Saturday, 5 April 2025

தாகம் 21


"சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி
பக்தி கொண்டாயடி உன்னை பெண்ணாக்கி தாயாக்கி
எல்லாமும் பொய்யாக்கி முன்னாலே நின்றாளடி
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி"

காரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி தொடையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன்.

"ஏன்டா மின்னலு" தன் பக்கத்தில் கார் ஓட்டிக் கொண்டிருந்தவனை அழைத்தார்.

"ஐயா" பவ்வியமாக குரல் கொடுத்தான் மின்னல் வீரபாண்டியன்.

" நான் சொன்னதை பத்தி நீ என்ன நினைக்கிற.."

வாரிசாக தத்தெடுத்தால் மட்டும் பத்தாது. அவனது பெயரில் ஏதாவது குடும்ப சொத்தை எழுதி வைக்க வேண்டும் என்று ஜோசியம் சொல்லியிருந்தார்.. சோலை பாண்டியன் ஊரில் பாரம்பரியமாக இருந்த அவரின் விவசாய நிலம் ஒன்றை வேறு வழியே இல்லாமல் மின்னல் வீரபாண்டியன் பெயரில் எழுதி வைத்தார். விஷயம் கேள்விப்பட்டு மின்னல் எவ்வளவோ தடுத்தான் வேண்டாம் என்று. ஆனால் சோலை பாண்டியன் அதனை சட்டை செய்யாமல் தான் நினைத்ததை சாதித்துக் கொண்டார். எப்பொழுதும் அவரது இரண்டாவது மகள் பெயரில் வாங்கவிருந்த சொத்தை  மின்னலின் பெயரில் வாங்குவதற்கு அவனிடம் பேசிக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன்.

குடும்ப சொத்தை மின்னலின் பெயரில் அவர் எழுதி வைத்த பிறகு, இத்தனை காலமாக தொழிலில் அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பரம எதிரி ஒருவன் மாரடைப்பால் இறந்து போனான்.. அதேபோல் மாடிப்படியில் இருந்து வழுக்கி விழுந்த சோலை பாண்டி எனக்கு எந்த வித அடியும் இல்லாமல் தப்பித்து விட்டார்.ஜோசியர் சொன்னது நினைவுக்கு வந்தது.. வாரிசாக ஒருவனை தத்தெடுக்க சோலை பாண்டியனின் பாவமும் அவருக்கு வரவிருக்கும்  சோதனைகளும் அந்த வாரிசுக்கு தான் போய் சேரும் என்று.  எவ்வளவு உண்மை?

டெண்டர் விஷயம் சோலை பாண்டியனுக்கும் தெரிந்திருந்தது. யாரிடம் டென்டரை கொடுப்பது என்று  மின்னல் தலையைப் பியித்துக் கொண்டிருப்பதும் அவருக்கு தெரியும். தனக்கு வரவேண்டிய சோதனைகள் எல்லாம் அவனுக்கு செல்வதில் சோலை பாண்டியனுக்கு பெருத்த நிம்மதி.. இன்னொன்று அவரின் விசுவாசி அவன். எப்பொழுதும் கைவிட்டு செல்லக்கூடாது என்பதால், மேலும் அவன் தன்னை முழுதாக நம்ப வேண்டும் என்பதாலும்  அவன் பெயரில் சொத்தை வாங்கப் போவதாக கூறிக் கொண்டிருந்தார்.

" எதுக்குயா இப்ப தேவை இல்லாம என் பேர்ல சோத்து வாங்குறீங்க.. சின்ன பாப்பா பேர்ல வாங்குங்க.. இத்தனை வருஷம் அப்படித்தானே பண்ணிட்டு இருக்கீங்க? " அமைதியான குரலில் மறுத்தான் மின்னல்.

" நீ சும்மா இருடா.. பேருக்கு உன்னை வாரிசா தத்து எடுத்தன்னு நினைச்சியா.. உண்மையாவே உன்னை என் மகனா தான் நான் இத்தனை காலமா பாத்துட்டு வரேன்.. எனக்கு அப்புறம் யார் இருக்கா சொல்லு? பொட்ட பிள்ளைங்க மூனையும் கட்டி கொடுத்து கடமையை முடிச்சிட்டேன். நாள பின்ன நான் செத்தா கொல்லி போட ஒரு வாரிசு வேணாமா.. என் பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சனைனா போய் நிற்க  கூட பொறந்தவன் வேணாமா.." இத்தனை காலம் இல்லாமல் இப்பொழுது மட்டும் எதற்கு இந்த வாரிசு என்பதைப் போல அவரை பார்த்தான் மின்னல்.

அவனின் பார்வைக்கு உடனே அர்த்தம் புரிந்து கொண்டார் சோலை பாண்டியன். " அது அதுக்குன்னு ஒரு காலம் இருக்கு. எது எது எப்ப நடக்கணுமோ அது அப்ப கரெக்டா நடக்கும். அப்படித்தான் நீயும்.. நீ என்னடா சொல்றது என் மகன் பேருல நான் சொத்து வாங்குறேன்.." மின்னல் ஏதாவது சொல்லுவான் என்று அவன் முகத்தைப் பார்த்தார் சோலை பாண்டியன். கடப்பாரையை விழுங்கியவன் போல ரோட்டை பார்த்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் மின்னல்.

" அப்புறம் கேட்கணும்னு நினைச்சேன் உனக்கு உன் பொண்டாட்டிக்கும் நடுவுல எப்படி போகுது" அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்பதை புரிந்து அவரை புரியாத பார்வை பார்த்தான் மின்னல்.

"அதான்டா அந்தப் பொண்ணுக்கும் உன் மேல விருப்பம் இல்ல. நீயும் எப்பேர்பட்டவனும் எனக்கு நல்லா தெரியும். ஏதோ நான் சொன்னேன்னு அந்த அன்னக்காவடிய கல்யாணம் பண்ணிக்கிட்ட. அவ உன்கிட்ட மரியாதையா நடந்துக்கறாளா? ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணுடா. என்னையே மூஞ்சிக்கு முன்னாடி கை நீட்டி பேசியிருக்கா..

இன்னும் கொஞ்சம் ஒழுக்கமான குடும்பத்திலிருந்து வந்து இருந்தா என்ன போடு போட்டிருப்பாளோ? ஒழுக்கங்கெட்ட கழுதைக்கு வாய்க்கு மட்டும் குறைச்சல் கிடையாது.. உன்கிட்ட எப்படி எகிறி கிட்ட தான் இருக்காளா" மின்னல் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக வினவினார்..

" என் வீட்ல என்ன நடக்குதுன்னு தான் உங்களுக்கு சுட சுட நியூஸ் வந்திருக்குமே ஐயா" சத்தியமாக மின்னல் இவ்வாறு கூறுவான் என்று சோலை பாண்டியன் எதிர்பார்க்கவில்லை.

"என்னடா.. என்ன என்னமோ சொல்ற" நிதானமாக அவரை திரும்பிப் பார்த்த மின்னல்

"ஏன்ய்யா எல்லாரப்பத்தையும் நுனி விரல்ல தகவல் சேகரிச்சு வைத்திருக்கிற நீங்க என்ன பத்தின தகவலை விட்டு வச்சிருப்பீங்களா? அதுவும் நான் உங்க வாரிசுன்னு சட்டபூர்வமா  அறிவிச்சதுக்கு அப்புறம் நாலு மடங்கு எனக்கு ஸ்பை போட்டிருக்க மாட்டீங்க.." எள்ளல் தெறிக்க கேட்டான் மின்னல்.

" என்னப்பா மின்னலு பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு.. "

"ஐயா நான் எப்பவும் போல தான்யா எதார்த்தமா பேசினேன்.." அதற்கு மேல் மின்னலும் பேசவில்லை சோலை பாண்டியனும் பேசவில்லை.. மின்னல் தான் பேசாமல் பேச மாட்டான் என்பது சோலைப் பாண்டியனுக்கு தெரியும். தன் முன்னால் இதுவரை தலைகுனிந்து பவ்யமாக பேசிக் கொண்டிருந்த மின்னல் முதல் முறையாக தன்னை எள்ளள் தெறிக்க பேசியதை சோலை பாண்டியனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. சட்டப்படி வாரிசாக அவனை அறிவித்ததற்கு பிறகு  குளிர் விட்டு போய்விட்டது  என்பதாக எண்ணினார் சோலை பாண்டியன்.

"ஆமா.. அந்த பொண்ணு அதான் டா உன் பொண்டாட்டிய எப்ப என்கிட்ட கொண்டு வந்து விடுவ..சொல்லித்தானே அவளை கட்டி வெச்சேன்".. மின்னலை பற்றி அவருக்கு வந்த தகவலின்படி பூங்காவோடு அவன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அறிந்து வைத்திருந்தார்.

பூங்கா தனக்கு சொந்தமானவள்.. வேறு வழி இல்லாமல் தான் தனது மஞ்சத்திற்கு வர வேண்டியவை வாரிசாக தத்தெடுத்த இவனுக்கு தாரை பார்க்க வேண்டியதாக போய்விட்டது.

மின்னல் தன்மீது கோபப்படுவான். ஆத்திரத்தில் வார்த்தைகளை தவறாக உபயோகப்படுத்துவான் என்று எண்ணியே சோலைப் பாண்டியன் அவனது தன்மானத்தை சீண்டி விட்டார். ஆனால் அந்த மலை முழுங்கி மகாதேவனோ 

" உடனே அவளை கூட்டிட்டு வந்தா பிரச்சனையாயிடும்யா. கொஞ்ச நாள் போகட்டும் அவ இப்பதான் என்ன நம்ப ஆரம்பிச்சிருக்கா.. முன்ன மாதிரி அவ என்ன யாரும் இல்லாத அனாதையா.. பிரச்சனை வந்தா உடனே மீடியாக்கு போயிருவா.. அவளே தடுக்கி விழுந்து எதாச்சும் ஆனா கூட நான் தான் அவளை என்னமோ பண்ணிட்டேன்னு எல்லாரும் கதை கட்டிருவாங்க. எலக்சன் டைம் வேற. இது முள்ளுல விழுந்த சேலை பதமா தான் எடுக்கணும்.. " மீண்டும் தான் ஒரு அக்மார்க் சோலை பாண்டியனின் அடிமை என்று நிரூபித்தான் மின்னல் வீரபாண்டியன்.

அவனை பெருமிதமாக பார்த்த சோலை பாண்டியன் " எனக்கு தெரியும்டா உன்ன பத்தி. எல்லாமே நடிப்புன்னு சொல்லு. சரி நீ நடிக்கிற அந்த பொண்ணு"..

மின்னலுக்காக பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த உணவுகள்  ஆறிப் போய் இருக்க அதனை பார்த்து பொறுமைக் கொண்டிருந்தாள் பூங்காவனம்..

" என்ன கண்ணு ஆசை ஆசையா புருஷனுக்கு சமைச்ச.. ஒரு வாய் கூட சாப்பிடாம மின்னல் போயிடுச்சு"

"ஹான் வாம்மா மின்னலுன்னு ஒரு போன் வந்துச்சு.. சல்லுனு போயிருச்சு" கடுப்போடு வெளிவந்தது பூங்காவனத்தின் வார்த்தைகள்.

" என்னாச்சு மா ஏதாவது பிரச்சனையா.. "

" இல்லக்கா அந்த சோலை பாண்டியனுக்கு பொறுக்கல. ஒரு போன் வந்ததும் இந்த ஆளும் காலுல சுடு தண்ணி ஊத்துன மாதிரி அரக்கப் பறக்க ஓடிருச்சு.." முகத்தில் டன் கணக்காக சோகம் வழிந்தது பூங்காவனத்திற்கு.

"கண்ணு நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத. இன்ன வரைக்கும் எனக்கே புரியல நீ எப்படி மின்னல் கூட ஒண்ணுமண்ணா இருக்கனு.. உள்ளுக்கு ஏதாவது பிளான் வச்சிருக்கியா.. அதுக்கு தான் நேரம் பார்த்து காத்திருக்கியா" ஒரு மாத காலமாக பூங்காவனத்தை கண்காணித்து வரும் கமலி சந்தேகமாக கேட்டார்.

அவரது கேள்விக்கு பூங்கா கோபப்படாமல் சிரித்துக் கொண்டே" ஆமா பெரிய பிளான் வச்சிருக்கேன் நேரம் கிடைக்கும்போது ஒரே குத்து.. உங்க எம்பி மின்னலு வாய பொளந்துருவான்.. " சொல்லிவிட்டு அட்டகாசமாக சிரித்தாள் பூங்காவனம். கமலிக்கு முகமே இருண்டு போனது.

அரண்ட அவரின் முகத்தையும் கண்டவள்" நான் சொன்னதை நம்பிட்டீங்களா.. ஏன்கா நீங்க வேற.. என்னால வேற என்னதான் செய்ய முடியும் சொல்லுங்க? இது என்ன தமிழ் படமா இல்ல கதையா? நான் மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு போறதும் ஹீரோ என் பின்னால தூங்கிக்கிட்டு வர்றதுக்கும்.. ரியல் லைஃப்க்கா.. இதுதான் வாழ்க்கைனு ஆயிடுச்சு. அவன்கிட்ட மூஞ்ச தூக்கி வச்சிட்டு நான் என்ன பண்ண போறேன்? ஒருவேளை உங்க எம் பி எம் என்ன வேணாம் அந்த சோலை பாண்டியனுக்காக உன் கழுத்துல தாலி கட்டிட்டேன். நான் கிட்ட இந்த தாலிய கலட்டி என் கையில குடுத்துட்டு நீ உன் வேலைய பாத்துட்டு போய்கிட்டே இருனு சொன்னாலும் பரவால்ல..

