தனையோ பேரு உங்கள மாதிரி தான் மாட்டிக்க இருந்தான். அண்ணன் தான் அவங்களுக்கெல்லாம் மறைமுகமா உதவி செஞ்சு காப்பாத்தி இருக்காரு.. எதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க அண்ணி?" அப்பொழுதும் பூங்கா அமைதியாக இருக்க தாதி ஒருவர் உள்ளே வந்தார்.

"சார் உங்க தம்பி ரொம்ப பிரச்சனை பண்றாரு.. உடனே உங்கள பாக்கணும்னு சொல்றாரு" மின்னல் திரும்ப நாகாவை பார்க்க வேகமாக அங்கிருந்து சென்றான். பூங்காவை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்த மின்னல் இப்பொழுது எழுந்து நின்று கொண்டான். சற்று நேரத்திற்கு எல்லாம் வர்மாவை  வீல் சேரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தான் நாகா.

வர்மாவின் முகத்தையும் மின்னலின் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள் பூங்காவனம். அச்சில் வார்த்ததைப் போல ஒரே முகம்.. இரண்டு கையிலும் பேண்டேஜ் போட்டு இருந்தார்கள். கையை சற்று அசைத்தாலும் உதிரம் கசிந்தது.

மின்னலின் முன்பு வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தினான் நாகா. மின்னலின் பார்வை தம்பியை அளந்தது. வர்மாவும் மின்னலை நேர் பார்வை பார்த்தான். அடுத்த நொடி அவனது பார்வை பூங்காவனத்தை தழுவியது.. சற்று நேரம் புரியாமல் அவளை பார்த்தவன் 

"நீ.. நீ என் அம்மா மாறி இருக்கியே எப்படி".. அடிப்பட்ட பூங்காவனத்தின் முகம்  அவனின் அம்மா இறப்பதற்கு முன் இருந்ததைப் போல இருந்தது. சோலை பாண்டியனின் கை வண்ணத்தால் அவனது அம்மா முகமும் இப்படித்தான் கன்றி சிவந்திருந்தது.

" ஏன்டா இப்படி பண்ண? பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்பதான் அவ பார்க்க நம்ம அம்மா மாதிரி இருக்காளா?" தம்பியை கேட்டான் மின்னல்.

" நான் என்ன பண்ணேன்? எத்தனை தடவை சொன்ன அந்த சோல பாண்டியன போட்டு தள்ளுனு. நீயும் அவனை எதுவும் செய்யல. என்னையும் இத்தனை வருஷம் செய்ய விடல. கடைசில பாத்தா நீ அவனோட வாரிசாவே மாறிட்ட. உனக்கு நம்ம அம்மா அக்கா மூஞ்சி மறந்து போச்சா.. எல்லாம் உனக்கு கல்யாணம் ஆனதனால தானே. உனக்குன்னு ஒரு குடும்பம் வந்த உடனே அம்மா அக்காவை மறந்து போய்ட்ட.. ஆனா என்னால மறக்க முடியல..

உன்னை மீறி என்னால எதுவும் செய்ய முடியல. அன்னைக்கு நீ சொன்ன மாதிரி நான் பாட்டுக்கு ஆபீஸ் போய் உட்கார்ந்து தான் இருந்தேன். அப்பதான் அந்த பரதேசி நீனு நெனச்சு என்ன பாக்க வந்தான். உன் பொண்டாட்டிய என்கிட்ட அனுப்பி வையுன்னு சொன்னான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அங்கேயே அவன் கதைய முடிச்சுருப்பேன். ஆனா நான் செய்யல..

அம்மா அக்காவை மறந்துட்டு உன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கல்ல.. உன்னையும் பழி வாங்க நினைச்சேன். அதனாலதான் அம்மாவும் அக்காவும் அனுபவிச்சு அதே வேதனையை உன் பொண்டாட்டியும் அனுபவிச்சா தான் உனக்கு புரியும்னு, "சட்டென்று பேச்சை நிறுத்தினான் வர்மா..

"என்னால முடியலண்ணே எனக்கு அம்மா வேணும்.. ஒவ்வொரு பொண்ண பாக்குறப்பவும் யாராச்சும் அம்மா மாறி இருக்க மாட்டாங்களானு தேடி, என்னால முடியல.. நீ அம்மாவ மறந்துட்டு இவ கூட இருக்குறத பாக்க முடியல.. ஆனா இவ இவள இப்ப பாக்க நம்ம அம்மா மாறியே இல்ல.." மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் திடீரென்று அழுதவன்  இப்பொழுது அழுகையை மறந்து விட்டு மீண்டும் பூங்காவனத்தின் முகத்தையே பார்த்தான்.

" அவளோட பேரு கூட நம்ம அம்மா பேரு தான்.. " மின்னல் சொல்ல பூங்காவின் முகத்தை பார்த்தவன் திடுக்கிட்டான்..

"பூங்காவனம்?" காற்றுக்கும் வலிக்காத குரலில் அவன் வாய் அசைக்க பூங்காவுக்கு வர்மாவின் நிலை நன்றாக புரிந்தது.. மெல்ல தன்னுடைய இடது கையை உயர்த்தி 

"வர்மா" என்று அவனை அழைக்க அவளது கையைப் பிடித்தவன் அம்மா என்று கதறியே விட்டான்.. தன்னுடைய மனைவியின் கரத்தை பிடித்து கதறும் தம்பியின் தலைமுடியை கோதி விட்டான் தமையன்..

இரண்டு வாரங்களுக்கு பிறகு,

மருத்துவரின் ஆலோசனைப்படி மனநிலை பாதிக்கப்பட்டிருந்த வர்மாவுக்கு மருத்துவமனையிலேயே தங்கி அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.. தாய் தமக்கையின் மரணம் அவனது சின்ன மனதை வெகுவாக பாதித்திருந்ததை அறிய முடிந்தது.

செல்வாவும் சந்தனாவும் மகாவை தங்களோடு அழைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.. செல்லும்போது  இந்தியாவிலிருந்து அனைத்து சொத்துக்களையும் விற்கும் படி மின்னலிடம் கூறியவர்கள்  தங்களுக்கு வரும் பங்கில் ஒரு பங்கு தங்கள் தகப்பனார் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்கும்படி கூறி சென்றார்கள். சோலை பாண்டியன் என்ன நினைத்து மின்னலை  வாரிசாக அறிவித்தாரோ? ஆனால் அவரது புதல்விகள் மிகவும் நேர்மையாக பாதி சொத்தை மின்னலுக்கு விட்டுக் கொடுத்தார்கள்.

மின்னல் வேண்டாமென்றாலும், " இந்த சொத்தோட மூலதனம் என் அம்மா கொண்டு வந்த சொத்து.. உன் பொண்ணுக்கு இந்த அத்தைங்க செய்ற சீரா இருக்கட்டும்.."மின்னலால் அவர்கள் கூறியதை மறக்க முடியவில்லை. சோலைப் பாண்டியனின் மிகப்பெரிய கிழித்து வெளி உலகத்துக்கு காட்ட நினைத்தான். ஆனால் செல்வா சந்தனாவின் புகுந்த வீட்டு நிலை நினைத்து அந்த எண்ணத்தை அடியோடு மாற்றி விட்டான். இப்பொழுது வரை மருமகன்களுக்கு மாமனாரின் வண்டவாளம் தெரியாது.

இந்தியா வருவதாக கூறிய தங்களுடைய கணவன்மார்களை அடக்கி விட்டு புகுந்தகம் சென்று விட்டார்கள் பெண்கள். கூடவே மகாவையும் அழைத்துக் கொண்டு..

தேவகிக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது. சின்ன விபத்து என்று மட்டும் தான் பூங்கா தன்னுடைய அம்மாவிடம் கூறியிருந்தாள். அதற்கே சாப்பிடாமல் கொள்ளாமல் மகளை வந்து பார்த்து குடம் குடமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் தேவகி.. மின்னலுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

முகத்திலிருந்து வீக்கங்கள் முழுதுமாக  குணமாகி மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பூங்காவனம். அவளது வீங்கிய பாதத்திற்கு தைலம் தேய்த்துக் கொண்டிருந்தான் மின்னல்.

எவ்வளவு இன்னல்கள் அவர்கள் வாழ்வில்? இன்று வரை வாய் விட்டு தன்னுடைய மனதில் இருப்பதை மின்னல் கூறவில்லை தான். ஆனால் பூங்கா அதனை எதிர்பார்க்கவில்லை. இது காலை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறானே இதை விடவா அவன் காதலை வாய் விட்டு கூற வேண்டும்?

ஒவ்வொரு முறையும் தன்னுடைய லட்சியத்தையும் விட முடியாமல் தன் முன்னே கதறும் மனைவியையும் சமாதானம் படுத்த முடியாமல் அவன் இருதலை கொள்ளி எறும்பாக எப்படி தவித்திருப்பான்? அனைத்தையும் யோசித்துப் பார்க்கும்போது  கண்ணை கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

"போதும்" தன்னுடைய பாதத்தை இழுத்துக் கொண்டாள் பூங்கா. கையை கழுவி விட்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான் மின்னல்.

" சரி இன்னைக்கு வெளிய போலாமா.. "

"என்ன'

"வெளிய.."

" மறுபடியும் முதல்ல இருந்தா"

" என்ன மீறி என் அம்மாடியை எவனாலயும் தொட முடியாது.. " மின்னலின் மீசையை பிடித்து திருகிக்கொண்டு

" யார் சொன்னா என் வயித்துல இருந்து ஒருத்தன் வருவான் அவன் தொடுவான்.. " குறும்பாக சிரித்தாள் பூங்காவனம்.

" அது என்ன ஒருத்தன் ஒருத்தி தான்.. "

"ம்ஹும் மொத பையன்"

"பொண்ணு"

"பையன்"

"பொண்ணுடி"

"அதெல்லாம் முடியாது.. பாப்போமா?"

"பாப்போம்டி"

"பையன் பொறந்தா என்ன செய்வீங்க"

"ம்ம்ம்ம் பின்னாடியே பொண்ணுக்கு ரெடி பண்ணிடுவேன்.." பூங்கா வெட்கத்தில் இதனை சிரிக்க சொல்லித்த அவளது இதழில் தன் இதழை ஆழமாக பதித்தான் மின்னல் வீரபாண்டியன்..

இடுப்புக்கு கீழே உணர்ச்சியற்ற சோலை பாண்டியன் இப்பொழுது அவரது வீட்டில் மருத்துவ பாதுகாப்போடு இருக்கிறார்.. எந்த வீட்டில் ராஜ தோரணையில் அவர் உலா வந்தாரோ  அதே வீட்டில் ஒரு காய்கறியை போல அவர் படுத்து கிடப்பதை எண்ணி ஒவ்வொரு நாளும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.. அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு மத்த அனைத்து சொத்துக்களையும் விற்க்கும்படி பெண்கள் கூறி விட்டார்கள்.

யாருமே கடைசியில் கூட தந்தையின் முகத்தில் முழிக்கவில்லை.. தனிமையின் கொடுமையில் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறார் சோலை பாண்டியன். தன்னுடைய புதல்விகள் இல்லாமல் மானம் மரியாதை இழந்து, இப்படி ஒரு வாழ்வை வாழ்வதற்கு ஒரேடியாக செத்து விட்டாலும் தேவலாம் என்று இருந்தது.

பலரின் உயிரை பறித்த சோலை பாண்டியனால் தன்னுடைய உயிரை கூட சொந்தமாக போக்கிக் கொள்ள இயலவில்லை. இதுதான் விதியோ?

அவரின் நிலையை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தாதி.

" அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்று கொல்லனும்னு சொல்லுவாங்க.. அது எவ்வளவு உண்மை? பணம் இருக்கிற திமிருல, அதிகாரம் கொடுத்த பலத்துல  எத்தனை பொண்ணுங்க வயித்தெரிச்சல நீ சம்பாதித்திருப்ப. இதே மாதிரி எத்தனை பேரு வேற வழியே இல்லாம பொணம் மாதிரி உன் பக்கத்துல படுத்து கிடந்துருப்பாங்க..

நீ எல்லாம் ஒரே நாளுல படக்குனு செத்துருந்தா உனக்கு இந்த வலியே தெரிஞ்சிருக்காது..இப்போ அனுபவி.. நல்லா அனுபவி.. எப்படி இருக்கு பெத்த பொண்ணுங்களே காரி துப்பிட்டு போனது.. நீங்களாம் பொம்பள சாமியா இருந்தா கும்பிடுவீங்க.. அதுவே பொண்ணா மட்டும் இருந்த கெடுப்பிங்க.. என்னடா உங்க நியாயம் த்தூ.இனிமே இதால உனக்கு பிரயோஜனமே கிடையாதுல.. "சோலை பாண்டியனின் ஆண் குறியை பார்த்து அவரின் யூரின் பேக்கை மாற்றினாள் தாதி துர்கா.. (முதல் அத்தியாயத்தில் சோலை பாண்டியனால் பாதிக்கப்பட்டவள்)..

துர்காவின் பேச்சுக்கு பதில் கூற முடியாமல் வாய் இழுத்துக் கொள்ள

"என்னமா எப்படி இருக்க கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான் மின்னல்.

அவனைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தவள்" நான் நல்லா இருக்கேன் சார்"

'சரிமா கொஞ்சம் வெளியே இரு " அவளை வெளியே அனுப்பி விட்டு சோலை பாண்டியன் முன்பு நின்றான் மின்னல்.

" இத்தனை வருஷமா உனக்குள்ள ஒரு கேள்வி ஓடிக்கிட்டே இருந்திருக்கும். நான் யாரு நான் யாருனு? நான் யாரு உன்னால பாதிக்கப்பட்ட ஒரு தாய்க்கு மகனா பதினாலு வயசு பொண்ணுக்கு தம்பியா  இந்த பூமியில பொறந்தவன்.. அதிகாரமும் பணமும் உன்கிட்ட இருக்குன்னு எத்தனை பேர் குடியை கெடுத்துருப்ப..

எப்படி கடைசி வரைக்கும் உன்கூடயே இருந்து உன் கழுத்த அறுத்தேன் பாத்தியா.. இப்படியே இரு.. உன் விதி முடிகிற வரைக்கும் நீ இப்படித்தான். உனக்குன்னு தனி வீடு தனி நர்ஸ்னு உன்ன நல்லா பாத்துக்குவேன். ஏன்னா நீ படக்குனு சாகக்கூடாது.. வரட்டா டா சோலை பாண்டி" சட்டையின் மேல் பகுதியில் மட்டும் இருந்த கூலர்சை எடுத்து கண்களில் அணிந்து கொண்டவன் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

"வீரா ரொம்ப சந்தோஷமா இருக்குடா" வழக்கம்போல அவனது அம்மாவும் அக்காவும் மானசீகமாக அவனிடம் பேசினார்கள்.. தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையான  இதழ் பிரியாத சிரிப்பினால்  அவர்களுக்கு மறுமொழி கூறியவன்  தன்னுடைய காரில் ஏறி கிளம்பி விட்டான் ஆசை மனைவியை வெளியே அழைத்துச் செல்ல..


வாய் விட்டு சொல்லாத தன்னுடைய காதலை,
வாழ்நாள் முழுவதும்
அவளோடு வாழ்ந்து காட்ட நினைத்தான் மின்னல் வீர பாண்டியன்..

முற்றும்..


தாகம் 34


"விட்ருடா விட்ரு விடு" ஈன சுரத்தில் கேட்டது பூங்காவனத்தின் குரல்.. சோலை பாண்டியன் கண்கள் வியர்வையில் நனைந்த பூங்காவின் ரவிக்கை மற்றும் இடையை வெறிக்க பார்த்தது..

முகமெல்லாம் வியர்வை படிந்து  கூந்தலெல்லாம் களைந்து  பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தாள் பூங்காவனம்.. விழிகள் இரண்டும் மூடிருந்த போதிலும் அவளது இதழ்கள் மட்டும்  "விட்ரு"என உரு போட்டுக் கொண்டிருந்தன.

சோலை பாண்டியனுக்கு  பூங்காவனத்தை பார்க்க பரிதாபமாக இல்லை. சொல்லப் போனால் தாபமே மேலோங்கி நின்றது. எத்தனை கால ஆசை இன்று நிறைவேற போகிறது என மிதப்பில் தனது வேஷ்டியையும் சட்டையையும் அகற்றி விட்டு  பூங்காவனத்தின் மேல் படந்தார் சோலை பாண்டியன்..

எதிர்க்கவும் திராணியற்ற நிலையிலும் பூங்காவனத்தின் உடல்  வில்லாய் விரைத்தது.." பொறுத்துக்கோ.. கொஞ்ச நேரத்துல எல்லாம் முடிஞ்சு போயிரும்.. எல்லாம்" மனதிற்குள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் மூளைக்கும் கட்டளையிட்டாள்.. மரக்கட்டை போல அவள் படுத்திருப்பதை கண்ட சோலை பாண்டியனுக்கு  வெறியேறியது.

"கழுத முண்ட, அவ்ளோ திண்ணக்கமாடி உனக்கு? இன்னையோட உன்னோட ஆட்டத்தை அடக்குறேன்டி.." மனிதன் மிருகமானதைப் போல  பூங்காவனத்தின் ரவிக்கையை பிய்த்து எறிய முற்பட்டார் சோலை பாண்டியன்.. கண்களை திறக்க முடியாத நிலையில் தலையை மட்டும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்த பூங்காவனம் திடீரென்று ஆவேசம் வந்தவளை போல கண்களை திறந்தாள்..

நொடியில் சோலை பாண்டியனின் ஆண்குறியை பிடித்து விட்டாள். இதை சற்றும் எதிர்பாராத சோலை பாண்டியன் நிலை குலைந்து போனார்.. "ஆ ஹேய் விட்றீ ஹேய்" பூங்காவனத்தின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். அப்பொழுதும் தன்னுடைய பிடியை விடவில்லை பூங்காவனம். இரண்டு கரத்தினாலும் சோலை பாண்டியனின் ஆண்குறியை பலமாக பிடித்து இழுத்தாள்.

"வேசி மவள, விடுடீ.. அடிச்சு கொன்றுவேன் உன்ன.. ஆ" பூங்காவனத்தின் கழுத்தைப் பிடித்து நெறித்தாலும் அவள் தன்னுடைய பிடியை விடுவதாக இல்லை. வலியில் என்ன செய்வதென்று புரியாமல் பூங்காவனத்தின் தலையை நங்கு நங்கு என்று தரையில் மோதினார் சோலை பாண்டியன்..

கண்கள் சோலை பாண்டியனுக்கு வலியில் பூங்காவனத்தின் வயிற்றில் ஓங்கி குத்த போக வேகமாக தன்னுடைய பிடியை தளர்த்தி அவரை பிடித்து தள்ளி விட்டாள் பூங்காவனம். மூளை நரம்பு அனைத்தும் வெடித்து போகும் அளவு வலியை கிளப்பியது. அடிவயிற்று சூடு கூட அணைந்து விடும்படி இருந்தது.. முதுகு தண்டில் யாரு ஆளுயர கடப்பாரையை கொண்டு ஓங்கி உன்றியதை போல காதிலிருந்து வெப்பம் கிளம்பியது சோலை பாண்டியனுக்கு..

தட்டு தடுமாறி சுவற்றை பிடித்துக் கொண்டு  எழ முயற்சி செய்தாள் பூங்காவனம். அவளால் எழ முடியாமல் கால்கள் வழுக்கி கொண்டு  செல்ல மீண்டும் தரையில் சரிந்தாள்..

அங்கே தன்னுடைய ஆண்குறியை பற்றிய படி தரையில் சரிந்து கிடந்த சோலை பாண்டியனை பார்க்கும் போது பூங்காவனத்தின் இதழ்களில் ரகசிய புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.. எவ்வளவு நேரம் இந்த வெற்றி என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் இந்த நிமிடத்தை முழுவதுமாக அவள் அனுபவித்தாள். சோலை பாண்டியனுக்கு ஏதோ ஒரு விதத்தில் அவளால் தண்டனை கொடுக்க முடிந்ததை எண்ணி கடவுளுக்கு அந்த நிலையிலும் நன்றி கூறினாள்..

"டேய் மின்னலு.. மின்".. வலி பொறுக்க முடியாமல் எழுந்து நிற்கவும் திராணியற்று மின்னலை கூவி அழைத்தார் சோலை பாண்டியன்.. ஒரு சில வினாடிகளில் அறைக்கதவு திறக்கப்பட வேகமாக உள்ளே ஓடி வந்தான் மின்னல் வீரபாண்டியன். ஒரு பக்க சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த பூங்காவனத்தையும் இன்னொரு பக்கம் தரையில் உருண்டு கொண்டிருந்த சோலை பாண்டியனையும் புரியாமல் பார்த்தான்.

"டேய் மின்னலு"... ஈன சுரத்தில் அவனை அழைத்தார் சோலை பாண்டியன்.

"ஐயா.. என்னய்யா ஆச்சு உங்களுக்கு..ஹேய் ஐயாவ என்னடி செஞ்ச?" சோலை பாண்டியனை தாங்கி பிடித்து பூங்காவனத்திடம் எரிந்து விழுந்தான் மின்னல்.

"ம்ம்ம் கடப்பாரை நெளிஞ்சு போச்சு.. கொண்டு போய் அடக்கம் பண்ணு" பேச முடியாத நிலையிலும்  வேண்டுமென்றே மின்னலை நக்கல் செய்து சத்தமிட்டு சிரித்தாள் பூங்காவனம்.

"ஹேய்.. ஐயா எந்திரிங்க ஐயா அவள விடாதீங்க.. அவளை நாசமாக்குங்க.. ம்ம்ம்" சோலை பாண்டியனை உலுக்கினான் மின்னல்.. ஏற்கனவே வலியில் இருந்த சோலை பாண்டியன் 

"ஹா ஐயோ நாசமா போறவனே எத்தனை நாளாடா திட்டம் போட்ட.. உன் பொண்டாட்டிய வச்சு கடைசியா காரியம் சாந்துச்சு கிட்ட இல்ல.. உன்னை விடமாட்டேன் டா.." ஓங்கி மின்னலின் கன்னத்தில் அறைந்தார் சோலை பாண்டியன்.

பூங்காவனம் அங்கே நடப்பதை பார்த்து கொக்கரித்து சிரித்தாள். அவளின் சிரிப்பு நாராசமாக மற்ற இருவரின் செவிகளிலும் விழுந்தது..

" சிரிக்காத என்ன பாத்து சிரிக்காத.. அப்படி சிரிக்காத" திடீரென்று  வெறி வந்தவனை போல பூங்காவனத்தின் மேல் பாய்ந்தான் மின்னல்.. அவளது கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.

" சிரிக்காத சொல்றேன்ல.. சிரிச்ச உன்ன கொன்றுவேன்" அவளின் நெறிக்க அப்பொழுதும் பூங்காவனத்தின் சிரிப்பு அடங்கவில்லை. மூச்சுக்கு திணறிய வேளையும் அவள் உதட்டில் புன்னகை இருந்தது. அந்த புன்னகையை மின்னலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தன்னுடைய பலம் அனைத்தையும் ஒன்று சேர்த்து அவளின் கழுத்தை நெரிக்க பூங்காவனத்தின் கண்கள் சொருக ஆரம்பித்தது. கால்கள் துடிக்க கரங்கள் மின்னலை தன்னிடமிருந்து தள்ள முயற்சித்தது. உடலாலும் மனதாலும் பலவீனமாக இருந்தவள் மெல்ல துவள ஆரம்பித்தாள்..

மின்னலின் கண்களில் அப்படி ஒரு வெறி. பூங்காவனத்தின் மூச்சை ஒரேடியாக நிறுத்த தன்னுடைய ஒட்டுமொத்த பலத்தையும் அவன் பிரயோகிக்கும் போது எங்கிருந்தோ பறந்து வந்த துப்பாக்கி குண்டொன்று மின்னலின்  தோள்பட்டையை துளைத்தது..

"ஆஆ" வலியில் நிலை தடுமாறியவன் பூங்காவனத்தின் கழுத்தில் இருந்து தன் கரத்தை அகற்றினான்.. வேகமாக திரும்பிப் பார்க்க அங்கே நின்று கொண்டிருந்தான் மின்னல் வீரபாண்டியன்..

கண்கள் சொருக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூங்காவனம் அரை கண்களில் கோடாக தெரிந்த இன்னொரு மின்னலை கண்டு முயற்சித்துக் கண்களை திறந்தாள். தன் முன்னே தோள்பட்டையில் காயம் பட்ட ஒருவன். கையில் கைத் துப்பாக்கியோடு கதவருகே ஒருவன்..

துப்பாக்கி சத்தம் கேட்டதும் சோலை பாண்டியனும்  கதவருகே நின்று கொண்டிருந்தவனை கண்டதும் பேரதிர்ச்சிக்கு உட்பட்டார்..

"ஹேய் வந்துட்டியாடா உன்ன" பூங்காவனத்தின் மேலிருந்து வேகமாக எழுந்தவன் மின்னலை தாக்க முற்பட அவனது இன்னொரு தோள்பட்டையிலேயும் குண்டை இறக்கினான் மின்னல்..

வலியில் மின்னலைப் போல் இருந்தவன் துவள அங்கே குத்துயிரும் குலையுயிருமாய் கிடந்தவளை நோக்கி  பாய்ந்து சென்றான் மின்னல் வீரபாண்டியன்.

"அம்மாடி" மூளையில் சுருண்டு கிடந்த பூங்காவின் சேலையை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டான்.. பூங்காவனத்தை அள்ளித் தன் நெஞ்சோடு பொத்தி வைத்துக் கொண்டான். மின்னலின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் பூங்காவனத்தின் உச்சந்தலையில் விழுந்து நெற்றியில் வழிந்தது..

" என்ன மன்னிச்சிடு டி.. மன்னிச்சிரு.. உன்ன காப்பாத்த முடியாத பாவியாயிட்டேன்..
மன்னிச்சிரு".. முதல் தடவையாக வாய்விட்டு கதறினான் மின்னல் வீரபாண்டியன்.. கண்களை திறக்க முடியாத நிலையிலும் கோடாகிய விழியால்  கணவனின் அங்கே உருவத்தை கண்டவள் மெல்ல தலை சாய்த்து அங்கே வலியில் துவண்டு கிடந்த இன்னொரு உருவத்தையும் கண்டாள்..

