Saturday, 5 April 2025

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 7


மறுநாள் மீடியா முழுக்கவும் பிரபல ரவுடி  சுகுவின் மரணமே தலைப்புச் செய்தியாக இருந்தது..

"பிரபல ரவுடி, சென்னையை ஆட்டிப் படித்துக் கொண்டிருந்த தாதா சுகுவின் மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது. இதற்கு யார் காரணம்? போலீஸா? அல்லது இது ஒரு கேங் வாரா? சுகுவின் இறந்த உடலை  போலீசார் கண்டுபிடிக்க முயற்சி." இப்படி எந்த சோசியல் மீடியாவை திறந்தாலும் பத்திரிகைகளிலும் சுகுவின் மரணத்தை பற்றி கேள்வி எழுந்தது.

சுகு இறந்ததாக வெளியிடப்பட்ட ஒளிப்பதிவு காணொளிகள்  அனைத்து இடங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க ஆனால் அவனின் உடல் மட்டும் எங்கிருக்கிறது என போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.  தன் வீட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியை  பழைய சோறில் தயிர் ஊற்றி  கடித்துக் கொள்ள சின்ன வெங்காயம் பச்சை மிளகாயை வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மின்னல்.

ஒவ்வொரு வாய்க்கும் சின்ன வெங்காயத்தையும், மிளகாயையும் அவன் ரசித்து கடிக்கும் போது அதனை சற்று தள்ளி தரையில் அமர்ந்திருந்து பார்த்தவாறு இருந்தாள் பூங்காவனம். கையில் வளைந்த சோற்றுத் தண்ணீரை அவன் நாவால் நக்கிக் கொண்டே அவளை பார்த்து

"ன்னா வேணுமா?" என்பது போல் செய்கை காட்ட முகத்தை திருப்பிக் கொண்டாள் பூங்காவனம்.. அவன் சோற்றை சாப்பிட்டு விட்டு  மீதமிருந்த நீச்ச தண்ணியை  ஒரு கலக்கு கலக்கி அப்படியே வாயில் சரித்துக் கொண்டான். கடவாயின் ஓரம் வழிந்த நீச்சத்தண்ணீர் அப்படியே அவன் நெஞ்சில் இறங்கி  இடுப்பு வேஷ்டியை வந்தடைந்தது.

அதனை பார்த்துக் கொண்டிருந்த பூங்காவனத்திற்கு குமட்டியது..வேகமாக எழுந்து பின்பக்கம் ஓடினாள். கதவை திறந்தவள்  அலறிய அலறல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.. அங்கே சுகுவின் உடலை இருபதுக்கும் மேற்பட்ட பூனைகள் கடித்து தின்று கொண்டிருந்தன.

மீண்டும் கதவை அடைத்து விட்டு உள்ளே ஓடி வந்தவள் மின்னலின் மீது மோதி தரையில் விழுந்தாள்.

" என்ன குஞ்ச பாத்து பயந்துட்டியா"..

"ஹான்" மிரண்டா விழிகளோடு எழுந்து நின்றாள் பூங்காவனம்..

"கோழிக் குஞ்சிங்கள பார்த்து பயந்துட்டியான்னு கேட்டேன்" தலையை குனிந்து கொண்டாள் பூங்காவனம். நேற்று அவன் மட்டும் இல்லை என்றால் அவளின் கதி என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியவில்லை? ஒற்றையளாய் சுகுவின் படைகளை அடித்து தூசம் செய்தவன், இறுதியில் சுகுவின் கதையை ஒரேடியாக முடித்து விட்டான்.

அதுவும் சுகு, பூங்காவனத்தை பார்த்துக் கொண்டே தன்னுடைய உயிரைத் துறந்ததை இன்னும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவன் என்ன மனிதனா இல்லை அரக்கனா எவ்வளவு இயல்பாக ஒருவனை வயிற்றில் மிதித்தே கொன்று விட்டான்.. வலுவான அந்த கால்களுக்கு ஒருவனை அழிக்கத்தான் இயற்கை விதித்திருக்கிறதா?

இறந்த சுகுவை வீடியோ எடுத்து அதனை சோசியல் மீடியாவுக்கு பரவ விட்டவன், பிணத்தை அங்கேயே போட்டு வராமல் வேலை மெனக்கட்டு தூக்கிக் கொண்டு வந்திருந்தான்.. பூனைகளால் கடித்து கொதறப்படும்  சுகுவின் சவத்தை  ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தது அங்கிருந்த கேமரா ஒன்று.

நடந்த சம்பவங்களை கண்டு நடுங்கி போய் ஒரு ஓரமாக நின்ற பூங்காவனத்தை ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான் மின்னல். அடுத்த நொடி அவன் பின்னாலயே பூனைக்குட்டி போல சென்றவள் காரில் ஏறிக்கொண்டாள்.வண்டி எங்கே போகிறது, அடுத்து என்ன நடக்கிறது என்பதை பற்றி எல்லாம் அவளுக்கு அந்த நேரம் மூளையே ஓடவில்லை.

ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இப்பொழுது ஒரு கொலையை கண்ணால் பார்க்கும்படி நேர்ந்து விட்டது என்பது மட்டுமே அவளது சிந்தை முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தது..

ஊருக்கு ஒதுக்கப்புறமாக இம்மாதிரி தவறுகள் செய்வதற்கென்றே கட்டபட்ட வீடு ஒன்றில்  சுகுவின் சவத்தை கொண்டு வந்த போட்டவன்  அங்கிருந்து குளிர்சாதன பெட்டியை திறந்து உள்ளிருந்த பீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

ஒரு பாட்டிலை முழுதாக முடித்தவன், திருச்சிக்குள் தயாராக மசாலா தடவி வைக்கப்பட்டிருந்த இரண்டு முழு கோழிகளை எடுத்தான். பெரிய சட்டி ஒன்றை எடுத்து ஒவ்வொரு கோழியாக பொரித்து எடுத்தான்.பெண்ணோருத்தியை காப்பாற்றி அழைத்து வந்தோமே அவளின் நிலை என்னவாக இருக்கும் என்பதை பற்றி எல்லாம் அவனுக்கு கவலை கிடையாது..

பொரித்த கோழியில் பாதியை சுடச்சுட பிய்த்து அவளிடம் நீட்டினான். கண்களில் மிரட்சியோடு சோபாவின் ஒட்டில் அமர்ந்திருந்தவள் அவனை இமை மூடாமல் பார்த்தாலே தவிர அவன் நீட்டிய கோழியை தொடவே இல்லை..

"ம்ம்ம்" மின்னலின் உறுமல் சத்தம் கேட்டு வேகமாக கையை நீட்டினாள் பூங்காவனம். சுட சுட சட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கோழி அவளின் கையை புண்ணாக்கியது. தட்டில் வைத்து கொடுக்கும் அளவுக்கு கூட அவனுக்கு பொறுமை கிடையாது.. கோழிதுண்டினை அவள் கீழே போட்டு விட அவளை கொடூரமாக முறைத்தான் மின்னல்.

"சூடு.. ' இரண்டு உள்ளங்கைகளையும் அவன் முன்பு விரித்து காட்டினாள். பார்க்கவே பயங்கரமாக காணப்பட்டது பெண்ணின் மென்மையான உள்ளங்கை.. அங்கிருந்த பழைய நாளிதழ் ஒன்றினை அவள் மீது தூக்கி எறிந்தான் மின்னல்.

தரையில் விழுந்த கோழியை எடுத்து ஊதியவள் அந்த நாளிதழில் வைத்து  விட்டு அப்புறணியாக பார்த்துக் கொண்டிருக்க அவனோ அரை கோழியை முடித்துவிட்டு முழு கோழிக்கு வந்திருந்தான்.. ஒரு பக்கம் பீர் ஒரு பக்கம் கோழியென அவன் பாட்டுக்கு ஆனந்தமாக  அந்த இரவை கடத்திக் கொண்டிருக்க பாவம் இங்கே ஒவ்வொரு நொடியும் பூங்காவனத்திற்கு உயிர் போய் உயிர் வந்தது.

" என்ன ஊட்டி விடணுமா" கோழியை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தவர்களின் செவிகள் வந்து விழுந்தது மின்னலின் கடுமையான வார்த்தைகள்.

"நான் சாப்பிட்டு முடிகிறதுக்குள்ள நீ சாப்பிட்டு என் கண்ணிலே படக்கூடாது. மீறி பட்ட சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது" அவன் எதை குறிப்பிடுகிறான் என்பது பூங்காவனத்திற்கு புரிந்தது. ஆவி பறக்கும் கோழியினை கையில் எடுத்தவள் ஊதி ஊதி வேகமாக தன்னால் முடிந்தவரை சாப்பிட்டு முடித்தாள்.

எங்கே கொலைகாரன் அவன் சொன்னது போல ஏதாவது செய்து விடுவானோ என்கிற பயத்தில் அந்த வீட்டின் ஒரு மூலையில் சென்று பதுங்கி விட்டாள். ஒன்றை கோழிகளை பீரோடு சேர்த்து உள்ளே தள்ளியவன்  சோபாவில் நீர் யானையை போல கவிழ்ந்து விட்டான்.

அவன் உறங்கும் வரை காத்திருந்தவள் மெல்ல எழுந்து வந்து வாசல் கதவை திறந்து பார்த்தாள். தேக்கில் செய்த கதவு போல  கம்பீரமாக நின்றது. பின் வாசலும் இதே கதி தான். ஜன்னல்கள் ஒவ்வொன்றையும் திறந்து பார்த்தாள். தப்பித்து ஓடுவதற்கான வழியே அவளுக்கு தென்படவில்லை.

" தப்பிக்க ட்ரை பண்றியா" அவள் பின்னால் முதுகு உரச வந்து நின்று திடீரென்று கேட்ட மின்னலின் குரலில் தூக்கி வாரி போட்டது பூங்காவனத்திற்கு.

குதித்து அவள் திரும்பிப் பார்க்க, அவளின் வலது கையை மடக்கி முதுகு பின்னால் வைத்தவன்  பெண்ணவளை தன் நெஞ்சோடு  உருசும்படி இறுக்கமாக பிடித்துக் கொண்டு

" அவ்ளோ சீக்கிரம் என்கிட்ட இருந்து உன்னால தப்பிக்க முடியுமா" அவன் கேட்டது கூட அவளுக்கு பெரிதாக இல்லை அவன் நெஞ்சோடு உரசி கொண்டிருக்கும் தன்னுடைய நெஞ்சை குனிந்து பார்த்தாள். அவளின் பார்வையை தொடர்ந்து அவனின் பார்வையும் பயணித்தது.

பெண்மையின் மென்மை என்னவென்று அறியாதவன் அவன் கிடையாது.. போதை ஏறிய கண்களோடு மேல் சட்டை அணியாமல் அவன் அவளை கிறக்கமாக பார்க்க பூங்காவனத்திற்கு வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது. 

"அ..அது.. பாத்ரூம் போனும்.. அதான்" வாயில் வந்ததை அடித்து விட்டாள் பூங்காவனம்.

" வாசப்படியில பாத்ரூம் போவியா" தலையை குனிந்து கொண்டாள் பூங்காவனம்.

ஒரு நொடிகள் அவளை தன் பிடியில் வைத்து இம்சித்தவன் என்ன நினைத்தாலும் அவளை விடுவித்துவிட்டு மீண்டும் சோபாவில் சென்று படுத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

தப்பித்து ஓடும் எண்ணமே அற்று போனது அவளுக்கு. பேசாமல் ஒரு மூளைக்குச் சென்று ஒடுங்கி கொண்டாள். இந்நேரம் தாய் தங்கைகள் இருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்துக் கொண்டே எப்படி உறங்கினாள் என்றே தெரியாமல் உறங்கிப் போனாள்.

காலையில் வெயில் முகத்தில் அடிக்க எழுந்தவள்  அங்கே மின்னலின் தோற்றத்தைக் கண்டு அயர்ந்து போனாள். இடுப்பில் வேஷ்டியோடு சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான் மின்னல். நெற்றியில் பட்டை கழுத்தில்  ருத்ராட்ச கொட்டை  இதழ்களோ

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

சுலோகத்தை சொல்லிக் கொண்டிருந்தன. சோலை பாண்டியனிடம் வேலை செய்பவன் வேறு எப்படி இருக்க முடியும்?

அதன் பின்பு சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்தவன் யோகா செய்ய தொடங்கினான். இப்படியே ஒன்றரை மணி நேரத்தை கடத்தியவன் மண்பானை ஒன்றினை எடுத்தான். அதில் பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. வெங்காயமும் பச்சை மிளகாயும் எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்து விட்டான்.

முதலில் சோலை பாண்டியன் அப்புறம் சுகு  பிறகு இவன்? யார் இவன் எதற்காக தன்னைக் காப்பாற்றி இங்கே வைத்திருக்க வேண்டும்? எதுவும் புரியாமல் மண்டை காய்ந்தது பூங்காவனத்திற்கு.

அவன் மீது மோதி கீழே விழுந்தவள் சுதாகரித்து  எழுந்து நின்று 

"சார்.. உங்களுக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனா நீங்க தான் என்ன அவன்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கீங்க. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. எதுக்காக நீங்க என்னையும் உங்க கூட கூட்டிட்டு வந்து இருக்கீங்கன்னு தான் எனக்கு புரியல. ப்ளீஸ் சார், நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது. என்ன விட்ருங்க. அம்மா தங்கச்சிங்க  இவங்க மட்டும் தான் என்னோட உலகம்.