அவரு இதுதான் சாக்குனு தாலி கட்டின மாதிரி, ரெண்டு அறை விட்டு  காது ஜவ்வு கிழிக்கிற மாதிரி தாலியை பத்தி கிளாஸ் எடுத்து,ஸ்ஸ்ப்பா என்னத்த சொல்ல போங்க.. அதனாலதான் அவரு என்ன தொடும் போது நான் தடுக்கல.. தடுத்து இங்க எதுவும் மாறப் போறது கிடையாது.. எப்படியோ அந்த சோலை பாண்டியன் கிட்ட இருந்து நான் தப்பிச்சிட்டேன். என் தங்கச்சி இங்க படிப்புக்கும் இவர்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணியாச்சு.

அவருக்கு தெரிஞ்ச வீட்டுல தான் எங்க அம்மா சமையல் வேலைக்கு போயிட்டு இருக்காங்க.. இவரு எங்க வீட்டு மருமகனா ஆனதிலிருந்து சில்லறை தொல்லைகளும் இல்லாம போயிருச்சு.. என்ன பொறுத்த வரைக்கும் இந்த வாழ்க்கை எனக்கு கடவுளா போட்ட பிச்சை..அதை என்னால முடிஞ்ச அளவுக்கு காப்பாத்திக்குவேன்.. "பூங்காவின் உறுதி கண்டு வாயடைத்துப் போனார் கமலி.

பின்னர்"ஏன் கண்ணு அந்த கட்டையில போறவன் திரும்ப உன் கிட்ட ஏதாவது வம்பு பண்ணா"..

"என் புருஷன தாண்டி என்னை தொட முடியுமாக்கா"அலட்சியமாக சிரித்தாள் பூங்காவனம்.

தொடரும்..


தாகம் 20


மின்னல் வீரபாண்டியன் போக்குவரத்து துறை அமைச்சர்.புதிதாக அரசாங்கம் மேலும் ஆயிரம் அரசு பேருந்துகள் வாங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதற்கான முன்னெடுப்பாக அமைச்சர் மின்னல் வீரபாண்டியனின் முன்னிலையில் கையெழுத்துக்காக காத்திருக்கிறது சட்டசபை. அமைச்சர் மின்னல் வீரபாண்டியனின் ஒரே சிந்தனை யாரிடம் இந்த டென்டரை ஒப்படைக்கலாம் என்பதே.  ஏற்படும் அதில் தனக்கு எவ்வளவு லாபம் ஏற்படும், எத்தனை கோடிகளை தான் அடிக்கலாம் என்பதை அவனது தலையாய சிந்தனையாக இருந்தது.

" மதிப்புக்குரிய சபாநாயகர் அவர்களே இப்படித்தான் போன தடவையும், 2000 பஸ்ஸு வாங்க போறதா தீர்மானம் நிறைவேத்துனீங்க. ஆனா  எத்தனை பஸ் உண்மையா நீங்க வாங்கினீங்க? எத்தனை பேருக்கு அது மூலியமா வேலை போட்டு கொடுத்தீங்க? இல்லை எத்தனை பேருக்கு வேலை போட்டு கொடுக்கிறதா சொல்லி காச வாங்கி ஏமாத்துனீங்க? எந்த அறிக்கையும் வெளிய வரல. 2000 பஸ்ல 500 பஸ் தான் கணக்கு காட்டுனீங்க. அந்த 500 பஸ்சும் புது பஸ் இல்ல. பழைய பஸ் வாங்கி அதை பெயிண்ட் அடிச்சு  மேக்கப் போட்டு புதுசா நிப்பாட்டிட்டீங்க.. பேலன்ஸ் ஆயிரத்து 500 பேருக்கும் இல்லாத பஸ்ஸுக்கு வேலை வாங்கி கொடுக்கிறதா சொல்லி ஆளுக்கு அஞ்சு லட்சம் லஞ்சம் வாங்குனதும் இல்லாம, அவனுங்க அத்தனை பேருக்கும் விபூதி அடிச்சிட்டீங்க. அதோட கம்ப்ளைன்ட் பேப்பரு இங்க இருக்கு.. " கம்ப்ளைன்ட் பேப்பரின் நகலை தூக்கி மேஜையில் எரிந்தார் எதிர்க்கட்சிக்காரர்..

மின்னல் இப்பொழுது என்ன பதில் கூற போகிறான் என ஆர்வமாக எதிர்பார்த்தது. எந்தவித திடுக்கிடலோ,  பதற்றமோ இன்றி சர்வ சாதாரணமாக தனது வார்த்தை ஜாலத்தை காட்ட முற்பட்டான் மின்னல் வீரபாண்டியன்.

" சபா நாயக்கர் அவர்களே, மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு விளங்கவில்லை போலும்.  பேருந்து வாங்குவது காய்கறி வாங்குவது போல அல்ல.. பேருந்து வாங்குறதுக்கு நாங்க கொடுத்த திட்ட அறிக்கையும், கம்பெனிக்காரரோட திட்ட அறிக்கையும் ஒத்துப் போனாதான் வாங்குறது சாத்தியம். அதுக்கே மூணு வருஷம் ஆயிடுச்சு.  அதற்காக எத்தனை கம்பெனிக்காரர்கள் இடம் திட்ட அறிக்கையை வாங்கி இருக்கிறோம் என்பதற்கான ஆதாரங்கள் உங்க பார்வைக்கு முன் அளிக்கிறேன்..

எங்களுக்கு மக்களின் பணத்தை விரயமாக்குவதற்கு சற்றும் விருப்பமில்லை. அது எங்களது உரிமையும் கிடையாது.. ஆகவே மக்களின் வரிப்பணத்தை விரயமாக்காம ஆக குறைவாக இருந்த திட்ட அறிக்கை கொடுத்த கம்பெனிக்காரர்களிடம் பணத்தைக் கொடுத்து பேருந்தை தயார் செய்து வாங்கியதற்கான ஆதாரமும் உங்க முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.. பேருந்து இப்பதான் தயாராயிட்டு இருக்கு.. நாங்க குடுத்த மலிவு விலை பட்ஜெட்டுக்கு இவ்வளவு வேகத்தில் தான் வேலை நடக்கும். இது கூட புரியாம எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்.."

" இப்படி ஆயிரத்து எட்டு பொய் ஆதாரங்களை காட்டி தான் மக்கள் தலையில நல்லா மொளகா அரைச்சுட்டு இருக்கானுங்க.. மக்கள் சேவை மகேசன் சேவை வெளிய வாய் கிழிய பேச தெரியுது. ஆனா உள்ள மக்களை நல்லா சொரண்டி அவனவன் புள்ள குட்டிங்களுக்காக சேர்த்து வச்சுக்கிட்டு இருக்கான்."

"இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிக்காரர் வாதத்தை கேட்டா சிரிப்பு தான் வருது.. நீங்க மக்கள பாருங்க.. கையில ஒரு செல்போனும்  ஒரு நாளைக்கு அன்லிமிடெட் ஜிபியும் இருந்தா போதும். மக்கள் சோறு தண்ணி இருக்கோ இல்லையோ ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க. எதிர்க்கட்சிக்காரர்  தேவையில்லாததெல்லாம் பேசி  வீணா நம்ம அனைவருடைய நேரத்தையும் வீணடிச்சிட்டு இருக்காரு.." மின்னல் அசால்டாக இப்படி கூறவும் சட்டசபை சற்று நேரத்திற்கெல்லாம் சந்தை கடை போலானது.

" என்ணணே செழியன் உங்களை என்ன போடு போட்டான்.. நீங்க என்னன்னா அது எல்லாத்தையும் கேட்டுட்டு கம்முனு வரிங்க.. " சுரேஷ் புரியாமல் கேட்டான்.

மின்னலிடமிருந்து அவனுக்கு எந்த வித பதிலும் கிடைக்கவில்லை மாறாக புன்னகை ஒன்றே பதிலாக கிடைத்தது.அந்த மர்ம புன்னகை அடுத்து வந்த சில நாட்களில் சுரேஷிற்கு ஏன் என்று புரிந்தது.

ஊழல் செய்ததாக சொல்லி செழியன் தங்கமானை கைது செய்ததாக ஊடகங்களில் செய்தி காட்டுத்தை போல் பரவியது. கையும் களவுமாக அவர் செய்த ஊழலை லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி விட்டதே மின்னல் தான்..

எலக்சன் நேரம் என்பதால் மக்கள் அனைவரும் கொதித்து போயிருக்க கட்சியின் மேலிடம் செழியன் தங்கமானை கட்சியின் நலன் கருதி நீக்கி விட்டது.

மின்னலுக்கும் பூங்காவனத்திற்கும் திருமணமாகி ஒரு மாதம் ஆகிவிட்டது.. திருமண விருந்து கூட தடபுடலாக செய்யாமல் நாடு முழுவதும் இருக்கும் அனாதை இல்ல குழந்தைகளுக்கு இருவேளையும் உணவளித்தான் மின்னல் வீரபாண்டியன்.. இதனால் அவனது பெயர் இன்னும் மக்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்தது.

ஆனால் அவனது கெஸ்ட் ஹவுஸில் மிகவும் நெருக்கமானவர்களை அழைத்து மது மாது என தடபுடலாக விருந்து வைத்து அசத்தியிருந்தான்..

தன்னுடைய அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்றவன் நேராக சமையலறைக்கு சென்றான். அங்கே அவனது வரவிற்காக பூங்காவனம் வியர்க்க விறுவிறுக்க சமைத்துக் கொண்டிருந்தாள்.

வியர்வை பூத்த கழுத்தில் இச்சென்று முத்தம் வைத்தான் இடையை இறுக்கமாக கட்டிக்கொண்டு..

"ஆஆ.. ப்ச் என்னங்க.. எத்தனை தடவை சொல்றது இந்த மாதிரி செய்யாதீங்கனு" அவன் கரத்தை விலக்க முயன்றாள் பூங்காவனம்.. அது அவ்வளவு சுலபமில்லை என்பது அவளுக்கு வந்த புதிதிலேயே தெரிந்து விட்டது.

சளித்தபடியே சமையல் வேலையை தொடர்ந்தாள். அவனும் அவள் இடையை வருடுவது கழுத்தில் மீசையை கொண்டு குறுகுறுப்பு ஏற்படுத்துவது அப்படி எதையாவது செய்து அவள் சமையல் வேலையை கெடுக்க மும்பரமாக செயல்பட்டான்.

அப்படி இப்படி என்று அவனது இம்சைகளின் நடுவே சமையலை செய்து முடித்தாள் பூங்காவனம்..

" வேர்த்து ஒழுகி இந்த சமையல செய்யறது ஒரு கடுப்புனா, அதையும் செய்ய விடாம நீங்க கேக்குறீங்க பாத்திங்களா உங்க மேல இன்னும் கடுப்பு கடுப்பா வருது.." கழுத்தை நெரிப்பது போல கைகளை அவன் கழுத்தின் அருகே கொண்டு சென்றாள்.

அவளையும் அவள் கரத்தையும் ஒரு வினாடி கூர்ந்து பார்த்தவன் சிரித்த இதழ்களோடு பெண்ணவளின் இதழ்களை தனதாக்கி கொண்டான்.

" வீட்டில எத்தனை வேலைக்காரங்க இருக்காங்க.. கமலிக்கா இருக்கு.. நீ ஏன் இந்த வேலையை இழுத்து போட்டு செய்யுற.. அதுலயும் நான்தான் சமைப்பேன்னு ஒரே ஆட்டம். அப்புறம் அது நொட்டை இது நொட்டைன்னு ஆயிரம் குறை சொல்ற.."

" மத்த வேலை எல்லாம் அவங்க செய்யட்டும். என் புருஷனுக்கு என் கையால ஆக்கி போட்டா தான் என்னோட மனசுக்கு திருப்தியா இருக்கும்."

" வயிறு நிறைஞ்சா போதுமா" தாபம் அவனது குரலில் மேலோங்கி நின்றது.

" வேற என்ன நிறையனும்" தெரிந்து கொண்டே கேட்டாள் பூங்காவனம்.

"இங்க நிறையனும்".. சேலை விலகிய இடைவெளியில் தனது கரத்தை நுழைத்தவன் அவளது வயிற்றில் தனது உள்ளங்கை அழுத்தமாக பதியும் வண்ணம்  கூறினான்.

அவனது அடாவடி செயலால் பூங்காவனத்திற்கு பேச்சே வரவில்லை." என்ன பண்ணிட்டு இருக்கீங்க யாராவது பார்க்க போறாங்க.. எப்ப பாரு உங்களோட இது அக்கப்போரா போச்சு போங்க நான் போறேன்".. அவனைத் தாண்டி அவளால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

" என்ன தாண்டி போறது அவ்ளோ சுலபம் இல்ல பொண்ணே.." பூங்காவனத்தை மின்னல் குறுகுறுவென அவ்ளோ தலை குனிந்து கொண்டாள்.

" கமலி அக்கா வந்துருவாங்க"

" வரட்டும்"

" பாத்துருவாங்க"

" பாக்கட்டும்"

"ப்ச் அவங்க பார்த்தா உங்களுக்கு என்ன.. எனக்கு தான்"

" உனக்கு என்ன"

" யோவ் எனக்கு தான் வெக்கமா இருக்கும்.. உனக்கு என்ன.. தலையை இப்படி இப்படின்னு  சீப்பே இல்லாம சீவிட்டு போயிருவ.." அவனின் பிடியிலிருந்து  தப்பித்து ஓட முயன்றாள் பூங்காவனம்..

" என்னடி வர வர மரியாதை தேயுது"..

"ம்ம்ம்"

"ம்ம்ம்ம்ம்"

"ம்ம்ம்ம்ம்"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

"ம்ஹும்.. விடுங்க ப்ளீஸ்..  உங்களுக்கு அப்புறமா வேற வேலை இல்லையா.."

