சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 10


மூடியது அரைக்கதவு மட்டுமல்ல செந்தூராவின் இமைக்கதவும் தான்.கடத்தல் கல்யாணம் அதன் பின் பஞ்சாயத்து இப்படி அவளை தொடர் சம்பவங்கள் அலைக்கழித்திருக்க சாமி படங்களுக்கு விளக்கேற்றியவள் நீரனின் அறைக்குள் வந்து உறங்கி விட்டாள். மூடிய கதவிற்கு அப்பால் நின்று சற்று நேரம் கதவை பார்த்தவன் பெருமூச்சுடன் தனது தோப்பிற்கு சென்றான் அவனுடன் ராசுவும்..தான் கட்டிய தாலியின் ஈரம் கூட காய்ந்திருக்காத நிலையில் மனைவி தனியாக வீட்டில் கணவன் சிந்திக்க தனிமை தேடி காட்டில்.. பம்புசெட்டின் சுவரில் அமர்ந்தவனை பார்த்த ராசு

“மச்சான் எல்லாமே பிளான் படி தானே நடந்துருக்கு. இதுக்கு எதுக்கு பீலிங்குன்னு கேக்குறேன்..சொல்ல போனா போட்ட பிளான்ன வுட செமயா நடந்துருக்கு. என்ன ஒரு ட்விஸ்ட்டு உன் பொண்டாட்டி அவங்க அப்பன எதுத்து நின்னு உனக்கு வக்காலத்து வாங்கி பேசுனது தான். என்ன கொஞ்சம் கிள்ளேன் உண்மயா இல்ல என் பிரம்மையானு தெரிஞ்சிக்குறேன்”தன் முன்னால் கையை நீட்டி கொண்டிருந்த ராசுவின் கையை இறுக்க பிடித்து கீழே கிடந்த உடைந்த செங்களை எடுத்து பரக்கு பரக்கென்று தேய்க்க ராசு துள்ளி துடித்து நீரனை எட்டி ஒரு மிதி மிதித்து கையை காப்பாற்றி கொண்டான்.

“மூதேவி உன்ன லேசா கிள்ள தானே சொன்னேன்.மீனு செதில தேய்கிற மாறி பரக்கு பரக்குனு தேய்ச்சு பாதி சதைய எடுத்துட்டுடியே வயிறு எரிஞ்சு சொல்றேன்டா உனக்கு மொத ராத்திரின்னு ஒண்ணே நடக்காதுடா”

“இப்ப மட்டும் நடக்க நூறு சதவீதம் வாய்ப்பு இருக்கோ.. வயித்து எரிச்சல கெளம்பாதடா.. அவள பாத்தல்ல என்னவோ பெரிய இவ மாறி மூஞ்சில அடிக்குற கணக்கா கதவ படிர்னு அடிச்சு சாதிட்டு போறா.. அது என்ற ரூமுடா என்னயே உள்ள போவ வுடாம வந்த ஒடனே அவ வேலைய காட்டுறா.. இப்டியே போனா என்ற விஷயத்துல எல்லாம் அம்மணி மூக்க நொலைப்பாங்க போல. வுடக் கூடாது மச்சான்.. நானா சொல்ற வரைக்கும் அவளுக்கு எதுவுமே தெரிய கூடாது..”

“மச்சான் என்ன கேட்டா நீ வீணா மனச போட்டு கொழபுரன்னு சொல்லுவேன். அந்த பொண்ண பாத்தியா அவங்க அப்பன் கிட்ட கூட உன்ன விட்டு தராம எப்டி நின்னுச்சுனு. அது மனசுல இன்னும் நீ இருக்க மச்சான். இல்லேன்னு வெச்சிக்கோ இந்நேரம் அனாதை பொணமா மார்ச்சுவரில கெடந்துருப்ப. உனக்கு பக்கத்துலயே நானும்.. அவங்க அப்பன் தூக்க முடியாம தூக்கிட்டு ஓடி வந்தானே எம்மா பெரிய அருவா பாத்தியா.. போட்ருந்தா தல தனி முண்டம் தனியா ஆயிருக்கும்”.