நேத்து முழுக்க நான் வீட்டுக்கு போலனு என்ன நினைச்சு ரொம்ப பயந்து போய் இருப்பாங்க. ப்ளீஸ் சார், எனக்கு ஹெல்ப் பண்ணுங்க".. பூங்காவனம் கையெடுத்து கும்பிட்டு அவனிடம் கெஞ்ச 

"சோலை ஐயா உன்ன விட சொல்லட்டும் அப்புறம் விடறேன் " ஆக இவனும் சோலை பாண்டியனின் கையால் என்பது அப்பொழுதுதான் பூங்காவனத்திற்கு புரிந்தது.


தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 6


திடுதிடுப்பென்று தன் வீட்டிற்குள் நுழைந்த  ஆட்களை கண்டதும் சோலை பாண்டியனின் முகம் மாறியது..
கூட்டாக சேர்ந்து தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்கின்ற பயம் பூங்காவனத்திற்கு.

அவள் திக்பெருமை பிடித்தது போல நிற்கும்போதே "ஹேய் யார்டா அது? தொறந்த வீட்டுக்குள்ள நாய் நுழைஞ்ச மாறி".. கேட்டுக்கொண்டே எழுந்து நின்றார் சோலை பாண்டியன்.

" என்ன தலைவரே, வயசாச்சு போல வந்துருக்கிறது யாருன்னு கூட தெரியலையா? "

சோலை பாண்டியன் பேசியவனை நன்றாக உற்றுப் பார்த்தான். "டேய் சுகு நீயாடா, என்ன இந்த பக்கம்?" வந்திருப்பது யார் என்று தெரிந்ததும் மீண்டும் சொகுசாக அமர்ந்து விட்டார்.

" உங்க வீட்டுக்கு என்ன விருந்து சாப்பிடவா தலைவரே நாங்க வந்திருப்போம்?"

" வேற எதுக்கு இங்க வந்த" சோலை பாண்டியனின் குரலில் கடினம் ஏறியது.

" இந்த பொண்ணு மேல உங்களுக்கு ரொம்ப நாளா  கண்ணுன்னு கேள்விப்பட்டோம். மொத அம்மாவை வச்சிருந்தீங்க. இப்ப பொண்ண வச்சிருக்கீங்க. வயசானாலும் வால சுருட்டிட்டு சும்மா இருக்க முடியல உங்களுக்கு? " சுகு என்று அழைக்கப்பட்டவன் இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசினான்.

" அதுல உனக்கு எங்க வலிக்குது? எனக்கு வயசு ஆச்சு முடியலைன்னா உன்கிட்ட நான் சொன்னனா? எதுக்கு தேவையில்லாத பேச்சு பேசிட்டு இருக்க? மொத எதுக்கு என் வீட்டுக்கு வந்துருக்கே அத சொல்லு?"

" நாங்களும் இன்னும் எத்தனை நாளைக்கு தலைவரே உங்களுக்கு கீழ ஏவுன வேலைய செஞ்சிட்டு இருக்கிறது.. நீங்களும் சட்டுபுட்டுன்னு மேல போய் சேருவீங்கன்னு பார்த்தா இந்த ஜென்மத்துல உங்களுக்கு சாவே வராது போல. இப்படியே மேல போக மாட்டேன்னு நீங்க அழுச்சாட்டியும் பண்ணிட்டு இருந்தீங்கன்னா அப்ப நாங்க எல்லாம் எப்ப உங்க இடத்துக்கு வர்றது?" சோலை பாண்டியனின் கை கைப்பேசியை எடுத்தது. சட்டென்று அவர் கையில் உருட்டு கட்டை ஒன்று வந்து விழுந்தது.

" இந்த இடத்துல நீங்க தனியா தான் இருப்பீங்கன்னு தெரிஞ்சு தான் வந்திருக்கோம் தலைவரே.. பயப்படாதீங்க உங்களை ஒன்னும் செய்ய போறது கிடையாது. எங்களுக்கு தேவை நீங்க கிடையாது. உங்க பக்கத்துல நிக்குதே உங்க தொடுப்பு பொண்ணு".. சுகுவின் பார்வை பூங்காவனத்தை தழுவியது.

பூங்காவனத்திற்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.. தலையெழுத்தை நொந்துக் கொண்டு அவள் இங்கு வந்தால் இங்கானால் வேறு என்னமோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.. பின்வாசல் பக்கமாக ஓடி விடலாமா இப்படியாக யோசித்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம். இன்னொரு பக்கம்  தன்னை இக்கட்டில் நிறுத்தி வைத்து இழி நிலைக்கு ஆளாக்க முயன்று கொண்டிருக்கும் சோலை பாண்டியனின் கையாலாகாத நிலையை வேடிக்கை பார்க்க சொல்லி மனம் கெஞ்சியது.

"சுகு.. வேணாடா ரொம்ப பெரிய தப்பு பண்ற.. யாருகிட்ட பகைச்சிருக்கோம்னு தெரியுதா உனக்கு.. ஒட்டுமொத்த கும்பலையும் கருவருத்திடுவேன்.." கிழட்டு சிங்கத்தின் கர்ஜனையாக தோன்றியது சோலை பாண்டியனின் குரல்.

அதற்கெல்லாம் அசரும் ஆள் சுகு கிடையாது."அய்யய்ய தலைவரே சவுண்ட குறைங்க. வயசான காலத்துல எதுக்கு இப்படி ஹை பிச்சில்ல கத்தி பேசுறீங்க.. எங்ககிட்ட விட்டு வாங்கி செத்தா கூட இந்த வயசுலயும் கத்திய தூக்கி மண்டைய போட்டீங்கன்னு பேரு இருக்கும். கத்தி கத்தியே செத்துப் போனீங்கன்னா தொண்டை தண்ணி வத்தி நீங்க மண்டைய போட்டீங்கன்னு வரலாறு உங்கள காரி துப்பும்" இவ்வாறு கூறியதும் உடன் இருந்தவர்கள் "கொல்"லென்று சிரித்தார்கள்.

"டேய்" சோலை பாண்டியன் பற்களை கடித்தார்." பின்னால ரொம்ப வருத்தப்படுவ சுகு"அவரது எச்சரிக்கையை   அலட்சியப்படுத்தினான் சுகு.

" சும்மா கம்முனு இருங்க தலைவரே.. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேனு அடம் பண்ணிட்டு இருப்பிங்க... எங்களுக்கு தேவை உங்க உயிர் கிடையாது. சோலை பாண்டியன் வீடு பூந்தே பொண்ண தூக்கிட்டான் இந்த சுகுன்னு ஒட்டு மொத்த சிட்டியும் என்ன பத்தி தான் பேசணும்.. இதுவும் உங்க கண்ணு முன்னாடியே நடக்கும் போது சோலை பாண்டியன் ஒண்ணுமே செய்ய முடியாத நிலைமையில உட்கார்ந்து வேடிக்கை பாத்தானு மேல இருக்கிற மரியாதை பயம் எல்லாம் போயிரணும். இதுதான் எனக்கு வேணும்  "

சுகு சொல்லியதை கேட்டதும்  பூங்காவனத்திற்கு உயிர் ஊசல் ஆடியது. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக விக்கித்து போய் நின்றாள்..

சுகு தன்னோடு வந்தவனிடம் கண் காட்ட அவன் நேராக சென்று பூங்காவனத்தின் கையைப் பிடித்து இழுத்தான்..

"என்ன.. உங்களுக்குள்ள பிரச்சனைனா அத நீங்களே அடிச்சிக்கிட்டு சாவுங்க.. தேவை இல்லாம நடுவுல எதுக்கு என்ன இழுக்கறீங்க..ஆம்பளைங்க சண்டையில பொம்பள மேல ஏன்டா கை வைக்குறே..விட்றா விட்றா என்ன பொறுக்கி நாயே"..தன் கையை பிடித்து இழுப்பவனை சகட்டுமேனிக்கு அடித்தாள்.

ஒரு வினாடியே அவள் கண்களில் பூச்சி பறந்தது. பொரி கலங்கும் அளவிற்கு ஓங்கி அடித்திருந்தான் அவளை..

" என்னடி நானும் பாக்குறேன் பெரிய பத்தினி மாதிரி சீன் போடுற.. சோத்துக்கு வக்கில்லாம கிழவன் கூட படுக்கிற உனக்கே இந்த ஆட்டமா? தொலைச்சிருவேன்" பூங்காவை  கதற கதற இழுத்துக் கொண்டு போக நடப்பதை தடுக்க இயலாமல் பார்த்துக் கொண்டிருந்த சோலை பாண்டியனை திரும்பி பார்த்தாள் பூங்காவனம்.

அவர் அப்பொழுதும் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் இருக்க, காரி உமிழ்ந்தாள் தரையில். அதனை கண்டு சுகு பொங்கி சிரித்தான். பூங்காவனத்தை காரில் ஏற்றியதும் அதுவரை சோலை பாண்டியனை குறி வைத்து பிடித்திருந்த துப்பாக்கியை மீண்டும் சட்டை பையில் வைத்தவன்

" ஒட்டச்சி காரி துப்புற நிலைமையில இருக்கு தலைவரே உங்க நிலைமை.. " அங்கிருந்து அவனும் கிளம்பினான்.

பூங்காவனத்தை சுகுவின் இடத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கே ஒரு இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டாள் பூங்காவனம்..

"அண்ணா ப்ளீஸ் உங்க சண்டைய உங்களோட வச்சுக்கோங்க. தயவு செஞ்சு என்னை விட்ருங்க. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாண்டுறாதீங்க" பூங்காவனம் சுகுவைப் பார்த்து கெஞ்சினாள்.

"தோ பாருமா உனக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது தான். எங்களுக்கு தேவை சோலை பாண்டியன் முன்னாடியே அவனோட வீடு பூந்து அவன் வீட்டு பொண்ண தூக்கிட்டு வர்றதுதான். மத்தபடி உன்னை எதுவும் பண்ற ஐடியா எல்லாம் எங்களுக்கு கிடையாது. ஒழுங்கா நாங்க சொல்றத கேட்டீங்கன்னா இன்னும் ஒரு வாரத்துக்கு நல்லபடியா இங்க இருந்துட்டு வீடு போய் சேரலாம்.இல்லனு வெச்சிக்கோ"..

"அண்ணா ஒரு வாரமா? என்ன காணும்னு எங்க அம்மா தங்கச்சி எல்லாம் தவிச்சு போயிருவாங்க..ப்ளீஸ்ண்ணா" உண்மையிலேயே மிரண்டு விட்டாள் பூங்காவனம் அவன் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தது.

"ண்ணா, சோலை பாண்டியன் வீட்டுல இருந்தவ பத்தினியாவா இருக்க போறா.. இருக்கிற வரைக்கும் நமக்கு கம்பெனி கொடுக்கட்டுமே.." சும்மா இருந்த சுகுவை அருகே இருந்தவன் சீண்டி விட்டான்.

"ஆமாண்ணே பொண்ணு பாக்க தக்காளி பழமாட்டம் இருக்கா.. ஒரு வாரம் இங்க தான் இருக்க போறா.." பூங்காவனத்திற்கு அவர்கள் பேச பேச இன்னும் தன்னுடைய உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதே பாரமாக தோன்றியது.

" கடவுளே என்னை ஏன் இப்படி சித்திரவதை பண்ற? நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? தயவு செஞ்சு இந்த நிலைமையில இருந்து என்னை காப்பாத்து. திக்கு இல்லாதவனுக்கு தெய்வம் தான் துணை எங்க அம்மா சொல்லுவாங்க. எந்த திக்கில போறதுன்னு எனக்கு தெரியல. என்ன கட்டி காட்டுல விட்ட மாதிரி நான் எங்கேயோ போனா விதி என்ன எங்கேயோ கொண்டு வந்து நிப்பாட்டுது. நீங்க பேசறத கேட்டா இன்னும் ஏன் உயிரோடு இருக்கேனுனு நினைக்க வைக்குது. உண்மையா இந்த உலகத்துல நீ இருந்தா எப்படியாச்சும் என்ன காப்பாத்து.."

பூங்காவனம் தனக்குள் வேண்டிக் கொண்டிருக்கும்போது அடியாட்களில் ஒருவன் வேகமாக ஓடி வந்து சுகுவிடம் மூச்சு வாங்க கூறினான்..
" என்னடா அலெஸு என்னத்துக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வர?"

"அண்ணே.. அவன்.. வந்துட்டான்"..

"யார்ரா"..

"அவன்"

"டேய் ங்கொய்யால அவன் அவனா யார்ரா உங்க அப்பனா? எந்த புடிங்கி நாய் வந்துருக்கு?வந்தவனுக்கு பேரு இல்லையா என்ன".. சுகு கொதளிக்க

"அவன ஏன்டா சுகே போட்டு படுத்தினு இருக்க.. நான் தான் உன் மாமன் வந்துருக்கேன்"குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தான் சுகு.


தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 5


சோலைப் பாண்டியன் விட்டெறிந்த பணத்தை  எடுத்துக்கொண்ட பூங்காவனம், அதனை எடுத்துச் சென்று கதிரிடம் கொடுத்தாள்.. கதிருக்கே மனம் குத்தி விட்டது போல..

" என்னால ஒன்னும் பண்ண முடியலம்மா.." வேறெங்கோ பார்த்துக் கொண்டே பூங்காவனத்திடம் கூறினான்.

"தெரியும்" வீட்டிற்கு வந்து விட்டாள் பூங்காவனம். என்ன ஆயிற்றோ எதாயிற்றோ என வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருந்தார் தேவகி. பூங்காவனம் வரும்போதே சமையலுக்கு தேவையான பொருட்களை கையோடு வாங்கி வந்திருந்தாள்.

"பூங்கா என்னடி ஆச்சு, ஏதாச்சும் சொல்லுடி" மகளைப் பரிதவிப்பாக அளந்தது தாயின் பார்வை.