"அவ.... ன்" அவளது இதழ்கள் மட்டும் அசைந்தது.

"அவன் என் தம்பிடீ.. நான் தான்டி உன்னோட புருஷன்..அம்மாடி செல்லம் என்ன விட்டுட்டு போயிடாத டி.. உன்ன போக விட மாட்டேன். நான் வந்துட்டேன்.. உன்கிட்ட வந்துட்டேன். இனிமே யாராலயும் ஒன்ன தொட முடியாது..  என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது" அவளைத் தூக்கி தன் மார்போடு இறுக்கமாக கட்டிக் கொண்டவன் கதறினான்.

"நீ..அவ.. ன் இல்ல... ஆ"அத்தோடு பூங்காவனத்தின் பேச்சு நின்று போனது...

"அம்மாடி.. அடியே".. மின்னல் கதற  அங்கே நடப்பதை திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன்.

"மி.. மின்னலு.. நீ". நடுங்கும் குரலில் அவர் வினவ பூங்காவை கட்டி அணைத்தபடி அவரைப் பார்த்தவன் வேகமாக பூங்காவை தரையில் படுக்க வைத்து விட்டு எழுந்து சோலை பாண்டியனின் நெஞ்சிலேயே மிதித்தான்..

அவன் மிதித்த மிதியில் நெஞ்செலும்பு நொறுங்கிப் போனது. ஓங்கி முகத்தில் குத்திய குத்தலில் இதழ் ஓரம் கிழிந்து உதிரம் கசிந்தது..

" பொறுக்கி நாயே மக வயசுல இருக்கறவள போய்? " தன்னுடைய மனைவியின் நிலையை எண்ணிப் பார்க்கவே மின்னலால் முடியவில்லை..

"மின்னலு அவர விடு" மின்னலின் முதுகுப் பின்னால் கேட்ட குரலில்  சோலை பாண்டியனை மிதித்துக் கொண்டிருந்தவன் மெல்ல திரும்பிப் பார்த்தான். அந்த குரலைக் கேட்டவுடன் சோலைப் பாண்டியனும் வலியில் வாசலை பார்க்க அங்கே அவரது மூன்று மகள்கள்..

மூவருமே கண்களில் கண்ணீரோடு.. பெற்ற தகப்பனை பார்க்க கூடாத காட்சி.. சோலை பாண்டியனுக்கு தன்னுடைய பெண்களை கண்டதும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.. சில நிமிடம் தன்னை மறந்து தன் பெண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவர் வேகமாக தன்னிலை உணர்ந்தார்.

இந்த வலியிலும் தன்னை மறைத்துக் கொள்ள துணி  தேடினார் சோலை பாண்டியன்.. செல்வ லட்சுமி சந்தான லட்சுமி மகாலட்சுமி மூவருக்குமே இதயமே நொறுங்கியதைப் போல வலி.அவர்களின் பார்வை அந்த அறையை அலசியது..

மற்ற இரு சகோதரிகளையும் தள்ளிக்கொண்டு மகாலட்சுமி தான் தந்தையை நெருங்கினாள்.." வராத டா அப்பா கிட்ட வராத.. இந்த கோலத்துல அப்பாவை நீங்க பார்க்கவே வேணாம். போயிருங்கடா இங்க வராதீங்க போயிருங்க.. போயிரும்மா.. தங்கம் போயிரும்மா" சோலை பாண்டியனின் வேஷ்டி  மின்னலின் காலடியில் கிடந்தது.

பிறந்த மேனியாக பெற்ற பிள்ளை முன்பு  வயோதிகத்தின் பிடியில் ஒரு தகப்பன் இருக்கலாம். அப்பொழுது மகளுக்கு குழந்தை அவனே.ஆனால் இன்னொரு பெண்ணின் கற்பை சூறையாட போகும் போது  அந்தக் கோலத்தில் ஒரு மகள் தன்னுடைய தகப்பனை கண்டால்?

வேகமாக நகர்ந்து சுவற்றின் மூலையில் தன்னை குறுக்கி கொண்டார் சோலை பாண்டியன்.. " வராத மகாலட்சுமி வராதம்மா.. ஐயோ அப்பாவை இப்படி பாக்காத மா..' பெற்ற மகளிடம் கெஞ்சினார் சோலை பாண்டியன்.தந்தை முன்பு மண்டியிட்டு அமர்ந்தாள் மகாலட்சுமி. அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது.

அவளின் குழந்தை..

"அப்பா ஏம்பா எங்கள பாக்க அவ்ளோ வெக்கமா இருக்கா? சின்னப் பிள்ளையிலிருந்து அப்பாவை பாரு அப்பாவ பாருன்னு சொல்லிக் கொடுத்து வளர்த்தீங்க. இப்ப மட்டும் என்ன அப்பாவ பார்க்காதன்னு கெஞ்சுறீங்க.. பாக்க கூடாத நிலைமையை கொண்டு வந்ததே நீங்கதானப்பா..

இந்த உலகத்திலேயே எங்க அப்பா மாதிரி ஒரு அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டார்னு அவ்ளோ பெருமை. ஆனா அது எல்லாத்தையும்  சுக்கு நூறா ஒடச்சிட்டீங்கல்ல.." மகாலட்சுமியின் கண்ணீர் கரையுடைத்து ஓடியது.

"ம்மா ஏம்மா தாத்தா ஷேம் ஷேமா இருக்காரு.." செல்வ லட்சுமியின் நான்கு வயது மகன் கேட்டான். அவன் கண்களை மூடி தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் செல்வ லட்சுமி..

தமக்கையின் மகனை திரும்பிப் பார்த்த மகாலட்சுமி " சொல்லுங்கப்பா உங்க பேரன் கேட்கிறான்.. தாத்தா ஏன் இந்த கோலத்துல இருக்காருன்னு  அவனுக்கு சொல்லவா? சொன்னா புரியுற வயசா?" பொங்கி வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவள் 

" ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. சொல்லப்போனா ரொம்ப பெருமையா இருக்கு. நம்ம குடும்பத்துக்கு எவ்ளோ பெரிய புண்ணியத்தை சேர்த்து வச்சிருக்கீங்க. ஏம்பா அந்த பொண்ணுக்கு என்ன விட வயசு குறைவுப்பா. அந்தப் பொண்ண போய்..

அப்பா உங்களுக்கு ஒரு நிமிஷம் கூட அந்த பொண்ணுக்கு பதிலா நான் தெரியலையா? எப்படிப்பா தெரியும்..வெறி பிடிச்ச நாய்க்கு எப்படி தெரியும்?.. " தன் கையில் இருந்த குழந்தையை தரையில் படுக்க வைத்த மகாலட்சுமி வேகமாக தான் அணிந்திருந்த நைட்டியை கிழித்தாள்..

" இதுக்குதானப்பா இந்த மாருக்கு தானே..இதோ இந்த சின்ன ஓட்டைக்கு தானே".. தன்னுடைய மேல்பகுதி ஆடையை அவள் ஆவேசமாக கிழித்து விட வேகமாக பாய்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டார் சோலை பாண்டியன்.

"வேணாம்மா என்னமா பண்ற அம்மாடி மகாலட்சுமி.." சோலை பாண்டியன் கதற அவரது கரத்தை  அதிவேகமாக தட்டி விட்டாள் மகாலட்சுமி.. அப்பொழுது அவளது குழந்தை அழுதது. இவ்வளவு நேரம் இல்லாமல்  குழந்தை அழுத பிறகு தான் அதன் மீது சோலை பாண்டியனின் கவனம் சென்றது. அவரது பார்வை சென்ற திசையை பார்த்த மகாலட்சுமி

"உங்க பேத்திப்பா.. அம்மான்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவீங்க இல்ல. அவளுக்கும் அம்மா மாதிரியே நெஞ்சில மச்சம் இருக்கு. அம்மாவே திரும்ப பொறந்துருக்காங்க" கண்களை திறக்காமல் தரையில் உதைத்துக் கொண்டு அழுந்த குழந்தையை நடுங்கும் கரத்தினால் தொட்டுப் பார்க்க விரைந்த சோலை பாண்டியனை  தள்ளிக் கொண்டு தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டாள் மகாலட்சுமி.

"பாப்பாவும் அம்மணமா இருக்காப்பா... அம்மாவ பாக்குற மாறி அவள பாக்குறீங்களா இல்ல உங்க பேத்தியா பாக்குறீங்களா" வார்த்தைகள் சவுக்காக சுழன்று அடிக்க  சோலை பாண்டியன் ஐயோ என்ற கதறலோடு தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

"ஐயோ கடவுளே.. என்ன போய் அப்படி சொல்லிட்டியேம்மா.. என் பேத்தி டா அவ என் குல தெய்வம் அவள போய்"..

சோலை பாண்டியன் அழுவதை  கண்களில் வழியும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த மகாலட்சுமி "அவளுக்கும் அதே மாரு அதே பெண்ணுறுப்பு இருக்கேப்பா" என்றதும் சோலை பாண்டியனால் அந்த வார்த்தையை தாங்கவே முடியவில்லை. செல்வ லட்சுமி சந்தான லட்சுமி இருவரும்  மகாலட்சுமியின் பின்னே அழுது கொண்டு நிற்க தன் மூன்று மகள்களையும்  தலை நிமிர்ந்து பார்க்கவே முடியாத தன்னுடைய தவற்றை எண்ணி  மனமும் புத்தியும் பேதலித்து "இல்லை இல்லை.. வேணா சொல்லாத சொல்லாத வேணா இல்ல" கத்திக் கொண்டே வேகமாக அந்த அறைக்குள் இருந்து வெளியே ஓடினார்  சோலை பாண்டியன்.

அம்மணமாக வெளியே ஓடி வந்தவர்  முதல் படியில் கால் தடுக்கி விழ வேகமாக உருண்டு கீழ்படி வந்து சேர்வதற்குள் கடுமையான காயத்திற்கு உட்பட்டார்..

தொடரும்


தாகம் 33


சமூகத்தில் எந்தவித உதவியும் கிடைக்காத பெண்ணென்றால் அதிலும் ஏழைப் பெண்ணென்றால் அவளுக்கும் அவள் கற்புக்கும் எந்த விதமான  தீங்கிழைக்கவும் ஆண் சமூகத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒரு பெண்ணை அவளாகவே வாழ விடுங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு  அவள் எங்கே வருகிறாள் எங்கே போகிறாள் அவள் வீட்டிற்கு யார் வருகிறார்களோ போகிறார்கள் என்பதை ஆராய்ந்து உங்கள் வீட்டில் அடுப்பெரிய போகிறதா?

அந்தப் பெண்ணின் நிலை தெரியாமலேயே அவளுக்கு நடத்தை கெட்டவள், தாசி என்றெல்லாம் பெயர் வைத்து அழைக்கும் இந்த சமூகம் ஏன் ஆண்களுக்கும் அதே பெயரை சூடவில்லை? கட்டிய மனைவியை கண்டவனுக்கு தாரை பார்க்க தயாராக இருப்பவன் எல்லாம் வெள்ளையும் சொல்லையுமாக உடை அணிந்து  நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நடக்க இந்த சமுதாயம் தானே வழி விட்டிருக்கிறது.

கேட்டாள் அவன் "ஆண்" என்பான். உடலால் பலமானவன்..

"பெண்" ஆணை பொறுத்தவரை உடலால் பலவீனமானவள். அந்த பலவீனமான குலைந்து நெளியும் உடல் மேல் தான், ஆண் கழுகுகளுக்கு கண். குழைந்து நெளியும்  உடலை கொத்தி தின்ன  அவ்வளவு ஆர்வம்..

"உன் அம்மா எப்படி செத்தா" சோலைப் பாண்டியன் அருகே செய்து வைத்த பொம்மை போல நின்று கொண்டிருந்த மின்னலை பார்த்து கேட்டாள் பூங்காவனம் மிக மெல்லிய குரலில்.. வழக்கம்போல மின்னல் பதில் கூறாமல் அவளை அடித்து பார்க்க 

" உன் அம்மா எப்படி செத்தா? அவளா சீக்கு வந்து செத்தாளா?  இல்ல நீயே கண்டவன் கிட்ட கூட்டி கொடுத்து அதனால உடம்பு நொந்து செத்தாளா?".. சாட்டையாக சுழன்றது பூங்காவனத்தின் நாவு.. பொறுக்க முடியாமல் வேகமாக வந்தவன் பூங்காவின் கழுத்தை பிடித்து உள்ளே இழுத்து தள்ளினான்..

கீழே விழுந்தவளின் கூந்தலை பிடித்தவன்" இன்னொரு வார்த்தை" அவனது மூச்சுக்காற்றே அனலாக வந்தது.

" கண்ணகி பரம்பரையாடி நீங்கல்லாம்? உங்க அம்மாவ பத்தி இந்த ஊரே பேசுது. அப்போ நீ எப்படி இருப்ப? இந்த லட்சணத்துல என் அம்மாவை பத்தி பேசுறியா.. கொண்ணு பொதச்சிடுவேன். உன்னை என்ன காலம் பூரா இங்கேயே இருன்னு சொன்னனா.. ஒரு ரெண்டு மணி நேரம் உன்னால அட்ஜஸ்ட் பண்ண முடியாதா..

