சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 29


மகாராஷ்டிரா என நீரன் சொல்லியவுடன் சிவலோகன் புன்னகை செய்தார்.. ஆனால் அவர்களுக்கு நேரம் மிக மிக குறைவாக உள்ளது.. இதில் மறுபடியும் நாட்கணக்கில் பயணித்து அந்த இடத்திற்குச் சென்று இவர் கூறிய அடையாளம் அங்கே எங்கே உள்ளது என்று தேடிக் கண்டுபிடிப்பதற்கு எவ்வளவு நாட்களாகும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்த லட்சணத்தில் கண்டிப்பாக செந்தூராவிற்கு குழந்தை பிறந்துவிடும்.

குழந்தை பிறந்த மறுகணமே அவள் உயிர் அவளை விட்டு நீங்கிவிடும். என்ன செய்வது என்று புரியாமல் நீரன் தவிப்பதைக் கண்ட கணி

“ஒன்னும் ஒர்ரி பண்ணிக்காதீங்க ப்ரோ.. நா நாம எல்லோருக்கும் பிலைட் டிக்கெட் புக் பண்றேன். எனக்கு தெரிஞ்ச ட்ராவல்ஸ் ஒன்னு இருக்கு. அங்கெருந்து புக் பண்ணா உடனே டிக்கெட் கெடச்சிரும்.. என்ன கொஞ்சம் எக்ஸ்ட்ரா செலவாகும்.. “

“எவ்ளோ ஆனா என்ன அத உடனே புக் பண்ணுங்க ஜீ”..கணி உடனே டிக்கெட் புக் செய்யும் வேலையில் இறங்க சிவலோகன்

“ஏன்பா நீரா அந்த செல எங்கப்பா.. கையோட கொண்டு வந்துருக்கீங்க தான”

“ஆமாங்கப்பா ..மொத தடவ நானும் ராசுவும் அங்க போவும் போதே எதுக்கும் இருக்கட்டும்னு அத எடுத்துட்டு தான் போனோம்”என்றவன் அந்த சிலையை அவரிடம் எடுத்து காட்டினான். அதன் அழகிய வேலைப்பாட்டை பார்த்த அவர் அதனை ஸ்பரிசிக்க அவருள் ஏதோ சிலிர்ப்பு..

“ரொம்ப பாவம் அந்த ராணி..இந்த செலயில என்ன இருக்கு தெரியுமா”

“என்ன இருக்கபோது எங்க உசுர வாங்குற எமன் இருக்க போது”ராசு கடுப்போடு கூற

“இல்லய்யா இதுல அந்த ராணியோட ஆச இருக்கு. அவ அந்த ராஜா மேல வெச்சிருந்த அன்பு இருக்கு.. அவளோட கனவு இருக்கு.எல்லாத்துக்கும் மேல அவளோட ஆச நிராசையான வேதனயும் கோபமும் அவளோட ஆங்காரமும் ரொம்பவே இருக்கு.. அத என்னால உணர முடியுது”…

“நீரா டிக்கெட் கெடச்சிருச்சு.. கெளம்பலம்.. நாளைக்கு மார்னிங் கெளம்புனா மதியதுக்குள்ள அங்க இருப்போம்..எல்லாம் பேக் பண்ணிட்டு இப்பவே சென்னைக்கு கெளம்பலாம்..அப்பதான் மார்னிங் பிலைட்ட புடிக்க ஈசியா இருக்கும்.”கணி சொன்னதும் சிவலோகனும் அவனும் பயணத்திற்கு தேவையானவைகளை எடுத்து வைக்க செந்தூரா நீரன் சிவலோகன் மூவரும் பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள ராசுவும் கணியும் முன்னால் அமர்ந்து கொண்டனர்.செந்தூராவுக்கு ரொம்பவே அசதியாக இருந்தது.ஆனாலும் அதைப்பற்றி அவள் வாய் திறக்கவில்லை. இந்த நேரம் உடல் அசதியை பார்க்கும் நேரம் இல்லை.உயிர் வாழ வழி தேடி அலையும் நேரம்.