" என்னமா அப்படி பாக்குற திரும்பவும் ரெண்டு நாள் கெடு கொடுத்துருக்கான். எதுக்கு அந்த ரெண்டு நாள்னு நினைக்கிற? நல்லா சாப்பிட்டு தெம்பா வர்றதுக்கு.. " சுருக்கமாக நடந்ததை தாயிடம் கூறியவள் அம்மாவின் புலம்பலை கேட்க அங்கே நிற்கவில்லை.

சமையலறைக்குச் சென்று சமைக்க ஆரம்பித்து விட்டாள். மணக்க மணக்க மட்டன் பிரியாணி ரெடியானது. தேவகிக்கு பூங்காவனம் செய்வது அனைத்துமே வித்தியாசமாகப்பட்டது.

"ஹேய் என்னடி செஞ்சிட்டு இருக்க நீ? புத்திகித்தி பிசங்கி போச்சா உனக்கு.. பைத்தியக்காரி மாதிரி என்னென்னமோ செஞ்சுட்டு இருக்க.. இங்க என்ன நடக்குது?இப்ப பிரியாணி ரொம்ப முக்கியமா ".. தேவகி பொறுக்க முடியாமல் கேட்டாள்.

" எல்லோரும் குடும்பத் தொழிலை தான் வம்சாவழியா செஞ்சுகிட்டு வருவாங்க. நம்ம குடும்பத்துக்கு குடும்பத்தொழில் இதுதான் ஆயிருச்சு. என்ன வேற என்ன பண்ண சொல்ற? அந்த ஆளுகிட்ட ரெண்டு நாள்ல வரன்னு வாக்கு கொடுத்துட்டேன்.  என்ன பெரிய வாக்கு? இருக்கிற பணத்தை வைச்சு ஊர விட்டு ஓடிறலாம்னு தான்.. ஆனா எங்க ஓட சொல்ற? அந்த ஆளுக்கு இருக்கிற செல்வாக்குல எங்க ஓடினாலும் நம்மள ஒரே சொடக்குல தூக்கிருவான்.

அவன் என்ன சொல்றான்னு தெரியுமா உன் தங்கச்சிக்கு எத்தனை வயசுன்னு என்கிட்ட கேட்கிறான்? அதுக்கு என்ன அர்த்தம் நீ இல்லன்னா உன் தங்கச்சியை தூக்கிருவேன்னு சொல்றான்.. போதும். ஒத்த முடி விழுந்தாலும் உயிர போக்கிக்கிறதுக்கு நாம என்ன கவரிமான் பரம்பரையா? மானம் போனா மயிரா போச்சுன்னு உயிர் வாழனும். அப்படி பொசுக்குன்னு உயிரை தூக்கி போட முடியாது. என்ன நம்பி ரெண்டு தங்கச்சிங்க இருக்கு.. அந்த பொட்ட புள்ளைங்க வாழ்க்கையை யார் பார்க்கிறது?" தேவகி கண்ணீர் வலிய

" ஏன்டி உனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையா? "

" அப்படி உனக்குன்னு நீ நினைச்சிருந்தா இந்நேரம் எவனையாவது கூட்டிட்டு ஊர விட்டு ஓடிருப்ப. எதுக்கு இந்த ஆள் கூட எல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டு எங்கள வளத்த? நீயே உனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிக்காத போது உன் பொண்ணு நான் எனக்கான ஒரு வாழ்க்கையை நான் தேடிக்குவேனா உங்களை விட்டுட்டு? " தேவகியின் கண்ணீர் அதிகமானது.

"ம்மா தலைக்கு மேல வெல்லம் போயிருச்சு இனிமே நீ அழுந்து பிரயோஜனம் கிடையாது. போய் உட்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டும் வந்துரும். ரொம்ப நாளாவே காயத்ரி பிரியாணி வேணும்னு கேட்டுட்டுருந்தா.. பாவம் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. என் கதி இப்படி ஆயிருச்சு. என் தங்கச்சி இங்க ரெண்டு பேத்தையும் இந்த உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் நல்லபடியா வளப்பேன்.." பூங்காவனம் உறுதியாக கூறினாள்.

பள்ளி முடிந்து காயத்ரியும் செல்வியும் வீட்டிற்கு வந்தார்கள். " நம்ம வீட்டுலேயா பிரியாணி வாசம் அடிக்குது.. நம்பவே முடியலையே"..

"ம்ம்ம் நீ நம்புவதெல்லாம் இருக்கட்டும் போய் கை கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்.." பிரியாணி என்று உறுதியாகத் தெரிந்ததும் காயத்திரிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வேகமாக ஓடினாள் கைகால் கழுவ.

" அக்கா எப்படி பிரியாணி? இதுக்கெல்லாம் பொருள் வாங்க எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்? நம்ம குடும்பம் இருக்கிற நிலைமையில இதெல்லாம் தேவையா? என்ன பண்ண? " இவரும் புரிந்த செல்வி அக்காவை குடைந்து எடுத்தாள் கேள்விகளால்.

" ஒன்னும் இல்லடி.. கூட வேலை செய்றவங்களுக்கு கடன் கொடுத்திருந்தேன் இன்னைக்கு தான் திருப்பி கொடுத்தாங்க. காயத்ரி ரொம்ப நாளா பிரியாணி வேணும்ன்னு கேட்டுட்டுருந்தால்ல.அதான்.. நீ போய் கை கால் கழுவிட்டு வா. " பூங்காவனத்தின் சமாதான வார்த்தைகள் செல்வியை திருப்தியடைய செய்யவில்லை.

சந்தேகத்தோடு அக்காவை பார்த்துக் கொண்டு நகர்ந்தாள். அனைவருக்கும் பிரியாணி பரிமாறினாள் பூங்காவனம். காயத்ரியை தவிர மற்ற யாருக்குமே பிரியாணி வயிற்றில் இறங்கவில்லை. பூங்காவனத்தின் அரட்டலால் பல்லை கடித்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார் தேவகி. அக்கா எதையோ தன்னிடம் மறைக்கிறாள் என்பது மட்டுமே புரிய யோசித்துக் கொண்டே சாப்பிட்டாள் செல்வி..

ஆசையாக சாப்பிடும் தங்கையை கண்களில் நிறைத்துக் கொண்டே, தன்னுடைய வாழ்வு இப்படியா  கயவன் ஒருவனின் கையில் சிக்க வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு பிரியாணியோடு சேர்த்து வேதனையையும் முழுங்க  முயற்சி செய்தாள் பூங்காவனம்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் தங்கைகளை வெளியே அழைத்துச் சென்று, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தாள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வந்தார்கள்.காரணமே இல்லாமல் சிரித்த முகத்தோடு வலம் வந்தாள் பூங்காவனம்.

உள்ளுக்குள் அவள் எவ்வளவு வேதனையை அடக்கி கொண்டிருக்கிறாள் என்பது தேவகிக்கு நன்றாக புரிந்தது. சோலை பாண்டியன் வட்டி அசலுக்கு போக சிறிது அதிகமாகவே பணத்தை கொடுத்திருந்தார். அந்த பணத்தில் தான்  கொஞ்சமாக எடுத்து குடும்பத்திற்கு செலவு செய்தாள் பூங்காவனம்.

இரண்டு நாட்கள் முடிய மூன்றாவது நாள் தங்கைகள் இருவரும் பள்ளிக்கு கிளம்பி இருக்க அம்மாவிடம் மீதி பணத்தை கொடுத்தாள்.

"ம்மா இந்த பணத்தை செலவுக்கு வச்சுக்கோ. போயிட்டு போயிட்டு வர்றதா இல்ல ஒரேடியா அங்க இருக்கிறதா எனக்கு தெரியல. எதுவாயிருந்தாலும் இன்னிக்கி அங்க போனா தான் தெரியும். ஒருவேளை நான் திரும்ப வரலைன்னா இந்த பணத்தை செலவுக்கு வச்சுக்கோ."

"பூங்கா"

" பயப்படாதம்மா எப்படியும் ஒரு வாரத்துல என்னை திருப்பி அனுப்பிருவான்.. அதுவரைக்கும் இந்த பணம் தாராளமா பத்தும்.. " அசால்டாக சொல்லி சென்ற மகளை கண்களில் கண்ணீரோடு பார்ப்பதே தவிர தேவகியால் வேறு என்ன செய்ய முடியும்?

பூங்காவனத்தை ஏற்றி செல்வதற்காக வண்டி தயாராக வீட்டு வாசலில் காத்திருந்தது.சுரேஷ் வந்திருந்தான். வண்டியில் ஏறி பின்னால் அமர்ந்தாள் பூங்காவனம்.

வாசலில் நின்று பரிதவிப்போடு தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் தாயை அவள் திரும்பியும் பார்க்கவில்லை. இந்த இரண்டு நாட்களாக கண்களில் ஒரு போட்டு தூக்கமில்லாமல், குளியலறையோடு தனது கண்ணீரை சாமர்த்தியமாக மறைத்து விட்டிருந்தாள்.

வண்டி சோலை பாண்டியனின் வீட்டை நெருங்க நெருங்க, நெஞ்சுக்குள் ரயில் தடதடப்பதை போல உணர்ந்தாள் பூங்காவனம். என்னதான் இருந்தாலும் அவளுக்குள்ளும் பல கனவுகள் இருந்தது. ராஜகுமாரன் வருவான் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நிதர்சனம் புரியாதவள் கிடையாது அவள்.

தன்னை புரிந்து கொண்டு வத்தலோ தொத்தாலோ தனக்காக ஒருவன் வருவான். அவனோடு சேர்ந்து வாழ்க்கையில் முன்னேறி தங்கைகள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். தாயை நல் முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளது குடும்பத்தையும் பிள்ளைகள் கணவன் என சந்தோஷமாக வாழ வேண்டும். இப்படி சிறிய ஆசைகள் மட்டுமே அந்த இளம் நெஞ்சில் நிறைந்து கிடந்தது.

சோலை பாண்டியன் என்ற ஒருவனால் அந்த ஆசைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுமா?  பணம்.. இன்று சோலை பாண்டியனிடம் இருக்கும் அளவிற்கு அவளிடமும் பணம் இருந்திருந்தால் இம்மாதிரி இழி நிலைக்கு ஆளாக தேவையில்லை..

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். இங்க ஆனால் பிணத்தை கூட விட்டு வைக்காத மனிதர்கள் மத்தியில் பணம் இல்லாமல் வாழ்வதற்கு  பிடி சாம்பல் கூட அடுத்தவர்கள் கையில் சிக்காத வண்ணம் தீக்குளித்து இறந்து விடலாம்.

வண்டி சோலை பாண்டியனின் வீட்டை தாண்டி சென்றது. சுரேஷிடம் கேட்க பயமாக இருந்தது. சற்றே சுதாகரிப்பாக சுற்றிலும் பார்த்துக் கொண்டே வந்தாள் பூங்காவனம்..

வண்டி சோலை பாண்டியனின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்றது..

"இறங்குங்க.." வண்டி நின்றது கூட தெரியாமல்  சுய பச்சாதாபத்தில் மூழ்கிக் கிடந்தாள்  பூங்காவனம்.. அவள் கீழே இறங்கி வீட்டிற்குள் செல்ல தொடங்கியதும் சுரேஷ் அங்கிருந்து கிளம்பி விட்டான்..

அங்கொன்றும் இங்கொன்றுமாக பெரிய பெரிய வீடுகள் அவள் கண்களில் விழுந்தன. வசதி படைத்தவர்கள் வாழும் ஏரியா என்று புரிந்தது. சிட்டியை விட்டு தள்ளி இருந்ததால் இப்பொழுது தான் இடம் ஒரு நகராக மாறுவதை புரிந்து கொண்டாள் பூங்காவனம்..

ஒவ்வொரு படியாக கடந்தவள் வீட்டின் உள்ளே செல்ல அங்கே சோபாவில் அமர்ந்திருந்தாள் சோலை பாண்டியன்..

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்

நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா..

ஒரு சுவரை முழுவதும் அடைத்திருந்த  ஹோம் தியேட்டரில் கனகாவும் ராமராஜனும் ஆடிக்கொண்டிருந்தார்கள். சோலை பாண்டியன் பக்தி பரவசத்தில் மூழ்கி இருந்தார்.

செவியில் விழும் பாடல் வரிகளுக்கும் அங்கே நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது..

பாடல் முடியவும் திரும்பி வாசலை பார்த்தார் சோலை பாண்டியன். பூங்காவனம் நின்று கொண்டிருக்க 

" என்னம்மா அங்கேயே நின்னுட்ட உள்ளவா?.. இது உன் வீடு மாதிரி நீ இங்க சகஜமா இருக்கலாம்.. " உள்ளே வந்தவள் அவர் அருகே நின்றாள்.

அவளை மேலிருந்து கீழாக கண்களால் நோட்டமிட்ட சோலை பாண்டியன்" உனக்கு சமைக்க தெரியுமா"

"ம்ம்ம்"

" நல்லதா போச்சு கிச்சன்ல எல்லாம் ரெடியா இருக்கு.. போய் மனக்க மனக்க மட்டன் குழம்பு, சிக்கன் கிரேவி, நண்டு வறுவல், இறா தொக்கு, அவிச்ச முட்ட தேங்க சோறு எல்லாம் ரெடி பண்ணு".. புது மனைவியிடம் உரிமையாக கேட்பது போல  பூங்காவனத்தை அதிகாரம் செய்தார் சோலை பாண்டியன்.

பொதிக்குழிக்குள் காலை விட்டாயிற்று. எந்நேரமும் முழுதாக மூழ்கி விடலாம். சற்று நேரம் தள்ளிப் போட்டது  மனதிற்கு ஆறுதலாக இருந்தது. மறுவார்த்தை பேசாமல் சோலை பாண்டியன் சொன்னதை செய்ய ஆரம்பித்தாள் பூங்காவனம்.. உணவு நேரம் நெருங்க அனைத்தையும் மேஜை மீது வைத்தாள். சோலை பாண்டியன் வந்து உணவு மேஜை அருகே அமர்ந்தார்..

