சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 22


” நீரன் இவ்ளோ நேரம் உங்க மனைவிய பத்தி நான் சொன்னதெல்லாம் உங்களுக்குள்ளேயே வச்சுக்கோங்க..  இது பத்தி அவங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணபோனா வேற ஏதாச்சும் ஒரு பிரச்சனை ஸ்டார்ட் ஆக வாய்ப்பு இருக்கு.அவங்க ரொம்ப பாவம்.அவங்க உங்கள ரொம்ப நம்புறாங்க.சொல்லப் போனா உங்கள மட்டும் தான் நம்புறாங்க..அவங்கள இந்த பிரச்சனயில இருந்து வெளிய கூட்டிட்டு வரறத்துக்கு உங்களோட ஹெல்ப் ரொம்பவே தேவ..”

“கண்டிப்பா டாக்டர் என் செர்ரி இதுல இருந்து வெளிய வந்தா போதும்.. வேற ஏதும் எனக்கு வேணா..”

“வெரி குட் நீரன்.. நான் உங்க பர்சனல் விஷயத்தில் தலையிடுறேன்னு நினைக்காதீங்க..எதுக்கு குழந்தை வேண்டாம்னு பிடிவாதமா இருக்கீங்க..இதுவும் ஒரு விதத்துல உங்க மனைவிய ரொம்பவே மூர்க்கத்தனமா நடந்துக்க வைக்குது”

நீரனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அமைதியாக அமர்ந்திருந்தான்.  அவனின் அமைதியை தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டு”எனக்கு புரியுது நீரன்.யங் கப்பில். கொஞ்சநாள் லைஃப்ப நல்லா என்ஜாய் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்க பிளான் பண்ணி இருப்பிங்க.. ஆனா உங்க மனைவி அதுக்கு ஒத்து வர மாட்டாங்க.பொண்ணுங்க எப்பவுமே இப்படிதான் நீரன்.இதுல அவங்கல குறை சொல்லி எதுவும் இல்ல.நம்ம சொசைட்டி அப்படி. கல்யாணம் பண்ணி ஆறு மாசத்துல குழந்தை வரலனா எங்க போனாலும் என்ன வீட்டில விசேஷம் இல்லயான்னு கேப்பாங்க..மொதல்ல அத சாதாரண விஷயமா தாண்டி போயிருவாங்க.. ஆனால் நாளாக ஆக இதுவே ஒரு மன அழுத்தத்தக் கொண்டு வரும்.. உங்க மனைவி ஏற்கனவே ஒரு மன அழுத்தத்துல தான் இருக்காங்க.. இன்னொரு கஷ்டமான இன்சிடென்ட் அவங்களுக்கு வரவேணா.. நான் சொன்னத ப்ளீஸ் கன்சிடர் பண்ணுங்க..”

என்ன பிரச்சனை என்றே தெரியாமல் மருத்துவர் அவர் மனதில் பட்ட விஷயத்தை சொல்ல நீரன் எதுவும் பேசாமல் மண்டையை ஆட்டிக் கொண்டு அவரிடம் கைகுலுக்கி வெளியே வந்தான். அவன் மனம் முழுவதும் ரணமாக இருந்தது.. ஏற்கனவே குகன் கொளுத்திப் போட்ட நெருப்பு அவன் மனதில் பத்தி எரிந்து பச்சை புண்ணை ஏற்படுத்தி சென்றிருக்க இதில் மருத்துவர் வேறு வெந்த புண்ணில் வேலைப் பாச்சினார்.

நீரன் தன்னுடைய தோப்பிற்கு வந்து ஒரு மாங்காய் மரத்தின் அடியில் அமர்ந்தான்..அவனது உள்ளமெல்லாம் ஏன் சோதனை மேல் சோதனை என இறைவனை கேட்டு கொண்டிருந்தது.இரண்டு நாள் முன்பு இதே இடத்தில் குகனை சந்தித்தான்.

“சார்”

“சாரா.. என்ற மருவவள கட்டிருக்க தம்பி.. அழகா சித்தப்பானு கூப்டு..”