அவளது முகத்தை வைத்தே அவளின் நிலையை அறிந்து கொண்ட நீரன் போகும் வழியில் கணியை ஒரு நல்ல ஓட்டலில் நிறுத்தச் சொன்னான்.அவன் நிறுத்தியதும் அவளுக்காக பாட்டிலில் ஃப்ரஸ் ஜூஸ் வாங்கி வந்தவன் அதை அவளிடம் குடிக்கக் கொடுத்தான்.அவளைத் தன் தோள் சாய்ந்து அமர வைத்து அவளது கூந்தலை தடவிக் கொடுக்க அப்படியே கண் அயர்ந்தாள் செந்தூரா..பாதி தொலைவு கணியும் மீதி தொலைவை ராசுவும் ஓட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்தனர்..செந்தூரா சாப்பிடாமல் தாங்க மாட்டாள் என்பதால் ஏர்போர்ட்டில் உள்ளே இருக்கும் ஒரு காபி ஷாப்பிற்கு அனைவரும் சென்று அங்கே கிடைத்த சிற்றுண்டி வகைகளை வேகமாக உண்டு முடித்து சரியான நேரத்திற்கு செக்கிங் முடித்து விமானத்தில் ஏறினர்..

பிரசவ நாள் இன்றோ நாளையோ என்ற நிலையில் செந்தூரா இந்த பயணத்தை மேற்கொள்ள அவள் பயப்படுகிறாளோ இல்லையோ நீரன் ரொம்பவே பயந்து போனான். ஆனாலும் என்ன செய்வது இப்போது அவள் உயிரை காக்க வேண்டுமானால் இந்த பயணத்தை அவள் மேற்கொண்டுதான் ஆகவேண்டும். கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு அவளுக்கு சீட் பெல்ட்டை மாட்டி விட்டவன் விமானம் மேலே எழும்போது அவளது கையை இறுகப் பற்றிக்கொண்டான். அவளுக்கு இது எதை நினைத்தும் பயமில்லை. இன்றோடு அந்த சாபத்திலிருந்து தன் கணவனுக்கு விமோசனம் கிடைக்க போகிறது. தானும் தனது ஆசை கணவனும் இனி காலங்கள் உள்ளவரை காதலுடன் வாழலாம் என்று தனது உடல் நிலை அனுமதிக்காத வேளையிலும் அதைப் பற்றி அவனிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் அவனுக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஏன் நீரா பேய் அறைஞ்ச மாதிரி இருக்க.. இன்னியோட அந்த சாபம் உன்ன விட்டு போக போகுது. எவ்வளவு சந்தோஷமா இருக்கனும் அத விட்டு புட்டு இடி வுழுந்த மாறியில்ல மூஞ்சிய வெச்சிருக்க.. இந்த மூஞ்சில உன்ன பாக்க நல்லாவே இல்ல”

“என்ற மொகர லட்ச்சணமே இப்டிதானுங்க அம்மணி. இந்த மூஞ்சி அழக பாத்து தான் நீங்க கெரங்கி கேர்ராகி கெடக்குறீங்க”

“அய்ய ..வேலயத்தவன் பொண்டாட்டி முடிய புடிச்சு வெட்டுனானாம்.. அந்த கதையாள இருக்கு..உன்ன நீயே அழகுன்னு சொல்லிக்கிறியாக்கும். இவரு முகர கட்ட அழகுல நாங்க கெறங்கி கெடக்கோமாம் கெறங்கி இடிச்சேனா தெரியும்..”அவள் உதட்டை சுளிக்கும் அழகில்

“என்னடி வாயி வாசப்படி வரைக்கு போது.. இதெல்லாம் நல்லா இல்ல.. புடிச்சு கடிச்சு வெச்சிருவேன் பாத்துக்கோ”

“எங்க உனக்கு கடிக்க வேண்டிய எடத்துலயே கடிக்க துப்புல்ல.. வந்துடாறு என் வாய கடிக்க”

“அம்மணி டபுள் மீனிங்குல தாக்குறீங்க போல”

“நா ரூமுல தனியா இருக்குறப்போ என் உதட்ட கடிக்க துப்புல்ல..இம்புட்டு பேரு இருகாங்க இங்கயா கடிச்சு வைக்க போறேன்னு கேட்டேன்.. காமல காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளா தெரியுமாமே.. உன்ற புத்தி போற போகுக்கு என்னத்துக்கு என்னியும் கூட்டு சேக்குற”

“அது வந்துடி..”நீரன் பேச வருவதற்குள் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ராசு