"ம்ம்ம் அடடடா.. வாசமே ஆள தூக்குதே.. சரி கண்ணு நீ என்ன பண்ற ஒரு தட்டு எடுத்து நீ சமைச்சத மொத நீ சாப்பிட்டு காட்டு.." அவரை புரியாமல் பார்த்தாள் பூங்காவனம்.

" என்ன அப்படி பாக்குற? அந்த அளவுக்கு உனக்கு தைரியம் இருக்காதுன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் சேப்டி முக்கியம் இல்ல.. " வேறு வழி இல்லாமல் அமைதியாக ஒரு தட்டை எடுத்தவள் சமைத்தது அனைத்தையும் ஒரு படி அதிகமாகவே எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் தட்டு காலியாகும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன். " கொஞ்சமா சாப்பிட்டு காட்டுன்னு சொன்னா இந்த கட்டு கட்டுற.. ஆமா இதெல்லாம் நீ எங்க உங்க வீட்ல பார்த்திருக்க போற.. இப்படி சாப்பிட்டா தான் உண்டு..அதுவும் சமயத்தில மயக்கம் போட்டு விழுந்தா காரியம் கெட்டுப் போகும்ல." அவருக்கு உணவை பரிமாறினாள் பூங்காவனம்.

சோற்றைப் பிசைந்து வாயில் வைக்கப் போகும் சமயம் திடுதிப்பென்று ஒரு குரூப் உள்ளே வந்தது..

தொடரும்

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 4


"வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்"

வழக்கம் போல நான்கு வரிகளை கடந்த பின்பே அழைப்பை ஏற்றான் மின்னல்.. அந்தத் தொகுதியின் எம்பி மின்னல் வீர பாண்டியன். இந்த இடத்தை பிடிப்பதற்கு அவன் எவ்வளவு பாடுபட்டான் என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

மின்னல் அழைப்பை ஏற்றதும் "டேய் மின்னலு எங்கடா இருக்க" சோலை பாண்டியனின் குரல்  அவன் செவியில் பாய்ந்தது.

"ஐயா இங்கதான் ய்யா.. சொல்லுங்கய்யா போன் பண்ணி இருக்கீங்க." பவ்யமாக வினவினான்.. சோலை பாண்டியனின் வலது கை தான் இந்த  மின்னல். சோலைப் பாண்டியன் காலிலிட்ட வேலையை தலையில் தாங்கி செய்து முடிப்பவன். கடந்த ஐந்து ஆண்டுகளாக சோலை பாண்டியனின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சேர்த்து வைத்திருப்பவன்.

நான்கு முறை சோலை பாண்டியனுக்கு வந்த காலனை இடையில் புகுந்து தடுத்து திருப்பி விட்டவன்.. தன்னை சுற்றி பல பேர் இருந்தாலும் வீர் மீது மட்டும் சோலை பாண்டியனுக்கு தனிப்பட்ட பாசம் என்றே சொல்லலாம். அதனால்தான் அவனை எம்எல்ஏ ஆக்கியதும் இல்லாமல்  எப்பொழுதும் தன்னுடனே வைத்திருக்கிறார்.

கட்சி வேலையை மின்னல் செய்கிறானோ இல்லையோ சோலை பாண்டியன் ஒரு வேலையை சொன்னால் அதனை செய்த முடித்த பிறகு தான் அமருவான் மின்னல்.

"டேய் மின்னலு.. உடம்பு ஒரு மாறியா மத மதன்னு இருக்குடா.."

சோலை பாண்டியன் எங்கு வருகிறார் என்பது மின்னலுக்கு புரிந்தது."ஐயா சொல்லுங்கைய்யா,  இந்த நேரத்துல உங்களுக்கு கம்பெனி கொடுக்க இந்த ப்ரீத்தி பொண்ணால தான் முடியும்.. அவ தான் உங்க மனசுறிஞ்சு பக்குவமா நடந்துக்குவா.. " சோலை பாண்டியன் மனதில் நினைத்ததை வார்த்தைகளால் உதிர்த்தான் மின்னல்.

" இதுக்கு தான்டா எல்லாத்தையும் மின்னலு வேணும்னு சொல்றது.. நான் நெனச்சேன் நீ சொல்லிட்ட. மத்தவளுங்க எல்லாம்  இடுப்பு செத்தவளுகளா இருக்காளுங்க.." சலித்துக் கொண்டார் சோலை பாண்டியன்.

" ஐயா ஒரு அரை மணி நேரம் பொறுங்கய்யா.."வீர் சொன்ன மாதிரியே அடுத்து அரை மணி நேரத்தில்  பிரீத்தியோடு சோலை பாண்டியனின் வீட்டிற்கு வந்தான் மின்னல்..

"ஐயாவ முடிச்சிட்டு நைட்டு உன் வீட்டுக்கு வரவா மின்னல்" கிரக்கமான குரலில் குழைந்தாள் பிரீத்தி. அவளுக்கு மின்னல் மீது எப்போதுமே ஒரு கண்..

மீசையை நீவி கை கடிகாரத்தை சரி பண்ணிக் கொண்டே
"டேய் சுரேஷ்"என அருகே இருந்தவனை அழைத்தான் மின்னல்.

சுரேஷ் என்பவன் ஓடி வந்தான்."ண்ணா'

"சுரேஷு இந்த பொண்ணை அப்புறம் ட்ராப் பண்ணிடு.." பிரீத்தியை திரும்பியும் பாராமல் அங்கிருந்து நகர்ந்தான் மின்னல்.

"பண்றது மாமா வேலை.. இதுல ரொம்ப தான் திமிரு காட்டுற.." ப்ரீத்தி முதுகுக்கு பின்னால் உதிர்த்த வார்த்தைகள் நன்றாகவே மின்னலின் செவிக்கு எட்டியது.

புயல் வேகத்தில் திரும்பியவன் இரண்டே எட்டில் அவளை நெருங்கினான். ப்ரீத்தியின் குரல்வலையைப் பிடித்து நெறித்தவன்

" என்ன சொன்ன மாமா வேலையா?  வலுக்கட்டாயமா உன் கைய கால கட்டி தூக்கிட்டு வந்தா உன்ன கூட்டி விட்டேன்? என்னமோ பெரிய பத்தினி மாதிரி சீன் போடுற.. இங்க முடிச்சுட்டு எப்படி இன்னொருத்தன் கிட்ட தானே போக போற.. அப்புறம் என்னடி நாக்கு ரொம்ப நீளுது" மின்னல் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தை கண்ட பிரீத்தி நடுங்கி போனாள்.

"மின்னல் ஸா... ஸாரி.. ப்ளீஸ் என்னை விட்டுறு..என்னால மூச்சு விட முடியல.." திக்கித் திணறி வார்த்தைகளை கொட்டியவளை வெறுப்போடு பார்த்தவன் அவள் கரத்திலிருந்து தன் குரல்வளையை விடுவித்தான்..

நேராக வண்டியை எடுத்தவன் தன்னுடைய வீட்டிற்கு வந்தான். விலை உயர்ந்த வெளிநாட்டு  மதுபானத்தை எடுத்துக் கொண்டவன்  அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஐஸ் கட்டிகளை அதனுள் போட்டான். மெல்லமாக  கிளாசை உறிந்து காலி செய்தவன், அடுத்த ரவுண்டு இருக்கு அதில் மதுவை ஊற்றினான். இம்முறை அருகே இருந்த வீணையை கையில் எடுத்துக் கொண்டான்.

உள்ளே சென்றபோது இசையாக மாறி, அவனது விரல்கள் வீணையின் நரம்பை மீட்ட தொடங்கியது..அவனது உருவம் அசுரத்தனமாக இருந்தாலும் அவன் மீட்டிய ராகம் இன்னிசை மழையாக அந்த இல்லம் முழுவதும் நிரம்பி வழிந்தது. 

மறுநாள் விடியல் அனைவருக்குமே ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர காத்திருந்தது. இரண்டு நாட்கள் கெடு முடிந்த நிலையில் தங்கைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பூங்காவனம்  கதிரின் நாட்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே சற்று சீக்கிரமாக கிளம்பி சோலை பாண்டியனின் வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள்.

வீட்டில் மகளின் இந்த நிலையைக் கண்டு தேவகிக்கு மாரடைப்பு வராத குறை ஒன்றுதான். மகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார் தேவகி.

"பூங்கா என்னை மன்னிச்சிருடி நான் பெத்த தங்கமே.. எல்லாமே என்னால தான். ஒரு கேடுகெட்டவனை நம்பி ஓடி வந்தது நான் செஞ்ச மொத தப்பு. சோத்துக்கு வழியில்லாம இந்த ஆள நம்பி  வீட்டுக்குள்ள விட்டது நான் செஞ்ச ரெண்டாவது தப்பு.இன்னிக்கு எல்லா தப்புக்கும் தண்டனையா நான் உயிரோடு இருக்கும் போதே என் பொண்ணுக்கு இந்த நிலைமை..

இனிமே நீ எப்படி வாழுவ? விஷயம் வெளியே தெரிஞ்சா எவன் உன்னை கல்யாணம் பண்ணிப்பான்? குடும்பம் குட்டின்னு நீயும் நாலு பேரு மாதிரி நல்லபடியா வாழ வேணாமா.. என்னால முடியலடி. நீ என்னதான்  மனச கரைக்கிற மாதிரி பேசினாலும் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்க என்னால முடியல. இதுக்காகவா உன்ன பொத்தி பொத்தி வளர்த்தேன்? என்ன நடந்தாலும் சரி குடும்பத்தோட விஷத்தை குடிச்சு செத்தாலும் சரி. என் செல்லத்தை நான் பெத்த மகள இந்த நிலைக்கு என்னால ஆளாக்க முடியாது.." தேவகி கத்தி கதறி அழுதார்.

இரண்டு நாட்களாகவே அம்மா மகளுக்குள் இதே பேச்சு வார்த்தை தான். அந்த வீடு போர்க்களமாக மாறிப்போனது. பணத்தை கட்டாவிட்டால் தங்கைகள் இருவரின் வாழ்வை நினைத்து பார்த்தாள் பூங்காவனம். சிறுமிகள் என்றால் விட்டுவிட அவர்கள் என்ன மனசாட்சி கொண்டவர்களா? சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த சிறுமிகளை மொட்டிலேயே கருக்கி விடுவார்கள்..

தன்னுடைய தங்கைகளுக்காக தன்னை பணியும் வைக்க துணிந்து விட்டாள் பூங்காவனம். கதிர் அநியாயத்துக்கு வட்டி கொடுத்து வாங்குபவன்.  ஆனால் அவனிடம் தொழிலில் நேர்மை இருக்கிறது. இம்மாதிரியான நெருக்கடிகளை கதிர் கொடுப்பவன் கிடையாது. கதிர் ஒரு அல்லக்கை. அனைவருக்கும் மேலாக இருப்பது சோலை பாண்டியன். சோழியின் குடுமி சும்மா ஆடாது என்பது போல  சோலை பாண்டியன் ஆட்டுவிக்க கதிர் ஆடிக் கொண்டிருக்கிறான்.

அதனால்தான் குடுமியை சென்று சந்திக்காமல்  அதனை ஆட்டுவிக்கும் சாட்டையை சென்று சந்திக்க முடிவு எடுத்தாள் பூங்காவனம்.. தேவகியின் கதறலை அவள் பொருட்படுத்தவில்லை.

" சாகறது தான் வழின்னா பத்து வருஷம் முன்னாடியே நீ அந்த வழியே தேர்ந்தெடுத்துருப்ப. ஒன்ன வித்து எங்களை வளர்த்த.. இன்னிக்கி என்ன வித்து என் தங்கச்சிங்கள காப்பாத்துற நிலைமையில நான் இருக்கேன். இதுக்காக நான் வேதனை படலை. இதுதான் என் விதின்னு நினைச்சு மனச தேத்திக்கிறேன். இன்னிக்கு எனக்கும் உனக்கும் வந்த இந்த நிலைமை நாளைக்கு என் தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் வரக்கூடாது.." அம்மாவுக்கு சமாதானம் கூறியவள் நேராக சோலை பாண்டியனின் வீட்டிற்கு வந்து விட்டாள்.

அவ்வளவு காலையில் பூங்காவனத்தை அதுவும் தன் வீட்டில் எதிர்பார்க்கவில்லை சோலை பாண்டியன். கதிரின் நெருக்கடி தாங்க முடியாமல் தேவகி தான் தன்னை வந்து பார்ப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தார். பூங்காவனத்தை கண்டதும் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மாறியது.

" அடடா யாரு இவ்வளவு காலையில வந்துருக்கிறது.. மதுரை மீனாட்சியே எந்திருச்சு வந்தது மாதிரி இருக்கு.. என்ன கிளி ஒன்னு தான் கையில காணோம்" உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சா மதுரை மீனாட்சியவே தப்பா பாப்பிங்க டா..

மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பூங்காவனம்." என்னோட அம்மா கதிர்கிட்ட வட்டி வாங்குனது உங்களுக்கு தெரியும். அவங்க கேரன்டி கையெழுத்து தான் போட்டாங்க. பணத்தை வாங்கின சுஜாதா ஊரவிட்டே ஓடிட்டா.. இப்போ கதிர் பணத்துக்காக எங்கள நெருக்கடி பண்றான்..

ரெண்டு நாள்ல ரெண்டு லட்சம் எங்களால எப்படி கொடுக்க முடியும். அது மட்டும் இல்ல கதிர பொருத்த வரைக்கும் தொழில் விஷயத்துல அவன் நாணயமானவன். இந்த அளவுக்கு கீழ்த்தரமா அவன் இறங்க மாட்டான்.. இதுக்கு பின்னால நீங்க தான் இருக்கீங்க. " சோலைப் பாண்டியன் முகத்துக்கு நேராக கை நீட்டி   பேசினாள் பூங்காவனம்.