"இருக்கே"அவளின் மேனியை கண்களால் தீண்டியபடி கூறினான்.. பூங்காவனத்தின் முகம் சிவந்தது.

"தள்ளுங்க ப்ளீஸ்"

"சரி ஒன்னு கொடு".. ஒற்றை விரலால் தனது இதழ்களை தொட்டு காட்டினான்.

"ஆஹ் ம்ஹும் முடியாது.." வீம்பு செய்தாள் பூங்காவனம்.

" கொடுத்தா போகலாம்"

" அப்படின்னா போகவே வேணாம் ரெண்டு பேரும் இப்படியே நிக்கலாம்.. "

"ஓ..  எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது"அவளின் மேனியில் சட்டமாக சாய்ந்து கொண்டவன்,ஒற்றை விரல் கொண்டே அவளை ஓவியமாய் வரைந்து கொண்டிருந்தான்.

"கடவுளே.. எப்பவும் சரியா சாப்பிடற டைம்க்கு தான வருவீங்க இன்னைக்கு என்ன கொஞ்சம் சீக்கிரமா வந்து என் உசுர போட்டு வாங்குறீங்க.." அவனின் அழுச்சாட்டியம் தாங்க முடியாமல் குரலை உயர்த்தினாள் பூங்காவனம்.

" நான் கேட்டது கொடுக்குற வரைக்கும் இப்படிதான்".. பூங்காவனத்திற்கு பயம். கமலி பார்த்தால் கூட சமாளித்து விடுவாள். ஆனால் வீட்டில் வேலை செய்பவர்கள் யாராவது பார்த்து விட்டால்? மானமே போய்விடும்..

ஹாலில் ஆள் அரவம் கேட்டது."அய்யயோ யாரோ வராங்க போல ப்ளீஸ் தள்ளி போங்க"

மலை முழுங்கி மகாதேவன் அவன் சற்று மசியவில்லை.. காரியமாக ஒற்றை விரலை எடுத்துச் சென்று இதழின் மேல் வைத்து காட்டினான். பூங்காவனத்திற்கு வேறு வழியே கிடையாது.  இறுதியில் அவன் கேட்டதை கொடுக்க சம்மதித்து யாராவது வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தாள். ஒருவரும் வரவில்லை என உறுதி செய்து கொண்டவள் அவனின் இரு பக்க தோள்களை பற்றிய படி மெல்ல எக்கினாள்.

அவனின் கண்கள்   அசையாமல் அவளை பார்த்தது. அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.கண்களை மூடிக்கொள்ள சொன்னாலும் அந்த பிடிவாதக்காரன் கேட்க மாட்டான்..

" ஒன்னு தான்"செல்லமாக மிரட்டினாள் பூங்காவனம். சன்னமாக சிரித்து வைத்தான் மின்னல் வீரபாண்டியன்.. அவளின் இதழ்களும் அவனின் இதழ்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க மெல்ல இதழ்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும் நேரம் மின்னலின் கைபேசி அலறியது.

வேகமாக அவளை தள்ளியும் மின்னல் கைபேசியை எடுத்து பார்க்க அழைத்தது சோலை பாண்டியன்..

"ஐயா சொல்லுங்கய்யா..ஆங் சரி.. ஆங்.. சரிய்யா சரிய்யா.. இருங்கய்யா.. ஒரு பத்து நிமிஷம்..".. வேகமாக வெளியே கிளம்ப முற்பட்டவனின் கரத்தை பிடிக்க...

"வந்தர்றேன்".. ஒற்றை வார்த்தையோடு கிளம்பி விட்டான் மின்னல்..

திருமணமாகிய இந்த ஒரு மாதத்தில் மின்னல் பூங்காவின் வாழ்வு அவர்கள் நினைத்ததை விட சீராக சென்றது..அன்று இரண்டு அறை விட்டு தாலியின் அர்த்தத்தை உரைத்தவனை நம்பாமல் இந்த வீட்டிற்குள் அடுத்த இரண்டே நாளில் அவனை மெல்ல நம்ப ஆரம்பித்தாள் அதாவது அப்படி பேர் பண்ண தொடங்கினாள் பூங்கா..

தொடரும்


தாகம் 19


தடபுடலாக தனக்கு முன்னாள் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை பார்த்தான் மின்னல் வீரபாண்டியன். தேவகியின் காதில்  உயிரை கையில் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த இரண்டு கம்மல்களை காணவில்லை. அவை பத்திரமாக சேட்டு கடையில் உறங்கிக் கொண்டிருந்தது.. உணவோடு சேர்த்து மாப்பிள்ளைக்கு செய்வதற்காக பூங்காவனம் ஒன்று கொடுத்த பணத்தையும் போட்டு அரை பவுனில் மோதிரம், வேஷ்டி சட்டை பூங்காவனத்திற்கு பட்டு சேலை இரண்டு ஜோடி சிறிய குத்துவிளக்கு,இரண்டு வெள்ளித்தட்டு, வளையல் பூ பழம் இப்படி தன்னால் ஆனதை வாங்கி வந்து தட்டில் அடுக்கி வைத்திருந்தார் தேவகி.

மறு வீட்டு விருந்தையே  தடால் அடியாக வந்து கேட்டவன் திடீரென்று ஒரு நாள் என்ன செய்தீர்கள் என்று கேட்டு விட்டால் அந்த நேரத்தில் எங்கே சென்று நிற்பது? நாளைய தினத்தைப் பற்றி தேவகிக்கு கவலை கிடையாது. அவர் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தார்.  வீட்டு வேலை செய்தாவது இனி தன்னுடைய மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ளும் மனதிடம் அவருக்கு வந்துவிட்டது. என்ன உடல்தான் அதற்கு ஒத்துழைக்குமோ என்னமோ?

இன்னுமே மின்னல் பூங்காவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டானா? அவர்களுக்கு நடந்தது உண்மையான திருமணமா?  இந்த சந்தேகம் தேவகியை பேயாய் பிடித்து ஆட்டியது. இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு மூலையில்  மின்னல் ஒரு சதவீதமாவது நல்லவனாக இருந்து விடக் கூடாதா? தன் வாழ்வை போல தன்னுடைய மகள் வாழ்வு ஆகி விடக்கூடாது.. அவளாவது சந்தோஷமாக திருமண வாழ்வை அனுபவிக்க வேண்டும். கணவன் குழந்தைகள் என்று சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ வேண்டும்.

ஒரு தாயாக தேவகியின் மனம் இதை தான் எதிர்பார்த்தது.காதில் போட்டிருந்த சிறிய தோட்டையும் அவர் அடகு வைத்திருப்பதை கண்ட பூங்காவுக்கு ஆத்திரம் அடக்க முடியாமல் வந்தது.. அம்மாவிடம் அதனை காட்ட முடியவில்லை. மின்னலிடம் அதைக் காட்ட முற்பட்டால் கூட  விளைவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அவளது வாழ்வே கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல இருந்தது.

முடிந்த அளவுக்கு கோழி ஆடு மீன் இறால் இப்படி மாப்பிள்ளைக்கு வகைவகையாக ஆக்கி பெரிய விருந்தே ஏற்பாடு செய்து விட்டார் தேவகி. மருமகனுக்கு சமைத்து போடுவது கூட அவருக்கு சிரமமாக இல்லை. சோலை பாண்டியன் உடன் அமர்ந்திருப்பது மட்டுமே அவரது வேதனையை பன்மடங்காக உயர்த்தியது. ஒவ்வொரு தடவையும் அவருக்கும் தேவகிக்கும் என்ன உறவு இருந்தது என்பதை அவர் மேலோட்டமாக சொல்ல அவமானத்தால் உயிர் போய் உயிர் வந்தது.

நல்ல வேலையாக சாப்பாட்டு நேரம் வரும்போது முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி சோலை பாண்டியன் சென்று விட்டார். நிம்மதியாக மருமகனுக்கு தலைவாழை இலை வெட்டி பரிமாறினார் தேவகி. முகத்தில் கடுப்போடு அதனை ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம்..  அமைதியாக அமர்ந்து அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவன் வெளியே கிளம்ப எத்தனித்தான். அவன் நன்றாக இருக்கிறது என பாராட்டியிருந்தால் கூட பூங்காவின் மனம் ஆறிருக்கும்.

எதுவும் பேசாமல் அவன் பாட்டிற்குச் செல்ல தேவகி தான் அவனை அழைத்தார். "மாப்பிள்ளை" நின்றானே ஒழிய என்னவென்று கேட்கவில்லை.

"அது.. ஏதோ என்னால முடிஞ்சது மாப்பிள.. தயவு செஞ்சு நீங்க இதை வாங்கிக்கணும்" தட்டில் தான் வாங்கி வந்த அனைத்தையும் அடக்கி  மின்னலின் முன்பு நீட்டினார் தேவகி.

தட்டையும் அவரையும் ஒரு பார்வை பார்த்தவன் பூங்காவை பார்த்தான்.. அவள் இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நடந்து கொண்டாள்.

" எதுக்கு இதெல்லாம்"

" இல்ல மாப்ள.. முறைன்னு ஒன்னு இருக்குல்ல.. "

" இங்க எல்லாமே அப்படித்தான் நடக்குதா.." தேவகிக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

அங்கே அசாதாரணமான அமைதி நிலவ என்ன நினைத்தானோ தனக்கான வேஷ்டி சட்டையை மட்டும் எடுத்துக் கொண்டான்..

" மாப்பிள்ளை.. நீங்க போட்டு இருக்கிற மாதிரி பெரிய மோதிரம் வாங்க எனக்கு சக்தி இல்லை. ஏதோ என்னால முடிஞ்சது அரை பவுன் மோதிரம்.. "

தேவகியின் கவலைப்படர்ந்த கண்களை சந்தித்தவன்"இதுவே போதும்.. "என்றான்.

"மாப்பிள்ளை" மார்பின் குறுக்கே கைகட்டி அவரை பார்த்தான்.

" நீங்க எதனால என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு  எனக்கு தெரியும்.. இது உண்மையான கல்யாணமா இல்ல  ஏதாவது உள்நோக்கம் இருக்கான்னு எனக்கு புரியல. ஏற்கனவே என் குடும்பம் அந்தர சிந்தரயா போய் கிடக்கு. எல்லாம் எனக்கு வாச்ச ஒருத்தனால வந்தது.. என்னோட நிலைமை என் பொண்ணுக்கும் வரக்கூடாது..

அவ வேற வழியே இல்லாம தான், அவளோட தங்கச்சிங்கள காப்பாத்த  சோலை பாண்டியன்.. " மேலே சொல்ல முடியாமல் தொண்டை குழி ஏறி இறங்கியது. 

" நானும்.. என் புருஷன் வாங்கி வச்சிட்டு ஓடுன கடத்துக்காக" இப்பொழுது கதறி அழுதே விட்டார் தேவகி..

"அம்மா" பூங்கா வேகமாக வந்து தேவகியை தாங்கிக் கொண்டாள்.

" இதெல்லாம் எதுக்கு உங்க கிட்ட நான் சொல்றேன்னா, நீங்க உயர்வா நினைக்கிற அளவுக்கு என்கிட்ட எதுவுமே இல்ல. பணம் காசு தான் இல்லன்னு பார்த்தா மானமும் இல்லை.. ஆனா நான் இதுவரைக்கும் என் மானத்தை தான் வித்துருக்கேனே நீ தவிர கடவுள் புண்ணியத்துல  என் பொண்ணுங்க மானத்துக்கு எந்த பங்கமும் வந்ததில்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரி  பூங்காவுக்கு வந்த ஆபத்தும் விலகி அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..

என் பொண்ண ஏத்துக்கோங்கனு நான் கேட்கல. அவளை நீங்க வச்சிருக்கீங்களோ வெட்டி விடுறீங்களோ எதுவா இருந்தாலும் தயவு செஞ்சு சட்டுனு சொல்லிருங்க. எதையாவது ஒன்ன மனசுல வச்சுக்கிட்டு என் பொண்ணு தப்பானவனு நெனச்சு அவள சித்திரவதை செய்யாதீங்க. அது தாங்குற தெம்பு எனக்கு கிடையாது.".. அம்மா அழுவதை கண்டு பூங்காவனத்திற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இவன் என்ன மனிதனா அல்லது மிருகமா?  மிருகத்திற்கு கூட இரக்கம் இருக்கிறது.

இந்த அளவிற்கு அவன் முன்பு மண்டியிட்டு அழும் பெண்ணை பார்த்த பிறகும் அவனது இதயம்  உருகவில்லை என்றால் இவன் மனித பிறவி என்பதற்கு என்ன ஆதாரம்?

" அம்மா உனக்கு அறிவு இருக்கா? மனுஷங்க கிட்ட போய் நீ அழுதா அதுக்கு ஏதாவது பயன் இருக்கும். மிருகத்துக்கிட்ட நீ சொல்லி அழுதா அதுக்கு என்னமா பயன் இருக்க போகுது. பேயா இருந்தா கூட மனசு இறங்கியிருக்கும். பேய விட மோசமானவங்க அம்மா இவனுங்க.."

"பூங்கா"

"கம்முனு இரும்மா நீ. இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவங்கிட்ட மண்டி போட்டு அழுது கிட்டு இருக்க.. அப்படி என்ன நடந்தர போது? படுக்க கூப்பிடுவானுங்க.. இவனுங்களுக்கெல்லாம் அது மட்டும் தானா தெரியும்.. இதோ இவன் நிக்கிறானே பேருக்கு தான் எனக்கு தாலி கட்டி இருப்பான்.. யார் கண்டாலும் எந்நேரம் வேணாலும் அந்த சோலை பாண்டியனுக்கு என்ன கூட்டி கொடுக்க இவன் தயங்க மாட்டான்.." சொல்லி வாய் மூடவில்லை கன்னமே பற்றி எரிந்ததைப் போல சுருண்டு போய் கீழே விழுந்தாள் பூங்காவனம்.