“அவ தான் நம்மள காப்பாத்தனானு சொல்றியா.. போடா வெண்ண. அவ ஊருசனம் முன்னாடி உத்தமி வேஷம் போடுறாடா..அவங்கப்பு நீ என்ற மவளே இல்லன்னு போறப்போ ஒரு லுக்கு விட்டான் பாரு. அதுல என்ன இருந்துச்சு தெரியுமா”

“எனக்கு இந்த நோக்கு வர்மம் எல்லாம் தெரியாது டோய்”

“ப்ச் அந்த பார்வையில எப்டி என்ற ஆக்ட்டிங்னு ஒரு தற்பெரும லுக்கு இருந்துச்சு.இதுல இருந்து என்ன தெரியுது”ஹஸ்கி வாய்ஸில் நீரன் கேட்க அதே ஹஸ்கி வாய்ஸில் ராசு

“ஒன்னுமே தெரியல..என்ற கையில இருந்து தோலு வருண்டு ரத்தம் வரறது தான் தெரியுது”

“த்து..உனக்கு தெரியல மச்சான் உண்மையா தெரில”

“ஐயோ தெரில மச்சான் என்ற அப்பத்தா சத்தியமா தெரியல நீ சொல்லி தொல ப்ளீஸ்”

“அப்பனும் மவளும் சேந்து நாடகம் ஆடுதுங்க மச்சான்.. என்ற கெஸ் சரின்னா இந்நேரம் அவ அவங்க அப்பனுக்கு ஃபோன போட்டு நடந்ததயும் நடக்கப் போவதயும் சொல்லிட்டு இருப்பா..அதுக்கு தானே வேட்டிய மடிச்சு கட்ற சாக்குல என்ற ஃபோன கொஞ்சம் புடின்னு அவகிட்ட கொடுத்துட்டு மறந்த மாறி வந்தேன்”

“ஆஹ் எரிச்சல் தாங்கலயே.. அவ எதுக்குடா இதப் போயி அவங்க அப்பன் கிட்ட சொல்றா..”

” ஊருசனத்துக்கே அவள பத்தி உங்க அப்பன பத்தி நல்லா தெரியும்.ஏற்கனவே ஊரக்கூட்டி நடு சபையில என்ன சுட்டு அவ பேர அவளேக் கெடுத்துக்கிட்டா. ஊருசனம் முச்சிடும் அவ அப்பன் வளப்ப பத்தி தானே கழுவி ஊத்துன்னுச்சி.அன்னிக்கு ராவுக்கே நாம பொண்ண தூக்கிட்டோம். அதும் வெளிய தெரிஞ்சு இந்த நாள் வரைக்கும் அந்தாளு மேல இருந்த பயம் போயி எல்லாரும் எப்டி பேசுனாங்க. இப்ப அவன் மவளயே ஒருத்தன் கடத்திட்டு போயி தாலி கட்டி கூட்டியாந்துருக்கான் இனிமே அந்த ஆள ஆரு மதிப்பா. ஊருக்குள்ள இனி நமக்கு தான்டா மவுசு கூட. அந்தாளு எதிரி எல்லாம் நம்ம பக்கம் வருவானுங்க.அவங்க அப்பன அவமானப்படுத்துன என்ன அவ்ளோ சீக்கிரம் வெட்ட விட்ருவாளா? ஊருசனம் முன்னாடி நல்ல பொண்டாட்டினு பேரு எடுத்துகிட்டே உள்ள எனக்கு குழி வெட்ட போறா.. என் கூட வாழ்ந்தே என்ன சாகடிக்க போறா.. இப்ப புரியுதா..அப்பன் மவ உறவ எல்லாம் காதும் காதும் வெச்ச மாறி அவங்களுக்குள்ள வெச்சிப்பாங்க..இதுக்கு தானே வேட்டிய மடிச்சு கட்ற கேப்புல என்ற ஃபோன புடின்னு அவகிட்ட கொடுத்துட்டு மறந்த மாறியே இங்கன வந்துட்டேன்”

“மச்சான் விதிய பாத்தியா நீ அவளுக்கு குழி வெட்ட நெனைக்குற அவ உனக்கு குழி வெட்ட நெனைக்குற.. இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க ரெண்டு பேரும் வெட்ற குழியில என்ன தான்டா தள்ளி பொதைக்க போரிங்க”

“அதும் நடக்கும் ஆனா நாள் ஆவும்”இப்பொழுது உடைந்த செங்களை கையில எடுப்பது ராசுவின் முறையாகும்.