பத்தினி மாதிரி ஓவரா சீன் போடுற.. உன்ன மாதிரி எத்தனை பொண்ணுங்கள ஐயா தூக்கிருப்பாரு தெரியுமா. ஐயா நினைச்சுட்டா குமரி என்ன கிழவி என்ன ஒருத்தியை விட்டு வைக்க மாட்டாரு.. பெரிய பெரிய சினிமா நடிகை கூட ஐயா கூட இருந்துட்டு போயிருக்காளுங்க.. நீ எல்லாம் பெரிய உலக அழகினு என்கிட்ட வந்து பேச்சுவார்த்தை நடத்தினாரு.. இவளாம் ஒரு ஆளுன்னு என்கிட்ட போய் கேட்டிங்களேய்யா.." பூங்காவிடம் ஆரம்பித்து சோலை பாண்டியனிடம் முடித்தான் மின்னல்.

" ஆயிரம் இருந்தாலும் முறைன்னு ஒன்னு இருக்குல்ல.. இதுவே நான் உன்கிட்ட கேட்காம இவளை தூக்கிட்டு போய் இருக்கலாம். அப்ப நீ என்னைய பத்தி என்ன நினைச்சிருப்ப? என்னடா ஐயா இப்படி பண்ணிட்டாருனு என் மேல உனக்கு சங்கடமா இருக்கும்.. இப்ப? நான் எப்பவும் நியாயமான வழியில தான் நடப்பேன்.."

" அது உங்களுக்கு தெரியுது இவளுக்கு" பூங்கா வலியில் கத்தினாள். மின்னலின் கரத்தில் ஓங்கி ஓங்கி குத்தினாள்.

"விட்றா பொறுக்கி ராஸ்கல்"..

" கட்டுன புருஷனுக்கே மரியாதை கொடுக்காதவ உங்களுக்காக கொடுக்கப் போறா.. உங்க மூஞ்சிக்காக தான் இவளை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனேன்.. இந்த வாழ்க்கைய அவளுக்கு அமைச்சு கொடுத்த நன்றி கூட இல்லாம எப்படி பேசுறா பாருங்க..இவள" பூங்காவை ஓங்கி மிதிக்கப் போனவனை தடுத்து நிறுத்தியது சோலை பாண்டியனின் குரல்.

"டேய் டேய் மின்னலு.. வேணாடா.. அவ தான் அறிவு கெட்ட கழுதை. தெரியாம பேசிட்டா. உனக்கும் எனக்கும் இருக்கிற பந்தம் அவளுக்கு எங்க தெரிய போகுது? வாயும் வயிருமா இருக்கா செத்து கித்து போயிடப் போறா.. அவள இழுத்துட்டு போய் அந்த ரூம்ல போட்டுட்டு  நீ வாடா".. சோலை பாண்டியன் சொல்லை வேதவாக்கு என்பதைப் போல மின்னல் கர்ப்பிணி என்றும் பாராமல் பூங்காவனத்தை தரதரவென இழுத்துச் சென்று  அங்கிருந்து ஒரு ரூமில் தள்ளிப் பூட்டினான்..

" மின்னலு உன்னை நினைச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது. நீதான்டா உண்மையாவே விசுவாசமான ஆளு.. "

"ஐயா.. நான் இருக்கவா போகவா" வீரதீர சாதனை புரிந்தது போல்  நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்டவனை பார்க்க  சோலை பாண்டியனுக்கே ஆச்சரியமாக இருந்தது..

" உன் பொண்டாட்டி ஏதாவது பிரச்சனை பண்ணுவானு தோணுது. நீ என்ன பண்ற இங்கேயே உட்கார்ந்திரு.. " மின்னலுக்கு கட்டளையிட்டவர் அறைக்குள் நுழைந்தார்.. அங்கே தனக்கு நடந்த அநீதியை எண்ணி மனம் உடைந்து கீழே சாய்ந்திருந்த பூங்காவனம் அறைக் கதவை திறந்து சோழைப் பாண்டியன் உள்ளே வருவதை கண்டதும் வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

"மொல்ல மொல்ல எதுக்கு இம்புட்டு அவசரம்? எங்கள மீறி உன்னால எங்கேயும் போக முடியாது.." சோலை பாண்டியன் வேகமாக அவளை நெருங்கும் முற்பட அவசரமாக எழுந்தவள் பக்கத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்பட சட்டத்தை கையில் எடுத்து ஓங்கி சோலை பாண்டியன் தலையில் அடித்தாள். இதனை சற்றும் எதிர்பாராத சோலை பாண்டியன் ஒரு நிமிடம் நிலை குலைந்து போனார். அந்த நிமிடத்தை பயன்படுத்தி மீண்டும் அவரை தாக்க போக இம்முறை சுதாகரித்த சோலை பாண்டியன் பூங்காவனத்தின் கரத்தை இறுக்கிப்பிடித்தபடி ஓங்கி அறைந்தார்.

அவள் கையில் இருந்த புகைப்பட சட்டம் நழுவி கீழே விழுந்தது. தன் நெற்றியில் வழிந்த உதிரத்தை கண்டு ரௌத்திரமானவர் பூங்காவனத்தின் கூந்தலை இறுக்கமாக பற்றி சுவரின் மோதினார்..

"ஆஆ.. அம்மா".. அப்பொழுதும் அவரைத் தாக்கவே முற்பட்டாள் பூங்காவனம்.

"விட்றா.." ஆக்ரோஷமாக சோலை பாண்டியனை பிடித்து தள்ள பார்க்க

" உனக்கு அவ்வளவு ஏத்தமாடி? என் மேலேயே கை வைக்கிற அளவுக்கு  தைரியம் எவன் கொடுத்தான்? உன் புருஷன பாத்தியா என் வீட்டு எச்ச சோத்த திங்கிற நாய்! கட்டுன பொண்டாட்டி மாசமா இருக்கும்போது நான் சொன்னேனே உன்னை எனக்கு கூட்டி கொடுத்துட்டு வெளிய காவ காக்குறான்.. அவன் கொடுத்த தைரியத்துலயா என் மேல கை வைக்கிற..?உன்ன? " கர்ப்பிணி என்றும் பாராமல் அவளை முரட்டுத்தனமாக கீழே தள்ளி வயிற்றில் ஓங்கி மிதித்தார் சோலை பாண்டியன்.

"ஆஆ ஐயோ அம்மா.." பூங்காவனத்தின் அலறல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. வெளியே அமர்ந்திருந்த மின்னலுக்கும் அது கேட்டது. உள்ளே நடப்பதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதவாரே அமர்ந்து இருந்தான் மின்னல்..

இன்னொரு மிதி அவள் வயிற்றில் மிதிக்க போக சோலை பாண்டியனின் காலை பற்றி தள்ளி விட்டாள் பூங்காவனம். தடுமாறியவர் ஆத்திரத்தில் சகட்டுத்தனமாக அவளை மிதிக்க வயிற்றில் கை வைத்து குறுக்கி படுத்துக் கொண்டாள் பூங்காவனம்.

"அம்மா உன்ன விட்ற மாட்டேன் செல்லம்.. என்ன விட்டு போயிராத" இன்னும் பிறப்பொடுக்காத தன்னுடைய உயிரிடம் மானசீகமாக வேண்டினாள் பூங்காவனம். மனதளவிலும் உடலுறவிலும் அவள் முழுதுமாக தொய்ந்து போக அவளின் முந்தானையைப் பிடித்து இழுத்தார் சோலை பாண்டியன்..

முந்தானை உருவப்பட பூங்காவனம் உருண்டு போனாள். இதுவரை அவள் மனதிற்குள் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சதவீத நம்பிக்கையும் மடிந்து மண்ணாகி போனது. அவளது கணவன் மின்னல் வீரபாண்டியன் வரப்போவதில்லை. ஆக மொத்தம் அவளை ஒரு பகடைக்காயாக வைத்து தன்னுடைய விசுவாசத்தை நிலைநாட்டி விட்டான். இனி அவளுக்கு அவளது குழந்தைக்கு அவனால் எந்த வித உதவியும் கிட்டப் போவதில்லை.

சோலை பாண்டியனை கொல்வதா இல்லை தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதா? அதோ அந்த கயவன் தன்னை நெருங்குகிறான். அதற்குள் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். இரண்டு முடிவுகளும் அவளது வாழ்வை அடியோடு அழித்துவிடும்..அவனை கொன்றுவிட்டு எந்தப் பாவமும் செய்யாத பூங்காவனம் சிறைக்குச் செல்ல வேண்டும்.. அவளது எதிர்காலத்தோடு சேர்ந்து குழந்தையின் எதிர்காலமும் பாழாகிவிடும்.

அல்லது தன்னை தானே அழித்துக் கொண்டால்? இதற்காகவா இத்தனை இடர்பாடுகளை தாண்டி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! பிள்ளை பூச்சியான அவளது அம்மா தேவகியே தன்னைத்தானே பணயம் வைத்து மூன்று பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி இருக்கிறாளே! அவளுக்கே அவ்வளவு தைரியம் இருக்கிறது என்றால் பூங்காவனத்தின் நம்பிக்கையும் தைரியமும் எங்கே சென்று விட்டது?

இன்னும் ஒரே அடியில் சோலை பாண்டியனின் தன்னை நெருங்கி விடுவான் என்பதை உணர்ந்த பூங்கா கீழே சுருண்டு கிடந்தாலும் விழி பார்வை  சோலைப் பாண்டியன் முகத்தில் நிலைத்தது.

"உனக்கு இப்போ நான் வேணும்.. சரி.. இந்த உடம்புக்கு தானே அலையுற.. அந்த சின்ன துவாரத்துக்கு தானே பேயா பறக்குற? நீயும் அதுல இருந்து தான் வந்த.. உன் பொண்டாட்டிக்கும் அது வழியா தான் புள்ள கொடுத்த.. உன் பொண்ணுங்களும் அது வழியா தான் வயசுக்கு வந்துச்சிங்க.. ஆனாலும் இன்னொரு பொண்ணோட ஓட்ட எப்படி இருக்குனு பாக்க ரொம்ப ஆசைல?

பாத்துக்கோ.. நானே நல்லா கால விரிச்சு காட்றேன்.. பாரு.. ஆனா ஒன்னு உன் அஞ்சு நிமிஷ வெறிக்கு என்ன கேவலப்படுத்த பாக்குறல.. மவனே நீ உண்மையான ஆம்பளையா இருந்து நான் சொல்ற வரைக்கும் செஞ்சிட்டே இருக்க..குறைஞ்சது ஒரு மணி நேரம்.. முடியுமாடா உன்னால?" ஆவேசம் வந்தவளை போல கத்திக் கொண்டிருந்தவளை பார்த்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றார் சோலை பாண்டியன்.

மறுநிமிடமே அகங்காரத்தோடு " அது என்னடி ஒரு மணி நேரம்? நீ டைம் சொல்லி நான் செய்யணுமா? அவ்ளோ பெரிய ஆள் ஆயிட்டியா? இன்னையோட செத்தடி நீ.. உன்ன கொண்ணு போட்டோ கூட கேட்க நாதியத்து போய் கிடப்ப..நீயெல்லாம் சவுடால் பேசிறியா? கழுதை முண்ட" ஓங்கி பூங்காவின் தோள்பட்டையில் மிதித்தார். ஏற்கனவே அவர் அடித்த அடியினால் சுருண்டு கிடந்தவள்  இதற்கு மேல் எல்லாம் கை வீறி போய்விட்டது என்பதை உணர்ந்து தன் உணர்வுகளை மறுத்துப் போக வைத்தாள். ஆனால் அவள் மனம் மட்டும் மறுக்க மறுத்தது.. பூங்காவனத்தின் மேல் படர்ந்தார் சோலை பாண்டியன்.

தொடரும்..


தாகம் 32



பூங்காவனம் கண்விழிக்கும் போது எந்த இடத்தில் அவள் மயங்கி விழுந்து கிடந்தாளோ அதே இடத்தில் தான் சுருண்டு கிடந்தாள்.. கேட்பார் யாருமற்ற அனாதை போல  சோலை பாண்டியனின் வீட்டு நிலை வாசலில் கர்ப்பிணிப் பெண் மயங்கிக் கிடக்க அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பக்கூட சோலை பாண்டியனுக்கு மனம் வரவில்லை. காலையில் பூங்கா தன் முன்பு தைரியமாக நின்றதுமல்லாமல், தன்னையே எதிர்த்துப் பேசியதை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அந்த இடத்திலேயே பூங்காவை முடித்து கட்டும் அளவிற்கு குரோதம் எழுந்தது அவருள்ளே. இருக்குமிடம் கோவில் என்பதால் தன்னுடைய  வெறி அனைத்தையும் அடக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்..

மகாலட்சுமி வேறு வீட்டில் இல்லை.. அவளுடைய நெருங்கிய தோழி பைரவியின் திருமணத்திற்காக காஞ்சிபுரம் சென்று இருக்கிறாள். நேற்று கிளம்பியவள் இதோடு இன்னும் இரண்டு நாள் கழித்து தான் வீடு வந்து சேருவாள்..