"ஐயோ பூங்கா" அலறி அடித்தபடி மகளை தாங்கி பிடிக்க ஓடினார் தேவகி. அவரைப் பிடித்து அந்தப் பக்கம் தள்ளிய மின்னல் கீழே விழுந்து எழ முயன்ற பூங்காவின் கூந்தலை பிடித்து தூக்கினான்..

"ஹா.. விட்றா விடு". அவனிடமிருந்து விடுபடப் போராடினாள் பூங்காவனம். அவள் கூந்தலை இன்னும் வலிக்க செய்யும் விதமாக இறுக்கமாய் பிடித்தவன் 

"வார்த்தை ரொம்ப முக்கியம் அம்மாடி.."என்றவாறு அவளை விடுவிக்க பளாரென்று மறு கன்னத்தில் அறைந்தான்..

அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை கையில் ஏந்தியவன்" இதுக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியுமான்னு எனக்கு தெரியாது. ஊரு உலகம் இதுக்கு என்ன அர்த்தம் சொல்லி வெச்சிருக்கோ அந்த அர்த்தம் மட்டும் தான் எனக்கு தெரியும்.. மூளை இருந்தா புரிஞ்சுக்கோ" அவளை விடுவித்தவன் வேகமாக வாசல் படி வரை சென்று

" இன்னும் ஒரு மணி நேரத்துல நான் திரும்பி வருவேன்.. கூட வரியா இங்கயே இருக்கியான்னு முடிவு பண்ணிக்கோ" மின்னல் வீரபாண்டியன் விறுவிறுவென வெளியேறி விட்டான்.

இரு பக்க கன்னங்களும் தீ பிடித்தார் போல எரிந்தது.  அவன் பேசி சென்ற வார்த்தைகள் மூளைக்குள் மின்னல் அடிக்க அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள் பூங்காவனம்..

அவன் என்ன சொல்ல விளைகிறான்? அப்படி என்றால் இந்த திருமணத்தை அவன் ஏற்றுக் கொண்டானா? அவனுடைய தகுதிக்கும் தராதரத்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத ஒரு பெண்ணை எப்படி வாழ்க்கை துணையாக அவன் ஏற்றுக் கொண்டான்?  பின் எதற்காக நேற்றிலிருந்து அவளை குத்திக் கொண்டே இருக்கிறான்?

மின்னலின் மீது பூங்காவுக்கு நம்பிக்கை வர மறுத்தது. ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அவன் இம்மாதிரி வார்த்தை ஜாலத்தை காட்டி விட்டு சென்றிருக்கிறான் என்பதை ஆணித்தரமாக நம்பினாள். ஆனால் தேவகிக்கு மின்னலின் மீது அபார நம்பிக்கை வந்தது..

மகளின் வாழ்க்கை தன்னை போல் ஆகி விடாது என்பதில் அவருக்கு அப்படி ஒரு உறுதி. தரையில் அமர்ந்திருந்த பூங்காவின் அருகே வந்து அமர்ந்தவர் அவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.

மெல்ல பூங்காவனத்தின் தலைமுடியை கோதி கொடுத்துக் கொண்டே" நான் கூட என்னமோ ஏதோனு பயந்து போய்ட்டேன். நல்ல வேளை மாப்ள நாம நெனச்ச மாறி கிடையாது.. உன் வாழ்க்கை இனிமே நல்லா இருக்கும்டி".. என்றவர் வேகமாக எழுந்து சாமி படத்தின் அருகே ஓடினார். விளக்கை ஏற்றி பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டார். கன்னங்களில் கண்ணீர் ஆராய் வடிந்தது. இத்தனை காலமாக அவர் வணங்கி வந்த தெய்வம் அவரை கைவிடவில்லை.

கண்மூடி மானசீகமாக ஏதேதோ பிரார்த்தனைகள் முணுமுணுத்தார். அவரின் உடலே நடுங்கியது. அனைத்தையும் தரையில் பார்த்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம். ஒரு பக்கம் தேவகியை நினைக்கும் போது அவளுக்கு எரிச்சலாக வந்தது.  எப்படி இந்த அம்மா இவ்வளவு சுலபத்தில் ஒரு ஆளை நம்புகிறாள்? அதுவும் அவன் ஒரு ஆண்.. இரண்டு ஆண்களால் அவள் வாழ்வே பாழாகிய பின்பும் எதற்கு இந்த நம்பிக்கை?

செல்வியும் காயத்ரியும் வீட்டிற்கு வந்தார்கள். வேகமாக பாயாசம் தயாரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார் தேவகி. விஷயம் கேள்விப்பட்டு செல்விக்கும் காயத்ரிக்கு மிகுந்த சந்தோஷம்.

"அக்கா.. என்னோட மாமா எம்பினு என் பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் நான் சொல்லுவேன். நான் எவ்வளவு ஹேப்பி தெரியுமா" பூங்காவை கட்டிக் கொண்டாள் காயத்ரி.

" அக்கா சொன்னா நீ திட்டுவேன்னு தான் நான் சொல்லல. உன்னோட அழகுக்கு மாமா தான் கரெக்ட்டு. ஆளு பார்க்க ஹயிட்டா வெயிட்டா சினிமா ஹீரோ மாதிரி இருக்காரு..எங்க அந்த சோழ பாண்டியன் கையில நீ மாட்டிக்கிவியோனு எவ்ளோ பயந்து போய்ட்டேன் தெரியுமா.. இப்போதான் சந்தோஷமா இருக்கு.. " தனக்கு வராத நம்பிக்கை எப்படி தன் குடும்பத்தினருக்கு வந்தது என்பது பூங்காவனத்திற்கு புரியவில்லை.

சொன்னபடியே இரண்டு மணி நேரத்தில் திரும்ப வந்தான் மின்னல் வீரபாண்டியன்.  வாசலில் நின்று

" என்ன முடிவு பண்ணிருக்க"அவன் கேட்க பெண் அமைதியாக நின்றாள். அவளின் அமைதி தேவகி வயிற்றில் புளியை கரைத்தது..

"பூங்கா"..

அம்மா தங்கைகளை பார்த்தவள் ஒரு சதவீதம் கூட அவன் மேல் நம்பிக்கை இல்லாமல் அவர்களின் சந்தோசத்திற்காக அவனோடு செல்ல சம்மதித்தாள்..

அவனின் பொறுமை துளியாய் கரைய"உள்ள வாங்க.."என்றழைத்து தன்னுடைய சம்மதத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினாள் பூங்காவனம்..உதடுக்கே எட்டாத புன்னகை ஒன்று ஆடவனின் இதழ்களில் தோன்றி நொடியில் மறைந்தது..

தொடரும்


தாகம் 18


கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்கென்று ஆடியதாம். பூங்காவனத்தின் நிலை அவ்வாறு தான் இருந்தது. இந்த ஒரு வாரத்தில் அவள் வாழ்வில் எத்தனை மாற்றங்கள்? அவள் ஓடியாடி வளர்ந்த வீடு தான்.. கண்ணை கட்டி விட்டால் கூட அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அவளுக்கு தெரியும். சுகமோ துக்கமோ அந்த வீட்டின் சுவரில் சாய்ந்து தான் பலமுறை ஆறுதல் தேடி இருக்கிறாள்.. அப்படி இருக்கையில் இப்பொழுது அந்த வீடே அவளுக்கு அன்னியமாய் போனது போன்ற பிரம்மை..

அதற்குக் காரணம் அவள் வீட்டில் சட்டமாக அமர்ந்து கொண்டு நாட்டாமை செய்து கொண்டிருந்த மின்னல் வீரபாண்டியன். பூங்காவனத்தின் சம்மதம் இல்லாமையே அவளை திருமணம் செய்து கொண்ட மாவீரன்.. சோலை பாண்டியன் கூறியதற்காக பூங்காவனத்தின் கழுத்தில் தாலி கட்டியவன், நேற்று அவள் கற்பை விட்டு வைத்ததே பெரிய விஷயம். அவன் நல்லவனா கெட்டவனா, எப்படி இதனை கண்டுபிடிப்பது என மண்டை குழம்பியவள் அமர்ந்திருக்கும் வேளையில் அவளை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து  குழப்பத்திற்கே மேலும் குழப்பம் சேர்கிறான்.

சட்டமாக பாய் விரித்து தரையில் அமர்ந்து கொண்டவன், " என்னத்த அப்படியே பாத்துட்டு நிக்கிறீங்க.. மறு வீட்டுக்கு மருமகன் வந்துருக்கேன். இந்நேரம் ரெண்டு பக்கமும் ரெக்கைய கட்டிக்கிட்டு நீங்க பறந்திருக்க வேணாமா. காணாததை கண்ட மாதிரி வாய பொளந்துகிட்டு நிக்கிறீங்க.." தேவகிக்கு அவன் பேச பேச மயக்கமே வந்துவிடும் போல. அவனின் தகுதியும் தராதரமும் தேவகியை வாயடைக்க செய்திருந்தது.

"அது வந்து.."

" அதான் வந்து உட்கார்ந்தாச்சே.. போங்க போய் சட்டுனு மாப்பிள்ளைக்கு விருந்து ஏற்பாடு பண்ணுங்க. இங்க தான் வந்து சாப்பிடணும்னு உங்க பொண்ணு ஒரு வாய் கூட காலையில இருந்து சாப்பிடல.. எல்லாரும் சொல்றாங்க மறு வீட்டு விருந்து வாழ்க்கையில மறக்க முடியாதுன்னு.. அது உண்மையா பொய்யான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கணும்.."

தேவகி கையை பிசைந்து கொண்டு பூங்காவனத்தை பார்த்தார். அவளுக்குமே மின்னல் பேசியது பெருத்த அதிர்ச்சி தான். அவளிடம் இதைப் பற்றி அவன் ஒரு வார்த்தை கூட கூறவில்லையே. மறு வீட்டு விருந்துக்கு மாமியார் வீட்டிலிருந்து வருத்தி அழைப்பார்கள். இங்கு ஆனால் அவனே வம்படியாக மாமியார் வீட்டுக்கு வந்து எனக்கு மறு வீட்டு விருந்தை ஆக்கிப்போடு என சட்டமாக அமர்ந்து விட்டான்.

தேவகி இன்னும் அசையாமல் இருப்பதைக் கண்ட மின்னல் ஒற்றைப் புருவத்தை, அதனை புரிந்து கொண்ட தேவகி உள்ளே சென்று மாப்பிள்ளைக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்..

" என்னத்த தண்ணிய மட்டும் கொடுத்து அனுப்பி விடலாம்னு பாக்குறீங்களா"..

"ஐயோ அப்படி இல்ல.. இதோ கொஞ்ச நேரத்துல சாப்பாடு ரெடி பண்ணிருறேன்".. நமட்டு சிரிப்பு சிரித்தான் மின்னல்.

கையை பிசைந்த தேவகி அடுக்கலைக்குள் புகுந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரின் மூன்று பெண்களும் உள்ளே வர

"ம்மா.. சத்தியமா அவன் இப்படி பண்ணுவானு எனக்கு தெரியாதும்மா.. இதுக்கும் மேல என்னால பொறுமையா இருக்க முடியாது. இனிமே இவனுக்கோ இல்ல அந்த சோலை பாண்டியனுக்கோ நாம பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது..

இன்னியோட இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்.."

"ஹேய் என்னடி செய்ய போற"பதறினார் தேவகி.

" நீ கம்முனு இரு" வேகமாக முன்னறைக்கு வந்தாள் பூங்காவனம்.

" இங்க பாருங்க" கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் முன்னே போய் நிற்க மின்னல் அவளை நிமிர்ந்து பார்த்த வேளை அந்த வீட்டிற்கு அலையா விருந்தாளியாக வந்தேன் என்றார் சோலை பாண்டியன்.

"எப்பா மின்னலு.." அவரின் குரல் கேட்டு மரியாதை நிமித்தமாக பவ்யமாக எழுந்து நின்றான் மின்னல். அவனின் கண்கள் இடுங்கியது. சோலை பாண்டியனின் குரலை கேட்டதும் தேவகி மற்ற இரு பெண்களையும் அடுக்கலையில் இருக்க கூறிவிட்டு வேகமாக வெளியே வந்தார்.

" என்னப்பா அப்படி பாக்குற.. நீ இந்த பக்கம் வந்திருக்கிறதா தகவல் வந்துச்சு.. மறு வீட்டுக்கு வந்திருக்க.. தேவகி கைப்பக்கத்தை  நீ சாப்பிட்டதில்லையே.. சாப்பிட்டு பாரு தேவாமிர்தம் மாதிரி இருக்கும்.. நானுமே சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது.. இல்ல தேவகி" அவர் எதைப் பற்றி கூறுகிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் தேவகிக்கு மருமகன் முன்னிலையில் கதி கலங்கி போனது.

அவமானம் பிடுங்கி தின்ன தலை குனிந்த படி நின்று கொண்டிருந்தார் தேவகி.

" எங்க மத்த ரெண்டு பொண்ணயும் காணோம்..வழக்கம் போல மறச்சு வச்சுட்டியா.." மின்னலின் பக்கத்தில் அமர்ந்து விட்டார் சோலை பாண்டியன்.. அவரைப் பார்த்ததும் பூங்காவுக்கு தலை முதல் கால் வரை பற்றி கொண்டு எறிந்தது. அவள் மின்னலிடம் பேச வந்ததை பேச முடியாமல் இப்பவும் விதி சதி செய்தது.