“மச்சான் நாம சாபத்துல இருந்து வெளிய வர வழியத் தேடி போறோம்..சாப்பாட்டு கூடய தூக்கிட்டு பிக்னிக் போகல.. பிளைட்டு உள்ளார ஒக்கார்ந்துட்டு இருக்கோம்..அடக்கி வாசி””

உனக்கு எங்கடா வலிக்குது.. என்ற பொண்டாட்டி கூட நாலு வார்த்த மணக்க மணக்க பேசுனா உனக்கு பொறுக்காதே..போனா ஜென்மத்துல என்ற வப்பாடியா இருந்துருப்பியோ” நீரன் இவ்வாறு கூறியதும் செந்தூரா திரும்பி ராசுவை பார்த்து முறைத்தாள்.

.”அம்மணி உன்ற வூட்டுகாரனுக்கு தாங்க வாயில வாஸ்து வையலின் வாசிக்குதுங்க.. நம்ம வாயிக்கு எல்லாம் அம்புட்டு டேலண்ட் இல்லங்கோ.. அவன் நாசுக்கா தொடுப்பு வெச்சிக்க உங்க கிட்ட பெர்மிஸ்ஸன் கேக்குறானுங்க. அத கூட புரிஞ்சிக்காம பச்ச மண்ணா இருக்கீங்களே அம்மணி.. உங்கள போயி பொம்பள ஹல்க்குனு நெனச்சு எம்புட்டு பில்டப் கொடுத்து புட்டேன்”ராசு ஏற்றி விட செந்தூரா நீரனின் தொடையில் கிள்ள விமானத்தினுள்ளே கத்த முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டியது போல வாயை மூடிக்கொண்டான் நீரன்..

கொஞ்சம் கடினமான மனநிலை மாறி இவர்களின் சேட்டையில் இயல்பு மன நிலையில் இவர்களது பயணம் தொடர்ந்தது.பகல் பன்னிரண்டு மணிக்குள் அவர்கள் ஐவரும் மகராஷ்டிரா விமான நிலையத்தை அடைந்தனர்.விமானம் தரையிறங்கும் போது செந்தூரா மிகவும் பயந்து விட்டாள். அவளது முகத்தில் வேர்வை வழிய தொடங்கியது. நீரன் அவளைத் தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினான். சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்திலிருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்னோரு விமானம் ஏறி காந்திநகர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து டாக்ஸி பிடித்து திரிம்பகேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சேர ஒரு மணி நேரம் பிடித்தது.இதற்குள் செந்தூரா மிகவும் களைத்து போய் விட்டாள்.

அவளால் இதற்கு மேல் முடியவில்லை.கால்கள் இரண்டும் வீங்கி சிவந்து போய் விட்டது.. இரண்டு முறை விமானத்தின் உள்ளேயே வாந்தி எடுத்து விட்டாள்.. நேற்றிலிருந்து இப்பொழுது வரை அலைச்சலினால் ஏற்பட்ட அசதியால் அவள் அரை மயக்க நிலையில் இருந்தாள்..

“ப்ரோ செந்து இதுக்கு மேல தாங்க மாட்டா.. பேசாம நாம ஒன்னு செய்வோம்.. நானு அப்பா ராசு நாங்க மூணு பேரும் போயி அந்த இடம் எக்ஸைட்டா எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கிறோம்.. அது வரைக்கும் நீங்க அந்தக் கோயில் சத்திரத்துல கொஞ்சம் ரெஸ்ட் பண்ணுங்க..”நீரனுக்கும் அதுவே சரி என்று தோன்றியது..

“ஓகே ஜீ நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான்”என்றவனை இடைமறித்து அரை மயக்கத்தில் இருந்த செந்தூரா

“வேணா நீ.. ரா.. நாமளும் அவங்க கூட போ.. லாம்..”