ஒரு சிறு பெண் தன் முன்னால் கைநீட்டி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை சோலை பாண்டியனுக்கு.. திமிராக சென்ற சோபாவில் அமர்ந்தவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு காப்பியை மெல்ல ரசித்து உறிந்தார்.

" ஆமா நான் தான் இவ்வளவுக்கும் காரணம். இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற.. இவ்வளவு கண்டுபிடிச்ச உனக்கு இதுக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க தெரியாதா என்ன.. " அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டு நின்றாள் பூங்காவனம்.

" இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் உங்க அம்மாவையே நான் பண்ணிட்டு இருக்கிறது? அவளுக்கும் வயசாகுதா இல்லையா.. செத்த பாம்ப தொடற மாதிரி இருக்கு அவளை தொடுறப்போ.. ச்சை ஒரு வயசுக்கு மேல தானா விலகியிரனும்னு அறிவு வேணாம்.. அப்படி என்ன உடம்பு சோகம் கேக்குது அந்த கிழட்டு சிறுக்கிக்கு". சடார் என்று அவரை நிமிர்ந்து பார்த்தாள் பூங்காவனம். என்ன ஒரு அநியாய குற்றச்சாட்டு?

இருப்பவர்களுக்கு இல்லாதவர்களை கண்டால் என்றுமே எகத்தாலம் தான்..

" உன் குடும்பத்தை பத்தி எனக்கு தெரியாதா..  உங்க அம்மாவுக்காகவா இத்தனை வருஷம் கேக்குறப்ப எல்லாம் பணத்தை அள்ளி கொடுத்திருக்கேன்? இன்னிக்கி அவ நாளைக்கு நீ.. நீ அலுத்து போனா உன் தங்கச்சிக்கு எத்தனை வயசு? "டேய் உனக்கு அவ பேத்தி மாதிரி டா.. பூங்காவனத்தின் மனசாட்சி கதறியது.

" நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். இந்த கால பொண்ணு எல்லாத்துக்கும் வேகமா தானே இருப்ப." பூங்காவனத்தின் அமைதி அவரை மேற்கொண்டு பேச வைத்தது..

"சரி கழுத.. எப்போ நீயா வர" நேரடியாக அவரும் விஷயத்திற்கு வந்தார்.

" நாளைக்கு"

"சந்தோசம்.. டேய் சுரேஷு"சுரேஷ் வேகமாக ஓடி வந்தான்.

"ஐயா.." சுரேஷின் காதில் எதையோ கூறினார் சோலை பாண்டியன்.

சுரேஷ் வேகமாக உள்ளே ஓடினான். வட்டியும் முதலுமாக கதிருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்து வந்தான்.

அதனை பூங்காவனத்தின் முன்பு தூக்கி போட்டவர்"நாளைக்கு நீயா வர.." அமைதியாக தலையாட்டிய பூங்காவனம் அவர் தூக்கிப்போட்ட பணத்தை கையில் எடுத்தாள்.


தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 3


பணத்திற்காக செய்த முயற்சிகள் யாவும் பலனிழந்து போக  அலைச்சலும் அலர்ச்சியும் சேர்ந்து காய்ச்சலில் தள்ளியது பூங்காவனத்தை.

இரண்டு நாட்களாக கண்களைக் கூட திறக்க முடியாத அளவிற்கு குளிர் காய்ச்சல் அவளைப் பாடாய்படுத்தியது.. மருத்துவமனைக்கு செல்ல ஒரு பக்கம் பணம் இல்லை; இன்னொரு பக்கம் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கவே யாரையும் அனுமதிக்கவில்லை தேவகி. தங்கைகள் இருவரும் கூட  பள்ளிக்கு சொல்லவில்லை.

"ம்மா, நாளைக்காவது ஸ்கூல் போலாம் இல்ல. இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி வீட்ல இருக்கிறது.." எட்டாவது படிக்கும் காயத்ரி கேட்டாள்.. மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்  அமைதி காத்தார் தேவகி.

"காயு.. சும்மா கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணாத. அம்மாவுக்கு தெரியும் எப்ப ஸ்கூல் அனுப்பனும்னு. உன் பிரண்ட்ஸ பாக்காம போர் அடிக்குதா.." விவரம் அறிந்த  பதினொன்றாவது படிக்கும் செல்வி  தங்கையின் கவனத்தை திசை மாற்ற கேட்டாள்.

படுத்த படுக்கையாக இருக்கும் பெரிய மகளுக்கு பழைய சாதத்தை கொடுக்க மனமில்லாமல் கொஞ்சமாக ரசம் மட்டும் வைத்திருந்தார் தேவகி..  ஒரு கிண்ணத்தில் ரசத்தையும் சோறையும் போட்டு கரைத்து  மகளிடம் கொண்டு வந்து பூங்காவனத்தை எழுப்பினர்.

"அடியே பூங்கா, எந்திரிடி.. ஒரு வாய் கஞ்ச குடிச்சிட்டு படு.. இப்படியே சோறு தண்ணி இல்லாம படுத்து கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்.."..

"ம்மா.. நீ பழைய சோறு ரசமும் எப்ப பார்த்தாலும் கொடுக்கிறதுனால தான் வாரத்துக்கு ஒரு வாட்டி எங்க எல்லாருக்கும் சீக்கு வந்துடுது.. லாஸ்டா நம்ம வீட்ல போன மாசம் கறி எடுத்தது. இப்படி ஆடிக்கு ஒரு வாட்டி அம்மாவாசைக்கு ஒரு வாட்டி கறி சாப்பிட்டா எங்க போய் முட்டிகிறது.. அட்லீஸ்ட் முட்டையாவது தினம் கொடுக்குறியா.. என் பிரண்ட் மனோ வீட்ல எல்லாம் டெய்லி சிக்கன் மட்டனு வெரைட்டியா சாப்பிடுறாங்க.

நம்ம வீட்ல பத்து ரூபாய்க்கு குட் டே பிஸ்கட் வாங்க துப்பு இல்லை.. நல்லவேளை அக்கா நைட்டுல  பீச்ல கடை போடுறதால, மிஞ்சிப்போன மீனாவது கொண்டு வரா.. இல்லனா இந்த பழைய சோத்தை தின்னுட்டு சாக வேண்டியது தான்.." காயத்ரிக்கு  நிலைமையை புரிந்து கொள்ள முடியாத இரண்டுங்கட்டான் வயது.

சோலை பாண்டியன் என்று வருவதை நிறுத்தினாரோ அன்றிலிருந்து தங்கள் வீட்டில் பீடை பிடித்து விட்டது என்பது அவளது கணிப்பு. எப்பொழுது சோலை பாண்டியன் வீட்டிற்கு வந்தாலும் சிறுமியான காயத்திரிக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கி வருவார்.. சற்று விவரம் புரிய ஆரம்பித்ததும்  செல்வி சோலை பாண்டியனை கண்டாலே ஒரே ஓட்டமாய் ஓடி விடுவாள்.

அதிலும் அவள் வயதிற்கு வந்த பிறகு சோலைப் பாண்டியன் கண்களில் கூட படுவது கிடையாது. காயத்ரி அப்படியே அவளுக்கு நேர் எதிரானவள்.. விவரம் புரிந்து அவள் கண்டது அனைத்துமே பஞ்சம் மட்டுமே. சோலை பாண்டியன் இவர்கள் வீட்டிற்கு வந்து போக இருக்கவும் தான் வாய்க்கு ருசியாக உணவுகளை பார்க்க முடிந்தது.

இப்பொழுது கூட சில சமயம் தேவகியிடம்" ஏம்மா சோழ பாண்டியன் அங்கிள் இப்ப நம்ம வீட்டுக்கு வர்றதில்ல.. போன் போட்டு அங்கில வர சொல்லுமா.." இப்படி பேசும் மகளிடம் என்னவென்று விவரிப்பார் தேவகி.

தனக்கும் சோலை பாண்டியனுக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன என்பதை மற்ற இரு மகள்களும் தான் சொல்லாமல் புரிந்து கொண்டிருக்க, இந்த இரண்டுங்கெட்டான் வயதில் காயத்ரியிடம் எப்படி சொல்லி புரிய வைப்பார்?

அம்மாவின் முகம் மாறியதை கண்டதும் " காயு நீ ரொம்ப ஓவரா பேசுற. வயசுக்கு தகுந்த பேச்ச பேச பழகு. உன் ஃப்ரெண்ட் மனோ பணக்காரி. நேரத்துக்கு அவ என்ன நினைச்சாலும் சாப்பிடலாம். நம்ம வீடு அப்படியா? அக்கா நமக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செய்றா தெரியும் தானே.. எல்லாம் தெரிஞ்சும் இந்த மாதிரி நீ பேசறது ரொம்ப தப்பு. அம்மா கிட்ட சாரி கேளு"மூத்தவளாக இருந்து மிரட்டினாள் செல்வி.

"ம்ஹும்.. நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்னு நீ என்னை ஏசுற? உண்மையதான சொன்னேன்.. எத்தனை நாளா கேக்குறேன் கேக் வாங்கி கொடும்மான்னு. தோ வாங்கி தரேன் இந்தா வாங்கி தரேன்னு  ரெண்டு மாசம் ஆச்சு. ஏன் தான் இந்த பிச்சைக்கார குடும்பத்துல வந்து பொறந்தேனோ" காயத்ரி தலையில் அடித்துக் கொண்டே வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே போக முயல,  அங்கே கதவைத் தட்ட ஏதுவாக எட்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

புதிய ஆண்களை கண்டதும் காயத்ரி மிரண்டு விழித்தாள். ஏற்கனவே மகளின் வார்த்தையால் புண்பட்டிருந்த தேவகியின் உள்ளம்  வந்திருந்தவர்களை கண்டதும் மேலும் கதிகலங்கி போனது.

"யாரு டி" வேகமாக எழுந்து வந்து பார்த்தவர் வந்திருந்த முகங்களை கண்டதும் காயத்ரியை இழுத்து தன் பின்னால் பதுக்கி கொண்டார்.

"தம்பி நீங்களாம் யாருப்பா"

"ம்ம்ம்.. கதிரு அண்ணே அனுப்பினாரு.. வட்டியும் முதலமா நீ வாங்குன பணத்தை எடுத்து வைக்க சொல்லி ரெண்டு நாள் முன்னாடியே உன்கிட்ட வந்து சொல்லிட்டு போனோம் தானே.. ராத்திரி வந்ததுனால அடையாளம் தெரியலையா.. இல்ல அடையாளம் தெரியாத மாதிரி நடிக்கிறியா.."

"ஐயோ தம்பி அன்னைக்கு நீங்க ராத்திரி வந்ததால எனக்கு அடையாளம் சரியா தெரியல.தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.."

" சரி அதெல்லாம் கிடக்கட்டும். பணம் எங்க" தேவகி விழித்தார்.. சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்து திரும்பிய பூங்காவிடம் இதைத்தான் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் தேவகி.

இந்த மாதம் தவணை படத்தை கட்டி விட்டு திருப்தியில் அந்த சிறு குடும்பம் சற்று நிம்மதியாக இருக்க, அதனை குறைக்கும் விதமாக  இரவு எட்டு மணிக்கு மேல்  தேவகியின் வீட்டு கதவு பலமாக தட்டப்பட்டது.. இதே போல் ஏழு எட்டு பேர் வந்திருந்தார்கள். கூடவே கதிரும்..

கதிரை கண்டதும் கதி கலங்கி போனது தேவகிக்கு. இரு மகள்களையும் அறைக்குள் தள்ளி கதவை சாற்றியவர் கதிரை வேறு வழியின்றி வீட்டிற்குள் அழைத்தார்.

" தம்பி இந்த மாசம் தவண பணத்தை தான் கட்டியாச்சே" ஒருவேளை மறந்து விட்டானோ என்கிற ரீதியில் அவனுக்கு ஒரு முறை ஞாபகப்படுத்தினார் தேவகி.

" அக்கா, அதெல்லாம் பாப்பா வந்து நம்ம கைல கொடுத்துட்டு தான் போச்சு. நான் வந்த விஷயமே வேற. நீங்களும் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் வட்டி கட்டிட்டு இருப்பீங்க. அதனால என்ன பண்றீங்க இன்னும் ரெண்டு நாள்ல அசலும் வட்டியுமா என்னோட பணத்தை எடுத்து வச்சிருங்க." ஆளுக்கு கீழே பூமி நழுவுவதைப் போல உணர்ந்தார் தேவகி.. சரியாக தான் கேட்டோமா தன்னுடைய செவிப்புலன் மேலேயே சந்தேகம் வந்தது.

கதிரின் முகத்தை பார்த்துக்கொண்டு பேசாமல் நின்ற தேவகியை பார்த்து உள்ள ஒரு அவனுக்குமே சற்று பரிதாபம் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சோலை பாண்டியனை எதிர்த்துக்கொண்டு அவனால் உயிர் வாழ முடியுமா?

" எனக்கு புரியுது அக்கா இது உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்னு.. புத்திசாலித்தனமா புரிஞ்சுக்கோங்க. இன்னும் என் ரெண்டு நாள்ல பணம் என் கைக்கு வந்தாகணும்." அவன் சொல்லிக் கொண்டிருப்பது புத்திக்கு புரிந்ததும் தான் தேவகி என்கிற சிலைக்கு உயிர் வந்தது.