"எப்பா மின்னலு.. என்ன மறு வீட்டுக்கு வந்திருக்கியா.. சும்மா சொல்லக்கூடாது உன் மாமியா  அதான் தேவகி சமையல்ல பின்னி எடுத்துடுவா. அதுலயும் ஈரல் கறி வைப்பா பாரு அடடடா ஒரு மடக்கு சரக்கு ஒரு வாய் ஈரலு சொர்க்கம் போ.. என்ன தேவகி?" அப்பொழுதே மரணம் அழைந்திருந்தால் கூட தேவகி சந்தோஷமாக சென்றிருப்பார்.

" நீங்க இங்க என்ன பண்றீங்க.. நான் இங்க வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்.. என்னய்யா என்ன வேவு பாக்குறீங்களா" மின்னலின் பார்வை கூர்மை பெற்றது.

"மகனு ஆயிட்ட.. என்னோட வாரிசு நீ.. சட்டப்படி என்னோட வாரிசா ஆக்கறதுக்கு  எல்லா டாக்குமெண்ட்டும் ரெடி பண்ணியாச்சு.. ஒரு சைன் போட்டா போதும்.. என் மகனை பாதுகாக்கிறது ஒரு அப்பனோட வேலை தானே.. தேவகி நல்லவ தான்.. அவளோட பொண்ணுங்களும் அப்படிதான். ஆனா என்னைக்குமே பொம்பளைங்கள ரொம்ப தூக்கி வெச்சு ஆடக்கூடாது. காசுக்காக என்ன வேணாலும் செய்யுற காலம் இது..  என்ன தேவகி" ஒவ்வொரு முறையும் அவர் தேவகியை பேச்சில் இருக்க அம்மாவுக்கும் மகளுக்கும் அவமானத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது..

" சரி வந்தது வந்துட்டேன் தேவகி மருமகனுக்கு மட்டும் இல்ல எனக்கும் சேர்த்தே ஆக்கு.. முன்னாடி எல்லாம் இங்க வரப்போ எத்தனை மணியா இருந்தாலும் எனக்காக சாப்பாடு ரெடியா இருக்கும். கொடுக்கல் வாங்கல் இருக்க போக தான் அப்ப எல்லாம் அந்த கவனிப்பு. இப்ப பாரு நான் வந்து இவ்ளோ நேரம் ஆச்சு ஒரு வாய் தண்ணி கொடுக்க நாதியில்ல.. ".. மின்னல் தன் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த சொம்பை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

" அடுத்தவங்களுக்கு தண்ணி காட்டுற மாதிரி எனக்கும் காட்டி அனுப்பிடலாம்னு பார்க்காத. நான் இன்னைக்கு இங்க சாப்பிடலாம்னு முடிவோட வந்து இருக்கேன். என்ன தேவகி" மின்னலை ஏறிட்டு பார்க்க கூட தேவகியின் உடம்பில் பலம் இல்லை.

" பூங்கா நீ இங்க பாரு நான் இப்ப வந்துடறேன்.."

"ம்மா நீ எங்கம்மா போற கைல காசு இல்லாம.."

" அன்னைக்கு நீ கொடுத்தது இருக்கு.."

" அத தான் மத்த கடனை அடைக்க குடுத்துட்டேனு சொன்ன.."

" இருடி நான் வரேன்.. அதுவரைக்கும் உன் தங்கச்சிங்க ரெண்டு பேத்தையும் வெளிய விடாத.. முடிஞ்சா சரோஜா வீட்டுக்கு அனுப்பி விட்ரு" பூங்கா தடுக்க தடுக்க வேகமாக வீட்டை விட்டு வெளியேறினார் தேவகி.

அங்கே சோலை பாண்டியன் நேராக அடுக்களைக்கு சென்று விட்டார்.. செல்வியும் காயத்ரியும் அவரைக் கண்டதும் என்ன பேசுவது என்று விழித்தனர்.

" என்னம்மா ரெண்டு பேரும் இங்க நிக்கிறீங்க.. வீட்டுக்கு விருந்தாடிங்க வந்தா இப்படித்தான் மச மசனு நிப்பீங்களா.. என்ன வேணும் மாமா? ஏது வேணும் மாமானு கேட்டு கேட்டு செய்ய வேணாம்..ஹேய் சின்ன குட்டி இது என்னடி உன் கன்னத்துல" யாரும் எதிர்பாக்காத நேரம் காயத்ரியின் கையைப் பிடித்து இழுத்து அவள் கன்னத்தில் வந்திருந்த முகப்பருவை ஒற்றை விரல் கொண்டு தொட்டு கேட்டார்.

காயத்ரி பயந்து அவர் கையை தட்டி விட முயல, அதற்குள் வேகமாக அங்கே வந்து விட்டாள் பூங்காவனம்..

"ஹேய் சனியனே எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு அறிவே இருக்காதா.. ஃப்ரெண்ட் வீட்டுக்கு போனும் தானே சொன்ன.. என்ன மயிருக்கு இங்க நீ இருக்க.. உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு.. தேவையில்லாத பாக்காத. சொன்ன பேச்சை கேக்கல இன்னொரு தடவை செருப்பால அடிப்பேன்.." காயத்ரிக்கு அக்கா தன்னையே ஏசியதும் கண்கள் கலங்கிவிட்டது. ஆனால் புத்திசாலியான செல்விக்கு பூங்கா காயத்ரியை பேசவில்லை என்பது நன்றாக புரிந்தது.

அவளுக்கு மட்டுமல்ல சோலை பாண்டியனுக்கும் பூங்கா காயத்ரியை சொல்வது போல தன்னை சாடுகிறாள் என்பது நன்றாக புரிந்தது.. காயத்ரியை பிடித்திருந்த தனது பிடியை மெல்ல தளர்த்தினார்.

அதற்குள் மின்னலும் எழுந்து வந்து விட்டான். "ஐயா அந்தத் டெண்டர் விஷயமா உங்கள குடச்சல் கொடுத்துட்டு இருந்தானே பாபு அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுருச்சு"..

" அந்த நாய் எங்க பதுங்கி இருந்தாலும் அவனை இழுத்துட்டு வந்து குரவலிய புடுங்கி எறிஞ்சா தான்டா என் மனசு ஆறும்.. எத்தனை கோடி லாஸ் ஆச்சு அந்த நாயால.. கண்ட கண்ட நாயெல்லாம் நான் யாருன்னு தெரியாம குரல் ஒசத்தி பேசுது.. காட்டுறேன் நான் யாருன்னு"

சோலைப் பாண்டியன் வேகமாக கூடத்திற்கு வர பூங்காவனத்தை ஒரு பார்வை பார்த்தவன் இங்கே கண் கலங்க நின்று கொண்டிருந்த காயத்ரியை நோக்கினான்..

பர்ஸை திறந்து அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்தவன் ஐநூரை காயத்ரி கையில் கொடுத்தான்..

அவள் வாங்க பயந்து பூங்காவனத்தை பார்க்க" அங்க என்ன பார்வை.. இந்தா புடி.. இந்தாம்மா" செல்வி கையிலும் ஐனூறை கொடுத்தான்..

"ரெண்டு பேரும் உங்க ஃப்ரெண்ட்டு வீட்டுக்கு போயிட்டு பிடிச்சது ஏதாவது வாங்கி சாப்பிட்டுட்டு வாங்க.."

"அக்கா" செல்வி மின்னல் கொடுத்த பணத்தை கையில் வைத்துக் கொண்டு விழித்தாள்.

"ஹேய்.. உன் தங்கச்சிங்க ரெண்டு பேத்தையும் இங்க இருந்து போக சொல்லு.." முடியாது பிடிக்காவிட்டாலும் வேறு வழி இல்லாமல் தங்கைகள் இருவரையும் அங்கிருந்து கிளப்பி விட்டாள் பூங்கா..

"நீயும் வெளிய வராத".. எச்சரித்துவிட்டு கூடத்திற்கு சென்றான் மின்னல் வீரபாண்டியன். அவனது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியாமல்  மூன்றாம் முறையாக தலைசுற்றி நின்றாள் பூங்காவனம்.


தாகம் 17


இதழ் முத்தம் நீண்டு கொண்டே சென்றது. அவனிடமிருந்து விடுபடப் போராடிய பூங்காவனம் ஒரு கட்டத்திற்கு மேல் மின்னலிடம் அடங்கிப் போக ஆரம்பித்தாள்.

" எதுக்கு பூங்கா நீ துள்ளிக்கிட்டு இருக்க. எப்படி இருந்தாலும் இதுதான் நடக்க போகுது. இதுக்குத்தானே உன் மனச நீ தயார்படுத்தி வெச்சுருந்த. இப்ப என்ன அதோட மொத கட்ட நிகழ்ச்சி நடந்துகிட்டு இருக்கு. பேசாம அவனுக்கு ஒத்துழைச்சு போ.." அவள் அமைதியாக நின்ற பிறகு  உடனடியாக அவளை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளினான் மின்னல்.

புரியாமல் அவனை  பார்க்க"என்ன ஈஸியா வளஞ்சிட்ட.. எனக்கு பிடிக்காது"..அவன் படுத்து விட்டான். இப்பொழுது என்ன செய்வது என அவளுக்கு புரியவில்லை. அவனருகே கட்டிலில் படுக்கவா.. அல்லது தரையில் படுத்துக்கொள்ளவா.. சற்று நேரம் அமைதியாக நின்றவள் தரையில் படுத்துக் கொள்வதே சிறந்த முடிவு என்று வெறும் தரையில் படுத்து விட்டாள்..

மின்னலுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. அசதி அலைச்சல் இரண்டும் சேர்ந்து அவனைப் படுத்த வேகத்தில் உறக்கத்திற்குள் கொண்டு சென்றது. நல்ல உறக்கத்தில் யாரோ அனத்தும் சத்தம் கேட்டது. படக்கென கண்விழித்து பார்த்தவன்  தரையில் ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்த பூங்காவனத்தை பார்த்தான்.

அவள் இன்னும் உறங்கவில்லை. ஏசி அறையில் பனிக்கட்டி பாறை இடுக்கில் படுத்து உறங்குவதை போன்ற பிரம்மை.. குளிர் உடலை வாட்டியது..உறக்கம் வரவில்லை. அதற்கு மாறாக இங்கிருந்து எப்படி தப்பி செல்வது? அம்மா தங்கைகளை எவ்வாறு காப்பாது என்பது ஒன்றே அவளின் சிந்தனையில் ஓடியது.குளிரில் அனத்த வேறு தொடங்கி விட்டாள்.

"ஹேய்" கட்டிலில் இருந்து இறங்காமல் குரல் மட்டும் கொடுத்தான் மின்னல். முதல் தடவை பூங்கா அசைந்து கொடுக்கவில்லை. மறு தடவை குரலை சற்று அழுத்தம் கூட்டி அழைக்க வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

"என்ன".. கண்களை திறக்காமலேயே அவன் பேச 

"என்ன" அவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

"ஏன்"..

"ஏன்னா என்னத்த சொல்ல.. படுபாவி எதை பத்தி கேக்குறான்னு தெரிய மாட்டேங்குது.." அவள் பேந்த விழித்துக் கொண்டு அமர்ந்திருக்க 

"கேக்குறேன்ல என்ன".. சத்தியமாக அர்த்த ராத்திரியில் குளிரில் நடுங்கி கொண்டு உறங்க முயற்சித்தவளை எழுப்பி அவன் கேள்விகள் தொடுக்க அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"ப்ச் எதுக்கு அனத்திட்டு இருக்க"..

" எது நானா.. இது எப்ப நடந்துச்சுனு தெரியலையே.. " சற்று நேரம் யோசித்தவள் " ஒருவேளை தூக்கத்துல.. இல்ல இல்ல குளிர்ல" அவள் சொல்லி முடிப்பதற்குள் தலையணை ஒன்று பறந்து வந்து அவள் முகத்தில் பட்டது.

" அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரியில குடைபிடிப்பானாம்" மின்னல் வாய்க்குள் முனங்கியது  தெள்ளத் தெளிவாக அவளுக்கு கேட்டது.அவன் இன்னும் ஏசியை குறைத்து வைத்தான்.

அவமானம் பிடுங்கி தின்றது.. இன்னொரு பக்கம் குளிர் வாட்டியது. கட்டாந்தரையில் பாய் விரித்து படுத்திருந்த போது கூட  நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் பூங்காவனம். சோலை பாண்டியன் என்ற ஒருவனால் அவள் வாழ்வே தலைகீழாக மாறி விட்டது.

ஆத்திரத்தில் தலையணையை தூக்கிப் போட்டவள்  புடவை தலைப்பை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு  குளிரை கட்டுப்படுத்த முயன்றாள்.. இறுதியாக விடிய விடிய அவள் விழித்திருந்தது மட்டும்தான் பாக்கி. எப்போதடா விடியும் என்று காத்திருக்க பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விட்டான் மின்னல்.

சுவரில் பல்லியைப் போல ஒட்டிக் கொண்டிருந்த அவளை ஒரு பார்வை பார்த்தபடி ஏசியை அடைத்து விட்டு வெளியே சென்றான். அதன் பிறகு தான் உயிரே வந்தது பூங்காவனத்திற்கு. சூரிய நமஸ்காரம் தேகப் பயிற்சியை முடித்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழையும் போது  தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் பூங்கா. புடவை முந்தானை விலகி, பாவாடை தொடை வரை ஏறிருந்தது.

எப்போதும் அவனுக்கு இந்த நேரத்தில் சரியாக  அருகம்புல் சாறு கொண்டு வரும் கமலி  அறைக்குள் நுழைந்து கீழே படுத்திருந்த பூங்காவை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டார்..

"கண்ணு"..