“கண்ணு இதெல்லாம் சரியா வருமா.. எதுக்கு ஊருசனதுக்கு நீ பயப்படுற? அய்யன் இருக்கையில. பேசாம அய்யன் கிட்ட இந்த விஷயத்த வுடு. அவன ஒரே போடு போட்டுட்டு என்ற மவளுக்காக நா உள்ளாரா போய்ட்டு வரேன்.. சரி வேணாம்னு நீ சொன்னனா இந்த வேலையெல்லாம் செய்ய நம்ம கிட்ட ஆளா இல்ல.. தடயமே இல்லாம முடிச்சு போடலாம் கண்ணு”

“நோ டேடி.. இதுல நீங்க இன்வொல்வ் ஆக வேணா. கொஞ்ச நான் நான் சொன்ன மாதிரி நடிங்க. எங்க என்ன வெளிய பார்த்தாலும் கறிச்சு கொட்டுங்க.முடிஞ்சா ரெண்டு அற கூட விடுங்க. நீங்க என்ன பேசற பேச்ச பார்த்து இந்த ஊரே நீரன் அப்பா பொண்ண பிரிச்சிட்டானு சொல்லணும்.ஜமீனு வம்சமுன்னு அவனுக்கு ஒரு மருவாத இருக்குல்ல அத அழிக்கணும். அவன் கூட வாழ்ந்தே அவன கொல்றேன் டேடி.. நீங்க என்ன நெனச்சு பீல் பண்ணாதீங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க. உடம்ப பாத்துக்கோங்க. நான் தெனைக்கும் ஃபோன் பண்ணுவேன்.”என்னதான் குரலில் உறுதி இருந்தாலும் அந்த அளவிற்கு வலு இல்லாமல் இருந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. தனக்கே இப்படி என்றால் தன் உயிருக்கும் மேலாக தன்னை நேசிக்கும் தனது தந்தையின் நிலை எப்படி இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடிந்தது.. தன்னால் முடிந்த மட்டும் தந்தைக்கு ஆறுதல் கூறி தெரியப்படுத்தி விட்டு மாமனிடம் தந்தையை பார்த்துக்கொள்ள கூறியவள் கண்ணம்மாவிடம் நேரத்திற்கு தந்தைக்கும் மாமனுக்கும் உணவு அளிக்க வேண்டும் என கட்டளையிட்டாள்.

மேலும் தான் பிறந்த வீட்டுடன் தொடர்பில் இருப்பதை வெளியே யாரிடமாவது கூறினால் கண்ணம்மாவின் குடும்பத்தையே வேர் அறுத்து விடுவதாக மிரட்டி விட்டு தொடர்பை துண்டித்தாள் செந்தூரா.அதன்பின் தான் செய்ய வேண்டியவற்றை நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். நீரன் ஒருவனே அந்த வீட்டில் இருப்பதால் வீடு ஒழுங்கற்று கலைந்து கிடந்தது. ஒரு ஆண் வசிக்கும் வீடாக அந்த வீடு காட்சி அளித்தது. நடுவீட்டில் தேங்காய்களை போட்டு வைத்திருந்தான். வீடு முழுவதும் அவன் கலட்டி போட்ட உடைகளே கிடந்தது. சமையலறைக்குச் சென்று நோட்டமிட்டாள். அவசரத்திற்கு செய்து சாப்பிட ரவையும் கோதுமையும் நிறைய இருந்தது. குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்தாள். குடித்து முடித்தது குடித்து பாதியாக வைத்தது இன்னும் சீல் திறக்காதது என விதவிதமான பாட்டில்களில் பீர் அவள் கண்முன்னே காட்சி அளித்தது. ஆங்காங்கே சிகரெட் துண்டுகள் அவளின் அருவருப்பை சம்பாதித்துக் கொண்டது. பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் பின்பக்கம் சென்று பார்த்தாள்.