“என்னடி லூசு மாறி பேசுற.ஏற்கனவே நீ ரொம்ப அசதியா இருக்க.. இதுல எங்குட்டு இருந்து நடப்ப.அந்த இடம் எங்க இருக்குனே தெரியல.. பேசாம நீ கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடு.. அவங்க போயி தேடி கண்டுபுடிச்சு வந்து சொன்னதும் நாம போயி செலய வைக்கலாம் சரியா”

“இல்ல.. நா சொல்றத கேளு நீரா.. நமக்கு டைம் இல்ல”

“நா சொல்றத நீ கேளுடி”

“ஐயோ புரிஞ்சிக்க நீரா.. எனக்கு” அவளுக்கு பேசவே முடியவில்லை அசதியிலும் புரிந்துக்கொள்ளாமல் அவன் பேசும் எரிச்சலிலும் அவளுக்கு அழுகை வந்தது. உடைந்த குரலில்” எனக்கு வலிக்க ஆரம்பிக்குது நீரா.இப்போதான் லேசா வலி தெரியுது..”அவள் அப்படி சொல்லியதும் அனைவரும் பதறி விட்டனர்..

சிவலோகன் தனது வயதின் அனுபவத்தால்”அம்மாடி கண்ணு எங்கடா வலிக்குது.. “

“அடிவயிறு இடுப்பு எங்கன்னு சொல்ல தெரியலப்பா..சுருக்குன்னு ஒரு வலி வருது.. அது என்னானு பாக்குற குள்ளார போயிருது.. “

“ஒரு வேள சூட்டு வலியா இருக்குமோ..அம்மாடி நீயு உன் புருஷன் கூட அப்டியே இங்கன ஒக்காந்து இரு.. நாங்க போயி அந்த எடத்த கண்டு புடிச்சுட்டு வரோம்மா”

“இல்லப்பா நாங்களும் வரோம். எதுக்கு ரெண்டு வேல.நீங்க அந்த எடத்த கண்டு..பிடிச்சு வரதுக்குள்ள எனக்கு வலி வந்திருச்சுனா என்ன பண்றது..கஷ்டமோ நஷ்டமோ இவ்ளோ தூரம் வந்தாச்சு..நாம எல்லாரும் ஒன்னா சேந்து அந்த எடத்த கண்டு பிடிப்போம்..” மூச்சு லேசாக வாங்க அவள் பேசி முடித்தாள்.

நீரன் மறுக்க கணி”ப்ரோ அவ சொல்றதும் சரிதான்..அந்த இடம் எங்க இருக்குன்னு நமக்கு தெரியாது.. நாம் அந்த இடத்த கண்டுபிடிச்சு திரும்ப வந்து உங்கள அங்க கூட்டிட்டு போயி அந்த செலய அந்த இடத்துல வைக்கறதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம்..வந்தது வந்தாச்சு.. நம்பிக்கையோட எல்லாருமே சேந்து போலாம்..”

“என்ன தலைவா பேசுறீங்க..நடு காட்டுக்குள்ள வலி வந்திருச்சுனா புள்ளத்தாச்சிய வச்சுகிட்டு நாம என்ன பண்ணுவோம்..”ராசுவும் தன் பங்கிற்கு மறுத்தான்.

“இல்ல கண்ணுங்களா அம்மாடி சொல்லறது தான் சரி.. நமக்கு நேரம் குறைவா இருக்கு..எல்லோரும் சேந்தே போய் அந்த இடத்த தேடுவோம். இவங்கள இருந்த நிலைமையில விட்டுட்டு போறது சரி இல்ல”சிவலோகன் உறுதியாக சொல்ல வந்த டாக்ஸிய பணம் செலுத்தி அனுப்பிவிட்டு அங்கிருந்து பெட்டி கடையில் செந்தூரவிற்கு எலுமிச்சை சாறு பிழிந்த பானத்தை வாங்கி தந்தான் நீரன். வெளி காற்று முகத்தில் பட்டதும் கொஞ்சம் இதமாக உணர்ந்தால் செந்தூரா.