"அங்க வெச்சிட்டு போ".. டேபிள் மீது தட்டை வைத்தவர் ஓடியே விட்டார். கதவை சாற்றி வந்தவன் அரைகுறையாக உறக்கத்தில் உருண்டு கொண்டிருந்த  பூங்காவை பார்த்துக் கொண்டே வேகமாக குளியல் அறைக்குள் சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து வந்து அவள் மேல் ஊற்றினான். அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் பூங்கா.

காலி பக்கேட்டை அவள் மீது வீசியவன்" பழக்க தோஷம் போல.. இதுக்கெல்லாம் இந்த மின்னல் மயங்கமாட்டான்.." அவன் எதைப் பற்றி கூறுகிறான் என்பது புரியாமல் விழித்தவள் சற்று தன்னை குனிந்து பார்த்தாள். தீயினார் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு.. எவ்வளவு உண்மை?

ஒரே வார்த்தையில் அவளது ஒழுக்கத்தையே தூள் தூளாக உடைத்து விட்டானே. அந்த அளவிற்கு அவள் என்று நடந்து கொண்டாள்? சுட சுட அவனைக் கேட்டு விட நா துடித்தது. மூளை அவளை எச்சரிக்கை செய்தது.

"வேணா பூங்கா.. இது உனக்கான நேரம் இல்லை.. இப்ப நீ எது பேசினாலும் அது திரும்ப உனக்கே பாதிப்பா வரக்கூடும். வாய மூடிக்கிட்டு உன் வேலையை பாரு".. பொங்கி வந்த கண்ணீரை அடக்கியவள் எழுந்து நின்றாள்.

" ஏய் அந்த இடத்தை சுத்தம் பண்ணிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வர.. " அடுத்தடுத்து அதிகாரமாக அவன் கட்டளைகள் போட எதிர்த்து பேச துணிவின்றி, அவன் சொன்னதை செய்தாள் பூங்காவனம்..

குளித்து முடித்துவிட்டு அவனிடம் தெளிவாக பேசி விட வேண்டும்.. ஒருவேளை கிளம்பி வெளியே எங்கேயும் சென்று விடப் போகிறான். வேகமாக குளித்துவிட்டு வெளியே வந்து பார்க்க  இடையில் வரும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு நாட்டு நடப்புகளை யூட்யூபில் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

அவளின் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தவன் "கீழ இரு".. என்று விட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான். அவனிடம் பேச முடியாத கடுப்பில் தலையை வாரி விட்டு வைக்க பொட்டு இல்லாததால் கழுவி துடைத்த முகத்தோடு  கீழே இறங்கி சென்றாள்..

கமலி சமையலறையில் இருந்தார். அமைதியாக தன் பின்னே வந்து நின்று கொண்டிருக்கும் பூங்காவனத்தை திரும்பிப் பார்த்தவர் " என்ன கண்ணு இப்பதான் எந்திரிச்சு வரியா.. காபி குடிக்கிறியா இல்ல டீயா" வேலையில் மும்பரமாக இருந்தார்.

"இல்ல ஒன்னும் வேணா"..

"சரி.. மின்னலு வந்ததும் டிபன் சாப்பிட உட்கார்ந்துடும். நீயும் கூட உட்கார்ந்து சாப்பிடு.." அதற்கும் அமைதியாகவே நின்று கொண்டாள் பூங்கா.

சற்று நேரத்தில் மின்னல் வீரபாண்டியன் கீழே வந்தான். நின்று கொண்டிருந்த பூங்காவை பார்த்துக் கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்தவன்

"க்கா" என்றழைக்க வேகமாக ஓடி வந்தார் கமலி. சுட சுட உணவுகள் அவனுக்கு பரிமாறப்பட்டது..

" நீயும் வா கண்ணு.. இப்படி உட்காரு.. " கமலி மட்டும் தான் அவளை அழைத்தார்.. பூங்கா ஒரு அடி எடுத்து வைக்க அவளை அழுத்தமான பார்வை பார்த்தான் மின்னல். அடுத்த அடி எடுத்து வைக்க கால் வரவில்லை அவளுக்கு..

இதனை கவனித்த கமலி அமைதியாக மின்னலுக்கு மட்டும் சாப்பாடு பரிமாறினார்.. அவன் அமைதியாக சாப்பிட்டு முடியும் வரை அவமானத்தோடு தலை குனிந்து நின்று இருந்தாள் பூங்காவனம்..

சாப்பிட்டு எழுந்தவன் " சீக்கிரம் சாப்பிட்டு வா" வெளியே போஷம் போட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை பார்ப்பதற்காக சென்று விட்டான்.  ஏழையாக இருந்தாலும் மதிப்போடு வாழ வேண்டும் என்று நினைத்தவளுக்கு  கடவுள் இம்மாதிரியான வாழ்க்கையை கொடுத்து விட்டாரே.

" நீ வாமா வந்து உட்காரு.. " கமலி அவளுக்கு தட்டு வைக்க  சாப்பாடு வேண்டாமென மறுத்து விட்டாள்..

" அவன் பேச்சை மீறுனா அவனுக்கு பிடிக்காது.. தயவு செஞ்சு கொஞ்சமாவது சாப்பிடு.." கமலி எவ்வளவு கூறியும் பூங்கா கேட்கவில்லை.

அரை மணி நேரத்தில் வீட்டிற்குள் வந்தான் மின்னல் வீரபாண்டியன். " சாப்டாச்சா" தலைகுனிந்த படி அவன் முன்பு நின்று கொண்டிருந்தாள் பூங்கா..

ஐந்து நிமிடங்கள் கடந்தும் அவள் பதில் சொல்லாமல் இருக்க அடுத்த நொடி அவள் பாதத்தின் அருகே பெரிய பூ ஜாடி ஒன்று பறந்து வந்து விழுந்து நொறுங்கியது.. பூங்காவனம் பதறி அடித்து விலக  " நான் கேட்டா எனக்கு பதில் வரணும்".. இத்தனை அளவு கோபத்தை அவள் மின்னலிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

தலை தானாக இல்லையென ஆடியது.. கண்கள் இடுக்கி அவளைப் பார்த்தவன்
"வா" ஒற்றை வார்த்தையோடு முன்னே நடக்க அவனை பின் தொடர்ந்தாள் பூங்கா. காரில் கூட  பின் இருக்கையில் தான் அவள் அமர்ந்திருந்தாள்..

வண்டி நேராக அவளின் அம்மா வீட்டிற்கு சென்றது. ஏரியாவை பார்த்ததுமே பூங்காவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இவனே நம்மளை அத்துவிட்டு போயிருவானோ. கார் நின்றதும் புரியாமல் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை இறங்க கூறினான் மின்னல்.

காரில் இருந்து பூங்கா இறங்க அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  வேகமாக அவளை நலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். வாசலில் சத்தம் கேட்டு முதலில் எட்டிப் பார்த்தது காயத்ரி தான்.

"ஹை அக்கா.. அம்மா அக்கா வந்துருக்கா" வேகமாக அக்காவிடம் ஓடினாள் காயத்ரி. அக்கா என்ற வார்த்தையை கேட்டதும் தேவகியும் செல்வியும் விழுந்தடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். பூங்காவை சுற்றி முழித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினரை விலக்கி அவள் குடும்பத்தினர் அவளை கட்டிக் கொண்டார்கள். அங்கு மின்னல் என்ற ஒருவன் நின்று கொண்டிருக்கிறான் என்பதை பற்றி அந்தப் பெண்களுக்கு கவலை கிடையாது..

சுற்றி இருந்த கூட்டத்தினர் மின்னலை பார்த்து அடையாளம் கண்டு தங்களுக்குள் கிசுகிசுக்க"தேவகி நல்லா இருக்கே நீ பண்றது.. மருமகன் வீட்டுக்கு வந்து இருக்காரு.. அவர கவனிக்காம என்னமோ இப்பதான் உன் பொண்ண புதுசா பாக்குற மாதிரி கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வச்சிட்டு இருக்க.." பக்கத்து வீட்டு சுமதி தேவகி தோளை இடிக்கும் தான் அங்கே ஒருவன் நின்று கொண்டிருப்பது தேவகிக்கு தெரிந்தது..

முகத்தில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்தபடி வீடு தேடி வந்த மருமகனை "வாங்க.. வாங்க  மாப்பிள்ளை.. தம்பி" வரவேற்கச் சொன்னால் உளறி கொட்டினார் தேவகி.

கூட்டத்தை கண்களால் அளந்து கொண்டே தேவகி வீட்டிற்குள் நுழைந்தான் மின்னல்.

" என்னடி திடீர்னு இவன் உன்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்கான்.. "

" எனக்கும் தெரியலம்மா ஒரு வேளை காதும் காதும் வெச்ச மாதிரி ஏதாவது தொகையை கையில கொடுத்து பைசல் பண்ணி விட்டுட்டு போயிருவான் போல.".. சொந்த வீட்டிற்குள்ளேயே  கேள்வியோடு நுழைந்தார்கள் பெண்கள் நால்வரும்.

தொடரும்


தாகம் 16


பூங்காவனத்திற்கு மாற்றுத் துணிகளை எடுத்து வந்து கொடுத்தார் கமலி.. புரியாமல் பார்த்த பூங்காவனத்திடம்  " தம்பி தான் உனக்கு மாத்து துணி  வாங்கியாந்து கொடுக்க சொன்னுச்சு. இப்பதான் கடையிலிருந்து ஆளு வந்துச்சு."..

" அங்க வச்சுட்டு போங்க"

" கண்ணே எப்படியோ உங்க அம்மா வந்து கொஞ்சம் சாப்பாடு ஊட்டி விட்டுட்டாங்க. நான் ஒரு கிளாஸ் பால் எடுத்துட்டு வரேன் அதையும் குடிச்சிடுறியா.." அதிலே ஏதாவது கலந்து இருக்கிறதா என்று சுட சுட கேட்க வாய் துடித்தது. இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் பூங்கா.

" பரவால்ல அக்கா வயிறு ஃபுல்லாச்சு.." கமலி பூங்காவனத்தை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றார்.

" இந்த வீட்ல யாரையும் நம்ப முடியாது. நம்பவும் கூடாது. அம்மா சொன்னது தான் சரி. பூங்கா நீ எந்த தப்பும் செய்யல உன் வாழ்க்கையை வாழாம சாகறதுக்கு.கூலி வேலை செஞ்சாவது அம்மா தங்கச்சிங்கள காப்பாத்துற அளவுக்கு உன் மனசுல தெம்பு இருக்கு. ஆனா அது செய்யவிடாம தடுக்க எவ்ளோ இடைஞ்சல்.

இனிமே எத பத்தியும் கவலைப்பட கூடாது. குழந்தைகளோட பசிக்கு தன்னோட உடம்பு சதையை வெட்டிக் கொடுக்குற தாய் மாதிரி என் அம்மா தங்கச்சிங்களுக்காக என் உடம்ப பணயம் வைக்குறேன்.. ".. குளித்து முடித்து கமலி கொடுத்துச் சென்று சேலையை உடுத்திக் கொண்டாள் பூங்காவனம்.

ரத்த சிவப்பு நிற சேலை அவளது மஞ்சள் நிறத்திற்கு அழகாய் பொருந்தியது.. நெற்றியில் பெரிதாய் பொட்டு வைத்து உச்சந்தலையில் குங்குமம் வைத்து ஈரக் கூந்தலை விரித்து விட்டபடி கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். மீண்டும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் கமலி. அவர் கையில் நெருக்கமாக தொடுத்த மல்லிகைச் சரம்..

"இந்தாடா கண்ணு பூ வெச்சிக்கோ".. பூங்காவனம் அவரை ஒன்றும் சொல்லவில்லை. கவலையே வந்து ஒரு ஹேர் பின்னை கொண்டு இரு பக்க செவி அருகே இருந்தும் சிறிது முடியை எடுத்து நடுவே கிளிப் குத்தி தான் கையோடு கொண்டு வந்திருந்த மல்லிகை சாரத்தை வைத்து விட்டார்.

" ரொம்ப அழகா இருக்கடா.. என் கண்ணே பட்றும் போல.." நெட்டி முறித்து விட்டு கமலி சென்று விட அமைதியாக அமர்ந்திருந்தாள் பூங்காவனம். மணி இரவு ஒன்பதாவது பத்தானது  பதினொன்று ஆனது. மின்னலுக்காக காத்திருந்த பூங்கா எப்போது உறங்கினால் என்று அவளுக்கே தெரியவில்லை.

அலுவலக வேலைகளை முடித்துவிட்டு இரவு ஒரு மணி போல வீட்டிற்கு வந்தான் மின்னல்.. வழக்கம்போல அவனுக்காக உறங்காமல் காத்திருந்தார் கமலி..

"வாப்பா மின்னலு.. இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கக் கூடாது..பாவம் உன் பொண்டாட்டி ரொம்ப நேரம் உனக்காக காத்திருந்தா. தூங்கிருப்பாளோ என்னவோ." அரை தூக்கத்தில் பேசினார் கமலி.

"நீ சாப்பிட்டு தூங்கலையா.. எத்தனை தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேன்"

" அது என்னவோ ராத்திரி எந்நேரம் ஆனாலும் உன்னை பார்த்தா தான் நிம்மதியா இருக்கு.. சரி நீ போய் கை கால் கழுவிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்"

" அவ சாப்பிட்டாளா"

" எங்க மொத அவங்க அம்மா வந்திருந்தாங்க. மக சாப்பிடாம இருப்பான்னு தெரிஞ்சே கையோட சோத்து கூடைய கையோட தூக்கிட்டு வந்திருச்சு அந்தம்மா.. தாயும் மகளும் என்னமோ குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்க.. அப்புறம் கொண்டு வந்த சோத்த மகளுக்கு ஊட்டிட்டு அந்தம்மா கிளம்பி போயிருச்சு.. சாப்பாடு இங்க வந்து சாப்பிடுறியா இல்ல மேல கொண்டு வரட்டுமா.. " கண்ணை கசக்கினார் கமலி.