இதைவிட பெரும் கொடுமையாக இருந்தது அங்கே. கிணற்றை சுற்றி பாசம் பிடித்திருந்தது. நீரனின் அறையில் ஒரு கழிவரை இருந்ததை அவள் சற்று முன்பு கண்டிருந்தாள். வீட்டு உபயோகத்திற்கு கிணற்றின் அருகேயே குளியலறையோடு சேர்ந்த கழிவறை இருப்பதை கண்டாள். அதை திறந்து பார்க்கவில்லை ஏனெனில் அவளுக்கு தெரியும் எப்படியும் இந்த கழிவறை சுத்தமாக இருக்காது என்று. வீட்டைச் சுற்றிலும் அழகிய பூஞ்செடிகள் கவனிப்பாரற்று கிடந்தது. நீரனின் அறைக்குச் சென்று குளித்து முடித்து வெளியே வந்து மாற்றிக்கொள்ள வேறு உடை இல்லாததால் அவனின் கையில்லாத சிங்லேட் மற்றும் முட்டி வரை இருக்கும் ட்ரவுசரை அணிந்துகொண்டு தன்னால் முடிந்த மட்டும் அந்த வீட்டை அடித்து சுத்தம் செய்தாள். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் அள்ள அள்ள குறையாமல் குப்பை வந்தது நீரனின் வீட்டிலிருந்து. ஒருகட்டத்தில் களைத்து ஓய்ந்து விட்டாள். காலையில் உண்டது பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

” எங்க போய் தொலைஞ்சான் இவன் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு போய் கொடுப்போம்னு அக்கறை இருக்கா? வரட்டும் இன்னைக்கு.. ” பற்களை கடித்துக் கொண்டு மீதி இருந்த வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள். கதவு தட்டும் சத்தம் கேட்டது. துடைப்பத்துடன் சென்று கதவை திறந்தாள். அங்கே சின்னு தூக்கில் உணவுடன் நின்றுகொண்டிருந்தான்.

“அக்கா இந்தாங்க சாப்பாடு.. சாப்புட்டு வேலைய பாருங்க..”சின்னுவின் தாய் அவள் வீட்டின் வெளியே நின்று

“கோழி அடிச்சு கொழம்பு வைக்க நேரமாயிடுச்சு கண்ணு.. பசியோட இருப்ப.. நல்லா சாப்புட்டு வளந்த புள்ள வேற.. என் கைபக்குவம் பிடிக்குமோ என்னவோ கொஞ்சம் பொறுத்துக்கோம்மா..”மென்று விழுங்கி ஓரளவு சரளமாகப் பேசினார் காஞ்சனா.அவரைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினால் செந்தூரா.

“அட என்னக்கா நீங்க நீரண்ண உடுப்ப போட்ருக்கீங்க.. அது வந்தா கத்த போது.. முன்ன ஜமீனு அய்யா உசுரோடு இருக்கும்போது கூட நீரண்ண துணிய தொட மாட்டாங்க..அண்ணனுக்கு அதோட பொருள யாராச்சும் தொட்டாக் கூட புடிக்காது.. நீங்க வேற துணி போட்டுக்கோங்க அக்கா”

“ஆஹான் அம்புட்டு தகிரியம் இருக்கோ உங்க அண்ணனுக்கு அதையும் தான் பாத்து புடுறேன் இன்னைக்கு.. நீ ஏன் வெளியில நிக்குற.. உள்ளார வா”