" தம்பி ராசா என்னய்யா திடு திப்புனு வந்து இப்படி ஒரு குண்டை தூக்கி என் தலையில போடுறீங்க. மூணு பொட்ட பிள்ளைங்களை வச்சிருக்கேன் சாமி. திடீர்னு வந்து ரெண்டு லட்சம் கேட்டா வட்டியோட நான் எங்க போவேன்? யாருகிட்ட போய் நிப்பேன்? நாங்க தான் மாசம் மாசம் ஒழுங்கா தவணை கட்டிக்கிட்டு இருக்கமே? "பரிதவிப்போடு கேட்டார் தேவகி.

"அதெல்லாம் நீங்க பேசாதீங்க. என் பணம் எனக்கு இப்ப தேவைப்படுது. ஏதோ தெரிஞ்ச ஆளுனால ரெண்டு நாள் டைம் தரேன். அதுக்குள்ள தலைய அடமானம் வெச்சாவது பணத்தை கொடுத்துடுங்க. இல்லனா தெரியும்ல இந்த கதிர பத்தி" அதற்கு மேல் தேவகி எதுவும் பேசவில்லை. உயிரற்ற சவம் போலயே நின்று கொண்டிருந்தார்.

கதிர் கிளம்பி சென்ற பிறக்கும் அவரது நிலையில் மாற்றம் இல்லை. செல்வியும் காயத்ரியும் வந்து அவரை உலுக்கிய பின்பே தன்னிலை உணர்ந்தார் தேவகி. கதிரின் பேச்சை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த செல்விக்கு முழுதாகவும், ஏதோ பிரச்சனை என்கிற ரீதியில் காயத்திரிக்கும் புரிந்தது. அம்மாவே இப்படி இடிந்து போய் இருப்பதை கண்டதும் அவர்களின் பயம் இன்னும் அதிகரித்தது.

அந்த குடும்பமே இரவு சாப்பாட்டை துறந்து, பூங்காவனத்தின் வரவுக்காக காத்திருக்க  வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவள் தாய் தங்கைகளின் முகத்தை கண்டதும் பதறி விட்டாள்.. காயத்ரி தான் முதல் ஆளாக விஷயத்தை அவளிடம் உடைத்தது..

ஆத்திரத்திற்கு பதில் ஆயாசமாக அம்மாவை பார்த்தாள் பூங்காவனம்." இதெல்லாம் தேவையா என்பது அந்த பார்வையில் கொக்கிட்டு நின்றது.. மகளின் பார்வையை சந்திக்க முடியாமல் நிலத்தை நோக்கினார் தேவகி. செத்த பாம்பை அடிப்பது போல  எத்தனை தடவை தான் ஒரே கேள்வியை அம்மாவிடம் கேட்பது.

அன்று இரவு யாருக்கும் உணவு இறங்கவில்லை. மறுநாளில் இருந்து பணத்திற்கு நாயாய் பூங்காவனம். அவளது தோழியிடம் கேட்டுப் பார்த்தாள். சேர்த்து வைத்திருந்த பணத்தை இருபதாயிரம் கொடுத்தாள். அவளிடம் அதற்கு மேல் பணமில்லை..

எந்த வித பின்புலமும் இல்லாத பூங்காவனத்திற்கு  இந்த உலகத்தில் உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.. பணத்திற்காக அலைந்த அலைச்சலில் குளிர் காய்ச்சல் வந்தது மட்டும்தான் மிச்சம்.

"ஐயா சாமிங்களா, பணத்தைப் புரட்ட முடியல தம்பி. என் பெரிய பொண்ணுக்கு வேற உடம்பு முடியாம போச்சு. இன்னும் ஒரு மாசம் டைம் கொடுத்தீங்கன்னா".. தேவகி திக்கி திணறி தன்னுடைய நிலையை எடுத்துக் கூற முயன்றார்..

"என்னது ஒரு மாசமா.. அதெல்லாம் முடியாது எதுவா இருந்தாலும் நீ அண்ணன் கிட்ட வந்து பேசு.."

" சரிங்க தம்பி நான் நாளைக்கே வந்து நேர்ல பேசுறேன்.. "

" அதெல்லாம் முடியாது இப்ப வா.. உன் பொண்ணுங்களே கூட்டிட்டு வா.. " அவர்கள் ஏதோ முடிவோடு வந்திருப்பதாக தேவகிக்கு புரிந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் எட்டிப் பார்த்தார்களே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை.நிலைமை கை மீறி கொண்டிருப்பது புரிந்த தேவகி

"தோ வரேன் தம்பி" என்றவர் ஓரடி பின்னால் எடுத்து வைத்து படக்கென்று கதவை சாத்தி விட்டார்.

"ஹேய் கதவ தொறடி!கெழட்டுச் ***"காதில் கேட்க இயலா வார்த்தைகளால் கதவின் உள் பக்கத் தாப்பாவை அழுத்தமாக பிடித்துக் கொண்டு நின்றார் தேவகி.. கண்களில் கண்ணீர் ஆறாய் பெறுகியது. நெஞ்சம் ஒவ்வொரு இடி முழுக்கமான கதவு இடிப்படுதளுக்கும் அனலிளிட்ட புழுவாய் துடித்தது. வெளியே வார்த்தைகள் தடித்தன.

"பொம்பளைங்கனு கூட பாக்க மாட்டோம். வீடு பூந்து நாஸ்தி பண்ணிருவோம். வயசு பொண்ணு வயசான கெழவியெல்லாம் கிடையாது. ஒழுங்கா கதவ தொறடி.."

"ஐயா தம்பி.. வீட்ல மூணு பொட்டப் புள்ளைங்கள வெச்சிருக்கேன் ய்யா.. என் தலையை அடகு வெச்சாவது எண்ணி ரெண்டே நாள்ல உன் பணத்தை தந்துடுவேன் சாமி..தயவு செஞ்சு இப்ப போங்கய்யா".. உள்ளிருந்து கெஞ்சினார் தேவகி. அந்தப் பக்கமிருந்து மீண்டும் காட்டுக் கூச்சல்.

சிறிது அமைதிக்குப் பிறகு "அடியே இன்னும் ரெண்டு நாள் தான் உனக்கு டைம். சொன்ன நேரத்துக்கு துட்டு வரல உன் மூணு பொண்ணுங்கள தாய் லாந்துல வித்துட்டு உன்ன லோக்கல்ல தள்ளிருவோம் ஜாக்கிரதை"..ஐம்பதைந்து வயதான தேவகி கேட்க கூடிய வார்த்தைகளா இவை? புயலடித்து ஓயிந்த நிலை..

இரண்டு நாளில் வட்டியோடு இரண்டு லட்சம். இரண்டு வேளை உணவுக்கே வக்கில்லாத நிலையில் இரண்டு லட்சம் பணத்திற்கு எங்கே செல்வார் தேவகி?

குளிர் காய்ச்சல் வந்து கண்களை கூட திறக்க இயலா நிலையிலும் கஷ்டப்பட்டு கண் விழித்து சுவரில் சாய்ந்தப்படி இங்கே நடக்கும் கூத்துகளை பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம்.

தாய் கோழியை போல் இரு வயதிற்கு வந்த தங்கைளையும் இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டிருந்தாள்..

"அம்மா கவலைப் படாத.. காச கட்டிரலாம்.."

"எப்படிடி"புரியாமல் கேட்டார் தேவகி.

"வேற எப்படி இத்தன வருஷம் நீ யாருக்கு ஆசை நாயகியா இருந்தியோ அவனுக்கே நானும் ஆசை நாயகியா போறேன்.."அதிர்ந்தார் தேவகி.

"அறைஞ்சிருவேன் பாத்துக்கோ.. விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லாதடி.."கதறினார்.

"இன்னுமா புரியல உனக்கு? இதெல்லாம் அவனோட த்ராப் தான். மாசா மாசம் ஒழுங்கா வட்டி கட்டிட்டு தானே இருக்கோம். திடீர்னு என்ன அசல கொடுக்க சொல்லி கெடுபுடி.. யோசிம்மா.. அம்மாவ அனுபவிச்சு அலுத்து போய் மக வேணும் இப்ப.. நீ ரிட்டையர் ஆயிடு.. அந்த வேலைய இனி நான் பாக்குறேன்.."அமைதியாக கூறினாள் பூங்கா என்கிற பூங்காவனம்..

தொடரும்.


தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 2





நிம்மதி பெருமூச்சோடு வீட்டிற்கு வந்தாள் பூங்காவனம். அவளது இரு தங்கைகளும் பள்ளிக்கு சென்று இருந்தார்கள். மகளின் வருகை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருந்தார் தேவகி.. வீட்டிற்குள் நுழைந்த பூங்காவின் முகத்தை பார்த்ததுமே அவருக்கு நடந்ததை யூகிக்க முடிந்தது.

தேவகியின் முகத்திலும் நிம்மதி படர்ந்தது. "பூங்கா கைய கழுவிட்டு வந்து உட்காரு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்." பூங்கா அமைதியாக கை கால்கள் கழுவி வர  அவளுக்கு முந்தின இரவில் தண்ணீர் ஊற்றிய பழைய சோறை தயிர் ஊற்றி தட்டில் பரிமாறினார் தேவகி.. தொட்டுக்கொள்ள ஐந்து சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தார்..

எப்பொழுதுமே பூங்காவின் வீட்டில் காலை உணவு பழைய சாதம் தான். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே அவர்கள் வீட்டில் இட்லி தோசையை பார்க்க முடியும்.. வறுமையின் பிடி ஒரு காரணம் என்றால் பழைய சாதத்தில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது என தேவகியின் கணிப்பு.

காலையிலிருந்து சாப்பிடாததால் வயிறு கூப்பாடு போட வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள் பூங்காவனம். இரண்டு வாய் உணவை சாப்பிடும் வரை அமைதியாக இருந்த தேவகி

"பூங்கா என்னடி ஆச்சு அந்த சேட்டு எவ்ளோ கொடுத்தான்.."

"ம்ம்ம் எட்டாயிரம் தான் கொடுப்பேன்னு ஒத்த காலுல நிற்கிறான்.."

"ஐயோ அப்புறம் எப்படி வட்டி கட்டுன"தேவகி முகத்தில் பயம் எட்டிப் பார்த்தது..

" நான் விடுவேனா.. எதுத்த கடைக்கு போறேன்னு சொன்னதும் தான் பத்தாயிரத்து எடுத்து வச்சான்."

"அப்பாடா.. எப்படியோ இந்த மாசம் சமாளிச்சாச்சு.. இனிமே அடுத்த மாசம் என்ன நிலைமைன்னு தான் பார்க்கணும்.."

பூங்காவனத்திற்கு அம்மாவை பார்க்க கடுப்பாக இருந்தது." வாயைக் கட்டி வயித்த கட்டி அஞ்சு மாசமா கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து காசு அது.. கம்மல வாங்கி முழுசா ரெண்டு நாள் கூட காதுல போடல.  அதுக்குள்ள அடகு கடைக்குள்ள போயி உட்கார்ந்துருச்சு."..

மகளின் கோபம் நியாயமானது. அவர்களுக்கு இந்த நிலை வருவதற்கு காரணமே தேவகி தான். பிறவியிலேயே இரக்க குணம் அதிகம் கொண்ட தேவகி யார் எந்த உதவி கேட்டாலும் தன்னால் முடிந்த வரை தயங்காமல் செய்வார். இப்பொழுது அவர்கள் வட்டி கட்டி திண்டாடும் இந்த கடன் கூட அவருக்காக தேவகி வாங்கியது கிடையாது.

பக்கத்து வீட்டில் நீண்ட காலமாக கூடியிருந்த சுஜாதாவிற்கு பணம் நெருக்கடி வந்ததால் கதிரிடம் சோலை பாண்டியனின் சிபாரிசில் பணம் வாங்கிக் கொடுத்தார் தேவகி. ஜாமீன் கையெழுத்து தேவகி போட்டது.

" தோ பாரு தேவா  உன்கூட படுக்குறதுக்காக நீ கேக்குற பணத்தை எல்லாம் தூக்கி உன் கையில கொடுக்க முடியாது. நக்கி திங்கற நாய்க்கு எவ்ளோ கொடுக்க வேண்டுமோ அவ்வளவு தான் கொடுக்க முடியும்.. வாசப்படியில கட்ற நாயை கொண்டு வந்து நடு வீட்டுல வச்சு அழகு பாக்க முடியுமா? " நாய் என்று அவர் குறிப்பிடும் தேவகியோடு தான் இரவு நேரத்தில் அவர் மயங்கி கிடக்கிறார் என்பதை சோலை பாண்டியன் தனக்கு வசதியாக மறந்து விட்டார்.

இம்மாதிரி ஏச்சு பேச்சுகள் எல்லாம்  தனக்குத் தேவை தான் என்பது போல அமைதியாக இருந்தார் தேவகி. சோலை பாண்டியனுக்கு கால் அமுக்கி கொண்டே"ஏங்க.. பாவம் சுஜாதா அவளும் வேற எங்க போவா.. ஆத்திர அவசரத்துக்கு உதவி பண்ண அவளுக்கும்தான் யாரு இருக்கா.. தாயா பிள்ளையா பழகுன பழக்கம்..  இந்த ஒரு தடவை எனக்காக" அந்த நேரம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பி இருந்தாள்  பூங்காவனம்.

என்ன இந்த ஆளு இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் வந்துட்டான் போல.. யோசித்துக் கொண்டே வாயில் கதவை தட்டினாள். பொதுவாக சோலை பாண்டியன் இப்போது வீட்டிற்கு வந்தாலும் தன்னுடைய பிள்ளைகள் யாரையும் அவர் கண்முன்னே நடமாட விட மாட்டார் தேவகி. பூங்காவனம் வளர்ந்து பெரியவளாகி வேலைக்கு சென்றதும்  அவ்வப்போது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சோலை பாண்டியனை சந்திக்க நேரிடும்.