மருத்துவர் ஒரு வாரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் மகாலட்சுமிக்கு பிள்ளை வலி வரலாம் என்று கூறியிருந்தார். சோலை பாண்டியனின் மற்ற இரு மகள்களும் தங்கையை கவனித்துக் கொள்ள  இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்து விடுவார்கள்..

இத்தனை நாட்கள் பூங்காவனம் சோலை பாண்டியனின் கண்களில் இருந்து தப்பித்தது மகாலட்சுமியால் தான்.. மகளின் வேதனை சோலை பாண்டியனை நகர விடாமல் செய்தது. இன்றோ மகாலட்சுமி இல்லாத நாளில் மீண்டும் அவரது கேடுகெட்ட குணம் தலை தூக்கியது..

தன்னை அவமதித்த பூங்காவனத்திற்கு  அவளது நிலை எதுவென்று காட்டத் துடித்தார் சோலை பாண்டியன். மின்னல் அவரைப் பொறுத்தவரை ஒரு நன்றியுள்ள நாய் என்று பூங்காவனத்தின் முன்பு  நிரூபிக்க ஆசைப்பட்டார்.. எனவே நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் நேராக கிளம்பி மின்னல் வீரபாண்டியனின் அலுவலகத்துக்குச் சென்றார்.

அவரைக் கண்டதும் தனது சீட்டிலிருந்து எழுந்து நின்றான் மின்னல். " ஐயா வாங்க ஐயா என்ன இவ்வளவு தூரம்.. ஒரு வார்த்தை சொல்லி இருந்தீங்கன்னா நான் வீட்டுக்கு வந்திருப்பேனே" மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு பணிவாக தன் முன் நிற்கும் மின்னலை மிதப்பாக நோக்கினார் சோலை பாண்டியன்.

கால் மேல் கால் போட்டு சோலை பாண்டியன் அமர அவர் முன்பு கைகட்டி நின்று கொண்டிருந்தான் மின்னல்.

" அது ஒன்னும் இல்லடா மின்னலு சும்மா  இங்க ஒரு வேலையா வந்தேன். அப்படியே நம்ம பையன் இருக்கானேனு உன்னை பார்க்க வந்தேன்.. ஏன்டா வரக்கூடாதா.."

" நான் உங்களை போய் அப்படி சொல்லுவேனாய்யா.. இந்தப் பதவி இன்னிக்கு நான் வாழ்ற வாழ்க்கை எல்லாமே நீங்க போட்ட பிச்சை.." மீண்டும் தான் ஒரு விசுவாசமான  அடியாள் என்பதை நிரூபித்தான் மின்னல்..

" உன்ன நெனச்சாலே அப்படியே புல்லரிக்குது மின்னலு. என்கிட்ட இதுவரைக்கும் எத்தனையோ பேர் வேலை செய்றானுங்க. ஒருத்தன் கூட உன் அளவுக்கு விசுவாசமா இருந்தது கிடையாது. உண்மையாவே நீ ஒரு நல்ல வேலைக்காரன் தான் டா. " அமைதியாக நின்றான் மின்னல்..

வந்துவிட்டாரே தவிர அவருக்கும் நேரடியாக எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியவில்லை. மணியை பார்ப்பதும் மின்னலை பார்ப்பதும், அந்த இடத்தையே கண்களால் அலசுவதுமாக சற்று நேரத்தை தள்ளி போட்டார். அவர் எதையும் சொல்ல வந்து சொல்லாமல் தவிப்பதை அறிந்து கொண்ட மின்னல்

"ஐயா என்னங்கய்யா.. என்னமோ பேச வந்துட்டு பேசாம இருக்கீங்க.. ஏதாவது முக்கியமான விஷயமா? இங்க வச்சு பேசலாமா இல்ல ஐயா வீட்டுக்கு போயிடலாமா.." பணிவாக கேட்டான் மின்னல்.

" வீட்ல வச்சு பேசுற விஷயமா இருந்தா உன்னை ஏன்டா தேடி வர போறேன்? அது என்னன்னா"

"சொல்லுங்கய்யா"

"அது.. சரிடா உன் கிட்ட சொல்றதுல என்ன இருக்கு? உன் பொண்டாட்டி பூங்காவ எப்படி உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன்? எதுக்காக செஞ்சு வெச்சேன்?"மின்னல் அமைதியாக இருந்தான்.

சோலை பாண்டியன் தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்" அவளோட அம்மா இருக்காளே தேவகி  அவ ஒரு நடத்த கெட்டவ.. அவளோட யோகியத தெரிஞ்சு தான் புருஷன்காரன் மூணு பொட்ட பிள்ளைங்கள விட்டுட்டு ஓடி போயிட்டான்..போறப்ப சும்மா போனானா என்கிட்ட கைநீட்டி பணத்தை வாங்கிட்டு ஓடிட்டான்.. நமக்கு மட்டும் என்ன பணம் மரத்தில்லையா காய்க்குது போனா போட்டோ கழுதையை விட்டு தள்ள.. நானும் நல்ல விதமா அவளை கூப்பிட்டு இதோ பாருமா இந்த மாதிரி உன் புருஷன் என்கிட்ட பத்திரத்துல கையெழுத்து போட்டு பணம் வாங்கி இருக்கான்.. இப்ப அவன் ஓடிப் போயிட்டான். நியாயப்படி பார்த்தா இனிமே அந்த தொகையை நீ தான் கட்டணும். எப்படி அந்த பணத்தை அடைக்க போற? மாசம் உன்னால ஒழுங்கா வட்டி கட்ட முடியுமான்னு கேட்டேன்.

ஐயா மூணு பொட்ட பிள்ளைங்கள வச்சுட்டு நான் என்னத்தையா பண்றது.. அம்புட்டு பெரிய தொகைக்கு என்னால எப்படியா வட்டி கட்ட முடியும்.. அது மட்டும் இல்ல ஆம்பள இல்லாத வீடுன்னு கண்ட காவாலிப்பயலும் வம்பிழுக்கறானுங்க.. இப்படி நாதியத்து நிக்கிறனே.. நீங்க தான்யா பார்த்து இதுக்கு ஒரு முடிவு சொல்லணும்னு ஒரே அழுகை..

நீங்க என் வீட்டுக்கு வர போக இருந்தீங்கன்னா கண்டவனும் என் வீட்டு பக்கட்டு வரமாட்டான். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அது ரொம்ப பாதுகாப்பா இருக்கும். நானும் உங்களை அனுசரிச்சு இருந்துக்கிறேன் அப்படின்னு தேவகி சொல்லும்போது  பொண்டாட்டி செத்த ஆம்பள வேற என்னத்த பண்ண முடியும்?

சரி ஒரு பொம்பள கிடந்து தவியா தவிக்கிறாளேனு அவ வீட்டுக்கு சும்மா போயிட்டு வர இருந்தேன். அதுவே காலப்போக்குல எங்களுக்குள்ள ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி விட்டுருச்சு.. ஊசி இடம் கொடுக்காம நூலு நுழையுமா?

எப்படியோ வாங்குன பணத்துக்கு ஒளிஞ்சி போட்டும்னு நானும் அதை பத்தி கேட்கவே இல்லை. திரும்ப எவளுக்கோ வட்டி வாங்கி கொடுக்க சொல்லி, அவ பணத்தை தூக்கிட்டு ஓடிட்டா. கேரன்டி கையெழுத்து போட்டது தேவகி தானே. அவதான மொத்த பணத்தையும் திரும்ப திரும்ப தரணும்.. இங்க என்ன நாம பொது சேவையா செஞ்சுக்கிட்டு இருக்கோம்?

வாங்கின பணத்த திருப்பிக் கொடுக்க வாங்கில்லாம இந்த தடவை ஆத்தாளுக்கு பதிலா மக வந்தா.. என் அம்மாவுக்கு வயசாகி போச்சு. நீங்க சொல்றபடி எல்லாம் நான் நடக்குறேன். அந்த கடனை கழிச்சி விடுங்கனு.. நீயே சொல்லு மின்னலு, நான் என்னைக்காவது தானா வந்தத விட்ருக்கேனா?

இருந்தாலும் ஏன் அந்த பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்? உன் மேல எனக்கு ஒரு தனி பிரியம்.. அதனால தான் உன்னை என் வாரிசா தத்தெடுத்து, அந்த பொண்ணு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். ஆத்தா எப்படியோ ஆனா பொண்ணு நல்ல பொண்ணு.. இப்ப எதுக்கு இதெல்லாம் நான் சொல்றேன்னா, அந்த பொண்ணு மேல நான் ஆசைப்பட்டேன் மின்னலு.. நீ மனசு வச்சா முடியும்.. " நேரடியாக விஷயத்தை உடைத்து விட்டார் சோலை பாண்டியன்.

சற்று நேரம் மின்னல் ஆடாமல் அசையாமல் நின்றான்.. ஒரு சில வினாடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டவன்
"ஐயா நான் உங்க வீட்டு நாய். நாய் கிட்ட எதுக்கய்யா அனுமதி கேக்குறீங்க.. அவளைக் கொண்டு வந்து உங்க வீட்டில விடணும்னா விட போறேன்.. அதுக்கு போய் என்கிட்ட? இவ்ளோ தானா, நீங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கை?" மின்னல் மனதுடைந்து பேச சோலை பாண்டியனுக்கு பெருமை பிடிபடவில்லை.

வேகமாக எழுந்தவர் மின்னலை கட்டிக் கொண்டார். "மின்னலு என் ராசா.. நீ தங்கம்டா சொக்க தங்கம்.. உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லடா. ஆயிரம் இருந்தாலும் இப்ப அந்த பொண்ணு உன் பொண்டாட்டி. அதான் என்னமோ சொல்றானுங்களே இந்த லவ்வு கிவ்னு.. அப்படியே ஏதாவது அந்த சிறுக்கி மேல வந்து நான் கேக்குறதுக்கு இல்லன்னு சொல்லிட்டா அப்புறம் என்னால தாங்க முடியாது பாரு. அந்த அளவுக்கு உன்னை என் மகன் ஸ்தானத்துல வச்சிருக்கேன்"

" நீங்க நிம்மதியா வீட்டுக்கு போங்கய்யா. அவளே உங்க வீட்டுக்கு வருவா" சோலை பாண்டியனுக்கு நம்பிக்கை கூறி அனுப்பி வைத்தான் மின்னல். இவ்வளவு நேரம் உள் அறையில் நடந்த சம்பாசனைகளை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த நாகா அவசரமாக உள்ளே வந்தான்.

அவனால் மின்னலை பார்த்து கூட பேச முடியவில்லை. அமைதியாக நின்றவனை" என்னடா" வினவினான் மின்னல்.

" நீங்க இவ்ளோ கீழ்தரமானவன்னு எனக்கு தெரியாம போச்சுண்ணே.. "

"டேய்'

" சும்மா கத்தாதீங்கண்ணே. நம்ம தொழில்ல வெட்டு குத்து கொல பொம்பள இதெல்லாம் சகஜம் தான்.  ஆனா எவனும் பொண்டாட்டிய கூட்டி கொடுத்து பொழப்பு நடத்த மாட்டான்..எப்படிண்ணே அதும் மாசமா இருக்கிற பொண்ண போய்".. பல தடவை பூங்காவனத்தின் கையால் வாங்கி சாப்பிட்டு இருக்கிறான். பூங்காவுக்கு நடக்க போகும் அநீதியை நினைத்து கண்களே கலங்கி விட்டது அவனுக்கு..

" என் முன்னாடி குரல் உசத்தி பேசுற அளவுக்கு வந்துட்டியா. சங்கருத்து போட்டுருவேன்.. என்னடா அண்ணி பெரிய அண்ணி உலகத்துல இல்லாத அண்ணி.. அவ மொத என் பொண்டாட்டி. அப்புறம் தான் உனக்கு அண்ணி அதை ஞாபகத்துல வச்சுக்கோ.. உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு. தேவையில்லாம உன் பொண்டாட்டி கழுத்துலருந்து தாலி இறங்க காரணமாயிடாத.." மின்னலை மீறி எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டான் நாகா. மனசாட்சி அவனை கேவலமாக காரி துப்ப, பூங்காவனத்தின் கற்பை விட அவன் மனைவியின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலி நாகாவுக்கு பெரிதாகப்பட்டது.

அவன் பொண்டாட்டி அவன் கண்டவனுக்கும் அனுப்பி வைப்பான். இதுல தலையிட நாம யாரு..  இருந்தாலுமே மனம் கேட்காம வாழ்வில் முதல் முறையாக இறைவனிடம் பூங்காவுக்காக பிரார்த்தனை செய்தான்.

" இன்னும் எவ்ளோ நேரம் டி அங்கே விழுந்து கிடக்க போற.. எந்திரிச்சி இங்க வா " குரல் கட்டளையாக வெளிவந்தது சோலை பாண்டியனிடமிருந்து.