“சித்தப்பா நீங்க என்ன ஏத்துக்கிட்டதே பெருசு.. ரொம்ப நன்றி.. ஆனா எனக்கு தேவையான ஒரு உண்மைய நீங்க சொன்னிங்கனா நா ரொம்பவே நன்றி உள்ளவனா இருப்பேன்”

“என்னப்பு”

“சித்தப்பா செந்தூராவுக்கு என்ன பிரச்சன.. அவளுக்கு மனரீதியா ஏதோ பிரச்சன.. ஆனா எனக்கு தெரியல. ப்ளீஸ் உங்களுக்கு தெரிஞ்சா.. இல்ல உங்களுக்கு தெரியும் தயவு செஞ்சி சொல்லிடுங்க..என்னால முடியல. இதனால நான் அவள விட்டு போயிடுவேன்னு நீங்க நினைக்காதீங்க.. என்ன நடந்தாலும் இந்த உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் அவள விட்டு நான் போகமாட்டேன்..நீங்க அவளுக்கு நல்லது செய்றதா நினைச்சு உண்மய மறச்சிங்கனா அது அவளுக்கே தான் கெடுதலா போய் முடியும்..சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்சத சொல்லிருங்க..” அவர் பேயரைந்ததை போல அவனைப் பார்த்துக் கொண்டிருக்க அவனோ அவனுக்கும் செந்தூராவிற்கும் நடந்த சில விஷயங்களை பற்றி மேலோட்டமாக அவரிடம் கூறினான்.

தனது மருமகளை பற்றி நன்கு அறிந்திருந்த அவரால் நீரன் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.இதற்கு மேலும் தான் அமைதியாக இருந்தால் அது தன் அக்காவிற்கு செய்யும் துரோகம் என்பதை உணர்ந்த குகன் நீரனிடம் உண்மையை கூற முடிவு செய்தார்.

“நீரா நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும். நான் இத உன்ன நம்பி சொல்றேன். அதுவும் உனக்காக சொல்லல என்னோட மறுமகளுக்காக சொல்றேன்..அவளோட நல்ல வாழ்க்கைக்காக சொல்றேன்.  இப்போ வேணும்னா நீ சொல்லலாம்..நான் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் அவளை விட்டு போகமாட்டேனு.நா சொல்லப்போறாத கேட்டதும் அவள நீ வெறுக்க வாய்ப்பு இருக்கு..ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் நெனப்புல வச்சுக்கோ.. இந்த பிரச்சன எதுக்கும் அவ பொறுப்பு இல்ல.அவள நீ”

“என்ற பொண்டாட்டிய எந்த ஒரு விஷயத்துக்காக நா விட்டு தர மாட்டேன்..என்ன நம்பி நீங்க சொல்லுங்க..”

“நீரா செந்தூரா கண்ணு சின்ன வயசுல இருந்தே ரொம்ப முசுடு.என்ற அக்கா போனப்புறம் மாமா செந்தூராகாக்கவே இருக்காரு.. என்ன இருந்தாலும் அவ கூடவே இருக்க முடியுமா சொல்லு.. அவள வூட்டுல விட்டு விட்டு நாங்க வேலய பாக்க கிளம்பிருவோம்..அவ கண்ணம்மா கூட தனியா இருப்பா.. கண்ணம்மாவுக்கு இவ வெளாடுற வெளாட்டு புரியாது.. பாவம் முழிக்கும்.  செந்தூரா உடனே கையில கிடைக்கிற எதையாச்சும் தூக்கி கண்ணம்மா மேல விட்டு அடிச்சுட்டு ரூமுக்குள்ளபோயி கதவ சாத்திக்கும்.

நாங்க திரும்ப வூட்டுக்கு வந்தா தான் அவ திரும்ப வருவ.நாங்க வெளிய போனா ரூமுக்குள்ள போறவ நாங்க வர வரைக்கும் உள்ளயே இருப்பா. அவ்ளோ நேரம் அவ உள்ள என்ன பண்றான்னு கேட்டு தெரிஞ்சிக்க புத்தி இல்லாம போச்சு. அவ தனியா இருக்கும் போது அவளுக்குள்ளேயே ஒரு உலகத்த உண்டாக்கிகிட்டா.அவளுக்குன்னு ஒரு ஃப்ரண்ட்ட உருவாக்கி அதுக்கு ஸ்கூப்பினு பேரு வெச்சு தினம் ரூமு குள்ளரா கண்ணுக்கே தெரியாத அவ கற்பன பண்ண உருவத்தோட வெளாட ஆரம்பிச்சிருவா.