இப்பொழுது வேலை முடிந்து மகள் திரும்பிவிட்டதை அறிந்ததும் வேகமாக சேலையை இழுத்து சொருகிக் கொண்டு கதவை திறந்து விட சென்றார். கதவைத் திறந்தவர் மகள் முகத்தை பார்க்க முடியாமல் வேறு எங்கேயோ முகத்தை திருப்பிக் கொண்டார். பூங்காவனத்திற்கு புரிந்தது.

"பூங்கா சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் ரூம்ல.. நீயும் தங்கச்சிகலும் சாப்பிட்டு படுத்துடுங்க." பூங்காவனம் அவரிடம் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

கதவு இடுக்கின் மூலம் வெளியே தெரிந்த பூங்காவின் வடிவரிவத்தை  கண்களில் போதையோடு பார்த்துக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன்.

மீண்டும் தேவகியை அறைக்கு வருவதற்குள் அவரது மூளை குறுக்கு வழியில் யோசிக்க ஆரம்பித்திருந்தது.

அருகே வந்தமர்ந்த தேவகியை பார்த்து "தேவி.. நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன். உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.. எந்த பொருளுக்கும் என்கிட்ட விலை இருக்கு.. நாளைக்கு அந்த பொண்ண கூட்டிட்டு போய் கதிர பாரு. ஜாமீன் கையெழுத்து நீதான் போடணும் அவளுக்காக.." சோலை பாண்டியன் இந்த அளவிற்கு இறங்கி வந்ததே பெரிய விஷயமாகப்பட்டது தேவகிக்கு.

சுஜாதாவின் அவசர தேவைக்கு ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுத்தார் தேவகி. முதல் மூன்று மாதம் ஒழுங்காக வட்டி கட்டி கொண்டிருந்த சுஜாதாவிற்கு என்ன ஆனதோ தெரியவில்லை. இரவோடு இரவாக அந்த குடும்பமே கட்டிய துணியோடு எங்கேயோ சென்று விட்டது.

தேவகி தன்னுடைய வீட்டு வாசலில்  அந்த காகிதத்தை எடுத்து பிரித்துப் பார்த்தார்.

" என்ன மன்னிச்சிடு அக்கா. உன்கிட்ட கூட சொல்ல முடியாம ராத்திரியோட ராத்திரியா ஊர விட்டு ஓடுறேன். என்ன ஏதுன்னு சொல்லக்கூட என்கிட்ட அவகாசம் இல்லை.. பத்திரமா இரு. பிள்ளைங்கள பத்திரமா பாத்துக்கோ. நான் போறேன் கா" இந்த துண்டு சீட்டு  கசங்கியபடி தேவகி வீட்டு வாசலில் கிடந்தது.

ஜாமீன் கையெழுத்து தேவகி போட்டதால் கதிர் அவரைப் பிடித்துக் கொண்டான். அன்றிலிருந்து அவனுக்கு வட்டி கட்டுவதை அந்த குடும்பத்தின் தலையாயக் கடமையாக்கி போனது.

" கண்ட சிறுக்கிக்கும் காசு வாங்கி கொடுக்காதன்னு  நான் ஆரம்பத்துல இருந்து சொன்னேன். பொட்ட நாய்க்கு எங்க என் பேச்சு வெளங்குது. இப்போ அனுபவி.. " என்ன நினைத்தாரோ அன்றிலிருந்து தேவகி வீட்டிற்கு வருவதையும் நிறுத்தி விட்டார் சோலை பாண்டியன்..

அவர் கொடுக்கும் பணமும் நின்று விட்டது. இந்த வீடும் அவருடையது தான். என்னுடைய வரவை நிறுத்தியவர் வீட்டில் குடியிருக்க வாடகை வேறு கேட்டார் அதுவும் அதிகமாக.. அனைத்துமாக சேர்ந்து தேவகியை நோயாளி ஆக்கியது..

இரண்டு பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்க பூங்கா மட்டுமே விவரம் புரிந்து வேலைக்கு சென்று வந்தாள். அவளது வருமானத்தில் தான் குடும்பமே ஓடிக் கொண்டிருக்கிறது..

"ம்மா என்ன பிளாஷ்பேக்கா" அம்மாவின் முகத்திற்கு நேரே சொடுக்கிட்டு கேட்டாள் பூங்காவனம்.

" என்னால தானடி உனக்கு இவ்ளோ கஷ்டம்? நான்லாம் எதுக்கு தான் பொறந்தேனோ? எனக்கு பொறந்து நீங்களும் நாய் படாத பாடு படுறீங்க.. இந்த உலகத்திலேயே இருந்திருந்து உங்க அப்பன் மட்டும்தான் ஆம்பள மாதிரி அவன தேடி பிடிச்சு கட்டிக்கிட்டேன் பாத்தியா? அதுதான் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு. அந்தத் தப்பு என் வாழ்க்கைய பலி வாங்கினது பத்தாதுன்னு  என் பிள்ளைங்க தலையையும் சுத்தி வருது.." வழக்கம்போல அவரது ஒப்பாரி கேட்க முடியாமல் அங்கிருந்து எழுந்தாள் பூங்காவனம்.

"எம்மா ஏம்மா காலங்காத்தாலேயே நடு வீட்டுல உட்கார்ந்து ஒப்பாரி வச்சா அந்த வீடு விளங்குமா.. ஏற்கனவே மூதேவி நம்ம வீட்டுக்குள்ள வந்து முடியை விரிச்சு போட்டு ஆடுறது பத்தலையா உனக்கு.."..

" அது இல்லடி"

" நீ ஒன்னும் சொல்ல வேணாம் நான் வேலைக்கு போறேன்..ராத்திரி நான் வர வரைக்கும் சாப்பிடாம யாராச்சும் இருந்தீங்க கொலைகாரியா ஆயிருவேன்." வேலைக்கு கிளம்பினாள் பூங்காவனம்.

காலையில் பத்து மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் அருகே இருக்கும் பேரங்காடியில் கேஷியராக வேலை செய்வாள். பிறகு ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை அவளது தோழியோடு சேர்ந்து தள்ளு வண்டி வியாபாரத்தை பார்க்க சென்று விடுவாள். குடும்பத்திற்காக மாடாய் உழைத்தாள் பூங்காவனம். இன்று கதிருக்கு தவணைப் பணம் கட்டுவதால் ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றாள்.

சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை சுமந்து வேகாத வெயிலில் வேக்கு வேக்கென்று நடந்து செல்லும் மகளை  கண்களில் கண்ணீரோடு பார்த்துக் கொண்டே நின்றார் தேவகி..

மாலை மணி ஆறு ஆனதும்  கிளம்பி மெரினா பீச்சுக்கு வந்து விட்டாள் பூங்காவனம். அவளது தோழி சரசு அவளுக்கு முன்பாகவே அங்கே வந்து வியாபாரத்துக்கு தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தாள்.. பீச்சின் அருகே உள்ள ஏரியாவில் தான் சரசுவின் வீடு இருக்கிறது..

கடல்வாழ் உயிரினத்தை  பதமாக வறுத்து மணக்க மணக்க  விற்பார்கள். ஒரு பக்கம் மீன் குழம்பும் இட்லியும் களை கட்டும். பூங்காவின் கை பக்குவத்திற்காகவே கடையில் அனைத்து பண்டங்களும் தீர்ந்துவிடும்..

உழைத்துக் கலைத்த பூங்கா இரவு பன்னிரண்டு   மணி போல வீட்டிற்கு வந்தாள். சிந்திய மூக்கும் அழுத கண்களும் ஆக காட்சி அளித்தார் தேவகி.  அதிசயம் என்னவென்றால் அவளது இரு தங்கைகளும் இன்னும் உறங்காமல் முழித்திருந்தது.. அப்படியானால் பிரச்சனை பெரிது என்பது பூங்காவிற்கு புரிந்தது. அம்மா அவளின் இறக்க குணத்தினால் அடுத்த ஏதாவது இடியை தலையில் இறக்கி விட்டாளோ என்கிற பயத்தோடு

" என்னம்மா என்ன ஆச்சு ஏன் இத்தனை மணிக்கு தெருவுல நின்னு அழுதுகிட்டு இருக்க.."

"பூங்கா ஐயோ நான் என்னத்தடி செய்வேன்.. பாவி மகளே எனக்கு வந்தா நீ பொறக்கணும்.." அர்த்த ராத்திரி யில் அம்மாவின் அழுகைக்கு காரணம் புரியாமல் விழித்தாள் பூங்காவனம்.


தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு




Ud 1♥️


ஒரு பக்கம் வீணையின் இன்னிசையும் இன்னொரு பக்கம் தபேலாவின் நல்லிசையும் அந்த இல்லம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.. மூலிகை சாம்பிராணியின் மனம் வாசலை தாண்டி மூக்கை துளைத்தது.. தோட்டத்தில் மலர்ந்திருந்த மல்லிகையும் செண்பகப் பூவும் போட்டிக்கு மனம் தர வர  அந்த இடமே லஷ்மி கடாட்சமாக காட்சியளித்தது.

வாசற்படியில் அமர்ந்திருந்தவனிடம் டாட்டா சுமோவை துடைத்துக் கொண்டே ஒருவன் கூறினான்.

"ஹெர்ம்ம்ம்ம்".."

" என்னடா மாப்ள பெருமூச்சு பலமா இருக்கு.. "

" வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கையை வாழனும் மச்சி. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா நாம வாழுறது? "

" ஏன்டா சலிச்சுக்கிற இப்ப என்ன வந்துருச்சு.."

" நம் அய்யாவுக்கு என்ன வயசுருக்கும்? இந்த வயசுலயும் கொஞ்சநஞ்ச ஆட்டமா போடுறாரு? பசங்க எல்லாம் வெளிநாட்டுல செட்டிலயிருச்சுங்க.. இவரு இங்க ராஜ போக வாழ்க்கை வாழ்ந்துட்டுருக்காரு..  நினைக்கவே வெறுப்பா இருக்கு மச்சி.. வீட்டுக்கு போனா பொண்டாட்டி இந்த வேலை வேணாம் வேற வேலைக்கு போனு வெரட்டுறா.. நம்ப மூஞ்சிக்கு சுவிஸ் பேங்க்லையா வேலை கூப்டு கொடுப்பான்.. சொன்னா அந்த பைத்தியக்காரிக்கு எங்க புரியுது..

கல்யாணம் பண்ணி எட்டு வருஷம் பிள்ளை கிடையாது. இப்பதான் ஆத்தா கண்ண தொறந்து  என் பொண்டாட்டிக்கும் எட்டு மாசம் நடந்துட்டு இருக்கு. ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு போனா அவளோட பொலம்புல கேட்டே உசுரு போது. அவ சொல்றதுலயும் நியாயம் இருக்கிற மாதிரி தான் தோணுது.. நீ செய்ற பாவம் நம்ம புள்ள தலையில தான் வந்து விழப்போகுது. ஒவ்வொரு தடவையும் அவ இத சொல்லும் போது  அப்படி ஆயிருமானு ஒரே பயமா இருக்கு மச்சி.." கவலையாக சொல்லிக் கொண்டே காரைத் துடைத்தான்.

வாசற்படியில் அமர்ந்திருந்தவன்"ம்க்கும்.. என் பொண்டாட்டி மட்டும் என்னவாம்.. வீட்டு வாசப்படியில கால வெச்சாலே எதையாவது விட்டு வீசுறா. பிள்ளைங்கள கூட என் கூட கடைக்கண்ணிக்கு அனுப்ப மாட்றா.. அவளும் என் கூட எங்கேயும் வர மாட்றா.. என்ன வாழ்க்கைன்னு தெரியல.. "

"எழவு இந்த வேலையை விட்டு போலாம்னு பார்த்தா அதோட உசுர விட வேண்டியது தான். ஏற்கனவே கந்தன் அப்படித்தான் மேல போய் சேர்ந்தான்.. பொதக்குழியில காலை விட்டாச்சு. உள்ள இழுத்துட்டு போகாம விடாது. முடிஞ்ச வரைக்கும் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு பணத்தை சேர்த்து வச்சுரணும்.."

"ஆமாடா.. சில நேரம் தோணுது இந்த பாவப்பட்ட வேலையை செய்யறதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்னு.."

"உள்ள இருக்குற பொண்ணுக்கு எத்தனை வயசிருக்கும்?"

"என் பொண்ணு வயசிருக்கும்.. இந்தப் பாவத்தை எல்லாம் எங்க போய் தொலைக்கிறதோ தெரியல."

காரை துடைத்து முடித்தவன் வாசற்படியில் அமர்ந்திருந்தவனிடம்" எக்காரணம் கொண்டும் உன் பொண்ண இந்த ஊருக்கு வர வச்சிறாத.. "

" எனக்கு என்ன பைத்தியமா அதனாலதான ஒத்த பொட்ட பிள்ளைய என் அக்கா வீட்டில தங்க வச்சு அங்கேயே படிக்க வைக்குறேன். நல்ல வேளை மூத்தவ மட்டும் பொண்ணு மத்த மூணும் பசங்க.. எல்லாமே பொண்ணா பொறந்துறந்தா என் நிலைமையை நெனச்சு பாரேன்.. பொண்ண அப்படியே ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்து அதுக்கப்புறம் தான் இந்த மண்ணை மிதிக்க விடுவேன்.."

" ரொம்ப நல்லது.. கல்யாணத்துக்கு கூட ஐயா கிட்ட பைசா வாங்கிறாத.. நம்மகிட்ட இருக்கிறதையே புரட்டி போட்டு  செய்வோம்".. மேலும் சில ஆட்கள் வருவதை கண்டதும் இருவரின் பேச்சும் தடைப்பட்டது.