பின் பை நிறைய எலுமிச்சை பழங்களையும் நான்கைந்து தண்ணீர் பாட்டில்களையும் வாங்கி நிரப்பி கொண்டவர்கள் முதலில் கோவிலுக்குள் சென்றனர். சிவனை தரிசித்து மனதை ஒரு நிலைப்படுத்தி அங்கிருந்த நிலைப்படியில் ஒரு ஓரமாக அமர்ந்து விட்டார் சிவலோகன்.. அவரின் ஆத்மா தியான நிலைக்குச் சென்றது. மனதையும் ஆத்மாவையும் ஒருநிலைப்படுத்தி ஆத்மார்த்தமாக சிவபெருமானை வேண்டி ஒரு அரை மணி நேரம் அவர் அப்படியே அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் மற்ற நால்வரும் அமர்ந்து கொள்ள செந்தூரா நீரனின் தோளில் சாய்ந்து கண் மூடி விட்டாள். அவளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வந்த வலி இப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு இரண்டு முறை வந்தது. இதைச் சொன்னால் நீரன் பயந்து விடுவான் என்பதால் அவனிடம் இதை சொல்லாமல் மறைத்தாள். இவ்வளவு தூரம் வந்தாயிற்று. எப்படியாவது இந்த சிலையை அந்த இடத்தில் வைத்துவிட வேண்டும். தனது குழந்தைக்கும் அந்த சாபம் தொடரக் கூடாது. இத்தனை நாட்கள் நீரனை விட்டுச் சென்று விடுவோமோ என்ற பயத்தில் இருந்தவளுக்கு இப்பொழுது தனது குழந்தைக்கு இந்த சாபம் போய்விடக்கூடாது என்பதே குறியாக இருந்தது.. தான் இறப்பதற்கு ஒரு நிமிடம் முன்பாவது அந்த சிலையை ஜீவசமாதியில் வைத்து விட வேண்டும் என உறுதியோடு இருந்தாள்.

அரைமணி நேரம் கழித்த நிலையில் சிவலோகன் கண் திறந்தார்.

“தெரிஞ்சுருச்சு கண்ணுங்களா.. இங்கருந்து வடக்க ஒரு காடு மாதிரி இருக்கு..அந்த காட்டுக்குள்ள தான் நாம தேடி வந்த ஜீவசமாதி இருக்கு.”

“என்னப்பா சொல்றீங்க காட்டுக்குள்ள ஜீவசமாதி இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சா..”

“புள்ளி விபரமா தெரியல..ஆனா என்னால உணர முடியுது..உண்மையான அன்பு வெச்சிருக்குற ரெண்டு பேரால மட்டும்தான் இந்த சாபம் போகும்.. இவங்க முன்னோர்கள் யாருமே இந்த அளவுக்கு அவங்க துணைய நேசிக்கல.. இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல இன்னொருதங்க வச்சிருக்கிற அன்புக்காகவே இவங்களுக்கு கண்டிப்பா இந்த இயற்கை வழி திறந்து உதவி செய்யும்.” என்றவர் முன்னால் நடக்க அவரின் பின்னால் மற்ற நால்வரும் எழுந்து நடக்கத் தொடங்கினர்.

நீரனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்நேரம் செந்தூராவை பிரசவ வார்டில் சேர்த்து வெளியே காத்துக் கொண்டிருக்க வேண்டியவன்.ஆனால் இப்பொழுது ஒரு கையால் அவளை தாங்கி பிடித்து காட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறான். எவ்வளவு தூரம் உள்ளே நடக்க வேண்டுமோ தெரியவில்லை. வலியோடு இவள் எப்படி நடப்பாள்.. ஆண் மகனாக இருக்கும் அவனுக்கு பிள்ளை வலி எப்படி இருக்கும் என்பது தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் அந்த வலியை அவனால் உணர முடியும் அவள் வேதனையை கண்டு.. செந்தூரா இயல்பாக முகத்தை வைத்து இருந்தாலும் அவள் முகத்தில் வடியும் வியர்வை மார்பு சட்டை வரை நினைத்து அவளின் நிலைமை சொல்லாமல் சொல்லியது.

நீண்ட குர்த்தி அணிந்திருந்தவளை பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு.. வலி வந்தா சொல்.. வலி வந்தா சொல் என்று அவளிடம் சொல்லிக் கொண்டே அவளது கையைப் பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தான். மாலை மயங்கும் நேரம் அது. அடர்த்தியான அத்துவான காடல்ல. ஆனால் நீண்ட கப்பும் கிளையுமாக இருந்த மரங்கள் தந்த நிழலில் அந்த இடம் இருண்டு காணப்பட்டது. அடர்ந்த புதர்களின் தோற்றம் சற்று கிலியை தந்தது.. மரங்களின் இடைவெளியில் உள்ளே வந்த சூரிய வெளிச்சம் இந்த அனைத்து சூழ்நிலைகளையும் மீறி ரசிக்கும்படியாக இருந்தது.. எதை ரசிக்கும் மன நிலையிலும் அங்கிருந்தவர்கள் இல்லை..