கட்டு தடுமாறி கதவை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றவள் சோலை பாண்டியனை வெறித்து நோக்கினாள்.. கட்டிய கணவனின் துரோகம்.. ஒரு பெண்ணுக்கு இதைவிட மரண வேதனை இருக்க முடியுமா? ஆசையாக பாலை பருக்க போகும் நேரத்தில் வாய் சுட்டு விட்டால் எந்த அளவிற்கு மனம்  வெறுத்துப் போகுமோ அந்த அளவிற்கு மின்னல் மீது இருந்த பற்று அனைத்துமே அவளுக்கு அறுந்து போனது..

வெளியே பார்வையை திருப்பினாள்.. அவள் வரும்போது இல்லாத பத்து பேர் இப்பொழுது வெளியே நின்றார்கள். இவர்களை மீறி அவளால் வெளியே செல்ல முடியும் என்று தோன்றவில்லை.. மீண்டும் பார்வையை சோலை பாண்டியன் மீது திருப்பினாள்..

" நான் நம்ப மாட்டேன்.. என் புருஷன் இப்படி பண்ணிருக்க மாட்டான் " எந்த நம்பிக்கையில் அவ்வாறு கூறுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. சோலை பாண்டியன் அட்டகாசமாக சிரித்தார்.

"மின்னலு டேய்.." சோலை பாண்டியன் குரல் கொடுத்த திசையை பூங்காவனமும் பார்க்க அங்கிருந்து அறைக்குள் இருந்து வெளியேறினான் மின்னல் வீரபாண்டியன்.. மீண்டும் மயங்கி விடாமல் இருக்க நிலை கதவை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் பூங்கா..

பார்வை மட்டும் கட்டிய கணவனின் கண்களை நேருக்கு நேராக சந்தித்தது. நேராக வந்தவன் சோலை பாண்டியனின் அருகே கைகட்டி நின்றான்..

வார்த்தைகள் எதுவுமே அங்கு பேசப்படவில்லை.. பார்வை பரிணாமங்கள் மட்டும் அக்னியை கக்கி கொண்டிருந்தது.

அடப்பாவி? நல்லவன் மாதிரியே நடிச்சு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே?  இதுக்கு நீ அப்பவே என் கூட படுத்துட்டு என்னை துரத்தி விட்டுருக்கலாமே.. இந்நேரம் நான் என் வாழ்க்கையை பார்த்துட்டு போயிட்டு இருந்திருப்பேனே. தேவையில்லாம எனக்கு உன் பொண்டாட்டினு ஸ்தானத்தை கொடுத்து மெண்டல் டார்ச்சருக்கு என்ன ஆளாக்கி, கொஞ்சம் கொஞ்சமா என் மனசுல உன்ன விதைச்சு ஏன்டா இத்தனயும் செஞ்ச? வயித்துல உன்னோட புள்ள இருக்கும்போது இன்னொருத்தனுக்கு என்ன கூட்டிக் கொடுக்கிறாயே நீ எல்லாம் ஒரு அப்பனுக்கு பொறந்தவனா? நீ என்னை மட்டும் கூட்டி கொடுக்கல டா வயித்துல ஒருவேளை பொம்பள பிள்ளை இருந்தா உன் பிள்ளையவும் சேர்த்து இவனுக்கு கூட்டி கொடுக்குற.." பூங்காவனம் மானசீகமாக கேட்ட கேள்விகள் அனைத்துமே மின்னலுக்கு கேட்டிருக்க வேண்டும். ஒரு வினாடி அவனது பார்வை நிலம் தாழ்ந்தது. மறு வினாடி அகங்காரமாக நிமிர்ந்தது.

அந்த நொடி காரி உமிழ்ந்தாள் பூங்காவனம். மின்னலின் முகத்தில் துப்பியதைப் போலவே அவன் உணர்ந்தான்.

தொடரும்


தாகம் 31



அன்று முழுவதும் ஏதோ கனவில் மிதப்பதை போல இருந்தது பூங்காவனத்திற்கு. அவளால் மின்னல் வீரபாண்டியனை  கணிக்கவே இயலவில்லை. விதவிதமாக பார்த்து பார்த்து அவள் சமைத்து போட்ட உணவுகளை வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டவன் அவள் வேண்டா வெறுப்பாக செய்து கொடுத்த ரசத்தையும் உருளைக்கிழங்கையும் விரும்பி சாப்பிட்டு இருக்கிறான் என்றால்..

அதைவிட முக்கியமாக  அவனது வார்த்தைகளும் மென்மையான குரலும் அவளை என்னமோ செய்தது.. என்றோ படித்த வாக்கியம் நினைவுக்கு வந்தது.. ஏதாவது ஒன்றை நாம் வேண்டுமென்று கடவுளுக்கு விரதம் இருந்து கண்ணீர் விட்டு வேண்டுவோம். அப்படி நாம் வேண்டும் போது நாம் வேண்டும் பொருள் நமக்கு கிடைக்காது. இறுதியில் கண்ணீர் விடுவே இயலாத கட்டத்தில் கடவுளே இல்லை என்று வெறுத்துப் போய் அமரும்போது நாம் வேண்டியது கையில் வந்து கிடைக்கும்.

அப்படித்தான் இப்பொழுதும் பூங்காவின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது.. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக  அவளது உணவை பாராட்டியவன் மீண்டும் சற்று நேரத்தில் எல்லாம் திரும்ப அழைத்தான்.

" எங்கயாச்சும் வெளிய போலாமா.. " அவன் பாராட்டியதே ஆச்சரியம் என்றால் இப்படி அவன் கேட்டது திருமணமானதிலிருந்து இதுதான் முதல் தடவை. பூங்காவனத்தின் அதிர்ச்சியையும் அவளின் தவிப்பையும் கேட்கவா வேண்டும்.

தன்னுடைய பதிலுக்காக அவன் காத்திருக்கிறான் என்று தெரியுமே பதில் கூற இயலாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.

" அம்மாடி"

"ஹான்"

" எங்கேயாச்சும் வெளிய போலாமான்னு கேட்டேன்'

"ஹான்" அவளால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

" உன்ன தான்டி, எங்கேயாச்சும் வெளிய போலாமா."

"......." பதில் வராமல் எதிர்முனை அமைதியாக இருக்க பூங்காவனத்தின் மனநிலை ஓரளவு மின்னலுக்கு புரிந்தது.

" சரி இன்னும் ஒரு மணி நேரத்துல நான் வீட்டுக்கு வருவேன் நீ கிளம்பி இரு.."

"......"

"ஹேய்... உன்னோட பீரோல பாரு மெருன் கலர் சேலை இருக்கும். நீ இன்னும் அந்த சேலையை கட்டவே இல்ல. அந்த சேலையை கட்டு" அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மெருன் வர்ண சேலையா? வேகமாக எழுந்து சென்று பீரோவை ஆராய்ந்தாள்.. சேலைகளின் இடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அந்த மெரூன் வர்ண சேலை.. இந்த சேலையை இத்தனை நாட்களாக அவள் கண்டதே இல்லையே? எப்பொழுது வாங்கி இங்கே பதுக்கி வைத்தான்?

நடப்பதெல்லாம் மாயையோ என்கிற அளவுக்கு தள்ளப்பட்டாள் பூங்காவனம். அரை மணி நேரம் கழிந்ததே தெரியாமல் அமர்ந்திருந்தவள் அவன் ஒரு மணி நேரத்தில் வருவதாக கூறி இருக்க அடித்து பிடித்து குளித்து, மின்னல் கூறிய அதே வர்ண சேலையை கட்டி  அவசர அவசரமாக அலங்காரம் பண்ண ஆரம்பித்தாள்..

ஈர கூந்தலை விரித்துவிட்டு, நெற்றி வகுடில் குங்குமம் வைத்து  புருவத்துக்கு லேசாக கண்மை தீட்டி  அவளின் அலங்காரம் முடிந்தது.. மின்னல் தன்னை கவனிக்க வேண்டுமென்று பார்த்து பார்த்து இத்தனை நாட்களாக அலங்காரம் பண்ணிக் கொண்டவள் இன்று இருந்த மனநிலையில் ஏனோ தானோ என்று தயாராகி நின்றாள்.

ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறியவனிடமிருந்து அழைப்பு தான் வந்தது.

"அம்மாடி.."

"ம்ம்ம்"

"கெளம்புற நேரத்துல முக்கியமான வேலை.. நீ என்ன பண்ணு நேரா மாரியம்மன் கோவில் போயிரு.. நான் வந்துறேன்".. அழைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது.. அவன் சொன்னது போலவே மாரியம்மன் கோவிலுக்கு செல்ல பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு  வாசலுக்கு விரைந்தவளை கண்டதும் வீட்டு தேவைக்கு இருக்கும் டிரைவர் ஓடி வந்தான்.

"அம்மா.. எங்கம்மா போனும்" தனக்கிருந்த குழப்பமான மனநிலையில் சற்று நேரம் நடந்து சென்றாள் நன்றாக இருக்கும் என யோசித்தாள் பூங்காவனம்.

" இல்ல வேணாம் நானே போய்க்குறேன்"

"ம்மா.. இல்லம்மா நானும் உங்க கூட வரேன்".. மின்னலை நினைத்து பயந்து கூறினான் டிரைவர்.

"இல்லை வேணாண்ணே நானே போய்க்குவேன்.. இங்க தான்.. ஐயா வந்து பிக்கப் பண்ணிக்குவாரு அப்புறம்" அவள் இவ்வளவு தூரம் கூறிய பிறகு அடம்பிடிப்பது நல்லதல்ல என்பதால் டிரைவர் ஒதுங்கி நின்றான்.. பெரிய கேட்டை தாண்டி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினாள் பூங்காவனம். மாலை வேளையில் ஜன நெருக்கடி இல்லாத அந்த  தெருவில் இறங்கி நடக்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருந்தது.

அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பார்க்கும்போது  புன்னகை கூட எட்டிப் பார்த்தது பூங்காவிற்கு. நீண்ட நாட்கள் கழித்து மனம் லேசானதைப் போல உணர்ந்தாள். அந்த தெருவில் இருக்கும் அனைவருக்கும் அவள் அமைச்சரின் மனைவி என்பது தெரியும்..அவள் கையில் பூஜை கூடையோடு நடந்து போக அனைவருமே ஆச்சரியமாக பார்த்தார்கள்.தெருவில் இருப்பவர்கள் அனைவரும் மேல் தட்டு மக்கள் என்பதால் ஆச்சர்யம் அதிர்ச்சியாகமல் சடாரென்று கலைந்து போனது.

யாருடைய பார்வையைப் பற்றியும் அவளுக்கு கவலை கிடையாது. கனவில் மிதப்பது போல தெருவில் நடந்து சென்றாள். அந்த நேரம் பார்த்து தேவகி அவளுக்கு அழைத்தார்.

" சொல்லுமா"

"எங்கடி இருக்க.. கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போறியா.."

"ப்ச் எதுக்குமா"

" உனக்கு பிடிக்கும்னு சுறா புட்டு செஞ்சிருக்கேன்.. சின்ன வயசுல செஞ்சு கொடுத்தது. அதுக்கப்புறம் மீனு வாங்கவே நம்ம வீட்ல வக்கில்லை. இதுல எங்க இருந்து சுறா புட்டு செஞ்சு கொடுக்க? வரியா டி உனக்கும் மாப்பிள்ளைக்கும் எடுத்து வச்சிருக்கேன்.."தேவகி ஆசையாக அழைத்தார்.

" சரி எடுத்து வை ஆனா நான் இப்ப வரமாட்டேன் நான் வர கொஞ்சம் லேட் ஆகும்"

"ஏன்டி வீட்டில வேலையா.. நான் வேணும்னா எடுத்துட்டு வரட்டா.. இல்லன்னா செல்வி கையில கொடுத்து விடுவா?"

"ப்ச் ஐயோ அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ எடுத்து வை நானும் அவரும் அப்புறம் வரோம்.. நாங்க வெளியே போறோம்.." தேவகியின் முகம் புன்னகையால் மலர்ந்தது.

"அப்படி சொல்லுடி. சரி சரி ரெண்டு பேரும் நல்லபடியா போயிட்டு வாங்க. மாப்பிள்ளை வந்துட்டாரா அவர் கூட தான் இப்ப போயிட்டு இருக்கியா"

" இல்லம்மா அவர் வரேன்னு தான் சொன்னாரு அதுக்குள்ள வேலை வந்திருச்சாம்.. அதான் நீ போய் மாரியம்மன் கோவில்ல வெயிட் பண்ணு நான் வந்துர்றேனு சொன்னாரு"

"சரிடி.. நான் எடுத்து ஹாட் பேக்ல போட்டு வைக்கிறேன். ராத்திரி சாப்பாடு நம்ம வீட்டிலேயே சாப்பிடுறியா.."

" என்னமா சமைச்சிருக்க.."

" பெருசா ஒன்னும் இல்லடி ஹோட்டல் சமைச்சதை எடுத்துட்டு வந்துட்டேன். இப்ப நீ சொன்னனா ஏதாச்சும் செய்வேன்"..

" தெரியலம்மா நான் போன் பண்றேன்.." அம்மாவுடன் பேசிக்கொண்டே ஆட்டோ பிடித்து கோவிலுக்கு வந்து விட்டிருந்தாள் பூங்காவனம்..