" மேல கொண்டு வந்து வச்சிரு.." சொல்லிவிட்டு வேகமாக படியேறி தன் அறைக்கு சென்றான் மின்னல்.. வழக்கமான அவனது அறை தான். வழக்கத்திற்கு மாறானது அங்கே பூங்கா மட்டும்தான்.

அவனது கட்டிலில் சாய்ந்து உரிமையாக படுத்து உறங்க பயந்து கொண்டு கட்டில் விளிம்பில் தலை வைத்து தரையில் அமர்ந்தபடியே உறங்கி இருந்தாள்.. அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன்  விளக்கை கூட போடாமல் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

அதற்குள் கமலி சாப்பாடு எடுத்து வந்து அறையின் விளக்கை போட  அப்போது கூட பூங்காவின் ஆழமான உறக்கம் களையவில்லை.. அவரும் அவளை எழுப்பு முயற்சிக்காமல் மேஜை மீது தட்டை வைத்து விட்டு அறையை விட்டு வெளியேறினார்.  சற்று நேரத்தில் வெளியே வந்த மின்னல் கவனம் முழுவதும் பூங்காவின் மேலே பதிந்திருந்தது. ஒரு தடவை அறையை பார்வையால் அலசினான். உடைந்திருந்த கண்ணாடியை தவிர  மற்ற பொருட்கள் யாவும் வைத்தது வைத்தபடி இருந்தது..

ஈரத் துண்டால் அவளை சுண்டியடித்தான்  மின்னல் வீரபாண்டியன்.. சுளீரென்று அடி விழ வேகமாக கண் திறந்து பதறி எழுந்தாள் பூங்காவனம்.

எதிரே அமைதியான முகத்தோடு நின்று கொண்டிருந்தான்  மின்னல் வீரபாண்டியன். வீரபாண்டியன் என்பது மட்டும்தான் அவனது பெயர். மின்னல் அவன் மின்னலைப் போல நொடியில் ஒரு வேலையை செய்து முடிப்பான் என்பதால் கட்சியின் சேர்ந்த பின் அவனுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி. அதுவே பின்னாளில் அவனை மக்கள் அறிந்து கொள்ள பெரிதும் உதவியாக அமைந்தது.

ஆத்திரத்தை உள்ளே மறைத்துக் கொண்டு நிர்மலமான முகத்தோடு அவன் முன்பு நிற்க படாத பாடு பட்டாள் பூங்காவனம்.. ஐந்து நிமிடங்கள் ஆகியும் அவளது நிலையிலும் மாற்றமில்லை, அவனும் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்..

" ஒருவேளை நின்னுட்டு தூங்கிட்டானோ.. " குழப்பத்தோடு பூங்காவனம் ஏறிட்டு பார்க்க மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு வைத்த கண் எடுக்காமல் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல். தாடிக்குள் ஒளிந்திருந்த அவனது முகமும்  கரும்பாவை அசையாமல் அவளை பார்த்த விதமும்  உள்ளுக்குள் திகிலூட்ட வேகமாக மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.

"நாசமா போறவன் எப்படி குறுகுறுன்னு பார்க்கிறான் பாரு.."

" பத்தினியா" திடீரென்று ஒலித்தது அவனின் குரல்.. ஏறிட்டு அவனைப் பார்த்தவள் புரியாமல் விழிக்க

" இல்ல சாபம் கொடுக்குறியே பத்தினியானு கேட்டேன்.." அவனின் கேள்வியில் பூங்காவனத்திற்கு தலை முதல் கால் வரை பற்றி எரிந்தது.

" இன்னும் கொஞ்ச நேரத்துல அதை தெரிஞ்சுக்க தானே போற.. ஸாரி போறீங்க".. அவனின் புருவ மேடு ஏறி இறங்கியது..

" உனக்கு ஓகே"

பூங்காவனம் அமைதியாக இருந்தாள்.. அந்தக் கேள்விக்கு அவளால் மனப்பூர்வமாக பதிலளிக்க முடியவில்லை. பொய் சொல்லவும் நாக்கூசியது. உடனே அவன் முன்பு கூசி கூனிக்குறுகி ஒடுங்கி நிற்பதை போல உணர்ந்தாள் பூங்காவனம்..வைத்த தனது கடினமான பார்வையால் மேலும் சற்று நேரம் சிரமத்திற்கு ஆளாக்கி விட்டு  தரையில் சம்மனமிட்டு அமர்ந்தான் மின்னல்.

" எடுத்துட்டு வா"

"சாப்பாடு" அவனின் பார்வையை தொடர்ந்து மேஜை மீது வைக்கப்பட்டிருந்த உணவுப் ட்ரேயில் அவளின் பார்வை விழுந்தது. சென்று எடுத்து வந்து நின்றாள்.

" சாமி கும்பிடுரியா.. சாப்பாட்டை கையில வச்சுட்டு. வை" அவளுக்கு பேராச்சரியமாக இருந்தது. அந்த அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்தது அவளின் கண்கள். இருவர் அமர்ந்து உண்ணும் அளவிற்கு சின்னதாக டீ டேபிள் வேறு ஒரு ஓரத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. சோபா சேட் எனக்கென்ன என்று கிடந்தது. அப்படி இருக்கையில் எதனால் இவன் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?

" எனக்கு எந்த விஷயத்தையும் ஒரு தடவை சொல்லித்தான் பழக்கம்" அவன் எங்கே அமர்ந்து சாப்பிட்டால் தனக்கு என்ன என்று தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவள் வேகமாக அவனருகே தட்டை வைத்தாள்..

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளும்  அங்கே வெறுமனே நிற்பதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு கவளத்தையும் அவளை பார்த்துக் கொண்டே அள்ளி வாயில் வைத்தான் மின்னல்.. இறுதியாக அவளை பார்த்துக் கொண்டே ஒவ்வொரு விரலாக வாய்குள் விட்டு அவன் சப்பு கூட்ட சேலையை இழுத்துப் பொருத்திக்கொண்டு எங்காவது கண்காணாத தேசத்திற்கு ஓடி விடலாமா என்று கூட இருந்தது..

சாப்பிட்டு முடித்தவன் எழுந்து தட்டை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றான். தட்டை அலசி வந்து மீண்டும் அதே டிரேயின் மீது வைத்தான். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பூங்காவுக்கு  அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்தாலே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.

ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன்  சாவகாசமாக  கட்டிலில் அமர்ந்தான். வெறும் கைலி மட்டும் அணிந்திருந்தவனை பார்க்கையில் இப்பொழுது இன்னும் பயம் அதிகரித்தது.

" உன் பேரு என்ன" பூங்கா மயங்கி விழாத குறை தான். பெயர் கூட அறியாமலா அவளை திருமணம் செய்து கொண்டான்..

அவள் யோசித்துக் கொண்டு அமைதியாக நிற்க..

"ம்ம்ம்"

"பூங்காவானம்"..

"என்ன"

"ச்சே பூங்காவனம்" அவளுடைய பெயரே மறந்து விட்டது பூங்காவுக்கு.

"வயசு"..

"இருவது".. என்றதும் அவளை ஏற இறங்க பார்த்தான் மின்னல்..

"சைஸ்சு".. மீண்டும் லைட்டர் ஒலி மட்டும் அந்த அறையில் கேட்டது..

அதற்கு மேல் பூங்காவனத்தினால் பேசாமல் இருக்க முடியவில்லை. என்ன ஆகிவிடப் போகிறது மிஞ்சி மிஞ்சி போனால் உயிர் போகும். உயிர் போகப் போகிறதோ அல்லது மானம் போகப்போகிறதா?.. இரண்டில் எதுவோ ஒன்று இப்பொழுது போகப்போவது உறுதி. அது எதுவாக இருந்தாலும் இவனை சுடச்சுட நான்கு வார்த்தை கேட்காமல் போகக்கூடாது.

" இப்படிக் கேட்க உங்களுக்கு வெக்கமா இல்ல.. ஓட்டு வாங்க வரும் போது மட்டும் பெண்கள் நம் நாட்டின் கண்கள். பாகுபலி மாறி பொம்பளைங்கள யாராவது தொட்டா அவன் கையை இல்ல தலையை வெட்டனும்னு வீர தீரமா வசனம் பேசிட்டு  அந்த சோலை பாண்டியனுக்கு கைக்கூலியா இருக்கீங்க. அது உங்க சொந்த விஷயம்.

ஆனா உங்களை நம்பி ஓட்டு போட்ட முட்டா ஜனங்கள்ள நானும் ஒருத்தி. கொஞ்சமாவது எங்க நம்பிக்கையை மதிச்சு நடங்க. உங்க தொகுதியை சேர்ந்தவ தான் நானும்.. வெளியிலிருந்து பார்க்கிறப்ப எல்லாமே நல்லா தான் இருக்கு உள்ள வந்து பார்த்தா தான் அதோட நாத்தம் தெரியுது.. இப்ப என்ன உங்களுக்கு  என் உடம்பு வேணுமா.  அந்த உடம்பு கொடுக்கிற சுகம் வேணுமா.. எடுத்துக்கோங்க..

ஆனா எனக்கு தயவு செஞ்சு ரெண்டுல ஒரு பதிலை இப்பயே சொல்லுங்க. என்ன உங்க கூட வச்சு வாழ போறீங்களா இல்ல நான் உங்களை விட்டு விலகி போனோமா. எதுவா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஏணி வச்சு பார்த்தாலும் எனக்கு உங்களுக்கும் அந்தஸ்து எட்டவே எட்டாது.நீங்க என்ன யூஸ் பண்ணிட்டு உதறி விட்றது. மத்தவங்க மாதிரி பணத்தையோ இல்ல வேற எதையும் நான் உங்ககிட்ட எதிர்பார்க்க மாட்டேன்.

எல்லாத்தையும் முடிச்சிட்டு என்னை நல்லபடியா உயிரோடு என் குடும்பத்துக்கிட்ட நீங்க சேர்த்து வச்சுட்டா போதும். இந்த ஊரிலேயே நான் இருக்க போறது கிடையாது.. எந்த விதத்திலையும் உங்களுக்கு நான் தொல்லை கொடுக்க மாட்டேன். ப்ளீஸ் சார்" பேச வேண்டியது தெளிவாகப் பேசி முடித்திருந்தாள் பூங்காவனம்.

சிகரெட்டும் புகைந்து முடிந்திருந்தது. மின்னல் அவள் பேசியதற்கு எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் மெல்ல எழுந்து நின்றான். அவன் என்ன சொல்லப் போகிறானோ என்கின்ற எதிர்பார்ப்போடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு பூங்காவனம் இருக்க அடி மேல் அடி வைத்து அவளை நெருங்கினான் மின்னல்.

ஒவ்வொரு அடியாக அவன் தன்னை நோக்கி எடுத்து வைக்க அவளையும் அறியாமல் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி எடுத்து வைத்தாள் பூங்கா.. இரண்டு அடிகளில் சேலை பின்னிக்கொள்ள  தடுமாறியவளை அவனின் வழிய கரம் தாங்கிப் பிடித்தது.

அவனைப் பொறுத்தவரை மெதுவாக தான் பிடித்திருந்தான் ஆனால் அதுவே அவளுக்கு வலித்தது.. முகம் சிவக்க அவனுடைய பிடியிலிருந்து விடுபட முயற்சி செய்தாள் பூங்கா..

"ஸ்ஸ்ஸ்"என்றவன்

"அப்ப உனக்கு ஓகே"

" உங்களுக்கு வேறு யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசை இருந்திருக்கும். என்ன கல்யாணம் செஞ்சுக்கிட்டது ஏதோ ஒரு விதத்துல  உங்களுக்கு அவசியமா இருந்திருக்கும். அதுக்காக நான் உங்களை நிர்பந்தம் படுத்த போறது இல்ல. போலீசு கேஸ்ன்னு உங்கள பயம் கொடுத்த போறதில்லை. உங்களுக்கு தேவை நான் தானே .. திரும்பவும் சொல்றேன் எல்லாத்தையும் முடிச்சிட்டு என்னை விட்ருங்க.." எதற்கும் துணிந்தவளை போல அவளும் பேசிக் கொண்டிருக்க திடீரென்று என்ன ஆனது என்றே புரியாமல் விழித்தாள் பூங்காவனம்.

காரணம் அவளின் இதழ்கள்  மின்னலின் முரட்டு இதழ்களின் உள்ளே தவித்துக் கொண்டிருந்தன. சிகரெட் புகையின் வாடை பூங்காவுக்கு உமட்டிக் கொண்டு வர அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்தாள். அவனின் பிடி இரும்பை ஒத்திருக்க  அவளின் போராட்டம் அவனுக்குள் அடங்கி போனது.


தாகம் 15


இரவை நெருங்க நெருங்க பூங்காவனத்திற்கு பயம் நெஞ்சை கவ்வியது.. கமலி அவள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடினார். மதியத்திலிருந்து ஒரு வாய் கூட சாப்பிடவில்லை பூங்காவனம். வீம்புக்காக அவள் இதனை செய்யவில்லை. உண்மையாகவே உணவை சாப்பிடும் மனநிலையில் பூங்காவனம் இருக்கவில்லை.அவள் குடும்பத்தை பற்றிய பயம் போய் இப்பொழுது அவளைப் பற்றி கவலைப்படும் நிலையில் அவள் இருந்தாள்.

இறுதியாக அவளை வற்புறுத்தி மாதுளை பழச்சாற்றை பருக வைத்திருந்தார் கமலி. கமலி அவளை தாங்கு தாங்குகென்று தாங்குவதைக் கூட சற்று சந்தேகமாகவே நோக்கினாள் பூங்காவனம்.. ஒருவேளை கமலி மின்னலுக்கு உறவினராக இல்லாமல் இருந்திருந்தால் அவளை நம்பியிருப்பாளோ என்னவோ?