ஒரு மணி நேரம் நடந்திருப்பார்கள். இதற்குமேல் எங்கே செல்வது என்று அவர்களுக்குமே புரியவில்லை. இருக்க இருக்க செந்தூராவிற்கு வலி அதிகரிக்க தொடங்கியது. நீரனின் கையைப்பிடித்து ஓரிடத்தில் நின்றே விட்டாள்.

“என்னடா”

“முடியல நீரா.. இதுக்கு மேல ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது..”

“அப்பா எப்படியாச்சும் அந்த எடம் எங்கருக்குன்னு கண்டிபுடிங்கப்பா..”நீரன் தனது மேல் சட்டையை கழட்டி செந்தூராவிற்கு காற்று வீச ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தவள் அசதியில் கண்ணை மூடினாள். அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை வந்த வலி இப்பொழுது நிமிடத்திற்கு ஒரு முறை வர துடித்து போனால் செந்தூரா.அவளுக்கு பணிக்குடம் உடைந்து விட்டது..இப்படியே நின்றிருந்தால் கண்டிப்பாக இந்த மரத்தடியில்தான் அவளுக்குப் பிள்ளை பிறக்கும் என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.நீரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..

அவன் சிவலோகனின் காலைப் பிடித்துக் கொண்டு “தயவு செஞ்சு ஏதாச்சும் ஒதவி செய்ங்கப்பா”என கண்ணீர் விட்டே கதற தொடங்க சிவலோகனும் என்ன செய்வார்..ராசுவும் கணியும் செந்தூராவின் இருபுறமும் அமர்ந்து அவளுக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருக்க நீரன் அந்த சிலையை கையில் எடுத்து

“ஏய் ராணி நீயும் ஒரு பொண்ணு தான. இன்னிக்கு என்னோட செந்தூரா எந்த அளவுக்கு என்ற மேல பிரியம் வச்சிருக்காளோ நீயும் ஒரு காலத்துல அந்த ராசா மேல இப்படித்தானே பிரியம் வெச்சிருந்த.. உண்மையான பாசத்துக்கு மட்டும் தான் இவ்வளவு தூரத்துக்கு வர சக்தி இருக்குன்னு சொன்னாங்க..இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறமும் எங்களால அந்த சமாதிய கண்டு புடிக்க முடியல..உன்ன மாதிரியே என்ற செந்தூரா சாகப் போறா..

ஆனா நான் ஒன்ற புருஷன் மாதிரி எவன் எக்கேடு கெட்டா எனக்கென்னானு ஜீவசமாதி எல்லாம் அடையமாட்டேன்.என்ற செந்தூராவ தொட்ட கையாள எவளயும் தொடவும் மாட்டேன்..அவ இல்லாத ஒலகத்துல நானும் இருக்க மாட்டேன்.. உன்னோட காதல் மாதிரி எங்களோட காதலும் மண்ணோடு மண்ணா போயிரும்..ஒரு பொண்ணா இருந்தும் உன்னால என்ற செந்தூரா காதல புரிஞ்சிக்க முடியலயா..எல்லாம் போச்சு..யோசிக்காம சாபம் கொடுத்து எத்தனயோ பேர பழிவாங்கிட்ட..ஆனா அவங்க எல்லாரும் எங்கள மாதிரி காதலிச்சாங்களா இல்லயானு எங்களுக்கு தெரியாது..

உன்னோட வெறியாள எங்க உண்மையான காதல் நாசமா போக போகுது. பாத்து சந்தோஷப்படு..

யோவ் பரதேசி ராசா நாசமா போறவன நீ இங்கதான் எங்கியோ ஜீவ சமாதி ஆகி இருக்கன்னு எனக்கு தெரியும்..நல்ல வேல நீ செத்து தொலைச்சிட்ட.. இல்லனு வெச்சுக்கோ மவன உன் சாவு என்ற கையில தான்டா.. என்ன மயித்துக்கு டா அந்த எழவெடுத்தவ கூட படுத்த.. உன்னால தான்டா பன்னாட நம்ம வம்சமே அழிஞ்சு போச்சு..ஏதாச்சும் செய்ஞ்சு தொலடா.. என்ற செந்தூராவுக்கு ஏதாச்சும் ஆச்சு”

“நீ.. ரா”செந்தூரா வலியில் அவனை அழைக்க அவளருகில் ஓடி அவளை தூக்கி நெஞ்சில் சாற்றி கொண்டவன்

“என்ன மன்னிச்சிருடி.. என்னால தான் உனக்கு இந்த நெலம.. கடைசி வர உன்ன காப்பாத்த முடியாத பாவியா ஆயிட்டேனே..”