“இல்லக்கா நா பசங்க கூட வெளாட போறேன்.. அக்கா ஒன்னு சொல்லட்டா. இதுக்கு முன்னாடி உங்கள பார்த்திருக்கேன் ஆனா பேசினது இல்ல..பாக்கவே பயமா இருக்கும்.இதுல எங்குட்டு நான் வந்து பேசுறது.இந்த ஊரிலேயே நீங்கதான் க்கா ரொம்ப அழகு..அசப்புல பார்க்க அனுஷ்கா மாறியே இருக்கீங்க..”சின்னு கூறியதை கேட்ட செந்தூரவிற்கு சிரிப்பு வந்தது. விளையாட்டுத்தனமான அந்தச் சிறுவனையும் அவனின் வெகுளியான தாயையும் அவளுக்கு பிடித்திருந்தது.சின்னு சென்றவுடன் கதவை தாளிட்டவள் முதல் வேலையாக சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தாள்.அவளுக்கு இருந்த பசியில் இருவரின் சாப்பாட்டையும் அவள் ஒருவளே சாப்பிட்டு முடித்தாள். இரவு கையில் சில கவர்களுடன் உள்ளே வந்தான் நீரன்..தான் வாங்கித் தந்த சேலையைத் தவிர மாற்றிக் கொள்ள அவளுக்கு வேறு உடைகள் இல்லை என்பதால் ராசுவுடன் டவுனிற்கு சென்று செந்தூரவிற்கு கொஞ்சம் சேலைகள் சுடிதார்கள் இரவில் அவள் போட்டுக் கொள்ள பைஜாமாஸ்கள் என தன்னால் முடிந்த வரை வாங்கி வந்திருந்தான். டிவியின் முன்பு அமர்ந்திருந்தவள் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் தனது கவனத்தை தொலைக்காட்சியில் செலுத்தினாள்.

அவள் முன்பு தான் வாங்கி வந்திருந்த துணிகள் அடங்கிய பைகளை வைத்தவன்”இதுல கொஞ்சம் டிரஸ் இருக்கு.. மாத்திக்கு துணி இல்லாம இருந்திருப்ப. போய் குளிச்சுட்டு இந்தத் துணியை போடு”அவள் அசையாமல் அமர்ந்திருக்க அப்பொழுதுதான் நான் அவளை நன்றாக கவனித்தான் அவன். அவள் அணிந்திருந்தது அவனின் உடை. நீரனுக்கு சிறுவயதில் இருந்தே தன் உடமைகளை பிறர் எடுத்தால் பிடிக்காது. அப்படியிருக்க இப்பொழுது அவனது உடையை அவள் அணிந்து இருக்கவும் அவனுக்கு கோபம் வந்தது.

“ஹேய் ஆர கேட்டுடி என்ற துணிய எடுத்து போட்ருக்க..”வெகு நிதானமாக

“ஆர கேக்கனும்”

“என்னய கேக்கணும்..இதுவே கடைசியும் மொதலுமா இருக்கட்டும். போயி என் சட்டைய கழுட்டி நல்லா சவுக்காரம் போட்டு ஊற வைக்குற.. இனிமே என்ற பொருள தொடுற வேல வெச்சிக்காத”பல்லைக் கடித்து வார்த்தைகளை துப்பி கொண்டிருந்தவன் பாதியில் பேச்சை முடித்து விட்டான்.அவள் அவனது கண் முன்னாள் சட்டையும் ட்ரவுசரையும் கழற்றி அவனது முகத்தில் தூக்கி வீசிவிட்டு அவன் வாங்கி வந்திருந்த பைஜாமாஸ்களில் ஒன்றை எடுத்து போட்டு கொண்டாள்.நீரன் பேயரைந்ததை போல் பார்த்து கொண்டிருக்க நமட்டு சிரிப்போடு உள்ளே செல்ல போனவள்

“உன்ற ஃபோனு இன்னைக்கு என்ற கிட்ட இருக்கட்டும்.ஆன்லைன் ஷாப்பிங்ல எனக்கு இன்னும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்.. ஆல்ரெடி வாங்கியிருக்க போல..நானும் கொஞ்சம் வாங்கணும்.. சரியா”அவள் பாட்டிற்கு சென்று விட்டாள். முதல் முறை பெண்மையின் மென்மை கண்டு வெம்பி தவித்து ஆவியாகி போனான் நீரன்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்