ஆரம்பத்துல எங்களுக்கு தெரியல. ஆனா அவ வளர வளர அந்த உருவத்தோடயே அவளோட உறவு வளந்துச்சு. எங்க கிட்ட டேடி ஸ்கூப்பி பாருங்க. மாமா என்ற ஸ்கூப்பி அங்க ஒக்காந்து இருக்கு அங்க ஒக்காரதிங்கனு ஆரம்பிச்சு உருவமே இல்லாத அந்த ஸ்கூப்பிக்கு நாக்காளி இழுத்து போட்டு தட்டு வெச்சு சோறு போட்டு குழம்பு ஊத்துற வர அவ செய்ய ஆரம்பிச்சப்போ தான் எங்களுக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சது.இப்டியே போக ஒரு நாள் ராவுல”இதை சொல்ல முடியாமல் அவர் திணறி ஆழ மூச்சு எடுத்து தன்னை சமன் செய்து கொண்டு நீரன் முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியாமல் வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டார்.

“நீரா எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. நீ புரிஞ்சுக்கவேனு நினைச்சு தான் சொல்றேன்..”

ஏதோ பெரிய குண்டு வந்து விழ போகுதென நினைத்தபடி அவர் கூறப்போகும் விஷயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் வீரன்.

“அவ அப்ப வயசுக்கு வந்த புதுசு என்னாச்சின்னே தெரியல திடிர்னு ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்துட்டா..  நானும் மாமாவும் அடிச்சி புடிச்சி அவளை ஆஸ்பத்திரிக்கு தூக்கி ஓடுனோம்.. டாக்டர் அவள பாத்துட்டு  அவ சரியா சாப்பிட்டு ஒரு வாரம் ஆச்சுனு சொன்னாரு. எங்களுக்கு சுத்தமா புரியல. எங்க கூட ஒக்காந்து தான் சாப்பிடுவா..அப்றம் எப்டி சாப்டு ஒரு வாரமாச்சுன்னு இந்தாளு சொல்றானு ஒரே குழப்பமா போச்சு.. நாங்க அவள வூட்டுக்கு கூட்டி வந்து மெதுவா பேசி பாத்தோம். அப்பதான் அவ சொன்னா அவளோட ஸ்கூப்பி செத்து போச்சுன்னு சொல்லி ஒரே அழுக.. பிக்ஸ் வந்துருச்சு திரும்பத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடு..

அங்க போயி டிரீட்மென்ட் பண்ணி சரியாகி அவள கவுன்சிலிங் அனுப்பி வெச்சா அப்ப தான் சொல்றா. அவளுக்கு ஸ்கூப்பிய எவ்ளோ புடிக்கும். அதுக்கு தப்பு செஞ்சா புடிக்காது..செந்தூரா சின்ன வயசுல ஏதாச்சும் தப்பு செஞ்சா ஸ்கூப்பி அவள உடம்புல எங்கயாச்சும் சொந்தமாவே காயப்படுத்திக்க சொல்லுமாம். உடனே இவளும் தன்ன தானே காயப்படுத்திக்கிவாளாம்.. ஸ்கூப்பி கூடவே அவ நெறைய நேரத்த செலவழிச்சிருக்கா.அதுக்கு உடம்பு சரியில்லாம அது செத்து போயிருச்சாம். அத இவளால தாங்க முடியல. வூட்ல ஆரு கிட்டயும் சொல்லாம எங்க கூட ஒக்காந்து சாப்டு ரூமுக்குள்ள போனதும் கைய வுட்டு வாந்தி எடுத்துருக்கா.. இதேயெல்லாம் டாக்டர் என்கிட்ட தனியா சொன்னாரு. ஏன்னா மாமாவுக்கு செந்தூரா தனியா ஒரு உருவத்த கற்பனையில உருவாக்கி அதுகூடவே இருந்தத கேட்டதும் அட்டாக் வந்துருச்சு. அதான் அவரோட மொத அட்டாக்.