“அழாத நீரா.. நம்பிக்கைய விடாத.. எனக்கு இன்…னும்.. நம்ம லவ்.. வு மேல நம்.. பிக்க இருக்கு..”

“நானும் நம்புறேன்டி நானும் நம்புறேன்”அவன் செந்தூராவின் உச்சியில் தாடையை பதித்து குலுங்கி அழ ராசுவும் கணியும் கூட செய்வதறியாமல் அவர்கள் இருவரையும் தேற்றவும் முடியாமல் வேதனையில் விழிபிதுங்கி நின்றனர்.சிவலோகன் தன் கண்முன்னே தன்னை நம்பி உதவி கேட்டு வந்தவர்கள் படும் வேதனையை கண்டு மனமுடைந்து போனார்..

அங்கிருந்தவர்களின் நம்பிக்கை அனைத்தும் அழியும் வேளை காற்று பலமாக அடித்தது.. அந்த காற்றில் வில்வ இலை ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து சிவலோகனின் முகத்தில் அடித்தது. முகத்தில் மோதியை இலையை அவர் எடுத்து கீழே போட தொடர்ந்து சில வில்வ இலைகள் அதே மாதிரி அவர் முகத்தில் வந்து மோதியது. என்ன இது என்று அந்த இலைகளை குனிந்து பார்க்க அந்த இலை காற்றில் அடித்து கொண்டு ஒரு திசையை நோக்கி பறந்தன..காற்றில் இலைகள் பறப்பது இயற்கையே.ஆனால் அவை ஒட்டுமொத்த இலைகளும் ஒன்றாக பறக்கும்.இது என்னவென்றால் வில்வ இலைகள் நாளைந்து மட்டும் ஒரு திசையில் பறக்கின்றன. அவரின் மனம் அந்த இலைகளை பின் தொடர்ந்து செல்ல சொல்லியது.

“நீரா வழி கெடச்சிருச்சுய்யா.. சீக்கிரம் உன் பொண்டாட்டிய தூக்கு..” என்றவர் அந்த இலைகளின் பின்னே ஓட நீரன் விழுக்கென்று எழுந்து வலியில் போராடி கொண்டிருந்த செந்தூரவை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான். அனைவரும் அந்த வில்வ இலைகளை பின்தொடர்ந்து ஓட செந்தூரா உச்சகட்ட வலியில் துடிக்க ஆரம்பித்தாள். அந்த வில்வ இலைகள் அனைத்தும் பறந்து வந்து ஐந்தடி விட்டத்தில் அகலமாக படர்ந்திருந்த ஊற்றின் மத்தியில் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த ஒரு வில்வ மரத்தின் அடியில் சென்று விழுந்தன.

நடுக்காட்டில் பிரமாண்டமாக வளர்ந்திருந்த அந்த வில்வ மரத்தின் அடி வேரில் இருந்து தண்ணீர் குமிழ் குமிழாக கொப்பளித்துக் கொண்டிருந்தது.. தான் தேடி வந்த இடத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் சிவலோகன் அப்படியே நின்றுவிட்டார். மாலை மயங்கும் வேளையில் அந்த ஐந்தடி விட்டத்து ஊற்றை மூடியப்படி மினிமினி பூச்சிகள் கூட்டம் பகலில் இவர்கள் கண்களுக்கு தெரிந்தன. ஆள் அரவம் கேட்டதும் அந்த பூச்சிகள் அனைத்தும் ஒன்றாக பறக்கும் காட்சி அவ்வளவு அழகாக இருந்தது.. சூரியன் இருக்கும்போது மின்மினிப் பூச்சிகள் பறப்பது பேரதிசயம் அல்லவா.. அந்த வில்வ மரத்தைச் சுற்றி மயில் கொன்றை செடி இளஞ்சிவப்பு நிற பூக்களுடன் கொடியாக படர்ந்திருந்தது.