கோவில் வாசலில் அவள் காத்திருக்க மின்னலிடமிருந்து அழைப்பு வந்தது. "எங்க இருக்க.."

" நீங்க தானே மாரியம்மன் கோவில்ல வந்து வெயிட் பண்ண சொன்னீங்க.. "

" சரி நீ என்ன பண்ணு கெளம்பி நம்ம சோலை பாண்டியன் ஐயா வீட்டுக்கு வந்துரு.." தன் காதால் கேட்ட வார்த்தை உண்மைதானா என்று சற்று நேரம் பேசாமல் இருந்தாள் பூங்காவனம்.

"ஹெல்லோ.. லைன்ல இருக்கியா நான் சொன்னது கேட்டுச்சா"

" அந்த வீணா போனவன் வீட்டுக்கு போறதுக்கா கிளம்பி வெளியே போலாம்னு சொன்னீங்க.."

" ரொம்ப பேசாத சொன்னத செய் இங்க வா அதுக்கப்புறம் வெளியே போலாம்.. " முகத்தில் அடித்தது போல அழைப்பை துண்டித்து விட்டான் மின்னல்.

கண்ணை கரித்துக் கொண்டு வந்தது பூங்காவுக்கு. இவ்வளவு நேரம் இருந்த இதம் பறிபோய்  அவன் ஆசையாக கட்ட சொன்ன சேலையை அவிழ்த்து அங்கேயே வீசி விடலாமா என்று கூட தோன்றியது.. முதல் தடவையாக அவனோடு ஆசை ஆசையாக  கோவிலுக்கு செல்லலாம் என்று அவள் கட்டிய மனக்கோட்டை எல்லாம்  நொடியில் இடிந்து மண்ணோடு மண்ணாகியது.

என்ன தைரியம் இருந்தால் சோலை பாண்டியன் வீட்டிற்கு அவளை வரக் கூறுவான்? அப்பொழுதுதான் அவளது மூளை எடுத்துரைத்தது. காலையில் சோலை பாண்டியன் அவளைப் பார்த்து பேசி பேச்சுகள் எதுவும் மின்னலுக்கு தெரியாது அல்லவா? அதனால்தான் அவளை வரக் கூறிருக்கிறான்..

இப்பொழுது சோலை பாண்டியனின் கொச்சை வார்த்தைகளை எடுத்துச் சொன்னால் மின்னல் அவள் பக்கம் நிற்பானா? காலை வரை கேட்டிருந்தால் சூடம் அடித்து இல்லை என்று சத்தியம் செய்திருப்பாள் பூங்காவனம்..

மாலையிலிருந்து நிலமையையே வேறு..   மின்னலின் முன்பு வைத்தே சோலைப் பாண்டியன் அவளை பேசிய பேச்சுக்களை கூற வேண்டும். அவன் கண்டிப்பாக அவளுக்காக நிற்பான்.. இன்றோடு சோலை பாண்டியனின் ஆட்டத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும்.. ஒருவேளை அங்கே மகாலட்சுமி இருந்தால்? அவளுக்கு வேறு இது பேறு காலம் நெருங்கி விட்டது.அவள் கேட்டு எதாவது பிரச்சனை ஆகி விட்டால்? அவள் நல்லவள் ஆயிற்றே..

தேவையில்லாத சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்து மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து சோலை பாண்டியன் வீட்டிற்கு சென்றாள் பூங்காவனம் முதல் முறையாக மிகவும் தைரியத்தோடு. வாசலில் இறங்கி வாயில் காவலன் அவளை ஏற இறங்க பார்த்ததை கண்டு  அதனை கண்டு கொள்ளாமல் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்..

அடுத்த நொடியே அவளுக்கு இருந்த தைரியம் அனைத்தும் பொடி பொடியாக சிதறி விட்டது. காரணம் அந்த வீட்டின் நடு நாயகமாக அமர்ந்து வழி மேல் விழி வைத்து அவளுக்காக காத்திருந்தது சோலை பாண்டியன்..

" என்னம்மா பூங்கா... புருஷனை தேடுறியா.. இன்னிக்கு என் பொண்டாட்டி கூட நீங்க ஜாலியா இருங்க தலைவரேனு சொல்லிட்டு போய்ட்டான்.. இந்த மாதிரி பத்து பேர் இருந்தா போதும்.. நாடு எங்கேயோ போயிடும்..ம்ம்ம் என்னம்மா அங்கேயே நிற்கிற கால் வலிக்க போகுது..வா இப்படி வந்து கண்ணு முன்னாடி ஒக்காரு.. அப்பதானே பாக்க வசதியா இருக்கும்" கால்களுக்கு கீழே பூமி நழுவ   தன் சுயம் இழந்து மயங்கி விழுந்தாள் பூங்காவனம்.

தொடரும்


தாகம் 30




கோவிலுக்கு வந்திருந்தாள் பூங்காவனம். மனமெல்லாம் கசந்து வழிந்தது. என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதே அவளுக்கே புரியவில்லை. மகாலட்சுமி தேவகி இவர்கள் இருவரும் கூறியதை கேட்டு தரம் இறங்கி போய் விட்டோமோ என்கின்ற எண்ணம் அவளை பேயாய் அலைக்கழித்தது.  இந்த மூன்று மாதத்தில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு தன்னாலான முயற்சிகளை செய்து விட்டாள் பூங்காவனம். ஒன்றே ஒன்றுதான் அவள் இன்னும் செய்யவில்லை. தேவகி கூறியதைப் போல மின்னலை வசீகரிக்கும் அரைகுறை ஆடைகளை அணியவில்லை.

கணவன் முன்பு அப்படி நிற்பதில் அவளுக்கு எந்த வித வெட்கமும் கிடையாது. என்ன சோலை பாண்டிய உங்க அம்மா மயக்கன மாதிரி என்னையும் மயக்க பாக்குறியா? இப்படியான வார்த்தைகள் ஒரு வேலை மின்னலின் வாயிலிருந்து வந்து விட்டால் அதன் பின்பு அவள் உயிர் வாழ்வதில் அர்த்தமே கிடையாது..

அவன் கேட்க மாட்டான் என்று அவளால் இன்று வரை உறுதியாக நினைக்கவே முடியவில்லை. கன்னி விடியின் மீது காலை வைத்தது போல எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பதைப்பதைபோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..

எவ்வளவு முயற்சிகள், அவனின் கடைக்கண் பார்வை தன் மீது விழாதா? ஒரு முறையாவது வாயைத் திறந்து தன்னுடைய சமையல் நன்றாக இருக்கிறது என்று கூற மாட்டானா?  ஆசையாக அவளுக்கு ஒரு பரிசு? அதற்கு எங்கே அவனுக்கு நேரம் இருக்கிறது? ஏன் ஒரு முழம் மல்லிகை பூ வாங்கி இருக்கலாமே? அமைச்சர் என்றால் மல்லிகைப்பூ மனைவிக்கு வாங்கி கொடுக்க கூடாது என்கின்ற சட்டம் இருக்கிறதா?

தினம் கூலி வேலை செய்பவன் கூட மனைவிக்கு தின்பதற்கு தின்பண்டங்களாவது வாங்கி வருகிறானே.. கோடி கோடியை மக்கள் வயிற்றில் அடித்து சம்பாதித்து வைத்திருக்கும் இவன் ஒரு கோணி ஊசியை கூட வாங்கி வந்து கொடுக்க மாட்டேன் என்கிறான்.

அவனாக வந்து அணைப்பது கிடையாது. இவள் அணைத்தால் அதை தொடர்வான். இவள் சாப்பாடு போட்டால் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுகிறான்.. கலவி முடிந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொடுத்தால் அமைதியாக அவனும் உறங்குகிறான்..

அவள் உலக கதை ஊர் கதை எல்லாம் அளக்க அவன் தன்னுடைய வேலையில் மும்பரமாக இருக்கிறான். அவள் ஏதாவது புரியாத கேள்வி கேட்டால் மட்டுமே அதற்கு பதில் கூறுவானே தவிர  பூங்காவனத்தைப் போல ஊர் கதை உலகக் கதை எதையும் அவன் பேச மாட்டான். என்ன ஒரே ஒரு ஆறுதல் பாதையில் எழுந்து செல்லாமல் அவள் பேசி முடிக்கும் வரை அவன் அமர்ந்திருப்பது மட்டுமே..

தன்னைப் பற்றிய கவலையில் மூழ்கி இருந்தாள் பூங்காவனம். சுற்றி தெரிந்த மாறுதலை அவள் உணரவில்லை. யாரோ தன்னை குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்த பூங்காவனம்  சட்டென்று தன் சிந்தனையிலிருந்து வெளிப்பட அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அங்கே அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றது சோலை பாண்டியன்.. அன்று ஒரு நாள் மகாலட்சுமி கணவனை இழந்து தாயகம் திரும்பி வந்தபோது சோலை பாண்டியனை அவரது வீட்டில் பார்த்தது.

அதற்குப் பிறகு இத்தனை மாதங்களாக அவள் சோலை பாண்டியனை சந்திக்கவே கிடையாது. மின்னலின் மூலமாக அவ்வப்போது அவரது பெயர் மட்டும் பேச்சின் ஊடே வெளிப்படும். இத்தனை மாதங்கள் கழித்து சோலை பாண்டியனை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்ததை எண்ணி மிகவும் வேதனைப்பட்டாள் பூங்காவனம்.. சோலை பாண்டியனின் பார்வை நேராகப் பூங்காவனத்தின் வயிற்றை தொட்டு மீண்டது..

அன்னிக்கு செயல் போல் ஒரு கருத்தை வயிற்றின் மேல் வைத்து  தன் குழந்தைக்கு அரண் போல் நின்றாள் பூங்காவனம்..

" என்னம்மா பூங்கா, எப்படி இருக்க? சௌரியமா? ஆள பாத்தே மாசக்கணக்கா ஆகுதே.. உன்ன பத்தி  எப்பவாவது நினைச்சுப்பேன்.. நீ இருக்க வேண்டிய இடம் என்ன ஆனா இருக்குற இடம் என்ன.. ம்ம்ம் ஆளே அடையாளம் தெரியாம மாறி போய்ட்டியே.. குடும்பமே ஒரு தினுசா தான் சுத்திக்கிட்டு இருக்கீங்க..

உன் புருஷன் கிட்ட உன்ன பத்தி பேச்சை எடுத்தாலே ஒரு பார்வை.. நேக்கா என்கிட்டயே பேச்சை மாத்தி பேசுறான்.. எல்லாம் இப்ப தலைகீழா இருக்கு" பூங்காவனம் சோலை பாண்டியனை எரித்து விடுவது போல முறைத்தாள்.

அவரை சுற்றிக்கொண்டு செல்ல முயன்றவளை தடுத்து நிறுத்தியது சோலை பாண்டியனின் குரல்." அவங்க அம்மா தேவகியை இப்ப வீட்டு பக்கத்துலயே காணோம்.. புதுசா எவனையாச்சும் புடிச்சுட்டாளோ.. இல்ல வரக்கூடாத சீக்கு ஏதாச்சும் வந்திருச்சா? வேகமாக திரும்பிப் பார்த்தவள் அக்கம் பக்கம் யாராவது இந்த பேச்சைக் கேட்கிறார்களா என ஆராய்ந்தாள். நல்லவேளையாக சாதாரண நாள் என்பதால் கோவிலில் கூட்டம் குறைவாக இருந்தது.

சோலை பாண்டியன் நமட்டு சிரிப்போடு நின்று கொண்டிருக்க " சந்தர்ப்ப சூழ்நிலையால ரெண்டு நாய் மட்டும் தான் எங்க அம்மாவை கடிச்சிருக்கு.. அதுலயும் இரண்டாவது நாய் இருக்கே அந்த நாய் ஊருபட்ட கண்ட தெரு நாயோடெல்லாம் சகவாசம் வச்சிக்கிட்டு  அடுத்தவங்கள பாத்து குறைச்சிகிட்டு கிடக்கு. அதுக்கே எந்த கேடும் வராதப்ப  என் அம்மாவுக்கு என்ன கேடு வரப்போகுது.." வேண்டுமென்றே ஊருக்கே கேட்கும் குரலில் கூறினாள் பூங்காவனம்.. அதனால் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்த பக்தர்கள் இவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தார்கள்.

சோலை பாண்டியன் முகம் கறுத்து சிறுத்தது"ஹேய்.. பொட்ட கழுத என்ன விட்ட வாய்  ரொம்ப தான் நீளுது.. உங்க அம்மா என்ன பத்தினியா.. தே.... தானே" கோவில் என்றும் பாராமல் வார்த்தையை விட்டார் சோலை பாண்டியன்.

"என் அம்மா தே.. னா அவங்கள பாக்க நாக்க தொங்க போட்டு வந்த உங்கள தே...மவனு சொல்லவா".. அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள் பூங்காவனம்..