அவ உடம்பு முழுக்க இருக்குற தழும்ப பத்தி இன்ன வரைக்கும் நான் அவர் கிட்ட வாயத் தொறக்கவே இல்ல.. டாக்டர் இத அவர்கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு. மக மேல உசுரயே வைச்சிருக்கிற என்ற மாமனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா மனுசன் ஆடிப்போயிருவாரு. அப்புறம் செந்தூராவ மெட்ராஸ்ல இருக்கிற எங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட காட்டி ஆருக்கும் தெரியாம அவள சரிப்படுத்துனோம்.. பொதுவா பேச ஆளே இல்லாத சின்ன குழந்தைங்க தங்களுக்குள்ளேயே ஒரு உலகத்த கற்பன பண்ணிக்குவாங்க. நாளடைவில் அவங்களோட சந்தோஷம் துக்கம் எல்லாத்தையும் அந்த உலகத்துல இருக்கிற ஒருத்தர்கிட்ட ஷேர் பண்ணுவாங்க. அப்படிதான் செந்தூரா ஸ்கூப்பினு ஒரு உருவத்த தனக்குள்ளயே உண்டாக்கி அந்த உருவத்துக்கு உயிர் கொடுத்து அது கூட ஃப்ரண்டாக்கி அந்த உருவம் சொல்றதா நினைச்சி இவளே கற்பனை பண்ணி தன்னத்தானே காயப்படுத்தி தன்னோட உடம்பு முழுக்க காயத்த ஏற்படுத்தி வைத்திருந்தா..

கொஞ்சம் கொஞ்சமா டாக்டர் அவளோட கற்பன உருவம் உண்மையா இருந்துச்சு, அது ஆக்ஸிடெண்ட்ல செத்து போச்சுன்னு அவளை நம்ப வச்சு அந்த கற்பனை உருவத்தை கிட்ட இருந்து அவளை பிரிச்சாரு. அவளோ அந்த உருவம் செத்து போச்சு அப்படின்னு ஆணித்தரமாக நம்புனா.ஆனா அந்த உருவம் அவளுக்குள்ள உட்டு போன பழகத்த அவ மாதிக்கவே இல்லனு நீ சொல்றத கேட்டா தெரியுது.” குகன் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு அவனை பார்த்தார். அவன் ஆடாமல் அசையாமல் மரத்திற்கு முட்டுக் கொடுத்தப்படி நின்றுகொண்டிருந்தான்.

“நீரா நீ என்ற மருமவள பைத்தியம்னு நெனைக்குறியா”

“சீ இல்ல சித்தப்பா.. நீங்க இத என்கிட்ட ஆரம்பத்திலயே சொல்லிருக்கலாம்.. பரவால்ல இப்பயாவது சொல்லனும்னு தோணுச்சே அதுவே பெருசு.. நீங்க இத என்ற கிட்ட சொன்னீங்கனு செந்தூரா கிட்டயும் அவ அப்பாரு கிட்டயும் வாய தொறக்காதிங்க”குகன் நீரனின் தலையை வாஞ்சையாய் தடவி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

குகன் அவனிடம் பேசிய எதையும் நீரன் அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை. வீட்டிற்கு சென்றவன் அவள் என்ன குத்தி பேசினாலும் அதை எதையும் காதில் வாங்காமல் அவளை தன் அணைப்பிலேயே வைத்திருந்தான். ஒரு கட்டத்தில் அவனது அணைப்பில் கோழிக்குஞ்சாய் அடங்கி போனால் செந்தூரா.இதுவே மறுநாளும் தொடர அன்று அவளுக்கு இரண்டாவது கவுன்சிலிங். அவளை அழைத்து வரும்போது ராசுவை உடன் அழைத்து வந்திருந்தான் நீரன்.