மாடியில் உள்ள அறையில் கசக்கப்பட்ட பூவாய் கிடந்தாள் நங்கை ஒருத்தி.. மேனியை மறைக்க வேண்டிய ஆடையை துறந்தவள் பார்வை விட்டத்தை இலக்கின்றி வெறித்து கிடந்தது.. ஒன்பது மாதக் குழந்தையின் தாய் அவள்..தொழிலுக்காக கணவன் கை நீட்டி வட்டி வாங்கிருக்க வியாபாரம் நட்டம் அடைந்து தவணை கட்ட தவறிருந்தான்..

அவனை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்து பிரித்து மேய்ந்ததும் இல்லாமல் ஒரு ஏக்கர் அவனின் பூர்விக தாய் பூமியை வழுக்கட்டாயமாக அபகரித்து, சிறு குழந்தை என்றும் பாராமல் அதன் கழுத்தில் கத்தி வைக்க பெண்ணவள் ஆடி போனாள். கட்டிய கணவன் கதறி அழ, குழந்தைக்காக அவளே இந்த பாவிகளின் வண்டியிலேறி அரக்கனின் மஞ்சத்திற்கு வந்து விட்டாள்.. பின் புலம் இல்லாதவர்களை தேடிப் பிடித்து அவர்களிடமிருந்து நிலம் நீச்சுகளையும் கூடவே அவர்கள் வீட்டு நங்கைகளையும் அபகரிப்பத்தில் சோலை பாண்டியன் கைத் தேர்ந்தவர்..

குளித்து முடித்து ஜவ்வாதை உடலில் அங்காங்கே தெளித்தவர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கையில் தங்க காப்பு, கழுத்தில் புலி நகம் கோர்க்கப்பட்ட் சங்கிலியோடு கண்ணாடி முன்னின்று தலை வாரினார்.. தன்னால் ஒரு குடும்ப பெண்ணின் வாழ்வே பரி போனதை பற்றி துளியும் எண்ணமில்லை அவருக்கு..

பெரிய மனிதராய் தன்னை உறுமாற்றி கொண்டவர் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த பெண்ணை எட்டி உதைத்தார்..

"எடுப்பட்ட சிறுக்கி முண்ட.. என்னடி என் வீட்டு மெத்தையில ஒய்யாரம் கேக்குதோ? இல்ல எந்திரிக்க உடம்பு நோவுதா? புருஷன்காரன் கையாளகாதவனா இருந்தா சொல்லு.. எப்பலாம் தோணுதோ வண்டி அனுப்புறேன்.. உன் தேவைய நான் பாத்துக்கிறேன்.. என்னடி சொல்ற சிறுக்கி மவளே".. சோலை பாண்டியன் எட்டி உதைத்ததில் கீழே சுருண்டு விழுந்த பெண் உணர்வு பெற்று அவரின் பேச்சில் விக்கித்து போனாள்.

"ஐயா சாமி.. வேணாயா என்ன விட்ருங்கய்யா.. நான் குடும்பத்தோட இந்த ஊர விட்டே போயிருறேன்.. ஒம்போது மாச கைப்புள்ள வெச்சிருக்கேன்ய்யா.. என்னிய வுட்ருங்கய்யா"அவள் கை தொழுது அழ

"தெ ச்சி செத்த மூதி.. வாழுற வீட்ல காலையிலயே ஒப்பாரி வெச்சிக்கிட்டு.. வனப்பா இருக்கியே வப்பாட்டியா இருந்துட்டு போயேனு கேட்டா எழவு விழுந்த மாறி அடிச்சிட்டு அழற.. இன்னும் கொஞ்ச நேரம் இங்கேருந்த காலத்துக்கும் இங்கயே இருக்குற மாறி ஆயிடும் சொல்லிட்டேன்.."அவர் சொன்ன அடுத்த கணம் சேலையை வாரிச் சுருட்டி கட்டியவள் நடக்க முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு நடந்து அந்த வீட்டு வாசர்படிக்கு வந்தாள்.

உள்ளே பூஜையறையில் மணி சத்தமும் கூடவே

"அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே"

மகிஷாஸுரமர்த்தினியை கட்டை குரலில் பாடிக் கொண்டிருந்தார் அவர் முன்பிருந்த பிரமாண்ட துர்கை சிலையின் முன்னமர்ந்து..

"ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சிட்டு சாமிய தொணைக்கு கூப்பிடுறியா.. நீ கும்பிடுறதும் ஒரு பொண்ணு தான்டா.. உன் அழிவும் ஒரு பொண்ணால தான்டா நடக்கும்.. இன்னைக்கு நான் கலங்கி நிக்குற மாறி ஒரு நாள் நீ கலங்கி நிப்படா.. சாமினு ஒன்னு இந்த உலகத்துல இருந்தா நீ புழு புழுத்து சாவடா நாசமா போறவனே"என்றப்படி கலையப்பட்ட ஓவியமாய் அங்கிருந்து வெளியேறிய அந்த பெண்ணின் பெயரும் துர்கா தான்.

பூஜை முடிந்து பட்டை கொட்டையுமாக காட்சியளித்தார் சோலை பாண்டியன்..

அவசரமாக ஓடிய பெண்ணோருத்தி வழக்கமாய் செல்லும் கடையின் முன் வந்து நின்றாள். இன்னும் கடையே திறக்கவில்லை. கை கடிகாரத்தில் மணி பார்த்தவள் மிகுந்த பதற்றதோடு காணப்பட்டாள். நகத்தை கடித்து துப்பிய பிறகு இப்பொழுது வேறு வழியில்லாமல் சதையை ஓரத்தில் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள்..

கடையின் ஓனர் ஸ்கூட்டரில் இருந்து இறங்க"என்ன பூங்கா இவ்ளோ காலைலே வந்துருக்க".. என்றார் ஆச்சர்யத்தோடு.

"சேட்டு நின்னு பேச நேரமில்லை. கடைய சீக்கிரம் தொறங்க. பொருள வெச்சிட்டு துட்ட எடுத்துட்டு போய் ஒரு பொறம்போக்கு மூஞ்சில எறியனும்.."கடுகடுத்தாள் பூங்கா..

கடை திறக்கப்பட முதல் போனியே அவள் தான். காதில் அணிந்திருந்த கம்மலை கழற்றி கொடுத்தாள்..

"ஆறாயிரம் தரான் சேட்."

"யோவ் அநியாயம் பண்றேய்யா..ரெண்டு கிராம் வரும்ய்யா.. நல்லா உரசி பாரு சேட்டு.. ஒழுங்கா எடை போட்டியா இல்லயா"..

"தோ பாரு பூங்கா.. நீ தான் காலையில மொத போனி.. நீயே இப்படி குடைச்சல் கொடுத்தா எப்படி? சரி நீ நம்ம ரெகுலர் கஸ்டமர்னால சேட் உனக்கு எட்டாயிரம் தரான்.."..

"நீ ஆணியே புடுங்க வேணா.. எதுத்த கடைக்காரன் கடைய தொறந்துட்டான் போல.. நான் அங்கே போறேன்.. நம்ம சேட்டு நாளப்பின்ன உதவுமேனு இங்க வந்தேன் பாத்தியா.. உன் செருப்ப கொடுய்யா.. அதுலயே அடிச்சிக்கிறேன்.."பூங்கா கம்மலை பிடிங்கிக் கொண்டு எழ

"ஹரே பேட்டி இரும்மா.. இப்போ என்ன சொல்லிட்டேனு போற..அவன் அநியாய வட்டி போடுவான்.. போறதனா போ.. கொடுக்கும் போது பொருள பாதி சொரண்டிட்டு தான் கொடுப்பான் துஸ்மன்.. எனக்கு ஒண்ணுமில்ல.."

"சொரண்டுனாலும் பரவால்ல.. எனக்கு உடனே பத்து ரூபாய் வேணும் சேட்டு.. நீ எட்டு உன் மண்டையில கொட்டுனு அதுலயே தொங்கிட்டு நிக்குறே..பழக்கம் வேற பணம் வேறய்யா.. நான் அங்கேயே போறேன்"மீண்டும் அவள் கிளம்ப

"சரி என்ன இப்ப பத்தாயிரம் வேணும் உனக்கு.. ஒக்காரு..சின்ன புள்ளையிலருந்து பாக்குறேன் உன்ன.. அதனால தரேன்.. ஆமா எதுக்கு அவசரமா இவ்ளோ பணம்"பணத்தை எண்ணிக் கொண்டே கேட்டான் சேட்.

"ம்க்கும் வேறதுக்கு அந்த வீணாப் போன கதிரு கிட்ட அவசரத்துக்கு வட்டிய வாங்கிட்டு நான் படுற பாடு இருக்கே".. நொடித்து கொண்டாள் பூங்கா..

"ஐயோ அவனா.. டெட் பாடி கிட்டருந்தே துட்ட புடிங்கிருவானே.. பயங்கர ஆளாச்சே..அதெல்லாம் வெறும் கண் துடைப்பு..அவன் வேறும் வெத்து வேட்டு. அவனுக்கு பின்னால அந்த சோலை பாண்டியன் இருக்கான்ல சேட் கேள்விப் பட்டான்..ஆமா அந்தாளு தானே உங்கம்மாவ"

"ப்ச் இப்ப என்ன? ஆமா சேட்டு அந்தாளு எங்கம்மாவ வெச்சிருந்தான்.. படுக்க வேற பணம் வேற.. போதும் பத்தாயிரத்த பதறாம நீ பத்து வாட்டி எண்ணுனது.. கொண்டா பணத்தை"அங்கிருந்து கிளம்பினாள் பூங்கா என்கிற பூங்காவனம்.

அவசரமாக ஓடியவள் டானென்று  கந்து வட்டி கதிரின் வீட்டின் முன்பு நின்றாள்.. மார்க்கெட் மொத்தமும் கதிரின் கீழ் தான் அடங்கியிருந்தது.. கதிர் பைனான்ஸ் என்கிற பெயரில் அநியாய வட்டிக்கு பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தான் கதிர்..

சரியாக பத்து மணிக்குள் அவன் வீட்டு வாசற்படியில் நின்றாள் பூங்காவனம்.. அங்கிருந்த அவனின் ஆட்கள்

" என்னைக்கு இந்த பொண்ணு மாட்ட போகுதோ" என்கிற ரீதியிலும்

" கடவுளே சின்ன பொண்ணா இருக்கு எப்படியாவது அசனையும் வட்டியும் கொடுத்துட்டு இந்தப் பாவி கிட்ட இருந்து தப்பிச்சிடனும். வட்டியை வாங்கிக் கொடுக்க முடியாதவங்க எல்லாரையும் இவன் அந்த ஆளு சோழ பாண்டியனுக்கு கூட்டி கொடுக்கிறான். தின்னுட்டு போட்டு எச்சில் பொறுக்கி தின்னுட்டு இந்த நாய் சுத்துது. தலையெழுத்து இவன் கிட்ட எல்லாம் வேல பாக்கணும்னு.. " இப்படியாக சிலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

வெளியே செல்வதற்கு கிளம்பி வந்தான் கதிர். அங்கே அவனுக்காக காத்திருந்த பூங்காவை கண்டதும் "என்னம்மா பூங்காவனம்.. சௌக்கியமா.. ஆளு துரும்பா இளைச்சு போயிட்டியே.. இதெல்லாம் உனக்கு தேவையா? நீ கொஞ்சம் மனசு வச்சா எனக்கே உத்தரவு போடுற இடத்துல இருப்ப.." கதிர் சுற்றி வளைத்து எதை சொல்கிறான் என்பது பூங்காவனத்திற்கு புரிந்தது.

" இந்தாங்கண்ணா இந்த மாசம் உங்களோட வட்டி.. " பணத்தை அவன் கையில் வைத்தாள் பூங்காவனம். பணத்தை எண்ணிக் கொண்டே

"வட்டி மட்டுமே கட்டிகிட்டு இன்னும் எவ்ளோ நாளைக்கு இருக்கலாம்னு இருக்க.. அசலுனு ஒன்னு இருக்கே ஞாபகத்துல இருக்கா?"

"கூடிய சீக்கிரம் வட்டியும் அசலுமா அண்ணே.."என்றவள் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

"இந்தாம்மா பூங்கா.. உன் தங்கச்சிங்க ரெண்டயும் கண்ணுலயே காண முடியலையே.."குறிப்புணர்ந்து திரும்பிய பூங்கா

"சீக்கிரம் முழு பணத்தையும் கொடுத்தரேன்".. கனத்த மனதோடு அங்கிருந்து அகன்றாள்.. அவள் சென்றதும் கதிர், சோலை பாண்டியனுக்கு அழைத்தான்.

"ஓம் சக்தி..சொல்லுடா கதிரு"

செய்றது கேப்மாறி தனம் இதுல கடவுள் நம்பிக்கை வேற மனதில் நினைத்தவன்"அண்ணே வணக்கம்ண்ணே"

"என்ன விஷயம்"

"அந்த பொண்ணு பூங்கா இந்த தவணையும் கட்டிருச்சு.. எனக்கு என்னமோ"..

"ம்ம்ம்.. இன்னும் மூணு நாள்ல வட்டியும் அசலையும் எடுத்து வைக்க சொல்லி வீட்டுக்கு ஆள் அனுப்பு"

"அது எப்டிண்ணே அந்த பொண்ணு வட்டிய ஒழுங்கா கொடுத்துட்டு தானே இருக்கு"

"சொன்னத செய்டா பரதேசி பயலே.. என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு வந்துட்டியா.."

"ஐயோ அப்படி இல்லண்ணே.. நீங்க சொன்ன மாறியே செஞ்சர்றேன்.."அழைப்பு தூண்டிக்கப்பட

"இன்னும் எத்தனை நாளைக்குடி என்கிட்டயிருந்து ஓடுவ".. சோலை பாண்டியன் முகம் இறுகியது..

தொடரும்..

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...