"ஹேய்".. சோலை பாண்டியன் அவளை நெருங்க

" என்ன மறந்து போச்சா நான் எம்பி பொண்டாட்டி.  என் மேல கை வச்சா சோசியல் மீடியம் முழுக்க உங்கள பத்தி தான் பேச்சு ஓடும். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்களுக்கு ரொம்ப நாளா என் மேல கண்ணு என்ன படுக்க கூப்பிடுறிங்கன்னு சொல்லிடுவேன். அதும் கோவில்ல வச்சு காம பேச்சு பேசுறீங்கன்னு சொன்னா  உங்க நிலைமை என்ன ஆகும். உங்கள புண்ணிய ஆத்மா மாதிரி நெனச்சிட்டு இருக்குற உங்க பொண்ணு மகாலட்சுமிக்கு இந்த நிலைமை தெரிஞ்சா" ஆத்திரத்தை அடக்க வழி இல்லாமல் பூங்காவனத்தை எதுவும் கூறவும் முடியாமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்தார் சோலை பாண்டியன்.

கோவில் தலைமை கர்த்தாவை பார்க்க வந்த இடத்தில் தான்  சோகமே உருவாக அமர்ந்திருந்த பூங்காவனத்தை கண்டார் சோலை பாண்டியன். அவளது மேடிட்ட வயிறும்  கவலை தோய்ந்த கண்களும் அவரது கண்களில் படவில்லை. முன்னைவிட அழகாக குழந்தையின் காரணமாக உடல் மினுமினுக்க  பேரழகியாக காட்சி தந்த பூங்காவனமே சோலை பாண்டியின் கண்களில் விழுந்தாள்..

பழைய நினைவில் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அவளிடம் பேச இப்பொழுது அவள் ஒன்றும் அன்னக்காவடி பூங்காவனம் இல்லையே.. அதையேதான் அவளும் நினைத்துக் கொண்டிருந்தாள்..

"என்னடி இப்படி பேசிட்ட.. இப்ப பிரச்சனை வந்தா" மூளை அவளை கேள்வி கேட்டது.

" வந்தா வரட்டும் அத பாத்துக்கலாம்.. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கிழவனுக்கு பயந்துகிட்டே இருக்க முடியும். கண்ட நாய் எல்லாம் வந்து மேல கை வைக்க புருஷன்னு ஒருத்தன் எதுக்கு அப்புறம் இருக்கான்?" மனம் மூளைக்கு பதில் சொன்னது.

" அப்போ உன்னையே அறியாம நீ உன் புருஷனா மலை மாதிரி நம்புற.. உனக்கு ஏதாவது ஒன்னுனா அவன் வந்து உனக்காக நிற்பான்னு நீ நினைக்கிற.. " இப்பொழுது மூளை எகத்தாளமாக கேள்வி கேட்டது.

"நிப்பானா"மனம் வாடியது.. நம்பிக்கையாக சொல்ல முடியவில்லை.. நெஞ்சமெல்லாம் கசந்து வழிந்தது.. என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்?

" என்ன பதிலையே காணோம் முன்ன மாதிரி அந்த சோலை பாண்டியன் உன் மேல கை வச்சா என்ன பண்ணுவ..".. மூளை மீண்டும் கேள்வி கேட்க 

" செத்துக்கூட போவ ஆனா அதுக்கு முன்னாடி அந்த சோலை பாண்டியனோட உயிரை எடுத்துட்டு தான் போவேன்.."மனதை அடக்கினாள் பூங்காவனம்.

வீட்டிற்கு வந்தவளுக்கு கோவிலில் நடந்த சம்பவமே மீண்டும் மீண்டும் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.அன்று மதியம் வேலை இருந்ததால் வீட்டிற்கு மின்னல் வீரபாண்டியன் வரவில்லை.. அவனுக்கான உணவை  ஆபீஸ்க்கு கொடுத்து அனுப்பி விட்டாள்..

இந்த சில மாதங்களாக மின்னலுக்காக பார்த்து பார்த்து சமைத்தவள் இன்று நடந்த மனப்போராட்டத்தின் விளைவாக ரசமும் உருளைக்கிழங்கு பிரட்டலும் மட்டும் தயார் செய்து அனுப்பி விட்டாள்..

வேலைப்பளுவின் காரணமாக மதிய உணவு வேலை தாண்டி லஞ்ச் பாக்ஸை திறந்தான்  மின்னல்.. " என்னடா சாப்பிட்டியா" பக்கத்தில் இருந்த நாகாவை பார்த்து கேட்டான்.

" நம்ம வீட்ல இன்னைக்கு கருவாட்டு குழம்பு அண்ணா. மொச்சகொட்டை எல்லாம் போட்டு தூக்கலா பண்ணிருந்தா.. நீங்கதான் இவ்ளோ நேரம் கழிச்சு சாப்பிடுறீங்க.. " குறைப்பட்டு கொண்டான் நாகா.

" என்னடா கேரியர் இவ்வளவு சின்னதா இருக்கு. " வழக்கத்திற்கு மாறாக சிறிய அளவில் வந்த கேரியரை பார்த்து கேட்டான் மின்னல்.

" தல வாழ இலைல வித விதமா சமைச்சு அடுக்கி சாப்பிட்டா மட்டும் அண்ணி சமையல புகழ்ந்து தள்றீங்களா.. அவங்களும் எவ்வளவு தான் உங்களுக்காக இறங்கி வருவாங்க.. நானும் கொஞ்ச நாளா உங்கள பாத்துட்டு தான் இருக்கேன்.. அண்ணி சமையல் என்ன ருசி தெரியுமா..

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுறேன்.. அவங்களும் முகமே சுளிக்காம இன்னும் வேணுமா இன்னும் வேணுமானு கேட்டு கேட்டு கவனிக்கிறாங்க.. நம்ம வீட்டு நாய் கூட இப்பல்லாம் பிஸ்கட் போட்டா சாப்பிட மாட்டேங்குது. அண்ணி சமையல் செஞ்ச தட்டுல பிஸ்கட் போட்டு கொடுத்தா தான் சாப்பிடுது..

நாய்க்கு கூட அண்ணியோட அருமை தெரியுது. ஆனா நீங்க  "

" என்னடா நாய் கூட சேர்த்து வச்சு பேசுறியா"

" நான் அப்படி சொல்ல வரல. பாவமா இருக்குண்ணா அவங்கள பார்க்க.. ஒவ்வொரு முறையும் ஆசை சமைச்சு உங்களுக்கு பரிமாறும் போது உங்க மூஞ்சியே பாத்துட்டு நிக்கிறாங்க.. ஒரு தடவையாச்சும்  சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குனு சொல்றீங்களா.. எவ்வளவு சந்தோஷப்படுவாங்க" தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டினான் நாகா..  வழக்கம்போல அமைதியாக இருந்தான் மின்னல்.

மின்னலுக்கு இலை போட்டு கேரியரை பிரிக்க போகும்போது நாகாவுக்கு அழைப்பு வந்தது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது எவனோ ஒருவன் பைக்கை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்று விட்டானாம். பெரிதாக அடி ஒன்றும் இல்லை என்றாலும் குழந்தை பயந்து அழுது கொண்டே இருக்கிறதாம். உடனே வரும்படி நாகாவின் மனைவி பதறினாள். அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு விஷயத்தை மின்னலிடம் கூற, கையில் பணத்தை கொடுத்து உடனே சென்று பார்க்குமாறு பணித்தான்..

கூடவே அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை அழைத்து குழந்தையின் மீது மோதிய வண்டியின் எண்ணை கண்டுபிடிக்க சொல்லி அந்த நபரை உள்ளே தூக்கி போடுமாறு வேலைகள் பார்த்துவிட்டு கேரியரை திறந்தான் மின்னல்.

முதல் கேரியலில் உருளைக்கிழங்கு பிரட்டல். அடுத்ததாக ரசம். மின்னலின் முகத்தில் பெரிதாக சிரிப்பு தோன்றியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய் விட்டு சிரித்தான்..

சுடு சோற்றில் ரசம் ஊற்றி உருளைக்கிழங்கு பிரட்டலை போட்டு பிரட்டி ஒவ்வொரு கவனமாக வாயில் வைக்கும் போது சொர்க்கமே கண் முன் வந்து போனது போல் இருந்தது..

பூங்காவனம் பெயருக்கு ஏதோ கொறித்து விட்டு கட்டில் மேல் அமர்ந்திருந்தாள். அவள் மனம் முழுவதும் தனக்காக ஒன்றென்றால் மின்னல் நிற்கவே மாட்டானா என்று ஏங்கியது. இந்த உலகத்தில் தனக்கென்று சொல்ல யாருமே இல்லையா? கொஞ்சம் கொஞ்சமாக அவளது சகோதரிகளும் மின்னலின் பக்கம் சாய்ந்து விட்டார்கள். தேவகியை பற்றி சொல்லவே வேண்டாம்.

பூங்காவனத்திற்கு பெரிதாக நட்பு வட்டாரமும் கிடையாது. திடீரென்று அத்துவன காட்டிற்க்குள் தனித்து விட்டதைப் போல உணர்ந்தாள் பூங்காவனம். லேசாக தலை சுற்றுவது போல இருக்க கட்டியில் சாய்ந்து விட்டாள்.

அவளது அலைபேசி அழைத்தது.. எந்த நேரத்தில் யார் என்று  எரிச்சலாக போனை எடுத்துப் பார்த்தவள் கண்கள் விரிந்தது.அழைத்தது அவளுடைய கணவன். விதவிதமாக உண்டவனுக்கு ரசத்தை பார்த்ததும் பற்றி கொண்டு வந்திருக்கும். அவளை வதைத்து எடுப்பதற்காக அழைக்கிறான்.  முதல் இரண்டு தடவை அவன் அழைப்பை நிராகரித்தவள் விடாமல் அழைப்பு வரை வேண்டா வெறுப்பாக எடுத்துப் பேசினாள்.

"ஹெலோ.."

" என்ன பண்ற ஏன் போன் எடுக்கல'

" தோணல "

" அப்படின்னா போனை கையில தான் வச்சிருக்க.." சரியாக கண்டுபிடித்து விட்டான்.

" ஆமா எதுக்கு போன எடுக்கணும்.. என்கிட்ட பேச உங்களுக்கு என்ன இருக்கு? நானும் இத்தனை மாசமா பாத்துகிட்டு தானே வரேன்.. ஏதோ பைத்தியக்காரிச்சி மாதிரி நான் தான் உங்களை விழுந்து விழுந்து கவனிக்கிறேன்.. உங்களுக்கு என்ன நகை நட்டு கட்டிக்க துணி வாங்கி கொடுத்தா போதும். வெளி உலகத்துக்கு நான் எம்பி பொண்டாட்டி.

ஆனா உண்மையா நான் யாரு.. அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.. உங்க வீட்ல வேலை செய்ற வேலைக்காரி கூட என்னை விட சந்தோஷமா இருக்கா.. பேசாம அந்த இடத்துல நான் இருக்க கூடாதானு இருக்கு.. இங்க பாருங்க என்னமோ இப்ப மட்டும் இந்த வீட்டுக்காரி ரேஞ்ச்ல நான் இருக்கிற மாதிரி பேசிட்டு இருக்கேன்.." வேதனையோடு சிரித்தாள் பூங்காவனம். வழக்கம்போல அந்த பக்கம் அமைதி.

" இப்படி ஊமை படம் காட்டுறதுக்கு எதுக்கு எனக்கு போன் போடணும்."எரிந்து விழுந்தாள் பூங்காவனம்.

" சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு.. " இதுவரை பூங்காவனம் கேட்டிராத குரல். இவ்வளவு மிருதுவாக கூட மின்னலுக்கு பேச தெரியுமா.  பாதி குரல் காற்றில் தேய்ந்து மீதி கரகரப்பாக.. அவள் செவியில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் கண்கள் விரிய அமர்ந்திருந்தாள்.

"அம்மாடி"

"இப்.. இப்ப நீங்க என்ன சொன்னீங்க"

" அடியே பைத்தியக்காரி.. இத்தனை நாள் எனக்கு பிடிக்குமா பிடிக்காதானு தெரியாம வகைவகையா ஆக்கி போட்டியே.. இன்னிக்கு தான் எனக்கு பிடிச்ச சாப்பாட செஞ்சுருக்க"

" இல்லையே உங்களுக்கு பிடிக்கும்னு கமலா அக்கா" அவனது பேச்சில் குறுக்கிட்டாள் பூங்காவனம்.

" எனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தானே தெரியும்.. ஒரு நாளாவது உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டியா.."இல்லையே.. கமலா சொல்லியதை வைத்து அவனுக்கு பிடிக்கும் என்று விதவிதமாக ஆக்கி போட்டாளே..

அவள் அமைதியாக இருப்பதை உணர்ந்தவன்"  இருவத்தி அஞ்சு வருஷம் ஆச்சு. என் அம்மா கைல சாப்பிடவே முடியாது நினைச்சுட்டு இருந்தேன்.. இத்தனை வருஷம் கழிச்சு எனக்கே ஒரு குழந்தை வரப் போகுது.  திரும்பவும் சின்ன வயசு வீராவா  என் அம்மா ரசமும் உருளைக்கிழங்கும் வெச்சு பெசஞ்சி எனக்கு ஊட்டி விட்ட மாதிரி..தேங்க்ஸ் அம்மாடி".. அழைப்பை துண்டித்து விட்டான் மின்னல்.

அவன் பேசிய பேச்சில் திட்பிறமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.

தொடரும்


தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...