“நீரா இந்த இடம் தான் அந்த செலய வையு”..செந்தூரா வலியில் துடிக்க அவளை கையில ஏந்திருந்த நீரனின் கையில் ராசு அந்த சிலையை எடுத்து கொடுக்க அவளை தூக்கி கொண்டு அவனும் அந்த ஊற்றில் இறங்கினான்.. அவன் முட்டி வரை இருந்தது அந்த ஊற்று. கிறிஸ்டல் போல அந்த தண்ணீர் தகதகத்தது.சூரியன் மறைய சில கணங்களே எஞ்சி இருந்தது.அவளை தூக்கி கொண்டே போனவன் அந்த மரத்தின் அருகே வந்ததும் செந்தூரா கையில் அந்த சிலையை கொடுத்தான். அந்த சிலையை அவள் தொட்டதும் அவளை அந்த மரத்தின் அருகே குனிந்தபடி தூக்கி பிடித்தான்.

இருவரும் சேர்ந்து அந்த சிலையை இந்த மரத்தின் அடியில் வைத்து விட்டனர்.தண்ணீர் பட்டதும் அந்த கற்ச்சிலை மண் சிலை போல கரையத் தொடங்கியது.. அனைவரும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிலை ஊற்று நீரில் அமிழ்ந்து போனது..இதோடு அவர்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்த சாபம் தீர்ந்து போனது.ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் மன நிலையில் அங்கிருந்த யாரும் இல்லை.

செந்தூரா உச்சகட்ட வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். இதற்கு மேல் அவளை இங்கிருந்து தூக்கி கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்ப்பது முடியாத காரியம் என உணர்ந்த சிவலோகன் அவளை அந்த ஊற்றின் கரையில் அமர சொன்னார். அவளை சிவலோகன் சொன்னபடி அமர வைத்த நீரனை பார்த்து

“கண்ணு நீ அவ காலு கிட்ட ஒக்காரு தண்ணியில.. புள்ள தல வந்துச்சுன்னா புடிச்சு இழு..”

“என்ன நானா”

“பின்ன நானா.. புடிச்சு இழுடா”..நீரன் அவள் அணிந்திருந்த உள்ளாடையை உருவி தன் பேக்கில் திணித்து பயணத்திற்கு கொண்டு வந்திருந்த துண்டு ஒன்றை வெளியே எடுத்துக்கொண்டு செந்தூரா காலடியில் சென்று அமர்ந்தான்.ராசுவும் கணியும் செந்தூராவின் இரு பக்கம் நின்று அவள் கையை பிடித்து கொள்ள சிவலோகன் சொன்னபடியே குழந்தையின் தலை வெளியே வர ஆரம்பித்தது. கைகள் நடுங்க இதயம் பட படக்க தன்னுடைய மனைவிக்கு தானே பிரசவம் பார்த்தான் நீரன்.

அவர்களின் முதல் குழந்தை நீரனை போல கை கால்கள் நீளமாக இருந்தாலும் தாயை போல முக சாயலில் பிறந்திருந்தான். தன்னுடைய குழந்தையின் அழுகையை கண்ணில் பார்த்த செந்தூரா முழு மயக்க நிலைக்குச் சென்றாள்.. உதிரத்தில் ஊறிக் கிடந்த குழந்தையை துண்டில் சுற்றிய நீரன் அதனை ராசுவின் கையில் கொடுத்து விட்டு தன்னுடைய மனைவியின் பிறப்புறுப்பில் வழியும் உதிரத்தை ஊற்று தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தி முன்னெச்சரிக்கையாக அவள் எடுத்து வந்திருந்த பேட்டை அவளது புது உள்ளாடையோடு ஒட்ட வைத்து அவளுக்கு அணிவித்தான்.

அவள் இன்னும் மயக்கத்தில் இருக்க கண்டிப்பாக இப்பொழுது அவளை மருத்துவமனையில் சேர்த்து ஆகவேண்டும் என அவளை தூக்கியவன் காட்டை விட்டு வெளியேற வேகமாக நடந்தான்.. அவனின் பின்னாலே கணியும் ராசுவும் சென்றுவிட சிவலோகன் அந்த மரத்தைக் தொட்டு கும்பிட்டு நன்றி சொல்லி விட்டு ஓடினார் அவர்களின் பின்னே..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்