செந்துராவை சோதித்து அவளிடம் பல கேள்விகளை கேட்ட மருத்துவர் அவளை வெளியே அமர கூறிவிட்டு நீரனை உள்ளே அழைத்தார்.அவனோ ராசுவுடன் அவளை வாயிக்கு வந்த பொய்யெல்லாம் சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிட்டு மருத்துவரைக் காணச் சென்றான்.செந்தூராவை பரிசோதத்த மருத்துவர் முதலில் குகன் சொன்ன அனைத்தையும் சற்று வேறு விதமாக கூறினார். சிறுவயதில் செந்தூராவிற்கு ஸ்கூப்பி என்ற நட்பு இருந்தது. அது எந்நேரமும் அவளுடனே இருந்தது. அதற்கு தவறு செய்தால் பிடிக்காது உடனே தண்டனை கொடுத்து விடும். அவளது உடலில் இருக்கும் தழும்புகள் எல்லாம் அவள் செய்த சிறிய தவறுகளுக்கு அது கொடுத்த தண்டனைகள் என அவர் கூற நீரன் குகன் தன்னிடம் கூறியதை கூறினான்.

“நீரன் உங்க மனைவிக்கு மன வியாதி. சின்ன வயசுல இருந்து தனிமைல இருந்திருக்காங்க. அவங்க பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணுனு இல்ல அவங்க அப்பா பத்தி தெரிஞ்சதால கூட படிக்கிற யாரும் அவங்க கூட நெருக்கமா ஃப்ரண்டடாகல..மீறி ஃப்ரண்டா இருந்தவங்க எல்லாரும் இவங்க வாங்கிக் கொடுக்கிற முட்டாய் சாக்லேட்காக கூடவே இருந்துருக்காங்க.. இந்த பிரச்சன நாம எல்லாரு உள்ளயும் இருக்கும்.. ஒரு பொம்மயோ இல்ல பேட்டோ அதுக்கு பேரு வெச்சு அது கூடவே இருப்போம்.நம்மோட கிளோஸ் ஃப்ரண்ட்டுனு அத சொல்லுவோம்.

ஆனா வயசாக ஆக நிஜமான ஃப்ரன்ட்ஸ் கிடைப்பாங்க. நாமளும் நிதர்சனத்தை புரிஞ்சுகிட்டு அதோட நம்ம வாழ்க்கைய மோவ் பண்ணவோம்.ஆனா உங்க மனைவி செந்தூரா மாதிரி ஆளுங்க எல்லாம் தனக்குள்ளயே ஒரு கற்பனை உலகத்த உருவாக்கி அந்த உலகத்து குள்ளயே போயிருவாங்க..ஒரு கட்டத்துல அது கற்பனை அது நிஜம் இல்ல அப்படின்னு அவங்க கிட்ட நாம சொன்னா அத அவங்களோட ஆழ்மனசு நம்பாது..இதனால பிரச்சின இன்னும் பெருசாக வாய்ப்பு இருக்கு..தேங்க் காட் அந்த கற்பன உருவமான ஸ்கூப்பி செத்துப் போச்சுன்னு அவங்க நம்பிட்டாங்க..

ஆனா அந்தக் கற்பனையான பழக்கம் அவங்கள விட்டு போகல. யாரு தப்பு செஞ்சாலும் அவங்களுக்கு தண்டன கொடுக்கிறது இவங்களோட பழக்கமாகி போச்சு. அது அவங்களே ஆனாலும் தனக்கு தானே தண்டன கொடுத்துக்குவாங்க..இது ஒருவிதமான மன நோய்.. இல்லாதத இருக்குறதா கற்பன பணறது. மூட் டிசோடர் (mood disorder) னு நாங்க மெடிக்கல்ல சொல்லுவோம்.”

“டாக்டர் அவள குணப்படுத்த முடியும்ல”

“கண்டிப்பா.. அவங்களோட மருந்து என்ன தெரியுமா நீங்க தான் நீரன். அவங்க ஸ்கூப்பிக்கு அப்றம் அதிகமா நேசிக்குறது உங்கள தா.. நாங்க ட்ரீட்மென்ட் தருவோம் ஆனா உங்களால தா அவங்கள குணப்படுத்த முடியும்.”மேலும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நீரன் வந்து விட்டான்.அவனின் மனைவிக்கு மனநோய் அந்த நோயிக்கு மருந்து நீரன். அவன் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்