கமலியை தவிர அந்த வீட்டில்  வேலை செய்யும் மூன்று வேலையாட்களும்  அதிசய பொருளை பார்ப்பது போல பூங்காவனத்தை பார்த்தார்கள். அதில் இருவர் பெண்கள் ஒருவர் ஆண்.. அவர்களின் பார்வையில் வியப்பு மேலிட்டதா என்று கேட்டால் அதுதான் இல்லை. பரம்பரை பிச்சைக்காரனுக்கு கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்தது போல் அல்லவா அவர்கள் மின்னலை அடித்துக் கொண்டு சென்ற பூங்காவனத்தின் அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தார்கள்.

எவ்வளவு நேரம் தான் குட்டி போட்ட பூனை போல அறைக்குள்ளயே நடந்து கொண்டிருக்க முடியும்? சற்று நேரம் காத்தாட வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் இது அவளது இல்லம் கிடையாது. இங்கே எங்கே சென்றாலும் கன்னி வெடியில் காலை வைப்பதற்கு சமம்..

எப்படி இந்த முதல் இரவை தள்ளிப் போடுவது என்ற பலத்த யோசனையில் உலன்று கொண்டிருந்த பூங்காவனத்தை அழைத்தார் கமலி.

"கண்ணு" என்ன என்பதைப் போல அவரை நிமிர்ந்து பார்த்தாள் பூங்கா.

" உன்ன பாக்க உங்க அம்மா வந்திருக்காங்க.." அடுத்த நொடி அந்த அறையில் இருந்து குடுகுடுவென்று வெளியே ஓடி வந்தாள் பூங்காவனம். திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல கையை பிசைந்து கொண்டு அந்த பிரம்மாண்டமான ஹாலில் நின்று கொண்டிருந்தார் தேவகி.. குடும்பத் தலைவன் சரியில்லாத நிலையில், உறவினர்கள் கைவிட, தகுந்த படிப்பும் கையில் நல்ல வேலையும் இல்லாத காரணத்தால் குழந்தைகளை வைத்திருக்கும் பெண்ணின் அவல நிலையை இந்த சமூகத்தில் என்ன சொல்வது?  ஓடிய கணவர் சோலை பாண்டியனிடம் தேவகியை இழுத்து விடாமல் இருந்திருக்கலாம்?

அல்லது குடும்பத்தோடு சேர்ந்து விஷத்தை குடித்துவிட்டு அப்போதே செத்திருக்கலாம். இப்படி பல இருக்கலாம் இருந்து என்ன செய்ய? காலம் கடந்து தன்னுடைய நிலை தன் மகளுக்கு வந்து விட்டதே என்று நினைக்கும்போது தான் தேவகியால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. தேவகியின் கையில் சிறிய கூடை ஒன்று இருந்தது.

தன்னை நோக்கி அரக்கப் பறக்க ஓடிவரும் மகளை தலை முதல் கால் வரை அலசியது தாயின் பார்வை..

"பூங்கா.." அழுகை மட்டும்தான் தேவகியிடம் எஞ்சிருந்த ஒன்று.. தாயைக் கட்டிக் கொண்டாள் பூங்காவனம்.

"ம்மா நீ இங்க என்னம்மா செய்ற? தங்கச்சிங்க எங்க"..

" உன்ன பாக்க தான்டி வந்தேன். அந்த செக்யூரிட்டி என்ன உள்ளேயே விடல.. ஏதோ பிச்சைக்காரிய துரத்துற மாதிரி என்ன கட்டை எடுத்து அடிக்க வரான். நல்ல வேலை ஒரு பொண்ணு தான் வந்து  என்ன ஏதுன்னு விசாரிச்சு என்னை உள்ள கூட்டிட்டு வந்துச்சு.. " காவலாளியின் சந்தேகம் ஒரு விதத்தில் உண்மை தானே.. உதவி கேட்க வருபவர்கள் வீட்டு வாசலில் நின்றே மின்னல் வீரபாண்டியனை பார்த்துவிட்டு செல்வார்கள்.

அப்படி இருக்கும்போது நலுங்கிய சேலையும் ஓய்ந்த தோற்றத்துடன் இருக்கும் இந்த பெண்மணி, தன்னுடைய மகள் இந்த வீட்டிற்குள் இருக்கிறாள் அவளை பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டால் பைத்தியத்தை பார்ப்பது போல் அல்லவா பார்த்து வைப்பார்கள்?

அம்மாவை சோபாவில் அமர சொல்ல கூட பூங்காவனத்திற்கு வாய் வரவில்லை. அவளுக்கே அந்த வீட்டில் என்ன நிலை என்று தெரியாத போது தாயை உபசரிக்க அவள் தயாராக இல்லை..

" நீ எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்ட. மனசே கேக்கல டி. அதான் இருக்கிறத எடுத்துக்கிட்டு உன்னை பாக்க ஓடி வந்துட்டேன்.."

"ம்மா" தாயின் முன்பு தன்னை தைரியமாக காட்டிக் கொள்ள வேஷம் போட்டுக் கொண்டிருந்த பூங்கா அம்மா சொன்ன ஒரு வார்த்தையில் உடைந்து விட்டாள்..

"வாம்மா இப்படி உட்காரு" சோபாவின் கீழே அமர்ந்து கொண்டவள் தேவகியை தனக்கு முன்பு அமர சொன்னாள்.

"மாப்ள எங்கடி" சோற்று டப்பாவை திறந்து கொண்டே கேட்டார் தேவகி.

" அதுக்குள்ள ரொம்ப பேராசை படாத.. என் பொழப்பே இன்னும் என்ன பொழப்புன்னு தெரியாம நான் முழிச்சிட்டு இருக்கேன்.." தேவகிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது..  ரசமும் கருவாடும் செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.

சோற்றை கவளமாக உருட்டி பூங்காவனத்திற்கு ஊட்டி விட்டார்.. பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டு அம்மா ஊட்டிய உணவை வாங்கிக் கொண்டாள் பூங்கா. இவ்வளவு நேரம் தாய் மகள் என் சம்பாஷனைகளை ஓரமாக கேட்டுக் கொண்டிருந்த கமலி அவர்களை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து அகன்று விட்டார்.

" நீ சாப்டியா மா.. தங்கச்சிங்க என்ன பண்றாங்க.. ஒழுங்கா ஸ்கூலுக்கு போக சொல்லு.. நான் எப்படியாச்சும் மாசா மாசம் பணம் கொடுக்க பார்க்கிறேன்.." ஒவ்வொரு உருண்டையாக வாங்கிக் கொண்டே பேசினாள் பூங்காவனம்.

" இனிமே நீ வீட்டுக்கு வர மாட்டேன்னு  ரெண்டும் அழுதுகிட்டே உட்கார்ந்து இருக்குங்க.. எல்லாம் நம்ம கைலயா இருக்கு.. ஏன்டி நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது.." எவ்வளவு முயன்றும் முடியாமல் அழுதே விட்டார் தேவகி.

அம்மாவின் கண்களை துடைத்து விட்ட பூங்காவனம் " அதான் நீயே சொல்லிட்டியே எல்லாம் நம்ம கைலயா இருக்குனு? இந்த உலகத்துல ஏழையா மட்டும் பொறக்கவே கூடாது.." சற்று நேரம் அங்கே அமைதி பரவ வேகமாக மகளுக்கு ஊட்டி முடித்தார் தேவகி.

" அம்மா இனிமே நீ இங்க வராத. இது என்ன மாதிரி இடம் இங்கே இருக்கிறவங்க எப்படின்னு எனக்கு இன்னும் எதுவும் தெரியாது. நான் இங்க மாட்டிக்கிட்டது பத்தாதுன்னு நீயும் இங்க வந்து மாட்டிக்க கூடாது. என்ன நடந்தாலும் தங்கச்சிங்கள பத்திரமா பாத்துக்கோ. நான் சாப்பிடலைன்னா இந்த மாதிரி கட்டுசோறு கட்டி எடுத்துட்டு வந்து கண்ட நாய்ங்க கிட்டயும் அவமானப் படாதே..

அன்னைக்கு நான் கொடுத்த பணம் உன் கையில இருக்குல்ல. அத வச்சு மொத சமாளி எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு கவலை கிடையாது.."

" நாங்க பாத்துக்கிறோம் நீ மொத உன்ன ஒழுங்கா பாத்துக்கோ.. பூங்கா உனக்கு நான் சொல்ல வேணாம்.. இருந்தாலும் ஒரு அம்மாவா சொல்றேன் அனுசரிச்சு போ புருஷன் கால கழுவுன்னு நான் சொல்ல போறது கிடையாது. மாப்பிள்ளை என்ன எப்படினு நமக்கு ஒன்னும் விளங்கல. இந்த ஆள திருத்தலாம் இவன் கூட வாழ முடியும்னு நீ நினைச்சா எப்படியாவது உன் கைக்குள்ள போட்டுக்கோ.

இல்ல இவனும் அந்த சோல பாண்டியன் மாதிரி ஒருத்தனு தெரிஞ்சா  எப்படியாச்சும் இவன் கிட்ட இருந்து தப்பிச்சிரு..இதுவரைக்கும்  சுதானமா நடந்துக்கோ.. அப்புறம் இன்னொரு விஷயம்" குரலை தனித்து விட்டார் தேவகி.

" என்னம்மா"

அக்கம் பக்கம் பார்த்தவர் பூங்காவை இன்னும் நெருங்கி அமர்ந்து " அந்த சோல பாண்டியன் ரொம்ப மோசமானவன்.. இத்தனை வருஷம்  அவன நா சமாளிக்க முடிஞ்சுதுனா  அதெல்லாம் ஒரு காரணமா தான்.  பொண்ணுங்களுக்கு கடவுள் ஏன் தெரியுமா அழகான உடம்ப கொடுத்தாரு.. அந்த உடம்ப வச்சு ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.. உங்க அப்பா நம்மள விட்டுட்டு போன சமயத்துல அந்த சோல பாண்டியன் என்னை அனுபவிச்சிட்டு மும்பையில விக்கிறதா பிளான் பண்ணி இருந்தான். உங்களையும் சேர்த்துதான்..

அன்னைக்கு எனக்கு கை கொடுத்தது என்னோட உடம்பு தான். அதனாலதான் எவள தொட்டாலும் தொட்ட கையோட விட்டுட்டு போறவன் என்னை மட்டும் இத்தனை வருஷம் கூடவே வைத்திருந்தான். அவன வெச்சி உன்ன ஓரளவுக்கு படிக்க வச்சுட்டேன். மிச்சம் ரெண்டும் எப்படியோ விவரம் தெரிஞ்ச வயசு வரைக்கும் வளர்த்துட்டேன்..

எல்லாமே உன் கையில தான் இருக்கு. அம்மா எத பத்தி சொல்றேன்னு உனக்கு தெரியும். ஒழுக்கம் தான் உயிருன்னு சொல்லிக் கொடுக்கிற அம்மா நான் கிடையாது. ஒழுக்கம் போனா உயிரே போயிருச்சுன்னு சொல்லி செத்துப் போறது அந்த காலம். அப்படித்தான் நம்ம சமுதாயம் நம்மள பழக்கி வச்சிருக்கு. நாம எந்த தப்பும் பண்ணல ஒழுக்கம் கெட்டு போனதுக்கு. இந்த சமுதாயமும், இது உருவாக்கி வைத்திருக்கிற பணம்ற சாத்தனும்தான் நம்மள மாதிரி ஆளுங்கள இப்படி முடிவெடுக்க வைக்குது.

உயிர் தான் முக்கியம். ஒரு தடவை போனா அது திரும்ப வராது.  எப்படியாவது சாமர்த்தியமா நடந்து இவன் கிட்ட இருந்து தப்பிக்க பாரு. "

"அம்மா நீ"

" நீ தப்பிச்சா எங்களையும் காப்பாத்த மாட்டியா.. எங்களுக்கு எல்லாமே நீ தானடி.. நீ சாப்பிட்டு தெம்பா இரு.. பார்த்து பத்திரமா நடந்துக்கோ.. இது நம்ம குலசாமி திருனூறு"

"இத ஏன்மா என்கிட்ட கொடுக்குற.." முகத்தை சுளித்தாள் பூங்காவனம்.

"அப்படி சொல்லாத பூங்கா.திக்கு இல்லாதவங்களுக்கு தெய்வம்தான் துணை. ஏதோ ஒரு வழியில இன்ன வரைக்கும் நம்மளுக்கு சாமி உதவி செஞ்சுகிட்டு தான் இருக்கு. அதே சாமி இப்போவும் நமக்கு உதவி செய்யும். எப்பயும் இந்த திருநீற உன் கூடவே வச்சுக்கோ. சரி நான் கிளம்புறேன்"மகளை கண்களில் நிறைத்துக் கொண்டு ஆயிரம் பத்திரம் சொல்லி அங்கிருந்து கிளம்பினார் தேவகி.

தேவகி வந்து போன பிறகு சற்று நேரம் அறைக்குள் நடைப் பயின்றாள் பூங்காவனம். தேவகி கூறி சென்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் செவியினுள் வந்து மோதி சென்றது.. ஒன்றுமே தெரியாத அம்மாவை இத்தனை வருடங்களாக சோலை பாண்டியனை சமாளித்து வந்திருக்கும்போது, தன்னால் இந்த மின்னலை தாண்டி செல்ல முடியாதா?.. மனதை இரும்பாக்கி கொண்டாள். மானத்தை ஆயுதமாக்கி கொண்டாள்.. மின்னல் வீரபாண்டியனின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் பூங்காவனம்..


தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...